கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
-கண் 5
-கொல் 12
-கொலோ 11
-கொல்லே 1
-கொல்லோ 4
-தங்களுக்கே 1
-தம் 13
-தமக்கு 3
-தமக்கே 1
-தமக்து 1
-தமை 1
-தம்மை 1
-தம்மோடு 1
-தன் 8
-தனக்கு 2
-தனக்கே 1
-தனது 1
-தன்னூடு 1
-தன்னை 5
-தன்னையும் 1
-தொறு 1
-தொறும் 12
-தோறும் 1
-நின்று 2
-நின்றே 2
-பால் 17
-மதி 2
-மாட்டு 1
-மின் 3
-மினே 3
-மின்களே 1
-மின்னே 1
-வயின் 5
-வாய் 22
-கண் (5)
என்-கண் அருள் பெரிது எம் பெருமாட்டிக்கு இகல் மலைந்தார் – தஞ்-வா-கோவை:1 10 114/2
வயல்-கண் நிறை தஞ்சைவாணன் தென்மாறையில் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 14 205/2
வார் ஏற்ற பைம் கழல் வாணன் தென்மாறையில் வாவியின்-கண்
நீர் ஏற்ற செங்கழுநீர் மலர் போன்றது நின் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 247/3,4
மாறா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை என்-கண்
ஆறா அரும் துயர் ஆற்றுகின்றீர் அறிவே கொளுத்தி – தஞ்-வா-கோவை:2 22 325/1,2
தம்-கண் இடும்பை தவிர்த்து அருள் வாணன் தென் தஞ்சை வஞ்சி – தஞ்-வா-கோவை:3 33 421/3
-கொல் (12)
பிறிதோ-கொல் என்னும் பெருந்தகை தேற பெரிது உயிர்த்து – தஞ்-வா-கோவை:1 2 15/3
வேரி தடம் பொழில்-வாய் விளையாடும்-கொல் மேவி நின்றே – தஞ்-வா-கோவை:1 8 51/4
இப்போது இளகியதால் இந்துகாந்தம்-கொல் என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 10 116/4
கரக்கின்றது என்னை-கொல் என் உயிர் ஆகிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 121/4
தான் காணிய-கொல் இ சந்தன சோலையை தன்னை இன்று – தஞ்-வா-கோவை:1 12 160/3
யான் காணிய-கொல் எழுந்தருளாதது இன்று என் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 160/4
கலை மான் உறை பதி நீ வருமாறு என்-கொல் கங்குலிலே – தஞ்-வா-கோவை:1 13 164/4
கொங்கு உலவா அலர் சூழ் குழலாய் என்-கொல் கூறுவதே – தஞ்-வா-கோவை:1 13 171/4
கயல் வென்ற உண்கண்ணி காரணம் ஏது-கொல் கைதை அம் கான் – தஞ்-வா-கோவை:1 14 190/1
விரல் என்று-கொல் செறித்தார் நெறி தாழ் குழல் மெல்_இயலே – தஞ்-வா-கோவை:1 14 195/4
அயலூர் நகைக்கும் என்னே என்ன பாவம்-கொல் ஆக்கினவே – தஞ்-வா-கோவை:1 14 201/4
வேல் அன்ன கூர்ம் கல் மிதிக்கும்-கொல் என்றனர் மேதினிக்கு – தஞ்-வா-கோவை:2 21 309/2
-கொலோ (11)
சீயம்-கொலோ என தெவ் வென்ற வாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 6 29/1
தோயம்-கொலோ எனும் நேயம் நம்-பால் வைத்து சோலை மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 6 29/2
ஆயம்-கொலோ எனும் ஆயத்துள்ளாள் இவ் அரிவை என்ன – தஞ்-வா-கோவை:1 6 29/3
மாயம்-கொலோ நெஞ்சமே மணம் போல் இங்கு வந்து உற்றதே – தஞ்-வா-கோவை:1 6 29/4
