Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொங்கர் 2
பொங்கு 4
பொங்கும் 1
பொதி 1
பொதிந்துகொண்டாள் 1
பொதியிலில் 1
பொதியிலின் 1
பொதியிலும் 1
பொதும்பரில் 1
பொய் 2
பொய்கை 6
பொய்த்து 1
பொய்தலும் 1
பொய்யாது 1
பொய்யும் 1
பொய்யை 1
பொரு 6
பொருகின்ற 1
பொருட்கு 1
பொருட்டாக 1
பொருட்டால் 6
பொருட்டு 3
பொருட்டே 2
பொருத 2
பொருது 1
பொருந்தத்து 1
பொருந்தி 1
பொருந்திய 1
பொருப்பா 1
பொருப்பில் 1
பொருப்பு 2
பொரும் 2
பொருள் 5
பொருள்-வயின் 1
பொருளே 1
பொருளை 1
பொல்லாத 1
பொல்லாது 1
பொலம் 4
பொலம்_கொடியே 1
பொலி 1
பொலிகின்ற 1
பொலியும் 1
பொழி 5
பொழிகின்ற 1
பொழிய 1
பொழியாத 1
பொழியும் 1
பொழில் 3
பொழில்-வாய் 1
பொழில்காள் 1
பொழிலும் 1
பொழிற்கே 2
பொழுது 4
பொற்பல்லள் 1
பொற்பினுக்கு 1
பொறாமையில் 1
பொறி 1
பொறுத்தருளே 1
பொறுத்தனளே 1
பொறுத்தாள் 1
பொறுப்பர் 1
பொறை 3
பொறையும் 1
பொன் 40
பொன்னினையே 1
பொன்னும் 1
பொன்னுற்ற 1
பொன்னூடு 1
பொன்னே 3
பொன்னை 3
பொன்னையும் 1
பொன்னொடு 1

பொங்கர் (2)

புறம் கூர் இருள் கங்குல் போன்று அகம் நண்பகல் போன்ற பொங்கர்
நிறம் கூர் படை_கண்ணி நின்றனளே நிழலை சுளித்து – தஞ்-வா-கோவை:1 8 57/1,2
நுண் தாது அணி பொங்கர் நீழலின் கீழ் நுடங்கு இடையார் – தஞ்-வா-கோவை:1 9 76/3

மேல்

பொங்கு (4)

பொறை கொண்ட தாமரை போது அன்ன கொங்கையும் பொங்கு அரி சேர் – தஞ்-வா-கோவை:1 8 45/1
புயலேறு எதிர்-தொறும் பொங்கு உளை மீதெழ போதகம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 169/1
புரமான வல் அழல் பொங்கு வெம் கானில் பொருந்திய கூர் – தஞ்-வா-கோவை:2 21 317/2
கொத்து அலர் ஓதி அம் கொம்பர்_அன்னாள் பொங்கு கொங்கை விம்ம – தஞ்-வா-கோவை:3 33 425/1

மேல்

பொங்கும் (1)

பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் – தஞ்-வா-கோவை:2 22 336/2

மேல்

பொதி (1)

பொதி தேன் நுகர்ந்து அகலும் கழி கானல் புலம்பர் வந்தே – தஞ்-வா-கோவை:2 20 290/4

மேல்

பொதிந்துகொண்டாள் (1)

பொன் போல் இறுக பொதிந்துகொண்டாள் அன்னை பூவை என் மேல் – தஞ்-வா-கோவை:2 20 295/3

மேல்

பொதியிலில் (1)

புரக்கின்ற கோன் தஞ்சைவாணன் பொதியிலில் பொய்த்து என்னை நீ – தஞ்-வா-கோவை:1 10 121/3

மேல்

பொதியிலின் (1)

பொலி தென் பொதியிலின் மேல் சந்தனாடவி பூம்_தழையே – தஞ்-வா-கோவை:1 10 115/4

மேல்

பொதியிலும் (1)

மன்றும் பொதியிலும் மா மயில் சேர் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 7 34/1

மேல்

பொதும்பரில் (1)

வேறு ஓர் பொதும்பரில் போய் விளையாடுக வேல் படையான் – தஞ்-வா-கோவை:1 16 236/2

மேல்

பொய் (2)

