Select Page
# 101 நெய்தல்# 101 நெய்தல் வெள்ளியந்தின்னனார்
  
முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்பமுற்றாத இளம் மஞ்சள்கிழங்கின் பசிய மேற்புறத்தைப்போலச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்சுற்றிலும் அமைந்த சொரசொரப்பையுடைய, சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிகூட்டமான குவியல் வெயிலில் காயும் வகையை ஆராய்ந்து
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும்புன்னைமரத்தின் அழகிய மிகுதியான நிழலுக்கு முன்பாகப் போட்டுப் பரப்பிவிட்டிருக்கும்
துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி       5கடற்கரைத் துறைக்கு அண்மையில் இருந்த குடியிருப்பும் தங்குவதற்கு மிகவும்
இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்துஇனிதாக இருந்தது; இப்போது இரங்கத்தக்கதாய் இருக்கின்றது; வருத்தம் தீர்ந்ததாய்
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்அகன்ற அல்குலையும் மெல்லிதாக அமைந்த இடையினையும் உடைய
மீன் எறி பரதவர் மட_மகள்மீன் பிடிக்கும் பரதவரின் இளமைமிக்க மகளின்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கேமானைப்போன்ற மருண்ட பார்வையைக் காண்பதற்கு முன்பாக –
  
# 102 குறிஞ்சி# 102 குறிஞ்சி செம்பியனார்
  
கொடும் குரல் குறைத்த செம் வாய் பைம் கிளிவளைந்து நிற்கும் தினைக்கதிர்களைக் கொய்து உண்ணும் சிவந்த வாயையுடைய பைங்கிளியே!
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டுஅஞ்சுவதைத் தவிர்த்து, மிகுதியான தினையை உண்டு
நின் குறை முடித்த பின்றை என் குறைஉன்னுடைய தேவையைத் தீர்த்துக்கொண்ட பின்னர், என்னுடைய தேவையையும்
செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல்தீர்த்து வைக்க வேண்டும்! கைகூப்பி வேண்டிக்கொள்கிறேன்,
பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு       5பலவாய்க் காய்த்திருக்கும் பலாமரங்கள் உள்ள சாரலையுடைய அவரின் நாட்டிலுள்ள
நின் கிளை மருங்கின் சேறி ஆயின்உன் சுற்றத்தின் பக்கம் செல்வாய் ஆயின்
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலைஅந்த மலையின் உரிமையாளனுக்குச் சொல்வாயாக! இந்த மலையின்
கான குறவர் மட_மகள்கானக் குறவரது இளமை மிக்க மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவேதினைப்புனத்திற்குக் காவலாக இருக்கிறாள் என்று –
  
# 103 பாலை# 103 பாலை மருதனிளநாகனார்
  
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்ஏதாவது ஒன்றை முடிவுசெய்து உரைப்பாயாக என் நெஞ்சே! புன்மையான காம்பில்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்றுசிறிய இலையையுடைய வேப்பமரத்தின் பெரிய கிளைகளை முறித்துப்போட்டு
கடாஅம் செருக்கிய கடும் சின முன்பின்மதத்தால் செருக்குண்ட கடும் சினத்துடன் கூடிய வலிமையையுடைய
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்துகளிறு நின்றுகொண்டிருந்து அகன்ற நல்ல நீர் அல்லாத சிறுநீரினால் உண்டான ஈரத்தில்
பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி   5பால் வற்றிப்போன தோலாகிய முலையையுடைய அடிவயிற்றை நிலத்தில் கிடத்தி
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய்பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின்,
மாயா வேட்டம் போகிய கணவன்குறிதப்பாத வேட்டையை மேற்கொண்டு சென்ற, கணவனான ஆண்நாய்,
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்தன் அன்பில் பொய்க்காத மரபினையுடைய தன் பெண்நாயை நினைத்து வருந்துகின்ற
விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமேபுதிய வழித்தடமான கொடிய பாலைநிலத்தில் வருந்துகின்றேன் நான்!
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும்    10மேற்கொண்ட பொருளீட்டும் செயலுக்காக மேலும் செல்வோம் என்றாலும்,
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவேமீளவும் வீட்டுக்குத் திரும்புவோம் என்றாலும் நீ முடிவெடு –
  
# 104 குறிஞ்சி# 104 குறிஞ்சி பேரிசாத்தனார்
  
பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றைஅழகிய வரிகளையுடைய புலியின் பிளந்த வாயையுடைய ஆண்
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினேதேன் மணக்கும் மலைச் சாரலில் களிற்றோடு போரிட்டால்
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாகுத்துப்பாறையின் உச்சியில் ஏறி நின்று ஆபத்திற்கு அஞ்சாது
குற குறு_மாக்கள் புகற்சியின் எறிந்தகுறவர்களின் சிறுவர்கள் ஆர்வத்தோடு முழக்கிய
தொண்டக_சிறுபறை பாணி அயலது       5தொண்டகச் சிறுபறையின் தாள ஓசை, அருகிலிருக்கும்
பைம் தாள் செந்தினை படு கிளி ஓப்பும்பசிய தாளையுடைய செந்தினையின் கதிர்கள் மீது படியும் கிளிகளை விரட்டும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்ஆரவாரம் நிரம்பிய மலைநாட்டினனைத் தழுவுவதை விரும்பி இருக்கும்
யானே அன்றியும் உளர்-கொல் பானாள்என்னை அன்றியும் வேறு யாரும் இருக்கிறார்களோ? நள்ளிரவில்
பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிரபாம்புகளை உடைய மலைப் பிளவுகளையுடைய உயர்ந்த மலைகள் ஒளிர்ந்து மின்னும்படியாக
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு_நீர்10இடியேறு சினந்து இடிக்கும் பொழுதோடு, பெருவெள்ளம்
போக்கு அற விலங்கிய சாரல்கடக்க முடியாதபடி குறுக்கிட்டுக்கிடக்கும் மலைச் சாரலில்
நோக்கு அரும் சிறு நெறி நினையுமோரேகண்ணுக்குத் தெரியாத சிறிய வழியை நினைத்துக்கொண்டிருப்பவர் –
  
# 105 பாலை# 105 பாலை முடத்திருமாறன்
  
முளி கொடி வலந்த முள் அரை இலவத்துகாய்ந்த கொடிகள் வலப்பக்கமாய்ச் சுற்றி வளைத்த முள்ளுள்ள அடிமரத்தைக்கொண்ட இலமரத்தின்
ஒளிர் சினை அதிர வீசி விளிபடஒளிரும் கிளைகள் நடுங்கும்படி வீசி, அவை முறிந்துபோகுமாறு
வெம் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்கொடிய காற்று மோதியடிக்கும் மூங்கில்கள் அடர்ந்திருக்கும் வழிப்பக்கத்தில்
கடு நடை யானை கன்றொடு வருந்தகடிய நடையையுடைய யானை தன் கன்றுடன் வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் 5நெடுகிலும் நீர் அற்ற நிழலே இல்லாத அவ்விடம்
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண்கடத்தற்கு அரிய கிளை வழிகளையுடையதாயிருக்கும் என்று கருதமாட்டாய்; நெடுந்தூரம்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்வந்துவிட்டாய், வாழ்க நீ நெஞ்சே! குட்டுவனின்
குட வரை சுனைய மா இதழ் குவளைமேற்கு மலையிலிருக்கும் சுனையிலுள்ள கரிய இதழ்களையுடைய குவளையின்
வண்டு படு வான் போது கமழும்வண்டுகள் மொய்க்கும் பெரிய மலரும் பூவைப் போன்று கமழும்
அம்_சில்_ஓதி அரும் படர் உறவே    10அழகிய சிலவான கூந்தலையுடைய தலைவி தீர்க்கமுடியாத துயரம் கொள்ளும்படியாக –
  
# 106 நெய்தல்# 106 நெய்தல் தொண்டைமான் இளந்திரையன்
  
அறிதலும் அறிதியோ பாக பெரும் கடல்அறிந்திருக்கவும் செய்வாயோ? பாகனே! பெரிய கடலின்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொளமோதுகின்ற அலைகள் குவித்துச் சேர்த்த மணல் மேடுகள் மணம் கொள்ளுமாறு
ஆடு வரி அலவன் ஓடு_வயின் ஆற்றாதுஅங்குமிங்கும் அலைந்துதிரியும் புள்ளிகளைக் கொண்ட நண்டுகள் ஓடுவனவற்றைப் பிடிக்க மாட்டாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்குசோர்வுற்று அதன் மீது விருப்பம் நீங்கிய குற்றமற்ற சிறுமகளுக்காக
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப    5வருத்தமுற்றவனாய் அவளிடம் சென்று நான் எனது உள்ளத்துக் காமநோயைப் பற்றிக் கூற
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்அதற்கு மறுமொழி சொல்வதற்கும் முடியாதவளாய், மணமிக்க மலர்களையுடைய
ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதிஞாழலின் அழகிய கிளையின் தாழ்ந்திருக்கும் பூங்கொத்தினைக் கோதிவிட்டு,
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்இளந்தளிரை அதனுடன் சேரப்பிசைந்து உதிர்த்துவிட்ட கையினளாய்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையேஅறிவு மயக்கமுற்றவளின் அழகிய மடப்பத்தின் நிலையை –
  
# 107 பாலை# 107 பாலை பெருவழுதியார்
  
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர்நினைக்கும்போதெல்லாம் சிரிக்கின்றேன் தோழி! பெருத்த நகங்களைக் கொண்ட
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுபெண்யானை பிளந்துபோட்ட நார் இல்லாத வெண்மையான கிளைகளில்
கொடிறு போல் காய வால் இணர் பாலைபற்றுக்குறடு போன்ற காய்களையுடைய வெள்ளிய பூங்கொத்துகளையுடைய பாலை மரத்தின்,
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்வீசுகின்ற காற்று தூக்கி அசைத்ததால் இலையெல்லாம் உதிர்ந்துபோன நெற்றுக்கள்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்      5பாறையிலிருந்து வீழ்கின்ற அருவியைப் போல ஒல்லென்று ஒலிக்கும்
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்புன்மையான இலையையுடைய ஓமை மரங்களுடைய புலிகள் நடமாடும் கடிய பாதையில்
சென்ற காதலர் வழி வழிப்பட்டசென்ற நம் காதலரின் வழிவழியே தொடர்ந்து சென்ற
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்துநம் நெஞ்சமே நற்பேறு பெற்றதாகும்; இங்கு அவரைப் பிரிந்து
ஆனா கௌவை மலைந்தகுன்றாத பழிச்சொற்களால் சூழப்பட்ட
யானே தோழி நோய்ப்பாலேனே  10நானே, தோழி! நோய்வாய்ப்பட்டிருக்கின்றேன்.
  
