| |
# குன்றியன் | # குன்றியன் |
# 301 குறிஞ்சி | # 301 குறிஞ்சி |
முழவு முதல்
அரைய தடவு நிலை பெண்ணை | முழவைப் போல
அடிமரத்தையுடைய வளைந்து நிற்கும் பனையின் |
கொழு மடல்
இழைத்த சிறு கோல் குடம்பை | கொழித்த மடல்களில்
செய்த சிறிய குச்சிகளையுடைய கூட்டில் |
கரும் கால்
அன்றில் காமர் கடும் சூல் | கரிய கால்களைக் கொண்ட
ஆண் அன்றிலை, அது விரும்பும் முதிய சூல்கொண்ட |
வயவு பெடை
அகவும் பானாள் கங்குல் | மசக்கைநோயால் வாடும்
பெண் அன்றில் அழைக்கும் நடுராத்திரியாகிய இரவில் |
மன்றம் போழும்
இன் மணி நெடும் தேர் | மன்றத்தைப்
பிளந்துகொண்டு வரும் இனிய மணியோசை கொண்ட நெடும்தேர் |
வாராது ஆயினும்
வருவது போல | வரவில்லையென்றாலும்,
வருவது போல |
செவி முதல்
இசைக்கும் அரவமொடு | செவியில் ஒலிக்கும்
சத்தத்தினால் |
துயில்
துறந்தனவால் தோழி என் கண்ணே | தூக்கத்தை விடுத்தன
தோழி! என் கண்கள். |
| |
# மாங்குடி
கிழார் | # மாங்குடி கிழார் |
# 302 குறிஞ்சி | # 302 குறிஞ்சி |
உரைத்திசின்
தோழி அது புரைத்தோ அன்றே | உரைப்பாய் தோழி! அது
உயர்வுடையதோ? இல்லையே! |
அரும் துயர்
உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை | பொறுத்தற்கரிய
பிரிவுத்துயரால் வருந்துவதற்கு ஆற்றலற்றுப்போனேன்; அதற்குமேலும் |
பெரும்பிறிது
ஆகல் அதனினும் அஞ்சுதும் | இறந்துபோவதை அதைக்
காட்டிலும் அஞ்சுகிறேன்; |
அன்னோ இன்னும்
நன் மலை நாடன் | அந்தோ! நான் இந்த நிலை
அடைந்த பின்னும், நல்ல மலையைச் சேர்ந்தவன் |
பிரியா
நண்பினர் இருவரும் என்னும் | பிரியா நட்புடையவர்கள்
இருவரும் என்னும் |
அலர் அதற்கு
அஞ்சினன்-கொல்லோ பலர் உடன் | பழிச்சொல்லிற்கு
அஞ்சினானோ? பலரும் ஒருங்கே |
துஞ்சு ஊர்
யாமத்தானும் என் | துயிலுகின்ற ஊரின்
நள்ளிரவிலும் என் |
நெஞ்சத்து
அல்லது வரவு அறியானே | நெஞ்சில் வருவதை அன்றி
நேரில் வருவதை அறியான். |
| |
# அம்மூவன் | # அம்மூவன் |
# 303 நெய்தல் | # 303 நெய்தல் |
கழி தேர்ந்து
அசைஇய கரும் கால் வெண்_குருகு | கழியில் இரை தெரிந்து
உண்டு இளைப்பாறிய கரிய காலையுடைய வெள்ளைக் கொக்கு |
அடைகரை தாழை
குழீஇ பெரும் கடல் | அடைத்தகரையில் உள்ள
தாழையில் குழுமி, பெரிய கடலின் |
உடை திரை
ஒலியின் துஞ்சும் துறைவ | உடைகின்ற அலையின்
ஆரவாரத்தில் உறங்கும் துறையைச் சேர்ந்தவனே! |
தொல் நிலை
நெகிழ்ந்த வளையன் ஈங்கு | தம் பழைய
நிலையினின்றும் நெகிழ்ந்த வளையல்களையுடையவளாய், இங்கு |
பசந்தனள்-மன்
என் தோழி என்னொடும் | பசலைநோய்வாய்ப்பட்டாள்
என் தோழி, என்னோடு |
இன் இணர்
புன்னை அம் புகர் நிழல் | இனிய கொத்துக்களையுடைய
புன்னையின் அழகிய புள்ளிகளையுடைய நிழலில் |
பொன் வரி அலவன்
ஆட்டிய ஞான்றே | பொன்னிறமான
வரிகளையுடைய நண்டுகளை அலைத்து விளையாடியபொழுதே – |
| |
# கணக்காயன்
தத்தன் | # கணக்காயன் தத்தன் |
# 304 நெய்தல் | # 304 நெய்தல் |
கொல் வினை
பொலிந்த கூர் வாய் எறி_உளி | கொல்லன் தொழிலால்
பொலிவுபெற்ற கூரிய வாயையுடைய எறியுளி |
முகம் பட
மடுத்த முளி வெதிர் நோன் காழ் | முகத்தில் படும்படி
கட்டப்பட்ட உலர்ந்த மூங்கிலின் வலிமையுள்ள கழியை, |
தாங்கு அரு
நீர் சுரத்து எறிந்து வாங்கு விசை | தாங்குதற்கரிய
நீர்வழியில் வீசிஎறிந்து, விசைத்து இழுக்கின்ற |
கொடும் திமில்
பரதவர் கோட்டு_மீன் எறிய | வளைந்த திமிலையுடைய
பரதவர் கொம்புடைய சுறாமீனைப் பிடிக்க, |
நெடும் கரை
இருந்த குறும் கால் அன்னத்து | நீண்ட கடற்கரையில்
இருந்த குறிய கால்களையுடைய அன்னத்தின் |
வெண் தோடு
இரியும் வீ ததை கானல் | வெளுத்த தொகுதி
அஞ்சிப்பறக்கின்ற பூக்கள் செறிந்த கடற்கரைச்சோலையினையும் |
கைதை அம் தண்
புனல் சேர்ப்பனொடு | தாழைகளையும் அழகிய
குளிர்ந்த நீர்நிலைகளையுமுடைய தலைவனோடு |
செய்தனெம் மன்ற
ஓர் பகை தரு நட்பே | செய்துகொண்டோம்
நிச்சயமாக, ஒரு பகையைத் தருகின்ற நட்பை- |
| |
# குப்பை
கோழியார் | # குப்பை கோழியார் |
# 305 மருதம் | # 305 மருதம் |
கண் தர வந்த
காம ஒள் எரி | கண்கள் தந்ததனால்
உண்டான இந்தக் காதலாகிய எரியும் நெருப்பு |
என்பு உற
நலியினும் அவரொடு பேணி | என் எலும்பையும்
பொருந்திச் சுட்டு வருத்துகின்ற போதும், அவரை விரும்பிச் |
சென்று நாம்
முயங்கற்கு அரும் காட்சியமே | சென்று நாம்
தழுவிக்கொள்ள முடியாமற்போனவளானேன்; |
வந்து அஞர்
களைதலை அவர் ஆற்றலரே | இங்கு வந்து என்
துன்பத்தைத் தீர்த்தற்கு அவராலும் இயலவில்லை! |
உய்த்தனர்
விடாஅர் பிரித்து இடை களையார் | ஏவிவிடுவாரும்
இல்லாமல், பிரித்துவிடுவாரும் இல்லாமல், |
குப்பை கோழி
தனி போர் போல | குப்பைக்கோழிகள்
தாமாகச் சண்டைபோட்டுக்கொள்வது போல |
விளிவு ஆங்கு
விளியின் அல்லது | (தாமாகத்)தணியும்போது
தணிவதல்லாமல் |
களைவோர் இலை
யான் உற்ற நோயே | நான் படும்
துன்பத்தைத் தீர்ப்பார் யாரும் இல்லையே!# குப்பை கோழியார் |
| |
# அம்மூவன் | # அம்மூவன் |
# 306 நெய்தல் | # 306 நெய்தல் |
மெல்லிய இனிய
மேவரு தகுந | மென்மையுடைய, இனிய,
விரும்பத்தக்க |
இவை மொழியாம்
என சொல்லினும் அவை நீ | சொற்களைச்
சொல்லமாட்டோம் என்று சொன்னாலும், அவற்றை நீ |
மறத்தியோ வாழி
என் நெஞ்சே பல உடன் | மற்ந்துவிட்டாயோ
வாழ்க! நெஞ்சமே! பலவும் ஒன்றுசேர்ந்து |
காமர் மாஅத்து
தாது அமர் பூவின் | அழகிய மாமரத்தின்
தாதுக்கள் நிறைந்த பூவின்மீது |
வண்டு வீழ்பு
அயரும் கானல் | வண்டுகள் விழுந்து
பொய்க்கும் கடற்கரைச் சோலைக்கும், |
தெண் கடல்
சேர்ப்பனை கண்ட பின்னே | தெள்ளிய
கடல்நீருக்கும் உரிய தலைவனைக் கண்ட பின்னர் |
