Select Page
சொற்பிரிப்பு மூலம்அடிநேர் உரை
  
# பாரதம் பாடிய பெருந்தேவனார்# பாரதம் பாடிய பெருந்தேவனார்
# 0 கடவுள் வாழ்த்து  # 0 கடவுள் வாழ்த்து  
தாமரை புரையும் காமர் சேவடிதாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடிகளையும்,
பவழத்து அன்ன மேனி திகழ் ஒளிபவழத்தைப் போன்ற மேனியையும், திகழ்கின்ற  ஒளியையும்,
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்குன்றிமணி போன்ற உடையையும், குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்நெஞ்சு பிளக்கும்படியாக எறிந்த அழகிய சுடர்விடும் நீண்ட வேலையும்,
சேவல் அம் கொடியோன் காப்ப                        5சேவல் வரைந்த அழகிய கொடியையும் உடையோன் காத்து அருளுவதால்                 5
ஏம வைகல் எய்தின்றால் உலகேஇனிமையான வாழ்வை எய்திநிற்கின்றன உலகத்து உயிர்கள்.
  
# திப்புத்தோளார்# திப்புத்தோளார்
# 1 குறிஞ்சி# 1 குறிஞ்சி
செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்தபோர்க்களம் சிவப்பாகும்படி கொன்று அசுரர்களை அழித்த
செம் கோல் அம்பின் செம் கோட்டு யானைசிவந்த கோலையுடைய அம்பினையும், சிவந்த கொம்புகளையுடைய யானையையும்
கழல் தொடி சேஎய் குன்றம்காலில் வீரக்கழலையும் தோளில் தொடியையும் கொண்ட முருகனின் குன்றம்
குருதி பூவின் குலை காந்தட்டேகுருதிநிறம் வாய்ந்த காந்தள் பூக்குலைகளையுடையது.
  
# இறையனார்# இறையனார்
# 2 குறிஞ்சி# 2 குறிஞ்சி
கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பிபூந்துகளைத் தேர்கின்ற வாழ்க்கையையும் அழகிய சிறகுகளையும் உடைய தும்பியே!
காமம் செப்பாது கண்டது மொழிமோஉன் விருப்பத்தைச் சொல்லாமல் நீ கண்டதனை மொழிவாயாக!
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்என்னுடன் பழகுதல் பொருந்திய அன்பினையும் மயிலின் இயல்பினையும்
செறி எயிற்று அரிவை கூந்தலின்நெருங்கிய பல்லொழுங்கினையும் உடைய இவளது கூந்தலைப்போன்று
நறியவும் உளவோ நீ அறியும் பூவே           5நறுமணமிக்க மலர்களும் இருக்கின்றனவோ நீ அறிந்த பூக்களில்.
  
# தேவகுலத்தார்# தேவகுலத்தார்
# 3 குறிஞ்சி# 3 குறிஞ்சி
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுபூமியைக் காட்டிலும் பெரியது; வானத்தைக் காட்டிலும் உயரமானது;
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்கடலைக் காட்டிலும் அளத்தற்கு அரிய ஆழம் உடையது; மலைச் சரிவிலுள்ள
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டுகரிய கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களினின்றும் எடுத்து
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பேபெரிய (அளவு) தேனை (தேனீக்கள்) செய்யும் நாட்டைச் சேர்ந்தவனோடு யான் கொண்ட காதல்
  
# காமஞ்சேர் குளத்தார்# காமஞ்சேர் குளத்தார்
# 4 நெய்தல்# 4 நெய்தல்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சேநோகின்றது என் நெஞ்சம்! நோகின்றது என் நெஞ்சம்!
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கிகண்ணிமைகளைக் கருக்குவது போன்ற கண்ணீரைத் தாங்கிக்கொண்டு
அமைதற்கு அமைந்த நம் காதலர்(நாம்)பொறுத்திருத்தற்குக் காரணமான நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சேபொறுப்பில்லாதவராய் இருத்தலை எண்ணி நோகின்றது என் நெஞ்சம்!
  
# நரி வெரூஉத்தலையார்# நரி வெரூஉத்தலையார்
# 5 நெய்தல்# 5 நெய்தல்
அது-கொல் தோழி காம நோயேஅதுதான் தோழியே! காம நோய் என்பதோ?
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னைதன்னிடத்தில் தங்கும் கொக்குகள் உறங்கும்படியான இனிய நிழலையுடைய புன்னைமரம்
உடை திரை திவலை அரும்பும் தீம் நீர்(கரையை)உடைக்கும் அலைகளினால் ஏற்படும் நீர்த்திவலைகளினால் அரும்பு விடும் இனிய நீர்ப்பரப்பையுடைய
மெல்லம்புலம்பன் பிரிந்து எனநெய்தல் நிலத் தலைவன் பிரிந்துசென்றான் என
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே            5பல இதழ்களையுடைய  தாமரை மலர் போன்ற மையுண்ட கண்கள் துயில் கொள்ளாதாகின.
  
