Select Page
  
# அம்மூவன்# அம்மூவன்
# 351 நெய்தல்# 351 நெய்தல்
வளையோய் உவந்திசின் விரைவு_உறு கொடும் தாள்வளையல்கள் அணிந்தவளே! நான் மகிழ்கின்றேன்! விரைகின்ற வளைந்த கால்களையுடைய
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்தவளையில் வாழும் நண்டு தன் கூர்மையான நகத்தால் கீறிய
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமெனஈரமான மணலையுடைய நீரொழுகும் வழி சிதைந்துபோகும்படி, இழும் என்று
உரும் இசை புணரி உடைதரும் துறைவற்குஇடியோசை போன்ற முழக்கத்தையுடைய அலைகள் உடைக்கும் கடல்துறைத் தலைவனுக்கு
உரிமை செப்பினர் நமரே விரி அலர்உன்னை உரிமையாகக் கூறினர் நம் இல்லத்தார்; விரிந்த பூக்களைக் கொண்ட
புன்னை ஓங்கிய புலால் அம் சேரிபுன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த புலவு நாறும் சேரியிலுள்ள
இன் நகை ஆயத்தாரோடுஇனிய சிரிப்பையுடைய மகளிர்கூட்டத்தோடு
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரேஇன்னும் முன்புபோல் பழிச்சொற்கள் கூறுமோ, இந்த ஆரவாரமுள்ள ஊர்?
  
# கடியலூர் உருத்திரங்கண்ணனார்# கடியலூர் உருத்திரங்கண்ணனார்
# 352 பாலை# 352 பாலை
நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்னஆழமான நீரில் உள்ள ஆம்பல் இலையின் பின்புறத்தைப் போன்ற
கொடு மென் சிறைய கூர் உகிர் பறவைவளைந்த மெல்லிய சிறகுகளையும், கூர்மையான நகங்களையுமுடைய பறவைகள்
அகல் இலை பலவின் சாரல் முன்னிஅகன்ற இலைகளையுடைய பலாமரங்கள் இருக்கும் மலைச்சரிவை நினைத்து
பகல் உறை முது மரம் புலம்ப போகும்தாம் பகலில் தங்கும் முதிய மரங்கள் தனித்திருக்கப் பறந்துபோகும்
சிறு புன் மாலை உண்மைசிறிய புல்லிய மாலை என்று ஒன்று உள்ளதை
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கேஅறிகின்றேன் தோழி! அவரைக் காணாத பொழுது –
  
# உறையூர் முதுகூற்றனார்# உறையூர் முதுகூற்றனார்
# 353 குறிஞ்சி# 353 குறிஞ்சி
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆகஆரவாரம் மிகுந்த மலைநாட்டினனின் மார்பே தெப்பமாக
கோடு உயர் நெடு வரை கவாஅன் பகலேஉச்சிகள் உயர்ந்திருக்கும் உயர்ந்த மலையின் சரிவுப்பக்கத்தில், பகலில்
பாடு இன் அருவி ஆடுதல் இனிதேஇசைக்கும் இனிய அருவிநீரில் குளிப்பது இனியது;
நிரை இதழ் பொருந்தா கண்ணோடு இரவில்வரிசையாய் இருக்கும் கண் இமைகள் மூடாத கண்ணோடு, இரவில்
பஞ்சி வெண் திரி செம் சுடர் நல் இல்பஞ்சினால் ஆன வெண்மையான திரி சிவப்புச் சுடரில் எரியும் நல்ல வீட்டில்
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇபின்னல் தாழ்ந்த முதுகைத் தழுவி
அன்னை முயங்க துயில் இன்னாதேஅன்னை அணைத்திருக்க தூக்கம் இன்னாததாகும்.
  
# கயத்தூர் கிழான்# கயத்தூர் கிழான்
# 354 மருதம்# 354 மருதம்
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்நீரில் நீண்ட நேரம் விளையாடினால் கண்களும் சிவக்கும்;
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்நிறையக் குடித்தவர் வாய்க்குத் தேனும் புளிக்கும்;
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்து கொடுமோபிரிந்துசெல்ல எண்ணினால் எமது இல்லத்தில் கொண்டுபோய் விடுவீர்!
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்அழகிய குளிர்ந்த பொய்கைகள் நிறைந்த எமது ஊரின்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்கொடிய பாம்புகள் திரியும் தெருவில் வந்து
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மேநடுங்குகின்ற மனக்கவலையினால் பட்ட துன்பத்தை முன்பு போக்கிய எம்மை – 
  
# கபிலர்# கபிலர்
# 355 குறிஞ்சி# 355 குறிஞ்சி
பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரேமழை பெரிதும் பொழிந்து மறைப்பதால் வானத்தைக் காண்பாரில்லை;
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரேநீர் பரந்து ஓடுவதால் நிலத்தைக் காண்பாரில்லை;
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்றுஞாயிறு மேற்கில் மறைந்துவிட்டதால் இருள் பெரிதும் கவிந்தது;
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்பலரும் துயிலும் நள்ளிரவின் இருளில்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்பஎப்படித்தான் வந்தாயோ? உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனே!
வேங்கை கமழும் எம் சிறுகுடிவேங்கைப் பூக்கள் மணக்கும் எமது சிறுகுடியை
யாங்கு அறிந்தனையோ நோகோ யானேஎப்படி அறிந்துகொண்டாயோ? வருந்துகிறேன் நான்.
  
# கயமனார்# கயமனார்
# 356 பாலை# 356 பாலை
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடைநிழல் அடங்கி அற்றுப்போன நீர் அற்ற கடக்கமுடியாத பாலைவெளியில்
கழலோன் காப்ப கடுகுபு போகிகாலில் கழல் அணிந்த தலைவன் காத்துவர, விரைந்து சென்று
அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்தநீர் அற்றுப்போன சுனையின் பக்கத்தில் முறுகிப்போய்ச் சூடான
வெம் வெம் கலுழி தவ்வென குடிக்கியமிகுந்த வெப்பமுடைய கலங்கிய நீரைத் தவ்வென்று குடிப்பதற்கு
யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்தியஎவ்வாறு முடியும் அவளால்? அவள்தான், கையிலேந்திய
செம் பொன் புனை கலத்து அம் பொரி கலந்தசெம்பொன்னால் செய்யப்பட்ட கலத்தில் அழகிய பொரியைக் கலந்த
பாலும் பல என உண்ணாள்பாலையும் மிகுதியாய் இருக்கிறது என்று குடிக்கமாட்டாள் –
கோல் அமை குறும் தொடி தளிர் அன்னோளேதிரட்சி அமைந்த குறிய வளையலையுடைய மாந்தளிர் போன்றவள் – 
  
