#101
பாலை மாமூலனார் | #101 பாலை
மாமூலனார் |
அம்ம வாழி தோழி
இம்மை | நான் கூறுவதைக் கேள்,
வாழ்க, தோழியே! இப்பிறப்பில் |
நன்று செய்
மருங்கில் தீது இல் என்னும் | நன்மை
செய்யுமிடத்திற்குத் தீமை வருவதில்லை என்கிற |
தொன்றுபடு
பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் | தொன்றுதொட்டு வழங்கும்
பழமொழி இன்று பொய்த்துப்போய்விட்டதோ? |
தகர் மருப்பு
ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த | செம்மறியாட்டுக்
கிடாயின் கொம்பினைப் போன்று சுற்றிக்கொண்டு சுருண்டுபோயுள்ள |
சுவல் மாய்
பித்தை செம் கண் மழவர் | பிடரியை மறைக்கும்
தலைமயிரினையும், சிவந்த கண்களையும் உடைய மழவர்கள் |
வாய் பகை
கடியும் மண்ணொடு கடும் திறல் | வாய்க்குப்பகையாகிய
இருமலைத் தவிர்க்க புற்றுமண்ணை வாய்க்குள் அடக்கிக்கொண்டு, கடும் திறன்வாய்ந்த |
தீ படு சிறு
கோல் வில்லொடு பற்றி | தீயை உண்டாக்கும்
சிறிய அம்பினை வில்லுடன் கையில் பிடித்துக்கொண்டு |
நுரை தெரி
மத்தம் கொளீஇ நிரை புறத்து | வெண்ணெய் வரக் கடையும்
மத்தினைக் கவர்ந்துகொண்டு, ஆனிரைகள் இருக்குமிடத்திற்கு |
அடி புதை
தொடுதோல் பறைய ஏகி | பாதங்களை மறைக்கும்
செருப்புகள் ஒலியெழுப்பச் சென்று |
கடி புலம்
கவர்ந்த கன்று உடை கொள்ளையர் | காவலையுடைய இடத்தில்
கவர்ந்த கன்றுகளுடன் கூடிய ஆனிரைகளைக் கொள்ளையடித்தவர்களாய் |
இனம்
தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு | அக் கூட்டத்தைக்
கூண்டோடு ஓட்டிக்கொண்டுபோகும் அகன்ற வெளிகளைக் கொண்ட பெரிய காட்டில், |
அகல் இரு
விசும்பிற்கு ஓடம் போல | அகன்ற வானம் என்னும்
கடலுக்கு ஓடம் போன்ற |
பகல் இடை நின்ற
பல் கதிர் ஞாயிற்று | நடுப்பகலில் காய்ந்த
பலகதிர்களையுடைய ஞாயிற்றின் |
உருப்பு
அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை | வெப்பம் விளங்கிப்
பரக்கச் சுழன்றுவரும் மேல் காற்றினால் |
புன் கால்
முருங்கை ஊழ் கழி பன் மலர் | உறுதியற்ற
அடிமரத்தினைக் கொண்ட முருங்கையின் முதிர்ந்து கழியும் பல மலர்கள் |
தண் கார்
ஆலியின் தாவன உதிரும் | குளிர்ந்த
முகிலினின்றும் உதிருகின்ற ஆலங்கட்டிகளைப் போலப் பரவி உதிருகின்ற |
பனி படு பன்
மலை இறந்தோர்க்கு | நடுக்கம்தரும் பல
மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர்க்கு |
முனி_தகு பண்பு
யாம் செய்தன்றோ இலமே | வெறுக்கத்தக்க செயலை
நாம் செய்யவில்லையே – (நாம் நன்றுதானே செய்தோம், அவர் பிரிந்து சென்றாரே!) |
| |
#102 குறிஞ்சி
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன் | #102 குறிஞ்சி மதுரை
இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன் |
உளை மான்
துப்பின் ஓங்கு தினை பெரும் புனத்து | பிடரிமயிரினையுடைய
சிங்கம்போன்ற வலிமையோடு, உயர்ந்து வளர்ந்த தினைப்பயிரைக்கொண்ட பெரிய புனத்தின் |
கழுதில் கானவன்
பிழி மகிழ்ந்து வதிந்து என | பரண்மேலிருக்கும்
குறவன் கள்ளினை உண்டு மகிழ்ந்திருக்க, |
உரைத்த சந்தின்
ஊரல் இரும் கதுப்பு | பூசிய மயிர்ச்
சந்தனத்தையுடைய பரந்த கரிய தனது கூந்தலை |
ஐது வரல் அசை
வளி ஆற்ற கை பெயரா | மெல்ல இயங்குகின்ற
காற்றானது புகுந்து புலர்த்த, கையைத் தூக்கி |
ஒலியல் வார்
மயிர் உளரினள் கொடிச்சி | தழைத்து நீண்ட
அம்மயிரினைக் கோதியவளாய், கொடிச்சியானவள் |
பெரு வரை
மருங்கில் குறிஞ்சி பாட | பெரிய மலையின்
பக்கத்தில் குறிஞ்சிப்பண்ணைப் பாட |
குரலும்
கொள்ளாது நிலையினும் பெயராது | தினையையும் தின்னாமல்,
இருந்த இடத்தைவிட்டு நகராமல் |
படாஅ பைம் கண்
பாடு பெற்று ஒய்யென | தூக்கம் வரப்பெறாத
தனது பசிய கண்களும் தூக்கம் வரப்பெற்று, விரைவாக |
மறம் புகல் மழ
களிறு உறங்கும் நாடன் | முரட்டுத்தனத்தையே
மிகவும் விரும்புகின்ற இளைய களிறு தூங்குகின்ற நாட்டையுடைய நம் தலைவன் |
ஆர மார்பின்
அரி ஞிமிறு ஆர்ப்ப | சந்தனம் பூசிய தனது
மார்பினில் அழகிய வண்டுகள் ஒலிக்க, |
தாரன் கண்ணியன்
எஃகு உடை வலத்தன் | மார்பிலும் தலையிலும்
மாலைகளைச் சூடியவனாய், வலக்கையினில் வேலைப் பிடித்தவனாய் |
காவலர் அறிதல்
ஓம்பி பையென | காவலர்
கண்டுபிடிப்பதைத் தவிர்த்து, மெதுவாக, |
வீழா கதவம்
அசையினன் புகுதந்து | தாழ்ப்பாள் போடாத
கதவினருகே தங்கி, உள்ளே புகுந்து |
உயங்கு படர்
அகலம் முயங்கி தோள் மணந்து | வருந்துகின்ற துன்பம்
