சொற்பிரிப்பு-மூலம் | அடிநேர்-உரை |
வசை இல் புகழ்
வயங்கு வெண் மீன் | பழிச்சொல் இல்லாத
புகழையுடைய, சுடர் வீசும் வெள்ளியாகிய மீன் |
திசை திரிந்து
தெற்கு ஏகினும் | (தான்
நிற்பதற்குரிய)வடதிசையினின்றும் மாறி தென்திசையில் சென்றாலும், |
தன் பாடிய தளி
உணவின் | தன்னை(மேகத்தை)ப்
பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட |
புள் தேம்ப
புயல் மாறி | வானம்பாடி வருந்த மழை
பெய்யாமற்போக, |
வான்
பொய்ப்பினும் தான் பொய்யா 5 | மேகம் பொய்த்தாலும்
தான் பொய்யாத (காலந்தோறும் வருகின்ற), 5 |
மலை தலைய கடல்
காவிரி | (குடகு)மலையை
உற்பத்தியிடமாகக்கொண்ட கடற்பக்கத்துக் காவிரி(யின்) |
புனல் பரந்து
பொன் கொழிக்கும் | நீர் பரந்து பொன்(போல்
விளைச்சல்) செழித்துப்பெறுகும் – (28-பெரிய சோழநாட்டில்), |
விளைவு அறா
வியன் கழனி | விளைதல் தொழில்
அற்றுப்போகாத அகன்ற வயல்களில், |
கார் கரும்பின்
கமழ் ஆலை | கார்காலத்ததைப்போன்ற(செழுமையான)
கரும்பு(ப் பாகு)மணக்கும் கொட்டிலின் (அடுப்பு) |
தீ தெறுவின்
கவின் வாடி 10 | நெருப்பின் அனல்
சுடுகையினால், அழகு கெட்டு,
10 |
நீர் செறுவின்
நீள் நெய்தல் | நீரையுடைய வயலில் உள்ள
நீண்ட நெய்தல் |
பூ சாம்பும்
புலத்து ஆங்கண் | மலர் வாடும்
வயல்வெளிகளில், |
காய் செந்நெல்
கதிர் அருந்து | காய்ந்த
செந்நெற்கதிரைத் தின்ற, |
மோட்டு எருமை
முழு குழவி | பருத்த வயிற்றையுடைய
எருமை (ஈன்ற)முதிர்ந்த கன்றுகள், |
கூட்டு நிழல்
துயில் வதியும் 15 | நெற்கூட்டினுடைய
நிழலில் உறக்கத்தைக் கொள்ளும் – (28-பெரிய சோழநாட்டில்), 15 |
கோள் தெங்கின்
குலை வாழை | கொத்துக்கொத்தான
காய்களையுடைய தென்னையையும், குலைகளையுடைய வாழையினையும், |
காய் கமுகின்
கமழ் மஞ்சள் | (நன்கு
காய்த்த)காயையுடைய பாக்கு மரத்தையும், மணம் கமழும் மஞ்சளையும், |
இன மாவின் இணர்
பெண்ணை | கூட்டமான
மாமரங்களையும், குலைகளையுடைய பனையினையும், |
முதல் சேம்பின்
முளை இஞ்சி | கிழங்கையுடைய
சேம்பினையும், முளையினையுடைய இஞ்சியினையும் உடைய – (28-பெரிய சோழநாட்டில்), |
அகல் நகர்
வியல் முற்றத்து 20 | அகன்ற மனையின் பரந்த
முற்றத்தில்,
20 |
சுடர் நுதல் மட
நோக்கின் | பளிச்சிடும்
நெற்றியையும், கபடமற்ற பார்வையையும்(கொண்ட), |
நேர் இழை
மகளிர் உணங்கு உணா கவரும் | நேர்த்தியான நகைகளை
அணிந்த பெண்கள், உலருகின்ற நெல்லைத் தின்னும் |
கோழி எறிந்த
கொடும் கால் கனம் குழை | கோழியை (விரட்ட)எறிந்த
வளைவான அடிப்பகுதியையுடைய பொன்னாற்செய்த காதணி, |
பொன் கால்
புதல்வர் புரவி இன்று உருட்டும் | பொன் காப்பு அணிந்த
கால்களையுடைய சிறுவர் (குதிரை பூட்டாமற் கையால்)உருட்டும், |
மு கால் சிறு
தேர் முன் வழி விலக்கும் 25 | மூன்று சக்கர
நடைவண்டியின் முன்செல்லும் வழியைத் தடுக்கும் 25 |
விலங்கு பகை
அல்லது கலங்கு பகை அறியா | (இங்ஙனம்
குறுக்கிடும்)பகையைத் தவிர (மனம்)கலங்கும் (வேறு)பகையை அறியாத, |
கொழும் பல்
குடி செழும் பாக்கத்து | நல்ல வசதியான பல
குடிகளைக் கொண்ட, செழுமையான பாக்கங்களையும், |
குறும் பல் ஊர்
நெடும் சோணாட்டு | அருகருகே அமைந்த பல
(சிறிய)ஊர்களையுமுடைய – பெரிய சோழநாட்டில்; |
வெள்ளை உப்பின்
கொள்ளை சாற்றி | வெள்ளை(வெளேர் என்ற)
உப்பின் விலையைச் சொல்லி(விற்று, அதற்கு மாற்றாக வாங்கிய) |
நெல்லொடு வந்த
வல் வாய் பஃறி 30 | நெல்லைக் கொண்டுவந்த,
கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளை — 30 |
பணை நிலை
புரவியின் அணை முதல் பிணிக்கும் | கொட்டில் பந்தியில்
நிறுத்தப்படும் குதிரைகளை(க் கட்டிவைப்பதை)ப் போன்று — கட்டுத்தறிகளில்
கட்டிவைக்கும் |
கழி சூழ்
படப்பை கலி யாணர் | உப்பங்கழி சூழ்ந்த
ஊர்ப்புறங்களையும், மனமகிழ்ச்சி தரும் புதுவருவாயையுடைய |
பொழில் புறவின்
பூ தண்டலை | தோப்புக்களை அடுத்து
இருக்கும் பூஞ்சோலைகளையும், |
மழை நீங்கிய மா
விசும்பின் | மழை(பெய்து)
விட்டுப்போன அகன்ற ஆகாயத்தில் |
மதி சேர்ந்த மக
வெண் மீன் 35 | சந்திரனைச் சேர்ந்த
மகம் என்னும் வெள்ளிய மீனின் 35 |
உரு கெழு திறல்
உயர் கோட்டத்து | வடிவத்தில் அமைந்த
வலிமையுள்ள உயர்ந்த கரையையுடைய, |
முருகு அமர் பூ
முரண் கிடக்கை | மணம்பொருந்திய பூக்கள்
நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடப்பதினால் |
