Select Page
  
# 326 தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்# 326 தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
ஊர் முது வேலி பார்நடை வெருகின்ஊரானது, பழைய வேலியடியில் பதுங்கியிருக்கும் மெத்தென்ற நடையுடைய காட்டுப்பூனையாகிய
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடைஇருளில் வந்து வருத்தும் பகைக்கு வெருண்ட இளம் பெட்டைக் கோழி
உயிர் நடுக்கு_உற்று புலா விட்டு அரற்றஉயிர் நடுங்குவது போல் நடுக்கமடைந்து தொண்டை கிழியக் கத்த,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்தகுச்சிகளையும், செத்தையையும் அகற்றுவதற்காக எழுந்த
பருத்தி_பெண்டின் சிறு தீ விளக்கத்துநூல் நூற்கும் பெண்ணின் சிறிய விளக்கொளியில்,
கவிர் பூ நெற்றி சேவலின் தணியும்முருக்கம் பூப் போன்ற கொண்டையையுடைய சேவற்கோழியைக் கண்டு அச்சம் தணியும்
அரு மிளை இருக்கையதுவே மனைவியும்கடத்தற்கரிய காவற்காடுகள் சூழ்ந்த இடத்தில் உள்ளது; இவ்வூர்த் தலைவனின் மனைவி,
வேட்ட சிறாஅர் சேண் புலம் படராதுவேடர்களின் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல்
படப்பை கொண்ட குறும் தாள் உடும்பின்கொல்லையில் பிடித்துவந்த குறுகிய காலையுடைய உடும்பின்
விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவைதசையுடன் சேர்ந்த கொழுப்பை இட்டுச் சமைத்த தயிரோடு கூடிய கூழ்போன்ற உணவையும்,
யாணர் நல்லவை பாணரொடு ஒராங்குபுதிதாக வந்த வேறு நல்ல உணவுப் பொருட்களையும் பாணர்களோடு, ஒருசேர,
வரு விருந்து அயரும் விருப்பினள் கிழவனும்அவர்களோடு வந்த மற்ற விருந்தினர்களுக்கும் கொடுத்து உண்பிக்கும் விருப்பமுடையவள்; அவள் கணவனும்
அரும் சமம் ததைய தாக்கி பெரும் சமத்துகடத்தற்கரிய போர் அழியுமாறு தாக்கி, பெரும் போரில்
அண்ணல் யானை அணிந்ததலைமையையுடைய யானைகள் அணிந்திருந்த
பொன் செய் ஓடை பெரும் பரிசிலனேபொன்னால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டம் முதலியவற்றை பெரும் பரிசிலாக வழங்குபவன்.
  
# 327# 327
எருது கால் உறாஅது இளைஞர் கொன்றஎருதுகளைப் பூட்டிப் போரடிக்காமல் இளைஞர்கள் காலால் மிதித்து எடுத்த,
சில் விளை வரகின் புல்லென் குப்பைசிறிதளவே விளைந்த வரகின் அற்பமான குவியலில்,
தொடுத்த கடவர்க்கு கொடுத்த மிச்சில்வளைத்துக்கொண்ட கடன்காரர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியிருப்பதைப்
பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்பசித்து வந்த பாணர்கள் உண்டு வெளியேறிய பிறகு,
ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர்சுற்றத்தாரின் வறுமையைக் களைவதற்காக, தன்னூரில் வாழும்
சிறு புல்லாளர் முகத்து அவை கூறிஅற்ப மனிதர்களிடத்தில் அவரவர்க்குத் தகுந்தபடி பேசி
வரகு கடன் இரக்கும் நெடுந்தகைவரகைக் கடனாகக் கேட்டுப் பெறும் பெருந்தகை,
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னேபெருவேந்தர்கள் படையெடுத்து வந்தால் எதிர்த்து நின்று வெற்றிகொள்ளும் வலிமையுடையவன்.
  
# 328# 328
……. புல்லென் அடை முதல் புறவு சேர்ந்திருந்த…………….. பொலிவற்ற இலைகளும் அடிப்பாகமும் உடைய மரங்கள் உள்ள முல்லை நிலத்தைச் சேர்ந்த
புன்_புல சீறூர் நெல் விளையாதேபுன்செய் நிலங்களில் உள்ள சிற்றூர்களில் நெல் விளையாது;
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்அங்கு விளையும் வரகையும் தினையையும் ஆகிய உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தனஇரவலர்க்குக் கொடுத்ததால் அவை தீர்ந்து போயின;
………………….. அமைந்தனனே…………………….. பொருந்தினான்;
அன்னன் ஆயினும் பாண நன்றும்அத்தன்மை உடையவனாயினும் பாணனே! மிகவும்
வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடுகிண்ணத்தில் ஊற்றிவைத்த பாலில் உறையிடுவதற்காக வைத்திருந்த தயிரையும், தொடரிப் பழத்தையும்,
களவு புளி அன்ன விளை கள் ………………….களாப் பழத்தின் புளிப்பைப் போலப் புளிப்பேறிய கள்ளையும் …………………….
………………. வாடூன் கொழும் குறை…………………… வெந்து வாடிய கொழுத்த ஊன்துண்டுகளையும்,
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டுஅறுவடை செய்த வரகிலிருந்து எடுத்த அரிசியில் நெய்யிட்டுச் சமைத்துத்,
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறுதுடுப்பால் துழாவப்பட்ட களிப்பைத் தருகின்ற வெண் சோற்றை
உண்டு இனிது இருந்த பின்றை ……………………உண்டு இனிது இருந்த பின்பு ………………………….
……………………. தருகுவன் மாதோ……………………….. கொடுப்பான்;
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞைதாளிமரத்தின் அடியில் நீளப் படர்ந்த, சிறிய மணமிக்க முன்னைக் கொடியை
முயல் வந்து கறிக்கும் முன்றில்முயல் வந்து தின்னும் முற்றத்தையுடைய
சீறூர் மன்னனை பாடினை செலினேசிறிய ஊர்களையுடைய மன்னனைப் பாடிச் சென்றால்,
  