உரையாதது என் என்பரால் என்-கொலோ இவர் உள் கொண்டதே – தஞ்-வா-கோவை:1 9 74/4
இ காரணம் உணராது என்-கொலோ நின்று இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 10 83/4
இள அரும்பாம் இவள்-மாட்டு என்-கொலோ நின்று இரப்பதுவே – தஞ்-வா-கோவை:1 10 108/4
ஆடாள்-தனக்கு என்-கொலோ அடியேன் சென்று அறிவிப்பதே – தஞ்-வா-கோவை:1 10 110/4
தருவர் வம்பு ஆர் முலையாய் என்-கொலோ செயத்தக்கதுவே – தஞ்-வா-கோவை:1 10 117/4
இடையாய் பிறிது-கொலோ அறியேன் வெற்பர் எண்ணுவதே – தஞ்-வா-கோவை:1 10 125/4
பஞ்சோ அனிச்சம்-கொலோ எனும் சீறடி பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 21 308/4
-கொல்லே (1)
அன்னம் படியும்-கொல்லே உவர் ஆழியில் ஆரணங்கே – தஞ்-வா-கோவை:3 28 399/4
-கொல்லோ (4)
புலம்புவது என்னை-கொல்லோ சொல்ல வேண்டும் புரவலனே – தஞ்-வா-கோவை:1 8 40/4
நினைந்தும் அறிதிர்-கொல்லோ அம் சொலால் அறிவோர் – தஞ்-வா-கோவை:1 18 278/2
இல்லின் கொடிய-கொல்லோ செல்லும் நாட்டு அவ் இரும் சுரமே – தஞ்-வா-கோவை:2 21 313/4
தோள் மா வெருவும்-கொல்லோ என்று என் ஆருயிர் சோர்கின்றதே – தஞ்-வா-கோவை:2 22 338/4
-தங்களுக்கே (1)
தரைப்-பால் வளரும் புகழ் எய்தலாம் அவர்-தங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 15 217/4
-தம் (13)
வெம் கோல் மழை பொழி வானவர் போர் வென்ற மீனவர்-தம்
செங்கோல் முறைமை செலுத்திய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 55/1,2
யார் உம்பர்-தம் பதம் என் போல எய்தினர் இம்பர் அம் பொன் – தஞ்-வா-கோவை:1 8 59/1
தரையகம் நான்மறை கேள்வியர் வேள்வியர் சான்றவர்-தம்
உரையகம் நாடி முன்னிட்டனது ஆகும் உலகியலே – தஞ்-வா-கோவை:1 10 94/3,4
பொன் தேரின் வந்து புணர்ந்து சென்றார்-தம் பொருட்டு நம்மை – தஞ்-வா-கோவை:1 10 127/2
கனம் சாய நல்கிய கை_உடையான் எதிர் கன்றினர்-தம்
மனம் சாய வென்று அருள் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 154/1,2
வெம் குல வாரணம் ஏற்றவர்க்கே நல்கி வேற்றரசர்-தம்
குல வாழ்வு தவிர்த்து அருள் வாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 13 171/1,2
வம்பு ஓர் நகர் எல்லி வாரல் வெற்பா மருவா அரசர்-தம்
போர் கடந்த தடம் புய வாணன் தமிழ் தஞ்சை நாட்டு – தஞ்-வா-கோவை:1 13 186/2,3
பொய்யாது அவர்-தம் குறி பிழையார் அவர் பூண்ட அன்பு – தஞ்-வா-கோவை:1 14 196/1
எம் ஊரகத்து வரல் ஒழிந்தீர் எதிரேற்ற தெவ்வர்-தம்
ஊரை முப்புரம் ஆக்கிய வாணன் தமிழ் தஞ்சை போல் – தஞ்-வா-கோவை:1 14 197/2,3
நம் பேறுடைமை இருக்கின்றவா கடல் ஞாலத்துள்ளோர்-தம்
பேறு என வந்த சந்திரவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 207/1,2
நம்-பால் நலன் உண்ட நம் பாதகர்-தம் நகர் வினவி – தஞ்-வா-கோவை:1 15 212/1