நீங்க அணைத்து, தோளின் மேல் பொருந்தி |
இன் சொல் அளைஇ
பெயர்ந்தனன் தோழி | இனிய சொற்களைக் கலந்து
பேசிவிட்டுச் சென்றான், தோழியே! |
இன்று
எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் | நாம் ஏனோ
காண்கின்றோம், இன்று ஒருநாள் அவன் |
நல்காமையின்
அம்பல் ஆகி | வந்து நமக்கு
அருள்செய்யாமற்போய்விட்டதால், ஊராருக்குத்தெரிந்து அவர்கள்
பழித்துப்பேசும்படியாக ஆகி |
ஒருங்கு வந்து
உவக்கும் பண்பின் | அனைவரும் கூடி
மகிழ்ச்சிகொள்வதற்குக் காரணமாக, |
இரும் சூழ் ஓதி
ஒண் நுதல் பசப்பே | கரியவாய்ச்
சூழ்ந்திருக்கும் கூந்தல் புரளும் நமது ஒளிவிடும் நெற்றியில் இந்தப் பசலையை
(நாம் ஏனோ காண்கின்றோம்) |
| |
#103 பாலை
காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார் | #103 பாலை
காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார் |
நிழல் அறு நனம்
தலை எழால் ஏறு குறித்த | நிழலே இல்லாத அகன்ற
பாலை நிலைப்பரப்பினில் வல்லூறினால் பாய்வதற்குக் குறிவைக்கப்பட்ட |
கதிர்த்த
சென்னி நுணங்கு செம் நாவின் | ஒளிவிடும் தலையினையும்
நுணுகிய சிவந்த நாவினையும் |
விதிர்த்த
போலும் அம் நுண் பல் பொறி | அள்ளித்தெளித்தாற்
போன்ற அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளையும் உடைய |
காமர் சேவல்
ஏமம் சேப்ப | அழகிய குரும்பூழ்ச்
சேவலானது, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்க எண்ணி |
முளி அரில்
புலம்ப போகி முனாஅது | தான் மறைந்திருந்த
உலர்ந்த புதர் தனித்துக்கிடக்கும்படி பறந்து போய், தன் முன்னாலிருக்கும் |
முரம்பு
அடைந்து இருந்த மூரி மன்றத்து | வன்னிலத்தைச்
சார்ந்திருந்த மிகவும் பழைமையான பெரிய மன்றத்தில் |
அதர் பார்த்து
அல்கும் ஆ கெழு சிறுகுடி | ஆறலை கள்வர்
வழிப்போக்கரை எதிர்பார்த்து தங்கியிருக்கும் பசுக்களையுடைய சிற்றூரில், |
உறையுநர் போகிய
ஓங்கு இலை வியன் மனை | குடியிருப்போர்
விட்டுப்போன உயர்ந்த நிலையினையுடைய பெரிய பாழ்மனையின் |
இறை நிழல் ஒரு
சிறை புலம்பு அயா உயிர்க்கும் | கூரை இறப்பின் நிழலில்
ஒரு பக்கமாய்த் தங்கி, தனிமையால் பெருமூச்செறிந்திருக்கும் |
வெம் முனை
அரும் சுரம் நீந்தி தம்_வயின் | கொடுமையான
பகைப்புலத்தின் கடத்தற்கரிய வழிகளைக் கடந்து, தம்மிடத்தே |
ஈண்டு வினை
மருங்கின் மீண்டோர்-மன் என | கடமையாக வந்து சேர்ந்த
பொருள் ஈட்டும் வினையில் மீண்டும் சென்றார் என்று |
நள்ளென்
யாமத்து உயவு துணை ஆக | நள்ளென்ற நடுயாமத்தில்
நமக்கு உற்றதுணையாக இருக்கும் பொருட்டு |
நம்மொடு பசலை
நோன்று தம்மொடு | நம்முடனே இப்பசலை
நோயையும் இதுவரை பொறுத்திருந்து, இப்போது அவரோடு |
தானே சென்ற
நலனும் | தானே போய்விட்ட நமது
பெண்மை நலத்தை |
நல்கார்-கொல்லோ
நாம் நயந்திசினோரே | இனி நமக்கு அருள
மாட்டாரோ, நாம் விரும்பும் நம் தலைவர். |
| |
#104 முல்லை
மதுரை மருதன் இளநாகனார் | #104 முல்லை மதுரை
மருதன் இளநாகனார் |
வேந்து வினை
முடித்த_காலை தேம் பாய்ந்து | வேந்தன் தனது போரினை
முடித்த பின்னர், திசைகள் எல்லாம் பறந்து |
இன வண்டு
ஆர்க்கும் தண் நறும் புறவின் | கூட்டமான வண்டுகள்
ஆரவாரிக்கும் குளிர்ந்த மணங்கமழும் முல்லைநிலத்தில் |
வென் வேல்
இளையர் இன்புற வலவன் | வெற்றி பொருந்திய
வேலினையுடைய இளைஞர் இன்பம் அடைய, தேர்ப்பாகன் |
வள்பு வலித்து
ஊரின் அல்லது முள் உறின் | கடிவாளத்தை இழுத்துப்
பிடித்துச் செலுத்தாமல், தாற்றுக்கோலைக் குதிரைகள் மீது பாய்ச்சினால் |
முந்நீர்
மண்டிலம் ஆதி ஆற்றா | கடல்சூழ்ந்த உலகமே
அதன் ஓட்டத்திற்கு ஆற்றாத |
நன்னால்கு
பூண்ட கடும் பரி நெடும் தேர் | மிக்க வேகமுடைய நல்ல
நான்கு குதிரைகள் பூட்டப்பெற்ற நீண்ட தேரில் |
வாங்கு சினை
பொலிய ஏறி புதல | அதன் வளைவான கொடிஞ்சி
பொலிவுறுமாறு ஏறி, புதர்களில் படர்ந்த |
பூ கொடி அவரை
பொய் அதள் அன்ன | பூக்களையுடைய கொடியின்
அவரையின் உள்ளீடற்ற பிஞ்சுகளின் பொய்த்தோல் போன்ற |
உள் இல் வயிற்ற
வெள்ளை வெண் மறி | உள்ளீடில்லாத
வயிற்றையுடைய வெள்ளாட்டின் வெண்ணிறமான குட்டிகள் |
மாழ்கி அன்ன
தாழ் பெரும் செவிய | மயங்கி விழுந்தாற்
போன்று தாழ்ந்து தொங்குகின்ற பெரிய செவியையுடைனவாய் |
புன் தலை
சிறாரோடு உகளி மன்று உழை | பரட்டைத்தலையையுடைய
சிறுவர்களோடு குதித்துச் சென்று, மன்றத்தின் பக்கத்திலுள்ள |
