| |
முல்லை பேயனார் | முல்லை பேயனார் |
| |
# 41 செவிலி
கூற்று பத்து | # 41 செவிலி கூற்று
பத்து |
# 401 | # 401 |
மறி
இடைப்படுத்த மான் பிணை போல | குட்டியினை
நடுவில்போட்டுப் படுத்த ஆண்மானும், பெண்மானும் போல |
புதல்வன்
நடுவணன் ஆக நன்றும் | தம் மகன் நடுவில்
இருக்க, மிகவும் |
இனிது மன்ற
அவர் கிடக்கை முனிவு இன்றி | இனிமையானது,
உண்மையாகவே, அவர்கள் படுத்திருப்பது; இடைவெளியின்றி |
நீல் நிற
வியல்_அகம் கவைஇய | நீல நிற வானம் சூழ்ந்த |
ஈனும் உம்பரும்
பெறல் அரும்-குரைத்தே | இந்த உலகத்திலும்,
மேலுகத்திலும் இத்தகைய காட்சியைப் பெறுதல் மிகவும் அரியது. |
# 402 | # 402 |
புதல்வன் கவைஇய
தாய் புறம் முயங்கி | புதல்வனை
அணைத்துக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு |
நசையினன்
வதிந்த கிடக்கை பாணர் | ஆசையுள்ளவனாகப்
படுத்திருந்த படுக்கைநிலை, பாணர் |
நரம்பு உளர்
முரற்கை போல | யாழின் நரம்புகளை
மீட்டும் இனிய இசையினைப் போல |
இனிதால் அம்ம
பண்பும்-மார் உடைத்தே | இனிமையானது, இதுதான்
இல்லறத்தின் இயல்பும் ஆகும். |
| |
# 403 | # 403 |
புணர்ந்த
காதலியின் புதல்வன் தலையும் | தான் மணந்த காதலியின்
மேல் மட்டுமல்லாது, தன்னுடைய புதல்வனிடத்தும் |
அமர்ந்த உள்ளம்
பெரிது ஆகின்றே | அன்புகொண்ட உள்ளம்,
விரிந்து நிற்கிறது – |
அகன் பெரும்
சிறப்பின் தந்தை_பெயரன் | மிகப் பெரிய
சிறப்பினைக் கொண்ட தன் தந்தையின் பெயரைத் தாங்கியவன் |
முறுவலின் இன்
நகை பயிற்றி | முறுவலோடுங் கூடிய
இனிய நகைப்பினை எழுப்பியவாறு |
சிறு_தேர்
உருட்டும் தளர் நடை கண்டே | நடை வண்டியை
உருட்டியபடியே வரும் தளர்ந்த நடையைக் கண்டு – |
# 404 | # 404 |
வாள் நுதல்
அரிவை மகன் முலை ஊட்ட | ஒளிபொருந்திய
நெற்றியையுடைய தன் மனைவி மகனுக்கு முலைப்பால் ஊட்டிக்கொண்டிருக்கும்போது |
தான் அவள்
சிறுபுறம் கவையினன் நன்றும் | தான் அவளின்
முதுகினைத் தழுவுவான் – பெரிதும் |
நறும் பூ தண்
புறவு அணிந்த | நறிய பூக்களை உடைய
குளிர்ச்சியான முல்லைநிலப் பகுதிகளால் அழகுபெற்ற |
குறும் பல்
பொறைய நாடு கிழவோனே | பலவான குறுமலைகளைக்
கொண்ட நாட்டிற்கு உரிய தலைவன். |
| |
# 405 | # 405 |
ஒண் சுடர்
பாண்டில் செம் சுடர் போல | ஒளிவிடும் சுடரினைக்
கொண்ட பாண்டில் விளக்கின் சிவந்த சுடரைப் போல |
மனைக்கு
விளக்கு ஆயினள் மன்ற கனை பெயல் | வீட்டுக்கு விளக்காக
இருக்கிறாள், மெய்யாகவே, பெரு மழையால் |
பூ பல அணிந்த
வைப்பின் | பூக்கள் பலவற்றை
அணிந்திருக்கும் ஊர்களால் |
புறவு அணி
நாடன் புதல்வன் தாயே | முல்லைநிலம்
அழகுபெறும் நாட்டினனின் புதல்வனின் தாய் – |
# 406 | # 406 |
மாதர் உண்கண்
மகன் விளையாட | பேரழகு பெற்ற மை
தீட்டிய கண்களையுடைய மகன் விளையாடிக்கொண்டிருக்க, |
காதலி தழீஇ
இனிது இருந்தனனே | தன் காதலியாகிய
மனைவியைத் தழுவிக்கொண்டு இன்பமுடன் இருந்தான் – |
தாது ஆர்
பிரசம் ஊதும் | பூந்தாதுக்களை ஆர
