கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தா 1
தாக்கு 1
தாக்கும் 1
தாங்கா 5
தாங்காது 2
தாங்கி 5
தாங்கிய 1
தாங்கினம் 1
தாங்கு 1
தாங்கும் 1
தாடி 1
தாதகி 1
தாது 3
தாதை 5
தாதைக்கு 1
தாதையும் 2
தாபத 2
தாம் 8
தாம்தாம் 1
தாமம் 2
தாமரை 11
தாமும் 1
தாமே 4
தாய் 7
தாய 1
தாயர்-தம்முடன் 1
தாயர்-தம்மொடு 1
தாயரும் 6
தாயரை 1
தாயரொடு 1
தாயரோடு 2
தாயும் 3
தாயோ 1
தார் 8
தாரன் 1
தாராய் 1
தாரார் 1
தாரீரோ 1
தாரை 3
தாரையும் 3
தாரோய் 3
தாரோன் 8
தாலி 1
தாழ் 7
தாழ்-வயின் 1
தாழ்தரு 3
தாழ்ந்த 3
தாழ்ந்தனள் 1
தாழ்ந்து 6
தாழ 1
தாழி 1
தாழியில் 1
தாழும் 1
தாழை 2
தாழையும் 2
தாள் 6
தான் 52
தான்-என் 1
தான்றியும் 1
தான 1
தானத்து 1
தானம் 4
தானமும் 3
தானும் 2
தானே 9
தானை 7
தானைக்கு 1
தானையொடு 2
தானையோடு 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தா (1)
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் – மணி:27/196
தாக்கு (1)
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய – மணி:3/57
தாக்கும் (1)
தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் – மணி:30/101
தாங்கா (5)
தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை – மணி:3/141
தாங்கா கண்ணீர் என்-தலை உதிர்த்து-ஆங்கு – மணி:5/42
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் – மணி:22/176
தாங்கா நல் அறம் தானும் கேட்டு – மணி:28/126
தாங்கா மாரியும் தான் நனி பொழியும் – மணி:28/197
தாங்காது (2)
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து – மணி:5/51
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் – மணி:12/48
தாங்கி (5)
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி:18/122,123
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி:24/137
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி
காதலி-தன்னொடு கபிலை அம் பதியில் – மணி:28/142,143
தானம் தாங்கி சீலம் தலை நின்று – மணி:30/1
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி:30/78
தாங்கிய (1)
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி – மணி:28/142
தாங்கினம் (1)
தாபத கோலம் தாங்கினம் என்பது – மணி:18/23
தாங்கு (1)
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார் – மணி:19/143
தாங்கும் (1)
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு – மணி:14/102
தாடி (1)
சுரியல் தாடி மருள் படு பூ குழல் – மணி:3/116
தாதகி (1)
தாதகி பூவும் கட்டியும் இட்டு – மணி:27/264
தாது (3)
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி:4/20
நறும் தாது உண்டு நயன் இல் காலை – மணி:18/19
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி:28/176
தாதை (5)
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் – மணி:3/55,56
தாதை பூதியும் தன் மனை கடிதர – மணி:13/101
தாதை வாளால் தடியவும் பட்டனன் – மணி:22/79
கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும் – மணி:26/3
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் – மணி:28/73
தாதைக்கு (1)
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி:28/123
தாதையும் (2)
தையல் கேள் நின் தாதையும் தாயும் – மணி:28/93
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும்
தேவரில் தோற்றி முன் செய் தவ பயத்தால் – மணி:28/138,139
தாபத (2)
தாபத கோலம் தாங்கினம் என்பது – மணி:18/23
தாபத கோலம் தவறு இன்றோ என – மணி:18/54
தாம் (8)
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த – மணி:3/5
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய் – மணி:6/174
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி – மணி:8/7
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி – மணி:15/66
தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் – மணி:27/8
தாம் பிருகற்பதி சினனே கபிலன் – மணி:27/81
தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம் – மணி:29/185
தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் – மணி:30/101
தாம்தாம் (1)
தரும் முறை இது என தாம்தாம் சார்தல் – மணி:30/94
தாமம் (2)
முத்து தாமம் முறையொடு நாற்று-மின் – மணி:1/49
தவள நித்தில தாமம் தாழ்ந்த – மணி:19/112
தாமரை (11)
தாமரை தண் மதி சேர்ந்தது போல – மணி:3/12
தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின் – மணி:3/66
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப – மணி:4/9,10
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய – மணி:4/16
அம் சிறை விரிய அலர்ந்த தாமரை
செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு – மணி:4/21,22
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம் – மணி:4/94
தன் உறு பெடையை தாமரை அடக்க – மணி:5/124
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் – மணி:15/75
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி:16/33
பாடக தாமரை சீறடி அணிந்து – மணி:25/85
தாமரை குவளை கழுநீர் ஆம்பல் – மணி:28/20
தாமும் (1)
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி:28/112
தாமே (4)
அரசர் தாமே அருளறம் பூண்டால் – மணி:25/226
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி:27/235,236
தாமே நெருப்பை சாதிக்க வேண்டும் – மணி:29/95
தாமே திட்டாந்த ஆபாசங்கள் – மணி:29/326
தாய் (7)
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி:13/11
தந்தை முனியா தாய் பசு ஆக – மணி:25/70
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி – மணி:25/77
தாய் ஒழி குழவி போல கூஉம் – மணி:25/111
தணியா காதல் தாய் கண்ணகியையும் – மணி:26/2
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி:26/67
என் தாய் மலடி என்றே இயம்பல் – மணி:29/161
தாய (1)
தாய மன்னவர் வசுவும் குமரனும் – மணி:26/16
தாயர்-தம்முடன் (1)
செல்லும்-காலை தாயர்-தம்முடன்
அல்லவை கடிந்த அறவண அடிகளும் – மணி:28/235,236
தாயர்-தம்மொடு (1)
தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி – மணி:15/56
தாயரும் (6)
தாயரும் நீயும் தவறு இன்று ஆக – மணி:21/170
தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெரு நகர்-தன்னை பிறகிட்டு ஏகி – மணி:22/101,102
அரும் தவன்-தன்னுடன் ஆய்_இழை தாயரும்
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் – மணி:25/205,206