# 329 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்# 329 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
இல் அடு கள்ளின் சில் குடி சீறூர்வீடுகளில் காய்ச்சப்படும் கள்ளை உடைய சில குடிகளே உள்ள சிற்றூரின்
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டிபக்கத்தில், நடப்பட்ட நடுகல்லுக்கு, விடியற்காலையில் படையல் செய்து,
நன் நீராட்டி நெய் நறை கொளீஇயநல்ல நீரால் நீராட்டி, நெய்விளக்கு ஏற்றியதால் உண்டாகிய
மங்குல் மா புகை மறுகு உடன் கமழும்மேகம் போன்ற கரிய புகை தெருவெல்லாம் மணக்கும்
அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்றுஅரிய முதன்மையான இடத்தையுடையதாய் இருந்தாலும், வரிகள் பொருந்திய கழுத்தையுடைய
அரவு உறை புற்றத்து அற்றே நாளும்பாம்பு வாழும் புற்றினைப் போன்றது; நாள்தோறும்,
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்குசெல்வந்தர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் பாராமல், இரவலர்களுக்குக்
அருகாது ஈயும் வண்மைகுறையாது கொடுக்கும் வள்ளல் தன்மை உடைய
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரேபுகழ் மிகுந்த பெருந்தகையால் பாதுகாக்கப்படும் ஊர்.
  
# 330 மதுரை கணக்காயனார்# 330 மதுரை கணக்காயனார்
வேந்து உடை தானை முனை கெட நெரிதரதன் வேந்தனுடைய முன்னணிப் படை சிதைந்து அழியுமாறு, பகைவர் படை நெருக்கி மோதுவதால்,
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகிஉயர்த்திய வாளை வலக்கையில் பிடித்துக்கொண்டு, தான் ஒருவனாக
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்குபகைவர் படை தன்னைக் கடந்து செல்லாமல் தடுப்பதால், இவன் பெருங்கடலுக்குக்
ஆழி அனையன் மாதோ என்றும்கரையைப் போன்றவன்; எப்போதும்,
பாடி சென்றோர்க்கு அன்றியும் வாரிதன்னைப் பாடிச் சென்ற பரிசிலர்களை மட்டுமல்லாமால், வருவாய்
புரவிற்கு ஆற்றா சீறூர்வரி செலுத்துவதற்குக்கூடப் போதாத சிற்றூரில் வாழும் மக்களையும்
தொன்மை சுட்டிய வண்மையோனேவழிவழியாகக் காத்து வரும் வள்ளல்தன்மையும் உடையவன்,
  
  
  
  
  
  
# 331 உறையூர் முதுகூத்தனார் உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்# 331 உறையூர் முதுகூத்தனார் உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்
கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல்கல்லை உடைத்துக் கட்டிய கடும் உவர்நீர் உள்ள கிணறும்,
வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலிவில்லால் வேட்டையாடி வாழ்க்கை நடத்தும் மக்களும் உள்ள சிற்றூரின் மிகுந்த வலிமையுடைய தலைவன்.
நனி நல்கூர்ந்தனன் ஆயினும் பனி மிகமிகவும் வறுமையுற்றவனாயிருந்தாலும், குளிர் மிகுவதால்
புல்லென் மாலை சிறு தீ ஞெலியும்இருள் மயங்கும் மாலை நேரத்தில் சிறிய தீக்கடைக் கோலால் கடைந்து தீ உண்டாக்கும்
கல்லா இடையன் போல குறிப்பின்வேறு தொழிலைக் கற்காத இடையனைப் போலத், தன் இல்லத்தில் இல்லாததைக் குறிப்பால் அறிந்து
இல்லது படைக்கவும் வல்லன் உள்ளதுஅவ்வாறு இல்லாததை உண்டாக்கிக்கொள்ளவும் வல்லவன்; வீட்டில் இருப்பது
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள்மிகவும் சிறிய அளவினதாயிருந்தாலும், மிகப் பலர் இருக்கிறார்களே என்று மனம் கலங்காதவளாய்
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும்நீண்ட நெடிய பந்தலின் கீழ் அவர்களை இருத்தி உணவை முறையாக அளித்து உண்பிக்கும்
இல் பொலி மகடூஉ போல சிற்சிலஇல் வாழ்க்கையில் சிறந்த மகளிரைப் போல, கொஞ்சம் கொஞ்சமாகப்
வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின்பரிசிலர்களின் தகுதியை அறிந்து கொடுக்கவும் வல்லவன்; செல்வம் மிகுதியாக இருந்தால்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்நாட்டைக் காக்கும் பெருவேந்தர்களின் தலைவாயிலில் அளிக்கப்படும்
போகு பலி வெண் சோறு போலஉயர்ந்த பலியாகிய வெண்மையான சோற்றைப் போல,
தூவவும் வல்லன் அவன் தூவும்_காலேஅள்ளித்தூவும் காலத்தில் பலரும் கொள்ளுமாறு வாரி வழங்கக் கூடியவன்.
  