# பதுமனார்# பதுமனார்                     
# 6 நெய்தல்# 6 நெய்தல்
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து‘கும்’மிருட்டையுடையது நள்ளிரவு! பேச்செல்லாம் முடிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றுஇனிதாக உறங்குகின்றனர் மக்கள்! வெறுப்பு இல்லாமல்
நனம் தலை உலகமும் துஞ்சும்அகன்ற இடத்தையுடைய உலகத்து உயிர்களும் துயிலும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனேநான் ஒருத்திமட்டுமே துயிலாதிருப்பேன் போலும்!
  
# பெரும்பதுமனார்# பெரும்பதுமனார்
# 7 பாலை# 7 பாலை
வில்லோன் காலன கழலே தொடியோள்வில்லையுடையவனின் கால்களில் கழல்கள்! வளையலணிந்தவளின்
மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர்மெல்லிய அடிகளின் மேலே சிலம்புகள்! இந்த நல்லவர்கள்
யார்-கொல் அளியர் தாமே ஆரியர்யாராயிருப்பர்? இரங்கத்தக்கவர் அவர்கள்! ஆரியக் கூத்தர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கிகயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்                      5வாகைமரத்தின்  வெண் நெற்று ஒலிக்கின்ற
வேய் பயில் அழுவம் முன்னியோரேமூங்கில் அடர்ந்த பாலைநிலத்தில் செல்ல முனைந்தவர்கள்.
  
# ஆலங்குடி வங்கனார்# ஆலங்குடி வங்கனார்
# 8 மருதம்# 8 மருதம்
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை
பழன வாளை கதூஉம் ஊரன்பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்,
எம் இல் பெருமொழி கூறி தம் இல்எமது இல்லத்தில் பெருமையான மொழிகளைக் கூறிவிட்டு, தமது இல்லத்தில்
கையும் காலும் தூக்க தூக்கும்கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்கும்
ஆடி பாவை போல                            5கண்ணாடிப் பிம்பம் போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கேவிரும்பியவற்றைச் செய்வான் தன் மகனுடைய தாய்க்கே!
  
# சுயமனார்# சுயமனார்
# 9 நெய்தல்# 9 நெய்தல்
யாய் ஆகியளே மாஅயோளேதாய் போன்ற இயல்பினள் ஆயினள், மாமை நிறத் தலைவி!
மடை மாண் செப்பில் தமிய வைகியஅழகிய பொருத்துவாய் அமைந்த செம்பினுள் தனித்து இருக்கும்
பெய்யா பூவின் மெய் சாயினளேசூடாத பூவைப் போல உடல் மெலிந்தாள்;
பாசடை நிவந்த கணை கால் நெய்தல்பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்             5கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்களை ஒக்கும்
தண்ணம் துறைவன் கொடுமைகுளிர்ந்த துறையை உடைய தலைவனின் கொடுமையை
நம் முன் நாணி கரப்பாடும்மேநம் முன்னே காட்டுதற்கு நாணி மறைத்து நடிக்கிறாள்.
  
# ஓரம்போகியர்# ஓரம்போகியர்
# 10 மருதம்# 10 மருதம்
யாய் ஆகியளே விழவு முதலாட்டிதாய் போன்ற இயல்பினள் ஆயினள், (வீட்டின்)விழாக்களுக்கு முதலானவள்!
பயறு போல் இணர பைம் தாது படீஇயர்பயற்றங்காய் போன்ற கொத்துக்களையுடைய இளம் பூந்தாதுகள் படியும்படி
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைஉழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட
காஞ்சி ஊரன் கொடுமைகாஞ்சிமரத்தை உடைய ஊரனின் கொடுமையை
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே             5மறைத்தவளாதலால் (அவனும்)நாணும்படியாக எதிரில் வருகிறாள்.
  
# மாமூலனார்# மாமூலனார்
# 11 பாலை# 11 பாலை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட ஒளிரும் வளை நெகிழ, நாள்தொறும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பிதூக்கம் இல்லாமல் கலங்கி அழும் கண்ணோடு தனித்து வருந்தி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கேஇப்படி இங்கே தங்கியிருத்தலிலிருந்து விடுபடுவோம்; தலைவன் இருக்குமிடத்திற்கு
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது(செல்ல)எழுவாயாக, இனியே! வாழ்க என் நெஞ்சே! முன்னே உள்ள
குல்லை கண்ணி வடுகர் முனையது                     5கஞ்சங்குல்லையைக் கண்ணியாக அணிந்த வடுகரின் இடத்ததாகிய
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்வலிய வேலையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கும் அப்பால்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே(அங்குச்)செல்வதை எண்ணினேன் அவருடைய நாட்டினிடத்துக்கு
  
# ஓதலாந்தையார்# ஓதலாந்தையார்
# 12 பாலை# 12 பாலை
எறும்பி அளையின் குறும் பல் சுனையஎறும்பின் வளைகளைப் போன்ற சிறிய பல சுனைகளையுடைய
உலை_கல் அன்ன பாறை ஏறிகொல்லனின் உலைக்கல் போன்ற பாறையின் மேல் ஏறி
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்வளைந்த வில்லையுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறேகிளைத்துச் செல்லும் பல வழிகளைக் கொண்டது என்பர் அவரின் தேர் சென்ற வழி;
அது மற்று அவலம் கொள்ளாது                        5அதைப் பற்றிய துயரம் கொள்ளாது
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரேஅன்பற்ற மொழிகளைக் கூறும் இந்த ஆரவாரமுடைய ஊர்.
  