உண்ணும் வண்டினங்கள் மொய்த்துக்கொண்டிருக்கும் |
போது ஆர்
புறவின் நாடு கிழவோனே | மலர்கின்ற பருவத்துப்
பூக்கள் நிறைந்த முல்லைக்காட்டினைக் கொண்ட நாட்டுக்கு உரியவன் – |
| |
# 407 | # 407 |
நயந்த காதலி
தழீஇ பாணர் | தான் விரும்பிய
காதலியாகிய தன் மனைவியைத் தழுவிக்கொண்டு, பாணரின் |
நயம்படு
முரற்கையின் யாத்த பயன் தெரிந்து | இன்பந்தரும்
இன்னிசைப்பண்ணால் இயற்றப்பட்ட பாடலின் சுவையை நன்குணர்ந்து |
இன்புறு
புணர்ச்சி நுகரும் | இன்பந்தரும்
காதற்சுகத்தை நுகருகின்றான் – |
மென்_புல
வைப்பின் நாடு கிழவோனே | மென்மையாக ஆக்கப்பட்ட
முல்லைநிலங்களைக் கொண்ட ஊர்களையுடைய நாட்டிற்கு உரியவன் – |
# 408 | # 408 |
பாணர் முல்லை
பாட சுடர் இழை | பாணர்கள் முல்லைப்
பண்ணை யாழில் வாசிக்க, ஒளிரும் அணிகலன்களைக் கொண்ட |
வாள் நுதல்
அரிவை முல்லை மலைய | ஒளிபொருந்திய
நெற்றியையுடைய மனைவி முல்லை மலரைச் சூடியிருக்க, |
இனிது
இருந்தனனே நெடுந்தகை | இனிமையாக இருந்தான்
நெடுந்தகையாளன் – |
துனி தீர்
கொள்கை தன் புதல்வனொடு பொலிந்தே | வெறுப்புணர்வு அற்ற
பண்பினையுடைய தன் புதல்வனோடு பொலிவுபெற்று – |
| |
# 409 | # 409 |
புதல்வன்
கவைஇயினன் தந்தை மென் மொழி | புதல்வனைச் சேர்ந்து
தழுவினான் தந்தை; மென்மையான மொழியைக் கொண்ட |
புதல்வன் தாயோ
இருவரும் கவைஇயினள் | புதல்வனின் தாயோ அந்த
இருவரையும் சேர்த்துத் தழுவிக்கொண்டாள்; |
இனிது மன்ற
அவர் கிடக்கை | இன்பமானது, மெய்யாகவே,
அவர்கள் இருக்கும் இருப்பு, |
நனி இரும்
பரப்பின் இ உலகுடன் உறுமே | மிகவும் பெரிய
பரப்பினைக் கொண்ட இந்த உலகமே இக் காட்சிக்குப் பெறும். |
# 410 | # 410 |
மாலை முன்றில்
குறும் கால் கட்டில் | மாலைநேரத்தில், வீட்டு
முற்றத்தில், குட்டையான கால்களையுடைய கட்டிலில், |
மனையோள் துணைவி
ஆக புதல்வன் | மனைவியானவள்
பக்கத்தில் இருக்க, புதல்வன் |
மார்பின் ஊரும்
மகிழ் நகை இன்ப | மார்பினில் தவழும்
மகிழ்ந்த சிரிப்பின் இன்பமான |
பொழுதிற்கு
ஒத்தன்று-மன்னே | நேரத்திற்கு ஒப்பானது
– |
மென் பிணித்து
அம்ம பாணனது யாழே | மென்மையாக உள்ளத்தைப்
பிணிக்கும் பாணனது யாழிசை – |
| |
# 42 கிழவன்
பருவம் பாராட்டு பத்து | # 42 கிழவன் பருவம்
பாராட்டு பத்து |
# 411 | # 411 |
ஆர் குரல்
எழிலி அழி துளி சிதறி | ஆரவாரிக்கும் ஓசையுடன்
மேகங்கள் மிகப்பெரும் மழையைப் பொழிய, |
கார்
தொடங்கின்றால் காமர் புறவே | கார்காலம்
தொடங்கிவிட்டது கண்ணைக்கவரும் முல்லைக் காடுகளில், |
வீழ்தரு புது
புனல் ஆடுகம் | பாய்ந்தோடி வரும்
புதுவெள்ளத்தில் விளையாடலாம், |
தாழ் இரும்
கூந்தல் வம்-மதி விரைந்தே | நீண்டுதொங்கும் கரிய
கூந்தலையுடையவளே! வா! விரைந்து! |
# 412 | # 412 |
காயா கொன்றை
நெய்தல் முல்லை | காயா, கொன்றை,
நெய்தல், முல்லை, |
போது அவிழ்
தளவொடு பிடவு அலர்ந்து கவினி | மொட்டுக்கள் மலரும்
தளவம் ஆகியவற்றோடு, பிடவமும் மலர்ந்து அழகுபெற்று |
