Select Page


மை (33)

மை அரிக்கண்ணினாளும் மாலும் ஓர்பாகம் ஆகி – தேவா-அப்:221/2
மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி – தேவா-அப்:283/1
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டு – தேவா-அப்:519/1
மை ஞவில் கண்டன்-தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:581/1
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் – தேவா-அப்:602/2
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட – தேவா-அப்:635/1
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க – தேவா-அப்:774/2
மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:857/3
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணினன் – தேவா-அப்:1088/1
மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன் – தேவா-அப்:1143/1
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர் – தேவா-அப்:1433/2
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1473/3
மானை ஏந்திய கையினர் மை அறு – தேவா-அப்:1596/1
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு – தேவா-அப்:1632/1
மை கடுத்த நிறத்து அரக்கன் வரை – தேவா-அப்:1732/1
மை உலாவிய கண்டனை வாழ்த்துமே – தேவா-அப்:1862/4
மை அனுக்கிய கண்டனை வானவர் – தேவா-அப்:1894/3
மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான் – தேவா-அப்:2035/3
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/2
மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல – தேவா-அப்:2532/1
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
மை சேர்ந்த கண்டம் உடையாய் போற்றி மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி – தேவா-அப்:2651/1
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
மை ஆரும் கண்டம் மிடற்றார் தாமே மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே – தேவா-அப்:2866/1
மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/2
மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
மேல்


மைத்து (2)

மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே – தேவா-அப்:1680/4
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
மேல்


மைந்தர் (4)

மைந்தர் போல் மணி நாகேச்சுரவரே – தேவா-அப்:1593/4
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
மருவில் பிரியாத மைந்தர் போலும் மலர் அடிகள் நாடி வணங்கலுற்ற – தேவா-அப்:2971/3
மேல்


மைந்தர்களோடு (1)

மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார் – தேவா-அப்:214/2
மேல்


மைந்தரை (1)

மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும் – தேவா-அப்:224/2
மேல்


மைந்தன் (8)

மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:692/2,3
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/2
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/4
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/3
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/3
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/3
மேல்


மைந்தன்-தன்னை (6)

மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/2,3
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/3
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை – தேவா-அப்:2591/1
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/3,4
மேல்


மைந்தன்தான் (2)

மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
மேல்


மைந்தனார் (2)

மலையினார்மகள் ஓர்பாகம் மைந்தனார் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:436/1
மத்த மா மலர் சூடிய மைந்தனார்
சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால் – தேவா-அப்:1477/1,2
மேல்


மைந்தனாரும் (2)

வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/3,4
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/1,2
மேல்


மைந்தனே (1)

ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே – தேவா-அப்:1252/4
மேல்


மைந்தனை (9)

வல்லானை வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை
சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும் – தேவா-அப்:68/2,3
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/1,2
வானனை மதி சூடிய மைந்தனை
தேனனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1103/1,2
மைந்தனை மணவாளனை மா மலர் – தேவா-அப்:1695/2
வானம் சேர் மதி சூடிய மைந்தனை
நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை – தேவா-அப்:1865/1,2
வான வெண் மதி சூடிய மைந்தனை
வேனிலானை மெலிவு செய் தீ அழல் – தேவா-அப்:1988/2,3
மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1992/4
மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1993/4
மகர வெல் கொடி மைந்தனை காய்ந்தவன் – தேவா-அப்:2041/3
மேல்


மைந்தா (5)

மணியே பொன்னே மைந்தா என்பார்கட்கு – தேவா-அப்:209/3
மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும் – தேவா-அப்:2021/2
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி – தேவா-அப்:2405/3
வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்_கோன் தோள் துணித்த மைந்தா போற்றி – தேவா-அப்:2412/2
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
மேல்


மைம் (1)

மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும் – தேவா-அப்:2021/2
மேல்


மையல் (5)

மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில் – தேவா-அப்:305/1
மாயத்தை அறியமாட்டேன் மையல் கொள் மனத்தன் ஆகி – தேவா-அப்:310/1
வக்கரை அமர்வர் போலும் மாதரை மையல் செய்யும் – தேவா-அப்:647/3
மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும் – தேவா-அப்:1470/2
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
மேல்


மையலாய் (1)

மையலாய் மறவா மனத்தார்க்கு எலாம் – தேவா-அப்:1791/3
மேல்


மையலே (1)

மஞ்சனோடு இவள் ஆடிய மையலே – தேவா-அப்:1361/4
மேல்


மையின் (1)

மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி – தேவா-அப்:438/1
மேல்


மையினால் (1)

மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2

மேல்