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு – மணி:28/81
பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர் – மணி:28/154
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் – மணி:29/35
தாயரை (1)
தந்தை தாயரை அனுமானத்தால் அலது – மணி:27/284
தாயரொடு (1)
பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு
யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும் – மணி:0/55,56
தாயரோடு (2)
ஆங்கு அ தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி:0/89
ஆங்கு தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி:28/1
தாயும் (3)
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த – மணி:3/5
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று – மணி:27/76
தையல் கேள் நின் தாதையும் தாயும்
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி:28/93,94
தாயோ (1)
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் – மணி:3/150
தார் (8)
கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் – மணி:0/68
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் – மணி:15/45
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர் – மணி:19/123
விரை தார் வேந்தே நீ நீடு வாழி – மணி:19/146
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் – மணி:20/102
ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை – மணி:23/68
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – மணி:25/106
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி:28/60
தாரன் (1)
தாரன் மாலையன் தமனிய பூணினன் – மணி:3/36
தாராய் (1)
மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய்
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் – மணி:8/22,23
தாரார் (1)
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழு துணை ஆவது – மணி:22/137,138
தாரீரோ (1)
தாரீரோ என சாற்றினள் கழறி – மணி:16/24
தாரை (3)
தயங்கு இணர் கோதை தாரை சாவுற – மணி:7/100
தாரை தவ்வை-தன்னொடு கூடிய – மணி:7/104
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் – மணி:12/48
தாரையும் (3)
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் – மணி:10/51
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி:11/136
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி:12/15
தாரோய் (3)
ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் – மணி:19/3
கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி – மணி:25/15
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய்
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி:25/221,222
தாரோன் (8)
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி:4/72
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு – மணி:18/151
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி:19/2
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து – மணி:20/19
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல் – மணி:21/28
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி – மணி:22/152
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி:24/175
பூம் கமழ் தாரோன் முன்னர் புகன்று – மணி:25/28
தாலி (1)
அமளி துஞ்சும் ஐம்படை தாலி
குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு – மணி:7/56,57
தாழ் (7)
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் – மணி:1/65
தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும் – மணி:2/21
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ – மணி:4/88
தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி:5/9
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின் – மணி:8/6
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி – மணி:8/39
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி – மணி:25/77
தாழ்-வயின் (1)
தாழ்-வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் – மணி:6/67
தாழ்தரு (3)
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் – மணி:1/58
தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம் – மணி:21/33
தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என – மணி:22/103
தாழ்ந்த (3)
தவள நித்தில தாமம் தாழ்ந்த
கோண சந்தி மாண் வினை விதானத்து – மணி:19/112,113
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி – மணி:22/149,150
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் – மணி:28/62
தாழ்ந்தனள் (1)
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி – மணி:11/4
தாழ்ந்து (6)
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி:6/51
சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய – மணி:9/35
தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி – மணி:15/56
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி – மணி:19/106
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி:20/57
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் – மணி:27/120,121
தாழ (1)
பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ
செம் வாய் குதலை மெய் பெறா மழலை – மணி:3/136,137
தாழி (1)
ஆழி தாழி அகவரை திரிவோர் – மணி:6/173
தாழியில் (1)
தாழ்-வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் – மணி:6/67
தாழும் (1)
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் – மணி:27/132
தாழை (2)
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி:4/17
தாழை தண்டின் உணங்கல் காணாய் – மணி:20/62
தாழையும் (2)
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் – மணி:3/163,164
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் – மணி:8/9,10
தாள் (6)
சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன் – மணி:14/103
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி:20/53
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி – மணி:25/39
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி – மணி:25/98
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி – மணி:29/37
