கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மை 8
மைத்துனர் 1
மைத்துனன் 1
மைத்துனி 1
மைதிலியாம் 1
மைந்த 1
மைந்தர் 2
மைந்தர்க்கு 1
மைந்தர்கள் 1
மைந்தர்தமை 1
மைந்தன் 17
மைந்தன்தன் 1
மைந்தனுக்கு 1
மைந்தனும் 1
மைந்தனே 1
மைந்தை 1
மைந்நெறி 1
மையத்து 1
மையல் 10
மையல்கொண்டு 1
மையலாம் 1
மையலினால் 1
மையலுற 2
மையறும் 1
மையும் 1
மையுறு 1
மை (8)
மை நிற முகில்கள் வழங்கும் பொன் நாடு –தேசீய:32 1/35
பாதி பேசி மறைந்து பின் தோன்றி தன் பங்கய கையில் மை கொணர்ந்தே ஒரு – சுயசரிதை:1 19/3
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி – சுயசரிதை:2 29/2
வேத திருவிழியாள் அதில் மிக்க பல் உரை எனும் கரு மை இட்டாள் – பாஞ்சாலி:1 4/1
மை வரை தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன் – பாஞ்சாலி:1 122/2
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மை குழல் பற்றி இழுக்கிறான் இந்த – பாஞ்சாலி:5 272/2
வானர பேச்சினிலே மை குயில் பேசியதை – குயில்:5 1/53
மை வளர்ந்த கண்ணாளின் மாண்பு அகன்றுபோயினதோ – பிற்சேர்க்கை:20 3/2
மேல்
மைத்துனர் (1)
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் –தேசீய:32 1/139
மேல்
மைத்துனன் (1)
மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன் – பாஞ்சாலி:4 252/42
மேல்
மைத்துனி (1)
துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ – பாஞ்சாலி:1 76/4
மேல்
மைதிலியாம் (1)
பொய்த்தொழிலோன் மைதிலியாம் பூவைதனை புன் காவல் – பிற்சேர்க்கை:20 2/1
மேல்
மைந்த (1)
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு – பாஞ்சாலி:1 60/2
மேல்
மைந்தர் (2)
பூணும் மைந்தர் எல்லாம் கண்ணன் பொறிகள் ஆவர் அன்றோ – தோத்திர:57 3/4
ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவி – பாஞ்சாலி:1 142/3
மேல்
மைந்தர்க்கு (1)
தாம் பெற்ற மைந்தர்க்கு தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட – பாஞ்சாலி:1 86/2
மேல்
மைந்தர்கள் (1)
உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர் – பிற்சேர்க்கை:2 3/2
மேல்
மைந்தர்தமை (1)
மானிடரும் தம்முள் வலி மிகுந்த மைந்தர்தமை
மேனியுறும் காளை என்று மேம்பாடுற புகழ்வர் – குயில்:7 1/19,20
மேல்
மைந்தன் (17)
சிவ ரத்ந மைந்தன் திறம் –தேசீய:12 1/4
ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்று ஓர் –தேசீய:21 1/1
சந்திரமவுலி தலைவன் மைந்தன்
கணபதி தாளை கருத்திடை வைப்போம் – தோத்திர:1 4/7,8
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான் – தோத்திர:1 25/3
வலிமை மைந்தன் வேள்வி முன்னோன் வாய் திறந்தானே இ நேரம் – தோத்திர:75 9/1
குமரி மைந்தன் எமது வாழ்வில் கோயில்கொண்டானே இ நேரம் – தோத்திர:75 11/2
முனிவனும் பன்றியா முடிந்த பின் மைந்தன்
முன்னவன் கூறிய மொழியினை நினைந்தும் – தனி:13 1/42,43
கனகன் மைந்தன் குமரகுருபரன் கனியும் ஞானசம்பந்தன் துருவன் மற்று – சுயசரிதை:1 8/1
கண்ணிலா திரிதாட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர் – பாஞ்சாலி:1 19/4
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர் அடியவர் ஆகி எமை பற்றி நிற்றல் விதி அன்றோ – பாஞ்சாலி:1 47/1
