கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மேக 1
மேய்ந்த 1
மேல் 15
மேல்வரினும் 1
மேல்வருங்கால் 1
மேல்வாரா 1
மேலர் 1
மேலவாம் 1
மேலாயவர் 1
மேவல் 2
மேவற்க 1
மேவன 1
மேவார் 1
மேற்கொண்டாரின் 1
மேற்கொண்டு 3
மேற்கொள்பவர் 1
மேற்கொள்பவற்கு 1
மேற்கொள்வது 2
மேற்கொளின் 1
மேற்கொளீஇ 1
மேற்சென்று 2
மேற்றே 1
மேன்மேல் 1
மேன்மை 1
மேனி 5
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மேக (1)
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – குறள் 87:1
மேய்ந்த (1)
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள் 28:3
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று – குறள் 23:2
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ் – குறள் 24:2
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து – குறள் 25:10
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – குறள் 33:6
மேல் பிறந்தார்-ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு – குறள் 41:9
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறா கொள்ளாதாம் மேல் – குறள் 63:7
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – குறள் 87:1
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – குறள் 98:3
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள் 108:9
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் – குறள் 109:7
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு – குறள் 119:2
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2
மேல்வரினும் (1)
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
ஆற்றலதுவே படை – குறள் 77:5
மேல்வருங்கால் (1)
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறை ஒருங்கு நேர்வது நாடு – குறள் 74:3
மேல்வாரா (1)
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
மேற்சென்று செய்யப்படும் – குறள் 34:5
மேலர் (1)
துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து – குறள் 122:8
மேலவாம் (1)
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
நோய் இன்மை வேண்டுபவர் – குறள் 32:10
மேலாயவர் (1)
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியல் ஞாலம்
பேணலர் மேலாயவர் – குறள் 102:6
மேவல் (2)
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல்
இன்னா அறிவினவர் – குறள் 86:7
மேவற்க (1)
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து – குறள் 88:7
மேவன (1)
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
மேவன செய்து ஒழுகலான் – குறள் 108:3
மேவார் (1)
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
மேவார் இலாஅ-கடை – குறள் 106:9
மேற்கொண்டாரின் (1)
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – குறள் 56:1
மேற்கொண்டு (3)
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – குறள் 33:6
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – குறள் 56:1
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் – குறள் 85:5
மேற்கொள்பவர் (1)
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள் 72:3
மேற்கொள்பவற்கு (1)
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவற்கு – குறள் 99:1
மேற்கொள்வது (2)
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது – குறள் 27:2
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
இரப்பவர் மேற்கொள்வது – குறள் 106:5
மேற்கொளின் (1)
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
பேதை வினை மேற்கொளின் – குறள் 84:6
மேற்கொளீஇ (1)
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது – குறள் 94:8
மேற்சென்று (2)
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
மேற்சென்று செய்யப்படும் – குறள் 34:5
நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதி-கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு – குறள் 79:4
மேற்றே (1)
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை – குறள் 103:7
மேன்மேல் (1)
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் – குறள் 37:8
மேன்மை (1)
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தா பழி – குறள் 14:7
மேனி (5)
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – குறள் 112:3
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு – குறள் 119:2
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
மேனி பசப்பு ஊர்வது – குறள் 119:5
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
நன் நிலையர் ஆவர் எனின் – குறள் 119:9
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
எழு நாளேம் மேனி பசந்து – குறள் 128:8