Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 1
ஆஅதும் 1
ஆக்கத்தின் 1
ஆக்கத்தை 1
ஆக்கம் 24
ஆக்கமும் 4
ஆக்கலும் 1
ஆக்கி 3
ஆக்கும் 1
ஆக 14
ஆகல் 1
ஆகல்_ஊழ் 1
ஆகா 3
ஆகாத 1
ஆகாதது 1
ஆகாது 2
ஆகார் 1
ஆகி 14
ஆகிய 4
ஆகிய-கண்ணும் 1
ஆகிவிடின் 1
ஆகிவிடும் 2
ஆகு 2
ஆகு_ஆறு 1
ஆகு_ஊழால் 1
ஆகுதல் 2
ஆகுதிர் 1
ஆகும் 21
ஆகுல 1
ஆங்கு 20
ஆங்கே 11
ஆசாரம் 1
ஆசு 1
ஆசையுள் 1
ஆட்சி 2
ஆடல் 1
ஆடவர் 1
ஆடி 1
ஆடிய 1
ஆண்டு 2
ஆண்மை 13
ஆண்மையின் 1
ஆண்மையுள் 1
ஆணி 2
ஆதல் 10
ஆதலும் 1
ஆதலே 1
ஆதி 1
ஆதியாய் 1
ஆம் 46
ஆம்-கால் 2
ஆமால் 2
ஆமை 1
ஆய் 3
ஆய்_தொடியார் 1
ஆய்_இழை 1
ஆய்ந்தவர் 1
ஆய்ந்து 4
ஆய்விடும் 1
ஆய 3
ஆயதூஉம் 1
ஆயம் 3
ஆயன் 1
ஆயார் 1
ஆயிடை 1
ஆயிரம் 1
ஆயின் 15
ஆயும் 3
ஆர் 5
ஆர்க்கும் 1
ஆர்வம் 1
ஆர்வலர் 1
ஆர 2
ஆரா 1
ஆராய்ந்த 2
ஆராய்ந்து 2
ஆராய்வது 1
ஆராய்வான் 1
ஆரார் 1
ஆல் 1
ஆவது 3
ஆவதூஉம் 1
ஆவர் 2
ஆவர்-மன்-கொல் 1
ஆவன்-மன்-கொல் 1
ஆவார் 1
ஆவாரை 1
ஆவிற்கு 1
ஆழ் 1
ஆழி 3
ஆழும் 1
ஆள் 3
ஆள்க 2
ஆள்பவர் 1
ஆள்பவர்க்கு 1
ஆள்பவற்கு 1
ஆள்வார்க்கு 2
ஆள்வாரை 1
ஆள்வினை 1
ஆள்வினையும் 1
ஆள்வினையோடு 1
ஆளப்படும் 1
ஆளும் 2
ஆற்ற 4
ஆற்றல் 8
ஆற்றலதுவே 1
ஆற்றலின் 1
ஆற்றலும் 1
ஆற்றலுள்ளும் 1
ஆற்றறுக்கும் 1
ஆற்றறுப்பார் 1
ஆற்றா 4
ஆற்றா-கடை 1
ஆற்றாதார் 1
ஆற்றாதான் 1
ஆற்றாது 2
ஆற்றார் 3
ஆற்றாரும் 1
ஆற்றான் 3
ஆற்றி 12
ஆற்றில் 1
ஆற்றின் 17
ஆற்றின்-கண் 1
ஆற்றுபவர் 1
ஆற்றுபவர்-கண் 1
ஆற்றுபவர்க்கும் 1
ஆற்றும் 3
ஆற்றும்-கொல் 1
ஆற்றும்-கொல்லோ 1
ஆற்றுமோ 1
ஆற்றுவார் 5
ஆற்றுவார்க்கு 1
ஆற்றுவான் 1
ஆற்றேன் 1
ஆறா 1
ஆறாதே 1
ஆறு 12
ஆறும் 2
ஆன்ற 8
ஆன்றாரொடு 1
ஆன்று 1
ஆனால் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஆ (1)

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் – குறள் 56:10

TOP


ஆஅதும் (1)

ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னுமவர் – குறள் 66:3

TOP


ஆக்கத்தின் (1)

பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை – குறள் 66:7

TOP


ஆக்கத்தை (1)

நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் – குறள் 12:3

TOP


ஆக்கம் (24)

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு – குறள் 4:1
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – குறள் 12:2
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு – குறள் 13:2
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு – குறள் 14:5
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான் – குறள் 17:3
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன் – குறள் 18:7
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள் 19:3
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
ஆவது போல கெடும் – குறள் 29:3
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள் 33:8
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் – குறள் 46:7
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார் – குறள் 47:3
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும் – குறள் 50:2
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும் – குறள் 53:2
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர் – குறள் 57:2
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார் – குறள் 60:3
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை – குறள் 60:4
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் – குறள் 66:1
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் – குறள் 70:2
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல் – குறள் 76:5
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – குறள் 86:8
இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு – குறள் 86:9
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும் – குறள் 91:2

TOP


ஆக்கமும் (4)

அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – குறள் 4:2
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும் – குறள் 17:9
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள – குறள் 53:7
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – குறள் 65:2

TOP


ஆக்கலும் (1)

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் – குறள் 27:4

TOP


ஆக்கி (3)

துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை – குறள் 2:2
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று – குறள் 68:8
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள் 103:6

TOP


ஆக்கும் (1)

முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
இன்மை புகுத்திவிடும் – குறள் 62:6

TOP


ஆக (14)

அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன் சொலன் ஆக பெறின் – குறள் 10:2
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள் 28:8
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்
அற்று ஆக அற்றது இலர் – குறள் 37:5
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
நுண் பொருள் காண்பது அறிவு – குறள் 43:4
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரை சூழ்ந்து கொளல் – குறள் 45:5
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
அதற்கு உரியன் ஆக செயல் – குறள் 52:8
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு – குறள் 52:9
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆக பெறின் – குறள் 67:6
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து – குறள் 88:9
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இ நோய் – குறள் 115:7
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள் 125:2
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள் 125:9
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளி தும்மினீர் என்று – குறள் 132:7

TOP


ஆகல் (1)

பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்ற-கடை – குறள் 38:2

TOP


ஆகல்_ஊழ் (1)

பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்ற-கடை – குறள் 38:2

TOP


ஆகா (3)

பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம – குறள் 38:6
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண் – குறள் 43:1
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை – குறள் 46:6

TOP


ஆகாத (1)

அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
கருவியான் போற்றி செயின் – குறள் 54:7

TOP


ஆகாதது (1)

அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது – குறள் 130:1

TOP


ஆகாது (2)

ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும் – குறள் 13:8
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் – குறள் 62:9

TOP


ஆகார் (1)

யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர் – குறள் 90:5

TOP


ஆகி (14)

மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1
மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் – குறள் 22:7
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் – குறள் 47:1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் – குறள் 53:9
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று – குறள் 59:6
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று – குறள் 59:7
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – குறள் 74:2
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
ஊக்கம் அழிப்பது அரண் – குறள் 75:4
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள் 75:5
அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கணதுவே படை – குறள் 77:4
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள் 100:8
துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து – குறள் 122:8
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் – குறள் 123:7
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை – குறள் 123:8

TOP


ஆகிய (4)

இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் – குறள் 27:10
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
ஆவது போல கெடும் – குறள் 29:3
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
புன்மை தெரிவார் அகத்து – குறள் 33:9
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும் – குறள் 82:7

TOP


ஆகிய-கண்ணும் (1)

எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண் – குறள் 75:10

TOP


ஆகிவிடின் (1)

நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் – குறள் 2:7

TOP


ஆகிவிடும் (2)

ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும் – குறள் 13:8
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – குறள் 48:6

TOP


ஆகு (2)

ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி – குறள் 38:1
ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலா-கடை – குறள் 48:8

TOP


ஆகு_ஆறு (1)

ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலா-கடை – குறள் 48:8

TOP


ஆகு_ஊழால் (1)

ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி – குறள் 38:1

TOP


ஆகுதல் (2)

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு – குறள் 69:3
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது – குறள் 83:3

TOP


ஆகுதிர் (1)

தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132:9

TOP


ஆகும் (21)