கவை இலை ஆரின்
அம் குழை கறிக்கும் | கவடுபட்ட
இலைகளையுடைய ஆத்திமரத்தின் அழகிய தளிரைக் கடிக்கும் |
சீறூர் பல
பிறக்கு ஒழிய மாலை | சிறிய ஊர்கள் பல
பின்னே போய் மறைந்திட, மாலைப்பொழுதில் |
இனிது
செய்தனையால் எந்தை வாழிய | இனியது ஒன்றைச்
செய்தாய், எம் பெருமானே, நீர் வாழ்க! |
பனி வார்
கண்ணள் பல புலந்து உறையும் | நீர்வடியும்
கண்ணையுடையவளாய், பலவற்றையும் எண்ணி வெறுத்து வீட்டிலிருக்கும் |
ஆய் தொடி அரிவை
கூந்தல் | ஆராய்ந்தெடுத்த
வளையலையுடைய தலைவி தன் கூந்தலில் |
போது குரல்
அணிய வேய்தந்தோயே | மலர்ச் சரங்களை
அணிந்துகொள்ளும்படி சூட்டிவிட்டாய். |
| |
#105 பாலை
தாயங்கண்ணனார் | #105 பாலை
தாயங்கண்ணனார் |
அகல் அறை
மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை | அகன்ற பாறை அருகில்
அரும்புகள் முதிர்ந்த வேங்கையின் மலரோடு |
ஒள் இலை தொடலை
தைஇ மெல்லென | ஒளிவிடும்
பச்சிலையையும் கலந்து தொடுத்த மாலையைச் சூட்டிவிட்டு, மென்மையாக |
நல் வரை நாடன்
தன் பாராட்ட | நல்ல மலைநாடனாகிய தன்
காதலன் தன்னைப் பாராட்ட (அவனுடன் போவது) |
யாங்கு
வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து | எப்படித்தான் அவளால்
முடிந்ததோ? தேனை ஊற்றி, |
மணி செய் மண்டை
தீம் பால் ஏந்தி | மணிகள் பதித்த
பொன்னாலான பாத்திரத்தில் இனிய பாலினை எடுத்துக்கொண்டு |
ஈனா தாயர்
மடுப்பவும் உண்ணாள் | செவிலித்தாய்மார்
ஊட்டிவிடவும், அதனை உண்ணாதவளான அவள், |
நிழல் கயத்து
அன்ன நீள் நகர் வரைப்பின் | நிழலுள்ள குளம் போல
உயர்ந்த மாடங்களைக் கொண்ட எம் மாளிகையிலுள்ள |
எம் உடை
செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு | பெரிய செல்வத்தையும்
பொருட்டாக நினைக்கவில்லை; தன் காதலனின் பொய்யான பேச்சில் மயங்கி, |
பந்து புடைப்பு
அன்ன பாணி பல் அடி | பந்தை அடிப்பதைப்
போன்ற தாளத்துக்குப் பொருத்தமான பலவகையான அடியிட்டு நடத்தலையும், |
சில் பரி
குதிரை பல் வேல் எழினி | மெல்லென்ற
ஓட்டத்தையும் உடைய குதிரைகளையும், பெரிய வேற்படையினையும் உடைய எழினி என்பவனின் |
கெடல் அரும்
துப்பின் விடு தொழில் முடி-மார் | ஒருகாலத்திலும்
கெட்டுப்போகாத வலிமையினால் தமக்குப் பணித்த தொழிலைச் செய்து முடிக்கும் பொருட்டு |
கனை எரி நடந்த
கல் காய் கானத்து | மிகுந்த தீப்போன்ற
கதிர்கள் பரவிப் பாறைகள் சுடுகின்ற காட்டில் |
வினை வல்
அம்பின் விழு தொடை மறவர் | தமது தொழிலில் வல்ல
அம்புகளைக் குறி தப்பாமல் தொடுப்பதில் சிறந்த மறவர்கள் |
தேம் பிழி
நறும் கள் மகிழின் முனை கடந்து | தேனால் சமைத்த
நறிய கள்ளைப் பருகியதன் செருக்கினோடு பகைவர்களைப் போர்க்களத்தில்
வீழ்த்தி வென்று |
வீங்கு மென்
சுரைய ஏற்று_இனம் தரூஉம் | பருத்த மென்மையான
மடியினையுடைய, காளைகளோடு கூடிய ஆனினத்தைக் கைப்பற்றிக் கொண்டுவரும் |
முகை தலை
திறந்த வேனில் | பகைமை நிறைந்த பலவாகிய
வழிகளில் – மலைகள் வெடித்துப் பிளவுகளாய்த் திறக்குமளவிற்கான வேனில்
பருவத்தில் – |
பகை தலைமணந்த
பல் அதர் செலவே | போவது – (எப்படித்தான்
அவளால் முடிந்ததோ?) |
| |
#106 மருதம்
ஆலங்குடி வங்கனார் | #106 மருதம் ஆலங்குடி
வங்கனார் |
எரி அகைந்து
அன்ன தாமரை பழனத்து | தீ கொழுந்து
விட்டாற்போல இதழ் திறந்து மலருகின்ற தாமரை மலர்களையுடைய வயல்களில் |
பொரி அகைந்து
அன்ன பொங்கு பல் சிறு மீன் | நெல்லைப்
பொரிக்கும்போது பொரிகள் தெரிப்பது போலத் துள்ளுகின்ற பலவாகிய சிறிய மீன்களைப் |
வெறி கொள்
பாசடை உணீஇயர் பைப்பய | பற்றித் தின்பதற்காக,
மணமுடைய பசிய இலையின்மேல் மெல்ல மெல்ல |
பறை தபு முது
சிரல் அசைபு வந்து இருக்கும் | பறக்க முடியாத வயதான
மீன்கொத்திப்பறவை அசைந்து வந்து இருக்கும் |
துறை கேழ் ஊரன்
பெண்டு தன் கொழுநனை | நீர்த்துறை பொருந்திய
மருதநிலத்துத் தலைவனின் மனைவி, தன் கணவனை |
நம்மொடு
புலக்கும் என்ப நாம் அது | நம்முடன்
இணைத்துப்பேசிப் பிணக்கம் கொள்கிறாள் என்கிறார்கள்; நாம் அப்படிச் |
செய்யாம்
ஆயினும் உய்யாமையின் | செய்யவில்லையென்றாலும்,
அவள் கூறும் பழியிலிருந்து தப்பிக்க முடியாதாகையால் |
செறி தொடி
தெளிர்ப்ப வீசி சிறிது அவண் | செறிவான வளையல்கள்
ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு கொஞ்ச நேரம் அந்த இடத்தில் |
உலமந்து வருகம்
