Select Page
  
#26 மருதம் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி#26 மருதம் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
கூன் முள் முள்ளி குவி குலை கழன்றவளைவான முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையிலிருந்து கழன்று விழுந்த
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர்மீனின் முள்ளைப் போன்ற வெண்ணிற காம்புகளையுடைய கரிய மலர்களை,
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்விளையாட்டு மகளிர் தமது திருவிழா ஆட்டத்துக்கு அழகுசெய்ய எடுத்துச் சேர்க்கும் 
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைஅழகிய வயல்களை அருகில்கொண்ட வளம் மிகுந்த ஊரனாகிய தலைவனைக்
புலத்தல் கூடுமோ தோழி அல்கல்                     5கோபித்துக்கொள்ள முடியுமா?, தோழியே! ஒவ்வொரு நாளும்,
பெரும் கதவு பொருத யானை மருப்பின்பெரிய கோட்டைக் கதவினைக் குத்தித் தாக்கிய யானையின் தந்தங்களில் உள்ள
இரும்பு செய் தொடியின் ஏர ஆகிஇரும்பாலான (கரிய) வளையத்தைப் போன்ற அழகினை உடையதாகி,
மா கண் அடைய மார்பு_அகம் பொருந்திகரிய கண்களை உடைய (என் கொங்கைகளைத் தன்)மார்பகத்தில் சேர்த்து
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி(முற்றிலும்) முயங்குவதைத் தடுக்கின்றன இவை என்று கூற, தடுமாறி
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று            10நான் “விடும்” என்று கூறவும் உடன்படாராய், தாம் மேலும்
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியேஇவற்றைப் பாராட்டிய காலங்களும் உண்டு; இப்பொழுதோ,
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇபுதல்வனுக்கே திகட்டும் பாலுடன் சரிந்து
திதலை அணிந்த தேம் கொள் மென் முலைஅழகுத் தேமலை அணிந்த இனிமை கொண்ட மெல்லிய கொங்கைகள்
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்மணமிக்க சந்தனம் அணிந்த நிறம் விளங்கும் (தலைவனின்) மார்பில்,
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே           15விம்மும்படி முயங்குதலை நான் விரும்பினேனாகவும்,
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடைஇனிய பால் (தன் மார்பில்) படுதலை அவர் அஞ்சினார்; அப்போது,
கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை(முன்பு இறுக)அணைத்த கை (இப்போது) நெகிழ்ந்ததைக் கண்டு, ஆர்வ நடையுள்ள
செவிலி கை என் புதல்வனை நோக்கிசெவிலியின் கையிலுள்ள என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ(என்னைக் காட்டிலும்)நன்றாக இருப்போரிடம் ஒத்துப்போவீர் நீவிர், இதோ
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என்             20(என்)செல்வனுடன் சேர்ந்துகொள்கிறேன் நான் எனறு சொல்லி, மெதுவாக என்
மகன்_வயின் பெயர்தந்தேனே அது கண்டுமகனிடத்திற்குச் சென்றேன்; அதைப் பார்த்து,
யாமும் காதலம் அவற்கு என சாஅய்நானும் விருப்பமுடையேன் அவனிடம் எனப் பணிந்து
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல்(என்) முதுகினைச் வளைத்து அணைத்துக்கொண்டாராக, மிகுந்த மழையின்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய்குளிர்ந்த துளிகளை ஏற்றுக்கொண்ட, பல முறை உழுத செங்காட்டின்
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே              25மண் போல நெகிழ்ந்து அவனுக்காகக் கலங்கிப்போய்
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கேநெஞ்சழிந்துபோன அறிவினை உடைய என்னால் – (கோபித்துக்கொள்ள முடியுமா?)
  
#27 பாலை மதுரைக்கணக்காயனார்#27 பாலை மதுரைக்கணக்காயனார்
கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரைவளைந்த வரிகளையுடைய பெரிய புலி இருக்குமிடம் தெரியும்படியாக, நீண்ட மலையில்
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்ஆடுகின்ற தண்டினைக் கொண்ட வலுவான கல்மூங்கில்கள் மேல்காற்றினால் வளையும்
கானம் கடிய என்னார் நாம் அழகாட்டு வழி கடினமானது என்னாமல்; நம்மை அழவிட்டு,
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார்நிலையற்ற செல்வத்தின் மீது கொண்ட ஆசையினால் சென்று, இங்கு திரட்டிக் கொணரச்
செல்ப என்ப என்போய் நல்ல                 5செல்கிறார் என்று சொல்கிறார்கள் என்கிறாயே, நல்ல
மடவை மன்ற நீயே வட_வயின்பேதைப்பெண் நீ, வடக்கிலிருக்கும்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானைவேங்கடமலையில் பிடித்த வெண்மையான தந்தங்களையுடைய யானைப்படையுள்ள,
மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும்வீரப் போர் புரியும் பாண்டியர், அறநெறியில் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்னகொற்கை என்ற அழகிய பெரிய துறைநகரில் விளையும் முத்தைப் போன்ற,
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்     10முறுவலால் பொலிவுடன் விளங்கும் பற்கள் உள்ள சிவந்த உன் வாய்
தகைப்ப தங்கலர் ஆயினும் இகப்பதடுத்து நிறுத்தினால் வெளியில் சென்று தங்கமாட்டார் – எனினும், மீறிச்செல்ல
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படஎப்படி விட்டுவிடும் பார்ப்போம். இனிமை சொட்ட,
தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைதெளிந்த நீருக்கு ஏற்ற திரண்ட கால்களை உடைய குவளையின்
பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்து படபேரழகைப் பழிக்கும் வகையில் இருந்தும் அமையாது, பருந்துகள் வட்டமிட
வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல்               15மன்னர்களைப் போரில் வென்ற வெற்றியை உடைய நல்ல வேல்
குருதியொடு துயல்வந்து அன்ன நின்குருதியுடன் ஆடுவது போன்ற உன்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கேசெவ்வரி படர்ந்த மையுண்ட கண்களின் மாறுபட்ட பார்வை –
  
#28 குறிஞ்சி பாண்டியன் அறிவுடைநம்பி#28 குறிஞ்சி பாண்டியன் அறிவுடைநம்பி
மெய்யின் தீரா மேவரு காமமொடுஎவ்வளவு நேரம் ஒன்றுசேர்ந்து இருந்தாலும் குறைவுபடாமலும் இயைந்தும் உள்ள விருப்பத்துடன்
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழிதளர்ந்துபோக மாட்டாய் எனினும் (ஒன்று) சொல்வேன், தோழி!
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையேகொய்வதற்கு முன்னரேயே கதிர்கள் தினையை உதிர்க்க ஆரம்பித்துவிட்டன.
அருவி ஆன்ற பைம் கால்-தோறும்நீர் அற்ற பசிய பயிர்கள் எல்லாம்
இருவி தோன்றின பலவே நீயே                 5வெறும் தட்டைகளாய்ப் ஆகிவிட்டன, பல இடங்களில் – நீதான்
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணிபலவகையான மணங்களும் கமழும் தேன் ஒழுகும் தலைமாலையை உடைய,
பரியல் நாயொடு பன் மலை படரும்விரைந்து ஓடும் வேட்டை நாயுடன் பல மலைகளையும் கடந்து செல்லும்
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின்வேட்டைக்காரனைப் பெறுவது ஒன்றே போதுமென்று இருக்கிறாய்! உனது
பூ கெழு தொடலை நுடங்க எழுந்து_எழுந்துபூக்கள் சிறந்த மாலை அசைய, அடிக்கடி எழுந்து சென்று
கிள்ளை தெள் விளி இடையிடை பயிற்றி                10கிளிகளை விரட்டும் தெளிந்த ஓசையை அவ்வப்போது எழுப்பி,
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னைஅங்கங்கே சென்று வராவிட்டால், நம் அன்னை
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் எனசிறிய கிளிகளை விரட்டுவதற்கு இவள் சரிப்பட்டுவரமாட்டாள் என எண்ணி
பிறர் தந்து நிறுக்குவள் ஆயின்வேறு சிலரை இங்கே கொண்டுவந்து நிறுத்திவிடுவாள் – அப்படியாயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே(நீ) அடைவதற்கு அரிதாய்ப்போய்விடும் அவனது அகன்ற மார்பு.
  