வரி அணி சுடர்
வான் பொய்கை | பல நிறங்களைக் கொண்டு
ஒளிரும் அழகிய பொய்கைகளையும், |
இரு காமத்து
இணை ஏரி | (இம்மையிலும்
மறுமையிலும் உண்டாகிய) இரண்டுவிதக் காம இன்பம் (கொடுக்கும்) இணைந்த ஏரிகளையும்; |
புலி பொறி போர்
கதவின் 40 | புலிச் சின்னத்தையும்
(பலகைகள் தம்மில் நன்கு)பொருதும் (இரட்டைக்)கதவுகளையும் (உடைய), 40 |
திரு துஞ்சும்
திண் காப்பின் | செல்வம் தங்கும்
திண்மையான மதிலையும்(உடைய), |
புகழ் நிலைஇய
மொழி வளர | (இம்மையில்)புகழ்
நிலைபெற்ற சொல் எங்கும் பரவிநிற்க, |
அறம் நிலைஇய
அகன் அட்டில் | (மறுமைக்கு)அறம்
நிலைபெற்ற, அகன்ற சமையற்கூடத்தில் |
சோறு வாக்கிய
கொழும் கஞ்சி | சோற்றை வடித்து
வார்த்த கொழுமையான கஞ்சி |
யாறு போல
பரந்து ஒழுகி 45 | ஆற்றுநீர் போல
(எங்கும்)பரவி ஓடி,
45 |
ஏறு பொர சேறாகி | (அதைக் குடிக்க
வந்த)காளைகள் தம்மில் பொருவதால் சேறாய் ஆகி, |
தேர் ஓட துகள்
கெழுமி | (அச் சேற்றின்
மீது)(பல)தேர்கள் ஓடுவதால் துகள்களாய் (மதில்கள் மீது)தெறித்து, |
நீறு ஆடிய
களிறு போல | புழுதியில் விளையாண்ட
(அதனை மேலே அப்பிக்கொண்ட) ஆண்யானையைப் போல, |
வேறுபட்ட வினை
ஓவத்து | பல்வேறுவிதமாக
வரையப்பட்ட சித்திரங்களையுடைய |
வெண் கோயில்
மாசு ஊட்டும் 50 | வெண்மையான
அரண்மனை(மதில்களை) அழுக்கேறப்பண்ணும்; 50 |
தண் கேணி தகை
முற்றத்து | குளிர்ந்த சிறிய
குளங்களை உள்ளேயடக்கின முற்றத்தையுடைய, |
பகட்டு
எருத்தின் பல சாலை | பெரிய எருதுகளுக்கான
(அவற்றிற்கு வைக்கோல் இடும்)பல சாலைகளையும், |
தவ பள்ளி தாழ்
காவின் | தவஞ்செய்யும்
(சமண,பௌத்த) பள்ளிகள் இருக்கும் தாழ்வான மரங்கள் கொண்ட சோலைகளில் |
அவிர் சடை
முனிவர் அங்கி வேட்கும் | மினுமினுக்கும்
சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய) |
ஆவுதி நறும்
புகை முனைஇ குயில் தம் 55 | (நெய்
முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய 55 |
மா இரும்
பெடையோடு இரியல் போகி | கரிய பெரிய பேடைகளுடன்
விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி, |
பூதம் காக்கும்
புகல் அரும் கடி நகர் | பூதங்கள்
(வாசலில்)காத்துநிற்கும் நுழைவதற்கு அரிய காவல் உள்ள (காளி)கோட்டத்தில், |
தூதுணம்புறவொடு
துச்சில் சேக்கும் | கல்லைத் தின்னும்
அழகிய புறாக்களுடன் ஒதுக்குப்புறமாகத் தங்கும் |
முது மரத்த
முரண் களரி | பழைமையான மரத்தின்
(கீழான) மற்போர் (செய்யும்) களங்கள் (கொண்ட பட்டினம்) – |
வரி மணல் அகன்
திட்டை 60 | அறல் சேர்ந்த மணல்
கொண்ட அகன்ற திட்டுகளில்,
60 |
இரும் கிளை
இனன் ஒக்கல் | பெரும்குடும்பத்தவரும்,
ஓரே இனத்துச் சுற்றத்தவருமான, |
கரும் தொழில்
கலி மாக்கள் | வலிய தொழில் செய்யும்
செருக்குள்ள ஆடவர் |
கடல் இறவின்
சூடு தின்றும் | கடல் இறால்களின்
(தசை)சுடப்பட்டதைத் தின்றும், |
வயல் ஆமை
புழுக்கு உண்டும் | வயல் ஆமையைப்
புழுக்கின இறைச்சியைத் தின்றும், |
வறள் அடும்பின்
மலர் மலைந்தும் 65 | மணற்பாங்கான இடத்தின்
(அங்கு வளரும்)அடப்பம் பூவைத் தலையிலே கட்டியும், 65 |
புனல் ஆம்பல்
பூ சூடியும் | நீர் (மேல்
வளரும்)ஆம்பல் பூவை(ப் பறித்து)ச் சூடியும், |
நீல் நிற
விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் | நீல நிறமுடைய
ஆகாயத்தில் வலமாக எழுந்து திரிதலைச்செய்யும் |
நாள்மீன் விராய
கோள்மீன் போல | (அன்றைய)நாளுக்குரிய
விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல, |
மலர் தலை
மன்றத்து பலர் உடன் குழீஇ | அகன்ற இடத்தையுடைய
அம்பலங்களில் பலரும் சேரத் திரண்டு, |
கையினும்
கலத்தினும் மெய் உற தீண்டி 70 | (வெறும்)கைகளாலும்
ஆயுதங்களாலும் உடலில் படும்படி பற்றியும் அடித்தும், 70 |
பெரும்
சினத்தால் புறக்கொடாஅது | மிகுந்த சினத்தால்
புறமுதுகுகொடாமல், |
இரும் செருவின்
இகல் மொய்ம்பினோர் | நீண்ட போர்(செய்யும்)
போட்டிபோடும் வலிமையுடையோர் |
கல் எறியும்
கவண் வெரீஇ | கல்லை எறியும் கவணை
அஞ்சி |
புள் இரியும்
புகர் போந்தை | பறவைகள் பறந்தோடும்
கபிலநிறப் பனைமரங்கள் (கொண்ட பட்டினம்) – |
பறழ் பன்றி பல்
கோழி 75 | குட்டிகளையுடைய
பன்றிகளையும், பலவிதமான கோழிகளையும், 75 |
உறை கிணற்று
புற சேரி | உறைக் கிணறுகளையும்
உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில் |