# கபிலர்# கபிலர்
# 13 குறிஞ்சி# 13 குறிஞ்சி
மாசு அற கழீஇய யானை போலஅழுக்கில்லாமல் கழுவப்பட்ட யானை போல
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல்பெரும் மழையினால் சிறப்படைந்த கரிய சொரசொரப்பான குத்துப்பாறையின்
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன்குளிர்ச்சியான பக்கத்தில் தங்கும் மலைநாட்டுத் தலைவன்
நோய் தந்தனனே தோழிநோய் தந்தனனே! தோழி!
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே         5அதனால் பசலைநிறம் நிரம்பப் பெற்றனவே நம் குவளை போன்ற அழகிய கண்கள்!
  
# தொல்கபிலர்# தொல்கபிலர்
# 14 குறிஞ்சி# 14 குறிஞ்சி
அமிழ்து பொதி செம் நா அஞ்ச வந்தஅமிழ்தத்தின் இனிமை பொதிந்துள்ள செம்மையான நாவானது அஞ்சும்படி வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையைநேராக வளர்ந்து ஒளிரும் கூரிய பற்களையுடைய, சில சொல் சொல்லும் பெண்ணைப்
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்குபெறுவேனாக நானே! பெற்ற பின்பு
அறிக தில் அம்ம இ ஊரே மறுகில்அறியட்டும் இந்த ஊரே! வீதியில்
நல்லோள் கணவன் இவன் என                   5நல்லவளின் கணவன் இவன் என்று
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதேபலரும் கூற நான் சிறிதே வெட்கப்படுவேன்.
  
# ஔவையார்# ஔவையார்
# 15 பாலை# 15 பாலை
பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்புமுரசு முழங்க, சங்கு ஒலிக்க, அமர்ந்து
தொன் மூதாலத்து பொதியில் தோன்றியமிகப் பழமையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும்
நால் ஊர் கோசர் நன் மொழி போலநான்கு ஊரிலுள்ள கோசர்களின் நன்மொழியைப் போல
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல்வாய்த்தல் ஆனது தோழி ஆய்ந்தெடுத்த வீரக் கழலையும்
சே இலை வெள் வேல் விடலையொடு              5செம்மையான இலையையுடைய வெள்ளிய வேலையும் உடைய இளைஞனோடு
தொகு வளை முன்கை மடந்தை நட்பேதொகுத்த  வளைகள் அணிந்த முன்கையையுடைய  மடந்தையின் காதல்.
  
# பாலை பாடிய பெருங்கடுக்கோ# பாலை பாடிய பெருங்கடுக்கோ
# 16 பாலை# 16 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி கள்வர்(நம்மை)நினையாமல் இருப்பாரோ? தோழி! கள்வர்கள்
பொன் புனை பகழி செப்பம் கொள்-மார்இரும்பினால் செய்த அம்பினைச் செப்பம் செய்யும்பொருட்டு
உகிர் நுதி புரட்டும் ஓசை போல(தம்)நகத்தின் நுனியில் புரட்டும் ஓசை போல,
செம் கால் பல்லி தன் துணை பயிரும்செம்மையான கால்களையுடைய பல்லி, தன்னுடைய துணையை அழைக்கும்
அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே                5அழகிய அடியைக் கொண்ட கள்ளிகளை உடைய பாலைநிலத்தைக் கடந்து சென்றோர்.
  
# பேரெயின் முறுவலார்# பேரெயின் முறுவலார்
# 17 குறிஞ்சி# 17 குறிஞ்சி
மா என மடலும் ஊர்ப பூ எனகுதிரை எனக்கொண்டு பனைமடலிலும் ஏறிச் செல்வர்; பூ எனக்கொண்டு
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுபகுவிந்த அரும்பினையுடைய எருக்கம்பூ மாலையையும் தலையில் சூடிக்கொள்வர்;
மறுகின் ஆர்க்கவும் படுபதெருவில் பிறரால் ஆரவாரிக்கவும்படுவர்;
பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினேவேறு செயல்களும் செய்வர், காமநோய் முற்றிப்போனால்.
  
# கபிலர்# கபிலர்
# 18 குறிஞ்சி# 18 குறிஞ்சி 
வேரல் வேலி வேர் கோள் பலவின்கெட்டி மூங்கினால் செய்த வேலியையுடைய வேரில் கொத்தாகப் பழுத்திருக்கும் பலாமரங்கள் (நிறைந்த)
சாரல் நாட செவ்வியை ஆகு-மதிமலைச் சரிவைச் சேர்ந்தவனே! தக்க பருவத்தில் திருமணத்தைச் செய்வாக:
யார் அஃது அறிந்திசினோரே சாரல்யார் அதை(என் தலைவியின் நிலையை) அறிந்திருப்பார்? (இங்கு) மலைச் சரிவில்
சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள்சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவதைப் போன்று, இவளின்
உயிர் தவ சிறிது காமமோ பெரிதே            5உயிர் மிகவும் சிறியது, அவளின் காதலோ பெரியது.
  