#29 பாலை வெள்ளாடியனார்#29 பாலை வெள்ளாடியனார்
தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள்தொடங்கிய வினையைக் கைவிடாத – தளர்ச்சியற்ற – வலிமையான முயற்சியை உடைய –
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின்(படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்து
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்தவிழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த,
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலை சிறப்பதாழ்வுணர்ச்சி இல்லாத உள்ளம் மென்மேலும் மிகுந்து விளங்க,
செய்_வினைக்கு அகன்ற_காலை எஃகு உற்று             5பொருளீட்டும் செயலுக்குப் பிரிந்து சென்ற நேரத்தில், – ‘கத்தியால் வெட்டுப்பட்டு
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின்இரண்டு பகுதியாக ஆன, நன்கு புலனாகும் அழகினையுடைய
மாவின் நறு வடி போல காண்-தொறும்மாவின் நறும் பிஞ்சு போல, காணுந்தோறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்ஆசை குறையாத மகிழ்ந்த நோக்கினை உடைய மைதீட்டிய கண்களை
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்நினையாது கழிந்த நாளில் சிறிதுநேரங்கூட
வாழலென் யான் என தேற்றி பல் மாண்         10வாழமாட்டேன் நான்’ – என்று ஆறுதல் கூறி பல்வேறு மாண்புகளும்
தாழ கூறிய தகை சால் நன் மொழிதாழ்ந்துபோகும்படி கூறிய உயர்வான நல்ல சொற்களை
மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின்மறந்துவிட்டீர் போலத் தோன்றுகிறீர் எனக்கு” எனச் சிறந்த உனது
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்கபற்கள் சிறந்து விளங்கும் பவள வாயில் இனிய புன்னகை கெடும்படியாகக்
வினவல் ஆனா புனை_இழை கேள் இனிகேட்டுக்கொண்டே இருக்கிறாயே, அழகிய அணிகளை உடையவளே! கேட்பாயாக, இப்போது
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை            15வெம்மை குறையாத நெருப்பு கொட்டும் பாழ்நிலத்தில்
கொம்மை வாடிய இயவுள் யானை(தன் உடல்) பருமன் வற்றிப்போன தலைமைப் பொறுப்புள்ள யானை
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடிநீர் இருக்குமிடம் அறியாது, கானல்நீர் தோன்றுமிடமெல்லாம் ஓடி,
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்வற்றிப்போன ஆற்றில் உள்ள ஓடத்தைப் போல, வழிநடுவே வாடிக்கிடக்கும்,
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடைநினைத்துப்பார்ப்பவரையும் நடுக்கும் ஊக்கம் அழிக்கும் வறும் காட்டினில்
எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு              20(பிறர்) இகழ்வதைப் பொறுக்காத பொருளீட்டும் விருப்பத்துடன்
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்குமான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை(என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவேபேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது.
  
#30 நெய்தல் முடங்கி கிடந்த நெடுஞ்சேரலாதன்#30 நெய்தல் முடங்கி கிடந்த நெடுஞ்சேரலாதன்
நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலைநீண்ட கயிற்றில் கட்டப்பட்ட சிறிய கண்களையுடைய அழகிய வலையில்
கடல் பாடு அழிய இன மீன் முகந்துகடலின் பெருமை அழிய மீன்களை முகந்து
துணை புணர் உவகையர் பரத மாக்கள்துணையுடன் கூடிய மகிழ்ச்சியுடையோரான மீனவ மக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றிஇளையரும் முதியருமாய்ச் சுற்றத்துடன் கூடி
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும்             5உப்பைக் கொண்டுசெல்லும் உமணர் அரிய துறைகளில் செலுத்தும்
ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇவரிசை வண்டிகளின் வலிய காளைகளைப் போலக் குழுமி
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கிநுண்மணல் செறிவாக அடைந்துள்ள கரையில் ஆரவாரத்துடன் இழுத்து
பெரும் களம் தொகுத்த உழவர் போலபெரிய களத்தில் (நெல்லைக்)குவித்துவைத்த உழவர் போல
இரந்தோர் வறும் கலம் மல்க வீசிஇரப்போரின் வெறும் கலன்களில் நிறையச் சொரிந்து
பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி           10பல கூறுகளாகச் செய்து தாம் கொண்டவற்றை விலைகூறி விற்று
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவகரை உயர்ந்த திண்ணிய மணற்பரப்பில் தூங்கும் தலைவனே!
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்நின் பெருமை என்பது குறைந்துபோகுமோ? ஏதேனும் ஒரு நாளில்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைகழுவப்படாத முத்துக்கள் (போல) அரும்பியிருக்கும் புன்னையின்
தண் நறும் கானல் வந்து நும்குளிர்ந்த மணங்கமழும் கடற்கரைச் சோலையில் வந்து, “உம்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே             15அழகு எப்படி இருக்கிறது?” என்றவராய்க் கேட்டுவிட்டுப் போனால்.
  
  
#31 பாலை மாமூலனார்#31 பாலை மாமூலனார்
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்தீயைப்போலச் சினந்து விளங்கும் வெம்மை ஒளிரும் ஞாயிறு
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கிவிளைநிலங்களின் கடைசிமட்டும் கருகிப்போகத் தக்கதாகச் சுட்டுப்பொசுக்குவதால் சுருங்கிப்போய்
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று எனநிலம் (வெடித்து) நிலைபெயருமோ இன்று என
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்துஉலகத்து உயிர்கள் மடிந்துபோக மழை அற்றுப்போன இக் காலத்தில்
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து         5இலைகள் இல்லாதுபோய், நிமிர்ந்த நிலையில் உயர்ந்து நிற்கும் யா மரத்தின்
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்குஉச்சிக் கவட்டில் இருந்த தன் குஞ்சுகளுக்கு
கல் உடை குறும்பின் வயவர் வில் இடகல்லை உடைய சிற்றரணில் இருக்கும் மறவர்கள் வில்லால் (அம்பினை) எய்ய
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்நிணம் ஒழுகும் பொலிவற்ற நிறமுள்ள வழிகள்தோறும்
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்னசெவ்வலரி மாலை இட்டவாறு இறந்துகிடந்தாற் போல
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர்              10புண் சொரியும் குருதி சூழ்ந்து பரவக் கிடந்தோரின்
கண் உமிழ் கழுகின் கானம் நீந்திகண்களை (க் கொத்திச் சென்று) ஊட்டிவிடும் கழூகுகளையுடைய காட்டைக் கடந்து
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடுசென்றார் என்று கூறுபவர் இலர், தோழி! வெற்றியோடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைவில்லால் (பகைவரை)அழித்து (அவரின் செல்வத்தைத்)துய்க்கும் வலிய ஆண்மையுள்ள வாழ்க்கை உடைய
தமிழ் கெழு மூவர் காக்கும்தமிழ்நாட்டினை ஆளும் மன்னர் மூவரும் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே         15தமிழ் மொழியின் வேறான மொழிவழங்கும் தேயங்களின் பல மலைகளையும் கடந்து.
  