# 332 விரியூர் கிழார்# 332 விரியூர் கிழார்
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர்பிறருடைய வேலைப் போல் அல்லாமல், இந்த ஊரைச் சார்ந்த
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தேவீரனின் வேலோ மிகுந்த மதிப்பு உடையதாகும்.
இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடைஅந்த வேலின் பெரிய இலைப்பகுதியில் புழுதியும் படிந்து, பல பொருள்களுக்கிடையில் கலந்து
குரம்பை கூரை கிடக்கினும் கிடக்கும்குடிசையின் கூரையில் கிடந்தாலும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டிஅந்த வேல், மாலை சூட்டப்பட்டு, மங்கல மகளிரின் இனிய குரலோடு,
இன் குரல் இரும் பை யாழொடு ததும்பபெரிய பையில் அமைந்த யாழின் இசையும் கலந்து இசைக்க,
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்துதெளிந்த நீருள்ள குளங்களையும் தெருக்களையும் ஊர்வலமாக வந்து,
மண் முழுது அழுங்க செல்லினும் செல்லும் ஆங்குஉலகம் முழுதும் உள்ள பகைவர்கள் கவலை கொள்ளும்படியாகச் செல்லவும் செல்லும், அங்கு
இரும் கடல் தானை வேந்தர்பெரிய கடல் போன்ற படையையுடைய வேந்தரின்
பெரும் களிற்று முகத்தினும் செலவு ஆனாதேபெரிய யானைகளின் முகத்திலும் சென்று பாய்வதில் தப்பாதாகும்.
  
# 333# 333
நீருள் பட்ட மாரி பேர் உறைநீரில் விழுந்த மழையின் பெரிய துளியால் உண்டாகிய
மொக்குள் அன்ன பொகுட்டு விழி கண்ணகுமிழி போலிருக்கும் கொட்டை போன்ற விழிகள் பொருந்திய கண்களையும்,
கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல்கரிய பிடரியையுமுடைய தலையையும், பெரிய காதுகளையுமுடைய சிறு முயல்
உள்ளூர் குறும் புதல் துள்ளுவன உகளும்உள்ளூரில் உள்ள சிறிய புதர்களில் துள்ளி விளையாடும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்வளைகளையுடைய மன்றத்திற்குச் சென்றால்,
உண்க என உணரா உயவிற்று ஆயினும்அங்குள்ளவர்கள் உண்ணுக என்று குறிப்புணர்ந்து உரைக்காத வருத்தமுடையதாயினும்
தங்கினிர் சென்மோ புலவீர் நன்றும்புலவர்களே, நீங்கள் அங்கே பெரிதும் தங்கிச் செல்க;
சென்றதற்கொண்டு மனையோள் விரும்பிஅவ்வாறு அங்குச் சென்றதினால் மனையவள் விரும்பி
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்வரகு, தினை ஆகிய இருப்பவை எல்லாம்
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து எனபரிசிலர்கள் உண்டதாலும், எடுத்துக்கொண்டதாலும் தீர்ந்து போக,
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்அம்மனைக்குரியவள், கைம்மாற்றுக் கடனாக உணவுப்பொருட்களைப் பெற இயலாமையால்,
குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்துகாய்ந்த கதிராக இருக்கும் விதைத் தினையை உரலிலிட்டு இடித்துச் சமைத்துச் சோறுபோடுவாளேயன்றி
சிறிது புறப்பட்டன்றோ இலளே தன் ஊர்சிறிதும் இல்லாததைக்கூறி உணவின்றி உங்களை வறிதே போகவிடமாட்டாள்; தன் ஊரிலுள்ள
வேட்ட குடி-தொறும் கூட்டு ……………….வேட்டுவர்களின் வீடுகள்தோறும் கூட்டப்படும் ……………………………….
………………… உடும்பு செய்………………………. உடும்பின் தோலால் செய்யப்பட்ட
பாணி நெடும் தேர் வல்லரோடு ஊராகைக்கவசம் அணிந்து நெடிய தேரைச் செலுத்தும் வீரர்களோடு ஊர்ந்து,
வம்பு அணி யானை வேந்து தலைவரினும்கச்சணிந்த யானைகளையுடைய வேந்தர்கள் அவ்வீட்டிற்கு வந்தாலும்
உண்பது மன்னும் அதுவேஅவர்கள் உண்பதும் அவ்வுணவேயாகும்;
பரிசில் மன்னும் குருசில் கொண்டதுவேபரிசிலர்களுக்கு வழங்கும் பரிசில் அரசராகிய அவன் பகைவரை வென்று பெற்ற பொருளேயாகும்.
  
