Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டக்கது 1
பெட்டார் 1
பெட்டு 3
பெட்ப 2
பெட்பவே 1
பெண் 10
பெண்டிர் 2
பெண்டிரும் 1
பெண்ணின் 2
பெண்ணினான் 1
பெண்ணே 1
பெண்மை 4
பெய் 2
பெய்தாள் 1
பெய்து 1
பெய்யும் 1
பெய 1
பெயர்த்து 2
பெயரார் 1
பெயரினும் 1
பெயல் 2
பெயலும் 1
பெயின் 1
பெரிது 11
பெரியதோர் 1
பெரியர் 2
பெரியார் 4
பெரியாரால் 1
பெரியாரை 3
பெரு 4
பெருக்கத்தின் 1
பெருக்கத்து 1
பெருக்கம் 1
பெருக்கமும் 1
பெருக்கற்கு 1
பெருக்கி 1
பெருகலின் 1
பெருகும் 2
பெருந்தகைமை 2
பெருந்தகையான்-கண் 1
பெரும் 19
பெருமித 1
பெருமிதம் 2
பெருமை 13
பெருமைக்கும் 1
பெருமையின் 1
பெருமையும் 1
பெற்ற 3
பெற்ற-கால் 1
பெற்றத்தால் 1
பெற்றம் 1
பெற்றாரே 1
பெற்றால் 1
பெற்றாள் 3
பெற்றான் 2
பெற்றானை 1
பெற்றியார் 1
பெற்று 1
பெற்றேம் 1
பெறல் 2
பெறாஅது 2
பெறாஅமை 1
பெறாஅவிடின் 1
பெறின் 23
பெறினும் 3
பெறுகுவம்-கொல்லோ 1
பெறுதல் 1
பெறுதியோ 1
பெறும் 2
பெறுமவற்றுள் 1
பெறுவது 2
பெறுவர் 1
பெறுவான் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பெட்டக்கது (1)

பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – குறள் 74:2

TOP


பெட்டார் (1)

பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண் – குறள் 118:8

TOP


பெட்டு (3)

பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்-கண் இல் – குறள் 15:1
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள்
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – குறள் 91:8
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130:3

TOP


பெட்ப (2)

நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
பேணியார் பெட்ப செயின் – குறள் 126:7
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள் 128:6

TOP


பெட்பவே (1)

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை
காணாது அமையல கண் – குறள் 129:3

TOP


பெண் (10)

தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள் 6:6
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று – குறள் 41:2
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும் – குறள் 91:2
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
பெண்ணே பெருமை உடைத்து – குறள் 91:7
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
பெண் ஏவல் செய்வார்-கண் இல் – குறள் 91:9
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள் 91:10
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர் கட்டு – குறள் 109:3
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் – குறள் 109:4
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள் 128:2
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு – குறள் 132:1

TOP


பெண்டிர் (2)

பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு – குறள் 6:8
பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள் 92:3

TOP


பெண்டிரும் (1)

இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு – குறள் 92:10

TOP


பெண்ணின் (2)

பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 6:4
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் – குறள் 114:7

TOP


பெண்ணினான் (1)

பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காம நோய் சொல்லி இரவு – குறள் 128:10

TOP


பெண்ணே (1)

பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
பெண்ணே பெருமை உடைத்து – குறள் 91:7

TOP


பெண்மை (4)

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன் – குறள் 15:7
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று – குறள் 15:10
பல மாய கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை – குறள் 126:8
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காம நோய் சொல்லி இரவு – குறள் 128:10

TOP


பெய் (2)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை – குறள் 6:5
பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம்
சால மிகுத்து பெயின் – குறள் 48:5

TOP


பெய்தாள் (1)

அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை – குறள் 112:5

TOP


பெய்து (1)

சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – குறள் 66:10

TOP


பெய்யும் (1)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை – குறள் 6:5

TOP


பெய (1)

பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர் – குறள் 58:10

TOP


பெயர்த்து (2)

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 21:5
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 35:4