#32 குறிஞ்சி நல்வெள்ளியார்#32 குறிஞ்சி நல்வெள்ளியார்
நெருநல் எல்லை ஏனல் தோன்றிநேற்றுப் பகலில் தினைப்புனத்தில் தோன்றி,
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்துஅழகிய மணிகள் ஒளிரும் அணிகளைப் பூண்டவனாய் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொளஅரசன் போன்ற (தனது)தோற்றத்துக்கு மாறாக
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிஇரத்தல் செய்யும் மக்களைப் போல பணிவான சொற்களைப் பலமுறை கூறி,
சிறுதினை படு கிளி கடீஇயர் பன் மாண்              5“சிறுதினையில் படியும் கிளிகளைக் விரட்டுவதற்கு, பலவிதமான உயர்ந்த
குளிர் கொள் தட்டை மதன் இல புடையாகுளிருடன் கூடிய தட்டைகளை வலுவில்லாமல் அடித்துக்கொண்டு,
சூர் அர_மகளிரின் நின்ற நீ மற்றுசூர்கொண்ட தெய்வமகளிர் போல நிற்கின்ற நீ
யாரையோ எம் அணங்கியோய் உண்கு எனயாரோ, என்னை வருத்துகின்றவளே, (உன்னை)விழுங்கட்டுமா?” என்று
சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டுஎன் பின்கழுத்தை வளைத்துப் பிடித்தவனாக, அதன் காரணமாகக்
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என்        10கொட்டும் மழை பெய்த மண்ணைப்போல நெகிழ்ந்து வருந்திய என்
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல்உள்ளத்தை அவன் அறிதலை அஞ்சி, (என்)உள்ளத்தில் இல்லாத
கடிய கூறி கைபிணி விடாஅகடுஞ்சொற்களைக் கூறி (அவனது) கையின் பிணைப்பினை விடுவித்து
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்றவெருளும் பெண்மானைப் போல் விலகி நின்ற
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்_வயின்என் உறுதியின் தன்மையினால் (அவன்)தன்னிலைக்கு வந்து, வேறு என்னிடம்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து                15சொல்ல வலுவுள்ள சொற்கள் எதுவும் இல்லாதவனாய், அலமந்து
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்(தன்)கூட்டத்திலிருந்து நீங்கும் களிற்றைப் போல் சென்றவன், இன்றைக்கும்
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோதோற்காதிருத்தல் இல்லை, தோழியே! நாம் செல்வோமாக,
சாய் இறை பணை தோள் கிழமை தனக்கேவளைந்து இறங்கும் பெரிய (என்)தோள்களின் உரிமை தனக்கே
மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்றுகளங்கமின்றி உடையது என்பதையும் அறியான், வருத்தமுற்று
என் குறை புறனிலை முயலும்                        20என் தேவையை (என்னிடமே) இரந்து நிற்க முயலும்
அண்கணாளனை நகுகம் யாமே(என்)கண் முன்னே வந்து நிற்பவனை நகையாடுவோம் யாம்.
  
#33 பாலை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்#33 பாலை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வினை நன்று ஆதல் வெறுப்ப காட்டிபொருளீட்ட மேற்கொள்ளவிருக்கும் செயல் நல்லது என்பதை வெகுவாக உணர்த்தி
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழியமனையில் இருக்கும் சிறந்த கற்பினையுடைய ஒளிரும் நெற்றியை உடையோளைப் பிரிந்து,
கவை முறி இழந்த செம் நிலை யாஅத்துகவடுகளில் முளைவிடும் தளிர்களும் இல்லாத, செங்குத்தாக நிற்கும் யாமரத்தின்
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறைஒரே தண்டாக ஓங்கி உயர்ந்த மரத்தின் (உச்சிக்) கிளையில் இருக்கும், வலிய பறத்தலையுடைய
வீளை பருந்தின் கோள் வல் சேவல்           5சீட்டி ஒலி எழுப்பும் பருந்தின் (இரையைக் குறிபார்த்துக்)கவர்வதில் திறமைமிக்க ஆண் பறவை
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும்வளைந்த வாயை உடைய பெண்பருந்தை அழைப்பதற்காக மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்இளி என்ற சுரத்தைத் தேரும் இனிய குரல் ஒலிக்கும் அருஞ்சுரம்
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள்செல்வதற்கு மிகவும் கடினமானது என்று எண்ணாமல் பயணத்தை மேற்கொண்டு, தலைவியின்
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண்மலரின் பெருமையைக் குலைக்கும் வகையில் அமைந்த, மையிட்ட அழகிய குளிர்ந்த கண்களின்
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய்         10தெளிவில்லாத பார்வையை நினைத்துப்பார்க்கிறாய் – உளியின் வாயைப்போன்று (கூர்மையான)
வெம் பரல் அதர குன்று பல நீந்திசூடான பரல்கற்களைக் கொண்ட பாதைகளையுடைய குன்றுகள் பலவற்றைக் கடந்து,
யாமே எமியம் ஆக நீயே(இப்போது இங்கே)நான் தனியனாய் இருக்க, (என் நெஞ்சே!) நீ மட்டும்
ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது(என்னை)விட்டுப் போக எண்ணுகிறாய் என்றால், மிகப் பழமையான,
வெல் போர் வானவன் கொல்லி மீமிசைவெற்றிப்போர்களின் சேரமன்னனின் கொல்லிமலையின் உச்சியில் உள்ள
நுணங்கு அமை புரையும் வணங்கு இறை பணை தோள்                15சிறிய கெட்டிமூங்கில் போன்ற வளைந்த பக்கங்களையுடைய பருத்த தோள்களையும்,
வரி அணி அல்குல் வால் எயிற்றோள்_வயின்தேமலைக்கொண்ட அல்குலையும், வெண்மையான பற்களையும் கொண்ட தலைவியைவிட்டுப்
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்லபிரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம்பிரிந்த நாளில் என்னைப்பற்றி நீ சரியாக அறிந்திருக்கவில்லை. எனினும் இன்று நாம்
செய்_வினை ஆற்று_உற விலங்கின்மேற்கொண்டுள்ள பணியை நடுவழியில் விலக்கிவைத்தால்
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே                20அடையமாட்டாயோ, பிறர் எள்ளி நகையாடும் நிலையை?
  
#34 முல்லை மதுரை மருதன் இளநாகனார்#34 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
சிறு கரும் பிடவின் வெண் தலை குறும் புதல்சிறிய கரிய பிடவஞ்செடியின் வெள்ளை நிறத் தலையை உடைய சிறிய புதர்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்தலைமாலை போல மலரும் குளிர்ந்த மணமிக்க முல்லை நிலத்தில்
தொடுதோல் கானவன் கவை பொறுத்து அன்னசெருப்பு அணிந்த வேட்டுவன் இரண்டாகப் பிளப்புண்ட கோலைத் தோளில் சுமப்பதைப் போல
இரு திரி மருப்பின் அண்ணல் இரலைபெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய பெருமை தங்கிய ஆண்மான்கள்
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல்    5செறிவாக அமைந்த இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்திகுட்டிகள் விளையாடும் பக்கத்தினையுடைய இளைய பெண்மானை தின்னச்செய்து
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரைதெளிவாக அறுத்துக்கொண்டு செல்லும் நீரையொட்டிய நீண்ட மணல்சார்ந்த கரைகளில்
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்அசைபோடும் கதுப்புக்களுடன் துயில்கொள்ளும் இடத்தைக் காத்து நிற்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறபெருந்தன்மையினைக் கண்டு உடைந்துபோன நெஞ்சம் இன்பமடையும்வண்ணம்
செல்க தேரே நல் வலம் பெறுந                       10நம் தேர் விரைந்து செல்லட்டும், நல்ல திறம்வாய்ந்த பாகனே!
பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்திஆடையில் தோய்த்த அதிகக் கஞ்சிப்பசையை அலசும் மெல் விரல் பெரும் தோள் வண்ணார்ப்பெண்,
துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம்ஆற்றுத்துறையில் அலசிவிடுவது போன்ற தூய வெண்மையான மயிர்களையுடைய அன்னங்கள்
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில்தம் பெடைகளுடன் விளையாடி மகிழும் காவல் உள்ள மனையகத்தில்,
செம் தார் பைம் கிளி முன்கை ஏந்திசிவந்த மாலை அணிந்தது போன்ற கழுத்தையுடைய பசுங்கிளியைத் தனது முன்னங்கையில் ஏந்தி,
இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து எனநம்மைப் பிரிந்து சென்றவரைப் பற்றி, இன்று வருவார் என்று உரைப்பாய் என்று
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென            15வீட்டிலுள்ளவர்கள் அறிந்துவிடுவாரோ என்று அஞ்சி மிகவும் மெதுவாக
மழலை இன் சொல் பயிற்றும்மழலையாகிய இனிய சொற்களைத் திரும்பத்திரும்பச் சொல்லும்
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவேநாணம் மிக்க நம் தலைவியின் மாண்புள்ள அழகினை நுகர்வதற்கு –
  