மேழக தகரொடு
சிவல் விளையாட | செம்மறி
ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட – (இருக்கும் பட்டினம்), |
கிடுகு
நிரைத்து எஃகு ஊன்றி | (தோல்)கேடயங்களை
வரிசையாக(க் கூரைபோல் சாய்த்து) அடுக்கி, வேலை ஊன்றி, |
நடுகல்லின்
அரண் போல | நடுகல்லுக்கு வைத்த
பாதுகாப்பு போல, |
நெடும்
தூண்டிலில் காழ் சேர்த்திய 80 | நீண்ட தூண்டிலில்
இரும்பு முள் சேர்த்துவைக்கப்பட்ட
80 |
குறும் கூரை
குடி நாப்பண் | குறுகிய
கூரைச்சரிவுகளையுடைய குடியிருப்புகளின் நடுவில், |
நிலவு அடைந்த
இருள் போல | நிலவின் நடுவே சேர்ந்த
இருளைப் போல |
வலை உணங்கும்
மணல் முன்றில் | வலைகிடந்து உலரும்
மணலையுடைய முற்றத்தைக்கொண்ட இல்லங்களில், |
வீழ் தாழை தாள்
தாழ்ந்த | விழுதையுடைய தாழையின்
அடியில் இருந்த |
வெண்கூதாளத்து
தண் பூ கோதையர் 85 | வெண்டாளியின்
குளிர்ந்த பூவால் செய்த மாலையையுடையோர், 85 |
சினை சுறவின்
கோடு நட்டு | சினைப்பட்ட சுறா
மீனின் கொம்பை நட்டு, |
மனை சேர்த்திய
வல் அணங்கினான் | மனையில் ஏற்றிய
துடியான தெய்வம் காரணமாக, |
மடல் தாழை மலர்
மலைந்தும் | மடலையுடைய தாழையின்
மலரைச் சூடியும், |
பிணர் பெண்ணை
பிழி மாந்தியும் | சொரசொரப்பான
பனைமரத்துக் கள்ளை உண்டும், |
புன் தலை இரும்
பரதவர் 90 | பரட்டைபாய்ந்த
தலையினையுடைய கரிய பரதவர்
90 |
பைம் தழை மா
மகளிரொடு | பசிய தழையை(உடுத்திய)
மாநிற மகளிரோடு, |
பாய் இரும் பனி
கடல் வேட்டம் செல்லாது | பரந்த கருமைநிறமுடைய
குளிர்ந்த கடலில் மீன்பிடிக்கச் செல்லாது, |
உவவு மடிந்து
உண்டு ஆடியும் | உவாநாள்(பௌர்ணமி/அமாவாசை)
ஓய்வுஅனுசரித்து உண்டும் விளையாடியும்; |
புலவு மணல் பூ
கானல் | முடைநாற்றமுள்ள
மணலையும் பூக்களையும் உடைய கடற்கரையில், |
மா மலை அணைந்த
கொண்மூ போலவும் 95 | கரிய மலையைச் சேர்ந்த
மேகம் போலவும்,
95 |
தாய் முலை
தழுவிய குழவி போலவும் | தாயின் முலையைத்
தழுவிய பிள்ளையைப் போலவும், |
தேறு நீர்
புணரியோடு யாறு தலைமணக்கும் | தெளிந்த கடலின்
அலைகளுடன் காவிரியாறு கலக்கும் |
மலி ஓதத்து ஒலி
கூடல் | மிகுந்த அலைஆரவாரம்
ஒலிக்கும் புகார்முகத்தில், |
தீது நீங்க
கடல் ஆடியும் | தீவினை போகக்
கடலாடியும், |
மாசு போக புனல்
படிந்தும் 100 | (பின்னர்)உப்புப் போக
(நல்ல)நீரிலே குளித்தும்,
100 |
அலவன்
ஆட்டியும் உரவு திரை உழக்கியும் | நண்டுகளை
அலைக்கழித்தும், தொடர்ந்து வரும் அலைகளை மிதித்து விளையாடியும், |
பாவை
சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் | (ஈர மணலில்)உருவங்களை
உருவாக்கியும்; ஐம்பொறிகளால் நுகரும்பொருள்களை நுகர்ந்து மயங்கியும், |
அகலா காதலொடு
பகல் விளையாடி | நீங்காத
விருப்பத்துடன் பகற்பொழுதெல்லாம் விளையாடி, |
பெறற்கு அரும்
தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் | பெறுவதற்கு அரிய
தொன்றுதொட்ட மேன்மையுடைய சுவர்க்கத்தைப் போன்ற, |
பொய்யா மரபின்
பூ மலி பெரும் துறை 105 | பொய்க்காத இயல்புடைய,
மலர்கள் மிக்க பெரிய துறைகள் – (உள்ள பட்டினம்) 105 |
துணை புணர்ந்த
மட மங்கையர் | (தம்)கணவரைக் கூடிய
மடப்பம் பொருந்திய இளம்பெண்கள், |
பட்டு நீக்கி
துகில் உடுத்தும் | பட்டுடையை நீக்கிப்
(மெல்லிய)பருத்தி ஆடையை உடுத்தவும், |
மட்டு நீக்கி
மது மகிழ்ந்தும் | (மிதமான கிளர்ச்சியைத்
தரும்)கள்ளைத் தவிர்த்து (வெறியூட்டும்)மது (உண்டு) மகிழ்ந்தும், |
மைந்தர் கண்ணி
மகளிர் சூடவும் | கணவர் (சூடும்)கண்ணியை
மகளிர் (தலையில்)சூடிக்கொள்ளவும், |
மகளிர் கோதை
மைந்தர் மலையவும் 110 | மகளிர்
(சூடும்)கோதையைக் கணவர் (தோளைச்சுற்றி)அணிந்துகொள்ளவும், 110 |
நெடும் கால்
மாடத்து ஒள் எரி நோக்கி | உயரமான தூண்களையுடைய
மாடங்களில் ஒளிரும் தீப்பந்தங்களைப் பார்த்து, |
கொடும் திமில்
பரதவர் குரூஉ சுடர் எண்ணவும் | வளைந்த
கட்டுமரங்களிலிருக்கும் மீனவர், செந்நிறச் சுவாலைகளை எண்ணவும், |
பாடல்
ஓர்த்தும் நாடகம் நயந்தும் | பாடல்(இசையை)
ரசித்துக்கேட்டும், நாடகங்களைக் கண்டுபோற்றியும், |
வெண் நிலவின்
பயன் துய்த்தும் | வெள்ளிய நிலவொளியின்
பயனை நுகர்ந்தும், |
கண் அடைஇய கடை
கங்குலான் 115 | (பின்பு)கண்துயின்ற
கடையாமத்து இரவில்,
115 |
மாஅ காவிரி
மணம் கூட்டும் | அகண்ட காவிரி (பலவித