# 334 மதுரை தமிழ கூத்தனார்# 334 மதுரை தமிழ கூத்தனார்
காமரு பழன கண்பின் அன்னஅழகிய நீர்நிலைகளில் வளர்ந்திருக்கும் சண்பங்கோரையின் கதிர் போன்ற
தூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல்தூய்மையான மயிரையும், குட்டையான கால்களையும், நீண்ட காதுகளையுமுடைய சிறிய முயல்,
புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்பரட்டைத் தலையையுடைய சிறுவர்கள் ஊர் மன்றத்தில் விளையாடி ஆரவாரம் செய்வதால்
படப்பு ஒடுங்கும்மே ……….. பின்பு …………..வைக்கோற் போரில் பதுங்கும் ……………….. பின்பு ………….
…………….. ஊரே மனையோள்………………….. வேந்தனது ஊர்; மனையவள்
பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்பாணரை உண்ணச் செய்தும், பரிசிலரை வரவேற்று அவர்களுக்கு ஆதரவு அளித்தும்
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளேஅவர்கள் உண்பதனால் உண்டாகும் ஆரவாரத்திற்கிடையே கை ஓய்ந்திருக்கமாட்டாள்:
உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்தஉயர்ந்த கொம்புகளையுடைய யானையின் புள்ளிகளையுடைய முகத்தில் அணியப்படும்
பொலம் புனை ஓடை —————————பொன்னாலான நெற்றிப்பட்டத்தை ……………………
பரிசில் பரிசிலர்க்கு ஈயபரிசிலாகப் பரிசிலர்களுக்கு அளிப்பதில்
உரவு வேல் காளையும் கைதூவானேவலிய வேலை உடைய தலைவனும் கைஓயமாட்டான்.
  
# 335 மாங்குடி கிழார்# 335 மாங்குடி கிழார்
அடல் அரும் துப்பின் ………………..அழித்தற்கரிய வலிமையையுடைய …………………….
குரவே தளவே குருந்தே முல்லை என்றுகுரவ மலர், தளவ மலர், குருந்த மலர், முல்லை மலர் ஆகிய
இ நான்கு அல்லது பூவும் இல்லைஇந்நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்களும் இல்லை;
கரும் கால் வரகே இரும் கதிர் தினையேகரிய அடியையுடைய வரகு, பெரிய கதிரையுடைய தினை,
சிறு கொடி கொள்ளே பொறி கிளர் அவரையொடுசிறிய கொடியில் விளையும் கொள், புள்ளிகள் நிறைந்த அவரை
இ நான்கு அல்லது உணாவும் இல்லைஇவை நான்கைத் தவிர வேறு உணவுப்பொருட்களும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்றுதுடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய
இ நான்கு அல்லது குடியும் இல்லைஇந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை;
ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கிமனம் பொருந்தாத பகைவரின் முன்னே நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து எனஒளிறும் உயர்ந்த கொம்புகளையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு இறந்தவர்களின்
கல்லே பரவின் அல்லதுநடுகல்லைக் கும்பிடுவோமே அல்லாமல்
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவேநெல்லைத் தூவிக் கும்பிடும் கடவுளும் வேறு இல்லை.
  
# 336 பரணர்# 336 பரணர்
வேட்ட வேந்தனும் வெம் சினத்தினனேஇந்தப் பெண்ணை மணஞ்செய்துகொள்ள விரும்பிய வேந்தனும் மிகுந்த கோபங்கொண்டிருக்கிறான்;
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்தான் செய்ய வேண்டிய கடமைகளைக் கழித்தலை இப்பெண்ணின் தந்தையும் செய்யமாட்டான்;
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின்ஒளிறும் முகத்தில் உள்ள, உயர்ந்திருக்கும் பெரிய தொடி அணிந்த கொம்புகளையுடைய
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்தயானைகள் காவல் மரத்தில் சேராமல் நிற்கின்றன; வேந்தனையும் அப்பெண்ணின் தந்தையையும் சேர்ந்த
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரேஒளிறும் வேலேந்திய வீரர்கள் வாயை மூடிக்கொண்டுள்ளனர்;
இயவரும் அறியா பல் இயம் கறங்கஇசை வல்லுநர்களும் அறியாத பல இசைக்கருவிகள் முழங்குகின்றன;
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர்ஐயோ! பெரும் துன்பத்துக்குள்ளாகியது, அரிய காவல் உள்ள இந்தப் பழமையான ஊர்;
அறன் இலள் மன்ற தானே விறல் மலைஅறமில்லாதவள், நிச்சயமாக, வலிமை வாய்ந்த மலையாகிய
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்வேங்கை மலையில் மலர்ந்த கோங்க மரத்தினுடைய
முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலைஅரும்பின் வனப்பையுடைய முதிராத இளமுலையையுடைய
தகை வளர்த்து எடுத்த நகையொடுஇப்பெண்ணை மிகவும் அழகுடையவளாக வளர்த்ததால் பெற்ற மகிழ்ச்சியுடன்,
பகை வளர்த்து இருந்த இ பண்பு இல் தாயேஇப்போது பகையை வளர்த்திருக்கும் பண்பில்லாத தாய் – (அறமில்லாதவள், நிச்சயமாக)
  
