Select Page

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்குமாம் 1
நகப்படா 1
நகர் 1
நகரும் 1
நகருள் 2
நகும் 2
நகை 5
நகைதரலின் 1
நசை 1
நசைஇ 1
நடக்கும் 1
நடப்ப 1
நடுங்க 3
நடுங்காது 1
நடுங்கான் 1
நடுங்கி 1
நடுங்கு 2
நடுநாள் 1
நடுவண் 2
நடுவு 1
நடுவுநிலை 1
நடுவூர் 1
நடை 3
நடைத்தேர் 1
நடையினார்க்கு 1
நடையும் 1
நடையூறு 1
நண்ணார் 4
நம் 4
நம்மை 1
நமர் 2
நயத்தக 1
நயத்தல் 1
நயந்த 1
நயந்தன்று 3
நயப்ப 1
நயப்பு 2
நயப்புற்றிரங்கல் 1
நயம் 1
நயவார் 1
நரம்பும் 1
நரல 1
நரலும் 2
நல் 29
நல்க 2
நல்கல் 4
நல்கலான் 1
நல்கார் 1
நல்காள் 1
நல்கான் 1
நல்கி 2
நல்கிய 2
நல்கின் 1
நல்கினும் 1
நல்கு 1
நல்குவது 1
நல்ல 1
நல்லாள் 2
நல்லான் 1
நல்லிசைவஞ்சி 1
நலம் 20
நலம்பாராட்டல் 1
நலிய 4
நலியவும் 2
நலிவு 3
நவில் 5
நவின்ற 3
நவை 1
நள் 2
நள்ளாதார் 2
நளி 1
நற 1
நறவு 1
நறிய 1
நறு 2
நறும் 6
நறை 1
நன் 2
நன்கு 2
நன்று 1
நனவிடை 1
நனி 3
நனைப்ப 1

நக்குமாம் (1)

நக்குமாம் நல்ல தகர் – புபொவெபாமா:18 8/4

மேல்

நகப்படா (1)

நகப்படா வென்றி நலம் மிகு தாராற்கு – புபொவெபாமா:6 13/3

மேல்

நகர் (1)

திரு வளர் நல் நகர் அடைந்த கொழுநன் – புபொவெபாமா:13 20/1

மேல்

நகரும் (1)

பலி பெறு நல் நகரும் பள்ளி இடனும் – புபொவெபாமா:3 19/1

மேல்

நகருள் (2)

ஒலி கழலான் அகல் நகருள்
பலி பெறு முரசின் பண்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 8/1,2
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள்
முழங்கும் அதிரும் முரசு – புபொவெபாமா:8 9/3,4

மேல்

நகும் (2)

நன் பகலும் கூகை நகும் – புபொவெபாமா:3 9/4
பெட்ப நகும் பெயரும் பேய்_மகள் உட்க – புபொவெபாமா:4 35/2

மேல்

நகை (5)

நகை அமர் ஆயம் நடுங்க நடுங்கான் – புபொவெபாமா:4 31/1
நகை தாரான் தான் விரும்பும் நாடு – புபொவெபாமா:9 35/4
முள் எயிறு இலங்கு முகிழ் நகை
வெள் வளை நல்காள் விடும் என் உயிரே – புபொவெபாமா:14 19/3,4
நல் வயல் ஊரனை நகை மிகுத்தன்று – புபொவெபாமா:16 14/2
நாள்நாளும் மேயா நகை – புபொவெபாமா:17 17/4

மேல்

நகைதரலின் (1)

நல் தார் அகலம் நகைதரலின் நல் தார் – புபொவெபாமா:16 15/2

மேல்

நசை (1)

வாடை நலிய வடு கண்ணான் தோள் நசை
ஓடை மழ களிற்றான் உள்ளான்-கொல் கோடல் – புபொவெபாமா:8 33/1,2

மேல்

நசைஇ (1)

முன் இழந்த நலம் நசைஇ
பின் நிலை மலைந்தன்று – புபொவெபாமா:16 4/1,2

மேல்

நடக்கும் (1)

நெடும் தேர் தானை நீறுபட நடக்கும்
கடும் தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று – புபொவெபாமா:9 16/1,2

மேல்

நடப்ப (1)

குரை அழல் நடப்ப குறும்பு எறிந்தன்று – புபொவெபாமா:1 18/2

மேல்

நடுங்க (3)

பீடு உலாம் மன்னர் நடுங்க பெரும் புகை – புபொவெபாமா:3 45/1
நகை அமர் ஆயம் நடுங்க நடுங்கான் – புபொவெபாமா:4 31/1
ஒன்னார் நடுங்க உலாய் நிமிரின் என்னாம்-கொல் – புபொவெபாமா:7 11/2

மேல்

நடுங்காது (1)

நலம் வர நாடி நடுங்காது நூல்-கண் – புபொவெபாமா:18 10/3

மேல்

நடுங்கான் (1)

நகை அமர் ஆயம் நடுங்க நடுங்கான்
தொகை அமர் ஓட்டிய துப்பின் பகைவர் முன் – புபொவெபாமா:4 31/1,2

மேல்

நடுங்கி (1)

நடுங்கி நறு நுதலாள் நல் நலம் பீர்பூப்ப – புபொவெபாமா:17 3/1

மேல்

நடுங்கு (2)

நெடும்_கை பிணத்திடையே நின்றான் நடுங்கு அமருள் – புபொவெபாமா:7 27/2
நள் இருள் மாலை நடுங்கு அஞர் நலிய – புபொவெபாமா:16 30/1

மேல்

நடுநாள் (1)

காண்டல் வேட்கையொடு கனை இருள் நடுநாள்
மாண்ட சாயல் மனை இறந்தன்று – புபொவெபாமா:16 12/1,2

மேல்

நடுவண் (2)

ஒளிரும் படை நடுவண் ஊழித்தீ அன்ன – புபொவெபாமா:3 5/3
கொள்வார் நடுவண் கொடை ஓம்பான் வெள் வாள் – புபொவெபாமா:9 15/2

மேல்

நடுவு (1)

நவை நீங்க நடுவு கூறும் – புபொவெபாமா:8 38/1

மேல்

நடுவுநிலை (1)

நான்மறையோன் நலம் பெருகும் நடுவுநிலை உரைத்தன்று – புபொவெபாமா:8 36/2

மேல்

நடுவூர் (1)

நெடு வரை நீள் வேய் நரலும் நடுவூர்
கண நிரை கைக்கொண்டு கை அகலார் நின்ற – புபொவெபாமா:1 21/2,3

மேல்

நடை (3)

பாணி நடை புரவி பல் களிற்றார் சாத்தினார் – புபொவெபாமா:6 37/3
நடை நவின்ற பாய்_மாவும் நல்கி கடை இறந்து – புபொவெபாமா:9 53/2
கை கால் புருவம் கண் பாணி நடை தூக்கு – புபொவெபாமா:18 18/1

மேல்

நடைத்தேர் (1)

நடைத்தேர் ஒலி கறங்கும் நாடு – புபொவெபாமா:3 17/4

மேல்

நடையினார்க்கு (1)

அன்ன_நடையினார்க்கு ஆர்_அமுதம் துன்னும் – புபொவெபாமா:9 3/2

மேல்

நடையும் (1)

பாணியும் தூக்கும் நடையும் பெயராமை – புபொவெபாமா:18 20/3

மேல்

நடையூறு (1)

நடையூறு சொல் மடந்தை நல்குவது நம் மேல் – புபொவெபாமா:0 1/1

மேல்

நண்ணார் (4)

நா புலவர் சொல்_மாலை நண்ணார் படை உழக்கி – புபொவெபாமா:2 21/1
நறவு ஏய் கமழ் தெரியல் நண்ணார் எறிந்த – புபொவெபாமா:3 23/3
நண்ணார் கிளை அலற நாடு – புபொவெபாமா:3 31/4
நாட்டி பொறி செறிந்து நண்ணார் மேல் செல்க என்று – புபொவெபாமா:4 17/3

மேல்

நம் (4)

நடையூறு சொல் மடந்தை நல்குவது நம் மேல் – புபொவெபாமா:0 1/1
ஊர்ந்து நம் கேள்வர் உழை வந்தார் சார்ந்து – புபொவெபாமா:13 7/2
தெரிவு இன்றி ஊட தெரிந்து நம் கேள்வர் – புபொவெபாமா:16 31/1
குடை வரை ஏந்திய நம் கோவலனே கொண்டான் – புபொவெபாமா:18 6/1

மேல்

நம்மை (1)

கயக்கிய நோயவாய் கையிகந்து நம்மை
இயக்கிய யாக்கை இறாமுன் மயக்கிய – புபொவெபாமா:8 69/1,2

மேல்

நமர் (2)

நள் இருள் வந்தார் நமர் – புபொவெபாமா:1 15/4
இன்று நமர் விட்ட ஏறு – புபொவெபாமா:18 6/4

மேல்

நயத்தக (1)

நயத்தக மண்ணி நறு விரை கொண்டு ஆட்டி – புபொவெபாமா:10 21/3

மேல்

நயத்தல் (1)

காண்டல் நயத்தல் உட்கோள் மெலிதல் – புபொவெபாமா:15 1/1

மேல்

நயந்த (1)

வண்டு அமர் குஞ்சி மைந்தனை நயந்த
ஒண் தொடி அரிவை உட்கொண்டன்று – புபொவெபாமா:15 6/1,2

மேல்

நயந்தன்று (3)

மெய் ஆய பொருள் நயந்தன்று – புபொவெபாமா:8 66/2
கரும் தடம் கண்ணியை கண்டு நயந்தன்று – புபொவெபாமா:14 2/2
உயர் வரை நாடன் உரை கேட்டு நயந்தன்று – புபொவெபாமா:16 32/2

மேல்

நயப்ப (1)

நாறு இரும் கூந்தல் மகளிரை நயப்ப
வேறுபடு வேட்கை வீய கூறின்று – புபொவெபாமா:17 36/1,2

மேல்

நயப்பு (2)

நலிவு கண்டு நயப்பு அவிந்தன்று – புபொவெபாமா:8 68/2
நல் நுதல் அரிவை நயப்பு உரைத்தன்று – புபொவெபாமா:15 4/2

மேல்

நயப்புற்றிரங்கல் (1)

நயப்புற்றிரங்கல் புணராஇரக்கம் – புபொவெபாமா:14 1/3

மேல்

நயம் (1)

நயம் வரும் பள்ளி மேல் நல்கி கயவா – புபொவெபாமா:15 19/2

மேல்

நயவார் (1)

நல் மணி தேர் நயவார் தலை பனிப்ப – புபொவெபாமா:7 5/3

மேல்

நரம்பும் (1)

அ நரம்பும் அ சுவையும் ஆய்ந்து – புபொவெபாமா:18 19/4

மேல்

நரல (1)

விரை மார்பின் வில் நரல வெம் கணை தூவார் – புபொவெபாமா:6 29/3

மேல்

நரலும் (2)

நெடு வரை நீள் வேய் நரலும் நடுவூர் – புபொவெபாமா:1 21/2
புன வேய் நரலும் புழை – புபொவெபாமா:4 7/4

மேல்

நல் (29)

நல் குலத்துள் தோன்றிய நல் இசை யாழ் தொல் புலவீர் – புபொவெபாமா:2 21/3
நல் குலத்துள் தோன்றிய நல் இசை யாழ் தொல் புலவீர் – புபொவெபாமா:2 21/3
பலி பெறு நல் நகரும் பள்ளி இடனும் – புபொவெபாமா:3 19/1
நல் இசை கொண்டு அடையார் நாடு – புபொவெபாமா:3 51/4
ஊக்கம் முரண் மிகுதி ஒன்றிய நல் சூழ்ச்சி – புபொவெபாமா:6 13/1
நல் மணி தேர் நயவார் தலை பனிப்ப – புபொவெபாமா:7 5/3
இல் பிறப்பும் நாணும் இடை ஒழிய நல் போர் – புபொவெபாமா:7 55/2
நல் இசை மு செம் தீ நான்மறையோன் செல்லவும் – புபொவெபாமா:8 37/2
நல் ஆண்மையை நலம் மிகுத்தன்று – புபொவெபாமா:8 46/2
நல் துனி நவின்ற பாடாண்பாட்டும் – புபொவெபாமா:9 1/27
நாட்டிய வாய்மொழி நா புலவர் நல் இசை – புபொவெபாமா:9 5/1
நல் நெறியே காட்டும் நலம் தெரி கோலோற்கு – புபொவெபாமா:9 25/3
இன் தொடை நல் இசை யாழ்ப்பாண எம்மை போல் – புபொவெபாமா:9 56/1
பல் புகழ் பாடி பகர்தியேல் நல் அவையோர் – புபொவெபாமா:9 62/2
நாவு உடை நல் மணி நன்கு இயம்ப மேவார் – புபொவெபாமா:10 19/2
நளி மனைக்கு நல் துணை நாண் – புபொவெபாமா:13 9/4
திரு வளர் நல் நகர் அடைந்த கொழுநன் – புபொவெபாமா:13 20/1
பழி தீர் நல் நலம் பாராட்டின்று – புபொவெபாமா:14 12/2
நல் நுதல் அரிவை நயப்பு உரைத்தன்று – புபொவெபாமா:15 4/2
நல் வளை ஏக நலம் தொலைவு காட்டிய – புபொவெபாமா:15 25/1
நல் வயல் ஊரனை நகை மிகுத்தன்று – புபொவெபாமா:16 14/2
நல் தார் அகலம் நகைதரலின் நல் தார் – புபொவெபாமா:16 15/2
நல் தார் அகலம் நகைதரலின் நல் தார் – புபொவெபாமா:16 15/2
கலவேம் என நேர்ந்தும் காஞ்சி நல் ஊர – புபொவெபாமா:16 15/3
நல் வளை மடந்தை நல் தார் பரிந்து – புபொவெபாமா:16 16/1
நல் வளை மடந்தை நல் தார் பரிந்து – புபொவெபாமா:16 16/1
நடுங்கி நறு நுதலாள் நல் நலம் பீர்பூப்ப – புபொவெபாமா:17 3/1
நல் நலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ – புபொவெபாமா:17 37/3
சீர் மிகு நல் இசை பாடி செலவு அயர்தும் – புபொவெபாமா:18 2/1

மேல்

நல்க (2)

குரிசில் நீ நல்க யாம் கொள்ளும் பரிசில் – புபொவெபாமா:9 11/2
கரு வரை மார்பின் எம் காதலன் நல்க
வரு விருந்து ஓம்பும் வளம் – புபொவெபாமா:13 21/3,4

மேல்

நல்கல் (4)

தண்ணடை நல்கல் தகும் – புபொவெபாமா:3 27/4
தந்தாற்கு நல்கல் வியப்போ கிளந்து ஏத்தி – புபொவெபாமா:4 25/3
எம் கணவன் நல்கல் இனிது – புபொவெபாமா:13 17/4
அல்லி அம் தார் நல்கல் அறம் – புபொவெபாமா:16 3/4

மேல்

நல்கலான் (1)

பைம் கண் பணை தாள் பகட்டு உழவன் நல்கலான்
எங்கட்கு அடையா இடர் – புபொவெபாமா:8 11/3,4

மேல்

நல்கார் (1)

நல் நலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ – புபொவெபாமா:17 37/3

மேல்

நல்காள் (1)

வெள் வளை நல்காள் விடும் என் உயிரே – புபொவெபாமா:14 19/4

மேல்

நல்கான் (1)

வன்கண்ணன் நல்கான் என வாடும் என்-கண் – புபொவெபாமா:15 15/2

மேல்

நல்கி (2)

நடை நவின்ற பாய்_மாவும் நல்கி கடை இறந்து – புபொவெபாமா:9 53/2
நயம் வரும் பள்ளி மேல் நல்கி கயவா – புபொவெபாமா:15 19/2

மேல்

நல்கிய (2)

நல்கிய பின்னும் நனி நீட பல் போர் – புபொவெபாமா:9 51/2
பயில் வளையை நல்கிய பால் – புபொவெபாமா:13 15/4

மேல்

நல்கின் (1)

தண் தார் அகலம் தழூஉ புணையா நீ நல்கின்
உண்டாம் என் தோழிக்கு உயிர் – புபொவெபாமா:17 9/3,4

மேல்

நல்கினும் (1)

பிரிவு இன்றி நல்கினும் பேணாய் திரிவு இன்றி – புபொவெபாமா:16 31/2

மேல்

நல்கு (1)

நல்கு எனின் நா_மிசையாள் நோம் என்னும் சேவடி மேல் – புபொவெபாமா:9 96/1

மேல்

நல்குவது (1)

நடையூறு சொல் மடந்தை நல்குவது நம் மேல் – புபொவெபாமா:0 1/1

மேல்

நல்ல (1)

நக்குமாம் நல்ல தகர் – புபொவெபாமா:18 8/4

மேல்

நல்லாள் (2)

கொங்கு அலர் கோதை குமரி மட நல்லாள்
மங்கலம் கூற மலிபு எய்தி கங்கையாள் – புபொவெபாமா:9 72/1,2
இறை காக்கும் இ உலகில் இல் பிறந்த நல்லாள்
நிறை காப்ப வைகும் நிறை – புபொவெபாமா:13 19/3,4

மேல்

நல்லான் (1)

பெரு நல்லான் உழையீர் ஆக என – புபொவெபாமா:9 59/1

மேல்

நல்லிசைவஞ்சி (1)

நல்லிசைவஞ்சி என நாட்டினர் தொகுத்த – புபொவெபாமா:3 1/11

மேல்

நலம் (20)

புல்லார் நிரை கருதி யாம் செல்ல புள் நலம்
பல்லார் அறிய பகர்ந்தார்க்கு சொல்லால் – புபொவெபாமா:1 39/1,2
நகப்படா வென்றி நலம் மிகு தாராற்கு – புபொவெபாமா:6 13/3
நான்மறையோன் நலம் பெருகும் நடுவுநிலை உரைத்தன்று – புபொவெபாமா:8 36/2
நல் ஆண்மையை நலம் மிகுத்தன்று – புபொவெபாமா:8 46/2
நல் நெறியே காட்டும் நலம் தெரி கோலோற்கு – புபொவெபாமா:9 25/3
பண் நலம் கூட்டுண்ணும் பனி மலர் பாசூர் என் – புபொவெபாமா:9 98/3
உள் நலம் கூட்டுண்டான் ஊர் – புபொவெபாமா:9 98/4
இள மைந்தர் நலம் வேட்ட – புபொவெபாமா:9 99/1
நன்று அறி கொழுநனை நலம் மிகுத்தன்று – புபொவெபாமா:13 16/2
பழி தீர் நல் நலம் பாராட்டின்று – புபொவெபாமா:14 12/2
அம் தழை அல்குல் அணி நலம் புணரா – புபொவெபாமா:14 18/1
மணி வளை நெகிழ மாண் நலம் தொலைய – புபொவெபாமா:15 10/1
நல் வளை ஏக நலம் தொலைவு காட்டிய – புபொவெபாமா:15 25/1
முன் இழந்த நலம் நசைஇ – புபொவெபாமா:16 4/1
நடுங்கி நறு நுதலாள் நல் நலம் பீர்பூப்ப – புபொவெபாமா:17 3/1
தனி மட மான் நோக்கி தகை நலம் பாராட்டி – புபொவெபாமா:17 5/3
மாண் நலம் கொள்ளும் மகிழ்நன் தணக்குமேல் – புபொவெபாமா:17 31/1
நல் நலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ – புபொவெபாமா:17 37/3
தொல் நலம் உண்டார் தொடர்பு – புபொவெபாமா:17 37/4
நலம் வர நாடி நடுங்காது நூல்-கண் – புபொவெபாமா:18 10/3

மேல்

நலம்பாராட்டல் (1)

பயந்தோர்ப்பழிச்சல் நலம்பாராட்டல்
நயப்புற்றிரங்கல் புணராஇரக்கம் – புபொவெபாமா:14 1/2,3

மேல்

நலிய (4)

வாடை நலிய வடு கண்ணான் தோள் நசை – புபொவெபாமா:8 33/1
கடை நின்று காமம் நலிய கலங்கி – புபொவெபாமா:15 3/1
நள் இருள் மாலை நடுங்கு அஞர் நலிய
ஒள் வளை தோளி ஊடலுள் நெகிழ்ந்தன்று – புபொவெபாமா:16 30/1,2
இலங்கு_இழை எவ்வம் நலிய கலங்கி – புபொவெபாமா:16 39/2

மேல்

நலியவும் (2)

கூதிர் நலியவும் உள்ளான் கொடி தேரான் – புபொவெபாமா:8 31/3
தண்டா விழு படர் நலியவும்
உண்டால் என் உயிர் ஓம்புதற்கு அரிதே – புபொவெபாமா:14 17/3,4

மேல்

நலிவு (3)

ஒலி கெழு நான்மறையோர் இல்லும் நலிவு ஒரீஇ – புபொவெபாமா:3 19/2
நலிவு கண்டு நயப்பு அவிந்தன்று – புபொவெபாமா:8 68/2
பெண் மேல் நலிவு பிழை என்னாய் பேதுறீஇ – புபொவெபாமா:15 17/1

மேல்

நவில் (5)

வில் நவில் தோளானும் வேண்டிய கொள்க என்னும் – புபொவெபாமா:8 55/1
கல் நவில் திண் தோள் கழலானும் மன்னன் முன் – புபொவெபாமா:8 55/2
கல் நவில் தோளான் கண்ட பின் அவளை – புபொவெபாமா:14 4/1
கல் நவில் திணி தோள் காளையை கண்ட – புபொவெபாமா:15 4/1
கல் நவில் தோளானை காண்டலும் கார் குவளை – புபொவெபாமா:15 5/1

மேல்

நவின்ற (3)

நல் துனி நவின்ற பாடாண்பாட்டும் – புபொவெபாமா:9 1/27
படை நவின்ற பல் களிறும் பண் அமைந்த தேரும் – புபொவெபாமா:9 53/1
நடை நவின்ற பாய்_மாவும் நல்கி கடை இறந்து – புபொவெபாமா:9 53/2

மேல்

நவை (1)

நவை நீங்க நடுவு கூறும் – புபொவெபாமா:8 38/1

மேல்

நள் (2)

நள் இருள் வந்தார் நமர் – புபொவெபாமா:1 15/4
நள் இருள் மாலை நடுங்கு அஞர் நலிய – புபொவெபாமா:16 30/1

மேல்

நள்ளாதார் (2)

கொள்வான் கொடி தானை கொண்டு எழுந்தான் நள்ளாதார்
அஞ்சு வரு வாயில் அரு மிளை குண்டு அகழி – புபொவெபாமா:6 11/2,3
நாவாயும் தோணியும் மேல்கொண்டு நள்ளாதார்
ஓவார் விலங்கி உடலவும் பூ ஆர் – புபொவெபாமா:6 35/1,2

மேல்

நளி (1)

நளி மனைக்கு நல் துணை நாண் – புபொவெபாமா:13 9/4

மேல்

நற (1)

நற மலியும் நறும் தாரான் – புபொவெபாமா:4 42/1

மேல்

நறவு (1)

நறவு ஏய் கமழ் தெரியல் நண்ணார் எறிந்த – புபொவெபாமா:3 23/3

மேல்

நறிய (1)

சிறு துவலை சிந்தின சிந்த நறிய
பவர் முல்லை தோன்றி பரியாமல் ஈன்ற – புபொவெபாமா:17 15/2,3

மேல்

நறு (2)

நயத்தக மண்ணி நறு விரை கொண்டு ஆட்டி – புபொவெபாமா:10 21/3
நடுங்கி நறு நுதலாள் நல் நலம் பீர்பூப்ப – புபொவெபாமா:17 3/1

மேல்

நறும் (6)

நற மலியும் நறும் தாரான் – புபொவெபாமா:4 42/1
கள் வார் நறும் கோதை காரணமா கொள்வான் – புபொவெபாமா:5 18/2
கான் மலியும் நறும் தெரியல் கழல் வேந்தர் இகல் அவிக்கும் – புபொவெபாமா:8 36/1
நறும் பூம் சாரல் ஆங்கண் – புபொவெபாமா:14 13/3
இணர் ஆர் நறும் கோதை எல் வளையாள் கூட்டம் – புபொவெபாமா:14 17/1
உறு வரை மார்பன் ஒள் இணர் நறும் தார் – புபொவெபாமா:16 22/1

மேல்

நறை (1)

ஐயவி சிந்தி நறை புகைத்து ஆய் மலர் தூய் – புபொவெபாமா:4 39/1

மேல்

நன் (2)

நன் பகலும் கூகை நகும் – புபொவெபாமா:3 9/4
நன் பொருள் தெரிந்தோர் நாலிருமூன்றும் – புபொவெபாமா:7 1/13

மேல்

நன்கு (2)

வேண்டிய பொருளின் விளைவு நன்கு அறிதற்கு – புபொவெபாமா:1 10/1
நாவு உடை நல் மணி நன்கு இயம்ப மேவார் – புபொவெபாமா:10 19/2

மேல்

நன்று (1)

நன்று அறி கொழுநனை நலம் மிகுத்தன்று – புபொவெபாமா:13 16/2

மேல்

நனவிடை (1)

நனவிடை தமியேன் வைக – புபொவெபாமா:15 19/3

மேல்

நனி (3)

ஆற்றாமை நனி பெருகவும் அயில் வேலோன் அளி துறந்தன்று – புபொவெபாமா:8 30/2
நல்கிய பின்னும் நனி நீட பல் போர் – புபொவெபாமா:9 51/2
ஐயம் நனி நீங்க ஆடினாள் மையல் – புபொவெபாமா:17 21/2

மேல்

நனைப்ப (1)

சோர் குருதி சூழா நிலம் நனைப்ப போர் கருதி – புபொவெபாமா:7 3/2

மேல்