மலர்களின்)மணங்களைக் கொண்டுவந்து திரட்டும் |
தூஉ எக்கர்
துயில் மடிந்து | தூய மணல்திட்டுகளில்
துயில்கொண்டு கிடந்து – (இருக்கும் பட்டினம்), |
வால் இணர் மடல்
தாழை | வெண்மையான
பூங்கொத்துக்களையும் மடல்களையுமுடைய தாழையையுடைய |
வேலாழி வியன்
தெருவில் | கடற்கரையின் (அருகே
இருக்கும்)அகன்ற தெருவிடத்து, |
நல் இறைவன்
பொருள் காக்கும் 120 | நல்ல அரசனின் பொருளை
(மற்றவர் கொள்ளாமல்)காக்கும் 120 |
தொல் இசை
தொழில் மாக்கள் | தொன்மையான புகழையுடைய
(சுங்கம் வசூலிக்கும்)தொழிலாளர், |
காய் சினத்த
கதிர் செல்வன் | சுடும் சினமுடைய
கதிர்களையுடைய ஞாயிற்றின் |
தேர் பூண்ட மாஅ
போல | தேர் பூண்ட
குதிரைகளைப் போல, |
வைகல்தொறும்
அசைவு இன்றி | நாள்தோறும்
சோர்வின்றிச் |
உல்கு செய
குறைபடாது 125 | சுங்கம் கொள்வதில்
தளர்வடையாராக –
125 |
வான் முகந்த
நீர் மலை பொழியவும் | மேகம் (தான்) முகந்த
நீரை மலையில் சொரியவும், |
மலை பொழிந்த
நீர் கடல் பரப்பவும் | மலையில் சொரிந்த நீர்
(மீண்டும்)கடலில் பரவவும், |
மாரி பெய்யும்
பருவம் போல | மழை பெய்யும் ஒழுங்கான
(சுழல்)நிகழ்வு போல – |
நீரினின்றும்
நிலத்து ஏற்றவும் | கடலிலிருந்து
நிலத்திற்கு(பண்டசாலைக்கு) ஏற்றுவதற்காகவும், |
நிலத்தினின்று
நீர் பரப்பவும் 130 | நிலத்திலிருந்து(அப்பண்டசாலையிலிருந்து)
கடலில் (உள்ள மரக்கலங்களில்)பரப்பிவைக்கவும், 130 |
அளந்து அறியா
பல பண்டம் | (மனத்தால்)அளந்து அறிய
முடியாத பலவகைப் பொருட்களும் |
வரம்பு அறியாமை
வந்து ஈண்டி | எல்லை அறியாதபடி வந்து
திரண்டு, |
அரும் கடி
பெரும் காப்பின் | அரிய காவலையுடைய
பெரும் பாதுகாப்புடைய சுங்கச்சாவடியில், |
வலி உடை வல்
அணங்கின் நோன் | வலிமையுடைய பெரும்
அச்சம்தரும் (அச்சடையாளமாகிய)மூர்க்கமான |
புலி பொறித்து
புறம் போக்கி 135 | (பாயும்)புலி(ச்சின்னம்)
இட்டு, (பண்டசாலைக்கு)ப் வெளியில் அனுப்பி, 135 |
மதி நிறைந்த
மலி பண்டம் | மதிப்பு மிக்க ஏராளமான
பண்டங்கள் |
பொதி மூடை போர்
ஏறி | பொதிந்த பொதிகளை
அடுக்கிவைத்த குவியலின்மீது ஏறி, |
மழை ஆடு சிமைய
மால் வரை கவாஅன் | மழை விளையாடும்
சிகரத்தையுடைய உயர்ந்த மூங்கில்கள் வளர்ந்த சரிவுகள் உள்ள |
வரை ஆடு வருடை
தோற்றம் போல | மலையில் துள்ளி
விளையாடும் வருடைமானின் காட்சி போல, |
கூர் உகிர்
ஞமலி கொடும் தாள் ஏற்றை 140 | கூரிய நகங்களையுடைய
நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது 140 |
ஏழக தகரோடு
உகளும் முன்றில் | ஆட்டுக் கிடாயுடன்
குதிக்கும் (பண்டசாலையின்)முற்றத்தையும் – (கொண்ட பட்டினம்), |
குறும் தொடை
நெடும் படிக்கால் | (ஒன்றற்கொன்று)நெருக்கமாய்
அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள்(சார்த்தின) |
கொடும் திண்ணை
பல் தகைப்பின் | சுற்றுத்
திண்ணையினையும், பல உள்கட்டுக்களையும், |
புழை வாயில்
போகு இடைகழி | சிறுவாசலையும்,
பெரியவாசலையும், நீண்ட நடை(ரேழி)களையும் உடைய |
மழை தோயும்
உயர் மாடத்து 145 | மேகங்களை
எட்டித்தொடும்(அளவுக்கு) உயரமான மாடத்தில் – 145 |
சே அடி செறி
குறங்கின் | சிவந்த பாதங்களும்,
செறிந்த தொடைகளும், |
பாசிழை பகட்டு
அல்குல் | புத்தம் புதிய
நகைகளும், பெரிய அல்குலும், |
தூசு உடை
துகிர் மேனி | தூய்மையான பஞ்சினால்
நெய்த ஆடையும், பவளம் போலும் நிறமும், |
மயில் இயல்
மான் நோக்கின் | மயில்(போன்ற)
மென்னயமும், மான்(போன்ற) பார்வையும், |
கிளி மழலை மென்
சாயலோர் 150 | கிளி(போன்ற)
மழலைமொழியும், மென்மையான சாயலும் உடைய மகளிர் – 150 |
வளி நுழையும்
வாய் பொருந்தி | தென்காற்று வரும்
சாளரங்களைச் சேர்த்து, |
ஓங்கு வரை
மருங்கின் நுண் தாது உறைக்கும் | உயர்ந்த மலைப்பக்கத்தே
நுண்ணிய மகரந்தம் துளிக்கும் |
காந்தள் அம்
துடுப்பின் கவி குலை அன்ன | செங்காந்தளின் அழகிய
மடல்கள் (இணைந்து) கவிந்திருக்கும் குலையைப் போன்ற — |
செறி தொடி
முன்கை கூப்பி செவ்வேள் | செறிந்த வளையல்களுடைய
— முன்கை குவித்து வணங்கிநிற்க, முருகனின் |
வெறி ஆடு
மகளிரொடு செறிய தாஅய் 155 | வெறியாட்டு ஆடும்
மகளிரோடு (அவர் ஆட்டத்திற்கு இணையாகப்)பொருந்தப் பரந்து, 155 |
குழல் அகவ யாழ்
முரல | வங்கியம்(புல்லாங்குழல்)
இசையுண்டாக்க, யாழ் ஒலிக்க, |
முழவு அதிர
முரசு இயம்ப | முழவு