# கபிலர்# கபிலர்
# 357 குறிஞ்சி# 357 குறிஞ்சி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்வெறுக்கும்படியான துன்பத்தில் உழன்று தூக்கம் இல்லாத கண்களில் தோன்றிய
பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள்கண்ணிர்த்துளிகள் வாய்க்காலாய்ப் பிளந்துசெல்லும், மூங்கில்போன்ற அழகு குறைந்துபோன தோள்கள்
மெல்லிய ஆகலின் மேவர திரண்டுஇப்போது மெலிந்துபோயிருப்பினும், கண்டார்க்கு விருப்பம் வரும்படி திரண்டு
நல்ல என்னும் சொல்லை மன்னியநல்லனவாயிருந்தன என்னும் சொல்லை அடைந்திருந்தன –
ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன்ஏனல் என்ற அழகிய சிறுதினையின் பயிரைக் காக்கும் பரண்மீதிருப்பவன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானைதீக்கடைகோலில் எழுப்பிய தீயினால் இடம்பெயர்ந்த நெடிய நல்ல யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம்விண்மீன் விழுவதால் ஏற்படும் சுடர்விடும் ஒளியினைக் கண்டு அஞ்சும்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கேவிண்ணைத்தொடும் மலைநாட்டைச் சேர்ந்தவன் மணப்பதற்கு முன்னே –
  
# கொற்றன்# கொற்றன்
# 358 மருதம்# 358 மருதம்
வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கேஇறுக்கமான அணிகலன்கள் நெகிழ்ந்துபோக, அழுது இங்கே
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டுநீரொழுகும் கண்களால் வருத்தமடையாதே! ஆய்ந்து எண்ணும் கோடுகளை இட்டு
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்கசுவரைப் பிடித்துக்கொண்டிருக்கும் நின் துயரம் முற்றிலும் நீங்க
வருவேம் என்ற பருவம் உது காண்வருவேன் என்று சொன்ன பருவம் இதோ நெருங்கிவிட்டது பார்!
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைதனித்திருப்போர் துன்பமுறும் குளிர்ச்சி மிகுந்த மாலையில்
பல் ஆன் கோவலர் கண்ணிபல பசுக்களை மேய்த்துவரும் கோவலர்களின் தலைமாலையிலிருந்து
சொல்லுப அன்ன முல்லை வெண் முகையேசொல்வது போன்றிருக்கின்றன, முல்லையின் வெண்மையான மொட்டுகள்.
  
# பேயன்# பேயன்
# 359 மருதம்# 359 மருதம்
கண்டிசின் பாண பண்பு உடைத்து அம்மபார்ப்பாயாக பாணனே! பண்புள்ள இந் நிகழ்ச்சியை –  
மாலை விரிந்த பசு வெண் நிலவின்மாலையில் விரிந்த பசிய வெண்மையான நிலவொளியில்
குறும் கால் கட்டில் நறும் பூ சேக்கைகுட்டையான கால்களையுடைய கட்டிலில் விரித்த நறிய பூக்களைக் கொண்ட படுக்கையில்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇபடுத்திருக்கும் யானையைப் போன்று பெருமூச்சுவிடுகின்றவனாய், விரும்பிப்
புதல்வன் தழீஇயினன் விறலவன்புதல்வனைத் தழுவினான் வெற்றியையுடைய நம் தலைவன்; 
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளேஅந்தப் புதல்வனின் தாய் அவனின் முதுகை இருகைகளாலும் இறுக்கிக்கொண்டாள் –
  
# மதுரை ஈழத்து பூதன் தேவன்# மதுரை ஈழத்து பூதன் தேவன்
# 360 குறிஞ்சி# 360 குறிஞ்சி
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்துகாதல் நோய்க்குத் தீர்வு வெறியாட்டயர்தலே என்று நினைத்த வேலன், என் நோய்க்கு மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணியஅறியாதவானாய் இருத்தலை அன்னை காணும்பொருட்டு,
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்பொறுத்தற்கரிய நினைவுகளால் ஏற்படும் துன்பத்தை இன்று நாம் அனுபவித்தாலும்
வாரற்க தில்ல தோழி சாரல்வரவேண்டாம் தோழியே! மலைச்சாரலில் உள்ள
பிடி கை அன்ன பெரும் குரல் ஏனல்பெண்யானையின் துதிக்கையை ஒத்த பெரிய கதிர்களைக் கொண்ட தினையை
உண் கிளி கடியும் கொடிச்சி கை குளிரேஉண்ணும் கிளையை ஓட்டும் குறத்தியின் கையிலுள்ள குளிர் என்னும் கிளிகடியும் கருவி
சிலம்பின் சிலம்பும் சோலைமலைப்பக்கத்தே எதிரொலிக்கும் சோலைகளையுடைய
இலங்கு மலை நாடன் இரவினானேஒளிவிடும் மலைநாட்டைச் சேர்ந்தவன், இரவு வேளையில் –
  
# கபிலர்# கபிலர்
# 361 குறிஞ்சி# 361 குறிஞ்சி
அம்ம வாழி தோழி அன்னைக்குவாழ்க தோழியே! நம் அன்னைக்கு
உயர்_நிலை_உலகமும் சிறிதால் அவர் மலைஉயர்ந்த நிலையிலுள்ள தேவர்கள் உலகமும் கொடுப்பதற்குச் சிறிதாகும் – தலைவரின் மலையில்
மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடுமாலையில் பெய்த மணம் கமழும் வெள்ளத்தோடு
காலை வந்த முழு_முதல் காந்தள்காலையில் வந்த முழுச்செடியான காந்தளை,
மெல் இலை குழைய முயங்கலும்அதன் மெல்லிய இலைகள் குழைந்துபோகும்படி தழுவியதையும்,
இல் உய்த்து நடுதலும் கடியாதோளேஅதனை வீட்டுக்குக்குக் கொண்டுவந்து நட்டதையும் கடிந்துகொள்ளாதாவள்.
  
# வேம்பற்றூர் கண்ணன் கூத்தன்# வேம்பற்றூர் கண்ணன் கூத்தன்
# 362 குறிஞ்சி# 362 குறிஞ்சி
முருகு அயர்ந்து வந்த முது வாய் வேலமுருகனை வழிபட்டு வந்த முதுமை வாய்ந்த வேலனே!
சினவல் ஓம்பு-மதி வினவுவது உடையேன்கோபப்படவேண்டாம், கேட்பதற்கு ஒன்று உடையேன்;
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடுபலவாக வேறுபட்ட நிறங்களுள்ள சிலவான சோற்றைப் பலியுணவாக,
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவிசிறிய ஆட்டினைக் கொன்று, இவளின் மணமுள்ள நெற்றியைத் தடவிக்கொடுத்து,
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கியதெய்வத்தைத் தொழுது கொடுத்தால், இவளை வருத்திய
விண் தோய் மா மலை சிலம்பன்விண்ணைத் தொடும் உயர்ந்த மலைகளையுடய தலைவனின்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியேஒளிறும் மாலையை அணிந்த மார்பும் அப்பலியுணவை ஏற்றுக்கொள்ளுமோ?
  
