கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நூல் 18
நூலானும் 1
நூலில் 1
நூலிற்கு 1
நூலின் 3
நூலுள் 1
நூலே 3
நூற்கு 2
நூற்கும் 3
நூற்கே 1
நூற்றெட்டு 1
நூறி 1
நூறும் 1
நூன்முகம் 1
நூல் (18)
முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும் – பாயிரம்:1 5/1
முனைவன் கண்டது முதல்_நூல் ஆகும் – பாயிரம்:1 6/3
அழியா மரபினது வழி_நூல் ஆகும் – பாயிரம்:1 7/3
திரிபு வேறு உடையது புடை_நூல் ஆகும் – பாயிரம்:1 8/2
வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும் – பாயிரம்:1 9/3
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே – பாயிரம்:1 10/1
பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனை – பாயிரம்:1 11/5
பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல் – பாயிரம்:1 14/16
நூல் பொருள் வழக்கொடு வாய்ப்ப காட்டி – பாயிரம்:1 15/1
மை இலா நூல் முடியும் ஆறு – பாயிரம்:1 24/4
கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர் – பாயிரம்:1 25/3
மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு – பாயிரம்:1 25/4
அமைபவன் நூல் உரை ஆசிரியன்னே – பாயிரம்:1 26/5
கோட்டம்_இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப – பாயிரம்:1 36/7
நூல் பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல் – பாயிரம்:1 41/1
நூல் பெயர் யாப்பே நுதலிய பொருளே – பாயிரம்:1 47/2
முதல்_நூல் கருத்தன் அளவு மிகுதி – பாயிரம்:1 49/1
என தகும் நூல் யாப்பு ஈர்_இரண்டு என்ப – பாயிரம்:1 50/2
நூலானும் (1)
தன் உரையானும் பிற நூலானும்
ஐயம் அகல ஐம் காண்டிகை உறுப்பொடு – பாயிரம்:1 23/3,4
நூலில் (1)
பெருக நூலில் பிழைபாடு இலனே – பாயிரம்:1 42/2
நூலிற்கு (1)
ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே – பாயிரம்:1 13/6
நூலின் (3)
மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின்
வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன் – பாயிரம்:0 0/18,19
நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு – பாயிரம்:1 4/1
முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து – பாயிரம்:1 7/1
நூலுள் (1)
என்று இசை நூலுள் குண குணி பெயர்கள் – சொல்:5 460/2
நூலே (3)
நூலே நுவல்வோன் நுவலும் திறனே – பாயிரம்:1 3/1
உரை கோளாளற்கு உரைப்பது நூலே – பாயிரம்:1 37/3
படிறன் இன்னோர்க்கு பகரார் நூலே – பாயிரம்:1 39/5
நூற்கு (2)
துயில்வோன் மந்தன் தொல்_நூற்கு_அஞ்சி – பாயிரம்:1 39/3
இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே – பாயிரம்:1 49/3
நூற்கும் (3)
எல்லா நூற்கும் இவை பொதுப்பாயிரம் – பாயிரம்:1 3/3
இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கி – பாயிரம்:1 8/1
ஐது உரையாநின்ற அணிந்துரையை எ நூற்கும்
பெய்து உரையா வைத்தார் பெரிது – பாயிரம்:1 55/3,4
நூற்கே (1)
என்று இவை ஈர்_ஐம் குற்றம் நூற்கே – பாயிரம்:1 12/6
நூற்றெட்டு (1)
உயிர்மெய் இரட்டு_நூற்றெட்டு உயர் ஆய்தம் –எழுத்து:1 61/1
நூறி (1)
இகல்_அற நூறி இரு நிலம் முழுவதும் – பாயிரம்:0 0/12
நூறும் (1)
ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின் –எழுத்து:3 194/1
நூன்முகம் (1)
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் – பாயிரம்:1 1/1,2