கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தூஉய்மை 1
தூக்கம் 1
தூக்காத 1
தூக்கார் 1
தூக்கி 3
தூக்கின் 1
தூக்கும் 1
தூங்கற்க 1
தூங்காது 1
தூங்காமை 1
தூங்கி 1
தூங்குக 1
தூங்கும் 1
தூண் 2
தூண்டில் 1
தூது 6
தூதொடு 1
தூய்மை 7
தூய்மையவர் 2
தூயார்க்கு 2
தூவா 1
தூவாத 1
தூவியும் 1
தூற்றா-கொல் 1
தூற்றார் 1
தூற்றும் 1
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தூஉய்மை (1)
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும் – குறள் 37:4
தூக்கம் (1)
கலங்காது கண்ட வினை-கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல் – குறள் 67:8
தூக்காத (1)
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வள வரை வல்லை கெடும் – குறள் 48:10
தூக்கார் (1)
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது – குறள் 11:3
தூக்கி (3)
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கி செயல் – குறள் 48:1
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்
நயன் தூக்கி நள்ளா விடல் – குறள் 92:2
தூக்கின் (1)
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது – குறள் 11:3
தூக்கும் (1)
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு-பால்
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:8
தூங்கற்க (1)
தூங்குக தூங்கி செயல்-பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை – குறள் 68:2
தூங்காது (1)
தூங்குக தூங்கி செயல்-பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை – குறள் 68:2
தூங்காமை (1)
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள் 39:3
தூங்கி (1)
தூங்குக தூங்கி செயல்-பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை – குறள் 68:2
தூங்குக (1)
தூங்குக தூங்கி செயல்-பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை – குறள் 68:2
தூங்கும் (1)
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து – குறள் 117:3
தூண் (2)
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள் 62:5
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – குறள் 99:3
தூண்டில் (1)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – குறள் 94:1
தூது (6)
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு – குறள் 69:1
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று – குறள் 69:2
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது – குறள் 69:5
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது – குறள் 69:6
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பது ஆம் தூது – குறள் 69:10
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை – குறள் 123:8
தூதொடு (1)
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்-கொல் விருந்து – குறள் 122:1
தூய்மை (7)
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் – குறள் 16:9
புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை
வாய்மையான் காணப்படும் – குறள் 30:8
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இன தூய்மை தூவா வரும் – குறள் 46:5
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள் 69:8
தூய்மையவர் (2)
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 72:1
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 73:1
தூயார்க்கு (2)
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை – குறள் 46:6
தூவா (1)
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இன தூய்மை தூவா வரும் – குறள் 46:5
தூவாத (1)
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது – குறள் 69:5
தூவியும் (1)
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சி பழம் – குறள் 112:10
தூற்றா-கொல் (1)
துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
இறை இறவாநின்ற வளை – குறள் 116:7
தூற்றார் (1)
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் – குறள் 119:10
தூற்றும் (1)
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னை-கொல் ஏதிலார் மாட்டு – குறள் 19:8