Select Page

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கேட்க (4)

கற்றிலன்-ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள் 42:4
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் – குறள் 42:6
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று – குறள் 59:7
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
விட்ட-கால் கேட்க மறை – குறள் 70:5

TOP


கேட்கும் (1)

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார் பெறின் – குறள் 65:8

TOP


கேட்ட (2)

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் – குறள் 7:9
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள் 108:6

TOP


கேட்டல் (1)

மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள் 7:5

TOP


கேட்டார் (1)

கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள் 65:3

TOP


கேட்டால் (1)

பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – குறள் 74:2

TOP


கேட்டினும் (1)

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள் 80:6

TOP


கேட்டு (1)

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – குறள் 111:1

TOP


கேட்பர் (1)

இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலர் – குறள் 61:7

TOP


கேட்பினும் (3)

கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி – குறள் 42:8
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 43:3
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் – குறள் 70:7

TOP


கேடன் (1)

அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
தீவினை செய்யான் எனின் – குறள் 21:10

TOP


கேடு (14)

அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – குறள் 4:2
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது – குறள் 17:5
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – குறள் 21:4
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்று கோள் தக்கது உடைத்து – குறள் 22:10
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள் 31:7
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை – குறள் 40:10
ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலா-கடை – குறள் 48:8
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் – குறள் 70:10
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை – குறள் 74:6
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – குறள் 80:1
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – குறள் 86:8
இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு – குறள் 86:9
எள் பகவு அன்ன சிறுமைத்தே-ஆயினும்
உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள் 89:9

TOP


கேடும் (4)

கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:5
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும் – குறள் 17:9
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் 24:5
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – குறள் 65:2

TOP


கேண்மை (15)

மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள் 11:6
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள் 45:1
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு – குறள் 52:9
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
பின் நீர பேதையார் நட்பு – குறள் 79:2
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும் – குறள் 80:2
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
கேண்மை ஒரீஇ விடல் – குறள் 80:7
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 80:9
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு – குறள் 80:10
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு – குறள் 81:9
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது – குறள் 82:1
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் – குறள் 82:2
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று – குறள் 82:5
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் – குறள் 82:8
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் – குறள் 83:2
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – குறள் 84:9

TOP


கேண்மையவர் (1)

அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர் – குறள் 81:7

TOP


கேண்மையார் (1)

கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு – குறள் 81:9

TOP


கேண்மையும் (1)

பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார் பெறின் – குறள் 71:9

TOP


கேணி (1)

தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்று அனைத்து ஊறும் அறிவு – குறள் 40:6

TOP


கேள் (3)

கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின் – குறள் 81:8
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு – குறள் 89:2
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை – குறள் 123:2

TOP


கேள்வி (1)

செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து – குறள் 42:3

TOP


கேள்வியர் (1)

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது – குறள் 42:9

TOP


கேள்வியவர் (1)

பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர் – குறள் 42:7

TOP


கேள்வியால் (1)

கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி – குறள் 42:8

TOP


கேளா (2)

கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி – குறள் 42:8
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின் – குறள் 81:8

TOP


கேளாதவர் (1)

குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் – குறள் 7:6

TOP


கேளாது (2)

விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின் – குறள் 81:4
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்றுபவர்-கண் இழுக்கு – குறள் 90:3

TOP


கேளாரும் (1)

கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள் 65:3

TOP


கேளிர் (3)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள் 19:7
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள் 62:5
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின் – குறள் 127:7

TOP