கை வாளியும் கொண்டு போன பொய் மானினும் கள்ளத்ததே – தஞ்-வா-கோவை:1 9 79/4
பொய் போல் இடை நின் விழி போல் குவளை அம் போது இவை நின் – தஞ்-வா-கோவை:1 10 137/1

மேல்

பொய்கை (6)

வயலே தடம் பொய்கை சூழ் தஞ்சைவாணன் மலையத்திலே – தஞ்-வா-கோவை:1 1 1/4
பொன் நாண் அணி கொங்கை போல வண்டீர் உங்கள் பொய்கை உண்டோ – தஞ்-வா-கோவை:1 3 21/3
தவளை குதிக்கும் தடம் பொய்கை சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 9 67/3
நந்தா வன பொய்கை நான் கொய்குவேன் குழல் நாணும் கங்குல் – தஞ்-வா-கோவை:1 13 176/2
சேரி அம் பொய்கை துறை அலர் வாட நின் செவ்வி மணம் – தஞ்-வா-கோவை:2 19 285/3
கான் கண்ட மெய் குளிர பொய்கை சூழ் தஞ்சை காண்பர்களே – தஞ்-வா-கோவை:2 22 347/4

மேல்

பொய்த்து (1)

புரக்கின்ற கோன் தஞ்சைவாணன் பொதியிலில் பொய்த்து என்னை நீ – தஞ்-வா-கோவை:1 10 121/3

மேல்

பொய்தலும் (1)

பொன் இயல் ஊசலும் பொய்தலும் ஆடி எப்போதும் நல் நீர் – தஞ்-வா-கோவை:1 10 84/1

மேல்

பொய்யாது (1)

பொய்யாது அவர்-தம் குறி பிழையார் அவர் பூண்ட அன்பு – தஞ்-வா-கோவை:1 14 196/1

மேல்

பொய்யும் (1)

பொய்யும் தொலைந்தன பூம் தழை போல் அரி போர்த்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 10 124/2

மேல்

பொய்யை (1)

பூண் ஆகம் மெல்_இயல் புல்லினையாக அ பொய்யை மெய்யா – தஞ்-வா-கோவை:1 16 246/2

மேல்

பொரு (6)

புயலே சுமந்து பிறையே அணிந்து பொரு விலுடன் – தஞ்-வா-கோவை:1 1 1/1
பொரு மணி வெண் திரை பைம் கடல் வங்கம் பொருந்தி முன்பு – தஞ்-வா-கோவை:1 9 69/1
கொடுவரி கேழல் குழாம் பொரு கொல்லையும் குஞ்சரம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 165/2
அரியும் கரியும் பொரு நெறிக்கு ஓர் துணையாய் அவர் மேல் – தஞ்-வா-கோவை:1 15 220/1
பொரு பால் மதியினை போல் மருப்பு யானையில் பொன்னொடு இன்பம் – தஞ்-வா-கோவை:1 15 226/1
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே – தஞ்-வா-கோவை:2 22 341/4

மேல்

பொருகின்ற (1)

பொருகின்ற செங்கயல் போல் விழியாய் பண்டு போய நின் கை – தஞ்-வா-கோவை:1 18 276/1

மேல்

பொருட்கு (1)

நினையீர் பொருட்கு பிரிந்து அயல் நாட்டுழி நின்றுழி வேள்_அனையீர் – தஞ்-வா-கோவை:1 18 278/1

மேல்

பொருட்டாக (1)

மான் உற்ற பார்வை மயில் பொருட்டாக வழி தெரியா – தஞ்-வா-கோவை:1 14 193/2

மேல்

பொருட்டால் (6)

நேரே இவள் பொருட்டால் என்று தோன்றும் என் நெஞ்சினுக்கே – தஞ்-வா-கோவை:1 9 75/4
வை வேல் அமர் வென்ற வாணன் தென்மாறை மயில் பொருட்டால்
நைவேனை அஞ்சல் என்னாது இன்னவாறு நகைக்கின்றதே – தஞ்-வா-கோவை:1 10 113/3,4
உழை விளையாடும் உயர் சிலம்பா இன்னும் உன் பொருட்டால்
மழை விளையாடும் மதில் தஞ்சைவாணன் மலயத்திலே – தஞ்-வா-கோவை:1 16 238/3,4
அஞ்சாது செம் கை அயில் விளக்கா அணங்கின் பொருட்டால்
மஞ்சு ஆர் மதில் தஞ்சைவாணன் வெற்பா வரல் வன் சொல் அன்னை – தஞ்-வா-கோவை:1 16 244/2,3
இல்லத்து உறையும் இவள் பொருட்டால் நுமக்கு யானும் ஒன்று – தஞ்-வா-கோவை:1 17 251/1
வவ்வி திகழ் புகழ் வாணன் தென்மாறை மணம் பொருட்டால்
நவ்வி தொகையின் நாணும் மென் நோக்கி நறை புகையா – தஞ்-வா-கோவை:2 19 287/2,3