#35 பாலை குடவாயில் கீரத்தனார்#35 பாலை குடவாயில் கீரத்தனார்
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்பெற்றுப் போற்றி வளர்த்த என்னையும் மறந்துவிட்டாள்-
வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்பவிண்ணைத் தொடும் உயர்ந்த மதிலையுடைய இந்த நல் மனை தனிமையுற்றது;
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகைதனித்த ஒரு மணி மாறிமாறி ஒலிக்கும், பொருத்துதல் உள்ள கழுத்துப்பட்டை உடைய –
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர்கூரிய முனை கொண்ட நீண்ட வேலை உடைய சிற்றரண் மழவர்கள் (ஓட்டிச் சென்ற) –
முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த          5போரிட்டு மீட்ட – பசுக்களைக் கொணர்ந்து, (அந்த மழவர்களை) மேட்டுநிலத்தில் வீழ்த்திய
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர்வில்லையே ஏராகக் கொண்ட வாழ்க்கையை உடைய, சிறப்பாக அம்பு எய்யும் மறவர்கள்
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார்தம் வலிய ஆண்மையின் சின்னமான பதுக்கைக் கடவுளை வழிபடுவதற்கு
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்துஅந்த நடுகல்லில் மயில்தோகைகளை அணிவித்து, உடுக்கு அடித்து,
தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும்நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம்       10செல்வதற்கு இயலாத கவர்த்த வழிகளையுடைய புலால் நாறும் அரிய சுரநெறியில்
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து_அணிந்துதுணிவுடன் சென்று (நமக்கு) அன்னியள் ஆகிவிட்டாலும் – (அவளுக்குப்) பலவித அணிகளை அணிந்து
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன்ஆர்வமுள்ள நெஞ்சமோடு அவளது அழகிய நலனைத் துய்த்துத் தன்னுடைய
மார்பு துணை ஆக துயிற்றுக தில்லமார்பே துணையாக அவளைத் துயில்விப்பானாக –
துஞ்சா முழவின் கோவல் கோமான்ஓயாது ஒலிக்கும் முரசை உடைய, திருக்கோவலூருக்குத் தலைவனான,
நெடும் தேர் காரி கொடுங்கால் முன்துறை            15நெடிய தேரைக் கொண்ட காரியின் கொடுங்கால் என்னும் இடத்தின் முன்துறையில் உள்ள
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்பெண்ணை ஆகிய அழகிய பெரிய ஆற்றின் நுண்ணிய கருமணலைப் போன்ற
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்குநெளிந்த கரிய கூந்தலை உடைய என் பேதைமகளுக்கு
அறியா தேஎத்து ஆற்றிய துணையேஅறியாத நாட்டில் அவளைக் கூட்டிச் சென்ற துணைவன்.
  
#36 மருதம் மதுரை நக்கீரர்#36 மருதம் மதுரை நக்கீரர்
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்துபிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன்
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றிவளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையை விழுங்கி,
ஆம்பல் மெல் அடை கிழிய குவளைஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறு, குவளையின்
கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்துமலர்கின்ற பல மலர்கள் சிதைந்துபோகப் பாய்ந்து எழுந்து,
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி         5பின்னிக்கிடக்கும் வள்ளையின் அழகிய கொடிகளை உழப்பி,
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராதுதூண்டில்காரன் வளைத்து இழுக்க வராமல்,
கயிறு இடு கத சே போல மதம் மிக்குகயிறிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க காளையைப் போல வெறி மிகுந்து,
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊரகாலையில் குளத்தைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை(வற்றாது) வரும் நீரை உடைய வைகையின் நீண்ட மணற்பரப்புள்ள அகன்ற துறையின்
திரு மருது ஓங்கிய விரி மலர் காவில்              10அழகிய மருதமரங்கள் ஓங்கி வளர்ந்த, விரிந்த மலர்களுள்ள சோலையில்
நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடுநறிய, மிக்க கூந்தலையுடைய, குறு வளையல்களை அணிந்த இளம்பெண்ணுடன்
வதுவை அயர்ந்தனை என்ப அலரேமணவாழ்க்கை நடத்தினாய் என்று ஊரார் கூறுகின்றனர் – ஊரார் ஏளனப் பேச்சு,
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள் பூட்டிய கொடி பறக்கும் தேர் உடைய நெடுஞ்செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்பதலையாலங்கானத்து அகன்ற போர்க்களம் செந்நிறம் அடைய –
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்              15சேரன், சோழன், சினம் மிக்க திதியன்,
போர் வல் யானை பொலம் பூண் எழினிபோரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
நார் அரி நறவின் எருமையூரன்நாரால் அரிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன்,
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின்தேன் மணம் கமழும் மார்பினில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்றுஇருங்கோவேண்மான், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுடைய பொருநன் என்ற
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல்          20எழுவரின் சிறந்த வெற்றிகள் அடங்கிப்போக, ஒரு பகலிலே
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலமுரசுகளுடன் வெண்கொற்றக்குடைகளையும் கைப்பற்றி, தன் புகழ் எங்கும் பரவ,
கொன்று களம் வேட்ட ஞான்றைஅவரைக் கொன்று களவேள்வி செய்த பொழுது
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதேவெற்றியடைந்த வீர்ர் எழுப்பிய ஆரவாரத்தினும் பெரிதாக உள்ளது.
  
#37 பாலை விற்றூற்று மூதெயினனார்#37 பாலை விற்றூற்று மூதெயினனார்
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை(தலைவர்) என்னை மறந்து வெளியூரிலேயே தங்கிவிடமாட்டாரெனினும், கறங்கும் ஒலிகளையுடைய
கங்குல் ஓதை கலி மகிழ் உழவர்பின்னிருட்டில் ஆரவாரத்தை உடைய மிகுந்த மகிழ்ச்சியுள்ள உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்தூற்றாப் பொலியை முகந்து தூற்ற எழும் கனமற்ற நுண்ணிய தூசுகள்
மங்குல் வானின் மாதிரம் மறைப்பமூடுபனி வானத்தைப் போன்று நாற்புரத்தையும் மறைக்க –
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி           5வைகறை புலர்ந்த விடியற்காலையில் வைக்கோலைப் பிடித்துப்போட்டு கடாவிட்டு,
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகைவேலைக் களைப்பால் கள்ளுண்ட மயக்கம் தீர, அழகால் மேம்பட்ட,
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துகாற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில்
கிளி போல் காய கிளை துணர் வடித்துகிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைச் சாறெடுத்து,
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறைபுளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை,
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசும் குடை     10வெயிலில் குப்புற நிறுத்திய மிக்க இதழ்களையுடைய பசிய (பனையோலைக்)குடையில்
கயம் மண்டு பகட்டின் பருகி காண்வரகுளத்தில் நீரை மண்டும் காளையைப் போலப் பருகி, அழகு பொருந்த
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளிகொள்ளும் பயறும் பாலுடன் கலந்து, வெள்ளியால்
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவைகோலம் வரைந்ததைப் போன்ற வெண்மைநிறமுள்ள நன்கு வெந்த கஞ்சியை
வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கியவளைத்து உண்ட கை தடுத்த பின்னர் – உயரமாக,
பருதி அம் குப்பை சுற்றி பகல் செல                15சூரியனைப் போன்ற அழகான நெற்குவியலைச் சுற்றிப் பகல் முடிய
மருத மர நிழல் எருதொடு வதியும்மருதமர நிழலில் காளைகளுடன் தங்கியிருக்கும்
காமர் வேனில்-மன் இதுவிரும்பித்துய்க்கும் வேனில் காலம் அல்லவா இது!
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கேஇவ்வாறாகச் சிறப்பான நலத்தினைத் துய்க்கும் துணையைப் பெற்றவருக்கு –
  
