கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
குஞ்சர 1
குஞ்சரம் 1
குஞ்சி 2
குட 1
குடம் 1
குடர் 5
குடர்_மாலை 2
குடி 7
குடிகள் 1
குடிநிலை 1
குடியில் 1
குடியொடு 1
குடுமி 3
குடை 20
குடை_நிழல் 1
குடைக்கு 1
குடைநாள்கோளே 1
குடைநிலை 1
குடைமங்கலமொடு 1
குடைமுல்லையொடு 1
குடையதுசெலவே 1
குடையான் 1
குடையோற்கு 1
குண்டு 3
குணம் 1
குணனொடு 1
குணில் 1
குதிரைமறமே 1
குந்தத்தால் 1
குந்தம் 2
குமரி 3
குமரியொடு 1
குய் 1
குய 1
குயில் 2
குரங்கும் 1
குரம்பை 3
குரல் 1
குரவை 1
குரிசில் 8
குரு 1
குருகு 1
குருதி 9
குருந்து 1
குரும்பை 1
குருளையும் 1
குரை 2
குல 1
குலத்துள் 1
குலவு 1
குலாம் 2
குலாவும் 1
குவளை 6
குவி 1
குவைஇ 1
குழலோய் 1
குழவியும் 1
குழாம் 1
குழு 2
குழுவினம் 1
குழுவும் 1
குழுஉக்கொண்டு 1
குழை 4
குழைந்த 1
குழைந்தன்று 1
குழைந்து 2
குழைய 2
குளிப்ப 2
குளியாவோ 1
குளிர்கொள்ள 1
குளிறு 1
குளிறும் 1
குற்றம் 1
குற்றம்_இல் 1
குற்றிசை 1
குற்றுழிஞைய்யே 1
குறிக்கொண்டு 1
குறிஞ்சி 1
குறித்தன்று 1
குறித்தே 1
குறியுள் 1
குறுக 2
குறுகவும் 1
குறுகாமை 1
குறுகி 1
குறுகிய 1
குறுகும் 2
குறுங்கலி 1
குறும் 1
குறும்பிடை 1
குறும்பின் 1
குறும்பினை 1
குறும்பு 3
குறுவஞ்சிய்யே 1
குறையாத 1
குன்றம் 1
குன்று 4
குன்று_எறிந்தானும் 1
குன்றூர் 1
குனி 2
குஞ்சர (1)
குஞ்சர வெல் படையான் கொள்ளானோ எஞ்சும் – புபொவெபாமா:9 64/2
குஞ்சரம் (1)
குஞ்சரம் வென்ற கொலை வேழம் துஞ்சாது – புபொவெபாமா:18 9/2
குஞ்சி (2)
குஞ்சி மலைத்தான் எம் கோ – புபொவெபாமா:3 3/4
வண்டு அமர் குஞ்சி மைந்தனை நயந்த – புபொவெபாமா:15 6/1
குட (1)
குட கள் நீ கொண்டுவா என்றாள் குனி வில் – புபொவெபாமா:1 11/3
குடம் (1)
குடம் சுட்டு இனத்தால் கொடு – புபொவெபாமா:1 39/4
குடர் (5)
கூடலர் குடர்_மாலை சூட்டி – புபொவெபாமா:2 18/1
கூட்டிய எஃகம் குடர்_மாலை சூட்டிய பின் – புபொவெபாமா:2 19/2
நிணம் குடர் நெய்த்தோர் நிறைத்து கணம் புகல – புபொவெபாமா:3 11/2
கொட்கும் நிமிரும் குறுகும் குடர் சூடி – புபொவெபாமா:4 35/1
ஆடல் அமர்ந்தான் அமர் வெய்யோன் வீழ் குடர்
சூடல் மலைந்த சுழல் கண் பேய் மீடல் – புபொவெபாமா:7 31/1,2
குடர்_மாலை (2)
கூடலர் குடர்_மாலை சூட்டி – புபொவெபாமா:2 18/1
கூட்டிய எஃகம் குடர்_மாலை சூட்டிய பின் – புபொவெபாமா:2 19/2
குடி (7)
தொடு கழல் மறவர் தொல் குடி மரபில் – புபொவெபாமா:1 40/1
கொண்டு பிறர் அறியும் குடி வரவு உரைத்தன்று – புபொவெபாமா:2 28/2
முன் தோன்றி மூத்த குடி – புபொவெபாமா:2 29/4
கொடுத்து அளித்து குடி ஓம்பின்று – புபொவெபாமா:3 34/2