# செல்லூர் கொற்றன்# செல்லூர் கொற்றன்
# 363 மருதம்# 363 மருதம்
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறுகண்ணிபோல் வளைந்த கொம்பினையுடைய தலைமைப் பண்புள்ள நல்ல காளை,
செம் கோல் பதவின் வார் குரல் கறிக்கும்சிவந்த தண்டையுடைய அறுகம்புல்லின் நீண்ட கதிரைக் கொறித்துமேயும்
மட கண் மரையா நோக்கி வெய்து_உற்றுமடப்பமுடைய கண்களையுடைய மரையா என்னும் காட்டுப்பசுவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்புல்லிய அடியினைக் கொண்ட உகாய் மரத்தின் வரிவரியான நிழலில் தங்கும்
இன்னா அரும் சுரம் இறத்தல்துன்பமுடைய கடத்தற்கரிய பாலைவழியைக் கடந்துசெல்லுதல்
இனிதோ பெரும இன் துணை பிரிந்தேஇனியதாகுமோ? பெருமானே! உனது இனிய துணைவியை விட்டுப்பிரிந்து –
  
# ஔவையார்# ஔவையார்
# 364 மருதன்# 364 மருதன்
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்இறுகப் பின்னிய கொடிப்பிரம்பினைப் போல் வரிவரியான முதுகினைக் கொண்ட நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்வாளை மீனை அன்றைய ஊணவாகப் பெறும் ஊரினனான தலைவனின்
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவிபொன்னாலான திரண்ட ஒளிவிடும் வளையல் அணிந்த, தனக்குத்தான் தகுதியைக் கொண்ட பரத்தை
என் புறங்கூறும் என்ப தெற்றெனஎன்னைப்பற்றிப் புறங்கூறுகிறாள் என்று சொல்வர்; அது தெளியும்படி
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர்வளைந்து இறங்கும், மூங்கிலைப் போன்ற தோள்களைக் கொண்ட ஒளியுடைய வளையணிந்த மகளிர்
துணங்கை நாளும் வந்தன அ வரைதுணங்கைக் கூத்தாடும் நாளும் வந்தது; அப்பொழுது
கண் பொர மற்று அதன்_கண் அவர்இருவர் கண்களும் சந்தித்துக்கொள்ள, அதனால் அவரை
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரேமீண்டும் என்பால் சேர்த்துக்கொள்வதற்காக மெல்லமெல்ல வரும் மள்ளர்களுக்கான சேரிப்போர்.
  
# மதுரை நல்வெள்ளி# மதுரை நல்வெள்ளி
# 365 குறிஞ்சி# 365 குறிஞ்சி
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்சங்கை அரிந்து செய்த ஒளிவிடும் வளையல்கள் நெகிழ்ந்துபோக, நாள்தோறும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவேதூக்கமின்றி அழுது கலங்கிப்போய் நீர்த்துளிகள் நிரம்பியுள்ளன –
துன் அரும் நெடு வரை ததும்பிய அருவிநெருங்குவதற்கு அரிதான நெடிய மலையில் நிரம்பிவழிந்த அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்தண்ணென்று ஒலிக்கிற முழவினைப் போன்று ஒலிக்கின்ற இசையினைக் காட்டுகின்ற
மருங்கில் கொண்ட பலவின்பக்கநிலத்தில் நிற்கின்ற பலாமரங்களையுடைய
பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணேபெரிய மலைகளையுடை நாட்டினனே! நீ விரும்பும் தலைவியின் கண்கள் –
  
# பேரிசாத்தன்# பேரிசாத்தன்
# 366 குறிஞ்சி# 366 குறிஞ்சி
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்_வயின்விதியால்தான் அவளின் காதல் அமைந்தது என்பதன்றி, அவரின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோஇயல்பை அளந்து அறிவதற்கு நாம் யாரோ?
வேறு யான் கூறவும் அமையாள் அதன்_தலைவேறு நான் என்ன கூறினாலும் அமைதியாகமாட்டாள்; அதற்குமேலும் 
பைம் கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்தபசிய இடத்தையுடைய பெரிய சுனையில் பலவாகிய கட்டுகள் அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபுவளமையான இதழ்களையுடைய நீலமலரைப் பார்த்து, உள்ளே வருத்தங்கொண்டு
அழுத கண்ணள் ஆகிஅழுத கண்ணையுடையவளாகி,
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவேகுற்றமற்றது, இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்தவள் எடுத்த முடிவு –
  
# மதுரை மருதன் இளநாகன்# மதுரை மருதன் இளநாகன்
# 367 மருதம்# 367 மருதம்
கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின்கொடியவரான தலைவர் நமக்கு நல்மணத்தைத் தரமாட்டாரெனினும், உன்னுடைய
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்தோள்வளை விளங்கும் இறங்கிவரும் தோள்கள் அழகுபெறும்படி
உவ காண் தோழி அ வந்திசினேஇன்னும் சற்றுத்தொலைவுக்கு அங்கே வந்துபார் தோழி!
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டுஇறங்கிவரும் பெரிய மழை பெய்யத் தொடங்கியதால், அவர் நாட்டிலுள்ள
பூசல் ஆயம் புகன்று இழி அருவிஆரவாரத்தையுடைய மகளிர்கூட்டம் விரும்பி இறங்கும் அருவியினால்
மண்_உறு மணியின் தோன்றும்கழுவப்பட்ட நீலமணிபோல் தோன்றும்
தண் நறும் துறுகல் ஓங்கிய மலையேகுளிர்ந்த நறிய குத்துப்பாறை உயர்ந்துள்ள மலையினை.
  