# 108 குறிஞ்சி# 108 குறிஞ்சி குறிஞ்சி இளவேட்டனார்
  
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல்மலைக்கு அயலாக செழித்துவளர்ந்த கரிய நிறங்கொண்ட தினைப்புனத்தில்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானைதன் துணையினின்றும் பிரிந்த கொடிய யானை
அணைய கண்ட அம் குடி குறவர்அணுகுவதைக் கண்ட அழகிய குடியிருப்பின் கானவர்
கணையர் கிணையர் கை புனை கவணர்அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட 5பிறரை உரக்க அழைப்பவராய் தமது குடியின் புறத்தே ஆரவாரிக்கும் நாட்டினனே!
பழகிய பகையும் பிரிவு இன்னாதேபழகிப்போனவர் பகைவரென்றாலும் அவரைப் பிரிதல் இன்னாதது;
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தைமுல்லை மொட்டுக்களைப் போன்ற அழகிய ஒளிவிடும் பற்களைக்கொண்ட இனிய நகையினளான தலைவியின்
சுடர் புரை திரு நுதல் பசப்பசுடர் போன்ற ஒளியையுடைய அழகிய நெற்றியில் பசலை ஊருமாறு
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானேநீ அவளது தொடர்பினை எவ்வாறு துறந்தாய்? நோகின்றேன் நான்.
  
# 109 பாலை# 109 பாலை மீளிப் பெரும்பதுமனார்
  
ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின்ஒன்றாகவே இருப்போம் என்று கூறிய தொன்றுபட்ட நட்பினுக்குரிய
காதலர் அகன்று என கலங்கி பேது உற்றுகாதலர் பிரிந்தார் என்று கலங்கி மனம் மயங்கி
அன்னவோ இ நன்_நுதல் நிலை எனஅப்படிப்பட்டதுவோ இந்த நல்ல நெற்றியையுடையவளின் நிலை என்று
வினவல் ஆனா புனை_இழை கேள் இனிகேட்டுக்கொண்டேயிருக்கும் அலங்கரித்த அணிகலன்களையுடையவளே! கேட்பாயாக, இப்பொழுது
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென      5சொல்லமுடியாத துன்பம் இம்மென்று விரைந்து பீடிக்க,
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்ஒலிக்கும் வாடைக்காற்று வீசும் இருள் படர்கின்ற பொழுதில்
துளி உடை தொழுவின் துணிதல் அற்றத்துமழைத்துளிகளைக் கொண்ட தொழுவத்தில் வேறு இடத்தில் கட்டுவதற்குரித்தான எல்லையில்
உச்சி கட்டிய கூழை ஆவின்உச்சிப்பக்கமாகக் கயிற்றால் கட்டப்பட்ட கூழைப்பசுவின்
நிலை என ஒருவேன் ஆகிநிலையைப் போன்று யானும் தன்னந்தனியாய் ஒருத்தியாக இருந்து
உலமர கழியும் இ பகல் மடி பொழுதே  10வருத்தமுறும்படியாகக் கழிந்துபோகும் இந்தப் பகல் முடியும் அந்திப்பொழுது.
  
# 110 பாலை# 110 பாலை போதனார்
  
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்தேன் கலந்த நல்ல சுவையையுடைய இனிய பாலை,
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்திவிரிந்து ஒளிவிடும் பொன்னால் ஆன பாத்திரத்தில் இட்டு அதனை ஒரு கையில் ஏந்திக்கொண்டு
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்அடித்தால் சுருண்டுகொள்ளும் மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை,
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்‘குடி’ என்று உயர்த்திப்பிடிக்க, அதினின்றும் தப்பிப்பிழைக்க, தெளிவான தன்மையுள்ள
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று      5முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட பொற்சிலம்பு ஒலிக்கத் தத்தித்தத்தி ஓடி,
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்மென்மையான நரைக்கூந்தலையுடைய செவ்விய முதுமையையுடைய செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடிஓடித் தளர்ந்து தம் முயற்சியைக் கைவிட, பந்தல்கால்களுக்கிடையே ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டிசெவிலியரின் கெஞ்சலை மறுக்கும் சிறிய விளையாட்டைச் செய்பவள்,
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்இல்லறத்துக்குரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எங்கிருந்து கற்றுக்கொண்டாளோ?
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என10தன்னைக் கைப்பிடித்த கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததாக,
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்தன்னைக் கைப்பிடித்துக்கொடுத்த தந்தை வீட்டின் மிகுதியான சோற்றினை நினைத்துப்பார்க்கமாட்டாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போலசிறிதாக ஓடும் நீரில் நுண்ணிய வளைவுவளைவான கருமணலைப் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளேவேண்டும்பொழுது உண்ணாமல் கிடைக்கும்பொழுது உண்ணும் சிறிய கற்புவலிமையுடையள் ஆயினள்.
  
# 111 நெய்தல்# 111 நெய்தல் உலோச்சனார்
  
அத்த இருப்பை பூவின் அன்னவறண்ட பாலைநில வழியிலுள்ள இலுப்பை மரத்தின் பூவைப் போன்ற
துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்மென்மையான நார்களைத் தலையில் கொண்ட இறால் மீனோடு தொகுதியான மீன்களையும் பிடித்துவர
வரி வலை பரதவர் கரு வினை சிறாஅர்பின்னி வரிந்த வலையையுடைய பரதவரின் வன்மைமிக்க தொழிலையுடைய சிறுவர்கள்
மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார்மரல்கள்ளியின் மேலேறி நின்று மான் கூட்டங்களைத் தடுக்கும்பொருட்டு
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு 5கொடிய ஆற்றலையுடைய இளைஞர்கள் வேட்டைக்கு எழுந்தாற்போல
திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்திபடகின்மீது ஏறிக்கொண்டு அலைகளாகிய பாதைகளில் கடந்துசென்று
வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டிவாள் போன்ற வாயையுடைய சுறாமீனொடு வலிய பிற மீன்களையும் வாரிக்கொண்டு
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்நிணம் ஒழுகும் தோணியராய்த் தாழ்ந்துவிழும் மணல்மேட்டினின்றும் இறங்கிவரும்
பெரும் கழி பாக்கம் கல்லெனபெரிய கழியினைச் சேர்ந்த குடியிருப்பில் கல்லென்னும் ஒலிபிறக்க
வருமே தோழி கொண்கன் தேரே 10வருமே தோழி நம் தலைவனது தேர்.
  
# 112 குறிஞ்சி# 112 குறிஞ்சி பெருங்குன்றூர்க்கிழார்
  
விருந்து எவன் செய்கோ தோழி சாரல்விருந்து என்ன படைப்போம் தோழி! மலைச்சாரலில்
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கைஅரும்புகள் முற்றிலும் இல்லாமல் மலர்ந்த கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரத்தில்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டுவண்டுகள் ஒலியெழுப்பும் அடுக்குமலைகளில் உள்ளவை அஞ்சிநடுங்க, களிற்றினைக் கொன்று
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் நடமாடும்
பெரும் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி  5பெரிய மலைப்பகுதியைச் சேர்ந்த நாட்டினனின் வரவினை அறிந்து, அதனை விரும்பி
மா கடல் முகந்து மணி நிறத்து அருவிகரிய கடலின் நீரை முகந்துகொண்டு, நீலமணியின் நிறத்தைக் கொண்ட அருவியிலிருந்து
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய்கீழே விழும் நீர் அகன்ற இடமெல்லாம் புதைபடுமாறு பரவ,
மலை இமைப்பது போல் மின்னிவிட்டுவிட்டு ஒளிரும் மின்னலால் மலையே இமைப்பதுபோல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கேஒலிக்கின்ற வலிய இடியுடன் செறிவாகக் கலந்துவந்த இந்த மழைக்கு –
  
# 113 பாலை# 113 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
  
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினைமானானது அண்ணாந்து உண்ட, பக்கத்தில் வளைந்து நிற்கும் உயர்ந்த கிளைகளையுடைய
புல் அரை இரத்தி பொதி புற பசும் காய்புன்மையான அடிப்பகுதியையுடைய இலந்தை மரத்தின் பொதிந்த மேற்பகுதியையுடைய பசிய காய்கள்
கல் சேர் சிறு நெறி மல்க தாஅம்கற்கள் நிரம்பிய சிறிய வழியில் மிகுதியாகப் பரவிக்கிடக்கும்
பெரும் காடு இறந்தும் எய்த வந்தனவால்பெரிய காட்டினைக் கடந்துவந்தும் இங்கு என் முன்னே அடைய வந்தன –
அரும் செயல் பொருள்_பிணி முன்னி யாமே     5அரிய செயலான பொருளீட்டுதலைக் கருதி நாம்
சேறும் மடந்தை என்றலின் தான் தன்செல்கின்றோம் மடந்தையே! என்று கூறியவுடன், அவள் தன்னுடைய
நெய்தல் உண்கண் பைதல் கூரநெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களில் வருத்தம் மிக,
பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்துபின்னப்பட்ட கரிய கூந்தலை விரித்து அதற்குள் தன் முகத்தை மறைத்துக்கொண்டவளாய்ப் பெரிதும் வருந்தி
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்உதியன் என்பான் சினந்து சென்ற ஒலிக்கின்ற இடத்தையுடைய போர்க்களத்தில்
இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும்       10இம்மென்று விரைவாக பெருங்களத்துக் குழலூதுவோர் ஊதுகின்ற
ஆம்பல் அம் குழலின் ஏங்கிஆம்பல் குழலின் இசையைப் போல் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கேகலங்கித் துன்பத்தை அடைவோளின் தனிமை வருத்தத்தைக் கொண்ட பார்வை –
  
