Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 2
நோக்க 2
நோக்கப்படும் 1
நோக்கம் 2
நோக்கா 1
நோக்கா-கால் 1
நோக்காத 1
நோக்காது 1
நோக்காமை 1
நோக்கான் 3
நோக்கி 16
நோக்கிய 1
நோக்கின் 1
நோக்கினாள் 1
நோக்கினீர் 1
நோக்கினும் 1
நோக்கு 7
நோக்குதல் 2
நோக்கும் 4
நோகும் 1
நோதல் 2
நோய் 40
நோய்க்கு 1
நோயும் 1
நோயை 2
நோலாதவர் 1
நோவது 2
நோவர் 1
நோவல் 1
நோவற்க 1
நோவார் 1
நோற்கிற்பவர் 1
நோற்கிற்பவர்க்கு 1
நோற்பார் 2
நோற்பாரின் 2
நோற்றலின் 1
நோற்றான்-கொல் 1
நோன்பிற்கு 1
நோன்மை 2
நோன்றல் 1
நோனா 2

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நோ (2)

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று – குறள் 16:7
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
நோ தக்க நட்டார் செயின் – குறள் 81:5

TOP


நோக்க (2)

மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்க குழையும் விருந்து – குறள் 9:10
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – குறள் 110:8

TOP


நோக்கப்படும் (1)

அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும் – குறள் 105:7

TOP


நோக்கம் (2)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள் 109:5
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது – குறள் 110:2

TOP


நோக்கா (1)

கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள் 19:4

TOP


நோக்கா-கால் (1)

யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால்
தான் நோக்கி மெல்ல நகும் – குறள் 110:4

TOP


நோக்காத (1)

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள் 15:8

TOP


நோக்காது (1)

அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர் – குறள் 101:9

TOP


நோக்காமை (1)

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தான் போல நகும் – குறள் 110:5

TOP


நோக்கான் (3)

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள் 53:8
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பு இலன் பற்றார்க்கு இனிது – குறள் 87:5

TOP


நோக்கி (16)

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன் சொலினதே அறம் – குறள் 10:3
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன் சொல் உரைப்பான் பொறை – குறள் 19:9
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள் 53:8
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி – குறள் 55:2
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
செல்லும் வாய் நோக்கி செயல் – குறள் 68:3
கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி – குறள் 71:1
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்றது உணர்வார் பெறின் – குறள் 71:8
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர் – குறள் 110:3
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால்
தான் நோக்கி மெல்ல நகும் – குறள் 110:4
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
இது நக தக்கது உடைத்து – குறள் 118:3
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது – குறள் 128:9

TOP


நோக்கிய (1)

தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா
பைதல் உழப்பது எவன் – குறள் 118:2

TOP


நோக்கின் (1)

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள் 53:8

TOP


நோக்கினாள் (1)

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர் – குறள் 110:3

TOP


நோக்கினீர் (1)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள் 132:10

TOP


நோக்கினும் (1)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள் 132:10

TOP


நோக்கு (7)

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – குறள் 98:6
ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
தானை கொண்ட அன்னது உடைத்து – குறள் 109:2
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110:1
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள – குறள் 110:9
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல – குறள் 110:10

TOP


நோக்குதல் (2)

ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
தானை கொண்ட அன்னது உடைத்து – குறள் 109:2
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள – குறள் 110:9

TOP


நோக்கும் (4)

பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து – குறள் 109:9
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால்
தான் நோக்கி மெல்ல நகும் – குறள் 110:4
செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – குறள் 110:7

TOP


நோகும் (1)

காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – குறள் 112:4

TOP


நோதல் (2)

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் – குறள் 35:1
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி – குறள் 131:8

TOP


நோய் (40)

தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால
தன்னை அடல் வேண்டாதான் – குறள் 21:6
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு – குறள் 27:1
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றா-கடை – குறள் 32:5
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
நோய் இன்மை வேண்டுபவர் – குறள் 32:10
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய் – குறள் 36:9
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – குறள் 36:10
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய் – குறள் 43:9
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணி கொளல் – குறள் 45:2
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
போஒம் அளவும் ஓர் நோய் – குறள் 85:8
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய் – குறள் 86:1
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் – குறள் 86:3
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று – குறள் 95:1
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேர் இரையான்-கண் நோய் – குறள் 95:6
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவு இன்றி படும் – குறள் 95:7
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் – குறள் 95:8
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110:1
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இ நோய் – குறள் 115:7
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள் 116:9
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
பின் இருந்து வாழ்வார் பலர் – குறள் 116:10
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் – குறள் 117:2
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – குறள் 118:1
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118:4
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
காம நோய் செய்த என் கண் – குறள் 118:5
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது – குறள் 118:6
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
செறாஅய் வாழிய நெஞ்சு – குறள் 120:10
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன் – குறள் 123:6
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் – குறள் 123:7
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – குறள் 125:1
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல் – குறள் 125:3
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று – குறள் 126:5
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
பைதல் நோய் எல்லாம் கெட – குறள் 127:6
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காம நோய் சொல்லி இரவு – குறள் 128:10
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள் 131:1
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
புலந்தாரை புல்லா விடல் – குறள் 131:3

TOP


நோய்க்கு (1)

பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்கு தானே மருந்து – குறள் 111:2

TOP


நோயும் (1)

சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து – குறள் 119:3

TOP


நோயை (2)

மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும் – குறள் 117:1
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் – குறள் 117:2

TOP


நோலாதவர் (1)

இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் – குறள் 27:10

TOP


நோவது (2)

புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் – குறள் 24:7
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள் 125:2

TOP


நோவர் (1)

நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர் காணாதவர் – குறள் 122:9

TOP


நோவல் (1)

தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
கொடியர் என கூறல் நொந்து – குறள் 124:6

TOP


நோவற்க (1)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து – குறள் 88:7

TOP


நோவார் (1)

புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் – குறள் 24:7

TOP


நோற்கிற்பவர் (1)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் – குறள் 16:9

TOP


நோற்கிற்பவர்க்கு (1)

சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – குறள் 27:7

TOP


நோற்பார் (2)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள் 16:10
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் – குறள் 27:10

TOP


நோற்பாரின் (2)

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள் 5:8
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள் 16:10

TOP


நோற்றலின் (1)

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – குறள் 27:9

TOP


நோற்றான்-கொல் (1)

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் – குறள் 7:10

TOP


நோன்பிற்கு (1)

இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 35:4

TOP


நோன்மை (2)

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள் 5:8
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு – குறள் 99:4

TOP


நோன்றல் (1)

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு – குறள் 27:1

TOP


நோனா (2)

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து – குறள் 114:2
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து – குறள் 117:3

TOP