# நக்கீரர்# நக்கீரர்
# 368 மருதம்# 368 மருதம்
மெல் இயலோயே மெல் இயலோயேமென்மையான தன்மையுடையவளே! மென்மையான தன்மையுடையவளே!
நன்_நாள் நீத்த பழி தீர் மாமைஒரு நல்லநாளில் நம்மைவிட்டுப்போன குற்றமற்ற மாமைநிறத்தின் இழப்பினை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்நமது ஆற்றலால் பொறுத்திருத்தலன்றி, அதனைச் சொற்களால்
சொல்லகிற்றாம் மெல் இயலோயேசொல்லமுடியாதிருந்தோம் மென்மையான தன்மையுடையவளே!
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கேஇனி, சிறியரும் பெரியரும் கலந்து வாழும் இந்த ஊரில்
நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்துஒவ்வொரு நாளும் இடைவிடாமல் வரும் செறிந்த நீரையுடைய வெள்ளத்தில்
இடி_கரை பெரு மரம் போலதிண்ணிய கரையில் நிற்கும் பெரிய மரம் போல
தீது இல் நிலைமை முயங்குகம் பலவேதீதற்ற நிலைமையில் (தலைவனைத்)தழுவுவோம் பலமுறை
  
# குடவாயில் கீர்த்தனார்# குடவாயில் கீர்த்தனார்
# 369 பாலை# 369 பாலை
அத்த வாகை அமலை வால் நெற்றுஅரிய வழியில் உள்ள வாகையின் ஒலியெழுப்பும் வெண்மையான நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பஉள்ளீடான பரல்கள் நிறைந்த சிலம்பு போன்று அதன் விதைகள் ஒலிக்க
கோடை தூக்கும் கானம்மேல்காற்று உயரஎழுப்பும் பாலைநிலத்தில்
செல்வாம் தோழி நல்கினர் நமரேதலைவனோடே செல்வோம் தோழி, அவர் இசைந்துவிட்டார்.
  
# வில்லக விரலினார்# வில்லக விரலினார்
# 370 முல்லை# 370 முல்லை
பொய்கை ஆம்பல் அணி நிற கொழு முகைபொய்கையில் உள்ள ஆம்பலின் அழகிய நிறத்தையுடைய கொழுத்த மொட்டுக்கள்
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடுவண்டுகள் ஊதுவதால் வாய்திறக்கும் குளிர்ந்த நீர்த்துறைகளைக் கொண்ட தலைவனோடு
இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின்சேர்ந்திருந்தால் இரண்டு உடலைப் பெற்றிருப்போம். அவனோடு படுத்திருக்கும்போது
வில் அக விரலின் பொருந்தி அவன்வில்லை அகப்படுத்திய விரல்களைப் போன்று ஒன்றிக்கிடந்து, அவனது
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமேநல்ல மார்பினில் சேர்ந்திருந்தால் ஓருடலே உடையவராவோம்.
  
# உறையூர் முதுகூத்தன்# உறையூர் முதுகூத்தன்
# 371 குறிஞ்சி# 371 குறிஞ்சி
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்கைவளையல்கள் நெகிழ்ந்துபோதலையும், மேனியில் பசலை பாய்தலையும்,
மை படு சிலம்பின் ஐவனம் வித்திமேகங்கள் படியும் மலைச்சரிவில் மலைநெல்லை விதைத்து
அருவியின் விளைக்கும் நாடனொடுஅருவிநீரால் விளைவிக்கும் நாட்டினனால்
மருவேன் தோழி அது காமமோ பெரிதேபெறமாட்டேன் தோழி! அதைச் செய்த காம நோயோ மிகப் பெரியது.
  
# விற்றூற்று மூதெயினனார்# விற்றூற்று மூதெயினனார்
# 372 குறிஞ்சி# 372 குறிஞ்சி
பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாயபனைமரத்தின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நெடிய மடல்கள் குருத்தோடு மறைந்துபோக
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைகடும் காற்று தொகுத்துவைத்த நீண்ட வெள்ளை மணற்குவியல்கள்
கணம்_கொள் சிமைய உணங்கும் கானல்கூட்டமான சிகரங்களையுடையவாய் வெயிலில் காயும் கடற்கரைச் சோலையில்
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி(இந்தச் சிகரங்களின்மேல்)கடலானது மேலெடுத்து வீசிய கருமணலான சேறு அருவியாய் இறங்கி
கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கைகூந்தலில் பெய்கின்ற மண்சேறுபோல் குவியப்பெற்ற குவியல்கள்
புலர் பதம் கொள்ளா அளவைஉலர்ந்த பதத்தை அடைவதற்கு முன்னர்
அலர் எழுந்தன்று இ அழுங்கல் ஊரேபழிச்சொல் எழுந்துவிட்டது இந்த ஆரவாரமுள்ள ஊரில்.
  
# மதுரை கொல்லன் புல்லன்# மதுரை கொல்லன் புல்லன்
# 373 குறிஞ்சி# 373 குறிஞ்சி
நிலம் புடைபெயரினும் நீர் திரிந்து பிறழினும்நிலம் இடம்பெயர்ந்தாலும், நீரானது தன் இயல்பில் மாறுபட்டு வேறொன்றாக ஆனாலும்
இலங்கு திரை பெரும் கடற்கு எல்லை தோன்றினும்ஒளிரும் அலைகளையுடைய பெரிய கடலுக்கு எல்லை தோன்றினாலும் (கெட முடியாத நட்பு),
வெம் வாய் பெண்டிர் கௌவை அஞ்சிகொடிய வாயினராகிய பெண்டிரின் பழிமொழிக்கு அஞ்சி
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர்என்ன கெடுதலை உடையதாகும்? தோழி! நீண்ட மயிரினையும்
கடும் பல் ஊக கறை விரல் ஏற்றைகடிய பல்லினையும் கொண்ட கருங்குரங்கின் கறைவாய்ந்த விரல்களையுடைய ஆண்குரங்கு
புடை தொடுபு உடையூ பூ நாறு பலவு கனிபக்கத்தில் தோண்டியதால் உடைந்த பூமணம் கமழும் பலாப்பழம்
காந்தள் அம் சிறுகுடி கமழும்காந்தள் நிறைந்த அழகிய சிறுகுடி முழுக்கக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பேஉயர்ந்த மலைநாட்டினனுடன் அமைந்த நம் நட்பு –
  
# உறையூர் பல்காயனார்# உறையூர் பல்காயனார்
# 374 குறிஞ்சி# 374 குறிஞ்சி
எந்தையும் யாயும் உணர காட்டிநம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்பமலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றேநல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன;
முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇவளைந்த சிறகுகளையுடைய தூக்கணங்குருவி
நீடு இரும் பெண்ணை தொடுத்தஉயரமான கருத்த பனைமரத்தில் கட்டிய
கூடினும் மயங்கிய மையல் ஊரேகூட்டைப் பார்க்கிலும் கதைபின்னிக்கொண்டிருந்த இந்த ஊரும் நம்மோடு ஒன்றிப்போயிற்று.
  