#38 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்#38 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்மலர்ந்த கொத்துக்களை உடைய வேங்கைப்பூவால் செய்த, வண்டுகள் மொய்க்கும் கண்ணியன்-
தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன்ஆய்ந்தெடுத்த இதழ்களையுடைய குவளை மலர்களால் ஆன தேனொழுகும் மாலையன் –
அம் சிலை இடவது ஆக வெம் செலல்அழகிய வில் இடக்கையது ஆக, கடிதாய்ப் பறக்கும்
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளிஅம்பினை வலக்கையில் தெரிந்துகொண்டு, காதலியை அடைய எண்ணி
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன்                5வருவது (இன்றும்)நடக்கும் – அந்த வானளாவிய மலைநாட்டவன்
வந்தனன் ஆயின் அம் தளிர் செயலை(இன்று)அவ்வாறு வந்தால், அழகிய தளிர்களை உடைய அசோக மரத்தின்
தாழ்வு இல் ஓங்கு சினை தொடுத்த வீழ் கயிற்றுதாழ்வாக இல்லாமல் நீண்டிருக்கும் கிளையில் கட்டிய, கீழிறங்கும் கயிற்றின்
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன்ஊஞ்சல் இல்லாமல்போன இடத்தையும், (நீரில்)பாய்ந்து ஒன்றாக
ஆடாமையின் கலுழ்பு இல தேறிவிளையாடாததினால் கலங்கல் இல்லாமல் தெளிந்து,
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்                10நீளமான இதழ்களைக் கொண்ட அழகுபெற்ற நீலப்பூக்கள்
கண் என மலர்ந்த சுனையும் வண் பறைகண் போல மலர்ந்துகிடக்கும் சுனையையும், வளவிய சிறகுகளையுடைய
மட கிளி எடுத்தல் செல்லா தட குரல்இளங்கிளிகள் தூக்கிச் செல்ல முடியாத பெரிய கதிர்களின்
குலவு பொறை இறுத்த கோல் தலை இருவிவளைந்த பாரத்தை அறுத்துவிட்ட தட்டைகளே தலையாய்க் கொண்ட அரிதாள்களைக்கொண்ட
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்துஅறுவடை முடிந்த தினைப்புனத்தையும் பார்த்து – நீண்ட நேரம் நினைத்துக்கொண்டே இருந்து
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு          15துயருற்றவனாய்த் திரும்பிச் செல்வானல்லனோ! என் அழகு தேய்ந்துபோகட்டும்!
அய வெள் அருவி சூடிய உயர் வரைசுனையிலிருந்து வரும் வெள்ளிய அருவியை உச்சியில் கொண்ட உயர்ந்த மலையில்
கூஉம் கணஃது எம் ஊர் எனகூப்பிடுதூரத்தில்தான் உள்ளது எம் ஊர் என்று
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானேஅப்பொழுதே அதனை (அவனுக்கு)அறிவுறுத்தலை மறந்துவிட்டேனே நான்!
  
#39 பாலை மதுரை செங்கண்ணனார்#39 பாலை மதுரை செங்கண்ணனார்
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்துசெய்யலாகாது என்று ஒழித்த கொள்கையைப் பழித்த நெஞ்சமோடு, பயணம் மேற்கொண்டு
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின்நினைத்தும் அறிந்தீரோ என்னை என்று, உன்   
முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்ககூரிய பற்களை உடைய சிவந்த வாயின் முறுவல் அழிய
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின்நோவினை ஏற்படுத்தி அன்பற்றவற்றைப் பேசாதே – உன்
ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து     5தேடிநுகரும் அழகினை மறப்பேனோ – மாட்டேனே! நெடுந்தூரம் கடந்து,
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறிதழைத்த மூங்கில்கள் உரசிக்கொண்டதால், மூங்கில்கழை சொரிந்த ஒள்ளிய தீப்பொறி
படு ஞெமல் புதைய பொத்தி நெடு நிலைமிகுந்த சருகுகளுக்குள் விழுந்து தீ மூள, நாட்பட்ட
முளி புல் மீமிசை வளி சுழற்று உறாஅகாய்ந்துபோன புல்லின் மீது காற்று சுழற்றிப் பரவச்செய்ய
காடு கவர் பெரும் தீ ஓடு வயின் ஓடலின்காட்டையே சூழ்ந்த பெரும் தீ காற்றடிக்கும் பக்கமெல்லாம் பரவியதால்,
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு            10பாதையைத் தவறவிட்ட வணிகக் கூட்டத்தாருடன் சேர்ந்து
மதர் புலி வெரீஇய மையல் வேழத்துசெருக்குற்ற புலியைக் கண்டு அஞ்சிய மதங்கொண்ட யானைகளின்
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டுகூட்டம் சிதறுண்டு திரியும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டில்,
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு எனதொங்குவது போல் தோன்றிய ஞாயிறு மயங்கி மறைந்திட –
கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளிவண்டுகள் சூழும் கூந்தலினாய்! உன்னை நாடி நினைத்து
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென         15அரும் பயணமும் இயலாமற்போன அந்த அரிய வழியில், ‘சட்’டென்று
பரந்து படு பாயல் நவ்வி பட்டு எனபடுத்துக் கண்மூடிய தூக்கத்தில் – ஒரு பெண்மான் கண்ணிற்பட்டாற் போன்ற
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடுமின்னும் கைவளையல்களைச் சேர்த்து மேலிழுத்து, குனிந்த பார்வையுடன்,
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டுநிலத்தைக் காலால் கிளறிக்கொண்டு சிந்தனைசெய்துகொண்டிருந்த உன்னைக் கண்டு
இன்_நகை இனையம் ஆகவும் எம் வயின்‘இனிய முறுவல் கொண்டவளே!, நான் இவ்வாறு வருந்தியிருக்கவும், என்னுடன்
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின்                20(உனக்கு)ஊடல் எங்ஙனம் வந்தது?’ என்று உன்
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவிபக்கம் உயர்ந்த புருவங்களுடன் திரண்டு குறுகிய நெற்றியை நீவிவிட்டு,
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்துமணமுள்ள பக்கக் கூந்தலைக் கோதிவிட்ட நல்ல நேரத்தில்
வறும் கை காட்டிய வாய் அல் கனவின்வெறுங்கையாய் ஆக்கிய அந்தப் பொய்க் கனவினின்றும்
ஏற்று ஏக்கற்ற உலமரல்கண்விழித்து உள்ளம் நலிவடைந்த துயரத்தை
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே               25ஏற்றுக்கொள்ளாததினால் ஊடல்கொள்கிறாய் என்னுடன்.
  
#40 நெய்தல் குன்றியனார்#40 நெய்தல் குன்றியனார்
கானல் மாலை கழி பூ கூம்பகடற்கரைச் சோலை மாலைக் காலத்துக் கழியில் இருக்கும் பூக்கள் குவிய,
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்பநீல நிறப் பெருங்கடலின் ஓசை மிகுந்து ஒலிக்க,
மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதிமீனை உண்ணும் கொக்குகளின் குறும்பறப்புக் கூட்டம்
குவை இரும் புன்னை குடம்பை சேரதிரண்ட பெரிய புன்னை மரத்தின் கூடுகளைச் சென்றடைய,
அசை வண்டு ஆர்க்கும் அல்கு_உறு_காலை              5(தம் கூடுகளில் வந்து சேரும்)வண்டுகள் மிகுந்து ஒலிக்கும் அடையும்பொழுதில்
தாழை தளர தூக்கி மாலைதாழைகள் தளரும்படி அசைத்து, மாலையில்
அழி_தக வந்த கொண்டலொடு கழி படர்நோகும்படி வந்த கீழ்க்காற்றினால் மிகுந்த துன்பம் கொண்ட
காமர் நெஞ்சம் கையறுபு இனையஆசைகொண்ட நெஞ்சம் செயலற்று வருந்த
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்நமக்குத் துன்பம் விளைவித்து (அது தீர)நம்மீது அருள்கூராராயினும்
அறாஅலியரோ அவர் உடை கேண்மை               10அற்றுப்போகாதிருப்பதாக அவருடைய நட்பு –
அளி இன்மையின் அவண் உறை முனைஇ(அவரிடம்) கருணை இல்லாததால் அவ்விடத்தில் தங்குதலை வெறுத்து,
வாரற்க தில்ல தோழி கழனி(திரும்பி)வராமல் இருப்பதாக, தோழி – வயல்வெளிகளில்
வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும்வெண்ணெல்லை அரிவோரின் பின்னே நிறைந்து ஒலிக்கும்
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரைதண்ணுமைப் பறையின் ஓசைக்கு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை                15செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றிப் பனைமரத்தின்
அக மடல் சேக்கும் துறைவன்அகமடலில் தங்கும் கடல்துறையில் வாழும் தலைவனது
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சேஇனிய துயில் கொள்ளத்தக்க மார்பினை எண்ணிச் சென்ற என் நெஞ்சம் – 
  