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் – குறள் 14:4
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் – குறள் 14:8
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 21:5
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் 24:5
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது – குறள் 27:2
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள் 33:8
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 35:4
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் – குறள் 37:8
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு – குறள் 44:6
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு – குறள் 46:2
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு – குறள் 46:4
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை – குறள் 46:6
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – குறள் 46:9
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர் – குறள் 52:4
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை – குறள் 59:10
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு – குறள் 63:10
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது – குறள் 105:9
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள் 108:9

TOP


ஆகுல (1)

மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற – குறள் 4:4

TOP


ஆங்கு (20)

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – குறள் 5:3
அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இ உலகம் இல்லாகி ஆங்கு – குறள் 25:7
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள் 26:2
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும் – குறள் 27:5
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் – குறள் 28:9
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் – குறள் 48:4
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு – குறள் 54:2
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு – குறள் 54:4
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – குறள் 57:1
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள் 59:4
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆக பெறின் – குறள் 67:6
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும்
படுபயனும் பார்த்து செயல் – குறள் 68:6
ஆங்கு அமைவு எய்திய-கண்ணும் பயம் இன்றே
வேந்து அமைவு இல்லாத நாடு – குறள் 74:10
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
செய்த ஆங்கு அமையா-கடை – குறள் 81:3
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள்
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – குறள் 91:8
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
நன் நிலையர் ஆவர் எனின் – குறள் 119:9
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130:3
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
நீடுவது அன்று-கொல் என்று – குறள் 131:7
தவறு இலர்-ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – குறள் 133:5

TOP


ஆங்கே (11)

கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை – குறள் 2:5
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது – குறள் 2:6
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் – குறள் 18:1
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு – குறள் 18:9
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர் – குறள் 29:9
அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல் – குறள் 34:3
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – குறள் 49:7
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57:6
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 79:8
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் – குறள் 93:8
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது – குறள் 122:5

TOP


ஆசாரம் (1)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவா உண்டேல் உண்டாம் சிறிது – குறள் 108:5

TOP


ஆசு (1)

அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால்
இன்மை அரிதே வெளிறு – குறள் 51:3

TOP


ஆசையுள் (1)

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு – குறள் 27:6

TOP


ஆட்சி (2)

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள் 26:2

TOP


ஆடல் (1)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள் 19:7

TOP


ஆடவர் (1)

ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கு பொறை – குறள் 101:3

TOP


ஆடி (1)

மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள் 28:8

TOP


ஆடிய (1)

அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றி கோட்டி கொளல் – குறள் 41:1

TOP


ஆண்டு (2)

அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – குறள் 110:8
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது – குறள் 128:9

TOP


ஆண்மை (13)

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள் 15:8
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – குறள் 29:7
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை – குறள் 34:1
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வள வரை வல்லை கெடும் – குறள் 48:10
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடி ஆண்மை மாற்ற கெடும் – குறள் 61:9
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போல கெடும் – குறள் 62:4
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் – குறள் 67:3
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு – குறள் 78:3
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – குறள் 91:4
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள் 103:6
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல் – குறள் 114:3
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை – குறள் 114:4

TOP


ஆண்மையின் (1)

பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
பெண்ணே பெருமை உடைத்து – குறள் 91:7

TOP


ஆண்மையுள் (1)

குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடி ஆண்மை மாற்ற கெடும் – குறள் 61:9

TOP


ஆணி (2)

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து – குறள் 104:2

TOP


ஆதல் (10)

மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற – குறள் 4:4
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்று பிற – குறள் 10:5
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர
செய்யாது அமைகலா ஆறு – குறள் 22:9
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது – குறள் 25:8
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் – குறள் 29:5
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது – குறள் 42:9
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல் – குறள் 72:4
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள் 81:2
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள் 100:8
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது – குறள் 130:1

TOP


ஆதலும் (1)

இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு – குறள் 38:4

TOP


ஆதலே (1)

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு – குறள் 60:10

TOP


ஆதி (1)

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு – குறள் 1:1

TOP


ஆதியாய் (1)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – குறள் 55:3

TOP


ஆம் (46)

இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10:1
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன் சொலினதே அறம் – குறள் 10:3
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் – குறள் 12:3
எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து – குறள் 13:5
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா ஆம் இல் இறப்பான்-கண் – குறள் 15:6
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்
வெஃகி வெறிய செயின் – குறள் 18:5
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன் – குறள் 18:7
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை – குறள் 32:7
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 36:1
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
நல்ல ஆம் செல்வம் செயற்கு – குறள் 38:5
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம – குறள் 38:6
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள் 39:10
கற்றிலன்-ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள் 42:4
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை – குறள் 45:9
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் – குறள் 46:3
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும் – குறள் 50:2
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:3
கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள் 65:3
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் – குறள் 67:4
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது – குறள் 69:5
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது – குறள் 69:6
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பது ஆம் தூது – குறள் 69:10
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள் 75:5
ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் – குறள் 77:3
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பு ஆம் கிழமை தரும் – குறள் 79:5
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79:7
பகை நட்பு ஆம் காலம் வரும்-கால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇவிடல் – குறள் 83:10
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள் 85:9
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
நன் நயம் என்னும் செருக்கு – குறள் 86:10
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து – குறள் 87:8
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின் – குறள் 89:1
எள் பகவு அன்ன சிறுமைத்தே-ஆயினும்
உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள் 89:9
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் – குறள் 90:7
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள் 91:10
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீர்_அல்லவர்-கண் படின் – குறள் 98:7
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – குறள் 100:3
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 101:2
பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்க-கால் – குறள் 127:10

TOP


ஆம்-கால் (2)

நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால்
அல்லற்படுவது எவன் – குறள் 38:9

TOP


ஆமால் (2)

யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு – குறள் 40:7

TOP


ஆமை (1)

ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 13:6

TOP


ஆய் (3)

அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் – குறள் 92:1
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – குறள் 109:1
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113:4

TOP


ஆய்_தொடியார் (1)

அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் – குறள் 92:1

TOP


ஆய்_இழை (1)

வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113:4

TOP


ஆய்ந்தவர் (1)

ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள் 67:2

TOP


ஆய்ந்து (4)

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல் – குறள் 52:7
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும் – குறள் 80:2
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80:5

TOP


ஆய்விடும் (1)

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் – குறள் 14:3

TOP


ஆய (3)

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின் – குறள் 1:2
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை – குறள் 2:2
காணும்-கால் காணேன் தவறு ஆய காணா-கால்
காணேன் தவறு அல்லவை – குறள் 129:6

TOP


ஆயதூஉம் (1)

துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை – குறள் 2:2

TOP


ஆயம் (3)

உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய் புறமே படும் – குறள் 94:3
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின் – குறள் 94:9

TOP


ஆயன் (1)

அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை – குறள் 123:8

TOP


ஆயார் (1)

மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள் 11:6

TOP


ஆயிடை (1)

வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் – குறள் 118:9

TOP


ஆயிரம் (1)

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – குறள் 26:9

TOP


ஆயின் (15)

பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – குறள் 5:4
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – குறள் 5:5
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – குறள் 5:9
மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்து-ஆயினும் இல் – குறள் 6:2
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க தீவினை பால் – குறள் 21:9
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும் – குறள் 57:3
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57:6
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண் – குறள் 71:5
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை – குறள் 77:9
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து – குறள் 87:8
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாண தக்கது உடைத்து – குறள் 102:8
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மர_பாவை சென்று வந்த அற்று – குறள் 106:8
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
பலர் காண தோன்றல் மதி – குறள் 112:9
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை – குறள் 116:6
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான்
காதலர் நீங்கலர்-மன் – குறள் 122:6

TOP


ஆயும் (3)

அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல் – குறள் 20:8
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவினவர் – குறள் 92:4
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாய மகளிர் முயக்கு – குறள் 92:8

TOP


ஆர் (5)

அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்பொடு இயைந்த தொடர்பு – குறள் 8:3
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும் – குறள் 13:1
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள் 91:6
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
பலர் அறியார் பாக்கியத்தால் – குறள் 115:1
வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் – குறள் 118:9

TOP


ஆர்க்கும் (1)

பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
தீராமை ஆர்க்கும் கயிறு – குறள் 49:2

TOP


ஆர்வம் (1)

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு – குறள் 8:4

TOP


ஆர்வலர் (1)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் – குறள் 8:1

TOP


ஆர (2)

ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்ற-கடை – குறள் 84:7
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள் 127:5

TOP


ஆரா (1)

ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
பேரா இயற்கை தரும் – குறள் 37:10

TOP


ஆராய்ந்த (2)

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று – குறள் 69:2
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள் 69:4

TOP


ஆராய்ந்து (2)

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று – குறள் 59:6
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 72:1

TOP


ஆராய்வது (1)

வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள் 59:4

TOP


ஆராய்வான் (1)

வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை – குறள் 52:2

TOP


ஆரார் (1)

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார் – குறள் 94:6

TOP


ஆல் (1)

இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10:1

TOP


ஆவது (3)

களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
ஆவது போல கெடும் – குறள் 29:3
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றா-கடை – குறள் 32:5
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர் – குறள் 43:7

TOP


ஆவதூஉம் (1)

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் – குறள் 47:1

TOP


ஆவர் (2)

பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
நன் நிலையர் ஆவர் எனின் – குறள் 119:9
துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து – குறள் 122:8

TOP


ஆவர்-மன்-கொல் (1)

துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர் – குறள் 117:5

TOP


ஆவன்-மன்-கொல் (1)

மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 121:7

TOP


ஆவார் (1)

துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணை அல்வழி – குறள் 130:9

TOP


ஆவாரை (1)

அக பட்டி ஆவாரை காணின் அவரின்
மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் – குறள் 108:4

TOP


ஆவிற்கு (1)

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – குறள் 107:6

TOP


ஆழ் (1)

கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50:10

TOP


ஆழி (3)

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது – குறள் 1:8
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் – குறள் 99:9

TOP


ஆழும் (1)

வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு – குறள் 92:9

TOP


ஆள் (3)

கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50:10
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண் – குறள் 75:6
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி – குறள் 103:10

TOP


ஆள்க (2)

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை – குறள் 25:2
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் – குறள் 59:9

TOP


ஆள்பவர் (1)

நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள் 102:7

TOP


ஆள்பவர்க்கு (1)

நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – குறள் 80:1

TOP


ஆள்பவற்கு (1)

தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள் 39:3

TOP


ஆள்வார்க்கு (2)

மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை – குறள் 25:4
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி – குறள் 25:5

TOP


ஆள்வாரை (1)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் – குறள் 45:7

TOP


ஆள்வினை (1)

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி – குறள் 62:8

TOP


ஆள்வினையும் (1)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி – குறள் 103:2

TOP


ஆள்வினையோடு (1)

வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு – குறள் 64:2

TOP


ஆளப்படும் (1)

நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும் – குறள் 52:1

TOP


ஆளும் (2)

தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் – குறள் 26:1
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 126:2

TOP


ஆற்ற (4)

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் – குறள் 7:4
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள் 37:7
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – குறள் 74:2
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து – குறள் 121:9

TOP


ஆற்றல் (8)

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
இந்திரனே சாலும் கரி – குறள் 3:5
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது – குறள் 11:1
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் – குறள் 23:5
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – குறள் 27:9
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – குறள் 29:7
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை – குறள் 90:1
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை – குறள் 99:5

TOP


ஆற்றலதுவே (1)

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
ஆற்றலதுவே படை – குறள் 77:5

TOP


ஆற்றலின் (1)

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் – குறள் 23:5

TOP


ஆற்றலும் (1)

அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் – குறள் 77:8

TOP


ஆற்றலுள்ளும் (1)

நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றா-கடை – குறள் 47:9

TOP


ஆற்றறுக்கும் (1)

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை – குறள் 82:4

TOP


ஆற்றறுப்பார் (1)

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள் 80:8

TOP


ஆற்றா (4)

பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118:4
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
காம நோய் செய்த என் கண் – குறள் 118:5

TOP


ஆற்றா-கடை (1)

நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றா-கடை – குறள் 47:9

TOP


ஆற்றாதார் (1)

கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் – குறள் 90:4

TOP


ஆற்றாதான் (1)