மேல்

பொருட்டு (3)

பொன் தேரின் வந்து புணர்ந்து சென்றார்-தம் பொருட்டு நம்மை – தஞ்-வா-கோவை:1 10 127/2
புரவி புனை நெடும் தேர் அண்ணலே நின் பொருட்டு அணங்கை – தஞ்-வா-கோவை:2 19 286/3
தெரியோர் பொருட்டு அன்று தேர்வு இன்றி ஊடல் செயிர்த்தவர்க்கு – தஞ்-வா-கோவை:3 28 397/1

மேல்

பொருட்டே (2)

இரவும் குறி-வயின் நீ வரல் வேண்டும் இவள் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 239/4
நீர் ஏற்ற செங்கழுநீர் மலர் போன்றது நின் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 247/4

மேல்

பொருத (2)

புண் அலை நீர் வல பாகமும் தோய பொருத அன்றே – தஞ்-வா-கோவை:2 20 302/4
கயலை பொருத கண்ணாள் மேலும் வாழ்விக்கும் கட்டளையே – தஞ்-வா-கோவை:2 22 333/4

மேல்

பொருது (1)

பொருது அலைக்கும் குழலாள் அழ நீ கண்டு போய பின்னே – தஞ்-வா-கோவை:1 17 257/4

மேல்

பொருந்தத்து (1)

தலம் காவலன் தஞ்சைவாணன் முந்நீர் பொரும் தண் பொருந்தத்து
இலங்கு ஆர வல் வட கொங்கை வெற்பால் இணை நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 8 54/1,2

மேல்

பொருந்தி (1)

பொரு மணி வெண் திரை பைம் கடல் வங்கம் பொருந்தி முன்பு – தஞ்-வா-கோவை:1 9 69/1

மேல்

பொருந்திய (1)

புரமான வல் அழல் பொங்கு வெம் கானில் பொருந்திய கூர் – தஞ்-வா-கோவை:2 21 317/2

மேல்

பொருப்பா (1)

பொருப்பா மொழியப்பெறார் எம்மனோர் இவை போல்வனவே – தஞ்-வா-கோவை:1 10 88/4

மேல்

பொருப்பில் (1)

பூமாது கேள்வன் புகழ் தஞ்சைவாணன் பொருப்பில் இனி – தஞ்-வா-கோவை:2 24 355/3

மேல்

பொருப்பு (2)

போலும் சுரம் இனி போக ஒண்ணாது பொருப்பு அடைந்தான் – தஞ்-வா-கோவை:2 21 320/2
புரையும் மென் கொங்கை பிரிந்திருந்தீர் முன் பொருப்பு எடுத்தே – தஞ்-வா-கோவை:3 27 371/2

மேல்

பொரும் (2)

தலம் காவலன் தஞ்சைவாணன் முந்நீர் பொரும் தண் பொருந்தத்து – தஞ்-வா-கோவை:1 8 54/1
வல்லும் பொரும் கொங்கை மங்கை நல்லாய் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 22 330/2

மேல்

பொருள் (5)

சூழ்ந்தார் செல தொங்கல் சூழ் குழலாய் சொல் பொருள் படைத்து – தஞ்-வா-கோவை:1 11 142/2
வேண்டும் பொருளை தரும் பொருள் போய் முற்றி மீண்ட என் தேர் – தஞ்-வா-கோவை:1 18 275/1
தொலைவு இலை ஆகிய பல் பொருள் காதலர் சூது அமர் நின் – தஞ்-வா-கோவை:2 19 281/1
நம் கண் இரங்க அரும் பொருள் தேட நடந்த அன்பர் – தஞ்-வா-கோவை:3 33 421/1
ஆர்த்தது கேட்டு வந்தார் பொருள் தேட அகன்றவரே – தஞ்-வா-கோவை:3 33 422/4