பலரே சுமந்த உரைகளும் தாயர்-தம் பார்வைகளும் – தஞ்-வா-கோவை:2 21 312/1
எம்மாதிரமும் புரவலர் தேடி இரந்து உழல்வோர்-தம்
மா துயரம் தணித்து அருள் வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 28 379/1,2
-தமக்கு (3)
அகத்தில் பிறந்த அரவிந்தமோ அடையார்-தமக்கு
மகத்தில் சனி அன்ன சந்திரவாணன் தென்மாறை வெற்போ – தஞ்-வா-கோவை:1 8 48/2,3
சான்றாண்மை அன்பர்-தமக்கு உரை நீ தஞ்சை காவலனை – தஞ்-வா-கோவை:1 15 223/2
ஈண்டும் பசலை மெய் போர்த்திருப்பார்-தமக்கு என் வரவே – தஞ்-வா-கோவை:1 18 275/4
-தமக்கே (1)
நூபுரம் சூழ் அடியாய் சென்று கூறு நுமர்-தமக்கே – தஞ்-வா-கோவை:2 24 358/4
-தமக்து (1)
ஆழ்ந்தார்-தமக்து அருளாதவர் போல் இவ்வளவில் அன்பு – தஞ்-வா-கோவை:1 11 142/1
-தமை (1)
தாம் கண்_அனையர்-தமை பிரிந்தோ நம் தனிமை கண்டோ – தஞ்-வா-கோவை:1 14 204/3
-தம்மை (1)
முலைவிலையாக முகந்து அளித்தார் முனை வேந்தர்-தம்மை
தலைவிலையாக திறைகொண்ட வாணன் தமிழ் தஞ்சை நீ – தஞ்-வா-கோவை:2 19 281/2,3
-தம்மோடு (1)
தண் தாமரை_மங்கை தங்கிய தஞ்சை நின் தாயர்-தம்மோடு
உண்டாகிய முனிவோ அன்றி ஆயத்தொடு உற்றது உண்டோ – தஞ்-வா-கோவை:1 15 209/2,3
-தன் (8)
பெண்ணில் சிறந்த இ பேதை-தன் பார்வை பெருவினையேன் – தஞ்-வா-கோவை:1 1 4/2
கலங்காது இருந்தது எவ்வாறு எம்பிரான்-தன் கலை கடலே – தஞ்-வா-கோவை:1 8 54/4
நின் காதலியொடு நீ வரல் வேண்டும் நிலமடந்தை-தன்
காதலன் தஞ்சைவாணன் தென்மாறை தண் தாமரை வாழ் – தஞ்-வா-கோவை:1 8 61/2,3
சயமங்கை-தன் பெருமான் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 190/3
திசையும் பரவும் திரு_அனையாள்-தன் திருவுளத்துக்கு – தஞ்-வா-கோவை:1 18 261/3
பண் குன்ற வென்ற சொல் வள்ளி-தன் கோனை பைம் தார் அயிலால் – தஞ்-வா-கோவை:2 20 299/3
யாரும் தொழ தகும் எம் பெருமாட்டி-தன் ஏவலினால் – தஞ்-வா-கோவை:3 28 384/2
தாவாத சங்கரன் கங்கை-தன் கொங்கை தழீஇ இதழி – தஞ்-வா-கோவை:3 28 401/3
-தனக்கு (2)
பெரும் தாரை வேல்_விழி தந்த வெம் காம பிணி-தனக்கு
மருந்து ஆவது நெஞ்சமே இல்லை வேறு மடல் அன்றியே – தஞ்-வா-கோவை:1 10 101/3,4
ஆடாள்-தனக்கு என்-கொலோ அடியேன் சென்று அறிவிப்பதே – தஞ்-வா-கோவை:1 10 110/4
-தனக்கே (1)
நினக்கே தகும் நின் நெடும் புனல் ஊரனும் நீயும் அவன்-தனக்கே
தகுவை தமிழ் தஞ்சைவாணன் தடம் கிரி சூழ் – தஞ்-வா-கோவை:3 28 394/1,2
-தனது (1)
தழங்கு ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன்-தனது அருள் போல் – தஞ்-வா-கோவை:3 28 402/1
-தன்னூடு (1)
என்னூடு நின்ற இளம்_கொடியே சங்கம் ஏய்ந்து குழாம்-தன்னூடு
செல்லும் சலஞ்சலம் போல் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 62/1,2
-தன்னை (5)
