Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 1
நிகழ்ந்த 1
நிகழ்பு 1
நிகழாது 1
நிணம் 4
நிணமும் 1
நிணன் 1
நிதியம் 3
நிமித்தம் 1
நிமிர்ந்து 1
நிமிரின் 1
நிமிரும் 1
நிரை 26
நிரைகோள் 1
நிரைத்து 1
நிரையும் 1
நிரையுள் 1
நில்லா 3
நில்லாது 1
நில்லாய் 1
நிலத்து 4
நிலம் 9
நிலம்_மிசையோர் 2
நிலவரை 1
நிலவு 2
நிலவுதல் 1
நிலன் 2
நிலா 1
நிலை 29
நிலை_உணர்த்தியோர்க்கு 1
நிலைமை 3
நிலையா 1
நிலையாமை 2
நிலையும் 2
நிலையே 1
நிலைஇ 1
நிவந்த 1
நிவப்பவும் 1
நிழல் 7
நிழலையும் 1
நிழலோர் 2
நிற்க 1
நிற்கு 1
நிற்ப 1
நிற்பதோ 1
நிற்பேன் 1
நிற்றல் 2
நிற்றலும் 1
நிறத்து 1
நிறத்தொடு 1
நிறம் 4
நிறனொடு 1
நிறீஇ 3
நிறை 8
நிறை_இல் 1
நிறைத்து 1
நிறைந்த 1
நிறைய 1
நிறையா 1
நிறையை 1
நின் 4
நின்ற 10
நின்றவர் 1
நின்றன்று 3
நின்றாய் 1
நின்றார் 1
நின்றாள் 1
நின்றான் 7
நின்றானை 1
நின்று 17
நின்றேற்கு 2
நின்றேன் 2
நின்றோள் 1
நின்னை 1
நின்னையே 1
நின்னொடு 1
நினக்கே 1
நினைத்தால் 1
நினைதியோ 1
நினைந்து 1
நினையா 1
நினையினும் 1

நிகர் (1)

தன் நிகர் இல்லா தானைமறமே – புபொவெபாமா:7 1/2

மேல்

நிகழ்ந்த (1)

நிகழ்ந்த காம பகுதியுள் தோன்றிய – புபொவெபாமா:9 1/25

மேல்

நிகழ்பு (1)

நிகழ்பு அறிபவன் இயல்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 26/2

மேல்

நிகழாது (1)

செயிர்க்-கண் நிகழாது செங்கோல் உயரி – புபொவெபாமா:8 35/1

மேல்

நிணம் (4)

நிணம் நிரை வேலார் நிலை – புபொவெபாமா:1 21/4
நிணம் குடர் நெய்த்தோர் நிறைத்து கணம் புகல – புபொவெபாமா:3 11/2
நிணம் கொள் பேழ் வாய நிழல் போல் நுடங்கி – புபொவெபாமா:7 39/3
நெய் கொள் நிணம் தூ நிறைய அமைத்திட்ட – புபொவெபாமா:13 17/1

மேல்

நிணமும் (1)

கரும் தலையும் வெள் நிணமும் செம் தடியும் ஈரா – புபொவெபாமா:4 29/1

மேல்

நிணன் (1)

பிணன் ஆர்ந்து பேய் வழங்கு ஞாட்பின் நிணன் ஆர் – புபொவெபாமா:10 23/2

மேல்

நிதியம் (3)

நிதியம் திறை அளந்தார் நேராரும் தன் கீழ் – புபொவெபாமா:3 21/3
புதிய புகழ்_மாலை வேய நிதியம்
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள் – புபொவெபாமா:8 9/2,3
மாயா நிதியம் மனை செறீஇ ஈயாது – புபொவெபாமா:12 5/2

மேல்

நிமித்தம் (1)

நெடு வேய் தோளி நிமித்தம் வேறுபட – புபொவெபாமா:16 10/1

மேல்

நிமிர்ந்து (1)

உரவு ஒலி முந்நீர் உலாய் நிமிர்ந்து அன்ன – புபொவெபாமா:14 19/1

மேல்

நிமிரின் (1)