# பரணர்# பரணர்
# 19 மருதம்# 19 மருதம்
எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர்எவ்வி என்ற வள்ளலை இழந்ததால் வறுமையுற்ற யாழ்ப்பாணரின்
பூ இல் வறும் தலை போல புல்லென்றுபொற்பூ இல்லாத வெறும் தலை போல, பொலிவின்றி
இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்துவருந்துவாயாக! வாழ்வாயாக நெஞ்சே! வீட்டு மரத்து(ப் படர்ந்த)
எல்_உறு மௌவல் நாறும்ஒளிவிடும் மௌவல் மணக்கும்
பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே          5நிறைந்த கருங்கூந்தலையுடைய (இனி)இவள் யாரோ ஆகிவிட்டாள் நமக்கே!
  
# கோப்பெருஞ்சோழன்# கோப்பெருஞ்சோழன்
# 20 பாலை# 20 பாலை
அருளும் அன்பும் நீக்கி துணை துறந்துஅருளையும் அன்பையும் கைவிட்டு (தம்)துணையைத் துறந்து
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்பொருள்தேடுவதற்காகப் பிரிந்துசெல்வோர் வலியோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆகவலியோர் வலியோராகவே இருக்கட்டும்!
மடவம் ஆக மடந்தை நாமேபேதையர் ஆவோம் மங்கையராகிய நாமே!
  
# ஓதலாந்தையார்# ஓதலாந்தையார்
# 21 முல்லை# 21 முல்லை
வண்டு பட ததைந்த கொடி இணர் இடை இடுபுவண்டுகள் மொய்ப்பதால் மலர்ந்த நீண்ட கொத்துக்கள் (தழைகளினிடையே) விட்டுவிட்டு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்பொன்னால் செய்யப்பட்ட தலைச்சுட்டி போன்ற அணிகள் அணிந்த பெண்களின்
கதுப்பின் தோன்றும் புது பூ கொன்றைகூந்தலைப்போல் தோன்றும் புதிய பூக்களையுடைய கொன்றை மரமுள்ள
கானம் கார் என கூறினும்(இந்த) நந்தவனம் (இது) கார்ப்பருவம் என்று தெரிவித்தாலும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே          5நான் ஏற்கமாட்டேன்; அவர் பொய் சொல்லமாட்டார்.
  
# சேரமான் எந்தை# சேரமான் எந்தை
# 22 பாலை# 22 பாலை
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழியநீர் ஒழுகும் கண்ணையுடையவளே! நீ இங்கே தனித்திருக்க
யாரோ பிரிகிற்பவரே சாரல்யார்தான் பிரியவல்லார்? மலைச் சரிவில்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்துதாழ்ந்த பரப்பு அழகுகொள்ளுபடியாக வலப்பக்கம் சுரிந்த மரா மரத்து
வேனில் அம் சினை கமழும்வேனில்காலத்து அழகிய கிளைகள் போல் மணக்கும்
தேம் ஊர் ஒண்_நுதல் நின்னோடும் செலவே             5வண்டுகள் மொய்க்கும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய உன்னோடும்தான் பயணம்.
  
# ஔவையார்# ஔவையார்
# 23 குறிஞ்சி# 23 குறிஞ்சி
அகவன்_மகளே அகவன்_மகளேகட்டுவிச்சியே! கட்டுவிச்சியே!
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல்சங்குமணியைக் கோத்தது போன்ற நல்ல நெடிய கூந்தலையுடைய
அகவன்_மகளே பாடுக பாட்டேகட்டுவிச்சியே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே அவர்இன்னும் பாடுக பாட்டே! அவருடைய
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே         5நல்ல நெடிய குன்றத்தைப் பாடிய பாட்டே!
  
# பரணர்# பரணர்
# 24 முல்லை# 24 முல்லை
கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர்கரிய அடிமரத்தையுடைய வேம்பின் ஒள்ளிய புதுப்பூக்கள்
என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோஎன் தலைவர் இல்லாமலேயே வீணே பூத்து ஒழியுமோ?
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்துஆற்றுப் பக்கத்தில் உயர்ந்து நிற்கும் வெள்ளைக் கிளைகளையுடைய அத்திமரத்தின்
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த ஒரு பழம் போல,
குழைய கொடியோர் நாவே                     5நான் குழைந்து நிற்க, கொடியோரின் நாக்குகள்
காதலர் அகல கல்லென்றவ்வேகாதலர் அகன்றமை காரணமாகக் கல்லென்று ஒலிக்கின்றன.
  
# கபிலர்# கபிலர்
# 25 குறிஞ்சி# 25 குறிஞ்சி
யாரும் இல்லை தானே கள்வன்ஒருவரும் இல்லை; அவர்தானே களத்திலிருந்தார்;
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோஅவரே தனது உறுதிமொழியைப் பொய்க்கச்செய்தால் நான் என்ன செய்யமுடியும்?
தினை தாள் அன்ன சிறு பசும் காலதினைத் தாள் போன்ற சிறிய இளமையான கால்களையுடையன,
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்ஓடுகின்ற நீரில் இருக்கும் ஆரல்மீனைப் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே                5நாரைகளும் இருந்தன தலைவர் என்னைக் களவுமணம் புரிந்தபொழுது.
  