மேல்

பொருள்-வயின் (1)

நெஞ்சை பொருள்-வயின் வைத்து நம் கேள்வர் நல் நீள் மதியின் – தஞ்-வா-கோவை:3 33 420/3

மேல்

பொருளே (1)

பொருளே என சுரம் போதும் அப்போது புகழ் வெயிலான் – தஞ்-வா-கோவை:2 21 307/2

மேல்

பொருளை (1)

வேண்டும் பொருளை தரும் பொருள் போய் முற்றி மீண்ட என் தேர் – தஞ்-வா-கோவை:1 18 275/1

மேல்

பொல்லாத (1)

பொல்லாத சேவல் கடும் குரல் ஆர்த்து புவி புரக்கும் – தஞ்-வா-கோவை:1 15 215/2

மேல்

பொல்லாது (1)

பொல்லாது இருண்டது போதும் மற்று யாங்களும் போதும் இங்கு – தஞ்-வா-கோவை:1 10 96/3

மேல்

பொலம் (4)

பொலம் காமவல்லி கடைந்த அப்போது புடைபெயர்ந்து – தஞ்-வா-கோவை:1 8 54/3
புண் தலை வேலினும் கண் சிவப்பு ஆர பொலம் சுனை தேன் – தஞ்-வா-கோவை:1 9 63/3
மலங்கும் பொலம் தொடி சோர மெய் சோரும் மறம் செய் கொலை – தஞ்-வா-கோவை:1 16 243/2
பொறுத்தாள் அழல் சுரம்-தன்னை அன்னாய் நின் பொலம்_கொடியே – தஞ்-வா-கோவை:2 22 324/4

மேல்

பொலம்_கொடியே (1)

பொறுத்தாள் அழல் சுரம்-தன்னை அன்னாய் நின் பொலம்_கொடியே – தஞ்-வா-கோவை:2 22 324/4

மேல்

பொலி (1)

பொலி தென் பொதியிலின் மேல் சந்தனாடவி பூம்_தழையே – தஞ்-வா-கோவை:1 10 115/4

மேல்

பொலிகின்ற (1)

பொலிகின்ற கஞ்சுகம் போர்த்திருந்தேனை புரந்தருளார் – தஞ்-வா-கோவை:3 31 415/3

மேல்

பொலியும் (1)

நிழல் கண்ட சந்திரவாணன் தென்மாறை நிழல் பொலியும்
கழல் கண்டது அன்ன கதிர் முத்த மாளிகை காரிகை நின் – தஞ்-வா-கோவை:1 8 60/2,3

மேல்

பொழி (5)

மாலாய் மதம் பொழி வாரண வாணன் தென்மாறை_அன்னார் – தஞ்-வா-கோவை:1 8 43/1
வெம் கோல் மழை பொழி வானவர் போர் வென்ற மீனவர்-தம் – தஞ்-வா-கோவை:1 8 55/1
பொழி தோல் திரள் உந்தி வந்த செம் நீர் உந்தி பொற்பினுக்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 301/2
பொழி நான மன்றல் அம் பூம் குழல் நீங்கள் புணர்ந்து செல்லும் – தஞ்-வா-கோவை:2 21 315/1
கைத்தலம் மான இனி பொழி வாழிய கார் முகிலே – தஞ்-வா-கோவை:3 33 425/4

மேல்

பொழிகின்ற (1)

முற்றும் பொழிகின்ற முன்பனி நாள் முகிலும் கடலும் – தஞ்-வா-கோவை:3 31 416/2

மேல்

பொழிய (1)

உகவும் துறந்தவர் உன்னலரால் உறை கார் பொழிய
மகவும் துணையும் கலை தழுவும் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 18 268/2,3

மேல்

பொழியாத (1)

பொழியாத வெம் சுரம் போகுவல் யான் என்று போம் குறிப்பால் – தஞ்-வா-கோவை:2 22 326/3

மேல்

பொழியும் (1)

பண்பான மன்னர் படர்தலுற்றார் பனி நீர் பொழியும்
தண் பானல் அம் தொடை அம் புய வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 32 417/2,3

மேல்

பொழில் (3)