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த – பாஞ்சாலி:1 66/1
பூண்ட பெருமை கெடாதவாறு எண்ணி பொங்குகின்றான் நலம் வேட்கின்றான் மைந்தன்
ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ – பாஞ்சாலி:1 68/3,4
அருமை மைந்தன் தனியே துணை பிரிந்து – குயில்:9 1/65
மன்னவன்தன் மைந்தன் ஒரு மானை தொடர்ந்து வர – குயில்:9 1/66
வேடர் கோன் மைந்தன் விழி கொண்டு பார்க்கவில்லை – குயில்:9 1/137
அவன் சக்திகுமாரன் மஹாராணியின் மைந்தன்
அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம் – வசனகவிதை:4 8/27,28
மதியாது அதில் தாக்கி மைந்தன் விஜயம் பெறவே – பிற்சேர்க்கை:25 18/2
மேல்
மைந்தன்தன் (1)
அவ் அறிஞர் அனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன்தன் அன்னை கண்ணீர் –தேசீய:43 2/1
மேல்
மைந்தனுக்கு (1)
ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்பட தந்ததே இந்த – பாஞ்சாலி:1 67/1
மேல்
மைந்தனும் (1)
காவலன்தன் மைந்தனும் அ கன்னிகையும் தானும் அங்கு – குயில்:9 1/144
மேல்
மைந்தனே (1)
நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திட கேட்பை நீ நெஞ்சில் – கண்ணன்:7 6/2
மேல்
மைந்தை (1)
சிங்க மைந்தை நாய்கள் கொல்லும் செய்தி காணலுற்றே – பாஞ்சாலி:3 228/4
மேல்
மைந்நெறி (1)
மைந்நெறி வான் கொடையான் உயர் மானமும் வீரமும் மதியுமுளோன் – பாஞ்சாலி:1 18/3
மேல்
மையத்து (1)
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் –தேசீய:5 2/2
மேல்
மையல் (10)
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ – தோத்திர:7 0/1
மையல் வளர்தல் கண்டாயே அமுத மழை – தோத்திர:56 1/8
மலரின் மேவு திருவே உன் மேல் மையல் பொங்கி நின்றேன் – தோத்திர:57 1/1
மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய் திருவே – தோத்திர:58 1/6
மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம் தலை மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ – கண்ணன்:13 4/1
சங்கை இலாத பணம் தந்தே தழுவி மையல் செய்யும் – கண்ணன்:15 3/2
வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு – பாஞ்சாலி:1 117/4
தப்புமோ மையல் தடுக்கும் தரம் ஆமோ – குயில்:5 1/24
வாழி அவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து – குயில்:9 1/68
காவி திருவிழி மானார்தம் மையல் கடு விஷமாம் – பிற்சேர்க்கை:19 2/1
மேல்
மையல்கொண்டு (1)
வானகத்தில் இயக்கர் இயக்கியர் மையல்கொண்டு மயங்குதல் போலவும் – சுயசரிதை:1 18/2
மேல்
மையலாம் (1)
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவு அன்னது வாழ்கவே – சுயசரிதை:1 3/4
மேல்
மையலினால் (1)
மாலையிட வாக்களித்தாய் மையலினால் இல்லை அவன் – குயில்:9 1/29
மேல்
மையலுற (2)
வானத்து புள் எல்லாம் மையலுற பாடுகிறாய் – குயில்:3 1/15
வில் வைத்த நுதல் விழியார் கண்டு மையலுற வடிவம் மேவினேமா – பிற்சேர்க்கை:19 1/2
மேல்
மையறும் (1)
மையறும் புகழ் வாழ்க்கை பெறற்கு என – தோத்திர:45 6/3
மேல்
மையும் (1)
வண்டு விழியினுக்கே கண்ணன் மையும் கொண்டுதரும் – கண்ணன்:15 2/2
மேல்
மையுறு (1)
மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண் என கொண்டு மயக்கற்று இருந்தாரே –வேதாந்த:9 4/1
மேல்