# கொல்லனழிசி# கொல்லனழிசி
# 26 குறிஞ்சி# 26 குறிஞ்சி
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கைஅரும்புகளே இல்லாமல் மலர்ந்த கரிய காலையுடைய வேங்கைமரத்தின்
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகைமேலே எழும் பெரிய கிளையில் இருந்த மயில்
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன்பூக் கொய்யும் மகளிரைப் போல் தோன்றும் நாட்டையுடைய தலைவன்
தகாஅன் போல தான் தீது மொழியானும்தகுதியற்றவன் போல (எண்ணி) தலைவி தீதான சொற்களைச் சொன்னாலும்
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே                5தன் கண்ணால் கண்டதைப் பொய்யென்று சொல்லாது அல்லவா!
தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய்இனிய மாம்பழத்தை உண்ணும் கூரிய பற்களைக் கொண்ட சிவந்த வாயை உடைய
வரை ஆடு வன் பறழ் தந்தைமலையில் ஆடும் வலிய குட்டியின் தந்தையாகிய
கடுவனும் அறியும் அ கொடியோனையேகடுவன் குரங்கும் அறியும்! அந்தக் கொடியவனையே!
  
# வெள்ளி வீதியார்# வெள்ளி வீதியார்
# 27 பாலை# 27 பாலை
கன்றும் உண்ணாது கலத்தினும் படாதுகன்றும் உண்ணாமல், பாத்திரத்திலும் வீழாமல்
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்குநல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் சிந்தியதைப் போல்
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாதுஎனக்கும் பயன்படாமல், என் தலைவனுக்கும் இன்பம் செய்யாமல், 
பசலை உணீஇயர் வேண்டும்பசலைநோய் உண்பதை விரும்பும்
திதலை அல்குல் என் மாமை கவினே            5தேமல் படர்ந்த என் அழகிய பின்புறத்தின் மாந்தளிர் போன்ற அழகு.
  
# ஔவையார்# ஔவையார்
# 28 பாலை# 28 பாலை
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல்தலையைப் பிடித்து முட்டுவேனோ! கையால் தாக்குவேனோ!
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டுஎன்ன செய்வதென்று அறியேன்! நானும் ஏதாவது சாக்குவைத்து
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல்ஆவென்றும் ஒல்லென்றும் உரக்கக் கூவுவேனோ!
அலமரல் அசை வளி அலைப்ப என்சுழன்று வீசும் வாடைக்காற்று உடலை வருத்த என்னை
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே              5வருத்தும் காமநோயை அறியாது இனிதாக உறங்கும் இந்த ஊரை.
  
# ஔவையார்# ஔவையார்
# 29 குறிஞ்சி# 29 குறிஞ்சி
நல் உரை இகந்து புல் உரை தாஅய்நல்ல மொழிகள் நீங்கிப் புன்மையான மொழிகள் பரவி
பெயல் நீர்க்கு ஏற்ற பசும் கலம் போலமழைநீரை எதிர்கொள்ளும் பச்சையான மண்குடம் போன்று
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்திஉள்ளம் தாங்கமாட்டாத ஆசை வெள்ளத்தில் நீந்தி
அரிது அவா_உற்றனை நெஞ்சமே நன்றும்பெறுதற்கரிய ஆசைப்பட்டாய் நெஞ்சமே! மிகவும் நன்மைபயக்கக்கூடியது
பெரிதால் அம்ம நின் பூசல் உயர் கோட்டு            5பெரிய உன் ஆரவாரம்! உயர்ந்த மரக்கிளையில்
மகவு உடை மந்தி போலகுட்டியை உடைய குரங்கு போல
அகன் உற தழீஇ கேட்குநர் பெறினேஆரத் தழுவி (உன் குறையைக்)கேட்பவரை நீ பெற்றால்.
  
# கச்சிப்பேட்டு நன்னாகையார்# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 30 பாலை# 30 பாலை
கேட்டிசின் வாழி தோழி அல்கல்கேட்பாயாக! வாழ்க! தோழியே! நேற்று இரவில்
பொய் வலாளன் மெய் உற மரீஇயஅந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்துவாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட, நினைவு பெற்று எழுந்து
அமளி தைவந்தனனே குவளைபடுக்கையைத் தடவிப்பார்த்தேன்! குவளையின்
வண்டு படு மலரின் சாஅய்                  5வண்டுகள் மொய்த்து உழக்கிய மலரைப் போல நலிவுற்று
தமியென் மன்ற அளியென் யானேதனித்திருப்பதனை உணர்ந்தேன் இரக்கத்திற்குரியவள் நானே
  
# ஆதிமந்தி# ஆதிமந்தி
# 31 மருதம்# 31 மருதம்
மள்ளர் குழீஇய விழவினானும்மறவர்கள் கூடியுள்ள சேரி விழாக்களிலும்,
மகளிர் தழீஇய துணங்கையானும்மகளிர் தழுவியாடும் துணங்கைக்கூத்திலும்,
யாண்டும் காணேன் மாண் தக்கோனைஎங்குமே கண்டேனில்லை மாண்புக்குரிய தலைவனை!
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கைநானும் ஒரு ஆடுகளமகள் ஆனேன்!
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த           5சங்கினை அறுத்துச் செய்த ஒளிரும் என் வளையல்கள் நெகிழுமாறு செய்த
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனேபெருமை பொருந்திய தலைவனும் ஒரு ஆடுகளமகன் ஆனான்!
  
