Select Page

கட்டுருபன்கள்


தா (2)

கொய்வான் தொடங்கினர் என் ஐயர் தா நிரை கோல்_வளையே – பாண்டிக்கோவை:10 95/4
முன் தான் உற தா அடி முள் உறீஇ முடுகாது திண் தேர் – பாண்டிக்கோவை:18 281/1

மேல்

தாக்கிய (1)

தாக்கிய போர் வய வேந்தர் இருவர்க்கும் சந்து இடைநின்று – பாண்டிக்கோவை:18 265/1

மேல்

தாங்கி (1)

பாடகம் தாங்கி நடந்தது எவ்வாறு-கொல் பாழி வென்ற – பாண்டிக்கோவை:17 210/2

மேல்

தாங்கு (1)

கொல் தாங்கு அயில் மன்னன் கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 284/1

மேல்

தாங்கும் (2)

தன் உயிர் போல் நின்று தாங்கும் எம் கோன் கொல்லி தாழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 22/3
தாங்கும் புணையொடு தாழும் தண் பூம் புனல்-வாய் ஒழுகின் – பாண்டிக்கோவை:10 100/3

மேல்

தாது (4)

ஒண் தேர் உசிதன் என் கோன் கொல்லி சாரல் ஒளி மலர் தாது
உண்டே உழல்வாய் அறிதி அன்றே உளவேல் உரையாய் – பாண்டிக்கோவை:1 7/2,3
தண் தாது அலர் கண்ணி அண்ணல்-தன் உள்ளம் தளர்வு செய்த – பாண்டிக்கோவை:3 42/1
தாது அலர் நீள் முடி தார் மன்னன் மாறன் தண் அம் குமரி – பாண்டிக்கோவை:17 237/1
தன் போல் சினத்து உரும் ஏந்திய கோன் கன்னி தாது உறையும் – பாண்டிக்கோவை:17 257/1

மேல்

தாம் (5)

பூ உண்டை தாம் உளவோ நுங்கள் கானல் பொழிவிடத்தே – பாண்டிக்கோவை:1 5/4
செங்கயல் தாம் வைத்த தென்னவன் நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:5 72/4
கடவுளர் தாம் என யான் நினைந்தேன் எழு காசினி காத்து – பாண்டிக்கோவை:5 74/2
கேளினர் தாம் வரும் போதின் எழா தாய்க்கு உறாலியரோ – பாண்டிக்கோவை:13 151/3
தாம் தளர்ந்து ஓட வை வேல் கொண்ட வேந்தன் தண் அம் பொதியில் – பாண்டிக்கோவை:15 184/2

மேல்

தாமரை (3)

அல்லி தடம் தாமரை மலரோ அவன் தண் அளியார் – பாண்டிக்கோவை:3 36/3
அடி வண்ணம் தாமரை ஆடு அரவு அல்குல் அரத்தம் அங்கை – பாண்டிக்கோவை:3 38/1
ஒண் தாமரை போல் முகத்தவள் நின்னொடு உருவம் ஒக்கும் – பாண்டிக்கோவை:8 88/3

மேல்

தாமரையின் (1)

வில்தான் எழுதி புருவ கொடி என்றிர் தாமரையின்
முற்றா முகை நீர் எழுதி முலை என்றிர் மொய் அமருள் – பாண்டிக்கோவை:10 99/1,2

மேல்

தாமரையோ (1)

கண்டார் மகிழும் கடி கமழ் தாமரையோ கடையல் – பாண்டிக்கோவை:3 37/1

மேல்

தாமும் (1)

மருள் மன்னு வண்டு அறை தாரவர் தாமும் இ மாநிலத்தார்க்கு – பாண்டிக்கோவை:18 295/2

மேல்

தாமே (2)

நீடிய காதலர் தாமே பெரியர் இ நீள் நிலத்தே – பாண்டிக்கோவை:18 313/4
கொடியாரினும் மிக தாமே கொடிய குருகு இனமே – பாண்டிக்கோவை:18 348/4

மேல்

தாய் (1)

பொன் நேர் புது மலர் தாய் பொறி வண்டு முரன்று புல்லா – பாண்டிக்கோவை:3 46/2

மேல்

தாய்க்கு (1)