| |
# கடம்பனூர்
சாண்டிலியன் | # கடம்பனூர்
சாண்டிலியன் |
# 307 பாலை | # 307 பாலை |
வளை உடைத்து
அனையது ஆகி பலர் தொழ | வளையலை உடைத்தது போல
ஆகி, பலரும் தொழ |
செம் வாய்
வானத்து ஐயென தோன்றி | சிவந்த இடத்தையுடைய
வானத்தில் விரைவாகத் தோன்றி |
இன்னம்
பிறந்தன்று பிறையே அன்னோ | இப்போது பிறந்தது
பிறை! அந்தோ! |
மறந்தனர்-கொல்லோ
தாமே களிறு தன் | மறந்துவிட்டார் போலும்
தாம்! ஆண்யானை தன் |
உயங்கு நடை மட
பிடி வருத்தம் நோனாது | வருந்திய நடையையுடைய
இளம் பெண்யானையின் வருத்தத்தைப் பொறுக்கமாட்டாமல் |
நிலை உயர்
யாஅம் தொலைய குத்தி | நிற்பதில் உயர்ந்த யா
மரம் அழியும்படி குத்தி |
வெண் நார்
கொண்டு கை சுவைத்து அண்ணாந்து | வெண்மையான பட்டையை
உரித்து, தன் துதிக்கையைச் சுவைத்துக்கொண்டு மேல்நோக்கி |
அழுங்கல்
நெஞ்சமொடு முழங்கும் | வருந்திய நெஞ்சத்தோடு
முழங்கும் |
அத்த நீள் இடை
அழ பிரிந்தோரே | பாலைவழியின் நீண்ட
இடையில் எம்மை அழவிட்டுப் பிரிந்துசென்றோர் – |
| |
# பெருந்தோள்
குறுஞ்சாத்தன் | # பெருந்தோள்
குறுஞ்சாத்தன் |
# 308 குறிஞ்சி | # 308 குறிஞ்சி |
சோலை வாழை சுரி
நுகும்பு இனைய | சோலை வாழையின் சுருண்ட
குருத்து தான் வருந்துமாறு |
அணங்கு உடை
இரும் தலை நீவலின் மதன் அழிந்து | தெய்வமேறிய தன் பெரிய
மத்தகத்தைத் தடவியதால், வலிமைகெட்டு |
மயங்கு
துயர்_உற்ற மையல் வேழம் | கலங்கிய துயரத்தை
அடைந்த மயக்கத்தையுடைய ஆண்யானை |
உயங்கு உயிர்
மட பிடி உலை புறம் தைவர | வருந்தியபடி
உயிர்க்கும் இளைய பெண்யானை தனது வருந்திய முதுகினைத் தடவிக்கொடுக்க, |
ஆம் இழி
சிலம்பின் அரிது கண்படுக்கும் | நீர் விழும்
மலைச்சரிவில் அரிதில் துயிலும் |
மா மலை நாடன்
கேண்மை | பெரிய மலையைச்
சேர்ந்தவனின் நட்பு |
காமம் தருவது
ஓர் கை தாழ்ந்தன்றே | நாம் விரும்பியவற்றை
நமக்குத் தரும் ஒரு நற்செயலில் வந்து நிற்கிறது. |
| |
# உறையூர்
சல்லியன் குமாரன் | # உறையூர் சல்லியன்
குமாரன் |
# 309 மருதம் | # 309 மருதம் |
கைவினை மாக்கள்
தம் செய்வினை முடி-மார் | களையெடுக்கும் மாந்தர்
தாம் செய்யும் தொழிலை முடிப்பதற்காக |
சுரும்பு உண
மலர்ந்த வாசம் கீழ்ப்பட | வண்டுகள்
மொய்ப்பதினால் மலர்ந்த மலரின் மணம் நிலத்தில் படும்படி |
நீடிய வரம்பின்
வாடிய விடினும் | நீண்ட வரப்பில்
வாடும்படி போட்டுவைத்தாலும் |
கொடியோர் நிலம்
பெயர்ந்து உறைவேம் என்னாது | கொடியவரின்
நிலத்தைவிட்டு வேறு நிலத்துக்குப்போய் வாழ்வோம் என்னாமல் |
பெயர்த்தும்
கடிந்த செறுவில் பூக்கும் | எடுத்துப்போட்டும்
தம்மைக் களைந்த கழனியில் பூக்கும் |
நின் ஊர்
நெய்தல் அனையேம் பெரும | உனது ஊரின் நெய்தலைப்
போன்றவள் நான், தலைவனே! |
நீ எமக்கு
இன்னாதன பல செய்யினும் | நீ எனக்கு இன்னாதன பல
செய்தாலும் |
நின் இன்று
அமைதல் வல்லாம் மாறே | உன்னை அன்றி இருக்கும்
வல்லமை எமக்கு இல்லை. |
| |
# பெருங்கண்ணன் | # பெருங்கண்ணன் |
# 310 நெய்தல் | # 310 நெய்தல் |
புள்ளும்
புலம்பின பூவும் கூம்பின | பறவைகள் தத்தம்
கூட்டுக்குள் சேர்ந்தன; பூக்கள் இதழ் குவிந்தன; |
கானலும்
புலம்பு நனி உடைத்தே வானமும் | கடற்கரைச் சோலையும்
தனிமையில் கிடக்கிறது; வானமும் |
நம்மே போலும்
மம்மர்த்து ஆகி | நம்மைப்போன்று
மயக்கமுடையதாகி, |
எல்லை கழிய
புல்லென்றன்றே | பகற்பொழுது கழிய
பொலிவிழந்து கிடக்கிறது; |
இன்னும் உளெனே
தோழி இ நிலை | இன்னும்
உயிர்வாழ்வேன், தோழி! இந்த நிலையை, |
தண்ணிய கமழும்
ஞாழல் | குளிர்ந்தனவாய்
மணங்கமழும் ஞாழல்களையுடைய |
தண்ணம்
துறைவற்கு உரைக்குநர் பெறினே | குளிர்ந்த அழகிய
கடல்துறையை உடையவர்க்கு எடுத்துக் கூறுவாரைப் பெற்றால்- |
| |
# சேந்தன்கீரன் | # சேந்தன்கீரன் |
# 311 நெய்தல் | # 311 நெய்தல் |
அலர் யாங்கு
ஒழிவ தோழி பெரும் கடல் | பழிச்சொற்கள் எவ்வாறு
ஒழியும்? பெரிய கடலின் |
புலவு நாறு
அகன் துறை வலவன் தாங்கவும் | புலால்நாற்றத்தையுடைய
அகன்ற துறையில் பாகன் தடுக்கவும் |
நில்லாது
கழிந்த கல்லென் கடும் தேர் | நிற்காமல் கடந்துசென்ற
கல்லென்னும் ஒலியைக் கிளப்பிக்கொண்டு விரைந்த தேரை |
யான் கண்டன்றோ
இலனே பானாள் | நான் பார்க்கவே இல்லை;
நண்பகலில் |
ஓங்கல் வெண்
மணல் தாழ்ந்த புன்னை | உயர்ந்து நிற்கும்
வெள்ளை மணலில் தாழ்ந்த புன்னைமரத்தின் |
தாது சேர்
நிகர் மலர் கொய்யும் | பூந்தாதுக்கள் சேர்ந்த
ஒளிபொருந்திய மலர்களைக் கொய்துகொண்டிருந்த |
ஆயம் எல்லாம்
உடன் கண்டன்றே | தோழிகள் எல்லாரும்
சேர்ந்து பார்த்தார்களே! |
| |
# கபிலர் | # கபிலர் |
# 312 குறிஞ்சி | # 312 குறிஞ்சி |
இரண்டு அறி
கள்வி நம் காதலோளே | இரண்டுவிதமாக
நடந்துகொள்ளும் கள்ளத்தன்மையுடையவள் நம் காதலி! |
முரண் கொள்
துப்பின் செ வேல் மலையன் | மாறுபாடு கொண்ட
வலிமையினையும், செம்மையான வேலினையும் உடைய மலையமானின் |
முள்ளூர் கானம்
நாற வந்து | முள்ளூர்
மலைக்காட்டின் மணத்தைப்போல் மணங்கமழ வந்து |
நள்ளென்
கங்குல் நம் ஓர் அன்னள் | நள்ளென்ற இரவில்
நம்மோடு ஒத்துப்போகிறாள்; |
கூந்தல்
வேய்ந்த விரவு மலர் உதிர்த்து | கூந்தலில் நாம்
சூட்டிய பலவாய்க் கலந்த மலர்களை உதிர்த்துவிட்டு |
சாந்து உளர்
நறும் கதுப்பு எண்ணெய் நீவி | மயிர்ச்சந்தனம்
இட்டுக் கோதிவிட்ட நறிய கூந்தலில்
எண்ணெய் தடவி |
அமரா முகத்தள்
ஆகி | நம்மைத்
தெரியாததுபோன்ற முகத்தவள் ஆகி |
தமர் ஓர்
அன்னள் வைகறையானே | தன் வீட்டாரைப் போல்
ஆகிவிடுகிறாள் விடிந்துவிட்டதும். |
| |
# 313 நெய்தல் | # 313 நெய்தல் |
பெரும் கடல்
கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
இருக்கும் சிறிய வெள்ளைக் கடற்காக்கை |
நீத்து நீர்
இரும் கழி இரை தேர்ந்து உண்டு | நீந்தக் கூடிய
நீரையுடைய பெரிய கழியில் இரையைத் தேடி உண்டு |
பூ கமழ்
பொதும்பர் சேக்கும் துறைவனோடு | பூ மணக்கும் சோலையில்
தங்கும் துறையைச் சேர்ந்த தலைவனோடு |
யாத்தேம்
யாத்தன்று நட்பே | எம்மைச்
இணைத்துக்கொண்டோம், இணைந்த நட்பினை |
அவிழ்த்தற்கு
அரிது அது முடிந்து அமைந்தன்றே | அவிழ்த்துவிட
முடியாது; அது முடிச்சிடப்பட்டு நன்றாக அமைந்துள்ளது. |
| |
# பேரிசாத்தன் | # பேரிசாத்தன் |
# 314 முல்லை | # 314 முல்லை |
சேய் உயர்
விசும்பின் நீர் உறு கமம் சூல் | நெடுந்தொலைவு உயர்ந்த
வானத்தில் நீர் மிக்க நிறைந்த சூலினையும் |
தண் குரல்
எழிலி ஒண் சுடர் இமைப்ப | குளிர்ச்சியையும்
முழக்கத்தையும் கொண்ட மேகம் ஒளிரும் மின்னல்களை இமைக்க |
பெயல் தாழ்பு
இருளிய புலம்பு கொள் மாலையும் | மழை இறங்கி இருண்ட
தனிமைகொண்ட மாலைப் பொழுதிலும் |
வாரார் வாழி
தோழி வரூஉம் | வரவில்லை, வாழ்க,
தோழியே! முளைத்தெழும் |
இன் உறல் இள
முலை ஞெமுங்க | இனிமை பொருந்திய இளம்
முலைகள் அழுந்தத் தழுவிக்கொள்ள – |
இன்னா வைப்பின்
சுரன் இறந்தோரே | இன்னல் மிக்க
இடங்களையுடைய பாலைநிலத்தைக் கடந்துசென்றோர் |
| |
# மதுரை
வேளாதத்தன் | # மதுரை வேளாதத்தன் |
# 315 குறிஞ்சி | # 315 குறிஞ்சி |
எழுதரு மதியம்
கடல் கண்டு ஆங்கு | எழுகின்ற திங்களைக்
கடலில் கண்டாற்போன்று |
ஒழுகு வெள்
அருவி ஓங்கு மலை நாடன் | வீழ்கின்ற வெள்ளிய
அருவியையுடைய உயர்ந்த மலை நாட்டினன் |
ஞாயிறு அனையன்
தோழி | ஞாயிற்றைப் போன்றவன்
தோழி! |
நெருஞ்சி அனைய
என் பெரும் பணை தோளே | நெருஞ்சி மலர்களை
ஒப்பன என் பெரிய மூங்கில் போன்ற தோள்கள். |
| |
# தும்பிசேர்
கீரன் | # தும்பிசேர் கீரன் |
# 316 நெய்தல் | # 316 நெய்தல் |
ஆய் வளை
ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும் | அழகிய வளையல்கள்
நெகிழ்ந்துபோகவும், தளர்ச்சி மேனியில் நிலைக்கவும் |
நோய் மலி
வருத்தம் அன்னை அறியின் | நோயால் மிக்க
வருத்தத்தை அன்னை அறிந்தால் |
உளெனோ வாழி
தோழி விளியாது | நான் இருக்கமாட்டேன்,
வாழ்க, தோழியே! இடைவிடாமல் |
உரவு கடல்
பொருத விரவு மணல் அடைகரை | வலிய கடல் மோதுகின்ற
மணல் விரவிக்கிடக்கும் அடைத்தகரையில் |
ஓரை மகளிர்
ஓராங்கு ஆட்ட | விளையாடும் மகளிர்
ஒன்றுசேர்ந்து அலைக்கழிக்க |
ஆய்ந்த அலவன்
துன்புறு துனை பரி | அதனால் மெலிந்த நண்டு
துன்புற்று விரைகின்ற ஓட்டத்தை |
ஓங்கு வரல்
விரி திரை களையும் | உயர்ந்து வரும்
விரிந்த கடலலை போக்கும் |
துறைவன் சொல்லோ
பிற ஆயினவே | கடல்துறையைச் சேர்ந்த
தலைவனின் சொல்லோ வேறுபட்டுப்போயின. |
| |
# மதுரை
கண்டரதத்தன் | # மதுரை கண்டரதத்தன் |
# 317 குறிஞ்சி | # 317 குறிஞ்சி |
புரி மட
மரையான் கரு நரை நல் ஏறு | விரும்புதற்குரிய இளைய
மரையானின் கரிய பெரிய நல்ல ஏறு |
தீம் புளி
நெல்லி மாந்தி அயலது | இனிய
புளிச்சுவையையுடைய நெல்லிக்காயைத் தின்று, அயலேயுள்ள |
தேம் பாய் மா
மலர் நடுங்க வெய்து_உயிர்த்து | தேனொழுகும் பெரிய
மலர்கள் நடுங்கும்படி பெருமூச்செறிந்து |
ஓங்கு மலை பைம்
சுனை பருகும் நாடன் | உயர்ந்த மலையிலுள்ள
பசிய சுனைநீரைப் பருகும் நாட்டையுடைய தலைவன் |
நம்மை விட்டு
அமையுமோ மற்றே கைம்மிக | நம்மை விட்டுப்
பிரிந்திருப்பாரோ, மிகுதியாக |
வட புல
வாடைக்கு அழி மழை | வடதிசையிலிருந்து
வரும் வாடைக்காற்றுக்கு அழிந்த மேகங்கள் |
தென் புலம்
படரும் தண் பனி நாளே | தெற்குத்திசை நோக்கிச்
செல்லுகின்ற குளிர்ந்த பனியையுடைய பருவத்தில் – |
| |
# அம்மூவன் | # அம்மூவன் |
# 318 நெய்தல் | # 318 நெய்தல் |
எறி சுறா
கலித்த இலங்கு நீர் பரப்பின் | எதிர்த்துத் தாக்கும்
சுறாமீன்கள் நிறைந்த ஒளிரும் நீர்ப் பரப்பில் |
நறு வீ ஞாழலொடு
புன்னை தாஅய் | மணமுள்ள பூக்களைக்
கொண்ட ஞாழலொடு, புன்னையின் மலர்கள் பரந்து |
வெறி அயர்
களத்தினின் தோன்றும் துறைவன் | வேலன் வெறியாடும்
களத்தைப் போல் தோன்றும் நாட்டினன் |
குறியான்
ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று | (மணம்
முடிக்க)நினையானாயினும், நினைப்பினும், வேறெதனையும் |
அறியாற்கு
உரைப்பலோ யானே எய்த்த இ | அறியாதவனுக்கு
உணர்த்துவேனோ நான்? மெலிந்துபோன இந்த |
பணை எழில் மென்
தோள் அணைஇய அ நாள் | மூங்கில் போன்ற
அழகுடைய மென்மையான தோள்களை அணைத்த அந்த நாளில் |
பிழையா
வஞ்சினம் செய்த | தவறாத வஞ்சினம் கூறிய |
கள்வனும்
கடவனும் புணைவனும் தானே | வஞ்சகனும், அதை
வாய்க்கச் செய்பவனும், நமக்குப் புகலிடமானவனும் அவன்தானே! |
| |
# தாயம் கண்ணன் | # தாயம் கண்ணன் |
# 319 முல்லை | # 319 முல்லை |
மான் ஏறு மட
பிணை தழீஇ மருள் கூர்ந்து | ஆண்மான்கள் தம்
மடப்பம் பொருந்திய பெண்மான்களைத் தழுவி, மயக்கம் மிக்கு |
கானம் நண்ணிய
புதல் மறைந்து ஒடுங்கவும் | காட்டில் சேர்ந்த
புதர்களில் மறைந்து ஒதுங்கவும், |
கை உடை நன் மா
பிடியொடு பொருந்தி | துதிக்கையையுடைய நல்ல
களிறுகள் தன் பெண்யானைகளோடு பொருந்தி |
மை அணி
மருங்கின் மலை_அகம் சேரவும் | முகில்களை அணிந்த
பக்கத்தையுடைய மலையில் சேரவும், |
மாலை வந்தன்று
மாரி மா மழை | மாலையில் வந்தது,
கார்காலத்துப் பெரிய மழை, |
பொன் ஏர் மேனி
நன் நலம் சிதைத்தோர் | பொன்போன்ற அழகிய
மேனியின் நல்ல நலத்தைச் சிதைத்தோராகிய தலைவர் |
இன்னும் வாரார்
ஆயின் | இன்னும்
வரவில்லையென்றால் |
