கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கொக்கு 1
கொட்க 1
கொட்கின் 1
கொட்பு 1
கொடிது 1
கொடிதே 1
கொடிய 1
கொடியர் 1
கொடியார் 3
கொடியார்க்கு 1
கொடியாரை 1
கொடிறு 1
கொடு 1
கொடுத்தல் 1
கொடுத்தலும் 1
கொடுத்து 1
கொடுத்தும் 3
கொடுப்பது 1
கொடுப்பதூஉம் 1
கொடும் 1
கொடுமை 1
கொடுமையின் 1
கொடை 1
கொடையான் 1
கொண்கன் 3
கொண்கனை 2
கொண்ட 3
கொண்டவன் 1
கொண்டனள் 1
கொண்டார் 4
கொண்டான் 2
கொண்டு 7
கொம்பர் 1
கொல் 1
கொல்க 1
கொல்ல 1
கொல்லா 1
கொல்லாது 1
கொல்லாமை 6
கொல்லான் 1
கொல்லி 1
கொல்லும் 5
கொலை 4
கொலை_களத்து 1
கொலையின் 1
கொழுநன் 1
கொள் 1
கொள்க 2
கொள்கலம்-கொல்லோ 1
கொள்கை 1
கொள்கையர் 1
கொள்பவன் 1
கொள்வர் 3
கொள்வார் 1
கொள்வாரும் 1
கொள்வாரொடு 1
கொள்வு 1
கொள்வேம் 1
கொள்ளற்க 3
கொள்ளா 1
கொள்ளா-கடை 1
கொள்ளாத 2
கொள்ளாதாம் 1
கொள்ளாதான் 1
கொள்ளாது 1
கொள்ளாது-மன்னோ 1
கொள்ளார் 1
கொள்ளும் 1
கொள 2
கொளப்பட்டேம் 1
கொளல் 24
கொளலின் 1
கொளற்கு 1
கொளின் 2
கொளினும் 1
கொற்றம் 1
கொன்ற 1
கொன்றது 1
கொன்றார்க்கும் 1
கொன்றிட 1
கொன்று 4
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கொக்கு (1)
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து – குறள் 49:10
கொட்க (1)
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் – குறள் 67:3
கொட்கின் (1)
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் – குறள் 67:3
கொட்பு (1)
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை – குறள் 79:9
கொடிது (1)
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் – குறள் 28:9
கொடிதே (1)
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – குறள் 56:1
கொடிய (1)
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா – குறள் 117:9
கொடியர் (1)
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
கொடியர் என கூறல் நொந்து – குறள் 124:6
கொடியார் (3)
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா – குறள் 117:9
நனவினான் நல்கா கொடியார் கனவினான்
என் எம்மை பீழிப்பது – குறள் 122:7
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:5
கொடியார்க்கு (1)
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடூ தோள் பூசல் உரைத்து – குறள் 124:7
கொடியாரை (1)
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
களை கட்டதனொடு நேர் – குறள் 55:10
கொடிறு (1)
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு – குறள் 108:7
கொடு (1)
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – குறள் 127:4
கொடுத்தல் (1)
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு – குறள் 73:5
கொடுத்தலும் (1)
கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும் – குறள் 53:5
கொடுத்து (1)
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல் – குறள் 93:5
கொடுத்தும் (3)
குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல் – குறள் 71:3
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – குறள் 80:4
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
மாணாத செய்வான் பகை – குறள் 87:7
கொடுப்பது (1)
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும் – குறள் 17:6
கொடுப்பதூஉம் (1)
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல் – குறள் 101:5
கொடும் (1)
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல-மன் இவள் கண் – குறள் 109:6
கொடுமை (1)
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:5
கொடுமையின் (1)
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா – குறள் 117:9
கொடை (1)
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள் 39:10
கொடையான் (1)
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மா நிலத்து இல் – குறள் 53:6
கொண்கன் (3)
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு – குறள் 119:6
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
பைதல் நோய் எல்லாம் கெட – குறள் 127:6
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – குறள் 129:5
கொண்கனை (2)
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள் 127:5
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை
காணாது அமையல கண் – குறள் 129:3
கொண்ட (3)
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும்
பின் பயக்கும் நல்-பாலவை – குறள் 66:9
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள் 75:5
ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
தானை கொண்ட அன்னது உடைத்து – குறள் 109:2
கொண்டவன் (1)
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள் 31:7
கொண்டனள் (1)
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள் – குறள் 132:5
கொண்டார் (4)
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் – குறள் 26:3
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து – குறள் 119:3
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளா-கடை – குறள் 120:5
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள் 121:5
கொண்டான் (2)
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1
தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள் 6:6
கொண்டு (7)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து – குறள் 61:3
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – குறள் 78:5
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
ஊதியம் போகவிடல் – குறள் 84:1
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
தகைமை-கண் தங்கிற்று உலகு – குறள் 88:4
உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
கள் காதல் கொண்டு ஒழுகுவார் – குறள் 93:1
ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – குறள் 98:4
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களை பாம்பு கொண்டு அற்று – குறள் 115:6
கொம்பர் (1)
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – குறள் 48:6
கொல் (1)
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு – குறள் 74:5
கொல்க (1)
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து – குறள் 88:9
கொல்ல (1)
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்ல பயன்படும் கீழ் – குறள் 108:8
கொல்லா (1)
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு – குறள் 99:4
கொல்லாது (1)
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – குறள் 26:6
கொல்லாமை (6)
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அ ஊன் தினல் – குறள் 26:4
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
பிற வினை எல்லாம் தரும் – குறள் 33:1
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சார பொய்யாமை நன்று – குறள் 33:3
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி – குறள் 33:4
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை – குறள் 33:5
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – குறள் 33:6
கொல்லான் (1)
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் – குறள் 26:10
கொல்லி (1)
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
ஏம புணையை சுடும் – குறள் 31:6
கொல்லும் (5)
நகையும் உவகையும் கொல்லும் சினத்தில் தீய
பகையும் உளவோ பிற – குறள் 31:4
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவா-கால்
தன்னையே கொல்லும் சினம் – குறள் 31:5
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு – குறள் 54:2