# 114 குறிஞ்சி# 114 குறிஞ்சி தொல்கபிலர் 
  
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்வெண்மையான கொம்பினை வெட்டி எடுத்து அகன்ற பாறைகளில் வைக்கவும்,
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்பசிய ஊனைத் தோண்டியெடுத்து பெரிய நகத்தினைப் புதைத்துவைக்கவும்,
மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம்தெருக்கள்தோறும் புலால் நாற்றம் கவியும் சிறுகுடியில் எழும் ஆரவாரத்தை
வைகி கேட்டு பையாந்திசினேவிடியவிடியக் கேட்டு வருந்தினேன்;
அளிதோ தானே தோழி அல்கல்  5அது பெரிதும் இரங்குதற்குரியது தோழி! இரவினில்
வந்தோன் மன்ற குன்ற நாடன்வந்திருந்தான், உறுதியாக, மலைநாட்டைச் சேர்ந்தவன்,
துளி பெயல் பொறித்த புள்ளி தொல் கரைதுளிகளாகப் பெய்த மழை பொறித்த புள்ளிகளைக் கொண்ட, தொன்மையான கரையை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்மோதும் அலைகளோடு மேலெழுந்து பெருகி வரும் ஆற்றினை நினைத்து அஞ்சுகிறேன்;
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறுமிகுந்த ஓசையுடைய இடியின் பேராரவாரத்தைக் கொண்ட பெருத்த இடிமுழக்கம்
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி 10பாம்பிற்கு அழகாக விளங்கும் அதன் படத்தை அழிக்கின்ற, உயர்ந்த மலைமேல் மோதிக்
மையல் மட பிடி இனையகரிய இளம் பெண்யானை வருந்துமாறு
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றேதன் துதிக்கையை ஊன்றி இறங்குகின்ற களிற்றினைத் தாக்கிக் கொல்ல –
  
# 115 முல்லை# 115 முல்லை அம்மள்ளனார்
  
மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்கஅகன்று விரிந்த பொய்கையின் பூக்களைப் பறித்துத் தளர்ந்ததால்
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்சோர்வடைந்த தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்க,
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்அன்னையும் சிறிது சினம் தணிந்து மெல்ல மூச்சுவிடுகிறாள்; இனிய தன்மையினைக்கொண்ட
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் எனபரந்த கடலின் நீரை வாயினால் எடுத்துக்கொண்டு அதனைச் சிறிதளவு நீரே என்னும்படி,
மயில் அடி இலைய மா குரல் நொச்சி  5மயிலின் பாதத்தைப் போன்ற இலைகளையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சி,
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழவீட்டிலே நட்ட மௌவலோடு சேர்ந்து நன்கு வளர்ந்த மொட்டுக்கள் மலரும்படி,
கார் எதிர்ந்தன்றால் காலை காதலர்கார்காலம் எதிர்ப்பட்டது; இப்பொழுது நம் காதலர்
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர்மிகவும் தொலைவிலுள்ள நாட்டிலிருப்பவர் என்றாலும், நம்மீது மிகவும் அதிகமான
அன்பினர் வாழி தோழி நன் புகழ்அன்புடையவர், வாழ்க தோழியே! பெரிய புகழைக்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்   10குறைவின்றிப் பெற்றாலும் நம்மைத் தவிர்க்கமாட்டார்;
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவேகேட்கிறேன் அல்லவா! வானத்தின் முழக்கத்தை.
  
# 116 குறிஞ்சி# 116 குறிஞ்சி கந்தரத்தனார்
  
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்தீமை காணப்பட்டாரிடத்தும், பெரியவர்கள்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோதாமாக அதனை ஆய்ந்து உணரவேண்டும் என்று சொல்வார்கள்,
வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்றுதன் வயிற்றிலுள்ள கருவாகிய பிண்டம் அழிந்து வெளியேவந்து விழும்படியாக
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளைபெரிய மூங்கிலில் முளைத்த வேல்முனையைப் போன்ற தலையைக் கொண்ட கொழுத்த முளைகளை
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும்    5சூல் முதிர்ந்த இளம்பெண்யானை காலையில் மேய்ந்துண்ணும்
மலை கெழு நாடன் கேண்மை பலவின்மலைப்பகுதியைச் சேர்ந்த நாட்டினனுடைய நட்பு, பலாவின்
மா சினை துறந்த கோல் முதிர் பெரும் பழம்பெரிய கிளையைவிட்டு விழுந்த காய்த்து முதிர்ந்த பெரிய பழம்
விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்கு தொடர்பு அறமலைப்பிளவில் உள்ள பொந்தினில் விழுந்து அழுகிப்போனதைப் போல், உறவு அற்றுப்போய்
சேணும் சென்று உக்கன்றே அறியாதுபலநாட்களுக்கும் முன்னரே அழிந்துபோயிற்று; அதனை அறியாமல்
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த      10பெரிய மலைப் பக்கத்திலுள்ள இருள் செறிந்த குவட்டில் உள்ள 
குறிஞ்சி நல் ஊர் பெண்டிர்குறிஞ்சியில் உள்ள நல்ல ஊரின் பெண்டிர்
இன்னும் ஓவார் என் திறத்து அலரேஇன்னும் நிற்காமல் கூறுகின்றனர் என்மேல் பழிச்சொற்களை.
  
# 117 நெய்தல்# 117 நெய்தல் குன்றியனார்
  
பெரும் கடல் முழங்க கானல் மலரபெரிய கடல் முழக்கமிட, கடற்கரைச் சோலையின் பூக்கள் மலர,
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிரகரிய கழியில் இருக்கும் நீர்ப்பெருக்கு வீட்டின் எல்லையைக் கடந்து பொங்கிவர,
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்வளமையான இதழ்களையுடைய நெய்தல் பூ குவிந்துநிற்க, பறவைகள் ஒருசேர
கமழ் பூ பொதும்பர் கட்சி சேரமணக்கும் பூக்களையுடைய சோலைகளில் உள்ள தம் கூடுகளில் அடைய,
செல் சுடர் மழுங்க சிவந்து வாங்கு மண்டிலம்       5மேற்கில் சென்ற ஞாயிறு தன் ஒளி மங்கிப்போய், சிவந்துபோன வளைந்த வான மண்டிலத்தில்
கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்கமலையைச் சேர்ந்து நெருங்கி துன்பமடைந்து நடுங்க,
புலம்பொடு வந்த புன்கண் மாலைதனிமைத் துயரோடு வந்த இழிந்த மாலைப்பொழுது,
அன்னர் உன்னார் கழியின் பல் நாள்அங்கேயிருப்பவர் என்னை எண்ணிப்பாராதவராயிருக்க, கழிந்துகொண்டிருந்தால், பல நாட்கள்
வாழலென் வாழி தோழி என்_கண்வாழமாட்டேன் வாழ்க தோழியே! என்னிடமுள்ள
பிணி பிறிது ஆக கூறுவர்  10நோய் வேறொன்று என்று கூறுகிறார்கள்,
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றேபழியை வேறொன்றின்மீது போடுதல் பண்புடைய செயல் இல்லை அல்லவா?
  
# 118 பாலை# 118 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
  
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியஆற்றை அடுத்துள்ள கரையிலுள்ள மாமரத்தின் ஆடுகின்ற கிளைகள் பொலிவுற்று விளங்க
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்தளிர்கள் அழகாய் அமைந்த குளிர்ந்த நறிய சோலையில்
சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில்தன் ஆணோடு சேர்ந்த சிவந்த கண்ணையுடைய கரிய பேடைக்குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்விருப்பத்துடன் ஒன்றற்கொன்று எதிர்க்குரல் எழுப்பிக் களிக்கும் பூக்கள் நிறைந்த இளவேனிற்காலத்திலும்
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என       5முன்பு நம்மைப் பிரிந்துசென்றவர் உறுதியாக நம்மை மறந்துவிட்டார் என்று
இணர் உறுபு உடைவதன்_தலையும் புணர் வினைவருத்தம் வியாபிக்க மனமுடைந்த நிலைக்கு மேலும், கைகூடிய தொழில்திறமுடைய
ஓவ_மாக்கள் ஒள் அரக்கு ஊட்டியஓவியர்கள் ஒளிவிளங்கும் அரக்கினைப் பூசிய
துகிலிகை அன்ன துய் தலை பாதிரிவண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின்
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்திவெண்மையான இதழ்களையுடைய மலர்களில் வண்டுகள் மொய்க்கும்படி ஏந்திக்கொண்டு
புது மலர் தெருவு-தொறு நுவலும்   10புதிய மலர்களைத் தெருக்கள்தோறும் கூவிவிற்கும்
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சேஅயலூர்ப்பெண்ணைக் காணும்போது நோகின்றது என் நெஞ்சம்.
  
# 119 குறிஞ்சி# 119 குறிஞ்சி பெருங்குன்றூர்க் கிழார்
  
தினை உண் கேழல் இரிய புனவன்தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான்
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர்சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில்
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன்ஒளிரும் நிறமுடைய வலிமையான புலி மாட்டிக்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவன்
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பையார் கூறியதால் நம்மிடம் வந்தானெனினும் ஆகுக; கொல்லைப்புறத்தில்
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும்     5இனிய முசுவின் பெரிய ஆண்குரங்கு நன்கு மேய்ந்து உணவை உட்கொள்ளும்
பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலைபலவகை மலர்களோடு வரும் காட்டாற்றுக்கு அப்பால், கரிய கலைமான்
கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும்கூட்டமான வரையாடுகளுடன் சேர்ந்து தாவிக்குதித்து விளையாடும்
பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடுபெரிய மூங்கிற்புதரின் நிழலில் வந்திருக்கும் அவன், காட்டு மல்லிகையுடனே
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்கூதளத்து மலரையும் நெருக்கமாய்ச் சேர்த்துக்கட்டிய தலைமாலையை உடையவன் ஒருபோதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்       10என்னுடைய தழுவுதலைப் பெறமாட்டான்
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதேஎன்மீது பிணக்குக் கொண்டாலும் கொள்ளட்டும், தன் மலையைக் காட்டிலும் பெரிதாக.
  