சென்மோ தோழி | சுற்றித்திரிந்துவிட்டு
வருவோம், செல்லலாம் தோழியே! |
ஒளிறு வாள்
தானை கொற்ற செழியன் | ஒளிர்கின்ற
வாட்படையினையுடைய வெற்றி பொருந்திய பாண்டியன் |
வெளிறு இல்
கற்பின் மண்டு அமர் அடு-தொறும் | குற்றமில்லாத
படைப்பயிற்சியுடன் தான் மேற்கொண்டு சென்ற போர்க்களங்களில் வாகைசூடும்போதெல்லாம் |
களிறு பெறு
வல்சி பாணன் எறியும் | களிற்றியானையைப்
பரிசிலாகப் பெறுவதனால் உண்டு வாழ்கின்ற அம்மன்னனுடைய பாணன் அடிக்கின்ற |
தண்ணுமை
கண்ணின் அலைஇயர் தன் வயிறே | தண்ணுமையினது
கண்ணைப்போல (அவள்) அடித்துக்கொள்ளட்டும் தன் வயிற்றை |
| |
#107 பாலை
காவிரிப்பூம்பட்டினத்துகாரிக்கண்ணனார் | #107 பாலை
காவிரிப்பூம்பட்டினத்துகாரிக்கண்ணனார் |
நீ செலவு அயர
கேள்-தொறும் பல நினைந்து | நீ இவளை உடன்
கொண்டுசெல்லும் விருப்பத்தினை அவள் கேட்கும்போதெல்லாம் பலவற்றையும் நினைந்து; |
அன்பின்
நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்த | அன்புடைய தனது
நெஞ்சத்தினுள்ளே அந்நினைவுகளை ஆராய்ந்து பார்த்து, துன்பச்சுமையால் மெலிந்துள்ள |
என் அகத்து
இடும்பை களை-மார் நின்னொடு | எனது நெஞ்சத்தின்
துன்பத்தை நீக்கும்பொருட்டு, (உன்னுடன்), |
கரும் கல்
வியல் அறை கிடப்பி வயிறு தின்று | கருங்கல்லாலான அகன்ற
பாறையில் கிடத்தி, வயிற்றுப்பகுதியைத் தின்றுவிட்டு |
இரும் புலி
துறந்த ஏற்று மான் உணங்கல் | பெரிய புலி
விட்டுச்சென்ற ஆண்மானின் காய்ந்துபோன தசையை, |
நெறி செல்
வம்பலர் உவந்தனர் ஆங்கண் | வழிப்போக்கரான
புதியவர்கள் கண்டு மகிழ்ச்சிகொண்டு, அவ்விடத்தில் |
ஒலி கழை
நெல்லின் அரிசியொடு ஓராங்கு | காற்றால் ஒலிக்கின்ற
முங்கிலில் விளைந்த நெல்லின் அரிசியுடன் சேர்த்து |
ஆன் நிலை பள்ளி
அளை பெய்து அட்ட | பசுமாடுகள்
கிடைபோட்டிருக்கும் இடத்தில் கிடைக்கும் தயிரை ஊற்றிச் சமைத்த |
வால் நிணம்
உருக்கிய வாஅல் வெண் சோறு | வெண்மையான கொழுப்பை
உருக்கிக் கூட்டிய மிகவும் வெண்மையான சோற்றினைப் |
புகர் அரை
தேக்கின் அகல் இலை மாந்தும் | புள்ளிகளைக்கொண்ட
அடிமரத்தையுடைய தேக்கின் அகன்ற இலையிலிட்டு உண்ணும், |
கல்லா நீள்மொழி
கத நாய் வடுகர் | கல்வியறிவில்லாத
நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயைடைய வடுகமறவரின் |
வல் ஆண் அரு
முனை நீந்தி அல்லாந்து | வலிய ஆண்மை
விளங்குகின்ற கடத்தற்கரிய போர்க்களங்களையும் கடந்து சென்று, (துன்பம் மிக்கு) |
உகு மண் ஊறு
அஞ்சும் ஒரு கால் பட்டத்து | சரிந்து விழும்
மண்ணினால் ஏற்படும் தீங்குக்கு அஞ்சும்படியான ஒற்றையடிப் பாதையில் |
இன்னா ஏற்றத்து
இழுக்கி முடம் கூர்ந்து | இன்னாததான ஏற்றத்தில்
ஏறும்போது வழுக்கி விழுந்து, கால்கள் மடங்கிக்கொண்டு (துன்பம் மிக்கு) |
ஒரு தனித்து
ஒழிந்த உரன் உடை நோன் பகடு | தன்னந்தனியே கிடக்கும்
உடல்வலிமை வாய்ந்த பொதி சுமக்கும் காளையினுக்கு |
அம் குழை
இருப்பை அறை வாய் வான் புழல் | அழகிய தளிரையுடைய
இலுப்பையின் வெட்டுப்பட்ட வாயையும், வெள்ளிய உள்துளையையும் உடைய பூவை |
புல் உளை
சிறாஅர் வில்லின் நீக்கி | புன்மையான
தலைமயிரையுடைய சிறுவர்கள் தம் வில்லினால் வீழ்த்தி, (அதனைத் தின்னவரும்) |
மரை கடிந்து
ஊட்டும் வரை_அக சீறூர் | மரைமானைத் துரத்தி
(காளையினுக்கு) உண்ணக்கொடுக்கும் மலையிடத்து அமைந்த சிறிய ஊர்களில் |
மாலை இன் துணை
ஆகி காலை | மாலைக் காலத்தில்
உனக்கு இனிய துணையாகத் தங்கி, காலையில் |
பசு நனை நறு வீ
பரூஉ பரல் உறைப்ப | புதிய தேனையுடைய நறிய
மலர்கள் பருத்த பரற்கற்களின் மேல் உதிர்ந்துகிடத்தலால் |
மண மனை கமழும்
கானம் | திருமண மனை போல
நறுமணங் கமழுகின்ற காட்டுவழியே |
துணை ஈர் ஓதி
என் தோழியும் வருமே | உன் வாழ்க்கைத்
துணைவியாகிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழியும் (உன்னுடன்) வருவாள் |
| |
#108 குறிஞ்சி
தங்கால் பொற்கொல்லனார் | #108 குறிஞ்சி தங்கால்
பொற்கொல்லனார் |
புணர்ந்தோர்
புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு | தாம் அன்புகொண்டவரின்
துன்பத்தை நீக்கி அவரைப் பாதுகாத்தருளுதலும் முழுதும் உணர்ந்த சான்றோர்க்குப் |
ஒத்தன்று-மன்னால்
எவன்-கொல் முத்தம் | பொருந்திய செயலாம்,
ஆனால் இது எப்படியோ?, முத்துக்கள் |
வரை முதல்
சிதறிய வை போல் யானை | மலையடிவாரத்தில்