வாள் குடி வன்கணவர்க்கு – புபொவெபாமா:4 9/4
முது குடி மறவர் முன் உற சூழ – புபொவெபாமா:4 16/1
ஏறு ஆண் குடி எடுத்து உரைத்தன்று – புபொவெபாமா:8 44/2
குடிகள் (1)
விழுங்கிய பின் வீடு கொண்டற்றால் செழும் குடிகள்
தார் ஆர் கரந்தை தலை மலைந்து தாம் கோடல் – புபொவெபாமா:2 3/2,3
குடிநிலை (1)
வேத்தியல்மலிபே மிகு குடிநிலை என – புபொவெபாமா:2 1/7
குடியில் (1)
தொல் மரபில் வாள் குடியில்
முன்னோனது நிலை கிளந்தன்று – புபொவெபாமா:3 26/1,2
குடியொடு (1)
குடியொடு கோடா மரபினாற்கு இன்னும் – புபொவெபாமா:1 41/3
குடுமி (3)
குடுமி களைந்த புகழ்சாற்றுநிலையே – புபொவெபாமா:9 1/11
குடுமி களைந்த மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 42/2
குடுமி களைந்தான் எம் கோ – புபொவெபாமா:9 43/4
குடை (20)
கொங்கு அலர் தாரான் குடை_நிழல் கீழ் தங்கி – புபொவெபாமா:2 27/2
கொய் தார் மன்னவன் குடை நாள்கொண்டன்று – புபொவெபாமா:3 6/2
குடை நாள் இறைவன் கொள – புபொவெபாமா:3 7/4
மதி குடை கீழ் வழிமொழிந்து மன்னர் எல்லாம் மறம் துறப்பவும் – புபொவெபாமா:3 42/1
மண்ணகமோ வைகின்று மாலை நெடும் குடை கீழ் – புபொவெபாமா:4 11/3
கொதி அழல் வேலோன் குடை சென்றன்று – புபொவெபாமா:4 16/2
கூட்டி நாள் கொண்டான் குடை – புபொவெபாமா:4 17/4
கொற்ற வேந்தன் குடை நாள்கொண்டன்று – புபொவெபாமா:6 4/2
கொற்ற குடை நாள்கொள – புபொவெபாமா:6 5/4
ஒரு குடை மன்னனை பல குடை நெருங்க – புபொவெபாமா:7 18/1
ஒரு குடை மன்னனை பல குடை நெருங்க – புபொவெபாமா:7 18/1
குடை மயங்கிய வாள் அமருள் – புபொவெபாமா:7 28/1
மதி ஏர் நெடும் குடை மன்னர் பணிந்து – புபொவெபாமா:8 9/1
கொய் தாரான் குடை புகழ்ந்தன்று – புபொவெபாமா:8 56/2
புனல் ஆடையாளும் புனை குடை கீழ் வைக – புபொவெபாமா:8 59/3
கரும் கழல் வெண் குடை காவலர்க்கு செவ் வாய் – புபொவெபாமா:9 47/1
வீற்றிருந்தான் குடை புகழ்ந்தன்று – புபொவெபாமா:9 67/2
கோவாய் உயர்த்த குடை – புபொவெபாமா:9 68/4
குடை அலர் காந்தள் தன் கொல்லி சுனை-வாய் – புபொவெபாமா:10 3/1
குடை வரை ஏந்திய நம் கோவலனே கொண்டான் – புபொவெபாமா:18 6/1
குடை_நிழல் (1)
கொங்கு அலர் தாரான் குடை_நிழல் கீழ் தங்கி – புபொவெபாமா:2 27/2
குடைக்கு (1)
தாய புகழான் தனி குடைக்கு தோயம் – புபொவெபாமா:8 57/2
குடைநாள்கோளே (1)
உழிஞை ஓங்கிய குடைநாள்கோளே
வாள்நாள்கோளே முரசஉழிஞை – புபொவெபாமா:6 1/1,2
குடைநிலை (1)
கூடார் பிணிக்கும் குடைநிலை வாள்நிலை – புபொவெபாமா:3 1/2
குடைமங்கலமொடு (1)
குடைமங்கலமொடு வாள்மங்கலமே – புபொவெபாமா:9 1/18
குடைமுல்லையொடு (1)
குடைமுல்லையொடு கண்படைநிலையே – புபொவெபாமா:8 1/14
குடையதுசெலவே (1)