# 120 மருதம்# 120 மருதம் மாங்குடி கிழார்
  
தட மருப்பு எருமை மட நடை குழவிஅகலமான கொம்புகளையுடைய எருமைகளின் இள நடையினைக் கொண்ட கன்றுகள்
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல்தூண்கள்தோறும் கட்டப்பட்ட காண்பதற்குத் தகுந்த நல்ல இல்லத்தில்
கொடும் குழை பெய்த செழும் செய் பேதைவளைவான குழைகளை அணிந்த செழுமையாக அமைந்த பேதையானவள்
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்பசிறிய மோதிரத்தை இறுக்க அணிந்திருந்த மெல்லிய விரல்கள் சிவந்துபோகும்படி,
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ   5வாளை மீனின் ஈரமான நீண்ட துண்டை சிரமப்பட்டு நறுக்கி
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெறஅதைச் சமைத்தலால் புகை படிந்த சிவந்து மாறுபட்ட கண்களையுடையவளாய், அழகுறத் தோன்றிய
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்பிறை போன்ற நெற்றியில் துளிர்த்த சிறிய நுண்ணிய பலவான வியர்வைத்துளிகளைத்
அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்துதன் அழகிய சேலைத் தலைப்பில் துடைத்துக்கொள்பவள் நம் மீது பிணக்கு கொண்டு
அட்டிலோளே அம் மா அரிவைஅடுப்படியிலிருக்கிறாள் அழகிய மாமைநிறத்தவளான பெண்மணி –
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று 10எமது வீட்டுக்கு வருவாராக விருந்தினர், கண்சிவப்பு மறைந்து
சிறு முள் எயிறு தோன்றசிறிய முள்போன்ற பற்கள் தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மேமுறுவல் கொண்ட முகத்தினைக் காண்போம்.
  
# 121 முல்லை# 121 முல்லை ஒருசிறைப் பெயரியனார்
  
விதையர் கொன்ற முதையல் பூழிவிதை விதைப்பவர்கள் உழுது புரட்டிப்போட்ட பழமையான கொல்லையின் புழுதியில்
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்இடுகின்ற முறைப்படி விதைக்கப்பட்ட ஈரப்பசையுள்ள இலைகளையுடைய வரகின்
கவை கதிர் கறித்த காமர் மட பிணைகவைத்த கதிர்களைக் கறித்துத் தின்ற விருப்பம் தோற்றக்கூடிய இளம் பெண்மான்
அரலை அம் காட்டு இரலையொடு வதியும்கழலை விதைகள் கிடக்கும் அழகிய காட்டில் தன் ஆண்மானோடு தங்கியிருக்கும்
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே  5முல்லைக்காட்டில் உள்ளது நீ விரும்பியவளின் ஊர்;
எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபுநேற்றிரவுதான் போர்ப்பணியினை முடித்துவிடுத்தான் வேந்தன் என்று சொல்லி
பரியல் வாழ்க நின் கண்ணி காண்வரவருந்தவேண்டாம், வாழ்க உன் மாலை! காண்பதற்கு அழகாக
விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மாவிரிந்த தலையாட்டம் பொலிந்த விரைந்து செல்லும் செருக்குடைய குதிரையை
வண் பரி தயங்க எழீஇ தண் பெயல்அதன் செழுமையான ஓட்டம் விளங்க எழுந்து, குளிர்ந்த மழையால் பெருகிய
கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய    10காட்டாற்றின் தாழ இறங்கும் மணலைக் கொண்ட கரை பின்னே செல்ல
எல் விருந்து அயரும் மனைவிஊர் சேரும் இந்த இரவு விருந்தாளியை மகிழ்வுடன் ஏற்கும் மனைவியின்
மெல் இறை பணை தோள் துயில் அமர்வோயேமென்மையான கீழிறங்கும் பருத்த தோள்களில் துயிலை விரும்புபவனே!
  
# 122 குறிஞ்சி# 122 குறிஞ்சி செங்கண்ணார்
  
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுதபெரிய மலையின் அடுக்கான பக்கங்களில் என் வீட்டார் உழுதுபோட்ட
கரும் கால் செந்தினை கடியும் உண்டனகரிய அடித்தண்டையுடைய செந்தினைக் கதிர்கள் கொய்யப்பட்டுவிட்டன,
கல்_அக வரைப்பில் கான் கெழு சிறுகுடிமலைகள் சூழ்ந்த இடத்திலிருக்கின்ற காட்டைப் பொருந்திய சிறுகுடியின்
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பினஆழமற்ற பள்ளங்களின் பக்கத்தில் மௌவலும் அரும்புவிட்டிருக்கின்றன,
நரை உரும் உரறும் நாம நள்ளிருள்  5வெள்ளிய மின்னொளியுடன் கூடிய இடி முழங்கும் அச்சந்தரும் நள்ளிருளில்
வரை_அக நாடன் வரூஉம் என்பதுகுன்றுகள் சூழ்ந்த நாடன் வருவான் என்பது
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று எனஉண்மையாமோ? அப்படி அல்லவோ? வேறு யாதோ? என்று –
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடிநின்று ஆராய வல்ல உள்ளத்தோடு மறைவாக ஒற்றாடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடுஅன்னையும் கடுமையான முகத்தினளாய் இருக்க, உன் உள்ளத்தோடு
நீயே சூழ்தல் வேண்டும்   10நீயாகவே ஆராய்ந்துணர வேண்டும்
பூ வேய் கண்ணி அது பொருந்தும் மாறேகருங்குவளை மலர்களைப் பதித்தது போன்ற கண்களையுடையவளே, அது உன் தகுதிக்குப் பொருந்துவதோ என்று –
  
# 123 நெய்தல்# 123 நெய்தல் காஞ்சிப்புலவனார்
  
உரையாய் வாழி தோழி இரும் கழிநீ கூறுவாயாக, வாழ்க தோழியே! கரிய கழியிலுள்ள
இரை ஆர் குருகின் நிரை பறை தொழுதிஇரையை நிறையத் தின்ற குருகினது வரிசையாகப் பறக்கும் கூட்டம்
வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும்வளைந்த பனைமடலில் உள்ள கூடுகளில் நிறைந்த இருள்நேரத்தில் நெருங்கிக் கூடியிருக்கும்
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பைபனைமரங்கள் உயரவளர்ந்த வெள்ளையான மணல் கொல்லைப்புறத்துக்
கானல் ஆயமொடு காலை குற்ற 5கடற்கரைச் சோலையில் தோழியருடன் காலையில் பறித்த
கள் கமழ் அலர தண் நறும் காவிதேன் மணக்கும் இதழ்களைக்கொண்ட குளிர்ந்த நறிய காவிமலர்களை
அம் பகை நெறி தழை அணிபெற தைஇஅழகிய ஒன்றோடொன்று மாறுபட்ட அலையலையான தழையாடையாக அழகுபெற உடுத்தி,
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடிகோலங்கள் இட்ட மணல்வீட்டைச் சுற்றி ஓட்டத்தில் சிறப்பாக ஓடி,
புலவு திரை உதைத்த கொடும் தாள் கண்டல்புலவு நாற்றத்தையுடைய அலைகள் மோதிய வளைந்த கால்களையுடைய கண்டலின்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்   10வாழிடங்களாக உள்ள அழகிய ஈரமான வளையில் வாழும் நண்டுகளைப் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கிசிறிய விளையாட்டும் இல்லாமல்போய்
நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயேநினைக்கும்போதே வருத்தும் பெருந்துயரம் ஆகிய நோய் இன்னதென்று –
  
# 124 நெய்தல்# 124 நெய்தல் மோசி கண்ணத்தனார்
  
ஒன்று இல் காலை அன்றில் போலஇரண்டில் ஒன்று இல்லாமல் தனித்திருக்கும் வேளையின் அன்றில் பறவை போல
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கைதனிமைத் துயருடன் வாழ்ந்திருக்கும் சிறுமையான வாழ்க்கையினை
யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்றுநானும் பொறுக்கமாட்டேன், இத்துன்ப நிலை தானாகவே வந்துள்ளது,
நீங்கல் வாழியர் ஐய ஈங்கைநீங்காதிருப்பாயாக, வாழ்க நீவிர், ஐயனே! ஈங்கையின்
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்       5மொட்டுக்களும் மலரான புனமல்லிகையும் உயரமான மணல் குன்றின்மேல்
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளிநவ்வி எனும் மானின் வலிய குளம்புகள் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை
உருக்கு_உறு கொள்கலம் கடுப்ப விருப்பு_உறஉருக்கும் கொள்கலத்தைப் போல் காண்பார் விரும்பும்படியாக
தெண் நீர் குமிழி இழிதரும்தெளிந்த நீர்க்குமிழியிட்டு வடியும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதேதண்ணீரை நிறையப் பெற்றதாக நின்ற பொழுதாகிய கூதிர்ப்பருவத்தில் – 
  
# 125 குறிஞ்சி# 125 குறிஞ்சி கச்சிப்பேட்டுக் கதக்கண்ணனார்
  
இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றைஇரையைத் தேடித்திரியும் கரடியின் பிளந்த வாயையுடைய ஆணானது
கொடு வரி புற்றம் வாய்ப்ப வாங்கிவளைந்த வரிகளையுடைய புற்று கிடைக்கப்பெற அதனை வளைத்துப்பிடித்து
நல்_அரா நடுங்க உரறி கொல்லன்அதனுள் இருக்கும் நல்ல பாம்பு நடுக்கமுற முழங்கி, கொல்லனின்
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும்ஊதுலையின் மூக்கைப் போல உள்மூச்சு வாங்கியபடி தோண்டும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என5நள்ளிரவில் வருவதனை அஞ்சுகிறேன் நான் என்பதனால்,
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலைமணமுடிக்க வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டால், நம் மலையில்,
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்றுஒரு நல்ல நாளில் நம்மை மணம் முடிப்பதையும் செய்து, தாமதிக்காமல்
நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்லநம்மை மெல்லக் கூட்டிக்கொண்டு செல்வார் உறுதியாக தோழி!
வேங்கை கண்ணியர் எருது எறி களமர்வேங்கை மலர் மாலையைத் தலையில் சூடியவராய், எருதுகளை ஓட்டும் உழவர்
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை 10போரடிக்கும் களத்தைப் பார்த்தாற்போன்ற அகன்ற இடத்தையுடைய பாறையில்
மென் தினை நெடும் போர் புரி-மார்மென்மையான தினைக்கதிர்களை நெடுநேரம் போரடிக்கும்பொருட்டு
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டேதூங்கியிருக்கும் களிறுகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தம் பெரிய மலை நாட்டுக்கு –
  