# அள்ளூர் நன்முல்லையார்# அள்ளூர் நன்முல்லையார்
# 32 குறிஞ்சி# 32 குறிஞ்சி
காலையும் பகலும் கையறு மாலையும்காலையும் பகலும் செயலற்ற மாலையும்
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இஊர் உறங்கும் நள்ளிரவும் விடியலும் என்று இந்தப்
பொழுது இடை தெரியின் பொய்யே காமம்பொழுதுகள் இடையே தெரியின் பொய்யானது காமம்!
மா என மடலொடு மறுகில் தோன்றிபனைமடலைக் குதிரை மா என்று கொண்டு தெருவில் தோன்றி
தெற்றென தூற்றலும் பழியே                 5பலர் அறியத் தூற்றலும் தலைவிக்குப் பழிதருவதே!
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினேஅப் பழிக்கு அஞ்சி வாழ்தலும் பழிதருவதே பிரிவு வருமாயின்.
  
# படுமரத்து மோசிகீரன்# படுமரத்து மோசிகீரன்
# 33 மருதம்# 33 மருதம்
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்.
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோதன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ?
இரந்தூண் நிரம்பா மேனியொடுஇரந்து உண்ணும் உணவினையுடைய நன்கு வளர்ச்சி பெறாத மேனியோடு
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனேஇந்தப் புது ஊரிலும் பெரும் சிறப்புடையவனாயிருக்கிறான்.
  
# கொல்லி கண்ணன்# கொல்லி கண்ணன்
# 34 மருதம்# 34 மருதம்
ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர்தாயர் முதலானோர் இடித்துரைக்கவும், தந்தை முதலானோர் மறுத்துரைக்கவும்
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்தனியராக உறங்கும் துன்பம் இல்லாததாகி
இனியது கேட்டு இன்புறுக இ ஊரேஇனியது கேட்டு இன்புறுக இந்த ஊரே!
முனாஅதுமுன்பே இவர் மறுத்த,
யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு   5யானைக்கொக்கு எனப்படும் பறவைகளின் கடற்கரையின் பெருங்கூட்டம்
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்பகைவரைக் கொன்ற மறவரின் ஆரவார ஓசைக்கு அஞ்சியோடும்
குட்டுவன் மரந்தை அன்ன எம்குட்டுவனின் மாந்தை நகரத்தைப் போன்ற எனது
குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனேகூந்தல் புரண்டு விளங்கும் ஆய்ந்து நன்றெனக்கண்ட நெற்றியையுடையவளின் தலைவனும் அவனே!
  
# கழார் கீரன் எயிற்றி# கழார் கீரன் எயிற்றி
# 35 மருதம்# 35 மருதம்
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்புநாணம் இல்லாமற்போவிட்டன எமது கண்கள்! வருததாகக் குறித்த நாள் வேறு என்று தெரிந்தும்
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்னகருவுற்ற பச்சைப்பாம்பின் சூல் முதிர்ச்சி போன்ற
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழபருத்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி
நுண் உறை அழி துளி தலைஇயநுண்ணிதாகத் தூவும் மிகுந்த துளிகளோடு கூடி
தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே       5குளிர்ச்சியாக வரும் வாடைக்காலத்தில் பிரிந்திருப்போருக்கு அழுதலால்.
  
# பரணர்# பரணர்
# 36 குறிஞ்சி# 36 குறிஞ்சி
துறுகல் அயலது மாணை மா கொடிகுத்தாக நிற்கும் பாறாங்கல்லுக்குப் பக்கத்திலுள்ள மாணை என்னும் பெரிய கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்துயிலும் ஆண்யானையின் மேல் ஏறிப்படரும் குன்றுகளுள்ள நாட்டுக்காரத் தலைவன்
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் எனஎன் நெஞ்சு சாட்சியாக (உன்னைவிட்டு) நீங்கமாட்டேன் நான் என்று
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன்என்னுடைய நல்ல தோளை அணைத்த பொழுது அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது                  5குற்றமில்லாத சூளுரையைக் கூறியது
நோயோ தோழி நின் வயினானே(இப்போது) நோயாகிப்போனதோ? தோழி! உன்னிடத்தில்.
  
# பாலை பாடிய பெருங்கடுங்கோ# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 37 பாலை# 37 பாலை
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்(உன்மீது) விருப்பம் மிகவும் உடைய தலைவர் (உன்பால்) அன்புசெய்தலும் செய்வார்
பிடி பசி களைஇய பெரும் கை வேழம்(தன்)பெண்யானையின் பசியைப் போக்க ,பெரிய கையையுடைய களிறுகள்
மென் சினை யாஅம் பொளிக்கும்மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறேஅன்புடையனவாம், தோழி! அவர் சென்ற வழியிலே.
  