வாள்செலவு என்றா குடையதுசெலவே
வஞ்சினக்காஞ்சி பூக்கொள்நிலையே – புபொவெபாமா:4 1/3,4
குடையான் (1)
கரும் கழல் வெண் குடையான் காவல் விரும்பான் – புபொவெபாமா:8 49/2
குடையோற்கு (1)
மன் மேம்பட்ட மதி குடையோற்கு
தன் மேம்பாடு தான் எடுத்துரைத்தற்று – புபொவெபாமா:2 22/1,2
குண்டு (3)
அஞ்சு வரு வாயில் அரு மிளை குண்டு அகழி – புபொவெபாமா:6 11/3
குண்டு அகழி புறத்து இறுத்தன்று – புபொவெபாமா:6 32/2
கோள் வாய் முதலைய குண்டு அகழி நீராக – புபொவெபாமா:6 33/1
குணம் (1)
கொடிநிலை கந்தழி வள்ளி குணம் சால் – புபொவெபாமா:9 1/22
குணனொடு (1)
கோடா மரபின் குணனொடு நிலைஇ – புபொவெபாமா:18 1/2
குணில் (1)
குளிறு முரசம் குணில் பாய கூடார் – புபொவெபாமா:3 27/1
குதிரைமறமே (1)
யானைமறத்தொடு குதிரைமறமே
தார்நிலை தேர்மறம் பாணதுபாட்டே – புபொவெபாமா:7 1/3,4
குந்தத்தால் (1)
சிந்த தான் வந்தார் செரு விலக்கி குந்தத்தால்
செல் கணை மாற்றி குரிசில் சிறை நின்றான் – புபொவெபாமா:11 21/2,3
குந்தம் (2)
குந்தம் மலியும் புரவியான் கூடாதார் – புபொவெபாமா:4 15/3
குந்தம் கொடு வில் குருதி வேல் கூடாதார் – புபொவெபாமா:7 15/1
குமரி (3)
கருதாதார் மதில் குமரி மேல் – புபொவெபாமா:6 26/1
எம் கண் மலர எயில் குமரி கூடிய – புபொவெபாமா:6 57/1
கொங்கு அலர் கோதை குமரி மட நல்லாள் – புபொவெபாமா:9 72/1
குமரியொடு (1)
வணங்காதார் மதில் குமரியொடு
மணம் கூடிய மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:6 56/1,2
குய் (1)
குய் கொள் அடிசில் பிறர் நுகர்க வைகலும் – புபொவெபாமா:13 17/2
குய (1)
குய வரி வேங்கை அனைய வயவர் – புபொவெபாமா:3 47/2
குயில் (2)
மயில்_அன்னார் மன்றம் படர குயில் அகவ – புபொவெபாமா:3 29/2
குயில் அனைய தேம் மொழி கூர் எயிற்று செவ் வாய் – புபொவெபாமா:13 15/3
குரங்கும் (1)
கற்பொறியும் பாம்பும் கனலும் கடி குரங்கும்
விற்பொறியும் வேலும் விலக்கவும் பொற்பு உடைய – புபொவெபாமா:6 37/1,2
குரம்பை (3)
உணங்கு புலவு அறா ஒன்னார் குரம்பை
நுணங்கு அரில் வெம் முனை நோக்கி அணங்கிய – புபொவெபாமா:4 15/1,2
படலை குரம்பை பழங்கண் முதியாள் – புபொவெபாமா:4 43/3
தௌவல் முது குரம்பை தான் தமியள் செவ்வன் – புபொவெபாமா:13 19/2
குரல் (1)
தாழ் குரல் ஏனல் தலைக்கொண்ட நூழில் – புபொவெபாமா:16 33/2
குரவை (1)
பின் தேர் குரவை பிணைந்து – புபொவெபாமா:8 17/4
குரிசில் (8)
குரிசில் அடையாரை கொண்ட கூட்டு எல்லாம் – புபொவெபாமா:3 33/3
வாள் குரிசில் வான் உலகினான் – புபொவெபாமா:5 14/4
குன்று போல் போர்வில் குரிசில் வளம் பாட – புபொவெபாமா:8 65/3
குரிசில் நீ நல்க யாம் கொள்ளும் பரிசில் – புபொவெபாமா:9 11/2