# 126 பாலை# 126 பாலை ஓதலாந்தையார்
  
பைம் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்பசுங்காய் தனது நல்ல மேலிடமெல்லாம் நிறம் மாறிச் செங்காயாகிப் பின்னர்
கரும் களி ஈந்தின் வெண் புற களரிகரிய களிபோன்ற கனியாகும் ஈத்த மரங்கள் மிகுந்த வெண்மையான புறத்தினையுடைய களர்நிலத்தில்
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்படிந்திருக்கும் புழுதியைத் தன்மேல் தூவிக்கொண்ட கடிய நடையையுடைய ஒற்றை ஆண்யானை
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கிவழிச்செல்வோரைக் கொல்வதற்கு விரும்பி, விடியற்காலத்து வழியில் குறுக்கே நின்று,
துனைதரும் வம்பலர் காணாது அ சினம்5விரைந்துவரும் அயலார் யாரையும் காணாது, தன் சினத்தை
பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்பனைமரத்தில் வெளிப்படுத்தித் தணித்துக்கொள்ளும் பாழ்பட்ட இடத்தையுடைய பாலைநிலத்தைக்
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்கடந்து சென்று ஈட்டும் பொருளும் இன்பம் தரும் என்றால்
இளமையின் சிறந்த வளமையும் இல்லைஅது இளமையைக் காட்டிலும் சிறந்த வளமையும் ஆகாது;
இளமை கழிந்த பின்றை வளமைஇளமை கழிந்த பின்னால், அந்த வளமை
காமம் தருதலும் இன்றே அதனால்     10இன்பம் தருவதும் இல்லை; அதனால்
நில்லா பொருள்_பிணி சேறிநிலையில்லாத இந்த பொருளீட்டலின் ஆசையினால் செல்லுகின்றாய்,
வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையேவிரைவாக, நெஞ்சமே, வாய்ப்பதாக உன் செயல்.
  
# 127 நெய்தல்# 127 நெய்தல் சீத்தலைச் சாத்தனார்
  
இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரைகரிய கழியினைத் துழாவித்தேடிய ஈரமான முதுகைக் கொண்ட நாரை
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்துதன் சிறகுகளை அடித்துக்கொள்வதால் எழுந்த நீர்த்திவலைகளால் குளிர்கொள்ளும் நமது பாக்கத்தில்
உவன் வரின் எவனோ பாண பேதைஅருகிலிருக்கும் அவன் வருவதால் என்ன பயனோ? பாணனே! பேதையாகிய உன் பரத்தைத் தலைவி
கொழு மீன் ஆர்கை செழு நகர் நிறைந்தகொழுத்த மீன்களை நிறைய உண்ணும் செழுமையான இல்லத்தில் நிறைந்திருக்கும்
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும்     5கல்வியறிவில்லாத சினத்தைக் கொண்டிருப்போராய்த் தன் வீட்டார் இருக்கவும்
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடியமணல்வீடு கட்டி விளையாண்ட தோழியருடன் முன்பு தான் விளையாடிய
ஈனா பாவை தலையிட்டு ஓரும்பொம்மையான பாவையைத் தலையில் வைத்துக்கொண்டு
மெல்லம்புலம்பன் அன்றியும்நெய்தல் நிலத்தவனாகிய தலைவன் உடன் வராமலிருந்தாலும்
செல்வாம் என்னும் கானலானேபோவோம் என்கிறாள் கடற்கரைச் சோலைக்கு –
  
# 128 குறிஞ்சி# 128 குறிஞ்சி நற்சேந்தனார்
  
பகல் எரி சுடரின் மேனி சாயவும்பகற்பொழுதில் எரிகின்ற விளக்கின் ஒளியைப் போல் மேனியழகு மங்கித் தோன்றவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்பாம்பு கவர்ந்த மதியைப் போள நெற்றியின் ஒளி மறைபடவும்.
எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான்எனக்கு நீ கூறினாய் இல்லை, உனக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின்ஓருயிரை இரு உடம்புகளுக்குள் பிரித்து வைத்தாற் போன்ற சிறப்புற்றவளாதலினால்
அது கண்டிசினால் யானே என்று நனி  5நீ மறைத்துவைத்திருப்பதை அறிந்திருக்கிறேன் நான் என்று மிகவும்
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல்அழுவதை மேற்கொண்டாய், ஆராய்ந்த இழைகளையுடையவளே! செழுமையான கதிர்களையுடைய
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன்தினைப்புனத்தின் காவற்பொழுதில் இடையிலே ஒருவன்
கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனதலையில் கண்ணி சூடி, காலில் கழல் அணிந்து, கழுத்தில் மாலை அணிந்தவனாய்க் குளிர்ச்சியுடன்
சிறுபுறம் கவையினனாக அதன் கொண்டுஎன் முதுகைத் தழுவினனாக, அது முதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு  10அதனையே நினைத்த நெஞ்சத்தோடு
இஃது ஆகின்று யான் உற்ற நோயேஇவ்வாறு ஆயிற்று நான் எய்திய காமநோய்.
  
# 129 குறிஞ்சி# 129 குறிஞ்சி ஔவையார்
  
பெரு நகை கேளாய் தோழி காதலர்பெரிதும் நகைப்பிற்கிடமான ஒரு செய்தியைக் கேட்பாயாக, தோழி! காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்ஒருநாள் நம்மைவிட்டுப் பிரிந்திருந்தாலும் உயிரின் தன்மை வேறுபடும் 
பொம்மல் ஓதி நம் இவண் ஒழியபொங்கிவழியும் கூந்தலையுடையவளாகிய நம்மை இங்கே விட்டுவிட்டு
செல்ப என்ப தாமே சென்றுபிரிந்து செல்வார் என்று கூறுவர், அப்படி அவர் சென்று
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை      5தன்னுடைய பொருள்தேடும் வினையை முடித்துத் திரும்பி வரும்வரை நாம் நம் வீட்டில்
வாழ்தும் என்ப நாமே அதன்_தலைவாழ்ந்திருப்போம் என்று கூறுவர்; அதற்கும் மேலாக
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்பநல்ல நிறம்பொருந்திய படத்தில் புள்ளிகளையுடைய பாம்பின் தலை நடுங்குமாறு
படு மழை உருமின் உரற்று குரல்மின்னியெழும் மேகத்தில் தோன்றும் இடி முழங்கும் ஒசையை
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டேநள்ளிரவான யாமத்திலும் தனித்திருந்தவளாய்க் கேட்டுக்கொண்டு – 
  
# 130 நெய்தல்# 130 நெய்தல் நெய்தல் தத்தனார்
  
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண்குற்றமின்றி நல்லிலக்கணங்கள் நிறைந்த குதிரைகளைப் பூட்டிய தேரில், தெளிந்த கண்ணையும்
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்பமடிக்கப்பட்ட வாயையுமுடைய தண்ணுமைப் பறை இடையிடையே ஒலிக்க
கோலின் எறிந்து காலை தோன்றியகோலால் குதிரைகளை அடித்து விரட்டிக் காலையில் இங்குத் தோன்றிய
செம் நீர் பொது வினை செம்மல் மூதூர்செவ்விய பண்புகளைக் கொண்ட, பொதுக்காரியங்களைச் செய்யும் நம் தலைவர், இந்தப் பழமையான ஊரில்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ     5தாமாகவே இங்கு உழைத்துண்ணும் வாழ்க்கையைக் காட்டிலும் இனியது உண்டோ?
எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர்நம்மீது எவ்வளவுதான் விருப்பம் உடையவர் என்றாலும் நம்மை நினைக்கவில்லை அவர்,
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்அவரோடு பொருந்திய என் நெஞ்சினையும், அவர் பிரிவால் நெகிழ்ந்துபோன தோள்களையும்
வாடிய வரியும் நோக்கி நீடாதுவாடிப்போன மேனியின் வரிகளையும் பார்த்தாவது தனது பிரிவை நீட்டிக்காது
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்றுஎப்படி இருக்கிறாள் இந்தப் பெருந்துயரை அடைந்தவள் என்று
ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர்       10ஒரு நாளில்கூடச் சொல்லவும் இல்லை; பரந்த நீர்ப்பரப்பையுடைய
வையக வரை அளவு இறந்தஇந்த வையகத்தின் எல்லையின் அளவையும் கடந்த
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றேஇந்தத் துன்ப நோய்க்கு மாற்றாக வேறு உடன் விசாரிக்கும் துணையும் இல்லையே.
  
# 131 நெய்தல்# 131 நெய்தல் உலோச்சனார்
  
ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்உம்மையன்றித் தனியே ஆடிய விளையாட்டும், நீர் இல்லாமல் தனியே தங்கிய பொழிலும்,
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடுஉம்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும்,
ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்பஉம்மிடம் ஊடுதலையும் உடையேமோ? உயர்ந்த மணற்பரப்பினையுடைய கடற்கரைத் தலைவனே!
திரை முதிர் அரைய தடம் தாள் தாழைசுருக்கங்கள் முதிர்ந்த நடுப்பக்கத்தையுடைய அகன்ற அடிப்பகுதியையுடைய தாழையின்
சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய       5சுறாமீனின் கொம்பு போன்ற முள்ளைக் கொண்ட இலைகள் முறிய
இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும்இறாமீனை உண்ணும் கூட்டமான குருகுகள் இனிதே தங்கியிருக்கும்
நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன்நறவுண்டு மகிழும் அரச அமர்வையுடைய நல்ல தேரினைக்கொண்ட பெரியன் என்பானின்
கள் கமழ் பொறையாறு அன்ன என்தேன் மணக்கும் பொறையாறு என்ற ஊரைப் போன்ற என்னுடைய
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கேஎன் தலைவியின் நல்ல தோள்கள் மெலிய நீவிர் எம்மை மறப்பதற்கு –
  
# 132 நெய்தல்# 132 நெய்தல் பெருங்கண்ணனார்
  
பேரூர் துஞ்சும் யாரும் இல்லைஇந்தப் பெரிய ஊரிலுள்ளோர் யாவரும் தூங்குகின்றனர். எனக்குத் துணையாக யாரும் இல்லை
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யெனதிருத்தமான வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குவதால் ஒய்யென்ற ஒலியுடன் விரைவாக
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளிபெரிய தெருவில் உதிர்ந்துவிழும் மழைத்தூறலைக் குளிர்ந்த காற்று
போர் அமை கதவ புரை-தொறும் தூவஒன்றற்கொன்று பொருதியிருக்கும் கதவுகளின் இடைவெளிகள்தோறும் தூவிவிட,
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர்  5கூர்மையான பற்களையுடைய காவல்நாய்கள் நடுங்கிக்கொண்டிருக்கும் நல்ல மாளிகையில்
பயில் படை நிவந்த பல் பூ சேக்கைநன்கு கிடந்து தூங்குவதற்குரிய உயரமான பல பூக்களைக் கொண்ட படுக்கையின்
அயலும் மாண் சிறையதுவே அதன்_தலைஅயலிடமும் பெரிய காவலையுடையது; அதற்கு மேலும்
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும்காவலையுடைய வாயில்களை நன்கு காத்துக்கொள்வீர் என்று கூவுகின்ற
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணியாமக் காவலரின் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்     10ஒன்றுபட இசைக்கும் தாளம்போல மாறி மாறி ஒலிக்கும்
இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளேஇன்றுதான் இரங்கத்தக்க நான் இறந்தொழியும் நாளோ?
  