ஒன்னார் நடுங்க உலாய் நிமிரின் என்னாம்-கொல் – புபொவெபாமா:7 11/2

மேல்

நிமிரும் (1)

கொட்கும் நிமிரும் குறுகும் குடர் சூடி – புபொவெபாமா:4 35/1

மேல்

நிரை (26)

நெடும் கடைய நேரார் நிரை – புபொவெபாமா:1 7/4
வெட்சி மலைய விரவார் மணி நிரை
கட்சியுள் காரி கலுழ்ம் – புபொவெபாமா:1 9/3,4
நிலையும் நிரையும் நிரை புறத்து நின்ற – புபொவெபாமா:1 15/1
கண நிரை கைக்கொண்டு கை அகலார் நின்ற – புபொவெபாமா:1 21/3
நிணம் நிரை வேலார் நிலை – புபொவெபாமா:1 21/4
சூழ்ந்த நிரை பெயர சுற்றி தலைக்கொண்டார் – புபொவெபாமா:1 23/1
வருந்தாமல் நிரை உய்த்தன்று – புபொவெபாமா:1 24/2
நெடு வரை நீழல் நிரை – புபொவெபாமா:1 25/4
மொய் அணல் ஆன்_நிரை முன் செல்ல பின் செல்லும் – புபொவெபாமா:1 27/1
ஊர் புகல நிரை உய்ந்தன்று – புபொவெபாமா:1 28/2
அணி நிரை வால் முறுவல் அம் மா எயிற்றி – புபொவெபாமா:1 29/3
மணி நிரை மல்கிய மன்று – புபொவெபாமா:1 29/4
கவர் கணை சுற்றம் கவர்ந்த கண நிரை
அவரவர் வினை-வயின் அறிந்து ஈந்தன்று – புபொவெபாமா:1 30/1,2
கூறிட்டார் கொண்ட நிரை – புபொவெபாமா:1 31/4
ஈண்டிய நிரை ஒழிவு_இன்றி – புபொவெபாமா:1 34/1
புல்லார் நிரை கருதி யாம் செல்ல புள் நலம் – புபொவெபாமா:1 39/1
தலைக்கொண்ட நிரை பெயர்த்தன்று – புபொவெபாமா:2 2/2
நேரார் கைக்கொண்ட நிரை – புபொவெபாமா:2 3/4
உளர்ந்தார் நிரை பெயர்வும் உண்டு – புபொவெபாமா:2 5/4
நிரை பின் நெடுந்தகை சென்றான் புரைப்பு இன்றி – புபொவெபாமா:2 13/2
சுரையொடு பேய்ப்பீர்க்கும் சுமந்த நிரை திண் தேர் – புபொவெபாமா:3 51/2
பாண்டில் நிரை தோல் பணியார் பகை அரணம் – புபொவெபாமா:6 25/3
உழுது பயன் கொண்டு ஒலி நிரை ஓம்பி – புபொவெபாமா:8 21/1
நெடு மதில் எறிந்து நிரை தார் மன்னன் – புபொவெபாமா:9 42/1
நெடும் தடக்கை யானை நிரை – புபொவெபாமா:9 60/4
நிலம் தரிய செல்லும் நிரை தண் தார் சேரன் – புபொவெபாமா:9 70/3

மேல்

நிரைகோள் (1)

நிரைகோள் கேட்டு செய் தொழில் ஒழிய – புபொவெபாமா:2 4/1

மேல்

நிரைத்து (1)

நிழல் கதிர் வேல் மின்ன நிரைத்து – புபொவெபாமா:2 7/4

மேல்

நிரையும் (1)

நிலையும் நிரையும் நிரை புறத்து நின்ற – புபொவெபாமா:1 15/1

மேல்

நிரையுள் (1)

மாயவன் மாயம் அதுவால் மணி நிரையுள்
ஆயனா எண்ணல் அவன் அருளால் காய – புபொவெபாமா:9 80/1,2