பூ அணி
கொண்டன்றால் புறவே | பூக்களை
அணிந்துகொண்டது போன்றிருக்கிறது முல்லைக்காடு, |
பேர் அமர்
கண்ணி ஆடுகம் விரைந்தே | பெரிய செழுமையான
கண்களையுடையவளே! பொழிலில் ஆடுவோம், வா, விரைவாக! |
| |
# 413 | # 413 |
நின் நுதல்
நாறும் நறும் தண் புறவில் | உன்னுடைய நெற்றியைப்
போலவே மணங்கமழும் நறிய குளிர்ந்த முல்லைவெளியில் |
நின்னே போல
மஞ்ஞை ஆல | உன்னைப் போலவே
மயில்கள் களித்தாட, |
கார்
தொடங்கின்றால் பொழுதே | கார்காலம்
தொடங்கிவிட்டது, குறித்த பொழுதில், |
பேர் இயல்
அரிவை நாம் நய_தகவே | பெரும் பண்புகளைக்
கொண்ட அரிவையே! நாம் விரும்பத்தக்கவாறு – |
# 414 | # 414 |
புள்ளும்
மாவும் புணர்ந்து இனிது உகள | பறவைகளும்
விலங்குகளும் ஒன்று சேர்ந்து இனிதாகக் குதித்து விளையாட, |
கோட்டவும்
கொடியவும் பூ பல பழுனி | கொம்புகளிலும்,
கொடிகளிலும் பூக்கள் பல பூத்துக் குலுங்க, |
மெல் இயல்
அரிவை கண்டிகும் | மென்மையான
இயல்பினையுடைய அரிவையே, இதோ பார்! |
மல்லல் ஆகிய
மணம் கமழ் புறவே | செழிப்பே உருவாகி
நிற்கும் சிறந்த மணங்கமழும் முல்லைநிலம் – |
| |
# 415 | # 415 |
இதுவே மடந்தை
நாம் மேவிய பொழுதே | இதுதான், மடந்தையே!
நாம் மிகவும் விரும்பிய பொழுது! |
உதுவே மடந்தை
நாம் உள்ளிய புறவே | இன்னும் சற்றுத்
தள்ளியிருப்பது, மடந்தையே! நாம் நினைத்துக்கொண்டிருந்த முல்லைநிலம்! |
இனிது உடன்
கழிக்கின் இளமை | இன்பமாகச்
சேர்ந்திருந்து கழித்தால், இளமை என்பது |
இனிதால் அம்ம
இனியவர் புணர்வே | இனிமையானதல்லவா!
இனியவருடன் கூடிச் சேர்ந்திருப்பது! |
# 416 | # 416 |
போது ஆர் நறும்
துகள் கவினி புறவில் | மலர்கின்ற பருவத்துப்
பூக்களில் உள்ள நறிய பூந்துகள்களால் மேனி அழகுற்று, முல்லைக் காட்டினில் |
தாது ஆர்ந்து | தேனை மிகுதியும் உண்டு |
களி சுரும்பு
அரற்றும் காமர் புதலின் | களிப்படைந்த
சுரும்புகள் ஆரவாரிக்கும் அழகிய புதரோரத்தில் |
மட பிடி தழீஇய
மாவே | உன் இளைய பிடியைத்
தழுவி இன்புற்ற களிறே! |
சுடர் தொடி
மடவரல் புணர்ந்தனம் யாமே | ஒளிவிடும் தோள்வளையைக்
கொண்ட என் இளம் மனைவியைக் கூடிமகிழ்ந்தேன் நானும் – |
| |
# 417 | # 417 |
கார்
கலந்தன்றால் புறவே பல உடன் | கார் வந்து
தழுவிக்கொண்டது முல்லைநிலத்தை; பலவாகச் சேர்ந்து |
ஏர் பரந்தனவால்
புனமே ஏர் கலந்து | ஏர்கள் பரந்து
உழுகின்றன தினைப்புனங்களில்; அழகொழுக, |
தாது ஆர்
பிரசம் மொய்ப்ப | தேனுண்ணும் வண்டினம்
மொய்க்க, |
போது ஆர்
கூந்தல் முயங்கினள் எம்மே | மலர்கள் நிறைந்த
கூந்தலினள் தழுவிக்கொண்டாள் என்னை. |
# 418 | # 418 |
வானம்பாடி வறம்
களைந்து ஆனாது | வானம்பாடியின்
நாவறட்சியைக் களைந்து, ஓயாமல் |
அழி துளி தலைஇய
புறவின் காண்வர | பெரும் மழை பெய்த
முல்லைக்காட்டைப் போலக் கண்ணுக்கினியதாய்த் தோன்ற, |
வான் அர_மகளோ
நீயே | வானுலக மங்கையோ நீ? |
மாண் முலை அடைய
முயங்கியோயே | உன் சிறந்த முலைகள்