# கபிலர்# கபிலர்
# 38 குறிஞ்சி# 38 குறிஞ்சி
கான மஞ்ஞை அறை ஈன் முட்டைகாட்டு மயில் பாறையில் இட்ட முட்டையை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்வெயிலில் விளையாடும் குரங்குக்குட்டி உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்குன்றுகளையுடைய நாட்டுத்தலைவனின் நட்பு என்றும்
நன்று-மன் வாழி தோழி உண்கண்உறுதியாக நல்லதேயாகும்! வாழ்க! தோழி! மையுண்ட கண்களின்
நீரொடு ஒராங்கு தணப்ப                    5கண்ணீரைக் கண்டும் ஒரேயடியாய்ப் பிரிந்து செல்ல
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே(அவரை)நினையாதிருக்கும் ஆற்றல் வன்மையுடையவர்க்கே!
  
# ஔவையார்# ஔவையார்
# 39 பாலை# 39 பாலை
வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து எனவெப்பமிக்க வலிமையுடைய கடும் காற்று சோலைக்குள் நுழைந்தது போல்
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்நெற்றாக முதிர்ந்த வாகையின் வற்றல்கள் ஆரவாரிக்கும்
மலை உடை அரும் சுரம் என்ப நம்மலைகளையுடையன கடத்தற்கரிய பாலைவழிகள் என்பர்; நமது
முலை இடை முனிநர் சென்ற ஆறேமார்பினிடையில் துயில்வதை வெறுத்துச் சென்றவர் சென்ற வழி.
  
# செம்புலப்பெயனீரார்# செம்புலப்பெயனீரார்
# 40 குறிஞ்சி# 40 குறிஞ்சி
யாயும் ஞாயும் யார் ஆகியரோஎன்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்?
யானும் நீயும் எ வழி அறிதும்நானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்?
செம் புல பெயல் நீர் போலசெம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே         5அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே
  
# அணிலாடு முன்றிலார்# அணிலாடு முன்றிலார்
# 41 பாலை# 41 பாலை
காதலர் உழையர் ஆக பெரிது உவந்துகாதலர் அருகிலிருப்பவராய் இருக்கும்போது பெரிதும் மகிழ்ந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்றதிருவிழாக்காணும் ஊரைப்போல மகிழ்வேன், உறுதியாக;
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்பாலைவழிக்கு அருகிலுள்ள அழகிய சிற்றூரில்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்மக்கள் கைவிட்டுப்போனபின், அணில்கள் ஓடியாடும் முற்றத்தையுடைய
புலப்பில் போல புல்லென்று                        5தனிமைப்பட்ட வீட்டைப்போல பொலிவிழந்து
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றேவருந்துகிறேன் தோழி அவர் பிரிந்துசென்ற போது.
  
# கபிலர்# கபிலர்
# 42 குறிஞ்சி# 42 குறிஞ்சி
காமம் ஒழிவது ஆயினும் யாமத்து(உன்னிடம் கூடி மகிழும்)அன்பு கிட்டாமற்போயினும், நள்ளிரவில்
கருவி மா மழை வீழ்ந்து என அருவிஇடிமின்னலுடன் கூடிய பெரிய மழை பொழிந்ததாக, அருவிநீர்
விடர்_அகத்து இயம்பும் நாட எம்மலைக்குகைகளில் எதிரொலிக்கும் நாட்டையுடையவனே! நான்
தொடர்பும் தேயுமோ நின்_வயினானேஉன்னிடத்தில் கொண்ட நட்பு குறைந்துபோகுமோ 
  
# ஔவையார்# ஔவையார்
# 43 பாலை# 43 பாலை
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனேபிரிந்து செல்லமாட்டார் என்று நான் அலட்சியமாய் இருந்துவிட்டேன்.
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரேபிரிந்தால் தாங்கமாட்டாள் என்று அவர் அதைப் பெரிதாக எண்ணவில்லை.
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்இந்த இரண்டுக்கும் இடையில், எங்கள் இருவரின் மனவலிமைகள் போட்டியிட்டதால்
நல்_அரா கதுவி ஆங்கு என்நல்ல பாம்பு கௌவிக் கடித்ததைப் போல், என்
அல்லல் நெஞ்சம் அலமலக்கு_உறுமே           5துயருறும் நெஞ்சம் மயங்குகிறது
  
# வெள்ளிவீதியார்# வெள்ளிவீதியார்
# 44 பாலை# 44 பாலை
காலே பரி தப்பினவே கண்ணேகால்களோ நடை இழந்தன! கண்களோ
நோக்கி_நோக்கி வாள் இழந்தனவேபார்த்துப் பார்த்துப் பூத்துப் போயின!
அகல் இரு விசும்பின் மீனினும்அகன்ற பெரிய வானத்தின் மீன்களைக் காட்டிலும்
பலரே மன்ற இ உலகத்து பிறரேபலர் இருக்கிறார்கள், இந்த உலகத்தின் பிற மாந்தர்!
  