# 337 கபிலர்# 337 கபிலர்
ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல்மிகுந்த ஆரவாரமுடையவன், சோழநாட்டுத் தலைவன்;.
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும்பிறருக்கு அளிப்பதற்காகக் கவிந்த தங்கள் கைகளில், உலகத்தை ஆளும் செல்வமுள்ளவர் என்றாலும்
வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர்வெற்றியைத்தரும் வாளை ஏந்தாமல், பாணர்களைப் போலப் பாடிப் பரிசுபெறச் சென்றவர்
வரல்-தோறு அகம் மலரவந்தபொழுது மனம் மலர்ந்து,
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கைகொடுப்பதில் குறையாதவனாகிய, ஒளிரும் தொடியணிந்த பெரிய கையையுடைய,
பாரி பறம்பின் பனி சுனை போலபாரியின் பறம்பு மலையிலுள்ள யாரும் காண்பதற்கு அரிய குளிர்ந்த நீர்நிலை போல
காண்டற்கு அரியள் ஆகி மாண்டயாராலும் காண்பதற்கரியவளாய், மாட்சி மிக்க
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணியபெண்மை நிறைந்த அழகுடன், துவைக்கப்பட்ட
துகில் விரி கடுப்ப நுடங்கி தண்ணெனமெல்லிய துணி காற்றில் அசைவதுபோல் அசைந்து, குளுமையான
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கியஅகில் தந்த நறும்புகை மெதுவாகச் சென்று படிந்த
கபில நெடு நகர் கமழும் நாற்றமொடுகபில நிறமுடைய பெரிய அரண்மனை முழுதும் கமழும் மணம் பொருந்திய
மனை செறிந்தனளே வாள்_நுதல் இனியேவீட்டுக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்தாள் ஒளிபொருந்திய நெற்றியையுடையள்; இப்பொழுது
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றிஅவளை அடைய முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்து,
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும்விளைந்த நெல்லின் அரிசியில் உண்டாகிய கவளத்தை உண்பித்துச் சோலையெங்கும் கட்டிப்போட்டு,
கடுங்கண் யானை காப்பனர் அன்றிசினங் கொண்ட கண்களையுடைய தங்கள் யானைகளைப் பாதுகாத்து வந்தனரே தவிர
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர்போரிடத் துணியவில்லை வேந்தர்கள்; அப்பெண்ணின் தமையன்மார்,
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல்சண்டையிடும் போர்களில் வெற்றிகொண்ட அச்சம் பொருந்திய நெடிய வேலையும்,
குருதி பற்றிய வெருவரு தலையர்குருதி தோய்ந்த அச்சம் தரும் தலையையும் உடையவர்களாக இருந்தனர்;
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றெனஅவர்களின் வீரம் இப்படியிருக்க, தெளிவாக
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழையாரோ? சிறந்த அணிகலன்களை அணிந்த,
உருத்த பல சுணங்கு அணிந்தஇவளுக்கு உரிமையாகத் தோன்றிய பலவான தேமல் படர்ந்த, 
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரேயானைக்கொம்பு போன்ற அழகிய இளமுலைகளை இறுகத் தழுவுவோர் – (யாரோ?)
  
# 338 குன்றூர் கிழார் மகனார்# 338 குன்றூர் கிழார் மகனார்
ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்ஏர் உழுத வயல்களையும், நீர் நிறைந்த வரப்புகளையும்,
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின்நெல் நிரம்பிய வீட்டையும், பொன் நிறைந்த தெருக்களையும் ,
படு வண்டு ஆர்க்கும் பன் மலர் காவின்மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் பன்மலர்ச் சோலையையும் உடைய
நெடுவேள் ஆதன் போந்தை அன்னநெடுவேள் ஆதன் என்பவனின் போந்தை என்னும் ஊர் போன்ற
பெரும் சீர் அரும் கொண்டியளே கரும் சினைபெரும் சீருடனே, போரிட்டுப் பகைவரிடம் பெற்ற அரிய செல்வத்தை உடையவள்; கரிய கிளைகளையுடைய
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்வேம்பின் பூமாலை, ஆத்தி மாலை, பனந்தோட்டு மாலை ஆகிய மூன்றையும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்சூடிய தலையை உடையவராய், வரிந்து கட்டப்பட்ட வில்லையுடையவராய்,
கொற்ற வேந்தர் தரினும் தன் தகவெற்றி மிக்க முடிவேந்தரும் அவளை மணக்க விரும்பி பெண் கேட்க வந்தாலும் தன் தகுதிக்கேற்பத்
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுதன்னை வணங்காதவர்க்கு அவளைத் தரமாட்டான்; வளமான கதிர்த்தாளையும்
பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்றுஒன்றோடொன்று பின்னிக் கிடக்கும் கதிர்களையுமுடைய வயல்களுக்கு நடுவில், கரையில் கட்டப்பட்டு
உணங்கு கலன் ஆழியின் தோன்றும்காய்ந்து கிடக்கும் மரக்கலமும் கடலும் போலக் காட்சி அளிக்கும்
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளேஒற்றை மதிலால் சூழப்பட்ட கோட்டைக்குரியவனின் இளமை பொருந்திய ஒப்பற்ற மகளை.
  
