கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கை 14
கைகளை 1
கைகூடும் 2
கைகூப்பி 1
கைத்து 2
கைதூவேன் 1
கைப்ப 1
கைப்பொருள் 2
கைம்மடங்கின் 1
கைம்மாறா 1
கைம்மாறு 1
கையர் 1
கையால் 1
கையாறா 1
கையிகந்த 1
கையிகந்து 1
கையும் 1
கையுள்ளும் 1
கைவிடல் 2
கைவிடுக 1
கைவிடுவார் 1
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கை (14)
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் – குறள் 7:4
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள் 31:7
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு – குறள் 39:9
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போல கெடும் – குறள் 62:4
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல் – குறள் 73:7
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும் – குறள் 78:4
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 79:8
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கை அல்லதன்-கண் செயல் – குறள் 84:2
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
பேதை வினை மேற்கொளின் – குறள் 84:6
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின் – குறள் 84:8
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து – குறள் 88:9
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல் – குறள் 93:5
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கை செய்து ஊண் மாலையவர் – குறள் 104:5
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு – குறள் 108:7
கைகளை (1)
முயங்கிய கைகளை ஊக்க பசந்தது
பைம் தொடி பேதை நுதல் – குறள் 124:8
கைகூடும் (2)
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – குறள் 27:9
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின் – குறள் 49:4
கைகூப்பி (1)
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் – குறள் 26:10
கைத்து (2)
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார் – குறள் 60:3
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாக செய்வான் வினை – குறள் 76:8
கைதூவேன் (1)
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடு உடையது இல் – குறள் 103:1
கைப்ப (1)
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு – குறள் 39:9
கைப்பொருள் (2)
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள் – குறள் 18:8
ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி – குறள் 38:1
கைம்மடங்கின் (1)
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை – குறள் 104:6
கைம்மாறா (1)
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து – குறள் 119:3
கைம்மாறு (1)
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு – குறள் 22:1
கையர் (1)
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு – குறள் 108:7
கையால் (1)
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் – குறள் 90:4
கையாறா (1)
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறா கொள்ளாதாம் மேல் – குறள் 63:7
கையிகந்த (1)
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் – குறள் 57:7
கையிகந்து (1)
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
உரைக்கல் உருவது ஒன்று உண்டு – குறள் 128:1
கையும் (1)
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் – குறள் 94:5
கையுள்ளும் (1)
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து – குறள் 83:8
கைவிடல் (2)
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல் – குறள் 45:10
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
உற்றால் உறாஅதவர் – குறள் 125:5
கைவிடுக (1)
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் – குறள் 93:8
கைவிடுவார் (1)
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 80:9