# ஆலங்குடி வங்கனார்# ஆலங்குடி வங்கனார்
# 45 மருதம்# 45 மருதம்
காலை எழுந்து கடும் தேர் பண்ணிகாலையில் எழுந்து, வலிமையான தனது தேரைப்பூட்டி
வால் இழை மகளிர் தழீஇய சென்றஒளிவிடும் அணிகலன்களை அணிந்த மகளிரைத் தழுவுவதற்குச் சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது எனவளமிக்க ஊரனாகிய தலைவன் ஒப்பனையுடன் நன்கு விளங்கினா என்று
மறுவரும் சிறுவன் தாயேமனம் மறுகுகின்றான் சிறுவனின் தாய்!
தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே          5துயரத்தருவது இந்த மருத நிலத்தில் பிறப்பது.
  
# மாமிலாடன்# மாமிலாடன்
# 46 மருதம்# 46 மருதம்
ஆம்பல் பூவின் சாம்பல் அன்னஆம்பல் பூவின் சாம்பிய இதழ் போன்ற
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇகூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்துமுற்றத்தில் காயும் தானியங்களை வயிறார உண்டு, தெருவில் உள்ள
எருவின் நுண் தாது குடைவன ஆடிகாய்ந்த சாணத்தின் நுண்ணிய துகளில் குடைந்து விளையாடி
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும்    5வீட்டுக் கூரைச்சாய்ப்பில் தன் குஞ்சுகளுடன் தங்கும்
புன்கண் மாலையும் புலம்பும்புல்லிய மாலைப் பொழுதும், தனிமையும்
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டேஇல்லையோ தோழி! அவர் சென்ற நாட்டில்!
  
# நெடுவெண்ணிலவினார்# நெடுவெண்ணிலவினார்
# 47 குறிஞ்சி# 47 குறிஞ்சி
கரும் கால் வேங்கை வீ உகு துறுகல்கரிய அடிமரத்தை உடைய வேங்கை மரத்தின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் குத்துப்பாறை
இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடைபெரிய புலியின் குட்டியைப் போலத் தோன்றும் காட்டுவழியில்
எல்லி வருநர் களவிற்குஇருளில் வருபவரின் களவொழுக்கத்திற்கு
நல்லை அல்லை நெடு வெண்ணிலவேநன்மையாய் இருக்கவில்லை நீண்டு ஒளிவீசும் வெண்ணிலவே!
  
# பூங்கணுத்திரையார்# பூங்கணுத்திரையார்
# 48 பாலை# 48 பாலை
தாதின் செய்த தண் பனி பாவைபூந்தாதுக்களால் செய்த மிகுந்த குளிர்ச்சியுள்ள பதுமை
காலை வருந்தும் கையாறு ஓம்பு எனகாலையில் வாடிப்போகும், ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று கவலற்க!
ஓரை ஆயம் கூற கேட்டும்எனேஉ விளையாட்டுத் தோழியர் கூறக் கேட்டும்
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்இத்தகைய தன்மையுடன் இவ்வாறு பெரிதும் வருந்துகிற,
நன்_நுதல் பசலை நீங்க அன்ன                       5நல்ல நெற்றியையுடையவளின் பிரிவுத்துன்பம் நீங்கும்படி, அப்படிப்பட்ட
நசை ஆகு பண்பின் ஒரு சொல்விரும்பும் பண்புடைய ஒரு சொல்
இசையாது-கொல்லோ காதலர் தமக்கேகூறலாகாதோ காதலர் தமக்கு!
  
# அம்மூவனார்# அம்மூவனார்
# 49 நெய்தல்# 49 நெய்தல்
அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்துஅணிலின் பல்லைப்போன்ற பூந்தாதுக்கள் முதிர்ந்திருக்கும் முள்ளிச்செடியுள்ள
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்பநீலமணியின் நிறம் போன்ற பெரிய கழியினுக்கு உரிமையாளனே!
இம்மை மாறி மறுமை ஆயினும்இப் பிறவி போய் இனி எத்தனை பிறவியெடுத்தாலும்
நீ ஆகியர் எம் கணவனைநீயே என் கணவனாக இருக்கவேண்டும்,
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே                5நானே உன் நெஞ்சில் நிறைந்தவளாய் இருக்கவேண்டும்.
  
# குன்றியனார்# குன்றியனார்
# 50 மருதம்# 50 மருதம்
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்வெண்சிறு கடுகுபோன்ற சிறிய பூக்களைக்கொண்ட ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்செம்மையான மருதமரத்தின் வாடி உதிர்ந்த மலரோடு பரவிக்கிடந்து
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்துதலைவனின் ஊரின் நீர்த்துறையை அழகுசெய்கிறது; இறங்கும் தோள்களை விட்டு நீங்கி
இலங்கு வளை நெகிழ சாஅய்ஒளிரும் தோள்வளைகள் கழலும்படி மெலிந்து
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே              5  தனிமைத் துயரைப் பூண்டுநிற்கின்றன அவர் தழுவிய தோள்கள்.