Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுங்கமிட 1
சுட்ட 2
சுட்டவனே 1
சுட 1
சுடர் 9
சுடரே 5
சுடரை 3
சுடரோன் 1
சுடலை 3
சுடலையில் 1
சுடு 3
சுடுகாட்டிடை 1
சுடுகாடு 1
சுடுவார் 2
சுண்ண 4
சுந்தர 2
சுந்தரராய் 1
சுந்தரனே 1
சுமந்த 1
சுமந்து 11
சுமந்துகொண்டு 1
சுரந்த 1
சுரபி 1
சுரி 2
சுரிகை 1
சுருங்கா 1
சுருண்ட 1
சுருதி 1
சுருதியார்க்கும் 1
சுரும்பு 7
சுரும்பொடு 1
சுருள் 2
சுவடும் 1
சுவண்டே 1
சுவை 3
சுவை-தன்னை 1
சுழல் 1
சுழல்கின்றது 1
சுழல்கின்றேன் 1
சுழல 1
சுழன்று 2
சுழி 1
சுழித்தலை 2
சுழித்து 1
சுழிந்து 1
சுழிய 1
சுழியல் 12
சுளியாரோ 1
சுளையும் 1
சுற்றம் 7
சுற்றமும் 4
சுற்றி 1
சுற்றிய 1
சுற்று 1
சுற்றும் 3
சுற்றுமுற்றும் 1
சுறவம் 2
சுனை 4


சுங்கமிட (1)

தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட
தெள்ளும் வேலை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1034/3,4
மேல்


சுட்ட (2)

சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால் – தேவா-சுந்:179/2
சிட்டனும் திரிபுரம் சுட்ட தேவர்கள்தேவனை – தேவா-சுந்:448/3
மேல்


சுட்டவனே (1)

துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/2
மேல்


சுட (1)

சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
மேல்


சுடர் (9)

செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய் – தேவா-சுந்:294/2
துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை – தேவா-சுந்:641/2
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத – தேவா-சுந்:680/3
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே – தேவா-சுந்:738/4
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக – தேவா-சுந்:788/2
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் – தேவா-சுந்:1001/1
தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க – தேவா-சுந்:1030/3
மேல்


சுடரே (5)

நொந்தா ஒண் சுடரே நுனையே நினைத்திருந்தேன் – தேவா-சுந்:209/1
ஊன் நேர் இ உடலம் புகுந்தாய் என் ஒண் சுடரே
தேனே இன்னமுதே திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:214/2,3
செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:259/1,2
தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழும் சுடரே
காறு ஆர் வெண்மருப்பா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:286/2,3
துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா – தேவா-சுந்:485/1
மேல்


சுடரை (3)

சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/2,3
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/2,3
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை – தேவா-சுந்:600/1,2
மேல்


சுடரோன் (1)

வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் – தேவா-சுந்:246/1
மேல்


சுடலை (3)

நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே – தேவா-சுந்:285/2
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ சுடலை பொடி – தேவா-சுந்:447/1
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
மேல்


சுடலையில் (1)

தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில்
பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே – தேவா-சுந்:363/1,2
மேல்


சுடு (3)

ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை – தேவா-சுந்:330/3
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/2
மேல்


சுடுகாட்டிடை (1)

மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/2
மேல்


சுடுகாடு (1)

துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி – தேவா-சுந்:420/2
மேல்


சுடுவார் (2)

பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/2
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும் – தேவா-சுந்:813/1
மேல்


சுண்ண (4)

துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
துணிப்படும் உடையும் சுண்ண வெண் நீறும் தோற்றமும் சிந்தித்து காணில் – தேவா-சுந்:143/1
சுரும்பு உடை மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றானே – தேவா-சுந்:293/2
சோதியில் சோதி எம்மானை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட – தேவா-சுந்:744/3
மேல்


சுந்தர (2)

சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தர சோதியாய் – தேவா-சுந்:938/2
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை – தேவா-சுந்:1019/2
மேல்


சுந்தரராய் (1)

துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
மேல்


சுந்தரனே (1)

தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
மேல்


சுமந்த (1)

தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/2
மேல்


சுமந்து (11)

பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/3
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து
என் ஆக பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:523/3,4
கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் – தேவா-சுந்:623/1
படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து
இடு மணல் அடைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:733/3,4
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர் – தேவா-சுந்:793/1
பொதியே சுமந்து உழல்வீர் பொதி அவம் ஆவதும் அறியீர் – தேவா-சுந்:800/1
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


சுமந்துகொண்டு (1)

தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி – தேவா-சுந்:702/2
மேல்


சுரந்த (1)

கன்று முட்டி உண்ண சுரந்த காலி அவை போல – தேவா-சுந்:966/2
மேல்


சுரபி (1)

சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
மேல்


சுரி (2)

புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து – தேவா-சுந்:735/3
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும் – தேவா-சுந்:866/2
மேல்


சுரிகை (1)

பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
மேல்


சுருங்கா (1)

சோதியன் சொற்பொருளாய் சுருங்கா மறை நான்கினையும் – தேவா-சுந்:985/2
மேல்


சுருண்ட (1)

சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
மேல்


சுருதி (1)

சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
மேல்


சுருதியார்க்கும் (1)

சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா சோதி எம் ஆதியான் – தேவா-சுந்:71/3
மேல்


சுரும்பு (7)

சுரும்பு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:126/2
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
சுரும்பு உடை மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றானே – தேவா-சுந்:293/2
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
நலம் பெரியன சுரும்பு ஆர்ந்தன நம் கோன் இடம் அறிந்தோம் – தேவா-சுந்:726/1
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம் – தேவா-சுந்:732/1
மேல்


சுரும்பொடு (1)

சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
மேல்


சுருள் (2)

துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
மேல்


சுவடும் (1)

மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
மேல்


சுவண்டே (1)

துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/2,3
மேல்


சுவை (3)

சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு – தேவா-சுந்:76/1
பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய் – தேவா-சுந்:294/1
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/2
மேல்


சுவை-தன்னை (1)

ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை – தேவா-சுந்:605/3
மேல்


சுழல் (1)

சுழல் நீர் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:954/4
மேல்


சுழல்கின்றது (1)

சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/2
மேல்


சுழல்கின்றேன் (1)

சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/2
மேல்


சுழல (1)

அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய் – தேவா-சுந்:194/3
மேல்


சுழன்று (2)

சூழும் ஓடி சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:374/1
சுற்றுமுற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:379/1
மேல்


சுழி (1)

கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின் – தேவா-சுந்:233/3
மேல்


சுழித்தலை (2)

சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/2
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
மேல்


சுழித்து (1)

குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
மேல்


சுழிந்து (1)

சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:755/3
மேல்


சுழிய (1)

மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய
தூற்ற தரிக்கில்லேன் என்று சொல்லி அயல் அறிய – தேவா-சுந்:807/2,3
மேல்


சுழியல் (12)

தென்னூர் கைம்மை திரு சுழியல் திரு கானப்பேர் – தேவா-சுந்:117/1
சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர் – தேவா-சுந்:311/1
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல்
நானாவிதம் நினைவார்-தமை நலியார் நமன் தமரே – தேவா-சுந்:832/3,4
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல்
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/3,4
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார் – தேவா-சுந்:834/2,3
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திரு சுழியல்
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் – தேவா-சுந்:835/2,3
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல்
பெற்றான் இனிது உறைய திறம்பாமை திரு நாமம் – தேவா-சுந்:836/2,3
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திரு சுழியல்
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும் – தேவா-சுந்:837/2,3
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல்
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/3,4
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல்
மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான்-தனது அடியே – தேவா-சுந்:839/3,4
செண்டு ஆடுதல் புரிந்தான் திரு சுழியல் பெருமானை – தேவா-சுந்:840/2
தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல்
பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான் – தேவா-சுந்:841/2,3
மேல்


சுளியாரோ (1)

எப்போதும் வந்து உண்டால் எமை எமர்கள் சுளியாரோ
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை – தேவா-சுந்:808/2,3
மேல்


சுளையும் (1)

வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும்
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி – தேவா-சுந்:779/1,2
மேல்


சுற்றம் (7)

மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம்
பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/1,2
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன் – தேவா-சுந்:212/1
காணியேல் பெரிது உடையனே கற்று நல்லனே சுற்றம் நல் கிளை – தேவா-சுந்:342/1
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள் – தேவா-சுந்:553/1
பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை – தேவா-சுந்:575/2
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
சிறந்தார் சுற்றம் திரு என்று இன்ன – தேவா-சுந்:960/3
மேல்


சுற்றமும் (4)

பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும் – தேவா-சுந்:352/1
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
பொள்ளல் இ உடலை பொருள் என்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி – தேவா-சுந்:608/1
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
மேல்


சுற்றி (1)

கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த – தேவா-சுந்:564/1
மேல்


சுற்றிய (1)

சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
மேல்


சுற்று (1)

சுற்று ஆர்தரு நீர் சோற்றுத்துறையுள் – தேவா-சுந்:963/1
மேல்


சுற்றும் (3)

துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர் – தேவா-சுந்:311/1
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
மேல்


சுற்றுமுற்றும் (1)

சுற்றுமுற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:379/1
மேல்


சுறவம் (2)

மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:720/4
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:723/4
மேல்


சுனை (4)

கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/3
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/2
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி – தேவா-சுந்:802/2

மேல்