  
  
  
  
#41 பாலை குன்றியனார்#41 பாலை குன்றியனார்
வைகு புலர் விடியல் மை புலம் பரப்பபின்னிருட்டு புலர்ந்த விடியல் வேளையில் எருமைகளை மேய்நிலத்திற்கு ஓட்டிவிட,
கரு நனை அவிழ்ந்த ஊழ்_உறு முருக்கின்கருஞ்சிவப்பான அரும்புகள் தம் பிணியவிழ்ந்த மலர்ச்சியடைந்த முருக்கமரத்தின்
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்பநெருப்பைப் போன்ற பூக்களைக் கொண்ட கிளைகளில் வண்டினம் மிக்கு ஒலிக்க,
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்துநெடிய நெற்பயிர்களைச் சேர்த்துக் கட்டிய கழினியினுள் ஏர்களை எடுத்துச்சென்று
குடுமி கட்டிய படப்பையொடு மிளிர          5தலை குவிந்த மண்கட்டிகளையுடைய தோட்டத்தைப் போன்று சிறந்து விளங்க
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்அரிதாள்களைப் பிளந்து உழுகின்ற, தெரிந்தெடுத்த காளைகளையுடைய உழவர்கள்
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப(காளைகளை அதட்டும்)ஓசையாகிய தெளிந்த குரல் காடுகள்தோறும் பரக்க,
கோழ் இணர் எதிரிய மரத்த கவினிசெழித்த பூங்கொத்துகள் எதிர்த்துத் தோன்றிய மரங்களையுடைவாய் அழகுற்று,
காடு அணி கொண்ட காண்_தகு பொழுதில்காடு அழகு பெற்ற காண்பதற்கினிய பொழுதில்,
நாம் பிரி புலம்பின் நலம் செல சாஅய்              10நாம் பிரிந்திட்டதன் தனிமையால் அழகுகெட மெலிந்து
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்தநம் பிரிவை இதுவரை அறியாத அழகுடன் சிறந்து விளங்கிய
நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோநல்ல தோள்கள் நெகிழும்வண்ணம் வருந்துவாளோ!
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்னதாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
அம் கலுழ் மாமை கிளைஇய                   15அழகு ததும்பும் மாநிறமேனியில் கிளைத்துத்தோன்றும்
நுண் பல் தித்தி மாஅயோளேநுண்ணிய பல தேமல் புள்ளிகளையுடைய நம் தலைவி
  
#42 குறிஞ்சி கபிலர்#42 குறிஞ்சி கபிலர்
மலி பெயல் கலித்த மாரி பித்திகத்துமிகுந்த மழையால் தழைத்த மழைக்காலப் பிச்சிக் கொடியின்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைகொய்வதற்கு முடியாத நிலையையுடைய மழைக்கு எழுச்சிபெற்ற மணமுள்ள அரும்பின்
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்சிவந்த பின்புறத்தைப் போன்ற வளமையான, குளிர்ந்த கடைக்கண்ணையும்
தளிர் ஏர் மேனி மாஅயோயே                  5தளிரைப் போன்ற அழகிய மேனியையும் உடைய மாநிறத்தவளே!
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்சநாட்டில் வறுமை மிக, கலப்பைகள் செயலற்று இருக்க
கோடை நீடிய பைது அறு காலைகோடை நீண்ட பசுமையற்ற காலத்தில் –
குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும்குன்றுகளைப் பார்த்தது போன்ற கரைகளையுடையவும், முற்றிலும்
சென்று சேக்கல்லா புள்ள உள் இல்பறவைகள் வந்து தங்குதல் இல்லாதனவும் ஆகிய, உள்ளே நீர் அற்ற
என்றூழ் வியன் குளம் நிறைய வீசிவெப்பமுடைய அகன்ற குளம் நிறையும்படி மிகுதியாகக் கொட்டிப்
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை           10பெரிய மழை பொழிந்த இன்பமிக்க விடியற்காலத்தில்
பல்லோர் உவந்த உவகை எல்லாம்பலரும் மகிழ்ந்த மகிழ்ச்சி எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடைஎனக்குள் பெய்ததைப் போன்று இருக்கிறதே! நெடுந்தொலைவில்
ஓங்கி தோன்றும் உயர் வரைஉயர்ந்து தோன்றும் உயரமான மலைகளையுடைய
வான் தோய் வெற்பன் வந்த மாறேவானளாவிய மலையைச் சேர்ந்தவன் வந்ததாலே.
  
#43 பாலை மதுரையாசிரியர் நல்லந்துவனார்#43 பாலை மதுரையாசிரியர் நல்லந்துவனார்
கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழைகடல்நீரை அள்ளி எடுத்த நிறைந்த சூல்கொண்ட கரு மேகம்
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கிஒளி நிமிர்ந்த மின்னலோடு வலமாக எழுந்து ஒலித்து
என்றூழ் உழந்த புன் தலை மட பிடிவெம்மையினால் வருந்திய புல்லிய தலையை உடைய இளைய பெண்யானை
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇயதன் துதிக்கை மறையத்தக்க வெள்ளத்தில் தன் ஆண்யானையுடன் படிந்து விளையாட
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி           5நிலமும் வானமும் நீரால் பொருந்திச் சேர
குறுநீர் கன்னல் எண்ணுநர் அல்லதுகுறுநீரையுடைய நாழிகை வட்டிலில் நாழிகை பார்ப்போர் அன்றி
கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர பாஅய்ஞாயிறு உள்ள பக்கம் தெரியாது உலகமே அஞ்சிக்கிடக்கப் பரவி
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமேநீர்த்துளிகளைக் கொட்டியது குளிர்ந்த, முழக்கத்தையுடைய மேகங்கள் – நானோ    
கொய் அகை முல்லை காலொடு மயங்கிகொய்யும்போது துண்டிக்கப்பட்ட முல்லைமலரின் மணம் காற்றில் கலந்து
மை இரும் கானம் நாறும் நறு நுதல்         10இருண்ட பெரிய காடு (மணக்கின்றதைப் போல்) மணக்கும் நறிய நெற்றியையும்
பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தைசெழித்த கரிய கூந்தலையுடைய மென்மையான இயல்புடைய தலைவியின்
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும்நல்ல அழகுள்ள மார்பினைச் சேர்ந்திருக்கின்றேன்; எப்போதுமே
அளியரோ அளியர் தாமே அளி இன்று(நிச்சயமாய்) இரங்கத்தக்கவராவர் – இரக்கமின்றி
ஏதில் பொருள்_பிணி போகி தம்அயல்நாட்டுப் பொருளீட்டும் ஆசையால் பிரிந்து சென்று தம்முடைய
இன் துணை பிரியும் மடமையோரே              15இனிய துணையைப் பிரியும் மடமையையுடையோர்.
  
#44 முல்லை குடவாயில் கீரத்தனார்#44 முல்லை குடவாயில் கீரத்தனார்
வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்மேற்கொண்ட செயலான போரை முடித்துவிட்டான் நம் வேந்தனும்; பகைவரும்
தம் திறை கொடுத்து தமர் ஆயினரேதாம் கொடுக்கவேண்டிய கப்பத்தைச் செலுத்தி வேண்டியவர்கள் ஆகிவிட்டனர்;
முரண் செறிந்து இருந்த தானை இரண்டும்பகைமை மிகுந்திருந்த படைகள் இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே நின் தேர்ஒன்றாகிவிட்டதாக ஒலிக்கப்பட்டது முரசு. உனது தேர்
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது                5முன்னிடத்தில் செயல்படுகின்ற ஊர்தி – அதற்குப் பின்னடைவு ஏற்படுத்தாமல்
ஊர்க பாக ஒருவினை கழிய(விரைந்து)செலுத்துக, பாகனே! (ஏனையோரை) விட்டு விலகியவனாய்க் கடந்துசெல்ல;
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்திநன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்குபொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்          10முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்து பட பண்ணி பழையன் பட்டு எனபருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
கண்டது நோனான் ஆகி திண் தேர்அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் அகப்பட கழுமலம் தந்தகணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னிபிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் அன்ன அறாஅ யாணர்                       15அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய
பழம் பல் நெல்லின் பல் குடி பரவைபழமையான பலவான நெல்லையுடைய பல குடிப் பரப்பினை உடையதும்
பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளையானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய)
தண் குடவாயில் அன்னோள்குளிர்ந்த குடவாயில் என்னும் ஊரைப் போன்றவளின்
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவேநல்ல பண்புகளையுடைய மார்பினில் இனிய துயிலைப் பெறுவதற்கு.
  