அழுந்துமாறு என்னைத் தழுவியவளே! |
| |
# 419 | # 419 |
உயிர் கலந்து
ஒன்றிய செயிர் தீர் கேண்மை | உயிரோடு உயிர் கலந்து
ஒன்றிப்போன குற்றமற்ற அன்புறவால் |
பிரிந்து உறல்
அறியா விருந்து கவவி | பிரிந்திருத்தலையே
அறியாத புத்துணர்வுடன் தழுவிக்கொண்டு |
நம் போல் நயவர
புணர்ந்தன | நம்மைப் போலவே
ஆசையுடன் கூடிமகிழ்கின்றன – |
கண்டிகும்
மடவரல் புறவின் மாவே | காண்பாயாக,
இளம்பெண்ணே! முல்லைக்காட்டு விலங்குகள். |
# 420 | # 420 |
பொன் என
மலர்ந்த கொன்றை மணி என | பொன்னோ என்று கூறுமாறு
மலர்ந்த கொன்றை, மணியோ என்னத்தக்கதாகத் |
தேம் படு காயா
மலர்ந்த தோன்றியொடு | தேனைக் கொண்ட காயா,
மலர்ந்து நிற்கும் தோன்றி ஆகியவற்றோடு |
நன் நலம்
எய்தினை புறவே நின்னை | அருமையான அழகைப்
பெற்றிருக்கிறாய், முல்லைநிலமே! உன்னைக் |
காணிய வருதும்
யாமே | காண்பதற்கு வருகிறேன்
நான் – |
வாள் நுதல்
அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே | ஒளிரும் நெற்றியையுடைய
அரிவையோடு, அவளது அழகிய நலத்தை நுகர்வதை எண்ணி – |
| |
# 43 விரவு
பத்து | # 43 விரவு பத்து |
# 421 | # 421 |
மாலை வெண் காழ்
காவலர் வீச | மாலை நேரத்தில்
வெண்மையான வயிரம்பாய்ந்த குறுந்தடியைப் புனங்காவலர் ஓங்கி எறிய, |
நறும் பூ
புறவின் ஒடுங்கு முயல் இரியும் | நறுமணமுள்ள பூக்களைக்
கொண்ட முல்லைக்காட்டினில் பதுங்கியிருக்கும் முயல்கள் வெருண்டோடும் |
புன்_புல நாடன்
மட_மகள் | புல்லிய நிலத்தையுடைய
நாட்டினனின் இளைய மகளின் |
நலம் கிளர் பணை
தோள் விலங்கின செலவே | அழகு மிகுந்த பருத்த
தோள்கள் தடுத்தன, வெளியூர்ப் பயணத்தை. |
# 422 | # 422 |
கடும் பரி
நெடும் தேர் கால் வல் புரவி | விரைந்த
ஓட்டத்தையுடைய, நெடிய தேரில் பூட்டப்பட்ட, கால்கள் வலிதான குதிரையை, |
நெடும் கொடி
முல்லையொடு தளவ மலர் உதிர | நீண்ட கொடியையுடைய
முல்லையுடன் தளவ மலர்களும் உதிர்ந்து விழுமாறு |
விரையுபு கடைஇ
நாம் செல்லின் | வேகமாகச் செலுத்தி
நாம் சென்றால், |
நிரை வளை
முன்கை வருந்தலோ இலளே | வரிசையாக அடுக்கப்பட்ட
வளையல்களையுடைய முன்னங்கையையுடையவள் வருத்தம் தீர்வாள். |
| |
# 423 | # 423 |
மா மழை இடியூஉ
தளி சொரிந்தன்றே | கரிய மேகங்கள்
இடிஇடித்து மழையைப் பொழிகின்றன, |
வாள் நுதல்
பசப்ப செலவு அயர்ந்தனையே | ஒளிவிடும் நெற்றி
பசந்துபோகுமாறு பயணத்தை மேற்கொண்டாய், |
யாமே நின்
துறந்து அமையலம் | நானோ, உன்னைப்
பிரிந்து இருக்கமாட்டேன், |
ஆய் மலர்
உண்கணும் நீர் நிறைந்தனவே | அழகிய மலர்போன்ற
மையுண்டகண்களும் கண்ணீரினால் நிறைந்தனவே! |
# 424 | # 424 |
புறவு அணி
நாடன் காதல் மட_மகள் | முல்லைநிலம் அழகுடன்
தோன்றும் நாட்டினனின் அன்புக்குரிய இளைய மகளின் |
ஒண் நுதல்
பசப்ப நீ செலின் தெண் நீர் | ஒளிவிடும் நெற்றி
பசந்துபோகும்படி, நீ வெளியூர் சென்றால், தெளிந்த நீரிலுள்ள |
போது அவிழ்
தாமரை அன்ன நின் | மொட்டாய் இருந்து
மலர்கின்ற தாமரையைப் போன்ற உன் |