அதிர்ந்துமுழங்க, முரசு ஒலிப்ப, |
விழவு அறா
வியல் ஆவணத்து | விழாக்கோலம் நீங்காத
அகன்ற அங்காடித் தெருவினில் – |
மை அறு
சிறப்பின் தெய்வம் சேர்த்திய | குற்றம் அற்ற
சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட |
மலர் அணி
வாயில் பலர் தொழு கொடியும் 160 | மலர் அணிந்த
(கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும் 160 |
வரு புனல் தந்த
வெண் மணல் கான்யாற்று | (பெருகி)வரும் நீர்
கொண்டுவந்த வெண்மையான மணலையுடைய காட்டாற்று(க்கரையில் நின்ற) |
உரு கெழு
கரும்பின் ஒண் பூ போல | அழகு பொருந்திய
கரும்பின் பிரகாசமுள்ள பூவைப் போன்ற, |
கூழ் உடை கொழு
மஞ்சிகை | (தானிய
மாவுக்)கூழையுடைய நிறைந்த பாத்திரத்தையும், |
தாழ் உடை தண்
பணியத்து | வழிபாட்டுடன்
(பரப்பிய)குளிர்ந்த பண்ணியங்களையும்(வைத்து) |
வால் அரிசி பலி
சிதறி 165 | வெண்மையான அரிசியையும்
பலியாகத் தூவி,
165 |
பாகு உகுத்த
பசு மெழுக்கின் | பாக்கு(வெற்றிலை)
சொரிந்த, புது மெழுக்கினையுடைய, |
காழ் ஊன்றிய
கவி கிடுகின் | கால்கள் நட்டு (அதன்
மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின் |
மேல் ஊன்றிய
துகில் கொடியும் | மேலே நட்டுவைத்த (வீர
வணக்க)துகில் கொடிகளும், |
பல் கேள்வி
துறைபோகிய | பல நூல்களை(முற்றக்
கற்று அவற்றில்) நிறைவுபெற்ற |
தொல் ஆணை நல்
ஆசிரியர் 170 | பெரிய ஆளுமை(பெற்ற)
நல்ல ஆசிரியர்கள்
170 |
உறழ் குறித்து
எடுத்த உரு கெழு கொடியும் | வாது (செய்யக்)கருதிக்
கட்டின அச்சம் மிகுந்த கொடிகளும், |
வெளில்
இளக்கும் களிறு போல | கட்டுக்கம்பத்தை
(அசைத்து அசைத்து)நெகிழ்க்கும் ஆண்யானை போன்று, |
தீம் புகார்
திரை முன்துறை | (கண்ணுக்கு)இனிதான
புகாரிடத்து அலைகளையுடைய துறையின் முன்னே, |
தூங்கு நாவாய்
துவன்று இருக்கை | அசைகின்ற (நெருக்கமாய்
நின்று காத்திருக்கும்)மரக்கலங்களின் நெருக்கமான இருப்பினில், |
மிசை கூம்பின்
நசை கொடியும் 175 | (அவற்றின்)மேல்
(நட்ட)பாய்மரத்தின் (மேலெடுத்த)விருப்பம் தரும் கொடிகளும், 175 |
மீன் தடிந்து
விடக்கு அறுத்து | மீனை வெட்டி, (அதனுள்
இருக்கும்)வேண்டாத பகுதிகளை நீக்கி, |
ஊன் பொரிக்கும்
ஒலி முன்றில் | (அதன்)தசையினைப்
பொரிக்கும் ஓசையெழும்பும் முற்றத்தினையும், |
மணல் குவைஇ
மலர் சிதறி | மணலைக் குவித்து,
மலர்களைச் சிதறி, |
பலர் புகு மனை
பலி புதவின் | (கள்ளுண்போர்)பலரும்
செல்லும் மனைகளில் (தெய்வத்திற்குக் கொடுக்கும்)பலிகளுக்கான வாசலில் |
நறவு நொடை
கொடியொடு 180 | கள் விற்பனைக்காகக்
கட்டிய கொடியுடன்,
180 |
பிறபிறவும் நனி
விரைஇ | ஏனையவற்றிற்குக்
கட்டின கொடிகளும் மிகவும் கலந்துகிடப்பதால், |
பல் வேறு
உருவின் பதாகை நீழல் | பலவாய் வேறுபட்ட
வடிவினையுடைய பெருங்கொடிகளின் நிழலில் – |
செல் கதிர்
நுழையா செழு நகர் வரைப்பின் | செல்கின்ற
(ஞாயிற்றின்)கிரணங்கள் நுழையமுடியாத வளமையான ஊர் எல்லையில், |
செல்லா நல் இசை
அமரர் காப்பின் | குன்றாத நல்ல
புகழையுடைய தேவர்களின் காவலால், |
நீரின் வந்த
நிமிர் பரி புரவியும் 185 | கடலில்
(மரக்கலங்களில்)வந்த நிமிர்ந்த நடையினையுடைய குதிரைகளும், 185 |
காலின் வந்த
கரும் கறி மூடையும் | (நிலத்தில்)வண்டிகளில்
வந்த கரிய மிளகுப் பொதிகளும், |
வடமலை பிறந்த
மணியும் பொன்னும் | இமயமலையில் பிறந்த
மாணிக்கமும், பொன்னும், |
குட மலை பிறந்த
ஆரமும் அகிலும் | பொதிகை மலையில் பிறந்த
சந்தனமும், அகிலும், |
தென் கடல்
முத்தும் குண கடல் துகிரும் | தென்திசைக் கடலில்
(பிறந்த)முத்தும், கீழ்த்திசைக் கடலில் (பிறந்த)பவளமும், |
கங்கை வாரியும்
காவிரி பயனும் 190 | கங்கையாற்றின்
விளைச்சலும், காவிரியாற்றின் செல்வங்களும், 190 |
ஈழத்து உணவும்
காழகத்து ஆக்கமும் | ஈழத்தின்
உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும், |
அரியவும்
பெரியவும் நெரிய ஈண்டி | அரிதானவும்,
பெரிதானவும், (நிலத்தின் முதுகு)நெளியும்படி திரண்டு, |
வளம்
தலைமயங்கிய நனம் தலை மறுகின் | செல்வங்கள்
(ஒன்றோடொன்று)கலந்துகிடக்கும் அகன்ற இடங்களுடைய தெருக்களும் – (கொண்ட
பட்டினம்), |
நீர்
நாப்பண்ணும் நிலத்தின் மேலும் | (மீன்
பிடிப்போர்)கடல்நீர் நடுவிடத்தும், (ஏனையோர்)கரையினிடத்தும் |
ஏமாப்ப இனிது
துஞ்சி 195 | மகிழ்ச்சியுடன்