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து – குறள் 88:9
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை – குறள் 123:8
கொலை (4)
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை – குறள் 33:5
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
புன்மை தெரிவார் அகத்து – குறள் 33:9
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – குறள் 56:1
காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
ஏதிலர் போல வரும் – குறள் 123:4
கொலை_களத்து (1)
காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
ஏதிலர் போல வரும் – குறள் 123:4
கொலையின் (1)
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
களை கட்டதனொடு நேர் – குறள் 55:10
கொழுநன் (1)
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை – குறள் 6:5
கொள் (1)
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் – குறள் 123:3
கொள்க (2)
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு – குறள் 17:1
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள் 88:5
கொள்கலம்-கொல்லோ (1)
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
குற்றம் மறைப்பான் உடம்பு – குறள் 103:9
கொள்கை (1)
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை – குறள் 102:9
கொள்கையர் (1)
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும் – குறள் 90:9
கொள்பவன் (1)
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்
பல்லார் பகை கொள்பவன் – குறள் 88:3
கொள்வர் (3)
தினை துணை நன்றி செயினும் பனை துணையா
கொள்வர் பயன் தெரிவார் – குறள் 11:4
தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா
கொள்வர் பழி நாணுவார் – குறள் 44:3
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
கொள்வர் பெரியார் பணிந்து – குறள் 68:10
கொள்வார் (1)
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர் – குறள் 101:9
கொள்வாரும் (1)
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் – குறள் 82:3
கொள்வாரொடு (1)
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை
உறுப்பு ஓர் அனையரால் வேறு – குறள் 71:4
கொள்வு (1)
புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அ அளவில்
அள்ளி கொள்வு அற்றே பசப்பு – குறள் 119:7
கொள்வேம் (1)
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – குறள் 98:6
கொள்ளற்க (3)
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள் 80:8
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான் – குறள் 83:7
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை – குறள் 88:2
கொள்ளா (1)
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா
காலும் இரவு ஒல்லா சால்பு – குறள் 107:4
கொள்ளா-கடை (1)
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளா-கடை – குறள் 120:5
கொள்ளாத (2)
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு – குறள் 47:10
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
துளக்கு அற்ற காட்சியவர் – குறள் 70:9
கொள்ளாதாம் (1)
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறா கொள்ளாதாம் மேல் – குறள் 63:7
கொள்ளாதான் (1)
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும் – குறள் 80:2
கொள்ளாது (1)
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு – குறள் 47:10
கொள்ளாது-மன்னோ (1)
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியல் ஞாலம்
பேணலர் மேலாயவர் – குறள் 102:6
கொள்ளார் (1)
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று-ஆயினும்
கொள்ளார் அறிவுடையார் – குறள் 41:4
கொள்ளும் (1)
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது – குறள் 110:2
கொள (2)
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொள கிடந்தது இல் – குறள் 59:3
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
தின்னும் அவர் காணல் உற்று – குறள் 125:4
கொளப்பட்டேம் (1)
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
துளக்கு அற்ற காட்சியவர் – குறள் 70:9
கொளல் (24)
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் – குறள் 14:4
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று – குறள் 23:2
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் – குறள் 28:9
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றி கோட்டி கொளல் – குறள் 41:1
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள் 45:1
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணி கொளல் – குறள் 45:2
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை
பேணி தமரா கொளல் – குறள் 45:3
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரை சூழ்ந்து கொளல் – குறள் 45:5
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல் – குறள் 51:4
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணி கொளல் – குறள் 53:10
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல் – குறள் 59:8
செய்வினை செய்வான் செயல் முறை அ வினை
உள் அறிவான் உள்ளம் கொளல் – குறள் 68:7
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டி கொளல் – குறள் 68:9
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தொடு ஒப்ப கொளல் – குறள் 71:2
குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல் – குறள் 71:3
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல் – குறள் 72:4
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல் – குறள் 72:10
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
மிக்காருள் மிக்க கொளல் – குறள் 73:4
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – குறள் 80:4
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80:5
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
மாணாத செய்வான் பகை – குறள் 87:7
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல் – குறள் 93:5
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
துலை அல்லார்-கண்ணும் கொளல் – குறள் 99:6
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள் 103:6
கொளலின் (1)
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல் – குறள் 45:10
கொளற்கு (1)
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள் 75:5
கொளின் (2)
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு – குறள் 63:10
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின் – குறள் 94:9
கொளினும் (1)
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை – குறள் 88:2
கொற்றம் (1)
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொள கிடந்தது இல் – குறள் 59:3
கொன்ற (1)
எ நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள் 11:10
கொன்றது (1)
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு – குறள் 105:8
கொன்றார்க்கும் (1)
எ நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள் 11:10
கொன்றிட (1)
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி – குறள் 103:10
கொன்று (4)
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றும் நன்று உள்ள கெடும் – குறள் 11:9
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள் 33:8
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு – குறள் 54:2
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன் – குறள் 64:8