சிதறிக்கிடப்பது போல், யானையின் |
புகர் முகம்
பொருத புது நீர் ஆலி | புள்ளியினையுடைய
முகத்தில் மோதிய புதிய ஆலங்கட்டி |
பளிங்கு
சொரிவது போல் பாறை வரிப்ப | பளிங்கினைச் சொரிவது
போல பாறையில் விழுந்து அழகுசெய்ய, |
கார் கதம்பட்ட
கண் அகன் விசும்பின் | மேகங்கள் சினந்தெழுந்த
இடம் அகன்ற வானத்தில் |
விடு பொறி
ஞெகிழியின் கொடி பட மின்னி | தீக்கடைகோலிலிருந்து
தெறித்து விழும் பொறிகளைப் போல கொடிவிட்டு மின்னி |
படு மழை
பொழிந்த பானாள் கங்குல் | மிக்க மழையைப் பொழிந்த
நடுநாளாகிய இரவில், |
ஆர் உயிர்
துப்பின் கோள் மா வழங்கும் | அரிய உயிரினங்களையே
உணவாகக் கொண்ட கொல்லும் தொழிலையுடைய விலங்குகள் நடமாடும் |
இருள் இடை
தமியன் வருதல் யாவதும் | இருட்டுக்குள்ளே
தனியாக வருவதால் சிறிதளவும் |
அருளான் வாழி
தோழி அல்கல் | நமக்கு
அருள்செய்கின்றவனாய் இல்லை, வாழ்க தோழியே! – இரவினில் |
விரவு பொறி
மஞ்ஞை வெரீஇ அரவின் | புள்ளிகள் விரவிய
மயிலைக் கண்டு வெருண்டு, பாம்புகளின் |
அணங்கு உடை
அரும் தலை பை விரிப்பவை போல் | வருத்தத்தைத் தரும்
அரிய தலைகள் படமெடுப்பதைப்போன்று |
காயா மென் சினை
தோய நீடி | காயாம்பூவின் மெல்லிய
கிளைகளைத் தீண்டும்படி நீண்டு அரும்பிய |
பல் துடுப்பு
எடுத்த அலங்கு குலை காந்தள் | பல தூக்கிய
துடுப்புகள் போன்று அசையும் கொத்தாகிய காந்தளின் |
அணி மலர் நறும்
தாது ஊதும் தும்பி | அழகிய மலர்களிலுள்ள
நறிய தாதினை நுகருகின்ற வண்டுகள் |
கை ஆடு வட்டின்
தோன்றும் | கையில்வைத்து ஆடுகின்ற
சூதாடும்காயைப்போலத் தோன்றும் |
மை ஆடு சென்னிய
மலை கிழவோனே | மேகம் தவழும்
உச்சிகளைக்கொண்ட மலைக்கு உரியவன் – (நமக்கு அருள்செய்கின்றவனாய் இல்லை) |
| |
#109 பாலை
கடுந்தொடைகாவினார் | #109 பாலை கடுந்தொடை
காவினார் |
பல் இதழ் மென்
மலர் உண்கண் நல் யாழ் | பல இதழ்களையுடைய
மென்மையான மலர் போன்ற மையுண்ட கண்களையும், நல்ல யாழின் |
நரம்பு இசைத்து
அன்ன இன் தீம் கிளவி | நரம்பு ஒலிப்பது போன்ற
மிக இனிய சொற்களையும் உடைய |
நலம் நல்கு
ஒருத்தி இருந்த ஊரே | நமக்குத் எல்லா நலனும்
தரும் ஒப்பற்ற ஒருத்தி இருக்கும் ஊருக்கு (திரும்பிச் செல்ல வேண்டுமென்றால்), |
கோடு உழு
களிற்றின் தொழுதி ஈண்டி | பகைவர் மார்பினை
உழுகின்ற கொம்புகளையுடைய களிறுகளின் கூட்டம் கூட |
காடு கால்யாத்த
நீடு மர சோலை | அடர்ந்த காடாக வளர்ந்த
உயரமான மரங்களைக் கொண்ட சோலைகளும் – |
விழை வெளில்
ஆடும் கழை வளர் நனம் தலை | ஒன்றையொன்று
விரும்பும் அணில்கள் ஓடியாடித்திரியும் மூங்கில்கள் வளர்ந்த அகன்ற இடமும் – |
வெண் நுனை
அம்பின் விசை இட வீழ்ந்தோர் | தீட்டுவதால் வெள்ளையான
நுனிகளைக் கொண்ட அம்புகளின் வேகத்தால் இறந்தோரின் |
எண்ணு வரம்பு
அறியா உவல் இடு பதுக்கை | எண்ணிலடங்காத
தழையிட்டு மூடிய பதுக்கைகளையுடைய |
சுரம் கெழு
கவலை கோட்பால் பட்டு என | பாலைவெளியில்
இருக்கும் பல்வேறாய்ப் பிரியும் வழிகள் ஆறலைக் கள்வரால் கொள்ளப்பெற்றது என்று |
வழங்குநர்
மடிந்த அத்தம் இறந்தோர் | வழிச்செல்வோர்
இல்லாமற்போன கடினமான பாதையில் அறியாமல் வந்தவர்களின் |
கைப்பொருள்
இல்லை ஆயினும் மெய் கொண்டு | கையில் பொருள்
இல்லையாயினும் அவரின் உடம்பைப் பற்றிக்கொண்டு (மனமிரங்கி) |
இன் உயிர்
செகாஅர் விட்டு அகல் தப்பற்கு | அவரின் உயிரினைக்
கொல்லாதவராய் அவரை விட்டுவிட்ட தவறுக்காக, |
பெரும் களிற்று
மருப்பொடு வரி அதள் இறுக்கும் | பெரிய களிற்றின்
கொம்புடன் புலியின் வரியினைக் கொண்ட தோலினைத் தண்டமாக வசூலிக்கும் |
அறன் இல்
வேந்தன் ஆளும் | அறப்பண்பு
சிறிதுமில்லாத எயினர் வேந்தன் ஆளுகின்ற |
வறன்_உறு
குன்றம் பல விலங்கினவே | வறங்கூர்ந்து
பாழ்பட்டுக்கிடக்கும் மலைகள் பற்பலவும் – இடையிட்டுக் கிடக்கின்றனவே |
| |
#110 நெய்தல்
போந்தை பசலையார் | #110 நெய்தல் போந்தை
பசலையார் |
அன்னை
அறியினும் அறிக அலர் வாய் | அன்னையானவள்
தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொள்ளட்டும், அலர்தூற்றும் வாயினால் |
அம் மென் சேரி
கேட்பினும் கேட்க | ’அம்’ என்னும்
ஒலியுடன் இச்சேரியில் வாழ்கின்ற மகளிர்
கேட்டாலும் கேட்டுக்கொள்ளட்டும் |
பிறிது ஒன்று
இன்மை அறிய கூறி | (தலைவியின்
மெய்வேறுபாட்டிற்கு) வேறொரு காரணம் இல்லையென்பதை நீ தெளிவாய்த் தெரிந்து கொள்ள, |
கொடும் சுழி