இனிதாகத் தூங்கி,
195 |
கிளை கலித்து
பகை பேணாது | (தம்)சுற்றம் தழைக்க
(தம் உயிர்க்கு வரும்)பகையைப் பற்றிக்கவலைப்படாமல், |
வலைஞர்
முன்றில் மீன் பிறழவும் | வலைஞர் முற்றத்தில்
மீன் பிறழ்ந்து திரியும்படியாகவும், |
விலைஞர்
குரம்பை மா ஈண்டவும் | விலைஞர் குடிலில்
விலங்குகள் கிடக்கும்படியாகவும், |
கொலை கடிந்தும்
களவு நீக்கியும் | கொலைத் தொழிலை
விலக்கியும், களவுத் தொழிலைப் போக்கியும், |
அமரர் பேணியும்
ஆவுதி அருத்தியும் 200 | தேவர்களைப்
போற்றியும், வேள்வியைச் செய்வித்தும் 200 |
நல் ஆனொடு பகடு
ஓம்பியும் | நல்ல பசுக்களோடு
எருதுகளைப் பாதுகாத்தும், |
நான்மறையோர்
புகழ் பரப்பியும் | அந்தணர்க்குள்ள புகழை
அவர்க்கு நிலைநிறுத்தியும், |
பண்ணியம்
அட்டியும் பசும் பதம் கொடுத்தும் | (பல)பண்டங்களை
ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும், |
புண்ணியம்
முட்டா தண் நிழல் வாழ்க்கை | அறத்தொழில்கள்
முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய, |
கொடு மேழி நசை
உழவர் 205 | வளைந்த மேழி(யால்
உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும் – 205 |
நெடு நுகத்து
பகல் போல | நீண்ட நுகத்தடியில்
(தைத்த) பகலாணி போல, |
நடுவு நின்ற
நல் நெஞ்சினோர் | நடுவுநிலையென்னும்
குணம் நிலைபெற்ற நல்ல நெஞ்சினையுடையோர், |
வடு அஞ்சி வாய்
மொழிந்து | (தம்
குடிக்கு)பழிச்சொல் அஞ்சி மெய்யே சொல்லி, |
தமவும் பிறவும்
ஒப்ப நாடி | தம்முடையவற்றையும்
பிறருடையவற்றையும் ஒன்றாக எண்ணி, |
கொள்வதூஉம்
மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது 210 | (தாம்)கொள்வனவற்றை
மிகையாகக் கொள்ளாது, கொடுப்பனவற்றைக் குறையாகக் கொடாமல், 210 |
பல் பண்டம்
பகர்ந்து வீசும் | பல சரக்குகளையும்
விலைசொல்லிக் கொடுக்கும், |
தொல் கொண்டி
துவன்று இருக்கை | பழந்தொழிலால் வரும்
உணவினைக் கொள்ளும், நெருங்கின குடியிருப்புகள் – (கொண்ட பட்டினம்), |
பல் ஆயமொடு பதி
பழகி | பல திரளோடே
இவ்வூரிடத்தே பழகி, |
வேறுவேறு
உயர்ந்த முது வாய் ஒக்கல் | பல பல சாதிகளாயுயர்ந்த
அறிவு வாய்ந்த சுற்றத்தினர் |
சாறு அயர்
மூதூர் சென்று தொக்கு ஆங்கு 215 | திருவிழா நிகழும்
பழைமையான ஊருக்குச் சென்று குடியேறினாற்போன்று, 215 |
மொழி பல
பெருகிய பழி தீர் தேஎத்து | மொழிகள் பல பெருகிய
குற்றமற்ற (பிற)தேசங்களிலே |
புலம் பெயர்
மாக்கள் கலந்து இனிது உறையும் | (தத்தம்)நிலத்தைக்
கைவிட்டுப்போந்த மக்கள் கூடி மகிழ்ந்து இருக்கும், |
முட்டா
சிறப்பின் பட்டினம் பெறினும் | குறைவுபடாத சிறப்புகள்
கொண்ட – பட்டினம் (எனக்கு உரித்தாகப்)பெறுவதாயினும் – |
வார் இரும்
கூந்தல் வயங்கிழை ஒழிய | நீண்ட கரிய
கூந்தலையுடைய ஒளிரும் அணிகளையுடையாள் (இங்கு என்னைப்)பிரிந்திருப்ப, |
வாரேன் வாழிய
நெஞ்சே கூர் உகிர் 220 | (யான் நின்னோடு
கூட)வாரேன்; (நீ)வாழ்க, நெஞ்சே – கூரிய நகங்களையுடைய, 220 |
கொடுவரி குருளை
கூட்டுள் வளர்ந்து ஆங்கு | வளைந்த
வரிகளையுடைய(புலியின்) குட்டி கூட்டுக்குள் (அடையுண்டு)வளர்ந்தாற் போன்று, |
பிறர்
பிணியகத்து இருந்து பீடு காழ் முற்றி | பகைவர்
சிறையறையிலிருந்து, (தன்)தன்மான உணர்வு வைரம்பாய்ந்து; |
அரும் கரை கவிய
குத்தி குழி கொன்று | (தன்னை விழப்பண்ணின
குழியின்)அரிய கரைகளை இடியும்படி (கொம்பினால்)குத்திக் குழியைத் தூர்த்த, |
பெரும் கை யானை
பிடி புக்கு ஆங்கு | பெரிய துதிக்கையையுடைய
யானை (தன்)பிடியிடத்தில் சென்றதைப் போன்று, |
நுண்ணிதின் உணர
நாடி நண்ணார் 225 | (சிறையிலிருந்து
தப்புதற்குரிய வழியை)நுட்பமாக எண்ணி ஆராய்ந்து, (அப்)பகைவருடைய 225 |
செறிவு உடை
திண் காப்பு ஏறி வாள் கழித்து | செறிவுள்ள திண்ணிய
காவல்மதிலை ஏறி(க்கடந்து), வாட்படையை ஓட்டி, |
உரு கெழு தாயம்
ஊழின் எய்தி | அச்சம் பொருந்தின தன்
அரசவுரிமையை முறையாலே பெற்று – |
பெற்றவை
மகிழ்தல் செய்யான் செற்றோர் | (தான் இறையாகப்)பெற்ற
அரசுரிமையால் மகிழ்வுறுதல் செய்யானாய், பகைவரின் |
கடி அரண்
தொலைத்த கதவு கொல் மருப்பின் | காவலையுடைய அரண்களைப்
பிடித்த (கோட்டைக்)கதவை முறிக்கும் கொம்பினையும், |
முடி உடை கரும்
தலை புரட்டும் முன் தாள் 230 | கிரீடங்களையுடைய கரிய
தலைகளை உருட்டும் முன்காலின் 230 |