# 133 குறிஞ்சி# 133 குறிஞ்சி நற்றமனார்
  
தோளே தொடி கொட்பு ஆனா கண்ணேதோள்கள்தாம் தொடிகள் சுழன்று கழலும் தன்மைய ஆகின; கண்கள்
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவேவாளால் பிளந்த மாவடுவைப் போன்ற தம் வடிவை இழந்தன;
நுதலும் பசலை பாயின்று திதலைநெற்றியும் பசலை பாய்வதாயிற்று; அழகுத்தேமலின்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்சிலவாய புள்ளிகளை அழகாகப் பெற்றிருக்கின்ற பல வடங்களையுடைய அல்குலையும்,
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று  5நீலமணி போன்ற அழகிய கூந்தலையும் உடைய மாநிறத்தவளுக்கு என்று
வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்றகொடியனவற்றைப் பேசும் பெண்டிர் பழிச்சொற்களைத் தூற்ற,
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்நாம் படும் துன்பத்தை நம் தலைவர் செய்யமாட்டார் என்னும்
காமுறு தோழி காதலம் கிளவிஎன்பால் விருப்பமிக்க தோழியே! உன் அன்புமிக்க இச் சொல்லானது
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்தஇரும்புவேலை செய்கின்ற கொல்லனின் வெப்பமான உலையில் தெளித்த
தோய் மடல் சில் நீர் போல 10பனைமடலில் தோய்த்த சிறிதளவு நீரைப் போல
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதேநோய்மிக்க என் நெஞ்சினை ஆற்றுவதாய் இருக்கிறது ஓரளவுக்கு.
  
# 134 குறிஞ்சி# 134 குறிஞ்சி கருவூர்க் கதப்பிள்ளையார்
  
இனிதின் இனிது தலைப்படும் என்பதுஇனிமைக்கு இனிமை சேர்ப்பது என்பது
இது-கொல் வாழி தோழி காதலர்இதுதானோ வாழ்க தோழி! காதலர்
வரு குறி செய்த வரை_அக சிறுதினைவருவதற்கான குறியினைச் செய்த மலைப்பக்கத்துச் சிறுதினையைக் கவரவரும்
செம் வாய் பாசினம் கடீஇயர் கொடிச்சிசிவந்த வாயையுடைய பைங்கிளிக்கூட்டத்தை விரட்டுவதற்காக, கொடிச்சியே!
அ வாய் தட்டையொடு அவணை ஆக என     5அழகிய வாயையுடைய தட்டையை எடுத்துக்கொண்டு அங்கே போக என்று
ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர்நம்மை ஏவினாள் நம் தாய்; தந்தையும், நீ வாழ்க,
அம் மா மேனி நிரை தொடி குறு_மகள்அழகிய மாமை நிற மேனியையும் வரிசையான வளையல்களையும் கொண்ட சிறுமகளே!
செல்லாயோ நின் முள் எயிறு_உண்கு எனசெல்வாய், உன் முள்போன்ற பற்களில் முத்தங்கொள்வேன் என்று
மெல்லிய இனிய கூறலின் யான் அஃதுமென்மையாக இனிய மொழியைக் கூறிய வகையில் நான் அதற்கு
ஒல்லேன் போல உரையாடுவலே  10உடன்படேன் போல உரையாடினேன்!
  
# 135 நெய்தல்# 135 நெய்தல் கதப்பிள்ளையார்
  
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணைதொங்குகின்ற ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின்
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்கரிய அடிமரத்தைப் புதைத்த மணல் மிகுந்துகிடக்கும் வீட்டு முற்றத்தில்
வரையா தாரம் வரு விருந்து அயரும்குறைவற்ற உணவுப்பொருள்களை இல்லத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு அளித்துமகிழும்
தண் குடி வாழ்நர் அம் குடி சீறூர்தண்ணிய குடிவாழ்க்கையை வாழ்பவரையுடைய அழகிய குடில்களையுடைய சீறூர்
இனிது மன்று அம்ம தானே பனி படு   5இனிதாயிருந்தது நிச்சயமாக ! பனியால் குளிர்ந்த
பல் சுரம் உழந்த நல்கூர் பரியபல காடுகளைக் கடந்த வருத்தத்தினால் வலிகுன்றிய ஓட்டத்தையுடைய,
முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும்முழங்குகின்ற கடல் அலைகள் ஒதுக்கிய புது மணலில் அழுந்தியதால் சுழலும்
வால் உளை பொலிந்த புரவிவெண்மையான தலையாட்டம் பொலிந்த புரவி கட்டப்பட்ட
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கேதேரினையுடையவர் நம்மோடு சிரித்து மகிழ்வதற்கு முன்பு –
  
# 136 குறிஞ்சி# 136 குறிஞ்சி நத்தங் கொற்றனார்
  
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்திருத்தமான, திரண்டு விளங்கும் என் கைவளை கழன்றுவிழுவதால் நான் அழுதுநிற்க,
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅதுஅரிய நோயினையுற்றார்க்கு அவர் விரும்பியதைக் கொடாமல்
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போலமருந்தினை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவனைப் போல
என் ஐ வாழிய பலவே பன்னியஎன் தந்தை வாழ்க பல்லாண்டு! புகழ்ச்சிமிக்க
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய  5மலையைப் பொருந்திய நாட்டவனுக்கும் நமக்கும் இடையே சிறிதளவு
தலைப்பிரிவு உண்மை அறிவான் போலபிரிவு உள்ளதை அறிந்திருப்பவர் போல,
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்துகாதலன் நீங்கியவழித் தானும் நீங்காமல், அவன் வந்தால் தன் எல்லைக்குள் நின்று
தோள் பழி மறைக்கும் உதவிதோளில் உண்டாகும் மெலிவு பிறர்க்குத் தோன்றாமல் மறைக்கும் உதவியையுடைய
போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனேகழன்று போகாத பொன்னாலான வளையல்களை என் கைகளில் செறித்தார்.
  
# 137 பாலை# 137 பாலை பெருங்கண்ணனார்
  
தண்ணிய கமழும் தாழ் இரும் கூந்தல்குளிர்ச்சியுடையதாய் மணங்கமழும் தாழ்ந்துவிழும் கரிய கூந்தலையும்
தட மென் பணை தோள் மட நல்லோள்_வயின்நீண்ட மென்மையான பருத்த தோள்களையும் உடைய இளமையான நம் தலைவியை விட்டுப்
பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்றுபிரிந்துபோக எண்ணினால், அவளைக் காட்டிலும் அரியது ஒன்றனை
எய்தினை வாழிய நெஞ்சே செம் வரைஎய்தினவனாவாய், வாழ்க நெஞ்சமே! செங்குத்தான மலையிலிருந்து வீழும்
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை    5அருவிகள் காய்ந்துபோன நீர் இல்லாத நீண்ட இடைவெளியில்
கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர்புல்லிய தலையைக் கொண்ட தன் இளம்பிடியின் வருத்துகின்ற பசியைக் களைவதற்காக
பெரும் களிறு தொலைத்த முட தாள் ஓமைபெரும் களிறு மோதிச் சாய்த்த வளைந்த அடிமரத்தைக் கொண்ட ஓமை மரம்
அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும்அரிய வழியில் செல்வோர்க்குத் தங்கியிருப்பதற்கான நிழலாய் அமையும்
குன்ற வைப்பின் கானம்குன்றுகள் சூழ்ந்த ஊர்களைக் கொண்ட பாலைநிலத்தில்
சென்று சேண் அகறல் வல்லிய நீயே   10சென்று நெடுந்தொலைவுக்கு அகன்று போவதற்கு வலிமையுள்ளவனானாய் நீயே!
  
# 138 நெய்தல்# 138 நெய்தல் அம்மூவனார்
  
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பைஉவர் நிலத்தில் விளையும் குன்றுகளைப் போன்ற உப்புக்குவியல்களை
மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கைமலைநாட்டில் சென்று விற்கும், ஓரிடத்தில் தங்காத நிலையற்ற வாழ்க்கை வாழும்
கணம்_கொள் உமணர் உயங்கு_வயின் ஒழித்தகூட்டமான உமணர்கள் தங்கள் வண்டிகள் முறிந்த இடத்தில் விட்டுச்சென்ற
பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும்தம் பண்பு அழிந்தனவாய் உள்ள பழைய பார் எனும் மரக்கட்டையில் வெண்குருகு முட்டையிடும்
தண்ணம் துறைவன் முன்_நாள் நம்மொடு5குளிர்ந்த அழகிய துறைகளையுடையவன் முன்பு ஒருநாள் நம்மோடு
பாசடை கலித்த கணை கால் நெய்தல்பசிய இலைகளினூடே செழித்துவளர்ந்த திரண்ட தண்டுகளையுடைய நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇபூவுடன் அலையலையாய் அமைந்த மாலையைத் தொடுத்துச் சூட்டியதைக்
கண் அறிவுடைமை அல்லது நுண் வினைகண்ணால் கண்டு அறிந்திருத்தலைத் தவிர, நுண்ணிய வேலைப்பாடமைந்த
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்அணிகலன்களை அணிந்த அல்குலையுடைய விழாக்களில் ஆடும் மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும்  10முழங்கும் அலைகளின் ஒலிக்கேற்ப, இனிய தாள அறுதியுடன் ஒலிக்கும்
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றேஆரவாரத்தையுடைய இந்த பழமையான ஊர் வேறொன்றையும் அறிந்தது இல்லை.
  