என் ஆம் தோழி
நம் இன் உயிர் நிலையே | என்ன ஆகும் தோழி! நம்
இனிய உயிரின் நிலை? |
| |
# தும்பிசேர்
கீரன் | # தும்பிசேர் கீரன் |
# 320 நெய்தல் | # 320 நெய்தல் |
பெரும் கடல்
பரதவர் கோள்_மீன் உணங்கலின் | பெரிய கடலில் பரதவர்
கொண்ட மீன்களின் உலர்ந்த வற்றல், |
இரும் கழி
கொண்ட இறவின் வாடலொடு | இருண்ட கழியில் கொண்ட
இறாவின் வற்றலோடு |
நிலவு நிற வெண்
மணல் புலவ பலவுடன் | நிலவொளி போன்ற வெள்ளை
மணற்பரப்பு புலால்நாறும்படி பலவும் சேர்ந்து |
எக்கர்-தொறும்
பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் | மணல்மேடுகள்தோறும்
பரவிக்கிடக்கும் கடல்துறையைச் சேர்ந்த நம் தலைவனோடு ஒரு நாள் |
நக்கதோர்
பழியும் இலமே போது அவிழ் | சிரித்து விளையாடிய
பழியும் நமக்கில்லை; மொட்டுகள் விரிந்த |
பொன் இணர்
மரீஇய புள் இமிழ் பொங்கர் | பொன்னிற
பூங்கொத்துகளைச் சேர்ந்த பறவைகள் ஒலிக்கும் கிளைகளுள்ள |
புன்னை அம்
சேரி இ ஊர் | புன்னை மரங்கள்
சூழ்ந்த அழகிய சேரிகளையுடைய இந்த ஊரில் உள்ளோர் |
கொன் அலர்
தூற்றும் தன் கொடுமையானே | வீணே பழி தூற்றுவர்,
தம் கொடுமையான தன்மையினால். |
| |
# 321 குறிஞ்சி | # 321 குறிஞ்சி |
மலை செம்
சாந்தின் ஆர மார்பினன் | மலையில் உண்டாகிய
சிவப்புச் சந்தனத்தையும் முத்துமாலையையும் உடைய மார்பினன்; |
சுனை பூ குவளை
சுரும்பு ஆர் கண்ணியன் | சுனையில் பூத்த
குவளையில் வண்டுகள் மொய்க்கும் தலைமாலையையுடையவன்; |
நடுநாள் வந்து
நம் மனை பெயரும் | நள்ளிரவில் வந்து நம்
வீட்டுப்பக்கம் செல்வான் – |
மடவரல் அரிவை
நின் மார்பு அமர் இன் துணை | மடப்பம் உடைய பெண்ணே!
உன் நெஞ்சு விரும்பும் இனிய துணைவன்; |
மன்ற மரையா
இரிய ஏறு அட்டு | மன்றத்திலுள்ள
மரையாக்கள் அஞ்சியோட அவற்றின் ஏற்றினைக் கொன்று |
செம் கண் இரும்
புலி குழுமும் அதனால் | சிவந்த கண்ணையுடைய
பெரிய புலி முழங்கும்; அதனால் |
மறைத்தல்
காலையோ அன்றே | நம் காதலை மறைக்கும்
காலம் இதுவல்ல; |
திறப்பல் வாழி
வேண்டு அன்னை நம் கதவே | திறந்துவிடுவேன்,
வாழ்க! விரும்பிக்கேள் தலைவியே! நம் மனத்திலுள்ள இரகசியத்தை – |
| |
# ஐயூர் முடவன் | # ஐயூர் முடவன் |
# 322 குறிஞ்சி | # 322 குறிஞ்சி |
அமர் கண் ஆமான்
அம் செவி குழவி | அமர்த்த கண்களையுடைய
ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி |
கானவர் எடுப்ப
வெரீஇ இனம் தீர்ந்து | குறவர்கள்
விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி |
கானம் நண்ணிய
சிறுகுடி பட்டு என | காட்டின்கண்
சேர்ந்துள்ள சிறுகுடியில் அகப்பட்டுக்கொள்ள, |
இளையர் ஓம்ப
மரீஇ அவண் நயந்து | இளம்பெண்கள் அதனைப்
பேண, அவருடன் கலந்து, அவ்விடத்தை விரும்பி |
மனை உறை
வாழ்க்கை வல்லி ஆங்கு | வீட்டில் வாழும்
வாழ்க்கையைப் பற்றிக்கொண்டதைப்போல் |
மருவின்
இனியவும் உளவோ | பழக்கப்பட்டுப்போனால்
வேறு இனிமையுடையன உண்டோ? |
செல்வாம் தோழி
ஒல்வாங்கு நடந்தே | (தலைவன்
இருக்குமிடத்துக்குச்)செல்வோம் தோழி! இயன்ற அளவுக்கு நடந்து- |
| |
# பதடி வைகலார் | # பதடி வைகலார் |
# 323 முல்லை | # 323 முல்லை |
எல்லாம் எவனோ
பதடி வைகல் | மற்ற எல்லா நாட்களும்
என்ன பயனை உடையன? அவை வெற்று நாட்கள்; |
பாணர் படுமலை
பண்ணிய எழாலின் | பாணர்கள் படுமலை என்ற
பாலைப்பண்ணை வாசித்த யாழிசையைப் போன்று |
வானத்து
அஞ்சுவர நல் இசை வீழ | வானத்தில் அச்சம்
வரும்படியான நல்ல இசை முழங்க, |
பெய்த புலத்து
பூத்த முல்லை | மழை பெய்த புலத்தில்
பூத்த முல்லையின் |
பசு முகை தாது
நாறும் நறு நுதல் | பசிய மொட்டின்
பூந்தாது மணக்கும் நறிய நெற்றியையுடைய |
அரிவை தோள் அணை
துஞ்சி | காதலியின் தோளே
அணையாகக் கொண்டு உறங்கிக் |
கழிந்த நாள்
இவண் வாழும் நாளே | கழிந்த நாட்கள்
மட்டுமே இங்கு வாழ்கின்ற நாட்கள் – |
| |
# கவைமகன் | # கவைமகன் |
# 324 நெய்தல் | # 324 நெய்தல் |
கொடும் தாள்
முதலை கோள் வல் ஏற்றை | வளைந்த கால்களையுடைய
முதலையின் கொல்லுதலில் வல்ல ஆணானது |
வழி வழக்கு
அறுக்கும் கானல் அம் பெரும் துறை | வழியில் பிறர் செல்வதை
இல்லாமற்செய்யும் கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறையில் |
இன மீன் இரும்
கழி நீந்தி நீ நின் | திரளான மீன்களுள்ள
கரிய கழியை நீந்திக் கடந்து, நீ உனது |
நயன் உடைமையின்
வருதி இவள் தன் | அன்புடைமையால்
வருகிறாய்; இவள் தனது |
மடன் உடைமையின்
உவக்கும் யான் அது | அறியாமை உடைமையால்
மகிழ்கிறாள்; நானோ, அதற்கு, |
கவை_மக நஞ்சு
உண்டு ஆங்கு | இரட்டைப் பிள்ளைகள்
நஞ்சு உண்டதைப் போல் |
அஞ்சுவல் பெரும
என் நெஞ்சத்தானே | அஞ்சுகிறேன்,
பெருமானே! என் நெஞ்சத்தில்- |
| |
# நன்னாகையார் | # நன்னாகையார் |
# 325 நெய்தல் | # 325 நெய்தல் |
சேறும் சேறும்
என்றலின் பண்டை தம் | செல்வோம், செல்வோம்
என்று கூறியபோதெல்லாம், முன்பு அவரின் |
மாய செலவா
செத்து மருங்கு அற்று | பொய்யாகக் கூறிய பயணம்
என்று நினைத்து, என்னைவிட்டு |
மன்னி கழிக
என்றேனே அன்னோ | ஒரேயடியாகப்
போய்விடுங்கள் என்று கூறினேனே! அந்தோ! |
ஆசு ஆகு எந்தை
யாண்டு உளன்-கொல்லோ | நமக்குப் பிடிப்பாகிய
நம் தலைவர் எங்கு இருக்கிறாரோ? |
கரும் கால்
வெண்_குருகு மேயும் | கரிய காலைக் கொண்ட
வெள்ளைக்கொக்கு மேயும் |
பெரும் குளம்
ஆயிற்று என் இடை முலை நிறைந்தே | பெரிய குளம் ஆயிற்று
என் முலைகளின் இடைப்பகுதி. |
| |
# 326 நெய்தல் | # 326 நெய்தல் |
துணைத்த கோதை
பணை பெரும் தோளினர் | சேர்த்துக்கட்டப்பட்ட
மாலையை அணிந்த, மூங்கிலைப் போன்ற பெரிய தோளையுடைய |