காதலன்
புதல்வன் அழும் இனி முலைக்கே | அன்புக்குரியவனான
புதல்வன் அழுவான் இனிமேல் – தாய்முலைப் பாலுக்கு. |
| |
# 425 | # 425 |
புன் புற பேடை
சேவல் இன்புற | புன்மையான முதுகைக்
கொண்ட பெட்டைக் கோழி, தன் சேவல் தன்னைக் கூடி இன்பம்கொள்ள, |
மன்னர் இயவரின்
இரங்கும் கானம் | அரசர்களின்
வாத்தியக்காரர்களைப் போல் களிப்புடன் ஒலியெழுப்பும் காட்டினூடே |
வல்லை நெடும்
தேர் கடவின் | விரைவாக நெடிய தேரைச்
செலுத்தினால் |
அல்லல் அரு
நோய் ஒழித்தல் எமக்கு எளிதே | தலைவியின்
அல்லலுக்குக் காரணமான அரிய நோயைத் தீர்த்தல் எமக்கு எளிதானதே! |
# 426 | # 426 |
வென் வேல்
வேந்தன் அரும் தொழில் துறந்து இனி | – வெற்றிதரும்
வேலினையுடைய வேந்தன், தன் அரிய தொழிலைத் தவிர்ந்தான், இனி, |
நன்_நுதல் யானே
செலவு ஒழிந்தனனே | நல்ல
நெற்றியையுடையவளே! நானும் பயணத்தைக் கைவிட்டுவிட்டேன்; |
முரசு பாடு
அதிர ஏவி | முரசுகளின் பேரொலி
அதிரும்படியாகப் படைகளைச் செலுத்தி |
அரசு பட
கடக்கும் அரும் சமத்தானே | பகையரசர் மாண்டொழிய
அவரை வெற்றிகொள்ளும் அரிய போர்க்களத்தின் – |
| |
# 427 | # 427 |
பேர் அமர் மலர்
கண் மடந்தை நீயே | பெரிதாக என்னுடன்
மாறுபட்டு நிற்கும் மலர்போன்ற கண்களையுடைய மடந்தையே! நீயும் |
கார் எதிர்
பொழுது என விடல் ஒல்லாயே | கார்ப்பருவம் வருகின்ற
காலம் என்று என்னைப் போக விடுவதற்கு உடன்படமாட்டாய்! |
போர் உடை
வேந்தன் பாசறை | போரைத் தொடங்கிய
வேந்தனும், போர்ப்பாசறைக்கு |
வாரான் அவன் என
செலவு அழுங்கினனே | வரமாட்டான் அவன் என்று
போர்ப்பயணத்தைக் கைவிட்டுவிட்டான். |
# 428 | # 428 |
தேர் செலவு
அழுங்க திருவில் கோலி | தேரில் செல்லுதல்
தவிர்க்கப்படவேண்டிய அளவுக்கு வானவில் வளைவாகத் தோன்றி |
ஆர் கலி எழிலி
சோர் தொடங்கின்றே | பெருத்த முழக்கத்துடன்
மேகங்கள் மழையைச் சொரியத்தொடங்கிவிட்டன; |
வேந்து விடு
விழு தொழில் ஒழிய | வேந்தன் எனக்குப்
பணித்த விழுமிய போர்த்தொழில் கைவிடப்பட, |
யான்
தொடங்கினனால் நின் புறந்தரவே | நான் தொடங்கிவிட்டேன்
உன்னைப் பேணிப்பதுகாப்பதை. |
| |
# 429 | # 429 |
பல் இரும்
கூந்தல் பசப்பு நீ விடின் | பலவான கரிய
கூந்தலையுடையவளே! பிரிவால் பசந்துபோவதை நீ நிறுத்திக்கொண்டால் மட்டுமே |
செல்வேம் தில்ல
யாமே செற்றார் | செல்கிறேன் நான்;
பகைவரின் |
வெல் கொடி
அரணம் முருக்கிய | வெற்றிகுறித்து
எழுப்பிய கொடிகளையுடைய கோட்டையை அழிக்கும், |
கல்லா யானை
வேந்து பகை வெலற்கே | போரையன்றி வேறொன்றைக்
கல்லாத யானைப்படையையுள்ள நம் வேந்தனின் பகைவரை வெல்வதற்கு – |
# 430 | # 430 |
நெடும் பொறை
மிசைய குறும் கால் கொன்றை | நெடிய குன்றுகளின்
மேலுள்ள குட்டையான அடிமரத்தையுடைய கொன்றையின் |
அடர் பொன் என்ன
சுடர் இதழ் பகரும் | தட்டிய பொன் என்னுமாறு
ஒளிரும் இதழ்கள் பிரகாசிக்கும் |
கான் கெழு
நாடன் மகளே | காட்டினைப் பொருந்திய
நாட்டினனின் மகளே! |
அழுதல்