# 375 குறிஞ்சி# 375 குறிஞ்சி
அம்ம வாழி தோழி இன்று அவர்வாழ்க! தோழியே! இன்று நம் காதலர்
வாரார் ஆயினோ நன்றே சாரல்வராமலிருந்தால் நல்லது; மலைச்சரிவில்
சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்துசிறுதினை விளைந்த அகன்ற இடமுடைய பெரிய தினைப்புனத்தில்
இரவு அரிவாரின் தொண்டக_சிறுபறைஇரவில் கதிரறுப்பாரைப் போன்று தொண்டகச் சிறுபறை
பானாள் யாமத்தும் கறங்கும்நள்ளிரவான நடுச்சாமத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கும் –
யாமம் காவலர் அவியா மாறேஇரவுக்காவலர் உறங்காமலிருக்கும்பொருட்டு-
  
# படுமரத்து மோசி கொற்றன்# படுமரத்து மோசி கொற்றன்
# 376 நெய்தல்# 376 நெய்தல்
மன் உயிர் அறியா துன் அரும் பொதியில்உயர்ந்த உயிரினங்கள் அறியாத நெருங்குவதற்குக் கடினமான பொதிகை மலையில் உள்ள
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்பதெய்வங்களுடைய மலைப்பக்கங்களில் உள்ள சந்தனத்தைப் போன்று
வேனிலானே தண்ணியள் பனியேவேனிற்காலத்தில் குளிர்ச்சியையுடையவள்; பனிக்காலத்திலோ
வாங்கு கதிர் தொகுப்ப கூம்பி ஐயெனநீரினை வாங்கிக்கொள்ளும் சூரியனின் கதிர்கள் சுருங்குவதால் கூம்பி, அழகாக
அலங்கு வெயில் பொதிந்த தாமரைஅசையும் வெயிலை உள்பொதிந்த தாமரை மலரின்
உள் அகத்து அன்ன சிறு வெம்மையளேஉள்ளிடத்தைப் போன்று சிறிதளவு வெம்மையினையுடையவள்
  
# மோசி கொற்றன்# மோசி கொற்றன்
# 377 குறிஞ்சி# 377 குறிஞ்சி
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலையமலர் போன்ற அழகிய மையுண்ட கண்களின் சிறப்புமிக்க நலம் தொலைய,
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்வளையல்கள் அழகிய மென்மையான தோள்களில் நெகிழ்ந்துபோனபோதும்
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையேஎன் நோய்க்கு மாற்றான மருந்துஆகின்றது தோழி! உனக்குப் பொறுக்கமுடியவில்லையா?
அறிதற்கு அமையா நாடனொடுநம்மால் அறிந்துகொள்வதற்கு முடியாத தலைவனோடு
செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பேநாம் செய்துகொண்ட ஒரு சிறிய நல்ல நட்பு –
  
# கயமனார்# கயமனார்
# 378 பாலை# 378 பாலை
ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇயசூரியனையே காணாத மாண்புள்ள நிழல் படுவதாக;
மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய்மலையில் தொடங்கும் சிறிய வழியும், மணல் மிகப் பரவியதாய்
தண் மழை தலைய ஆகுக நம் நீத்துகுளிர்ந்த மழை பெய்வதாகவும் ஆகுக; நம்மைப் பிரிந்து
சுடர் வாய் நெடு வேல் காளையொடுஒளிவிடும் இலையைக் கொண்ட நெடிய வேலையுடைய தலைவனோடு
மட மா அரிவை போகிய சுரனேமடப்பம் உள்ள மாமைநிறமுள்ள நம் பெண் போகின்ற பாலைநிலத்தில் –
  
# 379 பாலை# 379 பாலை
இன்று யாண்டையனோ தோழி குன்றத்துஇன்று எங்கிருக்கின்றானோ? தோழி! குன்றினிலுள்ள
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடுபழைய குழியைத் தோண்டிய குறவன், கிழங்கோடு
கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன்இடம் அகன்ற தூய மணியையும் பெறுகின்ற நாட்டினனாகிய தலைவன்
அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடிஉன் அறிவு முதிர்ச்சியடையும் காலத்தில், செறிந்த வளையல்களையுடையாய்!
எம் இல் வருகுவை நீ எனஎமது இல்லத்துக்கு வருவாய் நீ என்று
பொம்மல் ஓதி நீவியோனேபொங்கிவரும் கூந்தலைத் தடவிக்கொடுத்தவன் –
  
# கருவூர் கதப்பிள்ளை# கருவூர் கதப்பிள்ளை
# 380 பாலை# 380 பாலை
விசும்பு கண் புதைய பாஅய் வேந்தர்வானத்தின் இடமெல்லாம் மறையப் பரவி, வேந்தர்கள்
வென்று எறி முரசின் நன் பல முழங்கிவெற்றியடைந்து ஒலிக்கின்ற முரசைப்போன்று நன்றாகப் பலமுறை முழங்கி
பெயல் ஆனாதே வானம் காதலர்மழையை நிற்காமல் பொழிகின்றது மேகம்; காதலர்,
நனி சேய் நாட்டர் நம் உன்னலரேமிகவும் தொலைவான நாட்டிலுள்ளார், நம்மை நினைத்துப்பாரார்,
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கையஎன்ன செய்வோம் தோழி? ஈங்கையிலுள்ள
வண்ண துய்ம் மலர் உதிரவண்ணங்களுள்ள பஞ்சுவிரிந்த மலர்கள் உதிரும்படி
முன்னர் தோன்றும் பனி கடு நாளேஇதோ நம் முன் வந்துவிட்டது பனி பெய்யும் கடுமையான நாட்கள்.
  
# 381 நெய்தல்# 381 நெய்தல்
தொல் கவின் தொலைந்து தோள் நலம் சாஅய்முன்பிருந்த அழகு தொலைந்துபோய், தோள்களின் நலமும் மெலிந்துபோய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாதுஅல்லலுற்ற நெஞ்சமொடு இரவிலும் தூங்காது,
பசலை ஆகி விளிவது-கொல்லோமேனியில் பசலை பரந்து அழிந்துகொண்டிருப்பது –
வெண்_குருகு நரலும் தண் கமழ் கானல்வெள்ளைக் கொக்குகள் ஒலியெழுப்பும் குளிர்ந்த மணங்கமழும் கடற்கரைச் சோலையில்
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கிபூக்கள் மிகுந்த சோலையில் உள்ள புதிய மலர்களைக் கலக்கி
விலங்கு திரை உடைதரும் துறைவனொடுகுறுக்கெழும் அலைகள் உடைகின்ற துறையைச் சேர்ந்த தலைவனோடு  
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனேஒளிர்கின்ற பற்கள் வெளித்தெரியும்படி சிரித்ததனால் உண்டான பலன்தான் –
  
# குறுங்கீரன்# குறுங்கீரன்
# 382 முல்லை# 382 முல்லை
தண் துளிக்கு ஏற்ற பைம் கொடி முல்லைகுளிர்ந்த மழைத்துளிகளை ஏற்றுக்கொண்ட பசிய கொடியுள்ள முல்லை
முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசைமொட்டுகள் வாய் திறந்தததனால் ஏற்பட்ட நறுமணம், புதரின்மேல்
பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞலபூக்கள் செறிந்திருக்கும் செம்முல்லையொடு தேன் மணக்கும்படி நெருங்கியிருக்க
வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்றுபுதிதாகப் பெய்கின்றது மழையே! இது திடீர்மழை இல்லை,
கார் இது பருவம் ஆயின்கார்காலத்து மழையே இது கார்ப்பருவம் என்றால்
வாராரோ நம் காதலோரேவந்திருக்கமாட்டாரோ நம் காதலர்?
  
