Select Page
  
# 25.3 வையை# 25.3 வையை
அறவோர் உள்ளார் அரு மறை காப்பமதுரையில் அறவோராய் உள்ளவர்கள் அரிய வேதங்களைக் கடைப்பிடித்து நிற்க
———– ———— ———— ———-———- ———- ————- —————
செறுநர் விழையா செறிந்த நம் கேண்மைபகைவரும் விரும்பும் நெருக்கமான நம்முடைய நட்பு
மறுமுறை யானும் இயைக நெறி மாண்டமறுபிறப்பிலும் இயைவதாக!  ஒழுக்கத்தால் மாட்சிமைப்பட்ட 
தண் வரல் வையை எமக்குகுளிர்ந்த நீர் வரவினையுடைய வையையே எமக்கு;
  
# 26.4 வையை# 26.4 வையை
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன்ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான  பாண்டியனின்
பரி_மா நிரையின் பரந்தன்று வையைகுதிரைகள் வரிசையாக பரந்து வருவதைப் போன்று பரவி வருகிறது வையை;
  
# 27.5# 27.5
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள்மார்ச்சனை இடப்பட்டு முழங்கும் முழவோடு ஒப்பிடத்தக்க தோளினைக்
கண்ணாது உடன் வீழும் காரிகை கண்டோர்க்குகருதி அவர்பால் செல்வதேயன்றி, விரும்பும் அழகினைக் கண்டவர்க்கு
தம்மொடு நிற்குமோ நெஞ்சுதம்முடனேயே நிற்குமோ அவர் நெஞ்சு?
  
# 28.6# 28.6
முன்புற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலைமுன்னர் நுகர்ந்து அறியாத முதல் உறவினைக் கொண்ட திரண்ட கூந்தலினையுடையவளை,
இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும்அந்த உறவினால் இன்புற்றதால் ஏற்பட்ட இயற்கை அழகும், செயற்கை அழகும்,
நாண் எனும் தொல்லை அணி என்ன நன்_நுதலைநாணம் என்னும் பழைய அணியும் கொண்ட நல்ல நெற்றியையுடையவளை ..
  
# 29.7 மதுரை# 29.7 மதுரை
உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையாஇந்த உலகத்தின் அனைத்து நகர்களின் பெருமையையும் ஒரு பக்கமும்,. மதுரை நகரை ஒரு பக்கமும்
புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும்புலவர்கள் தம் அறிவாகிய துலாக்கோலில் இட்டு சீர்தூக்கும்போது, அந்த அனைத்து நகர்களின் பெருமையும்
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்தாம் வாடிப்போக, வாடிப்போகாத தன்மையையுடையது, பாண்டியனின்
நான்மாடக்கூடல் நகர்நான்மாடக் கூடலாகிய மதுரை.
  
# 30.8 எட்டாம் பாடல்# 30.8 எட்டாம் பாடல்
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைதிருமாலின் தொப்புளில் தோன்றி மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்பூவோடு ஒத்தது அழகிய ஊர், அந்தப் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்துஅக இதழ்களை ஒத்தன தெருக்கள்; அந்த இதழ்களின் நடுவே உள்ள
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்அரிய பொகுட்டினை ஒத்ததே பாண்டியனின் அரண்மனை;
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்அந்தப் பூவின் பூந்தாதுக்களைப் போன்றவர் இனிய தமிழ்க்குடி மக்கள்;
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்அந்தத் தாதுக்களை உண்ணும் பறவைகளைப் போன்றவர் பரிசில் பெற்று வாழ்பவர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்தஅந்தத் தாமரைப் பூவில் தோன்றிய பிரமதேவனுடைய நாவில் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்பநான்கு வேதங்களையும் கேள்வியால் கற்றவர்கள் ஓதுகின்ற குரலால் எழுப்ப,
ஏம இன் துயில் எழுதல் அல்லதைமிக்க இன்பமான துயிலிலிருந்து எழுதலன்றி,
வாழிய வஞ்சியும் கோழியும் போலவாழ்த்துப்பெற்ற வஞ்சியும் உறைந்தையும் போல
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலேகோழி கூவ எழாது எமது பெரிய ஊர்மக்களின் துயில்;
  
