Select Page

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

யாக்கை (4)

அளி புண் அகத்து புறம் தோல் மூடி அடியேனுடை யாக்கை
புளியம்பழம் ஒத்திருந்தேன் இருந்தும் விடையாய் பொடி ஆடி – திருவா:25 5/1,2
ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே – திருவா:32 5/4
மண் மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும் – திருவா:33 9/3
புன் புலால் யாக்கை புரைபுரை கனிய பொன் நெடும் கோயிலா புகுந்து என் – திருவா:37 10/1
மேல்


யாக்கையிலே (1)

இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மை தடம் கண் – திருவா:24 5/2
மேல்


யாத்திரை (1)

வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் – திருவா:4/29
மேல்


யாது (4)

யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே – திருவா:22 9/4
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால் – திருவா:22 10/2
யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ – திருவா:23 8/3
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் – திருவா:33 6/3
மேல்


யாதும் (5)

யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் – திருவா:5 30/3
நான் யாதும் ஒன்று அல்லா பொல்லா நாய் ஆன – திருவா:5 51/2
ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே – திருவா:32 5/4
அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா – திருவா:37 8/1
பூம் கழல்கள்-அவை அல்லாது எவை யாதும் புகழேனே – திருவா:39 1/4
மேல்


யாம் (9)

யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் – திருவா:5 30/3
வணங்கி யாம் விசேடங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு – திருவா:5 75/3
சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடம் கண் – திருவா:7 1/2
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 2/8
உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயே வந்து – திருவா:7 4/7
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள் – திருவா:7 20/7
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏர் ஓர் எம்பாவாய் – திருவா:7 20/8
பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க – திருவா:15 12/2
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக – திருவா:45 3/2
மேல்


யாய் (3)

எந்தை யாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும் – திருவா:5 47/1
ஏற்று உயர் கொடி உடை யாய் எனை உடையாய் எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 1/4
ஆழி அப்பா உடை யாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 6/4
மேல்


யார் (4)

நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் – திருவா:10 2/1
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே – திருவா:22 7/4
ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி – திருவா:22 8/4
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை உடையாய் அடிமைக்கு யார் என்பேன் – திருவா:50 2/2
மேல்


யார்க்கும் (1)

புல் வரம்பு இன்றி யார்க்கும் அரும் பொருள் – திருவா:5 48/2
மேல்


யாரினும் (2)

உடையனோ பணி போற்றி உம்பரார்-தம் பராபரா போற்றி யாரினும்
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின் – திருவா:5 97/2,3
மன்ன எம்பிரான் வருக என் எனை மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என் எனை முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள் – திருவா:5 99/1,2
மேல்


யாரும் (1)

மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து – திருவா:23 2/2
மேல்


யாரே (1)

என்னை நோக்குவார் யாரே என் நான் செய்கேன் எம்பெருமான் – திருவா:5 59/3
மேல்


யாவர் (2)

யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் – திருவா:5 30/3
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் – திருவா:20 8/1
மேல்


யாவர்க்கும் (4)

அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்து எம் – திருவா:5 18/1
எந்தை யாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான் – திருவா:5 47/1,2
யாவர்க்கும் மேல் ஆம் அளவு_இலா சீர் உடையான் – திருவா:47 8/1
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை யாவரும் – திருவா:47 8/2
மேல்


யாவராயினும் (1)

யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான் – திருவா:42 1/3
மேல்


யாவரினும் (1)

ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய – திருவா:5 23/1
மேல்


யாவரும் (7)

யாவரும் பெற உறும் ஈசன் காண்க – திருவா:3/55
ஏனை யாவரும் எய்திடலுற்று மற்று இன்னது என்று அறியாத – திருவா:5 38/1
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவு_அரும் செல்வனே – திருவா:5 47/3,4
இட்ட அன்பரொடு யாவரும் காணவே – திருவா:5 49/2
யாவரும் அறிவு_அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 3/4
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்கு – திருவா:26 3/2
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை யாவரும்
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு என் எம்பெருமான் – திருவா:47 8/2,3
மேல்