முகில் ஏந்து பூம் பொழில் சூழ் தஞ்சைவாணன் முந்நீர் துறை-வாய் – தஞ்-வா-கோவை:1 5 27/3
சாந்தமும் யாது தடம் பொழில் யாது தரணியின் மேல் – தஞ்-வா-கோவை:1 13 166/2
பொழில் நீழல் உம்பர் அமுது_அனையாரை புணர்ந்தனமே – தஞ்-வா-கோவை:1 13 180/4

மேல்

பொழில்-வாய் (1)

வேரி தடம் பொழில்-வாய் விளையாடும்-கொல் மேவி நின்றே – தஞ்-வா-கோவை:1 8 51/4

மேல்

பொழில்காள் (1)

போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – தஞ்-வா-கோவை:1 15 221/2

மேல்

பொழிலும் (1)

விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும்
தடம்பட்ட வாவியும் சூழ் தஞ்சைவாணன் தமிழ்க்கிரி நாம் – தஞ்-வா-கோவை:1 2 10/2,3

மேல்

பொழிற்கே (2)

இன்னியமாக இள மயில் ஆடும் இரும் பொழிற்கே – தஞ்-வா-கோவை:1 3 22/4
கொந்து சுற்றும் குழலாய் செல்லல் நீ அ குளிர் பொழிற்கே – தஞ்-வா-கோவை:1 12 157/4

மேல்

பொழுது (4)

கரை ஊர் பொழுது இளங்காளையர் தாம் கிழி கை பிடித்து – தஞ்-வா-கோவை:1 10 102/2
பிரியும் பொழுது எல்லி-வாய் வினையேன் மனம் பின் செல்வதே – தஞ்-வா-கோவை:1 15 220/4
காலை பொழுது கடும் பரி தேர் பண்ணி கானகம் போய் – தஞ்-வா-கோவை:1 18 262/1
மாலை பொழுது வருகுவல் யான் தஞ்சைவாணன் நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 18 262/2

மேல்

பொற்பல்லள் (1)

பூண தருகினும் பொற்பல்லள் ஆகுதல் கற்பு அல்லவால் – தஞ்-வா-கோவை:1 11 148/3

மேல்

பொற்பினுக்கு (1)

பொழி தோல் திரள் உந்தி வந்த செம் நீர் உந்தி பொற்பினுக்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 301/2

மேல்

பொறாமையில் (1)

புனை அலர் ஏதிலர் காதலர் தாயர் பொறாமையில் போய் – தஞ்-வா-கோவை:2 23 351/1

மேல்

பொறி (1)

பொறி ஆர் உயிர் வெம் பணி மா மணியும் புதை இருள் கூர் – தஞ்-வா-கோவை:1 15 213/3

மேல்

பொறுத்தருளே (1)

போற்றாது நின்று அயலேன் சொன்ன தீங்கு பொறுத்தருளே – தஞ்-வா-கோவை:1 10 126/4

மேல்

பொறுத்தனளே (1)

பூ ஆர் சடை முடி மேல் வைத்த போதும் பொறுத்தனளே – தஞ்-வா-கோவை:3 28 401/4

மேல்

பொறுத்தாள் (1)

பொறுத்தாள் அழல் சுரம்-தன்னை அன்னாய் நின் பொலம்_கொடியே – தஞ்-வா-கோவை:2 22 324/4

மேல்

பொறுப்பர் (1)

பெரியோர் பொறுப்பர் அன்றே சிறியோர்கள் பிழைத்தனவே – தஞ்-வா-கோவை:3 28 397/4

மேல்

பொறை (3)

பொறை ஆர் தவம்செய்திலேம் நெஞ்சமே என் புகல்வதுவே – தஞ்-வா-கோவை:1 2 14/4
பொறை கொண்ட தாமரை போது அன்ன கொங்கையும் பொங்கு அரி சேர் – தஞ்-வா-கோவை:1 8 45/1
பூம் கனம் ஆர் குழலார் அலர் மாலை பொறை சுமந்தே – தஞ்-வா-கோவை:3 27 369/4

மேல்

பொறையும் (1)

அறையும் பொறையும் மணந்த வெம் கானத்து அணங்கை இல் வைத்து – தஞ்-வா-கோவை:1 17 250/1

மேல்

பொன் (40)