# 139 முல்லை# 139 முல்லை பெருங்கௌசிகனார்
  
உலகிற்கு ஆணி ஆக பலர் தொழஉலகிற்கு ஆதாரமாகக் கொண்டு பலரும் தொழுது போற்ற
பல வயின் நிலைஇய குன்றின் கோடு-தோறுபற்பல இடங்களிலும் நிலைபெற்றிருக்கும் குன்றுகளின் சிகரங்கள்தோறும்
ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலிசென்று உலவிவருவாயாக – பெரிய முழக்கத்தையுடைய மேகமே!
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்புபடுமலை என்னும் பாலைப்பண் அமைந்திருக்கும் நல்ல யாழின் வடித்தலைப் பொருந்திய நரம்பு
எழீஇ அன்ன உறையினை முழவின்       5எழுப்பிய இசையினைப் போன்ற ஓசையையுடைய மழைத்துளிகளையுடையாய்! முழவின்
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்மார்ச்சனை பொருந்திய மேற்புறத்தைப் போல இம்மென்ற ஒலியெழுப்பும்
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடுநுனிசுருண்ட செழித்த கூந்தலையுடைய மாநிறத்தவளோடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்சேர்ந்து இனிமையை அனுபவித்த மலைச்சரிவையுடைய நல்ல ஊரில்
விரவு மலர் உதிர வீசிபலவாய்க் கலந்த மலர்கள் உதிரும்படியாக வீசி
இரவு பெயல் பொழிந்த உதவியோயே     10இரவிலே மழை பொழிந்து எனக்கு உதவிசெய்தனையே!
  
# 140 குறிஞ்சி# 140 குறிஞ்சி பூதங்கண்ணனார்
  
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்தகிழக்குக்காற்று கொண்டுவந்த பெரிய மேகம் மேற்குத்திசையில் எழுந்து பெய்தலால் தழைத்த
சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்சிறிய கிளைகளில் பூங்கொத்துக்களையுடைய மிகவும் குளிர்ந்த சந்தனத்தைப்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரிபிற பொருள்களையும் சேர்த்துக் கூந்தலில் அழகு உண்டாகப் பூசி,
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழைஅவை காய்ந்துபோன பின் உதிர்ந்துபோன துகள்கள் பரவிய கூந்தலையுடைய
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை     5பெரிய கண்களையுடைய தோழிமார் மகிழும்படி, தந்தையின்
நெடும் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்துநீண்ட தேர் செல்லும் நிலவைப் போன்ற வெள்ளிய மணல் முற்றத்தில்
பந்தொடு பெயரும் பரிவு இலாட்டிபந்தோடு ஓடியாடும் நம்மீது பரிவில்லாத தலைவி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்துநம்மீது இரக்கங்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், பெரிதும் துவண்டுபோய்
பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம்இரந்து அவள் பின் நிற்றலை வெறுக்காதே! பெரிய நெஞ்சே! கொஞ்சமேனும்
அரும் துயர் அவலம் தீர்க்கும்    10நமது நீக்கமுடியாத அரிய துயரத்தின் அவலத்தைத் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கேமருந்து வேறு இல்லை, நான் உற்ற நோய்க்கு –
  
# 141 பாலை# 141 பாலை சல்லியங் குமரனார்
  
இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய்கரிய சேற்றில் மூழ்கியெழுந்த, வளைவாகப் புடைத்த கன்னத்தையும் பெரிய வாயையும் கொண்ட
மாரி யானையின் மருங்குல் தீண்டிமழையில் நனையும் யானையின் பக்கங்கள் உராய்தலால்
பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றைபொரிந்தது போல் ஆகிய அடிமரத்தின் பட்டை தேய்ந்த, உள்ளே துளையுள்ள காய்களைக் கொண்ட கொன்றை
நீடிய சடையோடு ஆடா மேனிநீண்ட சடையும் நீராடாத மேனியுமுடைய
குன்று உறை தவசியர் போல பலவுடன்  5குன்றுகளில் வாழும் தவசிமாரைப் போல, பலவாக
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும்வெயில் பரந்த நீண்ட இடைவேளி அழகுறத் தோன்றும்
அரும் சுரம் எளிய-மன் நினக்கே பருந்து படஅரிய காட்டுவழிகள் கடந்துசெல்ல எளிதானவை உனக்கு – பருந்துகள் பாய்ந்து தின்னுமாறு
பாண்டிலொடு பொருத பல் பிணர் தட கைதேர்ப்படையோடு போரிட்ட பலவாய்ச் சொரசொரப்புடைய பெரிய கைகளைக் கொண்ட
ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளிஏந்திய கொம்புகளையுடைய யானைப்படையுடைய புகழை விரும்பும் கிள்ளியின்
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த      10புதியதாக அணிசெய்யப்பட்ட உயர்ந்த கொடிகள் பறக்கும் அம்பர் நகரைச் சூழ்ந்த
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்அரிசில் என்னும் ஆற்றின் அழகிய குளிர்ச்சியான அறல்மணலைப் போன்ற இவளது
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனேவிரித்த செழுமையான கூந்தலை விட்டு பிரிந்து வாழ்தல் ஆற்றேன்.
  
# 142 முல்லை# 142 முல்லை இடைக்காடனார்
  
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள்வானமே இறங்கியதைப் போன்று பொழிந்த மின்னுகின்ற மழையின் கடைசி நாளில்
பாணி கொண்ட பல் கால் மெல் உறிகையில் கொண்ட பல கால்களைக் கொண்ட மென்மையான உறியுடன்,
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கிதீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி,
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன்பனையோலைப் பாயை முதுகுப்பக்கம் போட்டிருக்கும் பால் விற்கும் இடையனை,
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப 5நுண்ணிய பல நீர்த்துவலைகள் ஒரு பக்கமாக நனைக்க,
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளிகைத் தண்டினை இன்னொரு காலாக ஊன்றிப் பிடித்து, ஒடுங்கிய நிலையில் உதடுகளை மடித்து எழுப்பும் சீழ்க்கையொலியினால்
சிறு தலை தொழுதி ஏமார்த்து அல்கும்சிறிய தலையினையுடைய ஆட்டுக் கூட்டத்தை வேறுபக்கம் போகாதவாறு மயங்கச் செய்து தங்கியிருக்கவைக்கும்
புறவினதுவே பொய்யா யாணர்காட்டுப்பகுதியில் இருப்பது, என்றும் பொய்க்காத புதுவருவாயையுடைய,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்இரவில் என்றாலும் விருந்தினர் வந்தால் மகிழ்ச்சிகொள்ளும்
முல்லை சான்ற கற்பின்    10முல்லைத் திணைக்குரிய கற்பினை உடைய
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரேமென்மையான இயல்புடைய சிறுமகள் வாழும் இனிய ஊர்.
  
# 143 பாலை# 143 பாலை கண்ணகாரன்
  
ஐது ஏகு அம்ம யானே ஒய்யெனமிகவும் வியப்புடையதாய் இருக்கின்றது! நான் – மிக விரைவாக,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துகொண்டுவந்த மணலை, தலைசுற்றிப் பரப்பிய வளமிக்க மனைகளின் முற்றத்தில்
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும்ஓரையாடுகின்ற தோழியர் கூட்டத்தையும், நொச்சிவேலியையும் காணும்போதெல்லாம்
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்நீர் ஒழுகும் கண்ணுடையவளாய் மனம் கலங்குகின்றேன்; என்னைக்காட்டிலும்
கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள்5கிளியும் அக்கா அக்கா என்று கூவியழைக்கும்; என் இளமகள்
வழு இலள் அம்ம தானே குழீஇகுற்றமற்றவளே; தம்முள் கூடிக்கொண்டு
அம்பல் மூதூர் அலர் வாய் பெண்டிர்குசுகுசுக்கும் முதிய ஊரின் பழிபேசும் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்இன்னாத நல்ல சொற்களைக் கேட்ட சில நாட்களுக்குத்
அறியேன் போல உயிரேன்தெரியாதது போல மூச்சுவிடவுமில்லை;
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே10ஏதோ புதிதாக ஒரு மணம் மணக்கின்றதே உன் கூந்தல் என்றும் கேட்டேனே –
  
# 144 குறிஞ்சி# 144 குறிஞ்சி கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
  
பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடிபெரிய களிற்றினைப் புலி தாக்கியதால், அதன் கரிய பெண்யானை எழுப்பிய
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபுதிரண்டுவரும் கரிய மேகம் ஒலிப்பதைப் போன்ற முழக்கத்தைக் கேட்டு அஞ்சி,
போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல்மலர்கின்ற பூவைப் போன்ற அழகிய மையுண்ட கண்கள் கலங்கிக் கண்ணீர் சொரியவும், ஆதரவற்ற
பேதை நெஞ்சம் கவலை கவற்றபேதை நெஞ்சம் கவலையால் வருந்த,
ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய்   5என் நிலைமை இங்கு இவ்வாறாயிற்று, தோழியே! பிளந்த வாயினையுடைய
பிணவு புலி வழங்கும் அணங்கு அரும் கவலைபெண்புலி நடமாடும் அச்சத்தை மிகக் கொண்ட கடத்தற்கரிய பல கிளைவழிகளையுடைய
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்றுஓளிவிடும் நீர் நிறைந்து விரைந்து ஓடும் காட்டாற்றின்
கரை அரும் குட்டம் தமியர் நீந்திகரை தெரியாத ஆழமான மடுக்களைத் தன்னந்தனியே நீந்தி,
விரவு மலர் பொறித்த தோளர்பலவகையாகக் கலந்த பூக்கள் படிந்த தோள்களையுடையவராய்
இரவின் வருதல் அறியாதேற்கே       10இரவில் வருவதின் அருமையை அறியாத எனக்கு –
  