மேல்

நில்லா (3)

நின்ற புகழ் ஒழிய நில்லா உயிர் ஓம்பி – புபொவெபாமா:6 25/1
ஒரு நாள் மடியின் உலகின் மேல் நில்லா
இரு_நால் வகையார் இயல்பு – புபொவெபாமா:8 49/3,4
உள்ளம் உருக ஒளி வளையும் கை நில்லா
கள் அவிழ் தாரானும் கைக்கு அணையான் எள்ளி – புபொவெபாமா:15 7/1,2

மேல்

நில்லாது (1)

நில்லாது ஓடும் என் நிறை_இல் நெஞ்சே – புபொவெபாமா:14 15/4

மேல்

நில்லாய் (1)

செல்லாம் ஒழிக செலவு என்பாய் நில்லாய்
புனை இழை இழந்த பூசல் – புபொவெபாமா:15 23/2,3

மேல்

நிலத்து (4)

நீர் பலகால் மூழ்கி நிலத்து அசைஇ தோல் உடீஇ – புபொவெபாமா:8 29/1
இன்னது ஒன்று எய்துதும் இரு நிலத்து யாம் என – புபொவெபாமா:9 85/1
மலை ஓங்கிய மா நிலத்து
நிலையாமை நெறி உரைத்தன்று – புபொவெபாமா:12 4/1,2
மா நிலத்து இயலும் மாதராம் என – புபொவெபாமா:14 6/1

மேல்

நிலம் (9)

கோடு உயர் வெற்பின் நிலம் கண்டு இரை கருதும் – புபொவெபாமா:6 41/1
சோர் குருதி சூழா நிலம் நனைப்ப போர் கருதி – புபொவெபாமா:7 3/2
நிலம் தீண்டா வகை பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று – புபொவெபாமா:7 46/2
இரு நிலம் காவலன் இயல்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 34/2
நெடு மதில் கொண்டு நிலம்_மிசையோர் ஏத்த – புபொவெபாமா:9 43/3
நிலம் தரிய செல்லும் நிரை தண் தார் சேரன் – புபொவெபாமா:9 70/3
குல முதலை கொண்டு ஒளித்தல் அன்றி நிலம் உற – புபொவெபாமா:11 13/2
நின்று நிலம்_மிசையோர் ஏத்த நெடு விசும்பில் – புபொவெபாமா:11 31/1
இரு நிலம் சேவடியும் தோயும் அரி பரந்த – புபொவெபாமா:14 7/2

மேல்

நிலம்_மிசையோர் (2)

நெடு மதில் கொண்டு நிலம்_மிசையோர் ஏத்த – புபொவெபாமா:9 43/3
நின்று நிலம்_மிசையோர் ஏத்த நெடு விசும்பில் – புபொவெபாமா:11 31/1

மேல்

நிலவரை (1)

நிலவரை மலிய நீடு வாழியரோ – புபொவெபாமா:14 11/4

மேல்

நிலவு (2)

நிலவு வேல் நெடுந்தகை நீள் கழை ஆற்றிடை – புபொவெபாமா:17 2/1
நிலவு உரைக்கும் பூணவர் சேரி செலவு உரைத்து – புபொவெபாமா:17 25/2

மேல்

நிலவுதல் (1)

நிறையா நிலவுதல் அன்றி குறையாத – புபொவெபாமா:8 63/2

மேல்

நிலன் (2)

தாரொடு பொங்கி நிலன் அசைஇ தான் மிசையும் – புபொவெபாமா:11 9/3
நீள் நெறி உழவன் நிலன் உழு வென்றியும் – புபொவெபாமா:18 1/6

மேல்

நிலா (1)

நெறியுள் விரிக நிலா – புபொவெபாமா:16 39/4

மேல்

நிலை (29)