புகாஅர் தெய்வம் நோக்கி | வளைந்த சுழிகளையுடைய
ஆற்றின் சங்கமுகத்திலுள்ள தெய்வத்தை நோக்கிச் |
கடும் சூள்
தருகுவன் நினக்கே கானல் | சத்தியம்செய்து
சொல்லுவேன் உனக்கு, கடற்கரைச் சோலையில் |
தொடலை ஆயமொடு
கடல் உடன் ஆடியும் | எம்மை மாலை போலத்
தொடர்ந்து வரும் தோழிமார் கூட்டத்தோடு சென்று கடலில் சேர்ந்து நீராடியும் |
சிற்றில்
இழைத்தும் சிறு சோறு குவைஇயும் | மணல்வீடு
கட்டிக்கொண்டும், மணற்சோறு சமைத்துக்கொண்டும் |
வருந்திய
வருத்தம் தீர யாம் சிறிது | விளையாடி வருந்திய
வருத்தம் தீரும்படி சிறிது நேரம் நாங்கள் |
இருந்தனம் ஆக
எய்த வந்து | இளைப்பாறி
இருக்கும்போது, கிட்டே வந்து |
தட மென் பணை
தோள் மட நல்லீரே | ”பெரிய, மென்மையான,
மூங்கில் போலும் தோள்களையுடைய மடப்பம் பொருந்திய நல்ல பெண்களே! |
எல்லும்
எல்லின்று அசைவு மிக உடையேன் | பகல்நேர வெளிச்சமும்
குறைந்தது, களைப்பாயிருக்கிறேன், |
மெல் இலை
பரப்பின் விருந்து உண்டு யானும் இ | இந்த மெல்லிய
இலைப்பரப்பில் நீங்கள் ஆக்கிய சிறுசோற்றை விருந்தினனாக உண்டு, நானும் இந்த |
கல்லென்
சிறுகுடி தங்கின் மற்று எவனோ | ஆரவாரமுடைய
சிறுகுடியில் தங்கினால் என்ன?” |
என மொழிந்தனனே
ஒருவன் அவன் கண்டு | என்று (கேலியாகக்)
கேட்டான் ஒருவன், அவனைக் கண்டு |
இறைஞ்சிய
முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி | முகத்தைக்
கவிழ்த்துக்கொண்டு, ஒருவர் முதுகை ஒருவர் பற்றிக்கொண்டு |
இவை நுமக்கு
உரிய அல்ல இழிந்த | “இந்தச் சாப்பாடு
உமக்குப் பொருத்தமானது அல்ல, இழிந்த |
கொழு மீன்
வல்சி என்றனம் இழுமென | கொழுமீனால் ஆக்கிய
சோறு” என்று கூறினோம், சட்டென்று |
நெடும் கொடி
நுடங்கும் நாவாய் தோன்றுவ | “நீண்ட கொடிகள்
அசையும் தோணிகள் தோன்றுகின்றன, |
காணாமோ என
காலின் சிதையா | போய்ப் பார்ப்போமா?”
என்று அந்த மணல்வீடுகளைக் காலினால் சிதைத்துவிட்டு |
நில்லாது
பெயர்ந்த பல்லோருள்ளும் | நிற்காமல் ஓடிப்போன
பலருக்குள் |
என்னே குறித்த
நோக்கமொடு நன்_நுதால் | என்னையே
உற்றுப்பார்த்த பார்வையுடன், “நல்ல நெற்றியையுடையவளே! |
ஒழிகோ யான் என
அழி_தக கூறி | நான் போகட்டுமா?”
என்று தனது நெஞ்சம் வருத்தப்படச் சொல்லிவிட்டு |
யான் பெயர்க
என்ன நோக்கி தான் தன் | நான் ”போங்கள்” என்று
சொல்லியும், (போகாமல்) பார்த்துக்கொண்டே, தனது |
நெடும் தேர்
கொடிஞ்சி பற்றி | நீண்ட தேரின்
கொடிஞ்சியைப் பிடித்துக்கொண்டு |
நின்றோன்
போலும் என்றும் என் மகட்கே | நின்றிருந்தவனே என்
மகளின் மெய்வேறுபாட்டிற்குக் காரணம் போலும் – (என்று அன்னை அறியினும் அறிக) |
| |
| |
| |
| |
| |
#111 பாலை பாலை
பாடிய பெருங்கடுங்கோ | #111 பாலை பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
உள் ஆங்கு
உவத்தல் செல்லார் கறுத்தோர் | தம் முன்னோர் வைத்துப்
போன பொருள் உள்ள அளவிலே மகிழ்ந்திருக்கமாட்டாராய், தம் பகைவர் |
எள்ளல்
நெஞ்சத்து ஏஎ சொல் நாணி | இகழும் நெஞ்சத்தோடு
கூறுகின்ற அம்பு போன்ற பழிச் சொல்லிற்கு நாணி, (பொருளீட்டச்சென்றவர்) |
வருவர் வாழி
தோழி அரச | விரைவில்
வந்துவிடுவார், வாழ்க தோழியே, பட்டத்து |
யானை கொண்ட
துகில் கொடி போல | யானை தன் கையில்
உயர்த்திப் பிடித்த பட்டுக்கொடியினைப் போல |
அலந்தலை
ஞெமையத்து வலந்த சிலம்பி | காய்ந்துபோன ஞெமை
மரத்தின் மீது பின்னிய சிலந்திக்கூடு |
ஓடை குன்றத்து
கோடையொடு துயல்வர | ஓடைக்குன்றம் என்னும்
குன்றிலுள்ள மேல்காற்றினால் அசைய, |
மழை என மருண்ட
மம்மர் பல உடன் | அதைப் பார்த்து மேகம்
என்று குழம்பிப்போன மயக்கத்தையுடைய கூட்டமாகச் சேர்ந்த |
ஓய் களிறு
எடுத்த நோய் உடை நெடும் கை | ஓய்ந்துபோன களிறுகள்
தூக்கிய வருத்தத்தையுடைய நீண்ட கைகள் |
தொகு சொல்
கோடியர் தூம்பின் உயிர்க்கும் | புரவலரின் புகழைத்
தொகுத்துப்பாடும் கூத்தர்களின் தூம்புகளைப் போல் ஒலியெழுப்பும் |
அத்த கேழல்
அட்ட நல் கோள் | காட்டு வழியிலுள்ள
ஆண்பன்றியினைக் கொன்ற நல்ல இரையைக் கொண்ட |
செந்நாய் ஏற்றை
கம்மென ஈர்ப்ப | ஆண் செந்நாய் விரைவாக
அதனை இழுக்க, |
குருதி ஆரும்
எருவை செம் செவி | ஒழுகிய குருதியைக்
குடிக்கும் பருந்தின் சிவந்த செவிகள் |
மண்டு அமர்
அழுவத்து எல்லி கொண்ட | மறவர்கள் திரண்டு
சென்று போரிடும் போர்க்களத்தில் இரவினில் மறவர்கள் தம் கையில் கொண்ட |
புண் தேர்