கைவண் குரிசில் கல் கைதொழூஉ செல் பாண – புபொவெபாமா:10 27/3
கோள் புலி அன்ன குரிசில் கல் ஆள் கடிந்து – புபொவெபாமா:10 29/2
மைந்தன் குரிசில் மழை வள்ளல் எந்தை – புபொவெபாமா:11 7/2
செல் கணை மாற்றி குரிசில் சிறை நின்றான் – புபொவெபாமா:11 21/3
குரு (1)
குரு கண் கபிலை கொடுத்தான் செருக்கொடு – புபொவெபாமா:9 29/2
குருகு (1)
குருகு பெயரிய குன்று_எறிந்தானும் – புபொவெபாமா:6 19/1
குருதி (9)
வெம் குருதி மல்க விழுப்புண் உகுத்தொறூஉம் – புபொவெபாமா:2 11/1
குருதி ஆறு ஆவது-கொல் குன்றூர் கருதி – புபொவெபாமா:4 21/2
தோயும் கதழ் குருதி தோள் புடைப்ப பேயும் – புபொவெபாமா:4 33/2
புனலம் குருதி புலால்-வாய் கிடந்து – புபொவெபாமா:4 35/3
மிக தாய செம் குருதி மேவரு மார்பின் – புபொவெபாமா:5 12/1
அகழி பரந்து ஒழுகும் செம் குருதி சேற்று – புபொவெபாமா:6 35/3
சோர் குருதி சூழா நிலம் நனைப்ப போர் கருதி – புபொவெபாமா:7 3/2
குந்தம் கொடு வில் குருதி வேல் கூடாதார் – புபொவெபாமா:7 15/1
செரு மலி வெம் களத்து செம் குருதி வெள்ளம் – புபொவெபாமா:7 21/1
குருந்து (1)
குருந்து அலர் கண்ணி கொழுநன் மாய்ந்து என – புபொவெபாமா:11 8/1
குரும்பை (1)
குரும்பை வரி முலை மேல் கோல நெடும் கண் – புபொவெபாமா:15 9/1
குருளையும் (1)
குருளையும் கொல் களிற்றின் கோடு – புபொவெபாமா:10 13/4
குரை (2)
குரை அழல் நடப்ப குறும்பு எறிந்தன்று – புபொவெபாமா:1 18/2
குரை அழல் மண்டிய கோடு உயர் மாடம் – புபொவெபாமா:3 51/1
குல (1)
குல முதலை கொண்டு ஒளித்தல் அன்றி நிலம் உற – புபொவெபாமா:11 13/2
குலத்துள் (1)
நல் குலத்துள் தோன்றிய நல் இசை யாழ் தொல் புலவீர் – புபொவெபாமா:2 21/3
குலவு (1)
குலவு கொடும் சிலை கை கூற்று அனையார் எய்த – புபொவெபாமா:1 23/3
குலாம் (2)
தேம் குலாம் பூம் தெரியல் தேர் வேந்தே நின்னொடு – புபொவெபாமா:7 17/3
தலைவ தவிராது சேறி சிலை குலாம்
காரினை வென்ற கவி_கையான் கை வளம் – புபொவெபாமா:9 58/2,3
குலாவும் (1)
குலாவும் சிலையார் குறும்பு கொள வெஃகி – புபொவெபாமா:4 7/1
குவளை (6)
தொகை மலிந்த தண் குவளை தூ மலர் தாரான் – புபொவெபாமா:3 43/3
தொடை அவிழ் தண் குவளை சூடான் புடை திகழும் – புபொவெபாமா:10 3/2
கல் நவில் தோளானை காண்டலும் கார் குவளை
அன்ன என் கண்ணுக்கு அமுதமாம் என்னை – புபொவெபாமா:15 5/1,2
தார் குவளை கண்டு தரியா இவள் முகத்த – புபொவெபாமா:16 23/3
கார் குவளை காலும் கனல் – புபொவெபாமா:16 23/4
குவளை நெடும் தடம் கண் கூர் எயிற்று செவ் வாய் – புபொவெபாமா:18 20/1
குவி (1)
குவைஇ இணைந்த குவி முலை ஆகம் – புபொவெபாமா:13 3/3
குவைஇ (1)