#45 பாலை வெள்ளிவீதியார்#45 பாலை வெள்ளிவீதியார்
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் கொத்து
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்பஆடுகளத்தில் (ஒலிக்கும் கழைக் கூத்தர்களின்) பறையினைப் போல் விட்டுவிட்டு ஒலிக்கும்
கோடை நீடிய அகன் பெரும் குன்றத்துகோடைக்காலம் நீடித்திருக்கும் அகன்ற பெரிய குன்றில்
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டுநீரற்று இருக்கும் அரிய வழியில் நிமிர்ந்துவரும் களிற்றினைக் கொன்று
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்           5போய்வருவோர் இல்லாத கிளைவழிகளில் புலிகள் புரண்டுவிளையாடும்
காடு இறந்தனரே காதலர் மாமைபாலைக் காட்டைக் கடந்துதான் காதலர் சென்றிருக்கிறார் — எனது மாமை நிறமானது
அரி நுண் பசலை பாஅய் பீரத்துமெல்லிய நுண்ணிய பசலை பரத்தலால், பீர்க்கின்
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரேஅழகிய மலரைப் போன்று மாறிவிட்டது. ஊர்மக்கள் பேச்சோ
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்அன்னி என்பவன், குறுக்கை என்னும் போர்க்களத்தில், திதியன் என்பானின்,
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணி                10நெடுங்காலம் நின்றிருக்கும் அடிமரத்தை வெட்டச் செய்து,
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்அந்தப் புன்னை மரத்தை மொட்டையாக்கிய போது, கூத்தர்கள்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே(எழுப்பிய) இன்னிசையின் ஆரவாரத்தினும் பெரிதே – நானோ,
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்துஎன் தலைவனைக் காணாமற்போக்கிய சிறுமையால் மனநோய் மிகுந்து
ஆதிமந்தி போல பேது உற்றுஆதிமந்தி போல பித்துப்பிடித்து
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார்    15துயரத்துள் மூழ்கித் திரிவேனோ! பொன் மாலை அணிந்தவனும்
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல்கடலையே கலக்கிய வெற்றியை உடையவனும் நல்ல வேலினை உடையவனும் ஆகிய
வானவரம்பன் அடல் முனை கலங்கியவானவரம்பன் தாக்குமுனையில் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போலஉடைந்துபோன மதிலைக் கொண்ட ஒரே அரணைப் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனேஅச்சமெனும் பிணியோடு தூங்காமல் கிடக்கின்றேன்.
  
#46 மருதம் அள்ளூர் நன்முல்லையார்#46 மருதம் அள்ளூர் நன்முல்லையார்
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்துஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு
கூர் முள் வேலி கோட்டின் நீக்கிகூரான முள்ளாலான வேலியைத் தனது கொம்பினால் தட்டிவிட்டு
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரியநீர் மிக்க குளத்தில் மீன்கள் எல்லாம் வெருண்டோட
அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை           5அழகிய துளையையுடைய வள்ளைக்கொடியைச் சிதைத்துக்கொண்டு, தாமரையின்
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊரவண்டுகள் ஒலியெழுப்பும் குளிர்ந்த மலரை ஆசையுடன் தின்னும் ஊரனே!
யாரையோ நின் புலக்கேம் வார்_உற்றுஉன்னை யாம் கடிந்துகொள்வதற்கு நீ யாரோ? நீளத் தொங்கவிடப்பட்டு
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல்கீழிறங்கும் மேகத்தைக் காட்டிலும் பளபளத்துத் தாழ்ந்து விழும் கரிய கூந்தலையுடையவள்
பிறரும் ஒருத்தியை நம் மனை தந்துஒருத்தியை, இவ்வூரார் நம் மனைக்குக் கூட்டிவந்து
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம்          10“நீ அவளை மணந்தாய்” என்று கூறினர்; அதனை நாங்கள்
கூறேம் வாழியர் எந்தை செறுநர்கூறவில்லை; நீ வாழ்வாயாக! பகைவரின்
களிறு உடை அரும் சமம் ததைய நூறும்யானைப் படையைக் கொண்ட அரிய போரினை சிதையுமாறு கொல்லும்
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன்ஒளிவீசும் வாள்படையைக் கொண்ட வெற்றி பொருந்திய செழியனது
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க                     15ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ               போய்விடு பெருந்தகையே! உன்னைத் தடுப்பவர் யாருமில்லை.
  
#47 பாலை ஆலம்பேரி சாத்தனார்#47 பாலை ஆலம்பேரி சாத்தனார்
அழிவு இல் உள்ளம் வழிவழி சிறப்பகொண்ட உறுதியினின்றும் பிறழ்வுபடாத உள்ளம் பன்னெடுங்காலம் சிறந்து விளங்க,
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்துஇவ்விடத்தில் வந்த வேலையை முடித்தோமென்றால், மிகவும் விரைவாக
எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலைஎழுவாயாக, நெஞ்சே நீ வாழ்வாயாக; தழைத்த உச்சியினையுடைய
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்துஆடுகின்ற மூங்கிலை ஒலி எழுமாறு தாக்கி, குறுக்காக எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி             5சூறாவளி வெப்பமுறச் செய்த, பக்கங்களில் நீண்டும், கூரான கொழுந்துவிட்டும் எரியும் நெருப்பு
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்துபிளவுகளும் குகைகளும் கொண்ட மலைச் சரிவில் பரந்து விரிதலால், அதனுடன் சேர்ந்து,
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும்மூங்கில் கணுக்கள் வெடித்தலால் எழும் ஒலி மான் கூட்டத்தை விரட்டும்
வெம் முனை அரும் சுரம் நீந்தி கைம்மிக்குகொடும் போர்முனையைப் போன்ற அரிய பாதையைக் கடந்து, அளவுகடந்து,
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை_வயின்பெரிய ஞாயிறு மலையைச் சேர்ந்து மறைய, வீட்டில்
ஒண் தொடி மகளிர் வெண் திரி கொளாஅலின்     10ஒளிரும் வளையணிந்த பெண்கள் வெள்ளிய திரிகளைக் கொளுத்த,
குறு நடை புறவின் செம் கால் சேவல்சிறுநடை போடும் புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா
நெடு நிலை வியன் நகர் வீழ் துணை பயிரும்உயர்ந்த மாடங்களை உடைய பெரிய மனையில் உள்ள தான் விரும்பும் பெடையை அழைக்கும்
புலம்பொடு வந்த புன்கண் மாலைதனிமைத் துயருடன் வந்த துன்பத்தைத் தரும் மாலைவேளையில்,
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி“எங்கு இருக்கின்றாரோ” என நினைத்துக் கலங்கியிருக்கும் தலைவியை அடைந்து,
இழை அணி நெடும் தேர் கைவண் செழியன்               15இழைகள் அணியப்பெற்ற நெடிய தேரினைக்கொண்ட வள்ளல்தன்மை நிறைந்த செழியனின்
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைமுகில்கள் தவழும் வளம் மிக்க சிறுமலை என்னும் மலையின்
சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்சாரல்களில் கூதளம் கமழும் மலையின்
வேய் புரை பணை தோள் பாயும்மூங்கிலைப் போன்ற பருத்த தோளில் பரவியுள்ள
நோய் அசா வீட முயங்குகம் பலவேபசலை நோயின் வருத்தம் நீங்கப் பலமுறையும் முயங்குவோம்.
  