# 339 குன்றூர்க் கிழார் மகனார்# 339 குன்றூர் கிழார் மகனார்
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறுஅகன்ற, புல் வெளியில் பரந்து மேய்ந்த பல பசுக்களுடன் கூடிய நெடிய காளைகள்,
மடலை மாண் நிழல் அசை விட கோவலர்பூக்களையுடைய மரங்களின் நிழலில் தங்கி அசை போட்டுக் கொண்டிருக்க, இடையர்கள்,
வீ ததை முல்லை பூ பறிக்குந்துபூக்கள் மிகுந்த முல்லைக் கொடிகளிலிருந்த பூக்களைப் பறிப்பர்;
குறும் கோல் எறிந்த நெடும் செவி குறு முயல்சிறிய கோலால் எறியப்பட்ட நீண்ட காதுகளை உடைய குறு முயல்கள் 
நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்துஆழமான நீர்நிலையில் உள்ள வாளைமீன்களோடு சேர்ந்து துள்ளித் தாவும்;
தொடலை அல்குல் தொடி தோள் மகளிர்மேகலை அணிந்த இடையையும் வளை அணிந்த தோள்களையுமுடைய பெண்கள்
கடல் ஆடி கயம் பாய்ந்துகடலில் நீராடிக், குளங்களில் மூழ்கிக்
கழி நெய்தல் பூ குறூஉந்துகடற்கரையில் உள்ள கழியில் நெய்தற் பூக்களைப் பறிப்பர்;
பைம் தழை துயல்வரும் செறுவில் ததைந்தபசிய தழை அசையும் வயலிடத்தே நெருங்கிய
…………….. ………… கலத்தின்————— ———- கலத்தைப் போல
வளர வேண்டும் அவளே என்றும்வளர வேண்டும் அவள் எப்போதும் – 
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகிதன் பொருட்டு வேந்தர்கள் அரிய போர் செய்வதை விரும்பினவள் போல், 
முறம் செவி யானை வேந்தர்முறம் போன்ற காதுகளையுடைய யானைகளைக் கொண்ட வேந்தர்களின்
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளேவீரம் பொருந்திய நெஞ்சைக் கவர்ந்து பிறர் அறியாதவாறு அதை மறைத்துக்கொண்டவள்..
  
# 340 அள்ளூர் நன்முல்லையார்# 340 அள்ளூர் நன்முல்லையார்
அணி தழை நுடங்க ஓடி மணி பொறி’இடையில் அணிந்த தழை உடை அசையுமாறு ஓடிச் சென்று, செம்மணி போல் நிறமும் புள்ளிகளுமுடைய
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்குன்றிமணிக் கொத்துக்களைச் சேகரிக்கும், இளையவளான
மா மகள் ……………….. ……….மா நிறத்தவள் ……………………..
யார் மகள்_கொல் என வினவுதி கேள் நீயாருடைய மகள்?’ என்று கேட்கிறாயா? நான் கூறுகிறேன். நீ கேட்பாயாக;
எடுப்ப எடாஅ……….. ……………….தன் கையில் ஆயுதங்களை எடுக்க, அதனை நேர்ந்து ஆயுதங்களை எடுக்காத
……………. …………… மைந்தர் தந்தை…………………….. மைந்தர்களுக்குக்குத் தந்தையானவன்,
இரும் பனை அன்ன பெரும் கை யானைகரிய பனை போன்ற பெரிய துதிக்கைகளையுடைய யானைகளைக்
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்கரந்தைக் கொடி நிரம்பிய வயலில் தாக்கிக் கொல்லும்
பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனேபெரும் தகைமையினையுடைய மன்னருக்கு இவளைத் திருமணம் செய்விப்பது என்று முடிவு செய்துள்ளான்.
  