# 31.9 ஒன்பதாம் பாடல்# 31.9 ஒன்பதாம் பாடல்
தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு_அகம் எல்லாம்இனிய தமிழ்மொழியையே எல்லையாகக் கொண்ட தமிழ்நாடெங்கும்
நின்று நிலைஇ புகழ் பூத்தல் அல்லதுநின்று நிலைத்து, புகழால் பொலிந்து விளங்குவதன்றி,
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான்சிறிதளவும் குறைந்துபோதல் உண்டோ, மதுரை நகரின் புகழ்? மீன்கொடியைத் தேரில் கொண்ட பாண்டியனின்
குன்றம் உண்டாகும் அளவுபொதியில் மலை இருக்கும் காலம் அளவும்.
  
# 32.10 பத்தாம் பாடல்# 32.10 பத்தாம் பாடல்
செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்பதிருமகளுக்கு இட்ட திலகம் போல், தனது தலைமைப் பண்பிற்கு ஏற்ப,
வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லதுஇந்த உலகத்தில் திகழ்ந்து புகழால் பொலிந்து விளங்குவதன்றி,
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான்பொய்யாகிப்போய்விடுமோ மதுரை நகரின் புகழ்? ஒப்பனை செய்யப்பட்ட தேரினையுடைய பாண்டியனின்
வையை உண்டாகும் அளவுவையை ஆறு இருக்கும் காலம் அளவும்.
  
# 33.11 பதினோராம் பாடல்# 33.11 பதினோராம் பாடல்
கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல்கார்த்திகை மகளிரின் பொன்னாலாகிய மகரக்குழை போன்று
சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லதுசிறந்து விளங்கி, செல்வம் பெருகிப் பொலிதலை அன்றி
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான்குற்றம் உடையதாகுமோ மதுரை நகரின் புகழ்? மீன்கொடியைத் தேரில் கொண்ட பாண்டியனின்
வார்த்தை உண்டாகும் அளவுசெந்தமிழ் மொழி இருக்கின்ற காலம் அளவும்.
  
# 34.12 பனிரெண்டாம் பாடல்# 34.12 பனிரெண்டாம் பாடல்
ஈவாரை கொண்டாடி ஏற்பாரை பார்த்து உவக்கும்வள்ளண்மையோடு ஈதலைச் செய்வாரைப் போற்றி, தம்மிடம் வேண்டிவந்து பெற்றுக்கொள்வாரைப் பார்த்து மகிழ்கின்ற
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம்பாண்டியனின் நான்மாடக் கூடலிலும், முருகன் இருக்கும் திருப்பரங்குன்றத்திலும்
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார்வாழ்பவரே வாழ்பவர் எனப்படுவார், ஏனையோருள்
போவார் ஆர் புத்தேள்_உலகுபோவார் யார் தேவருலகிற்கு?
  
# 35 13 பதிமூன்றாம் பாடல்# 35 13 பதிமூன்றாம் பாடல்
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்வையையில் புதிதாக வருகின்ற நீரில் புனலாடுவது இனியதா?
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல்முருகப்பிரான் இருக்கும் தலைமைப் பண்புள்ள திருப்பரங்குன்றத்தினை வணங்கி இன்புறுதல் இனியதா?
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆககூர்மையான வேலின் நுனி போன்ற கண்களையுடைய பெண்கள் துணையாக வர
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும்இவ்விரண்டினில் எதனைச் செய்வோம் நாம் என்று எந்நாளும்
வழி மயக்கு_உற்று மருடல் நெடியான்வழியறியாது மருட்சியடைதல், பாண்டியனின்
நெடு மாட கூடற்கு இயல்புநெடிய மாடங்களையுடைய மதுரை மக்களுக்கு இயல்பு.