ஆன்றிசின் அழுங்குவல் செலவே | அழுவதை
நிறுத்திக்கொள், தவிர்த்துவிட்டேன் பயணத்தை. |
| |
# 44 புறவணி
பத்து | # 44 புறவணி பத்து |
# 431 | # 431 |
நன்றே காதலர்
சென்ற ஆறே | நலம் மிக்கதே, நம்
காதலர் சென்ற வழி! |
அணி நிற இரும்
பொறை மீமிசை | அழகிய நிறம்பெற்ற
பெரிய மலை, தன்னுச்சியில் |
மணி நிற உருவின
தோகையும் உடைத்தே | நீலமணி போன்ற
தோற்றத்தையுடைய மயில்களையும் கொண்டுள்ளது. |
# 432 | # 432 |
நன்றே காதலர்
சென்ற ஆறே | நலம் மிக்கதே, நம்
காதலர் சென்ற வழி! |
சுடு பொன் அன்ன
கொன்றை சூடி | நெருப்பில் சுட்ட
பொன்னைப் போன்று ஒளிவிடும் கொன்றை மலர்களை அணிந்துகொண்டு |
கடி புகுவனர்
போல் மள்ளரும் உடைத்தே | திருமண வீட்டில்
நுழைபவரைப் போன்ற மள்ளரையும் கொண்டுள்ளது. |
| |
# 433 | # 433 |
நன்றே காதலர்
சென்ற ஆறே | நலம் மிக்கதே, நம்
காதலர் சென்ற வழி! |
நீர் பட எழிலி
வீசும் | நீர்வளம் சிறக்க,
மேகங்கள் வாரிவழங்கும் |
கார் பெயற்கு
எதிரிய கானமும் உடைத்தே | கார்கால மழையை
எதிர்கொள்ளும் கானத்தையும் கொண்டுள்ளது. |
# 434 | # 434 |
நன்றே காதலர்
சென்ற ஆறே | நலம் மிக்கதே, நம்
காதலர் சென்ற வழி! |
மறி உடை மான்
பிணை உகள | குட்டியையுடைய
பெண்மான்கள் குதித்து விளையாட, |
தண் பெயல்
பொழிந்த இன்பமும் உடைத்தே | குளிர்ச்சியான மழை
பொழிந்த இன்பத்தையும் கொண்டுள்ளது. |
| |
# 435 | # 435 |
நன்றே காதலர்
சென்ற ஆறே | நலம் மிக்கதே, நம்
காதலர் சென்ற வழி! |
நிலன் அணி
நெய்தல் மலர | நிலத்தை அழகுசெய்யும்
நெய்தல்பூக்கள் மலர, |
பொலன் அணி
கொன்றையும் பிடவமும் உடைத்தே | பொன்னைப்போல் அழகிய
கொன்றையையும் பிடவத்தையும் கொண்டுள்ளது. |
# 436 | # 436 |
நன்றே காதலர்
சென்ற ஆறே | நலம் மிக்கதே, நம்
காதலர் சென்ற வழி! |
நன் பொன் அன்ன
சுடர் இணர் | நல்ல பொன்னைப் போன்ற
ஒளிவிடும் பூங்கொத்துகளையுடைய |
கொன்றையொடு
மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே | கொன்றையோடு மலர்ந்த
குருந்த மரங்களையும் கொண்டுள்ளது. |
| |
# 437 | # 437 |
நன்றே காதலர்
சென்ற ஆறே | நலம் மிக்கதே, நம்
காதலர் சென்ற வழி! |
ஆலி தண் மழை
தலைஇய | ஆலங்கட்டிகளோடும்
கூடிய குளிர்ச்சியான மழை பெய்தலால், |
வாலிய மலர்ந்த
முல்லையும் உடைத்தே | வெண்மையாக மலர்ந்த
முல்லையையும் கொண்டுள்ளது. |
# 438 | # 438 |
நன்றே காதலர்
சென்ற ஆறே | நலம் மிக்கதே, நம்
காதலர் சென்ற வழி! |
பைம் புதல் பல்
பூ மலர | பச்சையான புதர்களில்
பலவிதப் பூக்கள் மலர, |
இன்புற தகுந
பண்பும்-மார் உடைத்தே | இன்புறத் தகுந்த
இயல்பினையும் கொண்டுள்ளது. |
| |
# 439 | # 439 |
நன்றே காதலர்
சென்ற ஆறே | நலம் மிக்கதே, நம்
காதலர் சென்ற வழி! |
குருந்த கண்ணி
கோவலர் | குருந்தம் பூக்களைத்
தலைமாலையாகச் சூடிய கோவலர்களின் |
பெரும் தண்
நிலைய பாக்கமும் உடைத்தே | மிக்க குளிர்ச்சி
நிலைபெற்ற குடியிருப்புகளையும் கொண்டுள்ளது. |
# 440 | # 440 |
நன்றே காதலர்