#48 குறிஞ்சி தங்கால் முட கொற்றனார்#48 குறிஞ்சி தங்கால் முட கொற்றனார்
அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள்அன்னையே வணக்கம், நான் கூறுவதைக் கேட்குமாறு வேண்டுகிறேன். ‘உனது மகள்
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டுபாலையும் பருகாள், துன்பம் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்மிகவும் மெலிவடைந்துள்ளாள்’ என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை
யானும் தெற்றென உணரேன் மேல் நாள்நானும் தெளிவாக அறியேன், முன்பொருநாள்
மலி பூ சாரல் என் தோழிமாரோடு             5நிறைந்த பூக்களையுடைய மலைச்சாரலில் என் தோழிமாருடன்
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்று_உழிதழைத்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் பூக்களைக் கொய்யச் சென்றபோது
புலி புலி என்னும் பூசல் தோன்ற‘புலி, புலி’ என்று நாங்கள் கூச்சலிட,
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ்ஒளி பொருந்திய செங்கழுநீரின் கண்போன்ற அழகிய இதழ்களை
ஊசி போகிய சூழ் செய் மாலையன்ஊசியினால் கோத்துத் தைத்துக் கட்டிய மாலையை அணிந்தவன்,
பக்கம் சேர்த்திய செச்சை கண்ணியன்                10தலையின் ஒரு பக்கத்தே சேர்த்துச் செருகிய வெட்சிப்பூத் தலைமாலை அணிந்தவன்,
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவிஇளமை தங்கும் மார்பினில் சிவந்த சந்தனத்தைப் பூசி,
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டுவரிந்து கட்டிய வில்லையுடையவன், ஒரு நல்ல அம்பைக் கையினில் கொண்டு,
யாதோ மற்று அம் மா திறம் படர் என‘அந்தப் புலி சென்ற வழி எது?’ என்று
வினவி நிற்றந்தோனே அவன் கண்டுவினவி நின்றான்; அவனைக் கண்டு
எம்முள்_எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி            15எமக்குள்ளே ஒருவரையொருவர் மறைத்துக்கொண்டு
நாணி நின்றனெமாக பேணிநாணி நின்றோம், அதனால், ‘அக்கறையுடன்
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்ஐந்துவகையாக வகுத்த கூந்தலையும், அழகிய நெற்றியையும்,
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய்கரிய நெய்தடவிய கொண்டையினையும் உடைய இளமங்கையரே! உமது வாயில்
பொய்யும் உளவோ என்றனன் பையெனபொய்யும் உண்டோ?’ என்றனன், (பின்னர்) மெதுவாகச் செல்லுமாறு
பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து          20தன் தேரின் குதிரைகளின் வேகத்தைத் தடுத்தவன், எதிர்நோக்கலாக
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிநின் மகளின் மையுண்ட கண்களைப் பலமுறை நோக்கிச்
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனேசென்றான், அந்தக் குன்றுக்கு உரியவன்;
பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்துபகல் முடிந்த அந்தியில் மலையில் ஞாயிறு மறையும் நேரத்தில்
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன்அவன் சென்று மறைந்த திசையை நோக்கியவாறே, ‘இவனே
மகனே தோழி என்றனள்                       25ஆண்மகன், தோழியே’ என்றாள் உன் மகள்;
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கேஅது எத்தகையது என்று அறிவு மிக்கோர் அறிந்துகொள்வார்’.
  
#49 பாலை வண்ணப்புற கந்தரத்தனார்#49 பாலை வண்ணப்புற கந்தரத்தனார்
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்கிளி, பந்து, கழங்கு ஆகியவற்றை விரும்பியள் (இப்போது)
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்அருள், அன்பு, மென்மை, செயல் ஆகியவற்றில்
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் எனவேறுபட்டுள்ளாள்; “என் உயிர் போவதாக” என்று கூறி,
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்தவளைந்த தொடையினை உடைய கன்றுடன் மரத்தில் கட்டப்பெற்ற
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி              5ஆசைமிக்க பசுவைப் போல, (அவள்) முதுகினைப் பார்த்து,
குறுக வந்து குவவு நுதல் நீவிகிட்டே வந்து குவிந்திருக்கும் நெற்றியைத் தடவி,
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள்மென்மையாக தழுவிக்கொண்டேனாக – என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்பஎன்னுடைய நல்ல மார்பின் முலைகளிடையே வியர்வை உண்டாக
பல் கால் முயங்கினள்-மன்னே அன்னோபலமுறை என்னைத் தழுவிக்கொண்டாள்; ஐயகோ!
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி                10வெற்றி மிகு பெருந்தகையாளன் பலபடியாகப் பாராட்ட,
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்தியபட்டுப்போன மரநிழலில் தங்கி, தலையை மேல்நோக்கிப் பார்த்து வருந்தும்
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தைபாலைநிலத்தில் உடன்போகுதலை அறிந்திருந்தால் – இவள் தந்தையின்
அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர்உணவிருப்பு மிகுந்த காவல் பொருந்திய அகன்ற இல்லத்தில்
செல்வு_உழி செல்வு_உழி மெய் நிழல் போல            15செல்லுமிடமெல்லாம் கூடவரும் நிழல் போல
கோதை ஆயமொடு ஓரை தழீஇமாலை சூடிய தோழியரோடு ஓரை விளையாட்டில்
தோடு அமை அரி சிலம்பு ஒலிப்ப அவள்கூடு போன்ற சிலம்பின் பரல்கள் ஒலிக்க, அவள்
ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னேஆடுகின்றபோதெல்லாம் அகலாதிருந்திருப்பேனே!
  
#50 நெய்தல் கருவூர் பூதஞ்சாத்தனார்#50 நெய்தல் கருவூர் பூதஞ்சாத்தனார்
கடல் பாடு அவிந்து தோணி நீங்கிகடலில் ஓசை குன்றி, தோணிகள் கடலைவிட்டு நீங்கி(க் கரையில் கிடக்க)
நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும்நெடியவாய் நிறைந்த நீரைக்கொண்ட பெரிய கழியில் சுறாமீன்கள் செருக்கித் திரிந்தாலும்,
வெவ் வாய் பெண்டிர் கௌவை தூற்றினும்கொடிய பேச்சைக்கொண்ட பெண்டிர் பழிசொல்லித் திரிந்தாலும்,
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்பநன்கு அலங்கரிக்கப்பட்ட நீண்ட தேர் காத்துநிற்கப்,
பகலும் நம்_வயின் அகலான் ஆகி                     5பகலிலும் நம்மைவிட்டு அகலாதவனாகி,
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன்(முன்பெல்லாம்)அடிக்கடி வருவானே! குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவன்; இப்பொழுதோ,
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்திஒன்றுசேர்வதற்கு அரிதாயிருந்த (பழைய)விருப்பம் நீங்கிவிட, (இப்பொழுது இருக்குமிடத்தைத்) துறந்து
வாராதோர் நமக்கு யாஅர் என்னாதுவராமலிருப்பவர் நமக்கு யார் என்று வாளாவிராமல்,
மல்லல் மூதூர் மறையினை சென்று(இப்பொழுது தலைவன் இருக்கும் அந்த)வளமிக்க பழமையான ஊருக்கு மறைவாகச் சென்று
சொல்லின் எவனோ பாண எல்லி                 10(அவனிடம்) சொன்னால் என்ன பாணனே!, “இரவில்
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்(நம்)வீட்டைச் சேர்ந்துள்ள பனைமரத்தில், வளைந்த அலகையுடைய அன்றில் பறவைகள்
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் எனஏதேனும் ஒரு துணை பிரிந்திருந்தாலும் தூங்கமாட்டா, காண்பாயாக என்று
கண் நிறை நீர் கொடு கரக்கும்கண்ணில் நிறைந்து இருக்கும் கண்ணீரைக்கொண்டு தன் துயரை மறைப்பாள்
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவேஒளிபொருந்திய நெற்றியையுடைய தலைவி, இதற்கு யான் என்ன செய்வேன்?” என்று.