துறந்தனள் ஆகி அம்போருகம்-தன்னை இ தொல் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 14 198/1
வர இ படி-தன்னை வாழ்வித்த வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 19 286/2
பொறுத்தாள் அழல் சுரம்-தன்னை அன்னாய் நின் பொலம்_கொடியே – தஞ்-வா-கோவை:2 22 324/4
அன்னைக்கு இயம்பினன் ஆண்டகை யான் முன் அறிந்து தென்னன்-தன்னை
பணிந்து குற்றேவல்செய்யாது சமர்க்கு எழுந்த – தஞ்-வா-கோவை:2 24 359/1,2
தார் ஆகம் நல்கினர் காரிகையாய் தஞ்சைவாணன்-தன்னை
சேராதவர் என்ன தீவினையேன் நைய செம் கண் வன்கண் – தஞ்-வா-கோவை:3 28 380/1,2
-தன்னையும் (1)
தண் தாமரை மலர் பொன்னையும் பார்_மங்கை-தன்னையும் போல் – தஞ்-வா-கோவை:1 9 76/1
-தொறு (1)
வியல் ஊர் எயில்புறம் நொச்சியின் ஊழ் மலர் வீழ்-தொறு எண்ணி – தஞ்-வா-கோவை:1 14 201/1
-தொறும் (12)
தேரும்-தொறும் இனிதாம் தமிழ் போன்று இவள் செங்கனி வாய் – தஞ்-வா-கோவை:1 8 59/3
ஆரும்-தொறும் இனிதாய் அமிழ்தாம் எனது ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 8 59/4
தரை ஊர்-தொறும் பெண்ணை மா மடல் ஊர்வர் தவிர்ந்து இன்னும் – தஞ்-வா-கோவை:1 10 102/3
கையும் தழையும் முன் காண்-தொறும் காண்-தொறும் கட்டுரைத்த – தஞ்-வா-கோவை:1 10 124/1
கையும் தழையும் முன் காண்-தொறும் காண்-தொறும் கட்டுரைத்த – தஞ்-வா-கோவை:1 10 124/1
ஆராத இன்ப இடம்-தொறும் நீங்கிய ஆயம் என்-பால் – தஞ்-வா-கோவை:1 11 144/1
புயலேறு எதிர்-தொறும் பொங்கு உளை மீதெழ போதகம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 169/1
கோள்மா குமிறும் கொடும் குரல் கேள்-தொறும் கூர் கணையால் – தஞ்-வா-கோவை:2 22 338/2
எனவே நடக்கின்றதால் அன்னை நாள்-தொறும் இல்லறமே – தஞ்-வா-கோவை:3 27 373/4
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3
திண் போதகம்-தொறும் தீட்டிய வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 398/3
-தோறும் (1)
அணி மனை-தோறும் கொழுந்துவிட்டு அம்பல் அரும்பி மண் மேல் – தஞ்-வா-கோவை:1 16 229/3
-நின்று (2)
தான் ஆவி-நின்று அலர் தாமரையே அ தட மலர்-வாய் – தஞ்-வா-கோவை:1 7 36/2
தார் தட மேரு எனும் புய வாணன் தஞ்சாபுரி-நின்று
ஆர்த்தது கேட்டு வந்தார் பொருள் தேட அகன்றவரே – தஞ்-வா-கோவை:3 33 422/3,4
-நின்றே (2)
மை போல் குழலி தந்தேன் தஞ்சைவாணன் வரையின்-நின்றே – தஞ்-வா-கோவை:1 10 137/4
சிறியார் மனையில் வந்தீர் தஞ்சைவாணன் சிலம்பின்-நின்றே – தஞ்-வா-கோவை:2 20 298/4
-பால் (17)
தோயம்-கொலோ எனும் நேயம் நம்-பால் வைத்து சோலை மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 6 29/2
வெண் தாமரை மங்கை காதலன் ஆகிய வேதியன்-பால்
உண்டாகிய தொல் உலகியலால் உங்கள் ஆரணங்கை – தஞ்-வா-கோவை:1 10 95/1,2
குழையும் எம்-பால் என்று கொண்ட நெஞ்சே கலி கோடை மண் மேல் – தஞ்-வா-கோவை:1 10 99/2
எற்றே தவறு நம்-பால் இல்லையாகவும் எய்தியதே – தஞ்-வா-கோவை:1 10 127/4
நேயம் புகலிடம் இன்றி நின்-பால் வந்து நின்றது போல் – தஞ்-வா-கோவை:1 10 136/1
ஆராத இன்ப இடம்-தொறும் நீங்கிய ஆயம் என்-பால்
வாராத முன்னம் வருகிலரால் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 144/1,2
கயல் ஏறு அனைய நின்-பால் வரல் வேண்டினர் காதலரே – தஞ்-வா-கோவை:1 13 169/4
மண்-பால் புகழ் வைத்த வாணன் தென்மாறை நம் மன்னர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 14 206/2
நம்-பால் நலன் உண்ட நம் பாதகர்-தம் நகர் வினவி – தஞ்-வா-கோவை:1 15 212/1
தம்-பால் உடன் சென்று சார்குவமோ தரியாரை வென்று – தஞ்-வா-கோவை:1 15 212/2
வரைப்-பால் மதுர தமிழ் தெரி வாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 15 217/1
தரைப்-பால் வளரும் புகழ் எய்தலாம் அவர்-தங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 15 217/4
உணங்கி கழிதல் ஒழிய என்-பால் வர உன்னை அன்பால் – தஞ்-வா-கோவை:2 22 327/2
தளவு ஏய் நகை என் துணைவியர்-பால் சென்று சாற்று-மின் போர்க்கள – தஞ்-வா-கோவை:2 25 360/2
என்-பால் குறையை நினைந்து மறாது எதிர்கொள்ள வல்லே – தஞ்-வா-கோவை:3 28 388/1
தன்-பால் புலவி தணிக என்ற நீ தஞ்சைவாணன் வையம் – தஞ்-வா-கோவை:3 28 388/2
உன்-பால் புலவியுறாள் வண்ண வார் குழல் ஒண்_நுதலே – தஞ்-வா-கோவை:3 28 388/4
-மதி (2)
நையாது ஒழி-மதி நல் நெஞ்சமே இனி நம்மினும் தன் – தஞ்-வா-கோவை:1 1 3/2
இனையாது எழு-மதி நல் நெஞ்சமே நமக்கு இன் உயிரே_அனையான் – தஞ்-வா-கோவை:1 8 39/3
-மாட்டு (1)
இள அரும்பாம் இவள்-மாட்டு என்-கொலோ நின்று இரப்பதுவே – தஞ்-வா-கோவை:1 10 108/4
-மின் (3)
பெற்றிய சோலை பிறங்கு இருள் வாரல்-மின் பேதை இன்னும் – தஞ்-வா-கோவை:1 15 224/2
தளவு ஏய் நகை என் துணைவியர்-பால் சென்று சாற்று-மின் போர்க்கள – தஞ்-வா-கோவை:2 25 360/2
தேர் தனி வீரன் திருநாளும் வந்தது சேர்-மின் சென்றார் – தஞ்-வா-கோவை:3 33 422/2
-மினே (3)
எழுதிய பாவையை போல் நின்றவாறு என் இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:1 2 7/4
தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – தஞ்-வா-கோவை:1 15 221/4
யாய் ஆகிய கொடியாட்கு இனிதாக இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:2 25 361/4
-மின்களே (1)
உரைத்தால் இழிவது உண்டேல் பெயரேனும் உரை-மின்களே – தஞ்-வா-கோவை:1 9 71/4
-மின்னே (1)
விரல் கால இன்று மெலியன்-மின்னே சென்று மேதினி காத்து – தஞ்-வா-கோவை:3 30 413/2
-வயின் (5)
இரவும் குறி-வயின் நீ வரல் வேண்டும் இவள் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 239/4
புண்ணும் புலர வந்தார் தமது ஊர்-வயின் போனவரே – தஞ்-வா-கோவை:1 17 256/4
நாடா இடம் இல்லை ஞாலத்து அகல்-வயின் நன் கமல – தஞ்-வா-கோவை:2 23 349/2
நெஞ்சை பொருள்-வயின் வைத்து நம் கேள்வர் நல் நீள் மதியின் – தஞ்-வா-கோவை:3 33 420/3
கால் கொண்ட வாள் அமர் கையகல் பாசறை கை-வயின் முள்கோல் – தஞ்-வா-கோவை:3 33 424/2
-வாய் (22)
கான கடி வரை-வாய் விரை நாள்_மலர் கா அகத்தே – தஞ்-வா-கோவை:1 2 17/4
முகில் ஏந்து பூம் பொழில் சூழ் தஞ்சைவாணன் முந்நீர் துறை-வாய்
நகில் ஏந்து பூங்கொடி போல் செல்லுமால் நெஞ்சம் நம் உயிரே – தஞ்-வா-கோவை:1 5 27/3,4
துன்றும் புயல் இளம் சோலையின்-வாய் சுறவு குழையை – தஞ்-வா-கோவை:1 7 34/2
தரு-வாய் தழை கொய்து தண் புனம் காத்து தடம் குடைந்து – தஞ்-வா-கோவை:1 7 35/2
தான் ஆவி-நின்று அலர் தாமரையே அ தட மலர்-வாய்
ஆனாது ஒழுகு செந்தேன் அல்லி மேவும் அரச_அன்னம் – தஞ்-வா-கோவை:1 7 36/2,3
வேரி தடம் பொழில்-வாய் விளையாடும்-கொல் மேவி நின்றே – தஞ்-வா-கோவை:1 8 51/4
புனைந்தால் அனைய புனத்து அயல்-வாய் வண்டு போதக தேன் – தஞ்-வா-கோவை:1 10 87/2
கவான் உயர் சோலையின்-வாய் வண்டல் ஆர் உழை கண்டனமே – தஞ்-வா-கோவை:1 10 119/4
பூ மாதவி பந்தர்-வாய் விளையாடுகம் போதுகவே – தஞ்-வா-கோவை:1 10 131/4
ஆயம் புகல அடைந்தருள் நீ அடையாத மன்னர்-வாய்
அம்பு உக வில் வணக்கிய வாணன் தென்மாறை நல் நீர் – தஞ்-வா-கோவை:1 10 136/2,3
இயல் ஏறு அதிரும் இரும் கங்குல்-வாய் முத்தம் ஈன்று சங்கம் – தஞ்-வா-கோவை:1 13 169/2
பிடவு ஆர் சிறுநெறி-வாய் வரல் வேண்டினள் பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 13 170/4
நாகம் தழுவும் குடம்பையின்-வாய் நடுநாள் இரவில் – தஞ்-வா-கோவை:1 13 173/3
கான் உற்ற கானல் கனை இருள்-வாய் வர கற்பித்த நீ – தஞ்-வா-கோவை:1 14 193/3
தாது அகை தண்டலை சூழ் தஞ்சைவாணன் தடம் துறை-வாய்
நீ தகைகொண்டு என் முன் நின்றனையே செம் நிற கனி வாய் – தஞ்-வா-கோவை:1 14 194/1,2
கொம்பு ஏறி நள்ளிருள்-வாய் குழறாநின்ற கூகைகளே – தஞ்-வா-கோவை:1 14 207/4
பிரியும் பொழுது எல்லி-வாய் வினையேன் மனம் பின் செல்வதே – தஞ்-வா-கோவை:1 15 220/4
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல்-வாய் விளங்கும் – தஞ்-வா-கோவை:1 15 222/3
கராம் திரி கல்லதர்-வாய் எல்லி நீ வரல் கற்பு அலவே – தஞ்-வா-கோவை:1 16 242/4
தருகின்ற சங்க தரு அன்ன வாணன் தமிழ் தஞ்சை-வாய்
வருகின்றது என்று முன்னே ஓகை கூறும் வலம்புரியே – தஞ்-வா-கோவை:1 18 276/3,4
உரியோன் உயர் வையை ஒண் துறை-வாய் உரவோர் தெளித்தும் – தஞ்-வா-கோவை:2 20 291/2
தொடி ஒன்று தோள் மடவார் சேரி-வாய் வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:3 28 383/4