# படுமரத்து மோசி கீரன்# படுமரத்து மோசி கீரன்
# 383 பாலை# 383 பாலை
நீ உடம்படுதலின் யான் தர வந்துநீ சரியென்று சொன்னதால், நான் கூட்டிவர வந்து
குறி நின்றனனே குன்ற நாடன்குறிப்பிட்ட இடத்தில் நிற்கின்றான் குன்றுகளைச் சேர்ந்த தலைவன்;
இன்றை அளவை சென்றைக்க என்றிஇன்றுமட்டும் போகட்டும் என்கிறாய்;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கஎன் கையும் காலும் செயலற்று வருந்த
தீ உறு தளிரின் நடுங்கிதீயில் இடப்பட்ட தளிரைப்போல் நடுங்குவதைத் தவிர
யாவதும் இலை யான் செயற்கு உரியதுவேவேறொன்றும் இல்லை நான் செய்யத்தக்கது.
  
# ஓரம்போகியார்# ஓரம்போகியார்
# 384 மருதம்# 384 மருதம்
உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள்உழுந்துக்காயின் நெற்றை அடிக்கும் தழும்பேறிய கோல்போன்ற கரும்பு வரைந்த பருத்த தோள்களையும்
நெடும் பல் கூந்தல் குறும் தொடி மகளிர்நீண்ட பலவான கூந்தலையும், குறிய வலையலையும் கொண்ட மகளிரின்
நலன் உண்டு துறத்தி ஆயின்பெண்மை நலத்தௌ நுகர்ந்துவிட்டி அவரைக் கைவிடுவாயின்
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளேமிகவும் நன்றாக இருக்கிறது தலைவனே! உனது வாக்குறுதிகள்!
  
# கபிலர்# கபிலர்
# 385 குறிஞ்சி# 385 குறிஞ்சி
பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலைபலாமரத்தில் பழுத்த பழங்களை நிறையத் தின்னும் கூட்டமான ஆண்குரங்குகள்
சிலை வில் கானவன் செம் தொடை வெரீஇநாணொலி எழுப்பும் வில்லையுடைய குறவனின் செம்மையான அம்புக்கு அஞ்சி
செரு உறு குதிரையின் பொங்கி சாரல்போர்க்களத்தில் இருக்கும் குதிரையைப் போன்று பொங்கியெழுந்து, மலைச் சரிவில்
இரு வெதிர் நீடு அமை தயங்க பாயும்பெரிய மூங்கிலின் நீண்ட கோல்கள் அசையும்படி பாயும்
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும்பெரிய மலைப்பக்கத்தையுடைய நம் தலைவன், என்றுமே
அன்றை அன்ன நட்பினன்அன்றிருந்ததைப் போன்ற நட்பையுடைவன்,
புதுவோர்த்து அம்ம இ அழுங்கல் ஊரேஎன் மணம்குறித்து வரும் புதியவர்களையுடையது இந்த ஆரவாரத்தையுடைய ஊர்.
  
# வெள்ளிவீதியார்# வெள்ளிவீதியார்
# 386 நெய்தல்# 386 நெய்தல்
வெண் மணல் விரிந்த வீ ததை கானல்வெள்ளை மணல் பரவிய மலர்கள் செறிந்துகிடக்கும் கடற்கரைச்சோலையில் உள்ள,
தண்ணம் துறைவன் தணவா ஊங்கேகுளிர்ந்த அழகிய கடல்துறையையுடைய தலைவன், நம்மைப் பிரியாத காலத்தில்
வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும்தூய அணிகலன்களையுடைய மகளிர் விழாவின்பொருட்டு அணிகலன்களைத் தொகுக்கின்ற
மாலையோ அறிவேன்-மன்னே மாலைமாலைக்காலத்தையே அறிந்திருந்தேன்; மலைக்காலமானது,
நிலம் பரந்து அன்ன புன்கணோடுநிலம் பரந்துகிடப்பதைப் போன்ற துன்பத்தோடே
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானேதனிமைத்துயரத்தையும் உடையது என்பதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
  
# கங்குல் வெள்ளத்தார்# கங்குல் வெள்ளத்தார்
# 387 முல்லை# 387 முல்லை
எல்லை கழிய முல்லை மலரபகற்பொழுது கழிய, முல்லை மலர,
கதிர் சினம் தணிந்த கையறு மாலைஞாயிறு தன் சினம் தணிந்த செயலற்ற இந்த மாலைப்பொழுதை
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின்உயிரை எல்லையாகக் கொண்டு நீந்திக்கழித்தேனென்றால்,
எவன்-கொல் வாழி தோழிஎன்ன பயன்? வாழ்க தோழியே!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதேஇரவாகிய வெள்ளம் கடலைக்காட்டிலும் பெரியதாக இருக்குமே!
  
# ஔவையார்# ஔவையார்
# 388 குறிஞ்சி# 388 பாலை
நீர் கால்யாத்த நிரை இதழ் குவளைநீரின் காலடியில் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் வரிசையான இதழ்களைக் கொண்ட குவளை மலர்
கோடை ஒற்றினும் வாடாது ஆகும்மேல்காற்று மோதினாலும் வாடிவிடாதாகும்;
கவணை அன்ன பூட்டு பொருது அசாஅகவண் கயிற்றைப் போன்ற கழுத்தில் மாட்டிய பூட்டுக்கயிறு தேய்த்தலால் வருந்தும்
உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்து அன்னஉமணர்களின் காளைகள் பூட்டிய வண்டிகளின் தொகுதியை வரிசையாக நிறுத்தினாற் போன்று தோன்றும்
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்உலர்ந்த கிளையைப் பிளக்கும் வலிமை இல்லாததினால்
யானை கை மடித்து உயவும்யானை தன் துதிக்கைகையை மடித்துக்கொண்டு வருந்தும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினேபாலைநிலமும் இனியதாகும் உம்மோடு வந்தால்-
  