# 145 நெய்தல்# 145 நெய்தல் நம்பி குட்டுவன்
  
இரும் கழி பொருத ஈர வெண் மணல்கரிய கழியின் நீர் மோதுவதால் ஈரமாகிப்போன வெண்மணலில் படர்ந்திருக்கும்
மா கொடி அடும்பின் மா இதழ் அலரிபெரிய கொடிகளைக் கொண்ட அடும்பின் பெரிய பூவிதழ்களைக் கொய்து
கூந்தல் மகளிர் கோதை கூட்டும்நீண்ட கூந்தலையுடைய மகளிர் தம் மாலையில் சரமாகச் சூடிக்கொள்ளும் 
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மைஅழகிய கடற்கரைநாடனிடம் நாம் விரும்பிக்கொண்ட நட்பு
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு       5இப்போது சிறிதளவும் இல்லாதிருந்த போதும், நம்மோடு
புணர்ந்தனன் போல உணர கூறிஅவன் சேர்ந்திருந்தான் போல வெளிப்படக் கூறி
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை‘அவன் எங்குள்ளான்’ என்று கேட்கிறாள் நியாயமற்ற நமது அன்னை;
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம்நீயும் உனது மேனி எழிலின் மாற்றத்தினால் நானே உன் உறவை அறியும்படி தோன்றுகின்றாய்; நம்முடைய
பராரை புன்னை சேரி மெல்லபருத்த அடிமரத்தைக் கொண்ட புன்னை மரங்கள் இருக்கும் சேரியில், மெதுவாக
நள்ளென் கங்குலும் வருமரோ10நள்ளென்னும் நடுஇரவிலும் வருகின்றது
அம்ம வாழி அவர் தேர் மணி குரலேவாழ்க! அவரது தேரின் மணியோசை.
  
# 146 குறிஞ்சி# 146 குறிஞ்சி கந்தரத்தனார்
  
வில்லா பூவின் கண்ணி சூடிவிலைக்கு விற்கமுடியாத பூக்களைக்கொண்ட தலைமாலையைச் சூடி
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதருநன்கு பித்தேறினேன் என்று பிறர் கூறுமாறு, பல ஊர்களிலும் திரிகின்ற
நெடு மா பெண்ணை மடல்_மானோயேநெடிய கரிய பனைமடல் குதிரை மேல் இருப்பவனே!
கடன் அறி மன்னர் குடை_நிழல் போலதன் கடமையை உணர்ந்த மன்னரின் குடைநிழல் போல
பெரும் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து 5பெரிதும் குளிர்ச்சியையுடைய மரத்தின் நிழலில் சிறிது நேரம் இறங்கியிருந்து
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் எனதங்கிச் செல்வாயாக! சென்று மறையட்டும் சூரியன் என்று –
அருளி கூடும் ஆர்வ மாக்கள்மனமிரங்கி வந்து கூடிநிற்கும் அன்புடைய மக்களால்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்நல்லவன் என்னும் புகழ்ச்சொல்லை அடையப்பெற்ற, சித்திரம் வரைவதில் வல்ல ஒருவன்
எழுதி அன்ன காண்_தகு வனப்பின்தீட்டிவைத்ததைப் போன்ற காண்பதற்கினிய அழகினையுடைய
ஐயள் மாயோள் அணங்கிய     10மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவள் வருத்திய
மையல் நெஞ்சம் என் மொழி கொளினேமயக்கத்தையுடைய நெஞ்சமே! என் சொல்லை ஏற்றுக்கொள்ள விரும்பினால் –
  
# 147 குறிஞ்சி# 147 குறிஞ்சி கொள்ளம்பக்கனார்
  
யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறு_மகள்இனிமேல் நாம் என்ன ஆவோமோ? அழகான நெற்றியையுடைய சிறுமகளே!
தேம் படு சாரல் சிறுதினை பெரும் குரல்தேன் மணக்கும் மலைச் சாரலில், சிறுதினையின் பெரிய கதிர்களைச்
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்றுசிவந்த வாயையுடைய பைங்கிளிகள் கவர்ந்து கொண்டிருக்க, நீ வேறு
எ வாய் சென்றனை அவண் என கூறிஎவ்விடத்துக்குச் சென்றாய் அங்கே? என்று கூறி
அன்னை ஆனாள் கழற முன் நின்று     5அன்னை மனம் அமையாதவளாய்க் கேட்க, அவள் முன் நின்று
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனைஅருவிகள் ஆரவாரிக்கும் பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனேஒருசிறிதும் அறியேன், அவனைப் பார்த்ததும் இல்லை;
வெதிர் புனை தட்டையேன் மலர் பூ கொய்துமூங்கிலாற் செய்த தட்டையெனும் கருவியையுடைய நான் மலர்ந்த பூக்களைக் கொய்து
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலைசுனையில் பாய்ந்து நீராடவும் இல்லை என்று நினைவில்லாதவளாய்,
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு      10பொய்யுரைக்காது, அந்தோ! உண்மையை உரைத்தாயே! அதனைக் கேட்டு
தலை இறைஞ்சினளே அன்னையோசனையுடன் தலைகுனிந்திருந்தாள் அன்னை;
செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தேதினைப் புனத்திற்குச் செல்வதை நீயே கெடுத்துக்கொண்டாய்! நீ இரங்கத்தக்கவள்.
  
# 148 பாலை# 148 பாலை கள்ளம்பாளனார்
  
வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்உன்னுடைய மென்மையான இயல்பை உணர்ந்தவராயும், மெல்லிய சொற்களால் எடுத்துச் சொல்லியும்,
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம்உன்னால் அங்கு வர இயலாது என்று தாம்
தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்றேதம் பயணத்தைத் தொடங்கித் தம் பொருளீட்டும் முயற்சியில் பிரிந்துசென்றோர், இப்பொழுது
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடைநெடிய காய்ந்துபோன நீர்நிலைகள் மிகுந்த நீரற்ற நீண்ட பாலைவழியில்,
செம் கால் மராஅத்து அம் புடை பொருந்தி    5சிவந்த அடிமரத்தையுடைய மரா மரத்தின் அழகிய பக்கவாட்டில் பொருந்தியிருந்தபடி
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாதுஇழுத்துப்பிடித்த வில்லையுடைய மறவர்கள் நிறைந்திருப்பதை அஞ்சாது,
கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின்மலைக் குகையில் செறிவாய்க்கிடந்த பெரிய நகங்களைக் கொண்ட பெண்புலியின்
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்துஇனிதான குட்டிகளை ஈன்றதனால் ஏற்பட்ட வருத்தம் தீர, சினம் மிக்கு
செம் கண் இரும் புலி கோள் வல் ஏற்றைசிவந்த கண்களையுடைய பெரிய புலியின் இரையைக் கொள்வதில் வல்ல ஆண்
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்10உயர்ந்து நிற்கும் கொம்பினையுடைய தனித்த யானையின் புள்ளிகள் உடைய முகத்தில் பாயும்
அரும் சுரம் இறப்ப என்பகடத்தற்கரிய பாலைவழியில் செல்வேன் என்பார்,
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவேவருந்தமாட்டேன் தோழி, வாய்ப்பதாக அவரின் பயணம்.
  
# 149 நெய்தல்# 149 நெய்தல் உலோச்சனார்
  
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிசிலரும், பலருமாகக் கூடி, கடைக்கண்ணால் அக்கம்பக்கம் பார்த்து,
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்திமூக்கின் உச்சியில் சுட்டுவிரலை வைத்து
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றதெருவில் பெண்டிர் கிசுகிசுப்பாய்ப் பழிச்சொற்களால் தூற்ற,
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்பசிறிய கோலை வலதுகையில் உயர்த்தியவளாய் அன்னை வருத்த,
அலந்தனென் வாழி தோழி கானல்       5மிகவும் துயருற்றேன் வாழ்க தோழியே! கடற்கரைச் சோலையில்
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல்புதிய மலர்களைத் தீண்டியதால் பூ மணம் கமழும் நிறங்கொண்ட பிடரிமயிரையுடைய
கடு மான் பரிய கதழ் பரி கடைஇவிரைந்து செல்லும் குதிரைகளின் ஓட்டத்தை மேலும் விரைவாக ஓடுமாறு செலுத்தி,
நடுநாள் வரூஉம் இயல் தேர் கொண்கனொடுநள்ளிரவில் வருகின்ற பண்புநலம் மிக்க தேரினையுடைய காதலனோடு
செலவு அயர்ந்திசினால் யானேநீ செல்வதற்கு உடன்படுகின்றேன் நான்;
அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊரே10தன் பழிச்சொற்களைத் தானே சுமந்துகொண்டு ஒழிந்துபோகட்டும் இந்த வெற்றுப்பேச்சைக் கொண்ட ஊர்.
  
# 150 மருதம்# 150 மருதம் கடுவன் இளமள்ளனார்
  
நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்பெரிதும் சிரிப்புக்கிடமாயினான், பாணனே! உன் பெருமகன்!
மிளை வலி சிதைய களிறு பல பரப்பிகாவல் காடுகளின் வலிமையைச் சிதைத்துக் களிறுகள் பலவற்றைப் பரக்கவிட்டு,
அரண் பல கடந்த முரண் கொள் தானைஅரண்கள் பலவற்றை வென்ற வலிமைமிக்க சேனைகளையுடைய
வழுதி வாழிய பல என தொழுது ஈண்டுவழுதி வாழ்க பல்லாண்டு என வணங்கிச் சேர்ந்து
மன் எயில் உடையோர் போல அஃது யாம் 5தம் நிலைபெற்ற கோட்டைமதில்களைக் காத்துக்கொண்டோரைப் போல, அதற்காக நாம்
என்னதும் பரியலோ இலம் என தண் நடைசிறிதளவும் வருந்தோம் என்று கூறி, மென்மையான நடையையுடைய
கலி_மா கடைஇ வந்து எம் சேரிகனைக்கின்ற குதிரையைச் செலுத்தி வந்து எமது சேரியில்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமையகழுத்து மாலையும், கொண்டைமாலையும் காட்டி, ஒருமைப்பாட்டையுடைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்சஎமது நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டமை இனி இல்லாமற்போய்விடுமோ? நீ அஞ்சும்படி
கண் உடை சிறு கோல் பற்றி 10கணுக்களையுடைய சிறிய மூங்கில்கோலைப் பற்றிக்கொண்டு
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே   மேல்சினம் பெரிது உடையவளாய் என் தாய் வருந்துவாள் இல்லை.