கடல் ஆடு
மகளிர் கானல் இழைத்த | கடலில் விளையாடும்
மகளிர் கடற்கரைச் சோலையில் அமைத்த |
சிறு_மனை
புணர்ந்த நட்பே தோழி | மணல்வீட்டில்
சேர்ந்திருந்த நட்பு, தோழியே! |
ஒரு நாள்
துறைவன் துறப்பின் | ஒருநாள் தலைவன்
நம்மைப் பிரிந்திருந்தாலும் |
பல் நாள்
வரூஉம் இன்னாமைத்தே | பலநாட்களில் வரும்
துன்பத்தை உடையது. |
| |
# அம்மூவனார் | # அம்மூவனார் |
# 327 குறிஞ்சி | # 327 குறிஞ்சி |
நல்கின் வாழும்
நல்கூர்ந்தோர்_வயின் | தாம் அருள்கூர்ந்தால்
வாழ்கின்ற வறியோரிடம் |
நயன் இலர்
ஆகுதல் நன்று என உணர்ந்த | அன்பு இல்லாதவராதல்
நல்லதென்று உணர்ந்த |
குன்ற நாடன்
தன்னினும் நன்றும் | மலைநாட்டினனைக்
காட்டிலும், மிகவும் |
நின் நிலை
கொடிதால் தீம் கலுழ் உந்தி | உனது செயல்
கொடியதாகும்; இனிதான கலங்கியநீரைக் கொணரும் ஆறே! |
நம் மனை
மட_மகள் இன்ன மென்மை | நம் மனையிலுள்ள
இளையமகள் இன்னவாறான மெல்லிய |
சாயலள் அளியள்
என்னாய் | சாயலுடையவள்,
இரங்கத்தக்கவள் என்று பாராமல் |
வாழை
தந்தனையால் சிலம்பு புல்லெனவே | வாழைமரங்களைப்
பெயர்த்துக் கொணர்கிறாய், மலைச்சரிவுகள் பொலிவற்றுப்போக – |
| |
# பரணர் | # பரணர் |
# 328 நெய்தல் | # 328 நெய்தல் |
சிறு வீ ஞாழல்
வேர் அளை பள்ளி | சிறிய மலரையுடைய
ஞாழல்மரத்தின் வேரில் அமைக்கப்பட்ட வளையில் படுத்திருக்கும் |
அலவன் சிறு_மனை
சிதைய புணரி | நண்டினுடைய சிறிய வீடு
சிதையுமாறு, அலைகள் |
குணில் வாய்
முரசின் இரங்கும் துறைவன் | குறுந்தடியால்
அடிக்கப்பெறும் முரசைப்போல முழங்கும் துறையைச் சேர்ந்த தலைவன் |
நல்கிய நாள் தவ
சிலவே அலரே | அருள்புரிந்த நாட்கள்
மிகச் சிலவே!, இதனால் எழுந்த பழிச்சொல்லோ, |
வில் கெழு தானை
விச்சியர் பெருமகன் | விற்படையைக் கொண்ட
சேனைகளையுடைய விச்சியரின் தலைவன் |
வேந்தரொடு
பொருத ஞான்றை பாணர் | அரசர்களோடு
போரிட்டபோது, பாணர்களின் |
புலி நோக்கு
உறழ் நிலை கண்ட | புலிப்பார்வை போன்ற
நிலையினைக் கண்ட |
கலி கெழு
குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே | ஆரவாரமிக்க
குறும்பூர்க்காரர்கள் எழுப்பிய முழக்கத்தைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது. |
| |
# ஓதலாந்தையார் | # ஓதலாந்தையார் |
# 329 பாலை | # 329 பாலை |
கான இருப்பை
வேனில் வெண் பூ | காட்டிலுள்ள இலுப்பை
மரத்தின் வேனிற்காலத்து வெள்ளிய பூக்கள் |
வளி பொரு
நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்பு | காற்று மோதிய நீண்ட
கிளைகள் ஆடிஉதிர்த்ததனால் காம்புகள் கழலப்பெற்று |
களிறு வழங்கு
சிறு நெறி புதைய தாஅம் | களிறுகள் திரியும்
சிறிய வழிகள் புதைந்துபோகுமாறு பரவிக்கிடக்கும் |
பிறங்கு மலை
அரும் சுரம் இறந்தவர் படர்ந்து | ஒளிர்கின்ற
மலைகளையுடைய அரிய வழியைக் கடந்துசென்ற நம் தலைவரை நினைந்து |
பயில் இருள்
நடுநாள் துயில் அரிது ஆகி | மிக்க இருளையுடைய
நள்ளிரவில் தூக்கம் இல்லையாகி |
தெண் நீர்
நிகர் மலர் புரையும் | தெளிந்த நீரிலுள்ள
ஒளிவிடும் மலரைப் போன்ற |
நன் மலர் மழை
கணிற்கு எளியவால் பனியே | நல்ல மலராகிய
குளிர்ந்த கண்ணுக்கு எளிதாய்ப் பெருகுகின்றன நீர்த்துளிகள். |
| |
# கழார் கீரன்
எயிற்றியன் | # கழார் கீரன்
எயிற்றியன் |
# 330 மருதம் | # 330 மருதம் |
நல_தகை
புலைத்தி பசை தோய்த்து எடுத்து | பெண்மை நலமும் அழகும்
வாய்ந்த சலவைப்பெண், கஞ்சியில் தோய்த்து எடுத்து |
தலை புடை
போக்கி தண் கயத்து இட்ட | ஒருதரம் கல்லில்
அடித்து முடித்து, குளிர்ந்த குளத்தில் இட்ட, |
நீரின் பிரியா
பரூஉ திரி கடுக்கும் | நீரில் அலசிவிடாத
பருத்த ஆடையின் முறுக்கைப் போன்றிருக்கும் |
பேர் இலை
பகன்றை பொதி அவிழ் வான் பூ | பெரிய இலையைக் கொண்ட
பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள் |
இன் கடும்
கள்ளின் மணம் இல கமழும் | இனிமையும்,
கடுப்பையும் உடைய கள்ளைப் போன்று மணமின்றிக் கமழும் |
புன்கண்
மாலையும் புலம்பும் | துன்பத்தையுடைய மாலைப்
பொழுதும், அதன் தனிமைத் துயரும் |
இன்று-கொல்
தோழி அவர் சென்ற நாட்டே | இல்லையோ தோழி! அவர்
சென்ற நாட்டில். |
| |
# வாடா
பிரமந்தன் | # வாடா பிரமந்தன் |
# 331 பாலை | # 331 பாலை |
நெடும் கழை
திரங்கிய நீர் இல் ஆரிடை | நெடிய மூங்கில் வாடி
உலர்ந்துபோன நீரற்ற அரிய பாலைவெளியில் |
ஆறு செல்
வம்பலர் தொலைய மாறு நின்று | வழிச்செல்லும் பயணிகள்
அழியுமாறு அவரை எதிர்த்து நின்று |
கொடும் சிலை
மறவர் கடறு கூட்டுண்ணும் | வளைந்த வில்லையுடைய
மறவர்கள் காட்டில் கொள்ளைப்பொருளைப் பகிர்ந்துகொள்ளும் |
கடுங்கண் யானை
கானம் நீந்தி | கடுமையான யானைகள்
இருக்கும் பாலைநிலத்தைக் கடந்து |
இறப்பர்-கொல்
வாழி தோழி நறு வடி | செல்வாரோ தோழி! வாழ்க!
நறிய வடுவையும் |
பைம் கால்
மாஅத்து அம் தளிர் அன்ன | பசிய அடிமரத்தையும்
உடைய மா மரத்தின் அழகிய தளிர் போன்ற |
நன் மா மேனி
பசப்ப | நல்ல மாமைநிறமுள்ள
மேனியில் பசலை ஊர |
நம்மினும்
சிறந்த அரும் பொருள் தரற்கே | நம்மைக்காட்டிலும்
சிறந்த அரிய பொருளை ஈட்டுவதற்கு – |
| |
# மதுரை
மருதங்கிழார் மகன் இளம் போத்தன் | # மதுரை மருதங்கிழார்
மகன் இளம் போத்தன் |
# 332 குறிஞ்சி | # 332 குறிஞ்சி |
வந்த வாடை சில்
பெயல் கடை நாள் | வாடை வந்த சிறுமழை
பெய்யும் கடைசி யாமத்தில் |
நோய் நீந்து
அரும் படர் தீர நீ நயந்து | வருத்தத்தில்
உழல்கின்ற பொறுத்தற்கரிய துன்பம் நீங்கும்பொருட்டு, நீ விரும்பிக் |
கூறின் எவனோ
தோழி நாறு உயிர் | கூறினால் என்ன தோழி!