# வேட்ட கண்ணன்# வேட்ட கண்ணன்
# 389 குறிஞ்சி# 389 குறிஞ்சி
நெய் கனி குறும்பூழ் காயம் ஆகநெய்யொழுகும் காடையின் கறியைக் குழம்பாக வைத்த
ஆர் பதம் பெறுக தோழி அத்தைஅருமையான உண்ணும் சோற்றினைப் பெறுவானாக , தோழி! 
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர்பெரிய மலைகளையுடைய நாட்டினன் மணமுடிக்க வருவான் எனக்கூறிய, அவன் எதிரே நின்றவனை
நன்றோ மகனே என்றனென்நலமோ மகனே என்றேன்;
நன்றே போலும் என்று உரைத்தோனேநலமே என்று உரைத்த அவன் –
  
# உறையூர் முதுகொற்றன்# உறையூர் முதுகொற்றன்
# 390 பாலை# 390 பாலை
எல்லும் எல்லின்று பாடும் கேளாய்ஞாயிறும் ஒளிமங்கிப்போயிற்று; முழக்கத்தைக் கேட்பாய்!
செல்லாதீமோ சிறு பிடி துணையேசெல்லவேண்டாம், சிறிய பெண்யானை போன்ற இவளின் துணைவனே!
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து எனபகைவரின் இடத்தில் கொள்ளும் சீற்றத்தைப் போல, வணிகர்கூட்டம் வந்து சேர்ந்ததாக
வளை அணி நெடு வேல் ஏந்திவளையை அணிந்த நெடிய வேலை ஏந்தி,
மிளை வந்து பெயரும் தண்ணுமை குரலேகாவற்காட்டில் வந்து மீள்கின்ற தண்ணுமை என்னும் முரசொலியின் – 
  
# பொன்மணியார்# பொன்மணியார்
# 391 முல்லை# 391 முல்லை
உவரி ஒருத்தல் உழாஅது மடியவெறுத்துப்போன ஆண்பன்றிகள் நிலத்தைக் கிளறாமல் சோம்பியிருக்க,
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்புள்ளிமான்கள் வெப்பத்தால் புழுங்கிய மழை நீங்கிய முல்லைநிலத்தில்
கடிது இடி உருமின் பாம்பு பை அவியவிரைந்து இடிக்கின்ற இடியால் பாம்புகளின் படம் மடங்கும்படி,
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றேஇடியுடன் கலந்து மழை இனிதாகப் பெய்தது;
வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர்அப்படிப் பெய்த பெரிய மழையைத் தொடர்ந்து, பிரிந்துறையும் மகளிர்
கையற வந்த பையுள் மாலைசெயலற்றுப்போக வந்த துன்பம் தரும் மாலைப்பொழுதில்
பூ சினை இருந்த போழ் கண் மஞ்ஞைபூக்களையுடைய கிளையில் இருந்த பிளவுபட்ட கண்களையுடைய மயில்கள்
தாம் நீர் நனம் தலை புலம்பபாய்கின்ற நீருள்ள அகன்ற இடத்தில் தனிமைத்துயரம் தோன்றும்படி
கூஉம் தோழி பெரும் பேதையவேகூவும் தோழி! மிக்க அறியாமையுடையன!
  
# தும்பிசேர் கீரனார்# தும்பிசேர் கீரனார்
# 392 குறிஞ்சி# 392 குறிஞ்சி
அம்ம வாழியோ மணி சிறை தும்பிவாழ்க! நீலமணி போன்ற சிறகுகளைக் கொண்ட தும்பியே!
நன் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டுநல்ல சொற்களைச் சொல்வதற்கு அச்சம் வேண்டாம்; தலைவரின் நாட்டிலுள்ள
அண்ணல் நெடு வரை சேறி ஆயின்மற்ற மலைகளைக்காட்டிலும் உயர்ந்த அந்த மலைக்குச் சென்றால்,
கடவை மிடைந்த துடவை அம் சிறுதினைகடமை மான்கள் நெருங்கி இருக்கும் தோட்டத்திலுள்ள அழகிய சிறுதினையில்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கைகளைக்கொத்தால் கொத்துவதால் எழுந்த நுண்ணிய புழுதி படிந்த களையெடுப்போரின் தங்கை
தமரின் தீராள் என்மோ அரசர்தம் வீட்டாரைவிட்டு இன்னும் விலகவில்லை என்று சொல்வாயாக! அரசர்களின்
நிரை செலல் நுண் தோல் போலவரிசையாகச் செல்லும் கேடயங்களைப் போல
பிரசம் தூங்கு மலை கிழவோற்கேதேன்கூடுகள் தொங்கும் மலையைச் சேர்ந்த தலைவருக்கு-
  
# பரணர்# பரணர்
# 393 மருதம்# 393 மருதம்
மயங்கு மலர் கோதை குழைய மகிழ்நன்கலந்து கோத்த மலர்களையுடைய மாலை குழைந்துபோகும்படியாக, தலைவன்
முயங்கிய நாள் தவ சிலவே அலரேதழுவிய நாட்கள் மிகச் சிலவே; அதனால் எழுந்த பழிச்சொல்லோ,
கூகை கோழி வாகை பறந்தலைகோட்டான்களாகிய கோழிகளையுடைய வாகை என்னும் போர்க்களத்தில்
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்பசும்பூண் பாண்டியனின் செயல்திறம் மிக்க அதிகன் என்பான்
களிறொடு பட்ட ஞான்றைதன் யானையோடு இறந்தபோது
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதேஒளிறும் வாள்களையுடைய கொங்கர் எழுப்பிய கூச்சலினும் பெரியது.
  
# குறியிறையார்# குறியிறையார்
# 394 குறிஞ்சி# 394 குறிஞ்சி
முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவிமுழந்தாளையுடைய கரிய பெண்யானையின் மெல்லிய தலையையுடைய கன்று
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்றகள் மிகுதியாக உள்ள பாக்கத்தில் உள்ள குறத்தி ஈன்ற
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடிகுட்டையான கைகளையுடைய புதல்வரோடு சுற்றிச்சுற்றி ஓடி,
முன்_நாள் இனியது ஆகி பின் நாள்முற்காலத்தில் இனியதாக இருந்து, பிற்காலத்தில்
அவர் தினை புனம் மேய்ந்து ஆங்குஅவரின் தினைப்புனத்தில் மேய்ந்ததைப் போல்
பகை ஆகின்று அவர் நகை விளையாட்டேபகையாகிப்போனது அவர்கூட நாம் விளையாடிய நகை விளையாட்டு.
  