TOP


பெயரார் (1)

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் – குறள் 99:9

TOP


பெயரினும் (1)

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் – குறள் 99:9

TOP


பெயல் (2)

முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் – குறள் 56:9
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118:4

TOP


பெயலும் (1)

இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு – குறள் 55:5

TOP


பெயின் (1)

பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம்
சால மிகுத்து பெயின் – குறள் 48:5

TOP


பெரிது (11)

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் – குறள் 7:9
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாண பெரிது – குறள் 11:2
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது – குறள் 11:3
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது – குறள் 13:4
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள் 33:8
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – குறள் 84:9
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவு இன்றி படும் – குறள் 95:7
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது – குறள் 110:2
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்
துன்பம் அதனின் பெரிது – குறள் 117:6
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள் 128:2
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள் 128:6

TOP


பெரியதோர் (1)

பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும் – குறள் 91:2

TOP


பெரியர் (2)

செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கு அரிய செய்கலாதார் – குறள் 3:6
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள் 16:10

TOP


பெரியார் (4)

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை – குறள் 45:4
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
கொள்வர் பெரியார் பணிந்து – குறள் 68:10
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து – குறள் 70:4
எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்து ஒழுகுவார் – குறள் 90:6

TOP


பெரியாரால் (1)

பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் – குறள் 90:2

TOP


பெரியாரை (3)

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை
பேணி தமரா கொளல் – குறள் 45:3
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் – குறள் 90:2
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – குறள் 98:6

TOP


பெரு (4)

ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும் – குறள் 38:10
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரு மிறை தானே தமக்கு – குறள் 85:7
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – குறள் 121:1
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
பேதை பெரு மழை கண் – குறள் 124:9

TOP


பெருக்கத்தின் (1)

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – குறள் 17:10

TOP


பெருக்கத்து (1)

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள் 97:3

TOP


பெருக்கம் (1)

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து – குறள் 44:1

TOP


பெருக்கமும் (1)

கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:5

TOP


பெருக்கற்கு (1)

தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் – குறள் 26:1

TOP


பெருக்கி (1)

வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை – குறள் 52:2

TOP


பெருகலின் (1)

பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது – குறள் 82:1

TOP


பெருகும் (2)

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் – குறள் 10:6
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு – குறள் 61:4

TOP


பெருந்தகைமை (2)

மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து – குறள் 97:8
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று – குறள் 126:5

TOP


பெருந்தகையான்-கண் (1)

மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் – குறள் 22:7

TOP


பெரும் (19)

பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் – குறள் 1:10
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 6:4
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு – குறள் 6:8
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல் – குறள் 20:8
கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று – குறள் 34:2
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மா நிலத்து இல் – குறள் 53:6
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
பேஎய் கண்ட அன்னது உடைத்து – குறள் 57:5
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இ உலகு – குறள் 58:1
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – குறள் 74:2
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
நோ தக்க நட்டார் செயின் – குறள் 81:5
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏது இன்மை கோடி உறும் – குறள் 82:6
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்ற-கடை – குறள் 84:7
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப்படும் – குறள் 87:6
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
பேணா பெரும் குற்றத்தார்க்கு – குறள் 93:4
பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்த அற்று – குறள் 100:10
வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் – குறள் 101:1
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான் – குறள் 101:6
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் – குறள் 114:7

TOP


பெருமித (1)

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து – குறள் 44:1

TOP


பெருமிதம் (2)

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்துவிடல் – குறள் 98:9

TOP


பெருமை (13)

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு – குறள் 3:1
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – குறள் 3:2
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு – குறள் 3:3
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும் – குறள் 3:8
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு – குறள் 34:6
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் – குறள் 42:6
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமை-தான்
சுற்றமா சூழ்ந்துவிடும் – குறள் 46:1
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் – குறள் 62:1
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
பெண்ணே பெருமை உடைத்து – குறள் 91:7
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் – குறள் 98:5
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து – குறள் 98:8
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்துவிடல் – குறள் 98:9
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமை-தான்
குற்றமே கூறிவிடும் – குறள் 98:10

TOP


பெருமைக்கும் (1)

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல் – குறள் 51:5

TOP


பெருமையின் (1)

கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடு உடையது இல் – குறள் 103:1

TOP


பெருமையும் (1)

ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – குறள் 98:4

TOP


பெற்ற (3)

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
பெற்றத்தால் பெற்ற பயன் – குறள் 53:4
பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்த அற்று – குறள் 100:10
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன் – குறள் 111:9

TOP


பெற்ற-கால் (1)

பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்க-கால் – குறள் 127:10

TOP


பெற்றத்தால் (1)

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
பெற்றத்தால் பெற்ற பயன் – குறள் 53:4

TOP


பெற்றம் (1)

வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள் 28:3

TOP


பெற்றாரே (1)

தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி – குறள் 120:1

TOP


பெற்றால் (1)

அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல் – குறள் 34:3

TOP


பெற்றாள் (3)

பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு – குறள் 6:8
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று – குறள் 101:7
நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள் – குறள் 111:4

TOP


பெற்றான் (2)

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள் 23:6
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள் 95:3

TOP


பெற்றானை (1)

தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் – குறள் 27:8

TOP


பெற்றியார் (1)

உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணி கொளல் – குறள் 45:2

TOP


பெற்று (1)

உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து – குறள் 115:3

TOP


பெற்றேம் (1)

அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று
ஓம்புதல் தேற்றாதவர் – குறள் 63:6

TOP


பெறல் (2)

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற – குறள் 22:3
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
அறை பறை கண்ணார் அகத்து – குறள் 118:10

TOP


பெறாஅது (2)

உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து – குறள் 115:3
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 120:8

TOP


பெறாஅமை (1)

பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – குறள் 130:5

TOP


பெறாஅவிடின் (1)

வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅவிடின் – குறள் 24:8

TOP


பெறின் (23)

பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 6:4
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு – குறள் 6:8
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் – குறள் 7:2
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன் சொலன் ஆக பெறின் – குறள் 10:2
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுக பெறின் – குறள் 12:1
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள் கோட்டம் இன்மை பெறின் – குறள் 12:9
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்க பெறின் – குறள் 13:3
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் – குறள் 17:2
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார் பெறின் – குறள் 26:7
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளாது உணர்வார் பெறின் – குறள் 34:4
கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்க பெறின் – குறள் 41:3
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
உள்ளியது உள்ள பெறின் – குறள் 54:10
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார் பெறின் – குறள் 65:8
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆக பெறின் – குறள் 67:6
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
கொள்வர் பெரியார் பணிந்து – குறள் 68:10
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்றது உணர்வார் பெறின் – குறள் 71:8
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார் பெறின் – குறள் 71:9
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின் – குறள் 84:8
செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர் பெறின் – குறள் 87:9
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 99:8
பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்க-கால் – குறள் 127:10
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – குறள் 130:5
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்க பெறின் – குறள் 133:10

TOP


பெறினும் (3)

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:1
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் – குறள் 82:2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் – குறள் 96:4

TOP


பெறுகுவம்-கொல்லோ (1)

ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப
கூடலின் தோன்றிய உப்பு – குறள் 133:8

TOP


பெறுதல் (1)

பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் – குறள் 119:10

TOP


பெறுதியோ (1)

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடூ தோள் பூசல் உரைத்து – குறள் 124:7

TOP


பெறும் (2)

அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் – குறள் 77:8
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
வாடினும் பாடு பெறும் – குறள் 133:2

TOP


பெறுமவற்றுள் (1)

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கள் பேறு அல்ல பிற – குறள் 7:1

TOP


பெறுவது (2)

அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய் பெறுவது எவன் – குறள் 5:6
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் – குறள் 82:3

TOP


பெறுவர் (1)

பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு – குறள் 6:8

TOP


பெறுவான் (1)

அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் – குறள் 85:2

TOP