கலை நாடு தஞ்சையர் காவலன் மால் வரை கன்னி பொன் நாண் – தஞ்-வா-கோவை:1 2 18/2
பொன் நாண் அணி கொங்கை போல வண்டீர் உங்கள் பொய்கை உண்டோ – தஞ்-வா-கோவை:1 3 21/3
மணி பொன் சொரியும் கை வாணன் தென்மாறை மருவினர் போல் – தஞ்-வா-கோவை:1 3 25/1
தணி பொன் சொரியும் தட முலையாய் உயர் சந்தம் உந்தி – தஞ்-வா-கோவை:1 3 25/2
அணி பொன் சொரியும் அருவி எம் சாரலகத்து அலர் தேம் – தஞ்-வா-கோவை:1 3 25/3
கணி பொன் சொரியும் நின் சாரல் மென் காந்தள கையகத்தே – தஞ்-வா-கோவை:1 3 25/4
யார் உம்பர்-தம் பதம் என் போல எய்தினர் இம்பர் அம் பொன்
வாரும் துறை வையை சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 59/1,2
பொன் காதல் கொண்டு தொழும் சிலம்பு ஆர் அடி பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 61/4
மேவும் செய்குன்றமும் சோலையுமாக பொன் வெற்பும் விண்ணோர் – தஞ்-வா-கோவை:1 10 81/3
பொன் இயல் ஊசலும் பொய்தலும் ஆடி எப்போதும் நல் நீர் – தஞ்-வா-கோவை:1 10 84/1
தாள் இணை மாந்தளிர் அல்குல் பொன் தேர் இடை சங்கை கொங்கை – தஞ்-வா-கோவை:1 10 85/1
படையே நயனம் படைத்த பொன் பாவை படியெடுக்க – தஞ்-வா-கோவை:1 10 104/3
அப்போது அடைந்த அரும் துயர் நீங்கி அரும்பிய பொன்
செப்பு ஓது இளமுலையாள் நகை வாள் முக திங்களை கண்டு – தஞ்-வா-கோவை:1 10 116/2,3
பொன் தேரின் வந்து புணர்ந்து சென்றார்-தம் பொருட்டு நம்மை – தஞ்-வா-கோவை:1 10 127/2
செம் சூட்டு இளகு பொன் போல் தினை மூரலும் தெள் அமுதே – தஞ்-வா-கோவை:1 10 141/4
கூனல் அம் சாய் பொன் குரலும் கொய்தார் எமர் கொற்றவ யாம் – தஞ்-வா-கோவை:1 11 153/2
கொலை மா கரி இரை தேர்ந்து உழலாநிற்கும் கொற்றவ பொன்
கலை மான் உறை பதி நீ வருமாறு என்-கொல் கங்குலிலே – தஞ்-வா-கோவை:1 13 164/3,4
செல்லை அம் பொன் பளிங்கின் தலம் பாதம் சிவப்பிக்கவே – தஞ்-வா-கோவை:1 13 183/4
மண்-பால் புகழ் வைத்த வாணன் தென்மாறை நம் மன்னர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 14 206/2
பொன் பதி தாள் வளை வாய் செய்ய சூட்டு வன் புள் இனமே – தஞ்-வா-கோவை:1 14 208/4
கரையில் படரும் கடல் துறை நாட கயல் கொடி பொன்
வரையில் திகழ்வித்த வாணன் தென்மாறை மலர்ந்த மௌவல் – தஞ்-வா-கோவை:1 16 230/2,3
கன நாண் அணிந்து பொன் கச்சு அற வீசி கதித்து எழுந்த – தஞ்-வா-கோவை:1 16 235/2
குல வேய் நிகர் பொன் தொடி நெடும் தோளி குறுகி வர – தஞ்-வா-கோவை:1 17 252/2
பாடுகம் வா பொன் பசலை தந்தார் திறம் பாங்கின் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 17 255/2
பொன் மா மணியும் பிரிந்திருந்தாரும் புலம்ப மன்றில் – தஞ்-வா-கோவை:1 18 274/3
குருகு இன்று அணித்து இறைகொள்வது காண்க நம் கொண்கர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 18 276/2
போல் வண் தமிழ் மன்னர் போற்ற விளங்குக பொன் கொழிக்கும் – தஞ்-வா-கோவை:1 18 277/2
உலைவு இலை ஆகுக பொன் வண்ணன் மாறுக ஒள்_நுதலே – தஞ்-வா-கோவை:2 19 281/4
பொன் போல் இறுக பொதிந்துகொண்டாள் அன்னை பூவை என் மேல் – தஞ்-வா-கோவை:2 20 295/3
நலம் புனை ஆயமும் நீயும் நற்றாயொடு நானும் நல் பொன்
சிலம்பு உயர் சோலையும் சிற்றிலும் பேரிலும் தெண் திரை மேல் – தஞ்-வா-கோவை:2 22 323/1,2
இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன்
வனை கழலானும் வருவது எல்லாம் சென்ற வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 23 351/2,3
பொன் மாதிரத்து புலன் உணர்வீர் சுரம் போய் வருவோன் – தஞ்-வா-கோவை:2 23 354/2
நீ புரந்தே தந்த மாதை அங்கு யாம் வரை நீர்மை பொன் செய் – தஞ்-வா-கோவை:2 24 358/3
பொன்னை புணர்ந்து நும் கேள் முன்னர் நீ பொன் புனைந்ததுவே – தஞ்-வா-கோவை:2 24 359/4
துவலை படை கடல் தோன்றல் பொன் தேர் வங்கம் சூழ்கின்றதே – தஞ்-வா-கோவை:2 25 363/4
ஏ மான் என அஞ்சும் என் காத்தலின் அவ் இரவி பொன் தேர் – தஞ்-வா-கோவை:2 25 365/1
பொன் மேல் அடுத்தன போல் சுணங்கு ஈன்ற புணர் முலையே – தஞ்-வா-கோவை:3 27 367/4
வினையகத்து அல்குதல் செல்லுவரேனும் அவ் வேந்தர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:3 27 376/3
பொன் போல் நிறம் கொண்டு இரவும் கண்ணீரும் புலர்வது பார்த்து – தஞ்-வா-கோவை:3 28 378/3
வடி ஒன்று கூர் இலை வேல் வல்ல வாணன் தென்மாறையில் பொன்
தொடி ஒன்று தோள் மடவார் சேரி-வாய் வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:3 28 383/3,4