அறாஅ நிலை சாடி ஆடுறு தேறல் – புபொவெபாமா:1 7/1
நின்ற நிலை கருதி ஏகினார் நீள் கழைய – புபொவெபாமா:1 13/3
நிணம் நிரை வேலார் நிலை – புபொவெபாமா:1 21/4
வெம் முனை நிலை_உணர்த்தியோர்க்கு – புபொவெபாமா:1 36/1
கூடாரை புறம் காணும் கொற்றவை நிலை உரைத்தன்று – புபொவெபாமா:3 10/2
விறல் வேலோர் நிலை உரைத்தன்று – புபொவெபாமா:3 22/2
முன்னோனது நிலை கிளந்தன்று – புபொவெபாமா:3 26/2
ஒருவன் தாங்கிய நிலை உரைத்தன்று – புபொவெபாமா:3 38/2
மண் கெழு மறவன் மாறு நிலை நோனான் – புபொவெபாமா:4 30/1
ஏப்புழை ஞாயில் ஏந்து நிலை அரணம் – புபொவெபாமா:5 2/1
நெய் அணிக செவ் வேல் நெடும் தேர் நிலை புகுக – புபொவெபாமா:6 5/1
திண் பிணி முரச நிலை உரைத்தன்று – புபொவெபாமா:6 8/2
நீஇள் மதிலின நிலை உரைத்தன்று – புபொவெபாமா:6 22/2
கயில் கழலோன் நிலை உரைத்தன்று – புபொவெபாமா:6 58/2
நிலம் தீண்டா வகை பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று – புபொவெபாமா:7 46/2
கண்படை நிலை மலிந்தன்று – புபொவெபாமா:8 58/2
புரவலன் நெடும் கடை குறுகிய என் நிலை
கரவு இன்றி உரை என காவலர்க்கு உரைத்தன்று – புபொவெபாமா:9 4/1,2
விளக்கு நிலை விரித்து உரைத்தன்று – புபொவெபாமா:9 24/2
கண்ணிய கபிலை நிலை உரைத்தன்று – புபொவெபாமா:9 28/2
உயர் வெள்ளி நிலை உரைத்தன்று – புபொவெபாமா:9 32/2
நீர் மலி கண்ணொடு நின்றேன் நிலை இரங்காய் – புபொவெபாமா:11 3/1
காதலி இழந்த கணவன் நிலை உரைத்தன்று – புபொவெபாமா:11 4/2
மனையகத்து உறையும் மைந்தன் நிலை உரைத்தன்று – புபொவெபாமா:11 6/2
நிலை நிலையாமை நெறிப்பட உரைத்தன்று – புபொவெபாமா:12 10/2
இளமை நிலை தளர மூப்போடு இறைஞ்சி – புபொவெபாமா:12 11/1
மடவரல் புணர்ந்த மகிழ்ச்சி நிலை உரைத்தன்று – புபொவெபாமா:13 2/2
உருத்து எழு மன்னர் ஒன்னார்-தம் நிலை
திருத்திய காதலர் தேர் வரவு உரைத்தன்று – புபொவெபாமா:13 6/1,2
நெஞ்சொடு புகன்று நிலை உரைத்தன்று – புபொவெபாமா:15 22/2
பின் நிலை மலைந்தன்று – புபொவெபாமா:16 4/2

மேல்

நிலை_உணர்த்தியோர்க்கு (1)

வெம் முனை நிலை_உணர்த்தியோர்க்கு
தம்மினும் மிக சிறப்பு ஈந்தன்று – புபொவெபாமா:1 36/1,2

மேல்

நிலைமை (3)

நேரார் படையின் நிலைமை நெடுந்தகை – புபொவெபாமா:7 45/1
தபுதாரத்து ஆழ்ந்த தனி நிலைமை கேளா – புபொவெபாமா:11 7/3
ஆங்கு அ நிலைமை யாய் அறியாமை – புபொவெபாமா:17 20/2

மேல்

நிலையா (1)

மாலை நிலையா மனம் கடைஇ காலை – புபொவெபாமா:11 17/2

மேல்

நிலையாமை (2)

நிலையாமை நெறி உரைத்தன்று – புபொவெபாமா:12 4/2
நிலை நிலையாமை நெறிப்பட உரைத்தன்று – புபொவெபாமா:12 10/2

மேல்

நிலையும் (2)

நிலையும் நிரையும் நிரை புறத்து நின்ற – புபொவெபாமா:1 15/1
கழகத்து இயலும் கவற்றின் நிலையும்
அளக திரு நுதலாள் ஆய்ந்து புழகத்து – புபொவெபாமா:18 17/1,2

மேல்

நிலையே (1)

வேந்து நிற்றலும் ஏழக நிலையே – புபொவெபாமா:10 12/2

மேல்

நிலைஇ (1)

கோடா மரபின் குணனொடு நிலைஇ
கொடுப்போர் ஏத்தி கொடாஅர் பழித்தலும் – புபொவெபாமா:18 1/2,3

மேல்

நிவந்த (1)

மூது அரில் நிவந்த முது கழை ஆர் இடை – புபொவெபாமா:11 4/1

மேல்

நிவப்பவும் (1)

நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கி – புபொவெபாமா:3 32/1

மேல்

நிழல் (7)

நிழல் கதிர் வேல் மின்ன நிரைத்து – புபொவெபாமா:2 7/4
கொங்கு அலர் தாரான் குடை_நிழல் கீழ் தங்கி – புபொவெபாமா:2 27/2
நிழல் அடைந்தேம் நின்னை என்று ஏத்தி கழல் அடைய – புபொவெபாமா:3 15/2
நிணம் கொள் பேழ் வாய நிழல் போல் நுடங்கி – புபொவெபாமா:7 39/3
நிழல் அவிர் பூண் மன்னர் நின்று ஏத்த கழல் புனைந்து – புபொவெபாமா:9 41/2
வெம் நிழலோர் எல்லோர்க்கும வெம் கதிராம் இன் நிழல் வேல் – புபொவெபாமா:9 68/2
நிழல் அவிர் எழில் மணி பூண் – புபொவெபாமா:10 26/1

மேல்

நிழலையும் (1)

நிழலையும் தாள் சுளிக்கும் நின்று – புபொவெபாமா:18 9/4

மேல்

நிழலோர் (2)

தன் நிழலோர் எல்லோர்க்கும் தண் கதிராம் தன் சேரா – புபொவெபாமா:9 68/1
வெம் நிழலோர் எல்லோர்க்கும வெம் கதிராம் இன் நிழல் வேல் – புபொவெபாமா:9 68/2

மேல்

நிற்க (1)

உளைத்தவர் கூறும் உரை எல்லாம் நிற்க
முளைத்த முறுவலார்க்கு எல்லாம் விளைத்த – புபொவெபாமா:17 29/1,2

மேல்

நிற்கு (1)

நிற்கு என்றி வாழியர் நீ – புபொவெபாமா:16 35/4

மேல்

நிற்ப (1)

குழுவினம் கைகூப்பி நிற்ப தொழுவில் – புபொவெபாமா:1 11/2

மேல்

நிற்பதோ (1)

காஞ்சி மலைய கடைக்கணித்து நிற்பதோ
தோம் செய் மறவர் தொழில் – புபொவெபாமா:4 3/3,4

மேல்

நிற்பேன் (1)

அரண் அவிய பாயும் அடையார் முன் நிற்பேன்
முரண் அவிய முன் முன்மொழிந்து – புபொவெபாமா:4 19/3,4

மேல்

நிற்றல் (2)

தமருள் தலை ஆதல் தார் தாங்கி நிற்றல்
எமருள் யாம் இன்னம் என்று எண்ணல் அமரின் – புபொவெபாமா:3 13/1,2
நிற்றல் ஆற்றாள் நெடிது உயிர்த்து அலமரும் – புபொவெபாமா:16 18/1

மேல்

நிற்றலும் (1)

வேந்து நிற்றலும் ஏழக நிலையே – புபொவெபாமா:10 12/2

மேல்

நிறத்து (1)

நிறத்து இறுத்த வாள் தானை நேரார் மதிலின் – புபொவெபாமா:6 21/3

மேல்

நிறத்தொடு (1)