மணக்கும்படி மூச்சுவிடுகின்ற |
மட பிடி தழீஇ
தட கை யானை | இளைய பெண்யானையைத்
தழுவிக்கொண்டு, பெரிய கைகளையுடைய யானை |
குன்றக
சிறுகுடி இழிதரும் | குன்றின் அடிவாரத்தில்
இருக்கும் சிறுகுடிக்கு இறங்கிவரும் |
மன்றம் நண்ணிய
மலை கிழவோற்கே | மன்றங்கள் பொருந்திய
மலைநாட்டினனிடம் – |
| |
# உழுந்தினைம்
புலவன் | # உழுந்தினைம் புலவன் |
# 333 குறிஞ்சி | # 333 குறிஞ்சி |
குறும் படை
பகழி கொடு வில் கானவன் | குறிய ஆயுதமான
அம்பையும், வளைந்த வில்லையும் உடைய குறவனின் |
புனம் உண்டு
கடிந்த பைம் கண் யானை | தினைப்புனத்தை உண்டு
விரட்டப்பட்ட பசிய கண்ணையுடைய யானை |
நறும் தழை
மகளிர் ஓப்பும் கிள்ளையொடு | நறிய தழையணிந்த மகளிர்
ஓட்டும் கிளிகளோடு |
குறும்
பொறைக்கு அணவும் குன்ற நாடன் | குறிய பாறைகளாலான
மலையின் உச்சியை நோக்கிப்பார்க்கும் குன்ற நாட்டினன் |
பணி குறை
வருத்தம் வீட | மணம் புரியும் பணி
குறைப்பட்டதனால் ஏற்பட்ட வருத்தம் நீங்க, |
துணியின் எவனோ
தோழி நம் மறையே | துணிந்துவிட்டால் என்ன
தோழி! நம் இரகசியத்தை வெளிப்படுத்த – |
| |
# இளம் பூதனார் | # இளம் பூதனார் |
# 334 நெய்தல் | # 334 நெய்தல் |
சிறு_வெண்_காக்கை
செ வாய் பெரும் தோடு | சிறிய வெள்ளையான
கடற்காக்கையின் சிவந்த வாயையுடைய பெரிய கூட்டம் |
எறி திரை திவலை
ஈர்ம் புறம் நனைப்ப | வீசுகின்ற அலைகளின்
துளிகள் தம்முடைய ஈரமான முதுகை நனைப்பதால் |
பனி புலந்து
உறையும் பல் பூ கானல் | குளிர்ந்து வருந்தித்
தங்கியிருக்கும் பல பூக்களையுடைய கடற்கரைச் சோலையையுடைய |
இரு நீர்
சேர்ப்பன் நீப்பின் ஒரு நம் | பெரிய நீர்ப்பரப்பின்
தலைவன் பிரிந்து சென்றால், ஒன்றாகிய நமது |
இன் உயிர்
அல்லது பிறிது ஒன்று | இனிய உயிரை அல்லது
வேறு ஒன்று |
எவனோ தோழி நாம்
இழப்பதுவே | எதுவோ தோழி? நாம்
இழப்பதுவே – |
| |
# இருந்தையூர்
கொற்றன் புலவன் | # இருந்தையூர் கொற்றன்
புலவன் |
# 335 குறிஞ்சி | # 335 குறிஞ்சி |
நிரை வளை
முன்கை நேர் இழை மகளிர் | வரிசையான வளையல்களை
அணிந்த நேர்த்தியான அணிகலன்கள் அணிந்த மகளிர் |
இரும் கல்
வியல் அறை செந்தினை பரப்பி | கரிய மலையில் உள்ள
அகன்ற பாறையில் செந்தினையைப் பரப்பி |
சுனை பாய்
சோர்வு இடை நோக்கி சினை இழிந்து | சுனையில் பாய்ந்து
ஆடிய சோர்வுள்ள பொழுதை நோக்கி, கிளையிலிருந்து இறங்கி |
பைம் கண் மந்தி
பார்ப்பொடு கவரும் | பசிய கண்ணையுடைய
மந்தி, தன் குட்டியோடு கவர்ந்து உண்ணும் |
வெற்பு அயல்
நண்ணியதுவே வார் கோல் | மலைக்குச் சற்று
அப்பால் இருக்கிறது, நீண்ட அம்பினையும், |
வல் வில்
கானவர் தங்கை | வலிய வில்லினையும்
உடைய வேட்டுவரின் தங்கையாகிய |
பெரும் தோள்
கொடிச்சி இருந்த ஊரே | பெரிய தோளினைக்கொண்ட
நம் தலைவி இருந்த ஊர் – |
| |
# குன்றியன் | # குன்றியன் |
# 336 குறிஞ்சி | # 336 குறிஞ்சி |
செறுவர்க்கு
உவகை ஆக தெறுவர | வேண்டாதவருக்கு
மகிழ்ச்சி உண்டாக, நமக்குத் துன்பம் வர |
ஈங்ஙனம் வருபவோ
தேம் பாய் துறைவ | இவ்வாறு (இரவில்)
வருவாரும் உளரோ? தேன் பரவும் துறையையுடையவனே! |
சிறு நா ஒண்
மணி விளரி ஆர்ப்ப | சிறிய நாவினையுடைய
ஒளிரும் மணிகள் விளரிப்பண்ணை இசைப்ப |
கடு மா நெடும்
தேர் நேமி போகிய | விரையும் குதிரைகள்
பூட்டிய நெடிய தேரின் சக்கரம் அழுத்திய |
இரும் கழி
நெய்தல் போல | பெரிய கழியின்
நெய்தல்மலர் போல |
வருந்தினள்
அளியள் நீ பிரிந்திசினோளே | வருந்தினாள்,
இரங்கத்தக்கவள், நீ பிரிந்துசென்றவள். |
| |
# பொது கயத்து
கீரந்தையார் | # பொது கயத்து
கீரந்தையார் |
# 337 குறிஞ்சி | # 337 குறிஞ்சி |
முலையே முகிழ்
முகிழ்த்தனவே தலையே | முலைகள் முகிழாய்
முகிழ்த்தன; தலையின் |
கிளைஇய குரலே
கிழக்கு வீழ்ந்தனவே | கிளைத்த
கூந்தல்கொத்துக்கள் கீழே விழுந்து தொங்குகின்றன; |
செறி முறை வெண்
பலும் பறிமுறை நிரம்பின | செறிவாக அமைந்த
வெள்ளைப் பற்களும் விழுந்தெழுந்து நிற்கின்றன; |
சுணங்கும் சில
தோன்றினவே அணங்கு என | தேமலும் சில தோன்றின;
வருத்தும் தெய்வம் என |
யான் தன்
அறிவல் தான் அறியலளே | நான் அவளை அறிவேன்,
அதனை அவள் அறியாள்; |
யாங்கு
ஆகுவள்-கொல் தானே | எப்படி ஆவாளோ அவள்? |
பெரு முது
செல்வர் ஒரு மட_மகளே | பெரிய பழைய செல்வரின்
ஒப்பற்ற மடப்பத்தையுடைய மகள். |
| |
#
பெருங்குன்றூர் கிழார் | # பெருங்குன்றூர்
கிழார் |
# 338 குறிஞ்சி | # 338 குறிஞ்சி |
திரி மருப்பு
இரலை அண்ணல் நல் ஏறு | முறுக்கேறிய
கொம்புகளையுடைய இரலையாகிய தலைமைப்பண்புள்ள நல்ல ஆண்மான் |
அரி மட
பிணையோடு அல்கு நிழல் அசைஇ | மென்மையையும்
மடப்பத்தையும் கொண்ட பெண்மானோடு தங்குதற்குரிய நிழலில் ஓய்வெடுத்து |
வீ ததை வியல்
அரில் துஞ்சி பொழுது செல | பூக்கள் நெருங்கிய
அகன்ற பின்னிவளர்ந்த சிறுதூறில் துயின்று, ஞாயிறு மறைய |
செழும் பயறு
கறிக்கும் புன்கண் மாலை | செழுமையான பயற்றுப்
பயிரைக் கறித்துத்தின்னும் துன்பமுடைய மாலைப்பொழுதினையும் |
பின்பனி கடை
நாள் தண் பனி அற்சிரம் | பின்பனியுள்ள கடைசி
யாமத்தையும், குளிர்ந்த பனியையும் கொண்ட அற்சிரக்காலத்தில் |
வந்தன்று பெரு
விறல் தேரே பணை தோள் | வந்தது பெரிய
வெற்றியையுடைய தேர்! மூங்கிலைப் போன்ற தோள்களையும் |
விளங்கு நகர்
அடங்கிய கற்பின் | பொலிவுற்ற இல்லத்தில்
அடக்கமான கற்பினையும் உடைய |
நலம் கேழ்