குவைஇ இணைந்த குவி முலை ஆகம் – புபொவெபாமா:13 3/3
குழலோய் (1)
புண்ணொடு வந்தான் புதல்வர்க்கு பூம் குழலோய்
தண்ணடை நல்கல் தகும் – புபொவெபாமா:3 27/3,4
குழவியும் (1)
மாதர் மகிழ்ந்த குழவியும் ஊரின் – புபொவெபாமா:9 1/30
குழாம் (1)
கூடு அரணம் காப்போர் குழாம் புரைய சூடினார் – புபொவெபாமா:5 3/2
குழு (2)
கோடும் வயிரும் இசைப்ப குழு மிளை – புபொவெபாமா:6 61/1
குழு மணி திண் தேர் கொடி – புபொவெபாமா:7 35/4
குழுவினம் (1)
குழுவினம் கைகூப்பி நிற்ப தொழுவில் – புபொவெபாமா:1 11/2
குழுவும் (1)
விரைவனர் குழுவும் வகை உரைத்தன்று – புபொவெபாமா:2 4/2
குழுஉக்கொண்டு (1)
கொடுவரி கூடி குழுஉக்கொண்டு அனைத்தால் – புபொவெபாமா:1 21/1
குழை (4)
பூம்_குழை ஆயம் புலர்க என்னும் நீங்கா – புபொவெபாமா:4 45/2
கோடு எலாம் உன்னம் குழை – புபொவெபாமா:10 9/4
அம் குழை கீரை அடகு மிசையினும் – புபொவெபாமா:13 17/3
புலம்பொடு வைகும் பூம்_குழை கங்குல் – புபொவெபாமா:15 16/1
குழைந்த (1)
முற்றா முலையர் முயங்க இதழ் குழைந்த
நல் தார் அகலம் நகைதரலின் நல் தார் – புபொவெபாமா:16 15/1,2
குழைந்தன்று (1)
கொய் தழை அல்குல் கூட்டத்து குழைந்தன்று – புபொவெபாமா:16 28/2
குழைந்து (2)
கொழுநன் வீய குழைந்து உயங்கின்று – புபொவெபாமா:11 26/2
கோதை சூழ் கொம்பில் குழைந்து – புபொவெபாமா:16 29/4
குழைய (2)
வெம் கள் மகிழ்ந்து விழவு அயர அம் குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டு ஆர்ப்ப – புபொவெபாமா:3 3/2,3
கோதை தாரும் இடை குழைய மாதர் – புபொவெபாமா:16 25/2
குளிப்ப (2)
எங்கும் மருமத்திடை குளிப்ப செம் கண் – புபொவெபாமா:7 47/2
கொடியான் கூர்ம் கணை குளிப்ப தன் தொழில் – புபொவெபாமா:11 20/1
குளியாவோ (1)
எளியள் என்று எள்ளி உரைப்பின் குளியாவோ
பண் போல் கிளவி இ பல்_வளையாள் வாள் முகத்த – புபொவெபாமா:4 49/2,3
குளிர்கொள்ள (1)
கூடிய வெம்மை குளிர்கொள்ள பாடி – புபொவெபாமா:10 21/2
குளிறு (1)
குளிறு முரசம் குணில் பாய கூடார் – புபொவெபாமா:3 27/1
குளிறும் (1)
குளிறும் முரசினான் கொண்டான் அரணம் – புபொவெபாமா:6 27/1
குற்றம் (1)
குற்றம்_இல் சிறப்பின் கொற்றவள்ளை – புபொவெபாமா:3 1/4
குற்றம்_இல் (1)
குற்றம்_இல் சிறப்பின் கொற்றவள்ளை – புபொவெபாமா:3 1/4
குற்றிசை (1)
குற்றிசை ஏனை குறுங்கலி உளப்பட – புபொவெபாமா:17 1/12
குற்றுழிஞைய்யே (1)
தோல்உழிஞை குற்றுழிஞைய்யே
கோள் புறத்துஉழிஞை பாசிநிலையே – புபொவெபாமா:6 1/6,7
குறிக்கொண்டு (1)
கொய் பூம் கொம்பு_அன்னாள் குறிக்கொண்டு பெய் பூ – புபொவெபாமா:18 18/2
குறிஞ்சி (1)
கொய்யா குறிஞ்சி பல பாடி மொய் இணர் – புபொவெபாமா:4 39/2
குறித்தன்று (1)