கேளினர் தாம் வரும் போதின் எழா தாய்க்கு உறாலியரோ – பாண்டிக்கோவை:13 151/3

மேல்

தாயும் (1)

தாயும் துயிலலுறாள் இன்ன நாள் தனி தாள் நெடும் தேர் – பாண்டிக்கோவை:17 239/3

மேல்

தார் (17)

கோழியும் வானவன் வஞ்சியும் கொண்டவன் வண்டு அறை தார்
பூழியன் மாறன் புகார் அனையாள் படை போர் விழியே – பாண்டிக்கோவை:2 17/3,4
தண் தேன் அறை நறும் தார் மன்னர் ஆற்றுக்குடி தளர – பாண்டிக்கோவை:3 31/1
ஒண் தார் அகலம் மெலிவித்த மாதர் உறைவிடமே – பாண்டிக்கோவை:3 37/4
நிரை தார் அரசரை நெல்வேலி வென்ற நெடுந்தகை சீர் – பாண்டிக்கோவை:5 77/3
தண் பூ மலர் தும்பை சூடிய தார் மன்னன் நேரி என்னும் – பாண்டிக்கோவை:7 83/2
ஒண் தார் அரசர் குழாமுடனே ஒளி வான் அடைய – பாண்டிக்கோவை:8 86/2
கொழுதும் மலர் நறும் தார் அண்ணல் நீ தந்த கொய் தழையே – பாண்டிக்கோவை:12 115/4
தண் தார் முருகன் தருகின்ற வேல நல் தண் சிலம்பன் – பாண்டிக்கோவை:14 155/3
ஒண் தார் அகலமும் உண்ணும்-கொலோ நின் உறு பலியே – பாண்டிக்கோவை:14 155/4
தார் அணங்கு ஆவது அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால் – பாண்டிக்கோவை:14 156/3
மருள் தான் என வண்டு பாடும் தண் தார் அண்ணல் வந்து செய்த – பாண்டிக்கோவை:15 190/3
ஏர் மலி தார் அண்ணல் என்னோ இதன் திறத்து எண்ணுவதே – பாண்டிக்கோவை:16 193/4
அம் கண் மலர் தார் அரிகேசரி தென்னர் கோன் அயில் போல் – பாண்டிக்கோவை:17 227/1
தாது அலர் நீள் முடி தார் மன்னன் மாறன் தண் அம் குமரி – பாண்டிக்கோவை:17 237/1
அணி கொண்ட தார் அண்ணல் வாரல் விடர் நின்று அரவு உமிழ்ந்த – பாண்டிக்கோவை:17 252/3
பொன் தார் புரவிகள் ஆலித்து வந்து புகுந்தனவே – பாண்டிக்கோவை:18 284/4
வெறி தரு பூம் தார் விசாரிதன் வேலை முந்நீர் வரைப்பின் – பாண்டிக்கோவை:18 317/1

மேல்

தாரணி-தன் (1)

தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி-தன் மேல் – பாண்டிக்கோவை:18 344/2

மேல்

தாரவர் (3)

படலை பனி மலர் தாரவர் வைகிய பாசறை மேல் – பாண்டிக்கோவை:18 268/1
தேன் நக்க தாரவர் காண்பர் செல்லார் அவர் செல்ல ஒட்டி – பாண்டிக்கோவை:18 294/1
மருள் மன்னு வண்டு அறை தாரவர் தாமும் இ மாநிலத்தார்க்கு – பாண்டிக்கோவை:18 295/2

மேல்

தாரவன் (1)

தண் தாரவன் கொல்லி தாழ் சுனை ஆடிய தான் அகன்றாள் – பாண்டிக்கோவை:8 88/2

மேல்

தாவிய (1)

தாவிய வெண் மணற்றாய் அறிந்தார்கட்கு தண் தமிழின் – பாண்டிக்கோவை:14 163/3

மேல்

தாழ் (10)