  
  
  
  
# 341 பரணர்# 341 பரணர்
வேந்து குறை_உறவும் கொடாஅன் ஏந்து கோட்டுவேந்து குறை_உறவும் கொடாஅன் ஏந்து கோட்டு
அம் பூ தொடலை அணி தழை அல்குல்அம் பூ தொடலை அணி தழை அல்குல்
செம் பொறி சிலம்பின் இளையோள் தந்தைசெம் பொறி சிலம்பின் இளையோள் தந்தை
எழு விட்டு அமைத்த திண் நிலை கதவின்எழு விட்டு அமைத்த திண் நிலை கதவின்
அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும்அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும்
புலி கணத்து அன்ன கடுங்கண் சுற்றமொடுபுலி கணத்து அன்ன கடுங்கண் சுற்றமொடு
மாற்றம் மாறான் மறலிய சினத்தன்மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
பூ கோள் என ஏஎய் கயம் புக்கனனேபூ கோள் என ஏஎய் கயம் புக்கனனே
விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல்விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல்
சுணங்கு அணி வன முலை அவளொடு நாளைசுணங்கு அணி வன முலை அவளொடு நாளை
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோமணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடுநீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்று எனவாரா உலகம் புகுதல் ஒன்று என
படை தொட்டனனே குருசில் ஆயிடைபடை தொட்டனனே குருசில் ஆயிடை
களிறு பொர கலங்கிய தண் கயம் போலகளிறு பொர கலங்கிய தண் கயம் போல
பெரும் கவின் இழப்பது-கொல்லோபெரும் கவின் இழப்பது-கொல்லோ
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரேமென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே
  
# 342 அரிசில் கிழார்# 342 அரிசில் கிழார்
கான காக்கை கலி சிறகு ஏய்க்கும்கான காக்கை கலி சிறகு ஏய்க்கும்
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள்மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள்
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்றுஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகைஎன்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை
திரு நய_தக்க பண்பின் இவள் நலனேதிரு நய_தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதேபொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளைபைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின்மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின்
ஆரல் ஈன்ற ஐயவி முட்டைஆரல் ஈன்ற ஐயவி முட்டை
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்
தண் பணை கிழவன் இவள் தந்தையும் வேந்தரும்தண் பணை கிழவன் இவள் தந்தையும் வேந்தரும்
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின்பெறாஅமையின் பேர் அமர் செய்தலின்
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதாகழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா
வாள் தக வைகலும் உழக்கும்வாள் தக வைகலும் உழக்கும்
மாட்சியவர் இவள் தன்னைமாரேமாட்சியவர் இவள் தன்னைமாரே
  
# 343 பரணர்# 343 பரணர்
மீன் நொடுத்து நெல் குவைஇமீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பியின் மனை மறுக்குந்துமிசை அம்பியின் மனை மறுக்குந்து
மனை கவைஇய கறி மூடையால்மனை கவைஇய கறி மூடையால்
கலி சும்மைய கரை கலக்கு_உறுந்துகலி சும்மைய கரை கலக்கு_உறுந்து
கலம் தந்த பொன் பரிசம்கலம் தந்த பொன் பரிசம்
கழி தோணியான் கரை சேர்க்குந்துகழி தோணியான் கரை சேர்க்குந்து
மலை தாரமும் கடல் தாரமும்மலை தாரமும் கடல் தாரமும்
தலைப்பெய்து வருநர்க்கு ஈயும்தலைப்பெய்து வருநர்க்கு ஈயும்
புனல் அம் கள்ளின் பொலம் தார் குட்டுவன்புனல் அம் கள்ளின் பொலம் தார் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்னமுழங்கு கடல் முழவின் முசிறி அன்ன
நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் எனபுரையர் அல்லோர் வரையலள் இவள் என
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடைவாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்துவருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து
இடை மதில் சேக்கும் புரிசைஇடை மதில் சேக்கும் புரிசை
படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரேபடை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே
  
# 344 அடைநெடும் கல்வியார்# 344 அடைநெடும் கல்வியார்
செந்நெல் உண்ட பைம் தோட்டு மஞ்ஞைசெந்நெல் உண்ட பைம் தோட்டு மஞ்ஞை
செறி வளை மகளிர் பறந்து எழுந்துசெறி வளை மகளிர் பறந்து எழுந்து
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடுதுறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு
நிறை சால் விழு பொருள் தருதல் ஒன்றோநிறை சால் விழு பொருள் தருதல் ஒன்றோ
புகை படு கூர் எரி பரப்பி பகை செய்துபுகை படு கூர் எரி பரப்பி பகை செய்து
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோபண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதேஇரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே
காஞ்சி பனி முறி ஆரம் கண்ணிகாஞ்சி பனி முறி ஆரம் கண்ணி
கணி மேவந்தவள் அல்குல் அம் வரியேகணி மேவந்தவள் அல்குல் அம் வரியே
  