விளக்கின் தோன்றும் | விழுப்புண்பட்டு
விழுந்த மறவருடைய புண்ணை ஆய்வதற்குரிய விளக்குகளைப் போலக் காணப்படுகின்ற |
விண் தோய்
பிறங்கல் மலை இறந்தோரே | வானைத் தோயும்
குவியலான மலையைக் கடந்து சென்ற நம் தலைவர் – (விரைவில் வந்துவிடுவார்) |
| |
#112 குறிஞ்சி
ஆவூர் கிழார் | #112 குறிஞ்சி ஆவூர்
கிழார் |
கூனல் எண்கின்
குறு நடை தொழுதி | கூனிய முதுகினையுடைய
கரடிகளின் குறுகக்குறுக அடியெடுத்து நடக்கும் கூட்டம் |
சிதலை செய்த
செம் நிலை புற்றின் | கறையான்கள் கட்டிய
செங்குத்தாய் நிற்கும் நிலையினையுடைய புற்றினது |
மண் புனை
நெடும் கோடு உடைய வாங்கி | மண்ணால் புனைந்த நெடிய
குவடுகள் உடைந்து போகும்படி அகழ்ந்தெடுத்து |
இரை நசைஇ
பரிக்கும் அரைநாள் கங்குல் | புற்றாஞ்சோறாகிய இரையை
விரும்பித் தின்பதற்குச் செல்லுகின்ற இந்த நள்ளிரவின் இருளினூடே, |
ஈன்று அணி வயவு
பிண பசித்து என மற புலி | அண்மையில் குட்டியை
ஈன்ற, வேட்கையையுடைய பெண்புலி பசித்ததாக தறுகண்மையையுடைய ஆண்புலி |
ஒளிறு ஏந்து
மருப்பின் களிறு அட்டு குழுமும் | ஒளிவீசும் ஏந்திய
கொம்புகளையுடைய ஆண்யானையைக் கொன்று முழங்குகின்ற |
பனி இரும் சோலை
எமியம் என்னாய் | குளிர்ந்த அடர்ந்த
இருட்டான சோலையில் நாங்கள் தனித்திருக்கிறோம் என்று நினைக்காதவனாய் |
தீங்கு
செய்தனையே ஈங்கு வந்தோயே | இங்கு வந்ததினால்
எமக்குத் தீங்கினையே செய்திருக்கிறாய். |
நாள்
இடைப்படின் என் தோழி வாழாள் | அதனால் நீ
வராமற்போனால் ஒரு நாள் இடைப்பட்டாலும் என் தலைவி உயிர் வாழாள் |
தோள்_இடை
முயக்கம் நீயும் வெய்யை | ஒவ்வொருநாளும் என்
தலைவியின் தோள்களை முயங்குதலை நீயும் விரும்புகின்றாய் |
கழிய காதலர்
ஆயினும் சான்றோர் | எவ்வளவுதான் காதலர்
என்றாலும் சான்றோராயிருப்பவர்கள் |
பழியொடு வரூஉம்
இன்பம் வெஃகார் | பழியுடன் சேர்ந்து
வரும் இன்பத்தினை விரும்பமாட்டார், |
வரையின் எவனோ
வான் தோய் வெற்ப | கலியாணம்
செய்துகொண்டால் என்ன? வானைத் தோயும் மலைநாட்டவனே! |
கண கலை
இகுக்கும் கறி இவர் சிலம்பின் | கூட்டமான கலைமான்கள்
அடிக்குரலில் தாழ ஒலிக்கும் மிளகுக் கொடி படர்ந்த இம் மலைச் சாரலில் |
மணப்பு அரும்
காமம் புணர்ந்தமை அறியார் | எய்துவதற்கு அரிய
களவொழுக்கத்தால் நீங்கள் ஏற்கனவே சேர்ந்திருப்பதை அறியாத எம் சுற்றத்தார் |
தொன்று இயல்
மரபின் மன்றல் அயர | தொன்றுதொட்டு வரும்
முறைப்படி பெண்கேட்டுவந்து, மணவிழாவும் நடந்தால் |
பெண்கோள்
ஒழுக்கம் கண் கொள நோக்கி | நீ இவளை மனைவியாகக்
கொள்ளும் சடங்குகளையும் உங்கள் மணக் கோலங்களையும் கண்ணாரக் கண்டு |
நொதுமல்
விருந்தினம் போல இவள் | யாரோ அயலாராகிய
விருந்தினர்போல இருந்து, இவளின் |
புது நாண்
ஒடுக்கமும் காண்குவம் யாமே | புதிய நாணமாகிய
அடக்கத்தையும் காண்பேன் நான். |
| |
#113 பாலை
கல்லாடனார் | #113 பாலை கல்லாடனார் |
நன்று அல்
காலையும் நட்பின் கோடார் | தம் நண்பர் நன்றாக
இல்லாத காலத்திலும் தமது நட்புப்பண்பில் மாறுபடாமல் |
சென்று
வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் | துன்பமுற்ற அவரிடம்
சென்று அவர் வழி நின்று அவர்க்கு உதவும் பிறழாத தமது கோட்பாடு காரணமாக, |
புன் தலை மட
பிடி அகவுநர் பெருமகன் | புல்லிய தலையையுடைய
இளைய பிடி யானைகளைப் பாணர்க்குத் தரும் தலைவனான, |
மா வீசு வண்
மகிழ் அஃதை போற்றி | பிடியுடன் களிற்றையும்
வாரி வழங்கும் தனது வள்ளன்மையால் இன்புறும் அஃதை என்பவனைப் பாதுகாத்து, |
காப்பு
கைந்நிறுத்த பல் வேல் கோசர் | அவனைக் காவல் மிகுந்த
இடத்தில் நிலைநிறுத்திய பல வேல்படையினையுடைய கோசர் என்பவரின் |
இளம் கள்
கமழும் நெய்தல் அம் செறுவின் | புதிய கள் கமழும்
நெய்தலம்செறு என்னும் |
வளம் கெழு நன்
நாடு அன்ன என் தோள் மணந்து | வளம் பொருந்திய நல்ல
நாட்டைப் போன்ற என் தோளினைச் சேர்ந்து, |
அழுங்கல்
மூதூர் அலர் எடுத்து அரற்ற | ஆரவாரமுடைய பழைய ஊர்
அலராகிய பழிச்சொற்களை மிகுதியாகக் கூற, |
நல்காது துறந்த
காதலர் என்றும் | நமக்கு அருள்
செய்யாமல் நம்மைப் பிரிந்து சென்ற நம் காதலர், எப்பொழுதும் |
கல் பொரூஉ
மெலியா பாடு இன் நோன் அடியன் | கற்கள் தைத்து
மெலிந்துபோகாத (செருப்பணிந்த, அதன்) ஒசை இனிய வலிய அடியினையுடையவனும் |
அல்கு வன் சுரை
பெய்த வல்சியர் | மிக்க வலிய மூங்கிற்
குழாயில் வைத்த உணவினையுடையவராய், |