உகிர் உடை அடிய
ஓங்கு எழில் யானை | நகமுடைய அடிகளையும்
கொண்ட உயர்ந்த அழகினையுடைய யானை, |
வடி மணி
புரவியொடு வயவர் வீழ | வடித்த மணிகட்டின
குதிரைகளோடு, வீரர் விழும்படி, |
பெரு நல்
வானத்து பருந்து உலாய் நடப்ப | பெரிய நல்ல வானத்தில்
பருந்து உலாவித் திரியும்படியாக, |
தூறு இவர்
துறுகல் போல போர் வேட்டு | புதர்கள் படர்ந்த
பாறைக்குன்றுகள் போல, போரை விரும்பி, |
வேறு பல்
பூளையொடு உழிஞை சூடி 235 | (சிறுபூளை,பெரும்பூளையாகிய)பலவாகிய
பூளைகளோடே, உழிஞையைச் சூடி,
235 |
பேய் கண் அன்ன
பிளிறு கடி முரசம் | பேயின் கண்ணை ஒத்த,
முழங்குகின்ற காவலையுடைய முரசம் |
மா கண் அகல்
அறை அதிர்வன முழங்க | பெருமைகொள்ளும்
இடத்தையுடைய பாசறையில் நடுங்குவனவாய் முழங்க, |
முனை கெட
சென்று முன் சமம் முருக்கி | பகைப்புலம் கெடும்படி
சென்று, முன்னால் நிற்கும் தூசிப்படையை அழித்து, |
தலை தவ சென்று
தண் பணை எடுப்பி | (அப்பகைவர்)அரண்களில்
மிடுக்குடன் நடந்து, மருதநிலத்துக் குடிகளை ஓட்டி – |
வெண் பூ
கரும்பொடு செந்நெல் நீடி 240 | வெண்மையான
பூக்களையுடைய கரும்புகளுடன் செந்நெல்லும் உயரமாய் வளர்ந்து, 240 |
மா இதழ்
குவளையொடு நெய்தலும் மயங்கி | பெரிய இதழ்களையுடைய
குவளையோடு நெய்தலும் கலந்து, |
கராஅம் கலித்த
கண் அகன் பொய்கை | முதலைகள்
(செருக்கித்)திரிந்த இடமகன்ற பொய்கைகளில், |
கொழும் கால்
புதவமொடு செருந்தி நீடி | தடித்த தண்டுகளையுடைய
அறுகுடன் கோரைகளும் வளர்ந்து, |
செறுவும்
வாவியும் மயங்கி நீர் அற்று | வயலும், குளங்களும்,
தம்மில் ஒன்றாகி, நீரற்று, |
அறு கோட்டு
இரலையொடு மான் பிணை உகளவும் 245 | நெளிவுள்ள
கொம்புகளையுடைய கலைமான்களோடு பெண்மான்கள் துள்ளிவிளையாடவும்; 245 |
கொண்டி மகளிர்
உண்துறை மூழ்கி | சிறைப்பிடித்துவந்த
மகளிர் நீருண்ணும் துறையில் சென்று முழுகி, |
அந்தி மாட்டிய
நந்தா விளக்கின் | (அவர்கள்)அந்திக்காலத்தே
கொளுத்தின அணையாத விளக்கினையுடைய, |
மலர் அணி
மெழுக்கம் ஏறி பலர் தொழ | பூக்களைச் சூட்டின,
சாணம் மெழுகிய, இடத்தில் ஏறிப் பலர் தொழுவதற்கு, |
வம்பலர்
சேக்கும் கந்து உடை பொதியில் | புதியவர்கள் தங்கும்,
தெய்வம் உறையும் கம்பம் உள்ள அம்பலத்தில், |
பரு நிலை
நெடும் தூண் ஒல்க தீண்டி 250 | பருத்த நிலையையுடைய
நெடிய தூண் சாயும்படி தம்முடம்பை உரசி 250 |
பெரு நல்
யானையொடு பிடி புணர்ந்து உறையவும் | பெரிய நல்ல யானைகளுடன்
பிடிகள் கூடித் தங்கும்படியாகவும்; |
அரு விலை நறும்
பூ தூஉய் தெருவில் | அரிய விலை(க்கு
வாங்கிய) நறுமணமுள்ள பூக்களைச் சிதறி, தெருவினில் |
முது வாய்
கோடியர் முழவொடு புணர்ந்த | அறிவு வாய்க்கப்பெற்ற
கூத்தருடைய மத்தளத்தின் தாளத்தோடு கூடின |
திரி புரி
நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் | முறுக்கப்பட்ட
புரி(போன்ற) நரம்பின் இனிய கட்டினையுடைய யாழைக் கேட்கும் |
பெரு விழா
கழிந்த பேஎ முதிர் மன்றத்து 255 | பெரிய திருநாள்
முடிந்துபோன, அச்சம் மிகுந்த, மன்றத்தில், 255 |
சிறு பூ
நெருஞ்சியோடு அறுகை பம்பி | சிறிய பூக்களையுடைய
நெருஞ்சியோடு அறுகம்புல் அடர்ந்து பரவப்பெற்று, |
அழல் வாய் ஓரி
அஞ்சுவர கதிர்ப்பவும் | கொடிய வாயையுடைய
நரிகள் (பிறர்க்கு)அச்சம் தோன்ற ஊளையிடவும்; |
அழு குரல்
கூகையோடு ஆண்டலை விளிப்பவும் | அழுகின்ற குரலையுடைய
கூகைகளுடன் ஆண்டலைப்பறவைகள் கூப்பிடவும்; |
கணம் கொள்
கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ | திரட்சிகொண்ட
ஆண்பேய்களுடன் மயிரைத் தாழ்த்து மெல்லநடந்து, |
பிணம் தின்
யாக்கை பேய்மகள் துவன்றவும் 260 | பிணந்தின்னும்
வடிவையுடைய பேய்மகள் நெருங்கிச்செல்லவும்; 260 |
கொடும் கால்
மாடத்து நெடும் கடை துவன்றி | உருண்ட(வளைவான)
தூண்களையுடைய மாடத்தின் உயரமான தலைவாசலில் ஒன்றுகூடி, |
விருந்து உண்டு
ஆனா பெரும் சோற்று அட்டில் | (இடையறாது)விருந்தினர்
உண்டு(ம்) குறையாத நிறைந்த சோற்றையுடைய அடுக்களை(உள்ள), |
ஒண் சுவர் நல்
இல் உயர் திணை இருந்து | (சாந்து
பூசி)அழகுமிக்க சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளிலேயிருந்து, |
பைம் கிளி
மிழற்றும் பால் ஆர் செழு நகர் | பச்சைக் கிளிகள்
மழலையில் பேசும் பால் நிறைந்த வளமான ஊர், |
தொடுதோல்
அடியர் துடி பட குழீஇ 265 | செருப்பு (அணிந்த)