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று – குறள் 101:7

TOP


ஆற்றாது (2)

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை – குறள் 56:5
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து – குறள் 104:2

TOP


ஆற்றார் (3)

நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள்
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – குறள் 91:8
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள் 100:8

TOP


ஆற்றாரும் (1)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றி செயின் – குறள் 50:3

TOP


ஆற்றான் (3)

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை – குறள் 25:2
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள் 37:7

TOP


ஆற்றி (12)

தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 22:2
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றி செயின் – குறள் 50:3
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று – குறள் 52:5
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு – குறள் 57:8
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை – குறள் 67:9
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி
பற்றியார் வெல்வது அரண் – குறள் 75:8
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
பின் இருந்து வாழ்வார் பலர் – குறள் 116:10
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள் 128:6

TOP


ஆற்றில் (1)

அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய் பெறுவது எவன் – குறள் 5:6

TOP


ஆற்றின் (17)

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள் 4:8
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை – குறள் 5:1
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய் பெறுவது எவன் – குறள் 5:6
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள் 5:8
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்க பெறின் – குறள் 13:3
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 13:6
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 13:10
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
ஏதம் படு பாக்கு அறிந்து – குறள் 17:4
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு – குறள் 24:4
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று – குறள் 30:7
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும் – குறள் 47:8
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி – குறள் 48:7
கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும் – குறள் 53:5
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு – குறள் 72:6
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு – குறள் 73:5
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் – குறள் 98:5

TOP


ஆற்றின்-கண் (1)

அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
பொல்லாத சூழ கெடும் – குறள் 18:6

TOP


ஆற்றுபவர் (1)

துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர் – குறள் 117:5

TOP


ஆற்றுபவர்-கண் (1)

கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்றுபவர்-கண் இழுக்கு – குறள் 90:3

TOP


ஆற்றுபவர்க்கும் (1)

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்
போற்றுபவர்க்கும் பொருள் – குறள் 75:1

TOP


ஆற்றும் (3)

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல் – குறள் 7:7
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் – குறள் 7:10
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு – குறள் 84:5

TOP


ஆற்றும்-கொல் (1)

அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன் சொல் உரைப்பான் பொறை – குறள் 19:9

TOP


ஆற்றும்-கொல்லோ (1)

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு – குறள் 22:1

TOP


ஆற்றுமோ (1)

தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள் 116:9

TOP


ஆற்றுவார் (5)

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் – குறள் 23:5
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை – குறள் 90:1
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் – குறள் 98:5
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை – குறள் 99:5
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை – குறள் 103:7

TOP


ஆற்றுவார்க்கு (1)

கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் – குறள் 90:4

TOP


ஆற்றுவான் (1)

கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 13:10

TOP


ஆற்றேன் (1)

கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் – குறள் 117:2

TOP


ஆறா (1)

ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு – குறள் 17:1

TOP


ஆறாதே (1)

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு – குறள் 13:9

TOP


ஆறு (12)

அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை – குறள் 4:7
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – குறள் 5:3
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர
செய்யாது அமைகலா ஆறு – குறள் 22:9
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி – குறள் 33:4
வகை அற சூழாது எழுதல் பகைவரை
பாத்தி படுப்பது ஓர் ஆறு – குறள் 47:5
ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலா-கடை – குறள் 48:8
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள் 67:2
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79:7
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள் 85:9
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – குறள் 94:2
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள் 95:3

TOP


ஆறும் (2)

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு – குறள் 13:9
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு – குறள் 39:1

TOP


ஆன்ற (8)

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள் 15:8
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் – குறள் 42:6
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு – குறள் 69:1
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து – குறள் 70:4
அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான்
என் பரியும் ஏதிலான் துப்பு – குறள் 87:2
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
பெண் ஏவல் செய்வார்-கண் இல் – குறள் 91:9
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:2
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி – குறள் 103:2

TOP


ஆன்றாரொடு (1)

செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து – குறள் 42:3

TOP


ஆன்று (1)

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – குறள் 64:5

TOP


ஆனால் (1)

இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணா-கடை – குறள் 6:3

TOP