தன் உயிர் போல் நின்று தாங்கும் எம் கோன் கொல்லி தாழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 22/3
தன் நேர் இலாத தகைத்து இன்றி யான் கண்ட தாழ் பொழிலே – பாண்டிக்கோவை:3 46/4
பனி தாழ் பரு வரை வேல் வைத்த பஞ்சவன் பாழி வென்ற – பாண்டிக்கோவை:5 58/2
குனி தாழ் சிலை மன்னன் கூடல் அன்னாளது கூடலை போல் – பாண்டிக்கோவை:5 58/3
தண் தாரவன் கொல்லி தாழ் சுனை ஆடிய தான் அகன்றாள் – பாண்டிக்கோவை:8 88/2
தண் முத்த வெண்குடையான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலே – பாண்டிக்கோவை:17 209/4
படம் தாழ் பணை முக யானை பராங்குசன் பாழி வென்ற – பாண்டிக்கோவை:18 293/1
இடம் தாழ் சிலை மன்னன் வெல் களம் போல விரிந்த அந்தி – பாண்டிக்கோவை:18 293/2
தழலும் குளிர்ந்து பொடிப்பட போர்க்கின்ற தாழ் பனியே – பாண்டிக்கோவை:18 307/4
சரம்தான் துரந்து வென்றான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலாள் – பாண்டிக்கோவை:18 315/2

மேல்

தாழ்ந்தமையால் (2)

தார் அணங்கு ஆவது அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால்
ஆர் அணங்கு ஆயினும் ஆக இ செவ்வேள் அறிவிலனே – பாண்டிக்கோவை:14 156/3,4
தன் அணங்கு அன்மை அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால்
மன் அணங்கு ஆயினும் ஆக இ செவ்வேள் மதியிலனே – பாண்டிக்கோவை:14 157/3,4

மேல்

தாழ (1)

தாழ மழை உரும் ஏந்திய கோன் கொல்லி தண் புனத்தே – பாண்டிக்கோவை:12 135/4

மேல்

தாழி (1)

தாழி குவளை நின் கண் போல் விரியும் தட மலரே – பாண்டிக்கோவை:15 187/4

மேல்

தாழும் (1)

தாங்கும் புணையொடு தாழும் தண் பூம் புனல்-வாய் ஒழுகின் – பாண்டிக்கோவை:10 100/3

மேல்

தாள் (5)

வன் தாள் களிறு கடாஅய் அன்று வல்லத்து மன் அவிய – பாண்டிக்கோவை:3 35/1
தாள் நெடும் போது அவை சூட்ட அற்றோ அ தடம் சுனையே – பாண்டிக்கோவை:8 89/4
தாள் இணையாம் மலர் சூடா அரசரை சங்கமங்கை – பாண்டிக்கோவை:13 151/1
தாயும் துயிலலுறாள் இன்ன நாள் தனி தாள் நெடும் தேர் – பாண்டிக்கோவை:17 239/3
மிடை மணி பூண் மன்னர் ஓட விழிஞத்து வென்றவன் தாள்
புடை மணி யானையினான் கன்னி அன்னாள் பொரு கயல் கண் – பாண்டிக்கோவை:18 301/1,2

மேல்

தாளால் (1)

இதண் கால் பறிந்து இற தாளால் உதையும் இரும் பொழிற்கே – பாண்டிக்கோவை:12 141/4

மேல்

தாளை (1)

தாளை வணங்காதவர் பட சங்கமங்கை தனது – பாண்டிக்கோவை:17 229/1

மேல்

தான் (18)