அரிவை புலம்பு அசாவிடவே | பெண்மை நலம் பொருந்திய
தலைவியின் தனிமைத்துயர் நீங்கும்படி – |
| |
# பேயார் | # பேயார் |
# 339 குறிஞ்சி | # 339 குறிஞ்சி |
நறை அகில்
வயங்கிய நளி புன நறும் புகை | வாசனையையுடைய அகிலின்
வளமையாகச் செறிந்த தினைப்புனத்தில் எழுந்த நறிய புகை |
உறை அறு மையின்
போகி சாரல் | துளிகள் அற்ற
மேகத்தைப் போலச் சென்று, மலைச்சாரலிலுள்ள |
குறவர்
பாக்கத்து இழிதரும் நாடன் | குறவர் குடியிருப்பில்
இறங்கும் நாட்டினனாகிய தலைவன் |
மயங்கு மலர்
கோதை நன் மார்பு முயங்கல் | பலவகை மலர்கள் கலந்த
மாலையை அணிந்த நல்ல மார்பைத் தழுவுதல் |
இனிது-மன் வாழி
தோழி மா இதழ் | இனியதாயிற்று வாழ்க
தோழி! பெரிய இதழ்களைக் கொண்ட |
குவளை உண்கண்
கலுழ | குவளை மலரைப் போன்ற
மையுண்ட கண்கள் கண்ணீர்விட |
பசலை ஆகா
ஊங்கலங்கடையே | பசலை உண்டாவதற்கு
முன்பு |
| |
# அம்மூவன் | # அம்மூவன் |
# 340 நெய்தல் | # 340 நெய்தல் |
காமம் கடையின்
காதலர் படர்ந்து | காதல் மிகும்போது
காதலரை நினைத்துச் சென்று, |
நாம் அவர்
புலம்பின் நம்மோடு ஆகி | நாம் அவரிடத்தே
வருந்தும்போது நம்மோடு ஆகி, |
ஒரு பால்
படுதல் செல்லாது ஆயிடை | ஒரு பக்கமாகச் சேர்தல்
இல்லாது, இரண்டு பக்கமுமாக, |
அழுவம் நின்ற
அலர் வேய் கண்டல் | கடற்கரைப் பரப்பில்
நின்ற மலர்கள் நிறைந்த தாழை |
கழி பெயர்
மருங்கின் ஒல்கி ஓதம் | கழிநீர் ஓடிய பக்கத்தே
வளைந்து, பொங்கும் கடல்நீர் |
பெயர்தர
பெயர்தந்து ஆங்கு | மீண்டுவரும்போது
தானும் மீண்டுநின்றாற்போல |
வருந்தும் தோழி
அவர் இருந்த என் நெஞ்சே | வருந்தும் தோழி!
தலைவர் இருந்த என் நெஞ்சம். |
| |
# மிளைகிழான்
நல் வேட்டன் | # மிளைகிழான் நல்
வேட்டன் |
# 341 நெய்தல் | # 341 நெய்தல் |
பல் வீ படரிய
பசு நனை குரவம் | பல பூக்கள் தோன்றிய
பசிய அரும்புகளையுடைய குராமரம் |
பொரி பூ
புன்கொடு பொழில் அணி கொளாஅ | நெற்பொரி போன்ற
பூக்களையுடைய புங்கைமரத்தோடு சோலையிடத்தில் அழகைக் கொண்டு |
சினை இனிது
ஆகிய_காலையும் காதலர் | கிளைகள் காண்பதற்கு
இனிதாக இருக்கின்ற இப் பருவத்திலும், காதலர் |
பேணார் ஆயினும்
பெரியோர் நெஞ்சத்து | தம் சொல்லைக்
காவாராயினும், பெரியோர்களின் நெஞ்சத்தில் |
கண்ணிய ஆண்மை
கடவது அன்று என | கருதிய ஆண்மைச்
செயல்கள் நிறைவேற்றப்படுவது இல்லை என்று |
வலியா நெஞ்சம்
வலிப்ப | முன்னர்த் தெளிவாகாத
என் நெஞ்சம் இப்போது தெளிவடைய, |
வாழ்வேன் தோழி
என் வன்கணானே | வாழ்கின்றேன் தோழி என்
மனவுரத்தாலே. |
| |
# காவிரிப்பூம்
பட்டினத்து கந்தரத்தனார் | # காவிரிப்பூம்
பட்டினத்து கந்தரத்தனார் |
# 342 குறிஞ்சி | # 342 குறிஞ்சி |
கலை கை தொட்ட
கமழ் சுளை பெரும் பழம் | ஆண்குரங்கு கையால்
தோண்டிய கமழ்கின்ற சுளையைக் கொண்ட பெரிய பலாப்பழத்தைக் |
காவல் மறந்த
கானவன் ஞாங்கர் | காக்க மறந்த குறவன்,
அதன் பின்னர் |
கடி உடை
மரம்-தொறும் படு வலை மாட்டும் | மணமுள்ள மரங்கள்தோறும்
குரங்குகள் மாட்டிக்கொள்ள வலையை மாட்டும் |
குன்ற நாட
தகுமோ பைம் சுனை | குன்றைச் சேர்ந்த
தலைவனே! உனக்குத் தகுமோ? பசிய சுனையில் தோன்றிய |
குவளை தண் தழை
இவள் ஈண்டு வருந்த | குவளைப்பூக்களையும்
குளிர்ந்த தழைகளையும் கட்டிய இவள் இங்கு வருந்த |
நயந்தோர்
புன்கண் தீர்க்கும் | உன்னை
விரும்பியவர்களின் துன்பத்தைத் தீர்க்கும் |
பயம் தலைப்படா
பண்பினை எனினே | பயனேதுமற்ற
பண்புடையவனாக இருந்தால் – |
| |
# ஈழத்து பூதன்
தேவன் | # ஈழத்து பூதன் தேவன் |
# 343 பாலை | # 343 பாலை |
நினையாய் வாழி
தோழி நனை கவுள் | நினைத்துப்பார் வாழ்க
தோழி! மதத்தால் நனைந்த கன்னத்தையுடைய |
அண்ணல் யானை
அணி முகம் பாய்ந்து என | தலைமைப் பண்புள்ள
யானையின் அழகிய முகத்தில் பாய்ந்ததாக, |
மிகு வலி இரும்
புலி பகு வாய் ஏற்றை | மிகுந்த வலிமைகொண்ட
பெரிய புலியின் பிளந்த வாயையுடைய ஆண் |
வெண் கோடு செம்
மறு கொளீஇய விடர் முகை | யானையின் வெள்ளையான
கொம்புகள் சிவந்த கறை கொள்ள, பிளவுபட்ட குகையிலுள்ள |
கோடை ஒற்றிய
கரும் கால் வேங்கை | மேல்காற்றால்
வீழ்த்தப்பட்ட கரிய அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின் |
வாடு பூ
சினையின் கிடக்கும் | வாடிய பூக்களைக் கொண்ட
கிளையைப் போல் இறந்து கிடக்கும் |
உயர் வரை
நாடனொடு பெயரும் ஆறே | உயர்ந்த மலைகளையுடைய
நாட்டினனோடு செல்லும் வழியை – |
| |
# குறுங்குடி
மருதன் | # குறுங்குடி மருதன் |
# 344 முல்லை | # 344 முல்லை |
நோற்றோர் மன்ற
தோழி தண்ணென | தவம் செய்தவர் ஆவர்,
நிச்சயமாக, தோழி! குளிரும்படி |
தூற்றும் துவலை
பனி கடும் திங்கள் | தூற்றும் துளிகளாகிய
பனியையுடைய கடுமையான திங்கள்களில் |
புலம் பயிர்
அருந்த அண்ணல் ஏற்றொடு | மேய்புலங்களில் பயிரை
மேய்வதற்கு, தலைமைப் பண்புள்ள காளைகளுடன் |
நிலம் தூங்கு
அணல வீங்கு முலை செருத்தல் | நிலத்தில் தோயும்படி
தாழ்ந்த கழுத்துத்தசைகளையும், வீங்கிய மடிகளையும் கொண்ட பசுக்கள் |
பால் வார்பு
குழவி உள்ளி நிரை இறந்து | பாலை ஒழுகவிட்டு, தம்
கன்றுகளை நினைத்து, தம் கூட்டத்தைவிட்டு விலகி |
ஊர் வயின்
பெயரும் புன்கண் மாலை | ஊரை நோக்கிச் செல்லும்
துன்பந்தரும் மாலைப்பொழுதில் |
அரும் பெறல்
பொருள்_பிணி போகி | அரிதில் பெறக்கூடிய
பொருளீட்டத்துக்காகச் சென்று |
பிரிந்து உறை
காதலர் வர காண்போரே | பிரிந்து வாழும்