கூடார் மண் கொளல் குறித்தன்று – புபொவெபாமா:3 2/2
குறித்தே (1)
அவளை போற்றுதும் அரும் தமிழ் குறித்தே – புபொவெபாமா:0 4/2
குறியுள் (1)
குறியுள் வருந்தாமை குன்று சூழ் சோலை – புபொவெபாமா:16 39/3
குறுக (2)
குறுக வரும் அரோ கூற்று – புபொவெபாமா:12 5/4
கூடிய கொண்கன் குறுக கொடி மார்பின் – புபொவெபாமா:16 23/1
குறுகவும் (1)
நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கி – புபொவெபாமா:3 32/1
குறுகாமை (1)
கொடிய உலகில் குறுகாமை எம் கோன் – புபொவெபாமா:9 17/3
குறுகி (1)
கொன்று உருத்த கூர் வேலவன் குறுகி கூர் இருள்-வாய் – புபொவெபாமா:4 37/1
குறுகிய (1)
புரவலன் நெடும் கடை குறுகிய என் நிலை – புபொவெபாமா:9 4/1
குறுகும் (2)
கொட்கும் நிமிரும் குறுகும் குடர் சூடி – புபொவெபாமா:4 35/1
தவ பெரிய வெம் சமம் குறுகும்
அவற்கு இரங்கினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:11 24/1,2
குறுங்கலி (1)
குற்றிசை ஏனை குறுங்கலி உளப்பட – புபொவெபாமா:17 1/12
குறும் (1)
குறும் சுனை மலர்ந்தன தடம் பெரும் கண்ணே – புபொவெபாமா:14 13/4
குறும்பிடை (1)
வில்லார் குறும்பிடை வேறுவேறு ஆர்த்து எழுந்த – புபொவெபாமா:4 13/1
குறும்பின் (1)
நோக்கு_அரும் குறும்பின் நூழையும் வாயிலும் – புபொவெபாமா:1 16/1
குறும்பினை (1)
ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினை
சுற்றினார் போகாமல் சூழ்ந்து – புபொவெபாமா:1 17/3,4
குறும்பு (3)
குரை அழல் நடப்ப குறும்பு எறிந்தன்று – புபொவெபாமா:1 18/2
கொலை விலார் கொண்டார் குறும்பு – புபொவெபாமா:1 19/4
குலாவும் சிலையார் குறும்பு கொள வெஃகி – புபொவெபாமா:4 7/1
குறுவஞ்சிய்யே (1)
கொடையின்வஞ்சி குறுவஞ்சிய்யே
ஒருதனிநிலையொடு தழிஞ்சி பாசறை – புபொவெபாமா:3 1/8,9
குறையாத (1)
நிறையா நிலவுதல் அன்றி குறையாத
வங்கம் போழ் முந்நீர் வளம் பெறினும் வேறாமோ – புபொவெபாமா:8 63/2,3
குன்றம் (1)
குன்றம் கொடு வில்லவர் – புபொவெபாமா:1 13/4
குன்று (4)
குருகு பெயரிய குன்று_எறிந்தானும் – புபொவெபாமா:6 19/1
குன்று ஏர் மழ களிறும் கூந்தல் பிடியும் போல் – புபொவெபாமா:8 17/3
குன்று போல் போர்வில் குரிசில் வளம் பாட – புபொவெபாமா:8 65/3
குறியுள் வருந்தாமை குன்று சூழ் சோலை – புபொவெபாமா:16 39/3
குன்று_எறிந்தானும் (1)
குருகு பெயரிய குன்று_எறிந்தானும்
உரு கெழு காந்தள் மலைந்தான் பொரு கழல் – புபொவெபாமா:6 19/1,2
குன்றூர் (1)
குருதி ஆறு ஆவது-கொல் குன்றூர் கருதி – புபொவெபாமா:4 21/2
குனி (2)
குட கள் நீ கொண்டுவா என்றாள் குனி வில் – புபொவெபாமா:1 11/3
குனி மடல்மா பண்ணி மேல் கொண்டு – புபொவெபாமா:17 5/4