# 345# 345
களிறு அணைப்ப கலங்கின காஅகளிறு அணைப்ப கலங்கின காஅ
தேர் ஓட துகள் கெழுமின தெருவுதேர் ஓட துகள் கெழுமின தெருவு
மா மறுகலின் மயக்கு_உற்றன வழிமா மறுகலின் மயக்கு_உற்றன வழி
கலம் கழாஅலின் துறை கலக்கு_உற்றனகலம் கழாஅலின் துறை கலக்கு_உற்றன
தெறல் மறவர் இறைகூர்தலின்தெறல் மறவர் இறைகூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளியபொறை மலிந்து நிலன் நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணிஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி
கரும் கண் கொண்ட நெருங்கல் வெம் முலைகரும் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை
மையல் நோக்கின் தையலை நயந்தோர்மையல் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே இவள் தன்னைமாரேஅளியர் தாமே இவள் தன்னைமாரே
செல்வம் வேண்டார் செரு புகல் வேண்டிசெல்வம் வேண்டார் செரு புகல் வேண்டி
நிரல் அல்லோர்க்கு தரலோ இல் எனநிரல் அல்லோர்க்கு தரலோ இல் என
கழி பிணி பலகையர் கதுவாய் வாளர்கழி பிணி பலகையர் கதுவாய் வாளர்
குழாஅம் கொண்ட குருதி அம் புலவொடுகுழாஅம் கொண்ட குருதி அம் புலவொடு
கழாஅ தலையர் கரும் கடை நெடு வேல்கழாஅ தலையர் கரும் கடை நெடு வேல்
இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோஇன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ
என் ஆவது-கொல் தானேஎன் ஆவது-கொல் தானே
பன்னல் வேலி இ பணை நல் ஊரேபன்னல் வேலி இ பணை நல் ஊரே
  
# 346 அண்டர் மகன் குறுவழுதி# 346 அண்டர் மகன் குறுவழுதி
பிற பால் என மடுத்தலின்பிற பால் என மடுத்தலின்
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன்கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன்
ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல்ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல்
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல்அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல்
பேணுநர் பெறாஅது விளியும்பேணுநர் பெறாஅது விளியும்
புன் தலை பெரும் பாழ் செயும் இவள் நலனேபுன் தலை பெரும் பாழ் செயும் இவள் நலனே
  
# 347 கபிலர்# 347 கபிலர்
உண்போன் தான் நறும் கள்ளின் இட சிலஉண்போன் தான் நறும் கள்ளின் இட சில
நா இடை பல் தேர் கோல சிவந்தநா இடை பல் தேர் கோல சிவந்த
ஒளிறு ஒள் வாட குழைந்த பைம் தும்பைஒளிறு ஒள் வாட குழைந்த பைம் தும்பை
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்
மணம் நாறு மார்பின் மற போர் அகுதைமணம் நாறு மார்பின் மற போர் அகுதை
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்னகுண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன
குவை இரும் கூந்தல் வரு முலை செப்பகுவை இரும் கூந்தல் வரு முலை செப்ப
என் ஆவது-கொல் தானேஎன் ஆவது-கொல் தானே
விளங்கு உறு பராரைய ஆயினும் வேந்தர்விளங்கு உறு பராரைய ஆயினும் வேந்தர்
வினை நவில் யானை பிணிப்பவினை நவில் யானை பிணிப்ப
வேர் துளங்கின நம் ஊருள் மரனேவேர் துளங்கின நம் ஊருள் மரனே
  
# 348 பரணர்# 348 பரணர்
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇவெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ
கண் மடல் கொண்ட தீம் தேன் இரியகண் மடல் கொண்ட தீம் தேன் இரிய
கள் அரிக்கும் குயம் சிறு சின்கள் அரிக்கும் குயம் சிறு சின்
மீன் சீவும் பாண் சேரிமீன் சீவும் பாண் சேரி
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்னவாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன
குவளை உண்கண் இவளை தாயேகுவளை உண்கண் இவளை தாயே
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாதுஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும்நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும்
செம் நுதல் யானை பிணிப்பசெம் நுதல் யானை பிணிப்ப
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனேவருந்தல-மன் எம் பெரும் துறை மரனே
  
# 349 மதுரை மருதனிள நாகனார்# 349 மதுரை மருதனிள நாகனார்
நுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையாநுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையா
கடிய கூறும் வேந்தே தந்தையும்கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனேநெடிய அல்லது பணிந்து மொழியலனே
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்றுஇஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று
அரி மதர் மழை கண் அம் மா அரிவைஅரி மதர் மழை கண் அம் மா அரிவை
மரம் படு சிறு தீ போலமரம் படு சிறு தீ போல
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கேஅணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே
  
# 350 மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்# 350 மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர்சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர்
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காதுயாங்கு ஆவது-கொல் தானே தாங்காது
படு மழை உருமின் இறங்கு முரசின்படு மழை உருமின் இறங்கு முரசின்
கடு மான் வேந்தர் காலை வந்து எம்கடு மான் வேந்தர் காலை வந்து எம்
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோநெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ
பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்துபொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்தியஅடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடி வேல் எஃகின் சிவந்த உண்கண்வடி வேல் எஃகின் சிவந்த உண்கண்
தொடி பிறழ் முன்கை இளையோள்தொடி பிறழ் முன்கை இளையோள்
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கேஅணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே