சொற்பிரிப்பு-மூலம் | அடிநேர்-உரை |
அகல் இரு
விசும்பில் பாய் இருள் பருகி | அகன்ற பெரிய வானில்
பரந்த இருளை விழுங்கி, |
பகல் கான்று
எழுதரு பல் கதிர் பருதி | பகற்பொழுதைத்
தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு |
காய் சினம்
திருகிய கடும் திறல் வேனில் | சுடுகின்ற தீ(யின்
வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில், |
பாசிலை ஒழித்த
பராஅரை பாதிரி | பசிய இலைகளை உதிர்த்த
பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின் |
வள் இதழ் மா
மலர் வயிற்று இடை வகுத்ததன் 5 | வளமையான இதழையுடைய
பெரிய பூவின் வயிற்றை நடுவே பிளந்ததனுடைய 5 |
உள்ளகம்
புரையும் ஊட்டுறு பச்சை | உள்ளிடத்தைப் போன்ற
நிறமூட்டப்பெற்ற தோலினையும்; |
பரி அரை
கமுகின் பாளை அம் பசும் பூ | பருத்த அடிமரத்தையுடைய
கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ |
கரு இருந்து
அன்ன கண்கூடு செறி துளை | (விரியாமல்)கருவாய்
இருந்ததைப் போன்ற (இரண்டு)கண்ணும் கூடின செறிந்த துளையினையும்; |
உருக்கி அன்ன
பொருத்துறு போர்வை | உருக்கி (ஒன்றாக
வார்த்ததைப்)போன்ற (தோல் வேறுபாடு தெரியாமல்)பொருத்தப்பட்ட உறையினையும்; |
சுனை வறந்து
அன்ன இருள் தூங்கு வறு வாய் 10 | சுனை வற்றியதைப் போன்ற
இருள் செறிந்த உள்நாக்கில்லாத வாயினையும்; 10 |
பிறை பிறந்து
அன்ன பின் ஏந்து கவை கடை | பிறை பிறந்ததைப்
போன்று பின்புறம் ஏந்தியிருக்கின்ற பிளவுபட்ட கடையினையும்; |
நெடும் பணை
திரள் தோள் மடந்தை முன்கை | நீண்ட மூங்கில்
(போன்ற)திரண்ட தோளினையுடைய பெண்ணின் முன்கையில்(உள்ள) |
குறும் தொடி
ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் | குறிய தொடியைப் போன்ற,
நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்; |
மணி வார்ந்து
அன்ன மா இரு மருப்பின் | நீலமணி
(நீரைப்போல்)ஒழுகினாற் போன்ற கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினையும்; |
பொன் வார்ந்து
அன்ன புரி அடங்கு நரம்பின் 15 | பொன் (உருக்கப்பட்டுக்
கம்பியாக)வார்த்ததைப் போன்ற முறுக்கு அடங்கின நரம்பினையும் உடைய 15 |
தொடை அமை
கேள்வி இட வயின் தழீஇ | கட்டமைந்த யாழை
இடத்தோளின் பக்கத்தே அணைத்து, |
வெம் தெறல்
கனலியொடு மதி வலம் திரிதரும் | வெம்மையான சினம் கொண்ட
ஞாயிற்றுடன் திங்களும் வலமாகத் திரிதலைச் செய்யும் |
தண் கடல்
வரைப்பில் தாங்குநர் பெறாது | குளிர்ந்த கடல்
(சூழ்ந்த)உலகில் (உன்னை)ஆதரிப்போரைப் பெறாமல், |
பொழி மழை
துறந்த புகை வேய் குன்றத்து | பொழியும் மழை
புறக்கணித்த (நிலத்தில் எழுந்த)ஆவி சூழ்ந்த மலையிலுள்ள |
பழு மரம்
தேரும் பறவை போல
20 | பழுத்த மரத்தைத்
தேடித்திரியும் பறவைகளைப் போல, 20 |
கல்லென்
சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும் | அழுகின்ற சுற்றத்துடன்
கால் போனவழியே செல்லும் |
புல்லென்
யாக்கை புலவு வாய் பாண | பொலிவழிந்த
உடம்பினையும் புலவு நாறும் வாயினையுமுடைய பாணனே – |
பெரு வறம்
கூர்ந்த கானம் கல்லென | பெரிய வறட்சி மிக்க
கானம்(முழுதும்) கல்லென்ற ஆரவாரத்தால் நிறையும்படியாக |
கருவி வானம்
துளி சொரிந்து ஆங்கு | கூட்டமான மேகங்கள்
மழையைச் சொரிந்தாற் போன்று, |
பழம் பசி
கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு
25 | நீண்டநாட் பசி மிக்க
(எம்முடைய)கரிய பெரிய சுற்றத்தோடு 25 |
வழங்க தவாஅ
பெரு வளன் எய்தி | (பிறருக்குக்)கொடுக்கவும்
மாளாத பெரிய செல்வத்தைப் பெற்று, |
வால் உளை
புரவியொடு வய களிறு முகந்துகொண்டு | வெண்மையான
தலையாட்டுச்சிறகுகளையுடைய குதிரையுடன் வலிமையான யானைகளையும் வாரிக்கொண்டு |
யாம்
அவணின்றும் வருதும் நீயிரும் | யாம் அவன் ஊரினின்று
வருகின்றோம் – நீங்களும், |
இரு நிலம்
கடந்த திரு மறு மார்பின் | பெரிய நிலத்தை
அளந்துகொண்ட திருவாகிய மறுவை அணிந்த |
முந்நீர்
வண்ணன் பிறங்கடை அ நீர் 30 | கடல் (போலும்)
நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய் (அமைய), அக் கடலின் 30 |
திரை தரு
மரபின் உரவோன் உம்பல் | திரை கொணர்ந்து
ஏறவிட்ட பாரம்பரியம் கொண்ட சோழன் குடிபிறந்தோனாகிய, |
மலர் தலை
உலகத்து மன் உயிர் காக்கும் | அகன்ற இடத்தையுடைய
உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் புரக்கும் |
முரசு முழங்கு
தானை மூவருள்ளும் | முரசு முழங்குகின்ற
படைகளையுடைய மூவேந்தர்க்குள்ளும், |
இலங்கு நீர்
பரப்பின் வளை மீக்கூறும் | விளங்குகின்ற
நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்குகளில் மேலாகக்கூறப்படும் |
வலம்புரி அன்ன
வசை நீங்கு சிறப்பின் 35 | வலம்புரி(ச் சங்கை)
ஒத்த, குற்றம் தீர்ந்த தலைமையினையும், 35 |
அல்லது கடிந்த
அறம் புரி செங்கோல் | (நல்லது)அல்லாததை
விலக்கிய அறத்தை விரும்பின செங்கோலையும், |
பல் வேல்
திரையன் படர்குவிர் ஆயின் | பல வேற்படையினையும்
உடைய திரையனிடம் செல்ல எண்ணுவீராயின் – |
கேள் அவன்
நிலையே கெடுக நின் அவலம் | கேட்பாயாக, அவனின்
தன்மையை, கெடுக நின் துயரம் – |
அத்தம்
செல்வோர் அலற தாக்கி | (வேறு
ஊர்களுக்கான)வழியில் போவாரை (அவர்)கதறும்படி வெட்டி, |
கைப்பொருள்
வௌவும் களவு ஏர் வாழ்க்கை 40 | (அவர்)உடைமைகளைக்
கைப்பற்றும் களவே உழவு (போலத் தொழிலாகவுடைய)வாழ்வாகக்கொண்ட 40 |
கொடியோர் இன்று
அவன் கடி உடை வியன் புலம் | கொடியவர் இல்லாதது,
அவ் வள்லலின் காவலை உடைய அகன்ற நாடு; |
உருமும் உரறாது
அரவும் தப்பா | இடியேறும் இடியாது;
பாம்புகளும் கொல்லமாட்டா; |
காட்டு மாவும்
உறுகண் செய்யா வேட்டாங்கு | காட்டு விலங்குகளும்
தீங்கு செய்யமாட்டா; (நீ)விரும்பியபடியே, |
அசைவுழி அசைஇ
நசைவுழி தங்கி | இளைத்தவிடத்தே
இளைப்பாறி, விரும்பியவிடத்தே தங்கி, |
சென்மோ இரவல
சிறக்க நின் உள்ளம் 45 | செல்வாயாக, இரவலனே,
சிறப்புறுவதாக நின் நெஞ்சம் – 45 |
கொழும் சூட்டு
அருந்திய திருந்து நிலை ஆரத்து | கொழுவிய வட்டைகள் தம்
அகத்தே கொண்ட, திருத்தமான நிலையிலுள்ள ஆரங்களையுடைய, |
முழவின் அன்ன
முழு மர உருளி | மத்தளம் போன்று
முழுமர(த்தால் கடைந்த) உருளியினையும், |
எழூஉ புணர்ந்து
அன்ன பரூஉ கை நோன் பார் | (இரண்டு)கணைய
மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த கைகளையுடைய, வலிய, கோக்கும் சட்டத்தையும், |
மாரி குன்றம்
மழை சுமந்து அன்ன | மழைக் காலத்து மலை
முகிலைச் சுமந்தாற் போன்று, |
ஆரை வேய்ந்த
அறை வாய் சகடம் 50 | (தாளிப்பனையோலையால்
செய்த)பாய் வேய்ந்த, (வழியை)அறைக்கும் விளிம்புகள் கொண்ட வண்டி- 50 |
வேழம் காவலர்
குரம்பை ஏய்ப்ப | யானை(புனத்தில்
தின்னாமல்) காக்கின்றோர் (இதண் மேல் கட்டின)குடிலைப் போன்ற, |
கோழி சேக்கும்
கூடு உடை புதவின் | கோழிகள் தங்கும்
கூட்டை உடைய (குடிலின்)வாயிலில், |
முளை எயிற்று
இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் | (மூங்கில்)முளை(போன்ற)
கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும், |
துளை அரை
சீறுரல் தூங்க தூக்கி | துளையைத்
தன்னிடத்தேயுடைய சிறிய உரலைத் தொங்கும்படி தூக்கி, |
நாடக மகளிர்
ஆடுகளத்து எடுத்த 55 | நாடக மகளிர்
(தாம்)ஆடும் களத்தில் கொண்டுவந்த
55 |
விசி வீங்கு
இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து | வார்ப்பிணிப்பு இறுகின
இனிய இசைக்கருவி(யான முழவை) ஒப்பக் கயிற்றால் (சுற்றிக்)கட்டி, |
காடி வைத்த
கலன் உடை மூக்கின் | காடி வைத்த
மிடாவினுடைய மூக்கணை மீதிருந்து, |
மகவு உடை மகடூஉ
பகடு புறம் துரப்ப | குழவியைக் கைக்கொண்ட
பெண் எருத்தை முதுகிலே அடிப்ப – |
கோட்டு இணர்
வேம்பின் ஏட்டு இலை மிடைந்த | கொம்பிடத்தே
பூங்கொத்தையுடைய வேம்பின் மேன்மையையுடைய இலையை இடையிடையே கட்டிய |
படலை கண்ணி
பரேர் எறுழ் திணி தோள் 60 | தழை விரவின
மாலையையும், பருத்த அழகினையும், வலிமையினையும் உடைய இறுகின தோளினையும் 60 |
முடலை யாக்கை
முழு வலி மாக்கள் | முறுக்குண்ட
உடம்பினையும், நிரம்பிய மெய்வலியினையும் உடைய மாக்கள் |
சிறு துளை கொடு
நுகம் நெறிபட நிரைத்த | சிறிய துளையினையுடைய
வளைந்த நுகத்தின்கண் (எருதுகள்)ஒருவழிப்படுமாறு நிரலே கட்டின |
பெரும் கயிற்று
ஒழுகை மருங்கில் காப்ப | பெரிய
கயிற்றையுடையனவாகிய (சகட)ஒழுங்கினை பக்கத்தே காத்துச்செல்ல, |
சில்பதஉணவின்
கொள்ளை சாற்றி | உப்பாகிய உணவின்
விலையைக் கூறி, |
பல் எருத்து
உமணர் பதி போகு நெடு நெறி 65 | பல எருதுகளையுடைய
உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி 65 |
எல் இடை
கழியுநர்க்கு ஏமம் ஆக | பகற்பொழுதில்
வழிப்போவார்க்குப் பாதுகாவலாக இருக்க, |
மலையவும்
கடலவும் மாண் பயம் தரூஉம் | மலையில் உள்ளனவும்,
கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும் |
அரும் பொருள்
அருத்தும் திருந்து தொடை நோன் தாள் | அரிய பொருளை
(எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்; |
அடி புதை அரணம்
எய்தி படம் புக்கு | பாதங்களை மறைக்கின்ற
செருப்பைக் கோத்து, சட்டை அணிந்து, |
பொரு கணை
தொலைச்சிய புண் தீர் மார்பின் 70 | (ஆறலைப்போர்)எய்த
கணைகளின் வலியைத் தொலைத்த புண்கள் தீர்ந்த மார்பினையும்; 70 |
விரவு வரி
கச்சின் வெண் கை ஒள் வாள் | (மார்பில்)விரவிய,
வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள் |
வரை ஊர்
பாம்பின் பூண்டு புடை தூங்க | மலையில் ஊர்கின்ற
பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க, |
சுரிகை நுழைந்த
சுற்று வீங்கு செறிவு உடை | உடைவாள் செருகப்பட்ட
கட்டு இறுகிய உடையினையும்; |
கரு வில்
ஓச்சிய கண் அகன் எறுழ் தோள் | கரிய வில்லின் வலிமையை
விரட்டிய, இடமகன்ற வலிமையுடைய தோளினையும்; |
கடம்பு அமர்
நெடு வேள் அன்ன மீளி 75 | கடம்பிடத்தே இருந்த
நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்; 75 |
உடம்பிடி தட கை
ஓடா வம்பலர் | வேலினைக் கொண்ட பெரிய
கையினையும் உடைய புறங்கொடாத புதியவராகிய வழிப்போவார் – |
தடவு நிலை
பலவின் முழு முதல் கொண்ட | வளைந்த
நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட |
சிறு சுளை
பெரும் பழம் கடுப்ப மிரியல் | சிறியதாகிய
சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப, மிளகின் |
புணர் பொறை
தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து | ஒத்த கனமாகச் சேர்ந்த
சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும், |
அணர் செவி
கழுதை சாத்தொடு வழங்கும்
80 | உயர்த்திய
செவியினையும் உடைய கழுதைகளுடைய திரளோடே – செல்கின்ற 80 |
உல்கு உடை பெரு
வழி கவலை காக்கும் | சுங்கம்
கொள்ளுதலையுடைய பெரிய வழிகளில் கவர்த்த வழியைப் பாதுகாக்கின்ற |
வில் உடை
வைப்பின் வியன் காட்டு இயவின் | விற்படையிருக்கின்ற
ஊர்களையுடைய அகன்ற காட்டுவழிகளில் – |
நீள் அரை
இலவத்து அலங்கு சினை பயந்த | நீண்ட தாளினையுடைய
இலவமரத்தின் அசைகின்ற கொம்பு காய்த்த |
பூளை அம் பசும்
காய் புடை விரிந்து அன்ன | பஞ்சினையுடைய அழகிய
பசிய காயின் முதுகு விரிந்து தோன்றினதைப் போன்ற |
வரி புற
அணிலொடு கருப்பை ஆடாது 85 | வரியை முதுகிலே உடைய
அணிலோடு, எலியும் திரியாதபடி, 85 |
யாற்று அறல்
புரையும் வெரிந் உடை கொழு மடல் | ஆற்றின் அறலை ஒக்கும்
முதுகினை உடையதும், கொழுவிய மடலினையுடையதும் ஆகிய, |
வேல் தலை அன்ன
வை நுதி நெடும் தகர் | வேலின் முனையைப் போன்ற
கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள |
ஈத்து இலை
வேய்ந்த எய் புற குரம்பை | ஈந்தினுடைய இலையால்
வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடிலின்கண், |
மான் தோல்
பள்ளி மகவொடு முடங்கி | மான் தோலாகிய
படுக்கையில் பிள்ளையோடு முடங்கிக்கிடக்கும் |
ஈன் பிணவு ஒழிய
போகி நோன் காழ் 90 | மகப்பேறடைந்த பெண்ணைத்
தவிர (ஏனையோர்)போய், வலிய வயிரம் பாய்ந்த 90 |
இரும்பு தலை
யாத்த திருந்து கணை விழு கோல் | பூண் தலையில்
கட்டப்பட்ட திருந்திய திரட்சியையுடைய சீரிய கோலின் |
உளி வாய்
சுரையின் மிளிர மிண்டி | (மறுபக்கம்
உள்ள)உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் குத்திப் புரட்டி, |
இரு நில கரம்பை
படு நீறு ஆடி | கரிய நிலமாகிய கரம்பை
நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து, |
நுண் புல்
அடக்கிய வெண் பல் எயிற்றியர் | மெல்லிய புல்லரிசியை
வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர் – |
பார்வை யாத்த
பறை தாள் விளவின் 95 | பார்வை மான் கட்டிய
தேய்ந்த தாளினையுடைய விளாமரத்தின் 95 |
நீழல் முன்றில்
நில உரல் பெய்து | நிழலையுடைய
முற்றத்தில் நில(த்தில் குழிக்கப்பட்ட) உரலில் இட்டு, |
குறும் காழ்
உலக்கை ஓச்சி நெடும் கிணற்று | குறிய வயிரம் பாய்ந்த
உலக்கையால் குற்றி, ஆழமான கிணற்றில் |
வல் ஊற்று உவரி
தோண்டி தொல்லை | சில்லூற்றாகிய
உவரிநீரை முகந்துகொண்டு, பழைய |
முரவு வாய்
குழிசி முரி அடுப்பு ஏற்றி | விளிம்பு உடைந்துபோய்
கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி, |
வாராது அட்ட
வாடூன் புழுக்கல் 100 | (கஞ்சியை)வடிக்காமல்
பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் சோற்றை – 100 |
வாடா தும்பை
வயவர் பெருமகன் | ‘வாடாத தும்பை சூடின
போரில் வல்ல மறவருடைய தலைவனாகிய |
ஓடா தானை ஒண்
தொழில் கழல் கால் | புறமுதுகிடாத
படையினையுடைய சிறந்த தொழில்நுணுக்கம் கொண்ட வீரக்கழல் அணிந்த |
செ வரை நாடன்
சென்னியம் எனினே | செவ்விய மலைநாட்டை
உடையவனுடைய பாணர் யாம்’ எனின், |
தெய்வ மடையின்
தேக்கு இலை குவைஇ நும் | – தெய்வங்களுக்கு
இட்டுவைத்த பலிபோலத் தேக்கின் இலையில் குவிக்கையினால், உம்முடைய |
பை தீர்
கடும்பொடு பதம் மிக பெறுகுவிர்
105 | பசுமை(வளமை) தீர்ந்த
சுற்றத்தோடு அவ்வுணவினை மிகப் பெறுவீர்; 105 |
மான் அடி
பொறித்த மயங்கு அதர் மருங்கின் | மானின் அடிச்சுவடுகள்
பதிந்த குழம்பிப்போவதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில், |
வான் மடி
பொழுதில் நீர் நசைஇ குழித்த | மழை பெய்யாதிருக்கும்
காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய |
அகழ் சூழ்
பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி | பள்ளங்களைச் சூழ்ந்த
மூடுகுழிகளின் அகத்தே மறைந்து ஒதுங்கி, |
புகழா வாகை
பூவின் அன்ன | புகழாத வாகையாகிய
அகத்திப் பூவினை ஒத்த, (புகழ் வாகை – வெற்றி வாகை – வாகைத் திணை) |
வளை மருப்பு
ஏனம் வரவு பார்த்திருக்கும் 110 | வளைந்த கொம்பினையுடைய
பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும் 110 |
அரைநாள்
வேட்டம் அழுங்கின் பகல் நாள் | நடுயாமத்து வேட்டையைச்
செய்யாதுவிட்டால், பகற்பொழுதில் |
பகு வாய்
ஞமலியொடு பைம் புதல் எருக்கி | பிளந்த வாயையுடைய
நாய்களுடன் பசிய புதர்களை அடித்து, |
தொகு வாய் வேலி
தொடர் வலை மாட்டி | குவிந்த இடத்தையுடைய
வேலியில் (ஒன்றோடொன்று)பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி, |
முள் அரை தாமரை
புல் இதழ் புரையும் | முள்(இருக்கும்)தண்டு
(உடைய) தாமரையின் புறவிதழை ஒக்கும் |
நெடும் செவி
குறு முயல் போக்கு அற வளைஇ 115 | நீண்ட காதுகளைக்கொண்ட
சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து(ப் பிடித்து), 115 |
கடுங்கண்
கானவர் கடறு கூட்டுண்ணும் | கடுமையான கானவர்
(அக்)காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்)கூடியுண்ணும் |
அரும் சுரம்
இறந்த அம்பர் பருந்து பட | அரிய வழியைக் கடந்த
பின்னர் – (அதற்கு அப்பால்)பருந்துகள் வந்து படியுமாறு |
ஒன்னா தெவ்வர்
நடுங்க ஓச்சி | (தம்மைப்)பொருந்தாத
பகைவர் அஞ்ச, (அவரைக்)குத்தி, |
வை நுதி
மழுங்கிய புலவு வாய் எஃகம் | கூரிய முனை மழுங்கின
புலால் நாறும் வாயையுடைய வேல்களை |
வடி மணி
பலகையொடு நிரைஇ முடி நாண்
120 | வார்த்த மணி
(கட்டின)பலகைகளோடு வரிசையில் வைத்து, (தலையில்)முடிந்த நாணையுடைய 120 |
சாபம்
சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் | வில்லைச் சார்த்தி
வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்; |
ஊகம் வேய்ந்த
உயர் நிலை வரைப்பின் | ஊகம் புல்லால் வேய்ந்த
உயர்ந்த நிலையையுடைய மதிலையும், |
வரை தேன்
புரையும் கவை கடை புதையொடு | மலையின் தேன்கூட்டை
ஒக்கும், கவைத்த அடிப்பக்கத்தையுடைய அம்புக்கட்டுக்களுடன், |
கடும் துடி
தூங்கும் கணை கால் பந்தர் | (ஓசை)கடிதான
உடுக்கையும் தொங்கும் திரண்ட காலையுடைய பந்தலையும், |
தொடர் நாய்
யாத்த துன் அரும் கடி நகர்
125 | சங்கிலிகளால் நாயைக்
கட்டிவைத்துள்ள கிட்டுதற்கரிய காவலையும் உடைய வீட்டினையும்; 125 |
வாழ் முள் வேலி
சூழ் மிளை படப்பை | உயிருள்ள
முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும், |
கொடு நுகம்
தழீஇய புதவின் செம் நிலை | உருண்ட கணையமரம்
குறுக்கிலிடப்பட்ட ஒட்டுக்கதவினையும், செம்மையான நிலையினையும்(கொண்ட), |
நெடு நுதி வய
கழு நிரைத்த வாயில் | நெடிய முனையினையுடைய
வலிமையான கழுக்களை நிரைத்த ஊர்வாயிலையும் உடைய, |
கொடு வில் எயின
குறும்பில் சேப்பின் | கொடிய வில்லையுடைய
எயினரின் அரணில் சென்று தங்கின், |
களர் வளர்
ஈந்தின் காழ் கண்டு அன்ன
130 | களர் நிலத்தே வளர்ந்த
ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று, 130 |
சுவல் விளை
நெல்லின் செ அவிழ் சொன்றி | மேட்டுநிலத்தில்
விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை, |
ஞமலி தந்த மனவு
சூல் உடும்பின் | நாய்(கடித்துக்)
கொணர்ந்த சங்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின் |
வறை
கால்யாத்தது வயின்தொறும் பெறுகுவிர் | பொரியலால்
மறைக்கப்படுமளவு மனைகள்தோறும் பெறுவீர்கள் – |
யானை
தாக்கினும் அரவு மேல் செலினும் | யானை (தன்னைத்)தாக்க
வந்தாலும், பாம்பு (தன்)மேல் (ஊர்ந்து)சென்றாலும், |
நீல் நிற
விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்
135 | நீல நிற மேகத்தில்
வலிய உருமேறு இடித்தாலும்,
135 |
சூல் மகள் மாறா
மறம் பூண் வாழ்க்கை | சூல்கொண்ட மகளும்
(அவற்றிற்கு அஞ்சிப்)பின்வாங்காத மறத்தைப் பூண்ட வாழ்க்கையினையும், |
வலி
கூட்டுணவின் வாள் குடி பிறந்த | (தமது)வலிமையால் கொண்ட
கூட்டாஞ்சோற்றை உடைய, வாள்(தொழிலே செய்யும்) குடியில் பிறந்த, |
புலி போத்து
அன்ன புல் அணல் காளை | புலியின் போத்தை ஒத்த,
குறுந்தாடியினையுடைய (அந்நிலத்துத்)தலைவன், |
செல்நாய் அன்ன
கரு வில் சுற்றமொடு | வேட்டை நாயைப் போன்ற
கொடிய வில்லையுடைய காவலாளருடன், |
கேளா மன்னர்
கடி புலம் புக்கு 140 | (தன் சொல்)கேளாத
மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று, 140 |
நாள் ஆ தந்து
நறவு நொடை தொலைச்சி | விடியற்காலத்து
(அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி, |
இல் அடு கள்
இன் தோப்பி பருகி | (தமது)இல்லில் சமைத்த
கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு, |
மல்லல்
மன்றத்து மத விடை கெண்டி | வளப்பத்தினையுடைய
மன்றில் வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்ற |
மடி வாய்
தண்ணுமை நடுவண் சிலைப்ப | (தோலை)மடித்துப்
போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க, |
சிலை நவில்
எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ 145 | வில்லுப்பயின்ற
வலியையுடைய இடத்தோளை எடுத்து வலப்பக்கத்திலே வளைத்து, 145 |
பகல் மகிழ்
தூங்கும் தூங்கா இருக்கை | பகலில் மகிழ்ச்சியுடனே
ஆடுகின்ற தூங்காத குடியிருப்பினையுடைய |
முரண் தலை
கழிந்த பின்றை மறிய | பொரு களங்களைக் கழிந்த
பின்னர் – ஆட்டுமறிகளுக்குத் |
குளகு அரை
யாத்த குறும் கால் குரம்பை | தழைகள்(தம்மிடத்தே)
கட்டின குறுகிய கால்களையுடைய குடிலின், |
செற்றை வாயில்
செறி கழி கதவின் | இலை தழைக்
குப்பைகளையுடைய வாயிலையும், செறிக்கப்பட்ட கழிகளையுடைய கதவினையும், |
கற்றை வேய்ந்த
கழி தலை சாம்பின் 150 | (வரகுக்)கற்றை வேய்ந்த
கழிகளைத் தலையிலேயும் கொண்ட சேக்கையின்கண், 150 |
அதளோன்
துஞ்சும் காப்பின் உதள | தோல் பாயிலிருப்போன்
தூங்கும் பாதுகாப்புள்ள இடத்தையும், ஆட்டுக்கிடாயின் |
நெடும் தாம்பு
தொடுத்த குறும் தறி முன்றில் | நெடிய தாம்புகள்
கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில், |
கொடு முக
துருவையொடு வெள்ளை சேக்கும் | வளைந்த முகத்தையுடைய
செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும் |
இடு முள் வேலி
எரு படு வரைப்பின் | கட்டு முள்
வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுந்திருக்கும் ஊரில் – |
நள் இருள்
விடியல் புள் எழ போகி 155 | செறிந்த இருள்
(போகின்ற)விடியற்காலத்தே பறவைகள் துயிலெழ எழுந்து சென்று, 155 |
புலி குரல்
மத்தம் ஒலிப்ப வாங்கி | புலி(யின் முழக்கம்
போன்ற) முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து, |
ஆம்பி வான்
முகை அன்ன கூம்பு முகிழ் | குடைக்காளானுடைய
வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய |
உறை அமை தீம்
தயிர் கலக்கி நுரை தெரிந்து | உறையினால் கெட்டியாகத்
தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து, |
புகர் வாய்
குழிசி பூ சுமட்டு இரீஇ | (தயிர்)புள்ளிபுள்ளியாகத்
தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து, |
நாள் மோர்
மாறும் நன் மா மேனி 160 | அன்றைய மோரை விற்கும்,
நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும், 160 |
சிறு குழை
துயல்வரும் காதின் பணை தோள் | சிறிய குழை அசைகின்ற
காதினையும், மூங்கில் போன்ற தோளினையும், |
குறு நெறி
கொண்ட கூந்தல் ஆய்மகள் | குறிதாகிய
சுருளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள், |
அளை விலை
உணவின் கிளை உடன் அருத்தி | மோரை விற்றதனாலுண்டான
உணவால் சுற்றத்தாரைச் சேர்த்து உண்ணப்பண்ணி, |
நெய் விலை
கட்டி பசும்பொன் கொள்ளாள் | நெய்யின் விலைக்குக்
கட்டியாகிய பசும்பொன்னையும் வாங்காதவளாய், |
எருமை நல் ஆன்
கரு நாகு பெறூஉம் 165 | எருமையையும், நல்ல
ஆன்களையும், (அவற்றின்)கருவாகிய கன்றுகளையும் வாங்குகின்ற 165 |
மடி வாய்
கோவலர் குடி வயின் சேப்பின் | மடித்த வாயையுடைய
இடையர் குடியிருப்பிலே தங்குவீராயின், |
இரும் கிளை
ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன | பெரிய சுற்றமாகிய
நண்டின் (கருவிலுள்ள)சிறிய பார்ப்பை ஒத்த |
பசும் தினை
மூரல் பாலொடும் பெறுகுவிர் | பசிய தினையரிசியிலான
சிலுத்த சோற்றைப் பாலோடும் பெறுவீர் – |
தொடுதோல் மரீஇய
வடு ஆழ் நோன் அடி | செருப்பு
(விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும், |
விழு தண்டு
ஊன்றிய மழு தின் வன் கை
170 | விழுமிய தடியை ஊன்றின
கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும், 170 |
உறி கா ஊர்ந்த
மறு படு மயிர் சுவல் | உறியினையுடைய காவடிகள்
(மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும், |
மேம் பால்
உரைத்த ஓரி ஓங்கு மிசை | மேன்மையான (ஆன்)பாலைத்
தடவிய மயிரினையும், உயர்கின்ற உச்சிகளிலுள்ள |
கோட்டவும்
கொடியவும் விரைஇ காட்ட | கொம்புகளில்
உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய |
பல் பூ மிடைந்த
படலை கண்ணி | பல்வேறு பூக்களையும்
நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும், |
ஒன்று அமர்
உடுக்கை கூழ் ஆர் இடையன்
175 | ஒன்றாய்ப் பொருந்தின
உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன் – 175 |
கன்று அமர்
நிரையொடு கானத்து அல்கி | கன்றுகளை விரும்பும்
ஆனிரைகளோடே காட்டில் தங்கி, |
அம் நுண் அவிர்
புகை கமழ கை முயன்று | அழகிய நுண்ணிதாய்
விளங்கும் புகை முற்படப் பிறக்கும்படி கையாலே கடைந்து, |
ஞெலிகோல் கொண்ட
பெரு விறல் ஞெகிழி | தீக்கடையப்படும்
கோலால் உண்டாக்கிக்கொண்ட பெரிய திறலுடைய கொள்ளிக்கட்டையின் |
செம் தீ தோட்ட
கரும் துளை குழலின் | சிவந்த நெருப்புத்
துளைத்த கரிய துளையினையுடைய குழலில் எழுப்பின, |
இன் தீம் பாலை
முனையின் குமிழின் 180 | இனிய பாலைப் பண்ணை(த்
தான்) – வெறுக்கின், குமிழினது 180 |
புழல் கோட்டு
தொடுத்த மரல் புரி நரம்பின் | உள்ளீடற்ற கொம்பிடத்தே
வளைத்துக் கட்டின மரலின் கயிறாகிய நரம்பினையுடைய |
வில் யாழ்
இசைக்கும் விரல் எறி குறிஞ்சி | வில்யாழ் இசைக்கும்
விரலாலே எறிந்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை, |
பல்கால்பறவை
கிளை செத்து ஓர்க்கும் | பல கால்களையுடைய
வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிக் கேட்கும், |
புல் ஆர் வியன்
புலம் போகி முள் உடுத்து | புல் நிறைந்த அகன்ற
நிலத்தைக் கடந்து போய் – முள்ளை உடுத்திக்கொண்டு |
எழு காடு
ஓங்கிய தொழு உடை வரைப்பில்
185 | எழுகின்ற காடுகள் சூழ
வளர்ந்த தொழுக்களையுடைய நிலத்தின்கண், 185 |
பிடி கணத்து
அன்ன குதிர் உடை முன்றில் | பிடித்திரள்
நின்றாற்போன்று (தானியங்கள் சேமிக்கும்)குதிர்களையுடைய முன்றிலையும், |
களிற்று தாள்
புரையும் திரி மர பந்தர் | யானையினது காலை
ஒக்கும் (தானியங்கள் திரிக்கும்)திரிகை மரம் நிற்கும் பந்தலினையும், |
குறும் சாட்டு
உருளையொடு கலப்பை சார்த்தி | குறிய சகடத்தின்
உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால் |
நெடும் சுவர்
பறைந்த புகை சூழ் கொட்டில் | நெடிய சுவரிடத்தே
தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய, |
பருவ வானத்து
பா மழை கடுப்ப 190 | மாரிக்காலத்து
விசும்பிடத்தே பரவிய முகிலை ஒப்ப
190 |
கரு வை வேய்ந்த
கவின் குடி சீறூர் | கரிய (வரகு)வைக்கோலால்
வேய்ந்த அழகிய குடியிருப்பினையுடைய சிறிய ஊர்களில், |
நெடும் குரல்
பூளை பூவின் அன்ன | நெடிய கொத்தினையுடைய
சிறு பூளையின் பூவை ஒத்த |
குறும் தாள்
வரகின் குறள் அவிழ் சொன்றி | குறிய தாளினையுடைய
வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை, |
புகர் இணர்
வேங்கை வீ கண்டு அன்ன | புள்ளிபுள்ளியாகத்
தெரியும் கொத்தினையுடைய வேங்கைப் பூவைக் கண்டாற் போன்ற |
அவரை வான்
புழுக்கு அட்டி பயில்வுற்று
195 | அவரை விதையின்
(தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, துழாவுதலால் 195 |
இன் சுவை மூரல்
பெறுகுவிர் ஞாங்கர் | இனிய சுவையுள்ள
பருப்புச்சோறைப் பெறுவீர் – அந்நிலத்திற்கு மேல், |
குடி நிறை
வல்சி செம் சால் உழவர் | குடியிருப்பு நிறைந்த,
உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள் |
நடை நவில்
பெரும் பகடு புதவில் பூட்டி | நடை பயின்ற பெரிய
எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று, |
பிடி வாய் அன்ன
மடி வாய் நாஞ்சில் | பிடியின் வாயை ஒத்த,
மடங்கிய வாயையுடைய கலப்பையின் |
உடுப்பு முக
முழு கொழு மூழ்க ஊன்றி 200 | உடும்பின் முகத்தை
ஒத்த பெரும் கொழு மறைய அமுக்கி, 200 |
தொடுப்பு
எறிந்து உழுத துளர் படு துடவை | வளைவாக, விதைத்தவாறே,
உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை, |
அரி புகு
பொழுதின் இரியல் போகி | (கதிர்களை)அறுப்பதற்குச்
செல்லும்போது, (ஆட்களின் அரவத்தால்)நிலைகெட்டு ஓடி, |
வண்ண கடம்பின்
நறு மலர் அன்ன | (வெண்மையான)நிறத்தையுடைய
கடம்பின் நறிய பூவை ஒத்த |
வளர் இளம்
பிள்ளை தழீஇ குறும் கால் | வளரும் இளமையான
(தம்)குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு, குறிய காலினையும், |
கறை அணல்
குறும்பூழ் கட்சி சேக்கும்
205 | கரிய கழுத்தினையும்
உடைய காடைப்பறவை காட்டில் தங்கும் 205 |
வன்புலம் இறந்த
பின்றை மென் தோல் | வன்புலமான
முல்லைநிலத்தைக் கடந்த பின்பு – மெத்தென்ற தோலாலான |
மிதி உலை
கொல்லன் முறி கொடிற்று அன்ன | மிதி(த்து ஊதுகின்ற)
உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த |
கவை தாள் அலவன்
அளற்று அளை சிதைய | கவர்த்த காலையுடைய
நண்டின் சேற்று வளை கெடும்படி, |
பைம் சாய்
கொன்ற மண் படு மருப்பின் | பசிய கோரையை
(அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய |
கார் ஏறு பொருத
கண் அகன் செறுவின் 210 | கரிய ஆனேறுகள் பொருத
இடமகன்ற வயல்களில், 210 |
உழாஅ நுண் தொளி
நிரவிய வினைஞர் | (தம்மால்)உழப்படாத
(அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர் |
முடி நாறு
அழுத்திய நெடு நீர் செறுவில் | முடி(யாக வீசிய)நாற்றை
அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில் |
களைஞர் தந்த
கணை கால் நெய்தல் | களைபறிப்போர்
பறித்துத் தந்த திரண்ட தாளினையுடைய நெய்தலின் |
கள் கமழ் புது
பூ முனையின் முள் சினை | தேன் நாறுகின்ற புதிய
பூவை வெறுத்தாராயின், முள்ளையுடைய கொம்புகளையுடைய |
முகை சூழ்
தகட்ட பிறழ் வாய் முள்ளி
215 | அரும்புகள் சூழ்ந்த
இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின் 215 |
கொடும் கால் மா
மலர் கொய்துகொண்டு அவண | வளைந்த காம்பினையுடைய
கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய |
பஞ்சாய் கோரை
பல்லின் சவட்டி | பஞ்சாய்க் கோரையைப்
பல்லால் சிதைத்து(க் கிழித்து) |
புணர் நார்
பெய்த புனைவு இன் கண்ணி | முடிந்த நாரால் கட்டிய
உருவாக்கம் இனிதான மாலையை |
ஈர் உடை இரும்
தலை ஆர சூடி | ஈரையுடைய கரிய தலை
நிறையும்படி சூடி, |
பொன் காண்
கட்டளை கடுப்ப கண்பின் 220 | பொன்னை(உரைத்து)க்
காணும் கட்டளைக்கல்லை ஒப்ப, சம்பங்கோரையின் 220 |
புன் காய்
சுண்ணம் புடைத்த மார்பின் | புல்லிய காயில்
தோன்றின தாதை அடித்துக்கொண்ட மார்பினையும், |
இரும்பு
வடித்து அன்ன மடியா மென் தோல் | இரும்பைத்
தகடாக்கினாற் போல் சுருக்கமில்லாத மெல்லிய தோலினையும் உடைய, |
கரும் கை
வினைஞர் காதல் அம் சிறாஅர் | கரிய கையுடைய
தொழிலாளரின் காதல் இளையோர்கள் |
பழம் சோற்று
அமலை முனைஇ வரம்பில் | பழைய சோற்றின் கட்டியை
வெறுத்து, வரம்பிடத்தே |
புது வை
வேய்ந்த கவி குடில் முன்றில்
225 | புதிய வைக்கோலால்
வேய்ந்த கவிந்த குடிலின் முற்றத்தில் 225 |
அவல் எறி
உலக்கை பாடு விறந்து அயல | அவலை இடிக்கும்
உலக்கையின் ஓசை செறிகையினால், (அதற்கு)அருகிலுள்ள |
கொடு வாய்
கிள்ளை படு பகை வெரூஉம் | வளைந்த வாயையுடைய
கிளிகள் (தமக்கு)உண்டாகின்ற பகையாகக் கருதி அஞ்சும் |
நீங்கா யாணர்
வாங்கு கதிர் கழனி | இடையறாத
புதுவருவாயினையுடைய வளைந்த கதிர்களையுடைய கழனியிடத்து, |
கடுப்பு உடை
பறவை சாதி அன்ன | (கொட்டினால்
ஏற்படும்)கடுப்பு உடைய (பறவை இனமான)குளவித் திரளை ஒத்த |
பைது அற
விளைந்த பெரும் செந்நெல்லின்
230 | பசுமை அறும்படி
முற்றின பெரிய செந்நெல்லின்
230 |
தூம்பு உடை
திரள் தாள் துமித்த வினைஞர் | உள்துளை உடைய திரண்ட
தாளை அறுத்த வினைஞர், |
பாம்பு உறை
மருதின் ஓங்கு சினை நீழல் | பாம்பு கிடக்கின்ற
மருதமரத்தின் உயர்ந்த கிளையால் உண்டாகிய நிழலில்(உள்ள) |
பலி பெறு வியன்
களம் மலிய ஏற்றி | பிச்சை பெறும் அகன்ற
களங்களில் நிறைய ஏற்றி, |
கணம் கொள்
சுற்றமொடு கை புணர்ந்து ஆடும் | கூட்டம் கொண்ட
(தம்)சுற்றத்தோடு கைகோர்த்து ஆடுகின்ற |
துணங்கை அம்
பூதம் துகில் உடுத்தவை போல் 235 | துணங்கைக் கூத்தில்
அழகிய பூதங்கள் (வெண்மையான)ஆடையை உடுத்தி நின்றவை போல 235 |
சிலம்பி வால்
நூல் வலந்த மருங்கின் | சிலந்தியின் வெண்மையான
நூல் சூழ்ந்த பக்கத்தினையுடைய |
குழுமு நிலை
போரின் முழு முதல் தொலைச்சி | (பலவாகத்)திரண்ட
தன்மையையுடைய (நெற்)போர்களின் பெரிய அடியைப் பிரித்து விரித்து, |
பகடு ஊர்பு
இழிந்த பின்றை துகள் தப | கடா விட்டுப்போன
பின்பு, தூசு போக, |
வையும்
துரும்பும் நீக்கி பைது அற | வைக்கோலையும்
கூளத்தையும் நீக்கி, ஈரம் உலர, |
குட காற்று
எறிந்த குப்பை வட பால்
240 | மேற்காற்றில்
(தூவித்)தூற்றின நெற்பொலி, வட திசைக்கண்(உள்ள) 240 |
செம்பொன்மலையின்
சிறப்ப தோன்றும் | சிவந்த பொன்(போன்ற
மேரு) மலையினும் மாண்புடையதாகத் தோன்றும் |
தண் பணை தழீஇய
தளரா இருக்கை | குளிர்ந்த வயலையுடைய
மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்புகளில் – |
பகட்டு ஆ ஈன்ற
கொடு நடை குழவி | எருதுகளோடு கூடிய
பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைக் |
கவை தாம்பு
தொடுத்த காழ் ஊன்று அல்குல் | கட்டின நெடிய
தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும், |
ஏணி எய்தா நீள்
நெடு மார்பின் 245 | ஏணிக்கும் எட்டாத மிக
நெடிய வடிவினையும்,
245 |
முகடு துமித்து
அடுக்கிய பழம் பல் உணவின் | தலையைத் திறந்து உள்ளே
சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய, |
குமரிமூத்த
கூடு ஓங்கு நல் இல் | கன்னிமையோடே முதிர்ந்த
கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்; |
தச்ச சிறாஅர்
நச்ச புனைந்த | தச்சர்களின்
பிள்ளைகளும் விரும்பும்படி அழகிதாய்ப் பண்ணின |
ஊரா நல் தேர்
உருட்டிய புதல்வர் | (ஏறி)ஊரப்படாத நல்ல
சிறு தேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள் |
தளர் நடை
வருத்தம் வீட அலர் முலை 250 | (தமது)தளர் நடை(யால்
உண்டான) வருத்தம் நீங்கும்படி, பரந்த முலையினையுடைய 250 |
செவிலி அம்
பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து | செவிலித் தாயாராகிய
அழகிய மகளிரைத் தழுவிக்கொண்டு, பாலை நிரம்ப உண்டு, |
அமளி துஞ்சும்
அழகு உடை நல் இல் | (தமது)படுக்கையில்
துயிலும் அழகையுடைய நல்ல இல்லினையும் (உடைய) |
தொல் பசி அறியா
துளங்கா இருக்கை | நீடித்திருக்கும்
பசியை அறியாத நிலைகெடாத குடியிருப்புகள்(நிறைந்த) |
மல்லல் பேரூர்
மடியின் மடியா | வளன் மிக்க பெரிய
ஊரின்கண் தங்குவீராயின், தொழில் ஒழிந்திராத |
வினைஞர் தந்த
வெண்ணெல் வல்சி 255 | உழவர் தந்த வெண்மையான
நெற்சோற்றை
255 |
மனை வாழ்
அளகின் வாட்டொடும் பெறுகுவிர் | மனையில் வாழும்
பெட்டைக்கோழி(யைக்கொன்று) வாட்டிய பொரியலோடு பெறுவீர் – |
மழை விளையாடும்
கழை வளர் அடுக்கத்து | முகில்கள் விளையாடும்
மூங்கில் வளர்கின்ற பக்கமலையில், |
அணங்கு உடை
யாளி தாக்கலின் பல உடன் | (தம்மை)வருத்துதலையுடைய
யாளி தாக்குகையால், பலவும் கூடிக் |
கணம் சால்
வேழம் கதழ்வுற்று ஆஅங்கு | கூட்டமான யானைகள்
கலங்கிக் கதறினாற் போன்று, |
எந்திரம்
சிலைக்கும் துஞ்சா கம்பலை
260 | ஆலை ஆரவாரிக்கும்
மாறாத ஓசையுடைய
260 |
விசயம் அடூஉம்
புகை சூழ் ஆலைதொறும் | கருப்பஞ்சாற்றைக்
(கட்டியாகக்)காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்தோறும், |
கரும்பின் தீம்
சாறு விரும்பினிர் மிசைமின் | கரும்பினது இனிய
சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர் – |
வேழம் நிரைத்து
வெண் கோடு விரைஇ | மூங்கில்கோலை நெடு
வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி, |
தாழை முடித்து
தருப்பை வேய்ந்த | தாழைநாரால்
(இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த |
குறி இறை
குரம்பை பறி உடை முன்றில்
265 | குறுகிய இறப்பையுடைய
குடிலின், (மீன்பிடிக்கும்)பறியினையுடைய முற்றத்தில் 265 |
கொடும் கால்
புன்னை கோடு துமித்து இயற்றிய | வளைந்த காலையுடைய
புன்னைகளின் கொம்புகளை வெட்டி(க் கால்களாகக்கொண்டு) உருவாக்கிய, |
பைம் காய்
தூங்கும் பாய் மணல் பந்தர் | (படர்ந்த
கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில், |
இளையரும்
முதியரும் கிளையுடன் துவன்றி | இளையவர்களும்
முதியவர்களும் சுற்றத்துடன் நிறைந்திருந்து, |
புலவு நுனை
பகழியும் சிலையும் மான | புலால் நாறும்
முனையினையுடைய அம்பையும் வில்லையும் ஒப்பச் |
செ வரி கயலொடு
பச்சிறா பிறழும் 270 | சிவந்த வரியினையுடைய
கயல்களோடே பசிய இறாப் பிறழ்ந்துநின்ற, 270 |
மை இரும்
குட்டத்து மகவொடு வழங்கி | கரிய பெரிய ஆழமான
குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி, |
கோடை நீடினும்
குறைபடல் அறியா | கோடைக்காலம்
நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத, |
தோள் தாழ்
குளத்த கோடு காத்திருக்கும் | தோள்களும் அமிழும்
குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும், |
கொடு முடி
வலைஞர் குடி வயின் சேப்பின் | வளைந்த முடிகளையுடைய
வலைஞருடைய குடியிருப்பில் தங்குவீராயின் – |
அவையா அரிசி
அம் களி துழவை 275 | அவிக்காத(நெல்லின்)
அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை 275 |
மலர் வாய்
பிழாவில் புலர ஆற்றி | அகன்ற வாயையுடைய
தட்டுப் பிழாவில் உலரும்படி ஆற்றி, |
பாம்பு உறை
புற்றின் குரும்பி ஏய்க்கும் | பாம்பு வாழும்
புற்றிலிருக்கும் புற்றாம்பழஞ் சோற்றை ஒக்கும், |
பூம் புற நல்
அடை அளைஇ தேம் பட | பொலிவுள்ள
புறத்தினையுடைய நல்ல (நெல்)முளையை (இடித்து அதில்)கலந்து, இனிமை மிக |
எல்லையும்
இரவும் இரு முறை கழிப்பி | பகலும் இரவும் இருமுறை
போக்கி, |
வல் வாய்
சாடியின் வழைச்சு அற விளைந்த
280 | கெட்டியான வாயினையுடைய
சாடியில் இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றின(பின்), 280 |
வெம் நீர்
அரியல் விரல் அலை நறும் பிழி | வெந்நீரில்(போட்டு)
இறுத்ததை விரலிடுக்கில் அலைத்துப்(பின் விரல்மூடிப்) பிழிந்த நறிய கள்ளை, |
தண் மீன்
சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் | பச்சை மீனைச்
சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர் – |
பச்சூன் பெய்த
சுவல் பிணி பைம் தோல் | (வாடூனன்றி)பச்சை
இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய |
கோள் வல்
பாண்மகன் தலை வலித்து யாத்த | (மீனைக்)கொள்ளுதலில்
வல்ல பாண்மகனுடைய தலையில் வலித்துக் கட்டின |
நெடும் கழை
தூண்டில் நடுங்க நாண் கொளீஇ 285 | நெடிய மூங்கில்
கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட 285 |
கொடு வாய்
இரும்பின் மடி தலை புலம்ப | வளைந்த வாயினையுடைய
தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும், |
பொதி இரை
கதுவிய போழ் வாய் வாளை | பொதிந்த இரையைக் கௌவி
(அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன், |
நீர் நணி
பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் | நீர் அருகிலுள்ள
பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும், |
நீத்து உடை
நெடும் கயம் தீ பட மலர்ந்த | நீந்திக்கடக்க வேண்டிய
ஆழத்தையுடைய நெடிய குளத்தின்கண் நெருப்பின் தன்மையுண்டாகப் பூத்த |
கடவுள் ஒண் பூ
அடைதல் ஓம்பி 290 | கடவுள்
(விரும்புதற்குரிய)ஒளிரும் (தாமரைப்)பூவைப் பறித்துச் சூடுதலைச் செய்யாமல்
தவிர்த்து, 290 |
உறை கால் மாறிய
ஓங்கு உயர் நனம் தலை | துளி சொரிதலை ஒழிந்த,
ஓங்கி உயர்ந்த பரந்த இடத்தையுடைத்தாகிய, |
அகல் இரு
வானத்து குறைவில் ஏய்ப்ப | அகன்ற பெரிய
வானத்திடத்தே தோன்றும் குறை வில்(லாகிய வானவில்)லை ஒப்ப |
அரக்கு இதழ்
குவளையொடு நீலம் நீடி | சாதிலிங்கம்
(போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து |
முரண் பூ
மலிந்த முது நீர் பொய்கை | (ஒன்றற்கொன்று
நிறம்)மாறுபடும் (ஏனைப்)பூக்களும் மிக்க, நீண்டநாள் நீர்(இருக்கும்)
பொய்கைகளில், |
குறுநர் இட்ட
கூம்பு விடு பன் மலர் 295 | பூப்பறிப்பார்
உங்களுக்கிட்ட குவிதல் நெகிழ்ந்த பல பூக்களையும், 295 |
பெருநாள்
அமையத்து பிணையினிர் கழிமின் | விழாக்கோலம் (கொண்டாற்
போல)சூடியவராய்ப் போவீராக – |
செழும் கன்று
யாத்த சிறு தாள் பந்தர் | கொழுத்த கன்றைக்
கட்டின சிறிய கால்களையுடைய பந்தலினையும், |
பைஞ்சேறு
மெழுகிய படிவ நல் நகர் | பசிய சாணக் கரைசலால்
மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும், |
மனை உறை
கோழியொடு ஞமலி துன்னாது | மனைகளில் தங்கும்
கோழிகளுடன் நாயும் அருகே வராமல்(இருக்கும்), |
வளை வாய்
கிள்ளை மறை விளி பயிற்றும்
300 | வளைந்த வாயினையுடைய
கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும் 300 |
மறை காப்பாளர்
உறை பதி சேப்பின் | வேதத்தைக்
காக்கின்றோர் இருக்கின்ற ஊரிடத்தே தங்குவீராயின் – |
பெரு நல்
வானத்து வட வயின் விளங்கும் | பெரிய நல்ல விசும்பில்
வடதிசைக்கண் நின்று விளங்கும் |
சிறுமீன்
புரையும் கற்பின் நறு நுதல் | சிறிய விண்மீனாகிய
அருந்ததியை ஒக்கும் கற்பினையும், நறிய நுதலினையும், |
வளை கை மகடூஉ
வயின் அறிந்து அட்ட | வளையலை அணிந்த
கையினையும் உடைய பார்ப்பனி இடமறிந்து ஆக்கிய |
சுடர் கடை பறவை
பெயர் படு வத்தம் 305 | ஞாயிறு பட்ட காலத்தே,
பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும், 305 |
சேதா நறு மோர்
வெண்ணெயின் மாதுளத்து | சிவலைப் பசுவின் நறிய
மோரில், வெண்ணெயில் (வெந்த)மாதுளையின் |
உருப்புறு
பசும் காய் போழொடு கறி கலந்து | வெம்மையுற்ற பசிய
காயின் வகிரோடு, மிளகுப்பொடி கலந்து, |
கஞ்சக நறு முறி
அளைஇ பைம் துணர் | கறிவேப்பிலை மரத்தின்
நறிய இலை(யைக் கிள்ளிக்)கலக்கிவிட்டு, பசிய கொத்துக்களையுடைய |
நெடு மர
கொக்கின் நறு வடி விதிர்த்த | நெடிய மரமாகிய மாவின்
நறிய வடுவினைத் துண்டாக்கிப்போட்ட, |
தகை மாண்
காடியின் வகைபட பெறுகுவிர்
310 | ஊறவைத்தல் நன்கமைந்த
ஊறுகாயோடும் வகை வகையாகப் பெறுவீர் – 310 |
வண்டல் ஆயமொடு
உண்துறை தலைஇ | (சிறு வீடு
கட்டும்)விளையாட்டுடைய தோழியருடன் நீருண்ணும் துறையில் கூடி |
புனல் ஆடு
மகளிர் இட்ட பொலம் குழை | நீராடுகின்ற மகளிர்
(நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை, |
இரை தேர் மணி
சிரல் இரை செத்து எறிந்தென | இரையைத் தேடுகின்ற
(நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து, |
புள் ஆர்
பெண்ணை புலம்பு மடல் செல்லாது | பறவைகள்
நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலுக்குச் செல்லாமல், |
கேள்வி அந்தணர்
அரும் கடன் இறுத்த 315 | நூற்கேள்வியையுடைய
அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த 315 |
வேள்வி தூணத்து
அசைஇ யவனர் | வேள்விச்சாலையின்
வேள்வித்தூணின்மேல் இருக்க, (அப்பறவை)யவனரி |
ஓதிம விளக்கின்
உயர் மிசை கொண்ட | அன்ன(த்தைப்போன்ற
தொங்கு) விளக்கைப்போலவும், (மகரக்குழை, விளக்கின் தீச்சுடர்)உயர்ந்த வானில்
இடங்கொண்ட |
வைகுறு மீனின்
பைபய தோன்றும் | வைகறை வெள்ளிமீன்
போலவும் மினுக்மினுக் என்று ஒளிவிட்டும் தோன்றும் |
நீர்பெயற்று
எல்லை போகி பால் கேழ் | நீரின் பெயர்கொண்ட
நீர்ப்பாயல்துறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று – பாலின் நிறமான |
வால் உளை
புரவியொடு வட வளம் தரூஉ 320 | வெண்மையான
தலைச்சிறகுகளையுடைய குதிரைகளுடன் வடதிசையின் வளங்களைக் கொணரும் 320 |
நாவாய் சூழ்ந்த
நளி நீர் படப்பை | மரக்கலங்கள் சூழ்ந்த
பெருமையையுடைய கடற்பக்கத்தினையும், |
மாடம் ஓங்கிய
மணல் மலி மறுகின் | மாடங்கள் உயர்ந்து
நின்ற மணல் மிக்க தெருக்களையும், |
பரதர் மலிந்த
பல் வேறு தெருவின் | பரதவர் மிக்கு
வாழ்கின்ற பலவாய் வேறுபட்ட தெருக்களையும், |
சிலதர்
காக்கும் சேண் உயர் வரைப்பின் | தொழில் செய்வோர்
காக்கும் மிகவும் உயரமான பண்டசாலைகளையும், |
நெல் உழு
பகட்டொடு கறவை துன்னா 325 | நெல்லிற்கு உழுகின்ற
எருதுகளுடன் (பால் தரும்)பசுக்கள் நெருங்காவாய், 325 |
மேழக தகரோடு
எகினம் கொட்கும் | ஆட்டுக்கிடாயோடே
நாயும் சுழன்று திரியும், |
கூழ் உடை நல்
இல் கொடும் பூண் மகளிர் | உணவுடைய நல்ல
வீடுகளையும், வளைந்த அணிகலன்களையுடைய மகளிர், |
கொன்றை மென்
சினை பனி தவழ்பவை போல் | கொன்றையின்
அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளில் பனிப்படலம் தவழ்பவை போல |
பைம் காழ்
அல்குல் நுண் துகில் நுடங்க | பசிய மணிகளைக் கோத்த
வடங்களையுடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய, |
மால் வரை
சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்
330 | பெருமையையுடைய
பக்கமலையில் மனவெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும் 330 |
பீலி மஞ்ஞையின்
இயலி கால | தோகையையுடைய மயில்
போல் உலாவி, கால்களிடத்தனவாகிய |
தமனிய பொன்
சிலம்பு ஒலிப்ப உயர் நிலை | செம்பொன்னால் செய்த
சிலம்புகள் ஆரவாரிப்ப, மேல்நிலையாகிய |
வான் தோய்
மாடத்து வரி பந்து அசைஇ | வானத்தைத் தீண்டுகின்ற
மாடத்திகண், நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து, |
கை புனை குறும்
தொடி தத்த பைபய | கையில் புனைந்த
குறுந்தொடி அசையும்படி, மெல்ல மெல்ல |
முத்த வார்
மணல் பொன் கழங்கு ஆடும்
335 | முத்தை ஒத்த வார்ந்த
மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும், 335 |
பட்டின
மருங்கின் அசையின் முட்டு இல் | பட்டினத்திடத்தே
இளைப்பாறுவீராயின் – முட்டுப்பாடில்லாத |
பைம் கொடி
நுடங்கும் பலர் புகு வாயில் | பசிய கொடிகள் அசைகின்ற
பலரும் நுழையும் வாயிலிடத்து, |
செம் பூ தூய
செதுக்கு உடை முன்றில் | சிவந்த பூக்கள்
தூவப்பட்ட (புல் முதலியவற்றைச்)செதுக்கிய முற்றத்தில், |
கள் அடு மகளிர்
வள்ளம் நுடக்கிய | கள்ளைச் சமைக்கின்ற
மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த |
வார்ந்து உகு
சில் நீர் வழிந்த குழம்பின் 340 | வழிந்து சிந்தின
கழுநீர் வழிந்த குழம்பிடத்து,
340 |
ஈர் சேறு ஆடிய
இரும் பல் குட்டி | ஈரத்தையுடைய சேற்றை
அளைத்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய |
பல் மயிர்
பிணவொடு பாயம் போகாது | பலவாகிய மயிர்களையுடைய
பெண் பன்றிகளோடே மனவிருப்பம் கொள்ளாமல், |
நெல்மா வல்சி
தீற்றி பல் நாள் | நெல்லின் உமியை
மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும் |
குழி நிறுத்து
ஓம்பிய குறும் தாள் ஏற்றை | குழியிலே நிறுத்திப்
பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின் |
கொழு நிண
தடியொடு கூர் நறா பெறுகுவிர்
345 | கொழுவிய நிணத்தையுடைய
தசையோடு களிப்பு மிக்க கள்ளைப் பெறுவீர் – 345 |
வானம் ஊன்றிய
மதலை போல | வானம் (வீழாதபடி
முட்டுக்காலாக) ஊன்றிவைத்த பற்றுக்கோல் போல |
ஏணி சாத்திய
ஏற்ற அரும் சென்னி | ஏணியைச் சாத்திய
ஏறுதற்கரிய தலையினையுடைய, |
விண் பொர
நிவந்த வேயா மாடத்து | விண்ணைத் தீண்டும்படி
உயர்ந்த வேயாது (சாந்திட்ட)மாடத்தில், |
இரவில் மாட்டிய
இலங்கு சுடர் ஞெகிழி | இரவில் கொளுத்தின
விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து |
உரவு நீர்
அழுவத்து ஓடு கலம் கரையும்
350 | பெருநீர்ப்பரப்பாகிய
கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும் 350 |
துறை பிறக்கு
ஒழிய போகி கறை அடி | துறை பின்னே கிடக்க
(கடந்து) போய் – உரல் போன்ற அடியினையுடைய |
குன்று உறழ்
யானை மருங்குல் ஏய்க்கும் | மலையோடு மாறுபடுகின்ற
யானையின் உடம்பை ஒக்கும் |
வண் தோட்டு
தெங்கின் வாடு மடல் வேய்ந்த | வளவிய தோட்டினையுடைய
தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த, |
மஞ்சள்
முன்றில் மணம் நாறு படப்பை | மஞ்சளையுடைய
முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய |
தண்டலை உழவர்
தனி மனை சேப்பின் 355 | தோப்புகளில் வாழும்
உழவரின் தனித்தனியாக அமைந்த மனைகளில் தங்கினால் – 355 |
தாழ் கோள்
பலவின் சூழ் சுளை பெரும் பழம் | தாழ்ந்த குலைகளையுடைய
பலாவின், சூழ்ந்து அமைந்துள்ள சுளைகளையுடைய பெரிய பழத்தையும், |
வீழ் இல் தாழை
குழவி தீம் நீர் | விழுதில்லாத தாழையாகிய
தென்னையின் இளநீரின் இனிய நீரையும், |
கவை முலை இரும்
பிடி கவுள் மருப்பு ஏய்க்கும் | கவைத்த முலையையுடைய
குறிய பெண்யானையின் கடைவாயின் கொம்புகளை ஒக்கும், |
குலை முதிர்
வாழை கூனி வெண் பழம் | குலையில் முதிர்ந்த
வாழையின் வளைந்த வெளுத்த பழத்தையும், |
திரள் அரை
பெண்ணை நுங்கொடு பிறவும்
360 | திரண்ட அடியினையுடைய
பனையின் நுங்கோடே, வேறும்
360 |
தீம் பல் தாரம்
முனையின் சேம்பின் | இனிய பல பண்டங்களையும்
வெறுப்பின், சேம்பின் |
முளை புற
முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் | முளையைப் புறத்தேயுடைய
முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர் – பகல் மழையின் |
மழை வீழ்ந்து
அன்ன மா தாள் கமுகின் | மேகங்கள் விழுந்ததைப்
போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின் |
புடை சூழ்
தெங்கின் மு புடை திரள் காய் | பக்கத்தே சூழ்ந்த
தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய், |
ஆறு செல்
வம்பலர் காய் பசி தீர
365 | வழிச்செல்கின்ற
புதியோருடைய மிக்க பசி தீரும்படி, 365 |
சோறு அடு
குழிசி இளக விழூஉம் | (அவர்)சோற்றை
ஆக்குகின்ற பானை அசையும்படி விழுகின்ற |
வீயா யாணர்
வளம் கெழு பாக்கத்து | கெடாத
புதுவருவாயினையுடைய செல்வம் பொருந்தின பாக்கத்து, |
பல் மரம் நீள்
இடை போகி நல் நகர் | பல மரங்கள் வளர்ந்த
நீண்ட வழியில் போய், நல்ல நகரங்கள்தோறும், |
விண் தோய்
மாடத்து விளங்கு சுவர் உடுத்த | விண்ணைத் தீண்டும்
மாடங்களில் விளங்கிநின்ற மதில் சூழ்ந்த, |
வாடா வள்ளியின்
வளம் பல தரூஉம் 370 | வாடாத வள்ளியாகிய
வள்ளிக் கூத்தினைக் கொண்ட, வளங்கள் பலவற்றையும் தருகின்ற 370 |
நாடு பல கழிந்த
பின்றை நீடு குலை | நாடுகள் பலவற்றையும்
கடந்த பின்பு – நீண்ட பூங்கொத்துகளையுடைய |
காந்தள் அம்
சிலம்பில் களிறு படிந்து ஆங்கு | காந்தளையுடைய அழகிய
பக்கமலையில் யானை கிடந்தாற் போன்று |
பாம்பு அணை
பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் | பாம்பணையாகிய
படுக்கையில் துயில் கொண்டோனுடைய திருவெஃகாவிடத்து, |
வெயில் நுழைபு
அறியா குயில் நுழை பொதும்பர் | வெயில் நுழைந்து
அறியாத, குயில் நுழையும் சோலையில், |
குறும் கால்
காஞ்சி சுற்றிய நெடும் கொடி 375 | குறிய காலினையுடைய
காஞ்சிமரத்தைச் சூழ்ந்த நெடிய கொடியினையும், 375 |
பாசிலை
குருகின் புன் புற வரி பூ | பசிய இலையினையும் உடைய
குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள், |
கார் அகல்
கூவியர் பாகொடு பிடித்த | கரிய வட்டிலில் அப்ப
வாணிகர் பாகுடன் பிடித்த |
இழை சூழ்
வட்டம் பால் கலந்தவை போல் | நூல் போலச்
சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் பாலிலே கிடந்தவை போல், |
நிழல் தாழ்
வார் மணல் நீர் முகத்து உறைப்ப | நிழல் கிடந்த வார்ந்த
மணலிடத்துக் குழிகளில் நின்ற நீரிடத்தே மிக விழும்படி, |
புனல்
கால்கழீஇய பொழில்தொறும் திரள் கால் 380 | மழைநீர்
தூய்மைப்படுத்திய பொழில்கள்தோறும், திரண்ட தண்டினையுடைய 380 |
சோலை கமுகின்
சூல் வயிற்று அன்ன | சோலையிடத்து நிற்கும்
கமுகின் சூல்கொண்ட வயிற்றை ஒத்த |
நீல பை குடம்
தொலைச்சி நாளும் | நீலநிறம் அமைந்த தோல்
பையிலுள்ள கள்ளையுண்டு – நாள்தோறும் |
பெரு மகிழ்
இருக்கை மரீஇ சிறு கோட்டு | பெரிய
மகிழ்ச்சியையுடைய இருக்கைகளில் தங்கி, சிறிய கோட்டையுடைய |
குழவி திங்கள்
கோள் நேர்ந்து ஆங்கு | இளைய திங்களைச்
செம்பாம்பு தீண்டினாற் போன்று |
சுறவு வாய்
அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல்
385 | மகரவாயாகிய
தலைக்கோலத்தைச் சேர்த்தின சுரும்புகள் சூழும் ஒளியையுடைய நுதலினையும், 385 |
நறவு பெயர்த்து
அமர்த்த நல் எழில் மழை கண் | தேனை உருப்பெயர்த்துக்
அமைத்ததைப் போன்ற நல்ல அழகிய குளிர்ச்சியுடைய கண்ணையும் கொண்ட |
மடவரல்
மகளிரொடு பகல் விளையாடி | மடப்பம்
தோற்றுதலையுடைய மகளிரோடு பகற்பொழுது விளையாடி; |
பெறற்கு அரும்
தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் | பெறுதற்கரிய பழைமையான
புகழினையுடைய துறக்கத்தை ஒக்கும் |
பொய்யா மரபின்
பூ மலி பெரும் துறை | பொய்க்காத மரபினையுடைய
பூக்கள் மிகுகின்ற பெரிய துறையிடத்தே, |
செவ்வி
கொள்பவரோடு அசைஇ அ வயின் 390 | (இளவேனில்)இன்பத்தை
நுகர்வாரோடு இளைப்பாறி; அவ்விடத்தில் 390 |
அரும் திறல்
கடவுள் வாழ்த்தி சிறிது நும் | அரிய திறலினையுடைய
கடவுளை வாழ்த்தி, சிறிதே உம்முடைய |
கரும் கோட்டு
இன் இயம் இயக்கினிர் கழிமின் | கரிய தண்டினையுடைய
இனிய இசைக்கருவியை இயக்கியவராய் (அங்கிருந்து)போமின் – |
காழோர் இகழ்
பதம் நோக்கி கீழ | பரிக்கோலையுடையோர்
கவனம் சிதைந்த நேரம் பார்த்து, கீழேயுள்ள |
நெடும் கை யானை
நெய் மிதி கவளம் | நெடிய கைகளையுடைய
யானைக்கு இடும் நெய்வார்த்து மிதித்த கவளத்தை, |
கடும் சூல்
மந்தி கவரும் காவில்
395 | முதற் சூலையுடைய மந்தி
கவர்ந்துகொண்டுபோகும் சோலையினையும்; 395 |
களிறு கதன்
அடக்கிய வெளிறு இல் கந்தின் | (அக்)களிற்று
யானைகளின் சினத்தை அடக்கிய முதிராத தன்மை இல்லாத தறிகளையும்; |
திண் தேர்
குழித்த குண்டு நெடும் தெருவில் | திண்ணிய தேர்கள்
(ஓடிக்)குழித்த பள்ளங்களுள்ள நெடிய தெருக்களையும்; |
படை தொலைபு
அறியா மைந்து மலி பெரும் புகழ் | (பகைவரின்)படையின்கண்
தோல்வியடையாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின் |
கடை கால்யாத்த
பல் குடி கெழீஇ | எல்லையை மறைத்த,
பலவாகிய மறவர் குடியிருப்புகளைச் சேர்ந்து, |
கொடையும்
கோளும் வழங்குநர் தடுத்த
400 | விற்பதும் வாங்குவதும்
(நிறைந்து) நடந்துசெல்வோரைத் தடுத்து நிறுத்துவதும், 400 |
அடையா வாயில்
மிளை சூழ் படப்பை | (பரிசிலர்க்கு)அடையாததும்
ஆன வாயிலினையும்; காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும்; |
நீல் நிற
உருவின் நெடியோன் கொப்பூழ் | நீல நிறத்தையுடைய
வடிவினையுடைய திருமாலின் உந்தியாகிய |
நான்முக ஒருவர்
பயந்த பல் இதழ் | நான்முகனாகிய ஒருவனைப்
பெற்ற பல இதழ்களையுடைய |
தாமரை
பொகுட்டின் காண்வர தோன்றி | தாமரையின் பொகுட்டைப்
போன்று அழகுவிளங்கத் தோன்றி, |
சுடுமண் ஓங்கிய
நெடு நகர் வரைப்பின் 405 | செங்கல்லால்
செய்யப்பட்டு உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும்; 405 |
இழுமென்
புள்ளின் ஈண்டு கிளை தொழுதி | இழுமென்னும்
ஓசையையுடைய திரண்ட பறவையினங்களின் திரளையுடைய, |
கொழு மென்
சினைய கோளியுள்ளும் | கொழுவிய மெல்லிய
கொம்புகளையுடைனவாகிய, (பூவாமல் காய்க்கும்)கோளியாகிய மரங்களினுள்ளும், |
பழம்
மீக்கூறும் பலாஅ போல | பழத்தால் மேலாகச்
சொல்லும் பலாமரத்தைப் போன்று, |
புலவு கடல்
உடுத்த வானம் சூடிய | புலால் நாற்றத்தையுடைய
கடல்சூழ்ந்த வானம் கவிந்த |
மலர் தலை
உலகத்துள்ளும் பலர் தொழ 410 | அகன்ற இடத்தையுடைய
உலகத்து நகரங்களினுள்ளும், பலரும் தொழும்படி, 410 |
விழவு மேம்பட்ட
பழ விறல் மூதூர் | விழாக்களால் மேம்பட்ட
பழைய வெற்றிச்சிறப்பையும் உடைய காஞ்சிநகர் – |
அம் வாய் வளர்
பிறை சூடி செ வாய் | அழகிய வாயைக்கொண்ட
வளர்பிறையைச் சூடிச், சிவந்த இடத்தையுடைய |
அந்தி வானத்து
ஆடு மழை கடுப்ப | அந்தி(ப்பொழுதின்
செக்கர்)வானத்தே அசைகின்ற முகில்களை ஒப்ப, |
வெண் கோட்டு
இரும் பிணம் குருதி ஈர்ப்ப | வெண்மையான
கொம்பினையுடைய கரிய (யானையின்)பிணத்தைக் குருதி(யாறு) இழுத்துச்செல்லும்படி, |
ஈரைம்பதின்மரும்
பொருது களத்து அவிய 415 | நூற்றுவரும்
போரிட்டுப் போர்க்களத்தே அழியும்படி, 415 |
பேர் அமர்
கடந்த கொடுஞ்சி நெடும் தேர் | பெரிய போரினை வென்று
கடந்த, கொடுஞ்சியுள்ள, நெடிய தேரினையுடைய, |
ஆரா செருவின்
ஐவர் போல | தோற்காத போரினையுடைய
பாண்டவரைப் போன்று, |
அடங்கா
தானையோடு உடன்று மேல்வந்த | (எண்ணில்)அடங்காத
படையுடன் சினந்து (தன்)மேல் வந்த |
ஒன்னா தெவ்வர்
உலைவு இடத்து ஆர்த்து | (தன் ஏவலைப்)பொருந்தாத
பகைவர் தோற்றவிடத்தே (வெற்றிக்களிப்புத் தோன்ற)ஆரவாரித்து, |
கச்சியோனே கை
வண் தோன்றல் 420 | காஞ்சிபுரத்துள்ளான்,
கை(யால் வழங்கும்)வண்மையில் சிறந்தவன்(தொண்டைமானிளந்திரையன்), 420 |
நச்சி
சென்றோர்க்கு ஏமம் ஆகிய | (அவன்)தன்னை
விரும்பித் (தன்பால்)எய்தினோர்க்குப் பாதுகாவல் ஆகிய |
அளியும்
தெறலும் எளிய ஆகலின் | அருள்செய்தலும்,
(தன்னைப் பகைத்தோரை)அழித்தலும் (தனக்கு)எளிய (செயல்களே)ஆகலான், |
மலைந்தோர்
தேஎம் மன்றம் பாழ்பட | (தன்னை)எதிர்ப்போரின்
ஊர்களிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் பாழ்படவும், |
நயந்தோர் தேஎம்
நன் பொன் பூப்ப | (தன்னிடம்)நயந்துகொண்டவர்
நாடுகள் நல்ல பொன் பூத்துத் திகழவும், |
நட்பு கொளல்
வேண்டி நயந்திசினோரும் 425 | நட்புக் கொள்ளுதலை
வேண்டி விரும்பினவர்களும்,
425 |
துப்பு கொளல்
வேண்டிய துணையிலோரும் | (அவன்)வலியை(த்
துணையாக)க்கொள்ளக் கருதிய வேறோர் உதவியில்லாதவர்களும் (ஆகிய), |
கல் வீழ் அருவி
கடல் படர்ந்து ஆங்கு | மலையினின்றும்
விழுகின்ற அருவி கடலில் படர்ந்ததைப் போல் |
பல் வேறு
வகையின் பணிந்த மன்னர் | பலவேறு வகைகளாலும்
கீழ்ப்படிந்த அரசர்கள் – |
இமையவர்
உறையும் சிமைய செ வரை | தேவர்கள் இருக்கும்
உச்சியையுடைய செவ்விய மலையின்கண் |
வெண் திரை
கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு
430 | வெண்மையான
(நீருள்ள)ஓடைகள் கிழித்தோடுதலால் பளபளக்கும் ஒளியுடைய நெடிய கரத்தினின்றும் 430 |
பொன் கொழித்து
இழிதரும் போக்கு அரும் கங்கை | பொன்னைக்
கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின் |
பெரு நீர்
போகும் இரியல் மாக்கள் | பெரிய நீரைக்
கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள் |
ஒரு மர
பாணியில் தூங்கி ஆங்கு | ஒரேயொரு தோணி வரும்
காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல – |
தொய்யா
வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ | கெடாத திரைப்பொருளோடு
நெருங்கித் திரண்டு, |
செவ்வி
பார்க்கும் செழு நகர் முற்றத்து
435 | (பொருந்திய)நேரம்
பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய; 435 |
பெரும் கை யானை
கொடும் தொடி படுக்கும் | பெரிய கையையுடைய
யானைக்கு வளைந்து கிடக்கும் பூணைச் சேர்க்கும் |
கரும் கை
கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த | வலிய கையினையுடைய
கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின |
கூட திண் இசை
வெரீஇ மாடத்து | கூடத்து எழுந்த
திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்தின் |
இறை உறை
புறவின் செம் கால் சேவல் | இறப்பில் உறையும்
புறாவின் சிவந்த காலையுடைய சேவல் |
இன் துயில்
இரியும் பொன் துஞ்சு வியல் நகர்
440 | இனிய துயில்
(நீங்கி)விரைந்தோடும் பொன் துஞ்சுகின்ற; அகன்ற அரண்மனையிடத்தே – 440 |
குண கடல்
வரைப்பின் முந்நீர் நாப்பண் | கீழ்கடலை
எல்லையாகக்கொண்டு, கடல்(அடிவானத்தின்) நடுவே |
பகல் செய்
மண்டிலம் பாரித்து ஆங்கு | பகற்பொழுதைச் செய்யும்
ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல, |
முறை
வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் | (வருத்தப்பட்டு)நீதி
கேட்டுவந்தவர்க்கும், (வறுமைப்பட்டுத் தம்)குறை தீர்க்கக் கேட்டோர்க்கும் |
வேண்டுபவேண்டுப
வேண்டினர்க்கு அருளி | வேண்டியவற்றை எல்லாம்
வேண்டினர்க்கு அருள்செய்து, |
இடை தெரிந்து
உணரும் இருள் தீர் காட்சி 445 | (கூறாமலே)குறிப்பால்
தெரிந்து உணரும் மயக்கமற்ற காட்சியையுடையனாய், 445 |
கொடை கடன்
இறுத்த கூம்பா உள்ளத்து | கொடை எனும் கடமையைச்
செய்துமுடித்த கூம்பாத உள்ளத்துடன், |
உரும்பு இல்
சுற்றமோடு இருந்தோன் குறுகி | கொடுமையில்லாத
அமைச்சுச் சுற்றத்தோடே இருந்தோனை அணுகி, |
பொறி வரி
புகர்முகம் தாக்கிய வயமான் | ‘ஆழமாய்ப்பதிந்த
இரேகைகளும், புள்ளிகளும் உள்ள முகத்தினையுடைய யானையைப் பாய்ந்த அரிமா |
கொடுவரி குருளை
கொள வேட்டு ஆங்கு | (பின்னர்)புலியின்
குட்டியைப் பாய்ந்து கொள்ள விரும்பினாற் போன்று, |
புலவர் பூண்
கடன் ஆற்றி பகைவர் 450 | புலவர்க்குப்
பேரணிகலன்களையும் பிற கடமைகளையும் வழங்கி, பகைவருடைய 450 |
கடி மதில்
எறிந்து குடுமி கொள்ளும் | காவலமைந்த மதில்களை
அழித்து (அவ்வரசரின்)கிரீடம்(முதலியவற்றை) கொள்ளும் |
வென்றி அல்லது
வினை உடம்படினும் | வெற்றியையே அல்லது
(அவ்வரசர் உன்)வினைக்கு உடன்படினும் |
ஒன்றல் செல்லா
உரவு வாள் தட கை | மனம் பொருந்துதல்
செல்லாத, வலிய வாளினையுடைய பெரிய கையினையும், |
கொண்டி உண்டி
தொண்டையோர் மருக | (பகைப்புலத்துக்)கொள்ளையாகிய
உணவினையும் உடைய தொண்டையோர் குடியிற் பிறந்தவனே, |
மள்ளர் மள்ள
மறவர் மறவ 455 | மள்ளர்க்கு மள்ளனே,
மறவர்க்கு மறவனே,
455 |
செல்வர் செல்வ
செரு மேம்படுந | செல்வர்க்குச்
செல்வனே, போர்த்தொழில் மிக்கவனே, |
வெண் திரை
பரப்பின் கடும் சூர் கொன்ற | வெண்மையான அலைகளையுடைய
கடலில் சென்று கடிய சூரனைக் கொன்ற |
பைம் பூண்
சேஎய் பயந்த மா மோட்டு | பசிய பூணினையுடைய
முருகனைப் பெற்ற பெருமையுடைய வயிற்றினையும், |
துணங்கை அம்
செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு | துணங்கைக்கூத்துடைய
அழகிய இறைவிக்குப் பேய்மகள் (சில)நொடிசொன்னாற் போன்று, |
தண்டா ஈகை நின்
பெரும் பெயர் ஏத்தி 460 | குறையாத கொடையினையுடைய
நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி, 460 |
வந்தேன் பெரும
வாழிய நெடிது என | வந்தேன் பெருமானே, நீ
நெடுங்காலம் வாழ்வாயாக’ என்று சொல்லி, |
இடன் உடை
பேரியாழ் முறையுளி கழிப்பி | இடப்பக்கத்தே உடைய
பேரியாழை இயக்குமுறையில் இயக்கி, |
கடன் அறி
மரபின் கைதொழூஉ பழிச்சி | (மன்னவர்க்கான)முறைமையை
அறிந்த நியதிப்படியே கையால் தொழுது நாவால் புகழ்ந்து, |
நின் நிலை
தெரியா அளவை அ நிலை | உனது நிலையினைத்
தெரிதற்கு முன்னரே, அந்த நிலையின்கண்ணே |
நாவல் அம் தண்
பொழில் வீவு இன்று விளங்க 465 | நாவலால் பெயர்பெற்ற
அழகிய குளிர்ந்த உலகமெல்லாம் கேடில்லாமல் விளங்கும்படி, 465 |
நில்லா உலகத்து
நிலைமை தூக்கி | நிலையற்ற (இவ்)உலகத்தே
நிலையுள்ளது (புகழ் ஒன்றே என்று)ஆராய்ந்து, |
அ நிலை அணுகல்
வேண்டி நின் அரை | அந்தப் புகழ்நிலையைச்
சேரும்பொருட்டு, நின் இடுப்பில் கிடந்த |
பாசி அன்ன
சிதர்வை நீக்கி | பாசியின் வேரை ஒத்த
சிதர்த்தழிந்த கந்தையை அகற்றி, |
ஆவி அன்ன அவிர்
நூல் கலிங்கம் | (பால்)ஆவியை ஒத்த
ஒளிரும் நூலால் செய்த துகில்களை |
இரும் பேர்
ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ 470 | (உன்)கரிய பெரிய
சுற்றத்தோடு சேர உடல் முழுதும் உடுக்கச் செய்து, 470 |
கொடு வாள்
கதுவிய வடு ஆழ் நோன் கை | வளைந்த அரிவாளைக்
கொண்ட வடு அழுந்தின வலிவுள்ள கையினையுடைய |
வல்லோன் அட்ட
பல் ஊன் கொழும் குறை | சமையற்காரன் ஆக்கின பல
இறைச்சியில் கொழுவிய தசைகளும், |
அரி செத்து
உணங்கிய பெரும் செந்நெல்லின் | அரியப்பட்ட
கதிர்க்குவியல்கள் ஈரமற்றுப்போக உலரவிட்ட பெரிய செந்நெல்லினுடைய |
தெரி கொள்
அரிசி திரள் நெடும் புழுக்கல் | ஆராய்ந்து
பொறுக்கிக்கொண்ட அரிசியால் ஆக்கின திரண்ட நெடிய சோற்றையும், |
அரும் கடி தீம்
சுவை அமுதொடு பிறவும் 475 | அரிய காவலில் வைத்த
இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளையும், பிறவும் ஆகிய 475 |
விருப்பு உடை
மரபின் கரப்பு உடை அடிசில் | (கண்டோர்)விரும்பும்
முறைமைத்தாகிய மூடிவைத்தலை உடைய அடிசில்களை, |
மீன் பூத்து
அன்ன வான் கலம் பரப்பி | விண்மீன்கள்
(இரவில்)மலர்ந்தாற் போன்று வெள்ளிக் கலங்களைப் பரக்க இட்டு, |
மகமுறை மகமுறை
நோக்கி முகன் அமர்ந்து | தாய் பிள்ளையைப்
பார்க்குமாறு திரும்பத்திரும்பப் பார்த்து, முகம் இனிது காட்டி, |
ஆனா விருப்பின்
தான் நின்று ஊட்டி | குன்றாத
விருப்பத்துடன் தான் எதிர்நின்று உண்ணச்செய்து – |
மங்குல்
வானத்து திங்கள் ஏய்க்கும்
480 | இருண்ட வானத்தின்கண்
திங்களைப் போன்று
480 |
ஆடு வண்டு
இமிரா அழல் அவிர் தாமரை | உலாவும் வண்டுகள்
ஒலியாத, தீயில் மலர்ந்த வெண்பொற்றாமரையை |
நீடு இரும்
பித்தை பொலிய சூட்டி | நீண்ட கரிய மயிரில்
அழகுபெறச் சூட்டி; |
உரவு கடல்
முகந்த பருவ வானத்து | தொடர்ந்து இயங்கும்
கடலின்கண் நீரை முகந்துகொண்ட பருவ கால வானத்தில் |
பகல் பெயல்
துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு | பகலில் பெய்கின்ற
துளிமழையின்கண் மின்னல் ஓடினாற் போன்று, |
புனை இரும்
கதுப்பகம் பொலிய பொன்னின்
485 | அலங்கரித்த கரிய
மயிரிடம் அழகு பெறும்படி, பொன்னால் செய்து 485 |
தொடை அமை மாலை
விறலியர் மலைய | சேரக்கட்டின மாலையை
ஆடும் மகளிர் சூடி நிற்ப; |
நூலோர்
புகழ்ந்த மாட்சிய மால் கடல் | (குதிரை
இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், திருமாலின் பாற்கடலில் |
வளை கண்டு அன்ன
வால் உளை புரவி | சங்கைக் கண்டாற் போன்ற
வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள், |
துணை புணர்
தொழில நால்கு உடன் பூட்டி | தன்னுடன்
சேர்ந்தவையோடு ஒத்துத் தொழில்செய்வனவான, நான்கினை ஒருசேரப் பூட்டி, |
அரி தேர்
நல்கியும் அமையான் செரு தொலைத்து
490 | பொன் (வேய்ந்த)தேரைத்
தந்தும் மனநிறைவு கொள்ளானாய், போர்களை மாளப்பண்ணி 490 |
ஒன்னா தெவ்வர்
உலைவு இடத்து ஒழித்த | (தன் ஏவலைப்)பொருந்தாத
பகைவர் புறமுதுகிட்டவிடத்தே விட்டுப்போன |
விசும்பு செல்
இவுளியொடு பசும் படை தரீஇ | விண்(ணுக்குச்)
செல்(வது போல் முன் கால்களைத் தூக்கும்)குதிரைகளுடன் பசிய சேணமும் தந்து, |
அன்றே
விடுக்கும் அவன் பரிசில் இன் சீர் | (நீ சென்ற)அன்றே
நினக்கு ஏனைய பரிசிலும் தந்து விடுவான்
– இனிய தாளத்தில், |
கின்னரம்
முரலும் அணங்கு உடை சாரல் | கின்னரம் என்னும்
பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே |
மஞ்ஞை ஆலும்
மரம் பயில் இறும்பின் 495 | மயில்கள் ஆடும் மரம்
நெருங்கின இளமரக்காட்டினையும்;
495 |
கலை பாய்ந்து
உதிர்த்த மலர் வீழ் புறவின் | முசுக்கலைகள் பாய்ந்து
உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும் உடைய, |
மந்தி சீக்கும்
மா துஞ்சு முன்றில் | மந்திகள் செத்தைகளை
அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முற்றத்தில், |
செம் தீ பேணிய
முனிவர் வெண் கோட்டு | சிவந்த தீயைக்
கைவிடாமல் காத்துப்போந்த முனிவர்கள், வெண்மையான கொம்பினையுடைய |
களிறு தரு
விறகின் வேட்கும் | களிறுகள் முறித்துக்
கொண்டுவந்த விறகால் வேள்வியைச் செய்யும், |
ஒளிறு இலங்கு
அருவிய மலை கிழவோனே 500 | ஒளிறுகின்ற விளங்கும்
அருவிகளையுடையவாகிய மலையை ஆளும் உரிமையுடையோன். |
| |