புனமும் இது இவளே அவன் தான் கண்ட பூங்கொடியே – பாண்டிக்கோவை:3 43/4
பங்கய நாள்_மலர் தான் வறிதாக படித்தலம் மேல் – பாண்டிக்கோவை:5 72/1
கொடி ஆர் நுணுகு இடை தான் புனை கோலம் என குலவும்படி – பாண்டிக்கோவை:5 73/1
பொருந்திய பூம் தண் புனல் தான் குடைந்து-கொல் பொன் கயிற்று – பாண்டிக்கோவை:6 80/1
விதியது தான் கொடுபோய் புனலாட்டு விளைவித்ததே – பாண்டிக்கோவை:8 85/4
மண் தான் நிறைந்த பெரும் புகழ் மாறன் மந்தாரம் என்னும் – பாண்டிக்கோவை:8 88/1
தண் தாரவன் கொல்லி தாழ் சுனை ஆடிய தான் அகன்றாள் – பாண்டிக்கோவை:8 88/2
மற்று எமராய்விடின் வானவன் தான் உடை மான் இனைய – பாண்டிக்கோவை:12 132/2
தான் உடையான் தென்னன் சத்ரு துரந்தரன் பொன் வரை மேல் – பாண்டிக்கோவை:14 175/3
பொருள் தான் என நின்ற மானதன் பூலந்தை தோற்று புல்லார் – பாண்டிக்கோவை:15 190/1
இருள் தான் அடை குன்றம் ஏற வென்றோன் கன்னி ஈர்ம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:15 190/2
மருள் தான் என வண்டு பாடும் தண் தார் அண்ணல் வந்து செய்த – பாண்டிக்கோவை:15 190/3
அருள் தான் அலராய் விளைகின்றதால் மற்று இவ் ஆய்_இழைக்கே – பாண்டிக்கோவை:15 190/4
பண் தான் அனைய சொல்லாய் பைய ஏகு பறந்தலை-வாய் – பாண்டிக்கோவை:16 204/1
மின் தான் அனைய விளங்கு ஒளி வேலொடு வெண் திரை மேல் – பாண்டிக்கோவை:17 232/1
பூழித்-தலை இரை ஆர்வித்து தான் நிற்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 279/4
முன் தான் உற தா அடி முள் உறீஇ முடுகாது திண் தேர் – பாண்டிக்கோவை:18 281/1
தான் நலம் தேய் அ பனியோ கழிந்தது தண் குவளை – பாண்டிக்கோவை:18 309/2

மேல்

தானும் (1)

மீன் தோய் கடலிடம் தானும் விலை அன்று எம் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:17 235/4

மேல்

தானே (2)

தட வரை தானே அணிந்து அறியாது தன் சந்தனமே – பாண்டிக்கோவை:17 222/4
வார் ஆர் கழல் மன்னன் தானே பணிப்பினும் வல்லத்து தன் – பாண்டிக்கோவை:18 336/3

மேல்

தானை (16)

மா மரு தானை எம் கோன் வையை வார் பொழில் ஏர் கலந்த – பாண்டிக்கோவை:1 1/3
பொரு நெடும் தானை புல்லார்-தமை பூலந்தை பூ அழித்த – பாண்டிக்கோவை:3 29/1
தன்னும் புரையும் மழை உரும் ஏறும் தன் தானை முன்னா – பாண்டிக்கோவை:4 57/1
தேர் மன்னு தானை பரப்பி தென் சேவூர் செரு மலைந்த – பாண்டிக்கோவை:5 59/1
போரின் மலிந்த வெம் தானை உரம் கொண்ட கோன் பொதியில் – பாண்டிக்கோவை:5 60/2
அடல் புரி தானை அரிகேசரி வட கொல்லியின்-வாய் – பாண்டிக்கோவை:5 74/3
வில் வளர் தானை விறல் மிகும் வேணாட்டு அரசர் வெம்மை – பாண்டிக்கோவை:5 75/1
பொரு நெடும் தானை புல்லார்-தம்மை பூலந்தை போர் தொலைத்த – பாண்டிக்கோவை:10 93/1
மாவலர் தானை வரோதயன் கொல்லி மணி வரை-வாய் – பாண்டிக்கோவை:12 118/2
தேர் அணி தானை சிதைவித்த கோன் கன்னி தென் துறை-வாய் – பாண்டிக்கோவை:12 126/2
மா விரி தானை எம் கோன் கொல்லி சூழ்ந்த வரையகமே – பாண்டிக்கோவை:14 165/4
களம் மலையாமை கடையல் வென்றான் கடல் தானை அன்ன – பாண்டிக்கோவை:14 171/2
வில் மலி தானை நெடும் தேர் விசாரிதன் வேந்தன் பெம்மான் – பாண்டிக்கோவை:16 203/3
வில்லவன் தானை நறையாற்று அழிந்து விண் ஏற வெல்ல – பாண்டிக்கோவை:17 214/1
செரு நெடும் தானை எம் கோன் தெவ்வர் போல சென்று அத்தம் என்னும் – பாண்டிக்கோவை:18 292/2
அரு நெடும் தானை அரிகேசரி அம் தண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 334/3

மேல்

தானையை (2)

வரு நெடும் தானையை வாட்டிய கோன் கொல்லி மால் வரை-வாய் – பாண்டிக்கோவை:3 44/2
ஆள் நெடும் தானையை ஆற்றுக்குடி வென்ற கோன் பொதியில் – பாண்டிக்கோவை:8 89/1

மேல்