சென்ற ஆறே | நலம் மிக்கதே, நம்
காதலர் சென்ற வழி! |
தண் பெயல்
அளித்த பொழுதின் | குளிர்ந்த மழையை
உலகுக்கு அருளிய கார்காலத்தின் |
ஒண் சுடர்
தோன்றியும் தளவமும் உடைத்தே | ஒளிரும் சுடர் போன்ற
தோன்றிப்பூக்களையும், தளவ மலர்களையும் கொண்டுள்ளது. |
| |
# 45 பாசறை
பத்து | # 45 பாசறை பத்து |
# 441 | # 441 |
ஐய ஆயின
செய்யோள் கிளவி | வியப்புடையவாயின,
செம்மைப்பண்புடையோளின் தூதுமொழிகள்! |
கார் நாள்
உருமொடு கையற பிரிந்து என | இந்தக் கார்காலத்து
இடிமுழக்கத்தில், தன்னைச் செயலற்றுப்போக பிரிந்திருப்பதாகக் கூறியது |
நோய் நன்கு
செய்தன எமக்கே | மிகுந்த துன்பத்தைச்
செய்தன எனக்கு; |
யாம் உறு
துயரம் அவள் அறியினோ நன்றே | நான் படும் வேதனையை
அவள் அறிந்தால் மிகவும் நல்லது. |
# 442 | # 442 |
பெரும் சின
வேந்தன் அரும் தொழில் தணியின் | மிக்க சினத்தையுடைய
வேந்தன் தன் அரிய போர்த்தொழிலினை முடித்துக்கொண்டால் |
விருந்து நனி
பெறுதலும் உரியள் மாதோ | மிகப்பெரிய
விருந்தினைப் பெறுவதற்குரியவள் ஆவாள் – |
இருண்டு தோன்று
விசும்பின் உயர் நிலை உலகத்து | கார்கால மேகங்களால்
இருண்டு தோன்றும் வானத்திற்கும் உயரே உள்ள உலகத்து |
அருந்ததி அனைய
கற்பின் | அருந்ததியைப் போன்ற
கற்பினையுடைய, |
குரும்பை மணி
பூண் புதல்வன் தாயே | குரும்பை போன்ற
மணிகளாலான பூணினை அணிந்திருக்கும் புதல்வனின் தாய். |
| |
# 443 | # 443 |
நனி சேய்த்து
என்னாது நல் தேர் ஏறி சென்று | மிகவும் தொலைவில்
உள்ளது என்ற தயக்கம் இல்லாமல், நல்ல தேரில் ஏறிச் சென்று |
இலங்கு நிலவின்
இளம் பிறை போல | ஒளிவிடும் நிலவின்
இளைய பிறையைப் போல – |
காண்குவெம்
தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல் | காண்பேனே, அவளின்
அழகுபெற்ற ஒளிவிடும் நெற்றியை; |
விண் உயர் அரண்
பல வௌவிய | வானளாவிய அரண்கள்
பலவற்றைக் கைப்பற்றிய, |
மண்_உறு
முரசின் வேந்து தொழில் விடினே | கழுவிப்பூசிக்கப்பட்ட
முரசையுடைய வேந்தன் தனது போரைக் கைவிட்டால். |
# 444 | # 444 |
பெரும் தோள்
மடவரல் காண்குவெம் தில்ல | பெரிய தோள்களையுடைய
பேதையான காதலியைக் காண்பேன் – |
நீள் மதில்
அரணம் பாய்ந்து என தொடி பிளந்து | நெடிய மதில்களையுடைய
அரணைத் தாக்கியதால் கொம்பில் இறுக்கிய வளையம் பிளந்துபோக, |
வை நுதி மழுகிய
தடம் கோட்டு யானை | கூர்மையான நுனியும்
மழுங்கிவிட்ட பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய |
வென் வேல்
வேந்தன் பகை தணிந்து | வெற்றிதரும்
வேலினையுடைய வேந்தன் தன் பகையுணர்வு தணிந்து |
இன்னும் தன்
நாட்டு முன்னுதல் பெறினே | இப்பொழுதேனும் தன்
நாட்டுக்கு புறப்பட எண்ணுவதை நாம் பெற்றால் – |
| |
# 445 | # 445 |
புகழ் சால்
சிறப்பின் காதலி புலம்ப | புகழ் நிறைந்த
சிறப்பினையுடைய மனைவி தனித்து வருந்த, |
துறந்து
வந்தனையே அரும் தொழில் கட்டூர் | அவளை விட்டுவிட்டு
வந்தாயே, இந்த அரிய போருக்கான பாசறைக்கு – |