யாவரையும் (1)

கரு வேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை – திருவா:11 2/2
மேல்


யாவுளும் (1)

நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே – திருவா:5 46/3,4
மேல்


யாவைக்கும் (1)

எ பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும் – திருவா:8 12/5
மேல்


யாவையும் (5)

அன்பருக்கு அன்பனே யாவையும் ஆய் அல்லையும் ஆய் – திருவா:1/71
விச்சு-அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சக பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில் – திருவா:5 96/1,2
முன்ன எம்பிரான் வருக என் எனை முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள் – திருவா:5 99/2
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே – திருவா:22 1/4
நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவரொடும் கூடேன் – திருவா:26 2/1
மேல்


யாழினர் (1)

இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் – திருவா:20 4/1
மேல்


யான் (30)

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
கண்_நுதலான் தன் கருணை கண் காட்ட வந்து எய்தி – திருவா:1/20,21
புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே – திருவா:5 10/1
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு-அதனுக்கு என் கடவேன் – திருவா:5 12/1
கோன் ஆகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டுவான் – திருவா:5 15/3
ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய – திருவா:5 23/1
ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே – திருவா:5 38/4
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே – திருவா:5 41/2
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னை சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் – திருவா:5 86/2,3
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு – திருவா:5 87/2,3
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே – திருவா:6 6/1
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணி மலர் தாள் – திருவா:6 11/1
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு – திருவா:6 12/1
தனி துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த – திருவா:6 39/1
ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து – திருவா:6 50/1
என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு – திருவா:22 2/2
உரை உணர்வு இறந்துநின்று உணர்வது ஓர் உணர்வே யான் உன்னை உரைக்கும் ஆறு உணர்த்தே – திருவா:22 3/4
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே – திருவா:22 10/4
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன் – திருவா:24 1/2
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய் – திருவா:24 4/2
பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என் உரை மாய்த்து – திருவா:31 5/3
அடியார் சிலர் உன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே – திருவா:32 2/1
ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே – திருவா:32 5/4
நிச்சம் என நெஞ்சில் மன்னி யான் ஆகி நின்றானே – திருவா:34 9/4
யான் உனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 9/4
ஆதம்_இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில் – திருவா:38 3/1
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் – திருவா:39 3/1
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் – திருவா:39 3/2
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி – திருவா:41 2/3
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனி பிரிந்து ஆற்றேனே – திருவா:44 4/4
என்னால் அறியா பதம் தந்தாய் யான் அது அறியாதே கெட்டேன் – திருவா:50 2/1
மேல்


யான்-தானும் (1)

பேசா நிற்பர் யான்-தானும் பேணா நிற்பேன் நின் அருளே – திருவா:21 6/2
மேல்


யானும் (10)

கண்ணால் யானும் கண்டேன் காண்க – திருவா:3/58
சிவன் என யானும் தேறினன் காண்க – திருவா:3/62
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே – திருவா:5 16/4
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும் – திருவா:5 80/3
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே – திருவா:5 85/4
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு – திருவா:5 86/1
புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கு ஒர் பொய் நெறிக்கே – திருவா:6 28/1
முன் நின்று ஆண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்று – திருவா:21 2/1
மேவும் உன்-தன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே – திருவா:32 5/1
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் – திருவா:33 6/3
மேல்


யானே (4)

இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி – திருவா:5 66/1
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் – திருவா:5 90/1
எ நாள் களித்து எ நாள் இறுமாக்கேன் இனி யானே – திருவா:34 1/4
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே உனை யானே – திருவா:34 8/4
மேல்


யானை (1)

யானை முதலா எறும்பு ஈறு ஆய – திருவா:4/11
மேல்


யானையை (1)

இரு கை யானையை ஒத்திருந்து என் உள – திருவா:5 41/1

மேல்