கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சிதைக்கலாதார் 1
சிதையாமல் 1
சிதைவிடத்து 1
சிதைவு 1
சிமிழ்த்த 1
சில 1
சிலர் 2
சிவிகை 1
சிற்றின்பம் 1
சிற்றினம் 1
சிறக்கணித்தான் 1
சிறந்த 1
சிறந்தான் 1
சிறந்து 1
சிறப்பின-ஆயினும் 1
சிறப்பு 12
சிறப்பும் 1
சிறப்பொடு 2
சிறிது 5
சிறிய 1
சிறியர் 1
சிறியவர் 1
சிறியார் 2
சிறு 8
சிறுகும் 1
சிறுகுவ 1
சிறுமை 4
சிறுமை-தான் 2
சிறுமைக்கும் 1
சிறுமைத்தே-ஆயினும் 1
சிறுமையும் 2
சிறுமையுள் 1
சிறை 3
சினத்தான் 1
சினத்தில் 1
சினத்து 1
சினத்தை 2
சினம் 5
சினமும் 1
சினைப்பது 1
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சிதைக்கலாதார் (1)
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார் – குறள் 88:10
சிதையாமல் (1)
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இ உலகு – குறள் 58:8
சிதைவிடத்து (1)
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
பட்டு பாடு ஊன்றும் களிறு – குறள் 60:7
சிதைவு (1)
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – குறள் 12:2
சிமிழ்த்த (1)
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று – குறள் 28:4
சில (1)
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற
சில சொல்லல் தேற்றாதவர் – குறள் 65:9
சிலர் (2)
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் – குறள் 27:10
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார் – குறள் 129:9
சிவிகை (1)
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை – குறள் 4:7
சிற்றின்பம் (1)
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் – குறள் 18:3
சிற்றினம் (1)
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமை-தான்
சுற்றமா சூழ்ந்துவிடும் – குறள் 46:1
சிறக்கணித்தான் (1)
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தான் போல நகும் – குறள் 110:5
சிறந்த (1)
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு – குறள் 54:1
சிறந்தான் (1)
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று – குறள் 52:5
சிறந்து (1)
இறந்து அமைந்த சார்பு உடையர்-ஆயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரார் செறின் – குறள் 90:10
சிறப்பின-ஆயினும் (1)
இன்றியமையா சிறப்பின-ஆயினும்
குன்ற வருப விடல் – குறள் 97:1
சிறப்பு (12)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு – குறள் 4:1
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு – குறள் 6:8
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு – குறள் 8:4
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு – குறள் 8:5
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:1
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
செம் பொருள் காண்பது அறிவு – குறள் 36:8
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை – குறள் 59:10
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு – குறள் 63:10
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு – குறள் 76:2
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான் – குறள் 98:2
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – குறள் 102:2
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
காதலர் செய்யும் சிறப்பு – குறள் 121:8
சிறப்பும் (1)
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீர்_அல்லவர்-கண் படின் – குறள் 98:7
சிறப்பொடு (2)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு – குறள் 2:8
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மை உடையார் சொலின் – குறள் 20:5
சிறிது (5)
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாண பெரிது – குறள் 11:2
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் – குறள் 42:2
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவா உண்டேல் உண்டாம் சிறிது – குறள் 108:5
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள் 131:1
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
மிக்கு அற்றால் நீள விடல் – குறள் 131:2
சிறிய (1)
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள் 97:3
சிறியர் (1)
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கு அரிய செய்கலாதார் – குறள் 3:6
சிறியவர் (1)
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று – குறள் 82:5
சிறியார் (2)
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
கொள்வர் பெரியார் பணிந்து – குறள் 68:10
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – குறள் 98:6
சிறு (8)
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் – குறள் 7:4
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான்
ஊக்கம் அழிந்து விடும் – குறள் 50:8
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
ஊக்கம் அழிப்பது அரண் – குறள் 75:4
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி – குறள் 87:10
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து – குறள் 101:10
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது – குறள் 110:2
செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – குறள் 110:7
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
வாடினும் பாடு பெறும் – குறள் 133:2
சிறுகும் (1)
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு – குறள் 57:8
சிறுகுவ (1)
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள் 80:8
சிறுமை (4)
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் – குறள் 94:4
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து – குறள் 98:8
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்துவிடல் – குறள் 98:9
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண் – குறள் 124:1
சிறுமை-தான் (2)
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமை-தான்
சுற்றமா சூழ்ந்துவிடும் – குறள் 46:1
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமை-தான்
குற்றமே கூறிவிடும் – குறள் 98:10
சிறுமைக்கும் (1)
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல் – குறள் 51:5
சிறுமைத்தே-ஆயினும் (1)
எள் பகவு அன்ன சிறுமைத்தே-ஆயினும்
உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள் 89:9
சிறுமையும் (2)
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து – குறள் 44:1
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை – குறள் 77:9
சிறுமையுள் (1)
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் – குறள் 10:8
சிறை (3)
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை – குறள் 6:7
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தொடு ஒட்டல் அரிது – குறள் 50:9
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் – குறள் 57:9
சினத்தான் (1)
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப்படும் – குறள் 87:6
சினத்தில் (1)
நகையும் உவகையும் கொல்லும் சினத்தில் தீய
பகையும் உளவோ பிற – குறள் 31:4
சினத்து (1)
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு – குறள் 57:8
சினத்தை (2)
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள் 31:7
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை
துறந்தார் துறந்தார் துணை – குறள் 31:10
சினம் (5)
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து
காக்கின் என் காவா-கால் என் – குறள் 31:1
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற – குறள் 31:2
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவா-கால்
தன்னையே கொல்லும் சினம் – குறள் 31:5
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
ஏம புணையை சுடும் – குறள் 31:6
சினமும் (1)
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து – குறள் 44:1
சினைப்பது (1)
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும் – குறள் 121:3