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ – மணி:30/200
தான் (52)
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி:0/25
தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும் – மணி:0/48
மணி பூ கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் – மணி:3/42,43
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி – மணி:4/62
சங்கதருமன் தான் எமக்கு அருளிய – மணி:5/70
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி:5/86
தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் – மணி:11/50
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி:12/22
தக்கண மதுரை தான் சென்று எய்தி – மணி:13/105
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே – மணி:14/15
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி – மணி:14/21
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி:14/82
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் – மணி:14/98
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி:15/6
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் – மணி:15/8
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி:15/21
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ – மணி:15/78
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு – மணி:16/22
தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின் – மணி:16/98
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான்
புனையா ஓவியம் போல நிற்றலும் – மணி:16/130,131
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி – மணி:17/6
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி:17/90
தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான்
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் – மணி:18/5,6
சித்திராபதி தான் சிறு நகை எய்தி – மணி:18/86
மணிமேகலை தான் வந்து தோன்ற – மணி:18/150
மறு_இல் செய்கை மணிமேகலை தான்
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் – மணி:19/30,31
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி:19/141
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய – மணி:20/20
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி:22/106
தக்கண மதுரை தான் வறிது ஆக – மணி:22/121
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி:22/207
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் – மணி:23/26
கல்லா கயவன் கார் இருள் தான் வர – மணி:23/94
ஈன்ற குழவியொடு தான் வேறாகி – மணி:23/106
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி:23/111
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை – மணி:23/145
தான் தனி தின்னும் தகைமையது ஆயது – மணி:25/104
தான் பிணி அவிழா தகைமையது ஆகி – மணி:25/217
தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி:27/52
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் – மணி:27/94
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் – மணி:27/187
தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய் – மணி:27/203
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி – மணி:28/142
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி:28/176
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் – மணி:28/180
தாங்கா மாரியும் தான் நனி பொழியும் – மணி:28/197
தன் மகள் பீலிவளை தான் பயந்த – மணி:29/4
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி – மணி:29/22
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான்
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை – மணி:29/117,118
என்னல் அசாதாரணம் ஆவது தான்
உன்னிய பக்கத்து உண்டாம் ஏது – மணி:29/223,224
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி – மணி:29/370
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் – மணி:30/225
தான்-என் (1)
துன்னியது உரைத்த சுதமதி தான்-என் – மணி:7/134
தான்றியும் (1)
தான்றியும் ஓடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி – மணி:6/80
தான (1)
தான பயத்தால் சாவக மன்னவன் – மணி:28/75
தானத்து (1)
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி:14/35
தானம் (4)
தானம் செய் என தருமதத்தனும் – மணி:22/139
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி:24/137
தானம் தாங்கி சீலம் தலை நின்று – மணி:30/1
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி:30/78
தானமும் (3)
தன் மனை நன் பல தானமும் செய்தனன் – மணி:16/127
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும் – மணி:19/49
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும்
தான பயத்தால் சாவக மன்னவன் – மணி:28/74,75
தானும் (2)
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி – மணி:16/12
தாங்கா நல் அறம் தானும் கேட்டு – மணி:28/126
தானே (9)
தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி:4/104
தானே தமியன் வருவோன் தன்முன் – மணி:14/72
தானே தமியன் வந்தனன் அளியன் – மணி:16/58
தானே தமியள் நின்றோள் முன்னர் – மணி:18/124
தானே தமியள் ஒருத்தி தோன்ற – மணி:24/32
சாதன்மியம் எனப்படுவது தானே
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை – மணி:29/138,139
ஏது தானே விபரீதப்படுத்தல் – மணி:29/305
ஆகாசம் தானே உண்மை இன்மையினால் – மணி:29/447
இனையன எல்லாம் தானே ஆகிய – மணி:30/44
தானை (7)
கொடி தேர் தானை கொற்றவன் துயரம் – மணி:1/19
துரக தானை துச்சயன் தேவி – மணி:7/99
துரக தானை துச்சயன் தேவி – மணி:11/134
மா பெரும் தானை மன்ன நின்னொடும் – மணி:12/41
வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி:15/62
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய – மணி:26/79
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் – மணி:28/2
தானைக்கு (1)
பரிதி_அம்_செல்வன் விரி கதிர் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில் – மணி:4/1,2
தானையொடு (2)
அணி தேர் தானையொடு அரசிளங்குமரன் – மணி:4/47
கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி – மணி:4/91
தானையோடு (1)
பறையின் சாற்றி நிறை அரும் தானையோடு
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி – மணி:9/26,27