காதலர் திரும்பிவரக் காண்போர் – |
| |
# அண்டர் மகன்
குறுவழுதி | # அண்டர் மகன்
குறுவழுதி |
# 345 நெய்தல் | # 345 நெய்தல் |
இழை அணிந்து
இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர் | அணிகலன்கள் அணிந்து
இயங்கிவரும் கொடுஞ்சியையுடைய நெடிய தேரை |
வரை மருள் நெடு
மணல் தவிர்த்தனிர் அசைஇ | மலையைப் போன்ற நெடிய
மணற்குவியலில் நிறுத்திவைத்து, இளைப்பாறித் |
தங்கினிர்
ஆயின் தவறோ தகைய | தங்கியிருந்தால் அது
தவறோ? தகைமையுடையவரே! |
தழை தாழ்
அல்குல் இவள் புலம்பு அகல | தழையுடை
தாழ்ந்திருக்கும் அல்குலையுடைய இவளின் தனிமைத்துயரம் நீங்கும்படி |
தாழை தைஇய
தயங்கு திரை கொடும் கழி | தாழை உடுத்திய
அசைவாடும் அலைகளைக் கொண்ட வளைந்த கழி |
இழுமென
ஒலிக்கும் ஆங்கண் | இழும்-என ஒலிக்கும்
அவ்விடத்தில் |
பெரு_நீர் வேலி
எம் சிறு நல் ஊரே | கடலை வேலியாக உள்ள
எமது சிறைய நல்ல ஊரில் |
| |
# வாயில்
இளங்கண்ணன் | # வாயில் இளங்கண்ணன் |
# 346 குறிஞ்சி | # 346 குறிஞ்சி |
நாகு பிடி
நயந்த முளை கோட்டு இளம் களிறு | இளமையான பெண்யானையை
விரும்பிய முளைத்தெழும் கொம்புகளையுடைய இளம் ஆண்யானை |
குன்றம் நண்ணி
குறவர் ஆர்ப்ப | குன்றத்தைச் சேர்ந்து,
அங்குள்ள குறவர்கள் ஆரவாரிக்க |
மன்றம் போழும்
நாடன் தோழி | ஊரிலுள்ள பொதுமன்றத்தை
ஊடுறுவிப்போகும் நாட்டினன், தோழி! |
சுனை பூ குவளை
தொடலை தந்தும் | சுனையில் மலர்ந்த
குவளைமலர் மாலையைத் தொடுத்துத்தந்தும், |
தினை புன
மருங்கில் படு கிளி ஓப்பியும் | தினைப்புனத்தின்
பக்கத்தில் விழுகின்ற கிளிகளை ஓட்டியும், |
காலை வந்து
மாலை பொழுதில் | காலையில் வந்து,
மாலைப் பொழுதில் |
நல் அகம்
நயந்து தான் உயங்கி | நமது நல்ல மார்பினை
விரும்பி, தான் வருந்தி |
சொல்லவும்
ஆகாது அஃகியோனே | அதனை நமக்குச்
சொல்லவும் இயலாமல் மனம்குன்றினான். |
| |
# காவிரி பூம்
பட்டினத்து சேந்தன் கண்ணன் | # காவிரி பூம்
பட்டினத்து சேந்தன் கண்ணன் |
# 347 பாலை | # 347 பாலை |
மல்கு சுனை
உலர்ந்த நல்கூர் சுர முதல் | நீர் பெருகும் சுனைகள்
வற்றிப்போன வறண்ட பாலைநிலத்தின் தொடக்கத்தில் |
குமரி வாகை
கோல் உடை நறு வீ | இளம் வாகைமரத்தின்
காம்புடைய நறிய பூக்கள் |
மட மா தோகை
குடுமியின் தோன்றும் | மடப்பத்தையுடைய பெரிய
ஆண்மயிலின் உச்சிக்குடுமியைப் போல் தோன்றும் |
கான நீள் இடை
தானும் நம்மொடு | காடாகிய நீண்ட
வெளியில் தானும் நம்மோடு |
ஒன்று மணம்
செய்தனள் இவள் எனின் | சேரும் முயங்குவதாகிய
மணத்தைச் செய்வாள் இவள் எனின் |
நன்றே நெஞ்சம்
நயந்த நின் துணிவே | நல்லது நெஞ்சமே!
விரும்பிய உன் முடிவு. |
| |
# மாவளத்தன் | # மாவளத்தன் |
# 348 பாலை | # 348 பாலை |
தாமே செல்ப
ஆயின் கானத்து | தாம் மட்டுமே
செல்வாராயின், காட்டினில் |
புலம் தேர்
யானை கோட்டு இடை ஒழிந்த | மேய்புலத்தைத்
தேடித்திரியும் யானையின் கொம்புகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட |
சிறு வீ முல்லை
கொம்பின் தாஅய் | சிறிய பூக்களைக் கொண்ட
முல்லைக் கிளையைப் போல் பரவி |
இதழ் அழிந்து
ஊறும் கண்பனி மதர் எழில் | இமையின் விளிம்பைக்
கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளி, மதர்த்த அழகினையுடைய |
பூண் அக வன்
முலை நனைத்தலும் | பூண்களின் அகத்தே
இருக்கும் அழகிய முலையை நனைக்கின்றதனையும் |
காணார்-கொல்லோ
மாண்_இழை நமரே | பார்க்கமாட்டாரோ?
சிறந்த அணிகலன்களை அணிந்தவளே! நம் தலைவர் – |
| |
# சாத்தன் | # சாத்தன் |
# 349 நெய்தல் | # 349 நெய்தல் |
அடும்பு அவிழ்
அணி மலர் சிதைஇய மீன் அருந்தி | அடப்பங்கொடியின்
அவிழ்ந்த அழகிய மலர் சிதையும்படி, மீனைத் தின்று |
தடம் தாள் நாரை
இருக்கும் எக்கர் | வளைந்த காலையுடைய
நாரைகள் இருக்கும் மணல்மேட்டையுடைய |
தண்ணம் துறைவன்
தொடுத்து நம் நலம் | கடல்துறையையுடைய
தலைவனைத் தொடர்ந்துசென்று நாம் இழந்த நமது பெண்மை நலத்தைப் |
கொள்வாம் என்றி
தோழி கொள்வாம் | பெற்றுக்கொள்வோம்
என்று கூறுகிறாய், தோழியே! அப்படியே கொள்வோம், |
இடுக்கண் அஞ்சி
இரந்தோர் வேண்டிய | தமக்கு இன்னல் வருமே
என்று அஞ்சி, கேட்பவர் வேண்டியவற்றைக் |
கொடுத்து அவை
தா என கூறலின் | கொடுத்துவிட்டு,
பின்னர் அவற்றைத் தா என்று கூறுவதனிலும் |
இன்னாதோ நம்
இன் உயிர் இழப்பே | இன்னாததோ நம் இனிய
உயிரை இழத்தல்? |
| |
# ஆலந்தூர்
கிழார் | # ஆலந்தூர் கிழார் |
# 350 பாலை | # 350 பாலை |
அம்ம வாழி தோழி
முன் நின்று | வாழ்க! தோழியே!
தலைவரின் முன்னே நின்று |
பனி
கடும்-குரையம் செல்லாதீம் என | குளிரின் கடுமையினால்
பாதிக்கப்பட்டோம், செல்லாதீர் என்று |
சொல்லினம்
ஆயின் செல்வர்-கொல்லோ | சொல்லியிருந்தால்
சென்றிருப்பாரோ? |
ஆற்று அயல்
இருந்த இரும் கோட்டு அம் சிறை | வழிக்குச் சற்று
அப்பால் இருந்த பெரிய மரக்கிளைகளில் இருக்கும் அழகிய சிறகுகளையும் |
நெடும் கால்
கணந்துள் ஆள் அறிவுறீஇ | நெடிய கால்களையும்
கொண்ட கணந்துள் பறவை, ஆறலைக்கள்வரின் இருப்பை அறிவித்து |
ஆறு செல்
வம்பலர் படை தலைபெயர்க்கும் | வழிச்செல்லும் புதிய
பயணிகள் கூட்டத்தை இடம் மாறச் செய்யும் |
மலை உடை கானம்
நீந்தி | மலைகளையுடைய
பாலைநிலத்தைக் கடந்து |
நிலையா
பொருள்_பிணி பிரிந்திசினோரே | நிலையாத பொருளை
ஈட்டுவதற்காகப் பிரிந்துசென்றோர் – |
| |
| |