Select Page

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வைக்கப்படும் (4)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 5:10
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் – குறள் 22:4
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் – குறள் 39:8
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் – குறள் 85:10

TOP


வைக்கும் (1)

விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து – குறள் 78:6

TOP


வைகலும் (1)

வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – குறள் 9:3

TOP


வைத்தான்-வாய் (1)

வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் – குறள் 101:1

TOP


வைத்து (3)

ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் – குறள் 23:8
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்து பேதை புகல் – குறள் 84:10
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – குறள் 127:9

TOP


வைத்தூறு (1)

வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போல கெடும் – குறள் 44:5

TOP


வைப்பர் (1)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – குறள் 16:5

TOP


வைப்பில் (1)

நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள் 15:9

TOP


வைப்பிற்கு (1)

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள் 3:4

TOP


வைப்பு (1)

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள் 23:6

TOP


வையக்கு (1)

கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி – குறள் 71:1

TOP


வையகத்து (2)

அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு – குறள் 8:5
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
இரப்பவர் மேற்கொள்வது – குறள் 106:5

TOP


வையகம் (1)

இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
முறை காக்கும் முட்டா செயின் – குறள் 55:7

TOP


வையகமும் (1)

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது – குறள் 11:1

TOP


வையத்தார்க்கு (1)

வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅவிடின் – குறள் 24:8

TOP


வையத்தின் (1)

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து – குறள் 36:3

TOP


வையத்து (2)

துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – குறள் 3:2
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் – குறள் 85:10

TOP


வையத்துள் (1)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 5:10

TOP


வையம் (1)

அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன் சொல் உரைப்பான் பொறை – குறள் 19:9

TOP


வையாது (2)

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றி-கண் தங்கியான் தாழ்வு – குறள் 12:7
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
இன்மையா வையாது உலகு – குறள் 85:1

TOP


வையாரே (1)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – குறள் 16:5

TOP