# 395 பாலை# 395 பாலை
நெஞ்சே நிறை ஒல்லாதே அவரேஎன் நெஞ்சமோ, பொறுமையாயிரு என்று நான் சொல்வதைக் கேட்காது; தலைவரோ
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்நம்மிடத்தில் அன்பு இல்லாததினால் அருளை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை;
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரேஇரக்கமின்மையால் வலிந்து செல்லமுற்படுகிறார் –
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலபாம்பு விழுங்கும் திங்களுக்கு உதவமுடியாத உலகத்தோர் போல
களையார் ஆயினும் கண் இனிது படீஇயர்என் துன்பத்தைக் களைய முடியாவிட்டாலும் கண்ணை மூடி இனிதே தூங்குகிறார்;
அஞ்சல் என்மரும் இல்லை அந்தில்அஞ்சவேண்டாம் என்று சொல்பவரும் இல்லை; 
அளிதோ தானே நாணேஇரங்கத்தக்கது நாணம்!
ஆங்கு அவர் வதி_வயின் நீங்கப்படினேஅங்கே அவர் வசிக்கும் இடத்திற்கு நீங்கிச் சென்றால்-(நாணம் அழிந்துபோகும்)
  
# கயமனார்# கயமனார்
# 396 நெய்தல்# 396 நெய்தல்
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்பாலைப் பருகமாட்டாள்; பந்து விளையாட்டை விரும்பமாட்டாள்
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியேவிளையாட்டுத் தோழியருடன் விளையாடிக்கொண்டிருப்பவள், இப்பொழுதெல்லாம்
எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினைசுலபமானது என்று நினைக்கிறாள் போலும்! உலர்ந்த கிளைகளையுடைய
ஓமை குத்திய உயர் கோட்டு ஒருத்தல்ஓமை மரத்தைக் குத்திய ஏந்திய கொம்பினைக் கொண்ட ஆண்யானை
வேனில் குன்றத்து வெம் அறை கவாஅன்வேனில்காலத்து மலையின் வெப்பமிக்க பாறைகளுள்ள சரிவில்
மழை முழங்கு கடும் குரல் ஓர்க்கும்முகில்கள் முழங்கும் கடும் ஒலியை உற்றுக்கேட்கும்
கழை திரங்கு ஆரிடை அவனொடு செலவேமூங்கில்கள் வாடிப்போன செல்வதற்கரிய பாலைநிலத்தில் தலைவனோடு செல்லுதல் –
  
# அம்மூவன்# அம்மூவன்
# 397 நெய்தல்# 397 நெய்தல்
நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீஅரும்புகள் முதிர்ந்த ஞாழலின் தினைமணிகளைப் போன்ற திரண்ட பூக்கள்
நெய்தல் மா மலர் பெய்த போலநெய்தலின் பெரிய மலரில் பெய்தது போல
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்பகுளிர்காற்று தூவிவிடும் வலிய கடற்கரைத் தலைவனே!
தாய் உடன்று அலைக்கும்_காலையும் வாய்விட்டுதாய் மாறுபட்டுத் தன்னை வருத்திய பொழுதும் வாய்விட்டு,
அன்னாய் என்னும் குழவி போலஅம்மா என்று கூவும் குழந்தை போல
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்இன்னாதவற்றைச் செய்தாலும், இனியவற்றை அளித்தாலும்
நின் வரைப்பினள் என் தோழிஉன் எல்லைக்குட்பட்டவளே என் தோழி!
தன் உறு விழுமம் களைஞரோ இலளேதானுற்ற மிக்க துன்பத்தைக் களைவார் அவளுக்கு இல்லை.
  
# பாலை பாடிய பெருங்கடுக்கோ# பாலை பாடிய பெருங்கடுக்கோ
# 398 பாலை# 398 பாலை
தேற்றாம் அன்றே தோழி தண்ணெனநாம் அறிந்திலேம் தோழி! குளிரும்படி
தூற்றும் திவலை துயர் கூர் காலைதூவுகின்ற மழைத்துளியையுடைய துயரம் மிக்க பொழுதில்
கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர்கயல்மீனை ஒத்த மையுண்ட கண்களையுடைய பொன் குழைகளையுடைய மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டியதம் கையினால் நெய்யை வார்த்து ஏற்றிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலைவிளக்குகள் துயரத்தை உண்டாக்குவதற்குக் காரணமான துன்பத்தையுடைய மாலைப்பொழுதில்
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்புபெறுதற்கரிய தலைவர் வந்தாராக, விருந்து செய்து
மெய்ம் மலி உவகையின் எழுதருஉடம்பு பூரிக்கும் மகிழ்ச்சியினால் உண்டாகும்
கண் கலிழ் உகு பனி அரக்குவோரேகண்கள் கலங்கியதால் வீழ்கின்ற துளியைத் துடைப்போரை – 
  
# பரணர்# பரணர்
# 399 மருதம்# 399 மருதம்
ஊர் உண் கேணி உண்துறை தொக்கஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய
பாசி அற்றே பசலை காதலர்பாசியைப் போன்றது பசலைநோய்; காதலர்
தொடு_உழி தொடு_உழி நீங்கிதொடும்பொழுதெல்லாம் நீங்கி,
விடு_உழி விடு_உழி பரத்தலானேஅவர் விடும்பொழுதெல்லாம் மீண்டும் பரந்துவிடுகிறது.
  
# பேயனார்# பேயனார்
# 400 முல்லை# 400 முல்லை
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்றுதொலைவான வழியில் சென்றால், துன்பத்தை இன்றே
களைகலம் காமம் பெரும்_தோட்கு என்றுகளையமாட்டோம் காமநோயையுடைய பெரியதோளையுடைய தலைவிக்கு என்று 
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகிநல்லதை விரும்பி நினைத்த மனத்தையுடையவனாகி
முரம்பு கண் உடைய ஏகி கரம்பைபருக்கைக்கற்கள் நிறைந்த மேட்டுநிலப் பரப்பு நொறுங்கிப்போகும்படி சென்று, கரம்பை நிலத்தில்
புது வழி படுத்த மதி உடை வலவோய்புதுவழியை உண்டாக்கிய அறிவுடைய பாகனே!
இன்று தந்தனை தேரோஇன்று நீ கொண்டுவந்து சேர்த்தது தேரினையோ?
நோய் உழந்து உறைவியை நல்கலானேநோயினால்,வருந்தி வாழும் தலைவியை எனக்குத் தந்தாய்!
  
# அம்மூவன்# அம்மூவன்
# 401 நெய்தல்# 401 நெய்தல்  
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்அடப்பங்கொடியின் ஆராய்ந்தெடுத்த மலர்களைக் கலந்து, நெய்தல் மலரின்
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்நீண்ட மாலையை அணிந்த நீர் ஒழுகும் கூந்தலையுடைய
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டுவிளையாட்டு மகளிரைக் கண்டு அஞ்சி, நீரமுள்ள நண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்கடலைநோக்கி ஓடும் துறையையுடையவனான தலைவனொடு ஒரு நாள்
நக்கு விளையாடலும் கடிந்தன்றுசிரித்து விளையாடுதலையும் போக்கியது;
ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பேஇது வியப்புக்குரியது! அவனுடைய மேனியில் தோய்ந்த நட்பு.