கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கை 3
கைக்கிளை 8
கைக்கிளை-தானே 1
கைகோள் 2
கைப்பட்டு 1
கைம்மிக 1
கைம்மிகல் 2
கைம்மிகுதல் 1
கையற 1
கையறவு 1
கையறு 4
கையறு-காலை 1
கையாறு 1
கையிகந்து 1
கையினும் 1
கையும் 1
கைவிடின் 1
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கை (3)
அகம் என் கிளவிக்கு கை முன் வரினே – எழுத். புள்.மயங்:20/1
சுற்று அமர் ஒழிய வென்று கை கொண்டு – பொருள். புறத்:13/3
ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது – பொருள். கற்:5/12
கைக்கிளை (8)
கைக்கிளை முதலா பெருந்திணை இறுவாய் – பொருள். அகத்:1/1
புல்லி தோன்றும் கைக்கிளை குறிப்பே – பொருள். அகத்:50/6
பாடாண் பகுதி கைக்கிளை புறனே – பொருள். புறத்:25/1
கைக்கிளை வகையொடு உளப்பட தொகைஇ – பொருள். புறத்:35/10
முன்னைய மூன்றும் கைக்கிளை குறிப்பே – பொருள். கள:14/1
கைக்கிளை பரிபாட்டு அங்கத செய்யுளொடு – பொருள். செய்யு:118/2
கலி வெண்பாட்டே கைக்கிளை செய்யுள் – பொருள். செய்யு:160/1
கைக்கிளை முதலா எழு பெரும் திணையும் – பொருள். செய்யு:185/1
கைக்கிளை-தானே (1)
கைக்கிளை-தானே வெண்பா ஆகி – பொருள். செய்யு:119/1
கைகோள் (2)
திணையே கைகோள் கூற்று வகை எனாஅ – பொருள். செய்யு:1/5
மெய் பெறும் அவையே கைகோள் வகையே – பொருள். செய்யு:188/1
கைப்பட்டு (1)
கைப்பட்டு கலங்கினும் நாணு மிக வரினும் – பொருள். கள:20/5
கைம்மிக (1)
காதல் கைம்மிக கனவின் அரற்றலும் – பொருள். கள:24/6
கைம்மிகல் (2)
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் – பொருள். மெய்ப்:12/4
காதல் கைம்மிகல் கட்டுரை இன்மை என்று – பொருள். மெய்ப்:23/4
கைம்மிகுதல் (1)
காப்பு கைம்மிகுதல் உண்மையான – பொருள். பொருளி:20/2
கையற (1)
காப்பின் கடுமை கையற வரினும் – பொருள். கள:23/30
கையறவு (1)
கலங்கி மொழிதல் கையறவு உரைத்தலொடு – பொருள். மெய்ப்:18/2
கையறு (4)
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் – பொருள். புறத்:24/27
வேட்கையின் மயங்கி கையறு பொழுதினும் – பொருள். கள:16/5
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் – பொருள். கள:20/22
மனைவி முன்னர் கையறு கிளவி – பொருள். கற்:25/1
கையறு-காலை (1)
பொழுது தலைவைத்த கையறு-காலை – பொருள். பொருளி:42/1
இறந்த போல கிளக்கும் கிளவி – 42/2
கையாறு (1)
கையாறு இடுக்கண் பொச்சாப்பு பொறாமை – பொருள். மெய்ப்:12/8
கையிகந்து (1)
சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும் – பொருள். கற்:5/40
கையினும் (1)
வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு – பொருள். அகத்:41/12
கையும் (1)
இல் வலியுறுத்தல் இரு கையும் எடுத்தலொடு – பொருள். மெய்ப்:15/2
கைவிடின் (1)
காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும் – பொருள். கற்:5/41