காலினையுடையராய் உடுக்கை ஒலிக்கத் திரண்டு, 265 |
கொடு வில்
எயினர் கொள்ளை உண்ட | கொடிய வில்லையுடைய
வேடர் கொள்ளையாக(க் கொண்டு) உண்ட |
உணவு இல் வறும்
கூட்டு உள்ளகத்து இருந்து | நெல் இல்லாமற்போன
வெறுமையான நெற்கூட்டின் உட்புறத்தில் தங்கி, |
வளை வாய் கூகை
நன் பகல் குழறவும் | வளைந்த அலகையுடைய கூகை
உச்சிக்காலத்து(ம்) கூவவும்; |
அரும் கடி
வரைப்பின் ஊர் கவின் அழிய | அரிய காவலையுடைய
மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும், |
பெரும் பாழ்
செய்தும் அமையான் மருங்கு அற 270 | பெரும் அழிவைச்
செய்தும் மனநிறைவடையானாய் – ‘(பகைவர்)நாடு இல்லையாகும்படி, 270 |
மலை
அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே | மலைகளையெல்லாம்
மட்டப்படுத்துவான், கடல்களையெல்லாம் தூர்ப்பான், |
வான்
வீழ்க்குவனே வளி மாற்றுவன் என | வானத்தை(யும்)
(கீழ்)வீழ்த்துவான், காற்று (அடிக்கும் போக்கை)மாற்றுவான்’ என்று கூறும்படி, |
தான் முன்னிய
துறைபோகலின் | தான் கருதிய
(போர்த்துறைகள்)எல்லாம் பொருதுமுடிக்கக்கூடியவன் என்பதினால் – |
பல் ஒளியர்
பணிபு ஒடுங்க | பலராகிய ஒளிநாட்டார்
தாழ்ந்து (தம்)வீரம் குறைய, |
தொல் அருவாளர்
தொழில் கேட்ப 275 | தொன்மையான
அருவாளநாட்டவர் ஏவல் கேட்க,
275 |
வடவர் வாட
குடவர் கூம்ப | வடநாட்டவர் களையிழக்க,
குடநாட்டவர் (மனவெழுச்சி)குன்றிப்போக, |
தென்னவன் திறல்
கெட சீறி மன்னர் | பாண்டியன் வலியழிய,
சினங்கொண்டு, அரசருடைய |
மன் எயில்
கதுவும் மதன் உடை நோன் தாள் | பெரும் அரண்களைக்
கைப்பற்றும் செருக்குடைய வலிய முயற்சியினையும், |
மா தானை மற
மொய்ம்பின் | பெருமைமிக்க
நாற்படையினையும், வீரமான வலிமையையும்,(கொண்டு) |
செம் கண்ணால்
செயிர்த்து நோக்கி 280 | (தன்)சிவந்த கண்ணால்
வெகுண்டு பார்த்து,
280 |
புன் பொதுவர்
வழி பொன்ற | வளங்குன்றிய முல்லைநில
மன்னர் கிளை(முழுதும்)கெட்டுப்போக, |
இருங்கோவேள்
மருங்கு சாய | இருங்கோவேளின் குலம்
(முழுதும்)அழிய – |
காடு கொன்று
நாடு ஆக்கி | காடுகளை அழித்து,
(அவற்றை மக்கள் வாழும்)நாடாகச் செய்து, |
குளம் தொட்டு
வளம் பெருக்கி | குளங்களைத் தோண்டி,
செல்வத்தை மிகுத்து, |
பிறங்கு நிலை
மாடத்து உறந்தை போக்கி 285 | பருத்த நிலைகளைக்கொண்ட
மாடங்களையுடைய உறையூர் (என்னும் தன்னூரை)விரிவாக்கி, 285 |
கோயிலொடு குடி
நிறீஇ | கோயில்களுடன்
(பழைய)குடிமக்களையும் நிலைநிறுத்தி, |
வாயிலொடு புழை
அமைத்து | பெரிய வாயில்களுடன்
சிறு வாசல்களையும் உண்டாக்கி, |
ஞாயில்தொறும்
புதை நிறீஇ | கோட்டை
முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து, |
பொருவேம் என
பெயர் கொடுத்து | போரிடுவோம் எனச் சூள்
உரைத்து, |
ஒருவேம் என
புறக்கொடாது 290 | (பின்னர்
போரைக்)கைவிடுவோம் என்று கருதிப் புறமுதுகிட்டு ஓடாமல், 290 |
திரு நிலைஇய
பெரு மன் எயில் | செல்வம் நிலைபெற்ற
பெரிய ஆக்கத்தையுடைய (உறந்தையின்)மதிலில், |
மின் ஒளி
எறிப்ப தம் ஒளி மழுங்கி | பிரகாசமான விளக்குகள்
ஒளிவீசுவதால் – தம்முடைய வீரம் குறைந்து, |
விசி பிணி
முழவின் வேந்தர் சூடிய | இறுக்கிய
வார்க்கட்டினைக் கொண்ட முரசுகளையுடைய வேந்தர் (தம் முடிமேல்)சூடின |
பசு மணி பொருத
பரேர் எறுழ் கழல் கால் | புதிய மணிகள்
மோதுகின்ற பெரிய அழகிய வலியினையுடைய கழலை அணிந்த காலையும், |
பொன் தொடி
புதல்வர் ஓடி ஆடவும் 295 | பொன்னால் செய்த
வளையினையுடைய பிள்ளைகள் ஓடிவந்து ஏறி விளையாடுதலாலும், 295 |
முற்று இழை
மகளிர் முகிழ் முலை திளைப்பவும் | உடல் முழுதும்
அணிகலன்கள் அணிந்த மகளிரின் (தாமரை)மொட்டு(ப் போன்ற)முலைகள் அழுந்துவதாலும், |
செம் சாந்து
சிதைந்த மார்பின் ஒண் பூண் | சிவப்புச் சந்தனம்
அழிந்துபோன மார்பினையும், ஒளிரும் பேரணிகலன்களையும், |
அரிமா அன்ன
அணங்கு உடை துப்பின் | ஆண் சிங்கத்தைப் போன்ற
வருத்துதலையுடைய வலியினையும் உடைய |
திருமாவளவன்
தெவ்வர்க்கு ஓக்கிய | திருமாவளவவன் பகைவரைக்
கொல்லுதற்கு உயர்த்தி ஓங்கிய |
வேலினும் வெய்ய
கானம் அவன் 300 | வேலினும்
கொடியவாயிருந்தன, (தலைவியைப் பிரிந்து செல்லும் வழியிலுள்ள)காடு, அவன் 300 |
கோலினும்
தண்ணிய தட மென் தோளே | செங்கோலினும்
குளிர்ந்தன (தலைவியின்)பெரிய மெல்லிய தோள்கள். |
| |