நல் ஏறு தழீஇ
நாகு பெயர் காலை | நல்ல காளையைத்
தழுவிக்கொண்டு இளம்பசுக்கள் வீடுதிரும்பும் நேரத்தில், |
உள்ளு-தொறும்
கலிழும் நெஞ்சம் | நினைக்குந்தோறும்
கலங்குகின்ற நெஞ்சமே! |
வல்லே
எம்மையும் வர இழைத்தனையே | விரைந்து என்னையும்
இங்கு வருமாறு செய்துவிட்டாயே! |
# 446 | # 446 |
முல்லை நாறும்
கூந்தல் கமழ் கொள | முல்லை மணக்கும்
கூந்தல் மேலும் மணங்கமழ, |
நல்ல காண்குவம்
மாஅயோயே | நல்ல இன்பங்களைக்
காண்போம், மாநிறத்தவளே! |
பாசறை அரும்
தொழில் உதவி நம் | பாசறையில் தங்கிச்
செய்யும் அரிய போர்த்தொழிலில் மன்னனுக்கு உதவிவிட்டு, நம் |
காதல் நன்
நாட்டு போதரும் பொழுதே | அன்புக்குரிய நல்ல
நாட்டுக்கு நான் திரும்பும் பொழுது. |
| |
# 447 | # 447 |
பிணி வீடு
பெறுக மன்னவன் தொழிலே | பிணிப்பிலிருந்து
விடுதலை பெறுக, மன்னவனின் போர்த்தொழில்! |
பனி வளர்
தளவின் சிரல் வாய் செம் முகை | பனியினால் வளரும்
செம்முல்லையின் மீன்கொத்தியின் மூக்கு போன்ற சிவந்த அரும்புகளைச் |
ஆடு சிறை வண்டு
அவிழ்ப்ப | சிறகடிக்கும் வண்டுகள்
மலரச்செய்ய |
பாடு சான்ற
காண்கம் வாள்_நுதலே | முன்னினும் அழகு
பெற்றன; காண்பேன் ஒளிபெற்ற நெற்றியையுடையவளை. |
# 448 | # 448 |
தழங்கு குரல்
முரசம் காலை இயம்ப | முழங்குகின்ற குரலில்
முரசம் காலையில் ஒலிக்க, |
கடும் சின
வேந்தன் தொழில் எதிர்ந்தனனே | கடும் சினத்தையுடைய
வேந்தன் போரை எதிர்கொண்டான்; |
மெல் அவல்
மருங்கின் முல்லை பூப்ப | ஆழமற்ற பள்ளங்களின்
பக்கத்தில் முல்லை பூத்திருக்க, |
பொங்கு பெயல்
கனை துளி கார் எதிர்ந்தன்றே | பொங்கி எழுந்த மழையின்
மிகுந்த துளிகளைக் கார்காலம் எதிர்கொண்டது; |
அம்_சில்_ஓதியை
உள்ளு-தொறும் | அழகிய சிலவான
கூந்தலையுடையவளை நினைக்கும்போதெல்லாம் |
துஞ்சாது
அலமரல் நாம் எதிர்ந்தனமே | தூங்காமல் வருந்துவதை
நான் எதிர்கொள்கிறேன். |
| |
# 449 | # 449 |
முரம்பு கண்
உடைய திரியும் திகிரியொடு | சரளைக் கற்கள்
நிரம்பிய மேட்டுநிலம் பிளக்குமாறு இயங்கும் சக்கரங்களோடு, |
பணை நிலை
முணைஇய வய_மா புணர்ந்து | கொட்டகையில் நிற்பதை
வெறுத்த வலிய குதிரைகள் பூட்டப்பெற்று, |
திண்ணிதின்
மாண்டன்று தேரே | திண்மையாக
ஆயத்தமாக்கப்பட்டுள்ளது தேர்; |
ஒண்_நுதல்
காண்குவம் வேந்து வினை முடினே | ஒளிவிடும்
நெற்றியையுடையவளைக் காணலாம், வேந்தன் தன் போரை முடித்துக்கொண்டால். |
# 450 | # 450 |
முரசு மாறு
இரட்டும் அரும் தொழில் பகை தணிந்து | முரசுகள் மாறி மாறி
ஒலிக்கும் அரிய போர்த்தொழிலுக்கான பகைமை தணிந்து |
நாடு முன்னியரோ
பீடு கெழு வேந்தன் | நாட்டுக்குத் திரும்ப
எண்ணிவிட்டான் பெருமை பொருந்திய வேந்தன்; |
வெய்ய
உயிர்க்கும் நோய் தணிய | வெப்பமாகப்
பெருமூச்செறிக்கும் பிரிவுநோய் தணியும்படியாக |
செய்யோள் இள
முலை படீஇயர் என் கண்ணே | செவ்விய பண்புடையாளின்
இளமையான முலைகளுக்கிடையே படுத்துத்தூங்கட்டும் என் கண்கள். |
| |