நிறத்தொடு நேர் தருதலான் – புபொவெபாமா:9 9/4

மேல்

நிறம் (4)

மாட்டிய பிள்ளை மறவர் நிறம் திறந்து – புபொவெபாமா:2 19/1
நிறம் திறந்த நீள் இலை வேல் – புபொவெபாமா:4 41/4
மாமை பொன் நிறம் பசப்ப – புபொவெபாமா:15 13/3
நிறம் கண்டு வித்தகர் நேர்விட்ட கோழி – புபொவெபாமா:18 7/3

மேல்

நிறனொடு (1)

கறவை காவலன் நிறனொடு பொரீஇ – புபொவெபாமா:9 8/1

மேல்

நிறீஇ (3)

வெண்பா மாலை என பெயர் நிறீஇ
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே – புபொவெபாமா:0 5/11,12
மண்ணொடு புகழ் நிறீஇ
புண்ணொடு தான் வந்தன்று – புபொவெபாமா:2 10/1,2
அழிவு இன்று புகழ் நிறீஇ
ஒழிவு இன்று களத்து ஒழிந்தன்று – புபொவெபாமா:7 56/1,2

மேல்

நிறை (8)

நீள் தோளான் வென்றி கொள்க என நிறை மண்டை வலன் உயரி – புபொவெபாமா:3 10/1
நிறை பொறி வாயில் நெடு மதில் சூழி – புபொவெபாமா:6 31/1
நிறை காப்ப வைகும் நிறை – புபொவெபாமா:13 19/4
நிறை காப்ப வைகும் நிறை – புபொவெபாமா:13 19/4
நெஞ்சம் பொத்தி நிறை சுடும் நெருப்பே – புபொவெபாமா:14 9/4
நில்லாது ஓடும் என் நிறை_இல் நெஞ்சே – புபொவெபாமா:14 15/4
இறை புனை எல் வளை ஏக நிறை புணையா – புபொவெபாமா:15 11/2
நெஞ்சே உடையை நிறை – புபொவெபாமா:16 31/4

மேல்

நிறை_இல் (1)

நில்லாது ஓடும் என் நிறை_இல் நெஞ்சே – புபொவெபாமா:14 15/4

மேல்

நிறைத்து (1)

நிணம் குடர் நெய்த்தோர் நிறைத்து கணம் புகல – புபொவெபாமா:3 11/2

மேல்

நிறைந்த (1)

பண் அவனை பாட பதம் சூழ்க எள் நிறைந்த
நெய் ஒத்து நின்றானை நீல_மிடற்றானை என் – புபொவெபாமா:0 3/2,3

மேல்

நிறைய (1)

நெய் கொள் நிணம் தூ நிறைய அமைத்திட்ட – புபொவெபாமா:13 17/1

மேல்

நிறையா (1)

நிறையா நிலவுதல் அன்றி குறையாத – புபொவெபாமா:8 63/2

மேல்

நிறையை (1)

உறையே பொழிதலும் ஓவா நிறையை
பருகா பகல் கரந்த பையுள் கூர் மாலை – புபொவெபாமா:16 19/2,3

மேல்

நின் (4)

தேர் வில் தார் தாங்கி திகழ்ந்து இலங்கு வேலோய் நின்
மார்பில் தார் கோலி மழை – புபொவெபாமா:9 33/3,4
வழிபடும் தெய்வம் நின் புறம் காப்ப – புபொவெபாமா:9 75/1
மலை படு சாந்தம் மலர் மார்ப யாம் நின்
பலர் படி செல்வம் படியேம் புலர் விடியல் – புபொவெபாமா:9 94/1,2
ஈடு எலாம் தாங்கி இகல் அவிந்தார் நீயும் நின்
கோடு எலாம் உன்னம் குழை – புபொவெபாமா:10 9/3,4

மேல்

நின்ற (10)

நின்ற நிலை கருதி ஏகினார் நீள் கழைய – புபொவெபாமா:1 13/3
நிலையும் நிரையும் நிரை புறத்து நின்ற
சிலையும் செரு முனையுள் வைகி இலை புனைந்த – புபொவெபாமா:1 15/1,2
கண நிரை கைக்கொண்டு கை அகலார் நின்ற
நிணம் நிரை வேலார் நிலை – புபொவெபாமா:1 21/3,4
வீடு உணர்ந்தோர்க்கும் வியப்பு ஆமால் இ நின்ற
வாடல் முதியாள் வயிற்றிடம் கூடார் – புபொவெபாமா:3 39/1,2
நின்ற புகழ் ஒழிய நில்லா உயிர் ஓம்பி – புபொவெபாமா:6 25/1
வில் நின்ற தானை விறல் வெய்யோற்கு அ மதிலின் – புபொவெபாமா:6 65/3
நின்ற புகழொடு நீடு வாழ்க இ உலகில் – புபொவெபாமா:9 54/1
பூ மலி நாவல் பொழில் அகத்து போய் நின்ற
மா மலை போல் மன்னுக நீ – புபொவெபாமா:9 76/3,4
ஆண் தக நின்ற அமர் வெய்யோற்கு ஆக என்று – புபொவெபாமா:10 25/3
இடைநின்ற ஊர் அலர் தூற்ற புடை நின்ற
என் கண்டிலன் அ நெடுந்தகை – புபொவெபாமா:15 3/2,3

மேல்

நின்றவர் (1)

மிக தடிந்தார் மேல் நின்றவர் – புபொவெபாமா:5 16/4

மேல்

நின்றன்று (3)

வேந்தனொடு வேறு நின்றன்று – புபொவெபாமா:4 48/2
பெயர் படைக்கு பின் நின்றன்று – புபொவெபாமா:7 26/2
மதி ஏர் நுதலி மாலை நின்றன்று – புபொவெபாமா:11 16/2

மேல்

நின்றாய் (1)

நீ என்னாய் நின்றாய் என் நெஞ்சு அளியை ஈ என்றார்க்கு – புபொவெபாமா:11 29/2

மேல்

நின்றார் (1)

இனம் போக்கி நின்றார் இகல் வாட்டி வேந்தன் – புபொவெபாமா:2 11/3

மேல்

நின்றாள் (1)

புகை அழல் வேலோன் புணர்ப்பு ஆகி நின்றாள்
அகை அழல் ஈமத்து அகத்து – புபொவெபாமா:11 17/3,4

மேல்

நின்றான் (7)

ஒருதனியே நின்றான் உளன் – புபொவெபாமா:2 15/4
நெடும்_கை பிணத்திடையே நின்றான் நடுங்கு அமருள் – புபொவெபாமா:7 27/2
கம்பமா நின்றான் களத்து – புபொவெபாமா:7 45/4
கல் நின்றான் எந்தை கணவன் களப்பட்டான் – புபொவெபாமா:8 45/1
நின்றான் நெடிய மொழிந்து – புபொவெபாமா:8 55/4
தெய்வமாய் நின்றான் திசைக்கு – புபொவெபாமா:10 27/4
செல் கணை மாற்றி குரிசில் சிறை நின்றான்
கொல் கணை வாய் வீழ்தல் கொடிது – புபொவெபாமா:11 21/3,4

மேல்

நின்றானை (1)

நெய் ஒத்து நின்றானை நீல_மிடற்றானை என் – புபொவெபாமா:0 3/3

மேல்

நின்று (17)

துடி இரட்டி விம்ம தொடு கழலார் முன் நின்று
அடி இரட்டித்திட்டு ஆடும் ஆட்டு – புபொவெபாமா:2 17/3,4
நின்று உருத்து நோக்கி நெருப்பு உமிழா சென்று ஒருத்தி – புபொவெபாமா:4 37/2
சுடர் ஆழி நின்று எரிய சோ – புபொவெபாமா:6 15/4
முன் நின்று அவிந்தார் முரண் – புபொவெபாமா:6 65/4
கார் கருதி நின்று அதிரும் கௌவை விழு பணையான் – புபொவெபாமா:7 3/1
வழுவான் வழி நின்று வண்டு ஆர் வயலுள் – புபொவெபாமா:8 23/3
முன் நின்று மொய் அவிந்தார் என் ஐயர் பின் நின்று – புபொவெபாமா:8 45/2
முன் நின்று மொய் அவிந்தார் என் ஐயர் பின் நின்று
கைபோய் கணை உதைப்ப காவலன் மேல் ஓடி – புபொவெபாமா:8 45/2,3
நிழல் அவிர் பூண் மன்னர் நின்று ஏத்த கழல் புனைந்து – புபொவெபாமா:9 41/2
மொழி நின்று கேட்டல் முறை – புபொவெபாமா:9 66/4
முன் நின்று அறிவன் மொழி தொடர்ந்தன்று – புபொவெபாமா:9 73/2
வாள் புகா ஊட்டி வடி மணி நின்று இயம்ப – புபொவெபாமா:10 29/1
நின்று நிலம்_மிசையோர் ஏத்த நெடு விசும்பில் – புபொவெபாமா:11 31/1
கடை நின்று காமம் நலிய கலங்கி – புபொவெபாமா:15 3/1
நீங்கான் என் நெஞ்சத்துள் நின்று – புபொவெபாமா:16 7/4
நிழலையும் தாள் சுளிக்கும் நின்று – புபொவெபாமா:18 9/4
படு களி வண்டு ஆர்ப்ப பயில்_வளை நின்று ஆடும் – புபொவெபாமா:18 18/3

மேல்

நின்றேற்கு (2)

மங்குல் மனம் கவர மால் மாலை நின்றேற்கு
பொங்கும் அருவி புனல் நாடன் கங்குல் – புபொவெபாமா:9 90/1,2
தன்-கண் அளி அவாய் நின்றேற்கு தார் விடலை – புபொவெபாமா:15 15/1

மேல்

நின்றேன் (2)

நீர் மலி கண்ணொடு நின்றேன் நிலை இரங்காய் – புபொவெபாமா:11 3/1
அயர்வொடு நின்றேன் அரும் படர் நோய் தீர – புபொவெபாமா:15 19/1

மேல்

நின்றோள் (1)

புரி வளை நெகிழ புலம்பொடு நின்றோள்
பருவரல் உள்ளமொடு பகல் முனிவு உரைத்தன்று – புபொவெபாமா:15 14/1,2

மேல்

நின்னை (1)

நிழல் அடைந்தேம் நின்னை என்று ஏத்தி கழல் அடைய – புபொவெபாமா:3 15/2

மேல்

நின்னையே (1)

நெடுந்தகையாய் நின்னையே யாம் – புபொவெபாமா:9 7/4

மேல்

நின்னொடு (1)

தேம் குலாம் பூம் தெரியல் தேர் வேந்தே நின்னொடு
பாங்கு அலா மன்னர் படை – புபொவெபாமா:7 17/3,4

மேல்

நினக்கே (1)

நினக்கே செய் பகை எவன்-கொல் – புபொவெபாமா:15 17/3

மேல்

நினைத்தால் (1)

யானை முகத்தானை நினைத்தால் – புபொவெபாமா:0 1/4

மேல்

நினைதியோ (1)

நினையினும் நினைதியோ வாழி என் நெஞ்சே – புபொவெபாமா:15 23/4

மேல்

நினைந்து (1)

தேம் கமழ் கோதை செம்மல் அளி நினைந்து
ஆங்கு அ நிலைமை யாய் அறியாமை – புபொவெபாமா:17 20/1,2

மேல்

நினையா (1)

வெய்ய நெடிது உயிரா வெற்பன் அளி நினையா
ஐயம் நனி நீங்க ஆடினாள் மையல் – புபொவெபாமா:17 21/1,2

மேல்

நினையினும் (1)

நினையினும் நினைதியோ வாழி என் நெஞ்சே – புபொவெபாமா:15 23/4

மேல்