மேல்

பொன்னினையே (1)

புறம் தாழ கரும் குழல் வெண் முத்த வாள் நகை பொன்னினையே – தஞ்-வா-கோவை:1 17 249/4

மேல்

பொன்னும் (1)

குன்றாகிய பொன்னும் வேழ குழாமும் கொடை புகழ்ந்து – தஞ்-வா-கோவை:1 11 149/1

மேல்

பொன்னுற்ற (1)

பொன்னுற்ற கொங்கையும் முத்துற்ற கண்ணும் இப்போது கண்டேன் – தஞ்-வா-கோவை:2 20 297/1

மேல்

பொன்னூடு (1)

பொன்னூடு செல்லும் புகழ் மணி போல் நின் புடை அகலா – தஞ்-வா-கோவை:1 8 62/3

மேல்

பொன்னே (3)

பொன்னே எதிர்கொள போதுகம் வா புவி ஏழினுக்கும் – தஞ்-வா-கோவை:1 13 175/2
நொந்தனம் கால் என்று நோவல் பொன்னே ஒரு நோயும் இன்றி – தஞ்-வா-கோவை:2 21 322/3
பொன்னே அனைய நல்லாய் அவமே சுரம் போக்கினையே – தஞ்-வா-கோவை:2 22 329/4

மேல்

பொன்னை (3)

கரவாத பொன்னை நின் காரணமாக கயிலை என்றே – தஞ்-வா-கோவை:1 13 172/2
பூணினும் பாரம் இது என்னும் என் பொன்னை இப்போது எனக்கு – தஞ்-வா-கோவை:2 22 348/2
பொன்னை புணர்ந்து நும் கேள் முன்னர் நீ பொன் புனைந்ததுவே – தஞ்-வா-கோவை:2 24 359/4

மேல்

பொன்னையும் (1)

தண் தாமரை மலர் பொன்னையும் பார்_மங்கை-தன்னையும் போல் – தஞ்-வா-கோவை:1 9 76/1

மேல்

பொன்னொடு (1)

பொரு பால் மதியினை போல் மருப்பு யானையில் பொன்னொடு இன்பம் – தஞ்-வா-கோவை:1 15 226/1

மேல்