இகந்தனர்
ஆயினும் இடம் பார்த்து பகைவர் | தன் எல்லையைக் கடந்து
இருப்பவராயினும், நல்ல சமயம் பார்த்து, பகைவர்கள் |
ஓம்பினர்
உறையும் கூழ் கெழு குறும்பில் | பாதுகாப்புடன்
இருக்கும் உணவு மிக்க அரண்களில் சென்று |
குவை இமில்
விடைய வேற்று ஆ ஒய்யும் | திரண்ட இமிலையுடைய
காளைகளுடன் கூடிய பகைநாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து செலுத்திக்கொண்டுவரும் |
கனை இரும்
சுருணை கனி காழ் நெடு வேல் | செறிந்த கரிய பூணையும்
நெய் தடவிய தண்டையும் உடைய நீண்ட வேலினையும் |
விழவு அயர்ந்து
அன்ன கொழும் பல் திற்றி | விழாக் கொண்டாடியது
போன்ற கொழுமையான பல உணவையும் உடைய, |
எழாஅ பாணன் நன்
நாட்டு உம்பர் | பகைவர்க்குப்
புறங்கொடாத பாணன் என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பாற்பட்ட |
நெறி செல்
வம்பலர் கொன்ற தெவ்வர் | வழியில் செல்லும்
புதியவர்களைக் கொன்ற கள்வர்கள் |
எறி படை கழீஇய
சேய் அரி சின் நீர் | தங்களின் ஆயுதங்களைக்
கழுவிய சிவந்த நிறமுடைய அரித்தோடும் சிறிதளவு நீரையுடைய |
அறு துறை அயிர்
மணல் படு_கரை போகி | நடமாட்டம் அற்ற
துறையாகிய குறுமணல் பொருந்திய கரையினைத் தாண்டிச் சென்று |
சேயர் என்றலின்
சிறுமை உற்ற என் | மிகவும்
தொலைவிலுள்ளார் என்று பலரும் கூறுவதால் சிறுமைப்பட்டுப்போன என் |
கையறு
நெஞ்சத்து எவ்வம் நீங்க | செயலற்ற நெஞ்சத்தின்
துயரம் நீங்குமாறு |
அழாஅம்
உறைதலும் உரியம் பராரை | அழாமல் இருக்கவும்
உரியவராவோம், பருத்த அடிமரத்தில் கிளைத்த |
அலங்கல் அம்
சினை குடம்பை புல்லென | ஆடுகின்ற அழகிய
கிளையிலுள்ள தன் கூடு பொலிவிழந்துபோக |
புலம் பெயர்
மருங்கில் புள் எழுந்து ஆங்கு | இடம் மாறிச் சென்றுவிட
எண்ணிய பறவை பறந்து சென்றதைப் போல் |
மெய் இவண் ஒழிய
போகி அவர் | என் உடம்பு இங்கே
கிடக்க அதனின்றும் பிரிந்து புறப்பட்டு அவர் |
செய்_வினை
மருங்கில் செலீஇயர் என் உயிரே | வினையாற்றுமிடத்திற்குச்
செல்லட்டும் என் உயிர் |
| |
#114 முல்லை | #114 முல்லை |
கேளாய் எல்ல
தோழி வேலன் | ’கேட்பாயாக, ஏடி,
தோழியே! வேலன் |
வெறி அயர்
களத்து சிறு பல தாஅய | வெறியாடும் களத்தில்
சிறிய, பலவாகப் பரப்பப்பட்ட |
விரவு வீ
உறைத்த ஈர் நறும் புறவின் | கதம்பமான பூக்கள்
போலப் பூக்கள் உதிர்ந்துகிடக்கும் குளிர்ந்த மணங்கமழும் முல்லைநிலத்தில் |
உரவு கதிர்
மழுங்கிய கல் சேர் ஞாயிறு | வெப்பம் மிகுந்த
கதிர்கள் தம் வெம்மை மழுங்கப்பெற்று மேற்கு மலையினை அடைந்த ஞாயிறு |
அரவு நுங்கு
மதியின் ஐயென மறையும் | பாம்பு விழுங்கிய
மதியைப் போல மெதுவாக மறைகின்ற |
சிறு புன்
மாலையும் உள்ளார் அவர் என | பொலிவிழந்த இளம் மாலை
நேரத்திலும் நம்மை நினைத்துப்பார்க்கமாட்டார் அவர்’ என்று |
நம் புலந்து
உறையும் எவ்வம் நீங்க | (எம் காதலி) எம்மீது
பிணக்கம் கொண்டு இருக்கும் துன்பம் நீங்கும் வகையில் |
நூல் அறி வலவ
கடவு-மதி உவ காண் | குதிரைநூல்களைக் கற்ற
பாகனே! முன்னே பார்த்து செலுத்துவாயாக – |
நெடும் கொடி
நுடங்கும் வான் தோய் புரிசை | நெடிய கொடிகள்
அசைகின்ற வானத்தைத் தீண்டுமாறு உயர்ந்த மதிலில் |
யாமம் கொள்பவர்
நாட்டிய நளி சுடர் | நடுநிசிக் காவலர்கள்
ஏற்றிவைத்த ஒளி செறிந்த விளக்குகள் |
வான்_அக மீனின்
விளங்கி தோன்றும் | விண்மீன்கள் போன்று
விளக்கமுடன் தோன்றும் |
அரும் கடி
காப்பின் அஞ்சு வரு மூதூர் | அணுகுதற்கு அரிய
காவலையுடைய அச்சம்தரும் மூதூரிலுள்ள |
திரு நகர்
அடங்கிய மாசு இல் கற்பின் | செல்வம் நிறைந்த
மனையில் நாம் கூறியபடியே அடங்கியிருக்கின்ற குற்றமற்ற கற்பினையும் |
அரி மதர் மழை
கண் அமை புரை பணை தோள் | செவ்வரியோடிய மதர்த்த
குளிர்ந்த கண்ணையும் மூங்கில்போன்ற தோளையும் |
அணங்கு சால்
அரிவையை காண்குவம் | பிரிவாற்றாமையாகிய
துன்பத்தையும் உடைய எம் காதலியைக் காண்போம் |
பொலம் படை
கலி_மா பூண்ட தேரே | பொன் சேணம் அணிந்த
செருக்கினையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட தேரினை (முன்னே பார்த்து செலுத்துவாயாக) |
| |
#115 பாலை
மாமூலனார் | #115 பாலை மாமூலனார் |
அழியா விழவின்
அஞ்சுவரு மூதூர் | என்றும் ஒழிவில்லாத
விழாவினையுடைய, நல்லவர்கள் வாழ அச்சப்படும் பழைமையான ஊரினில் |
பழி இலர்
ஆயினும் பலர் புறங்கூறும் | ஒருவர் பழியேதும்
இல்லாதவரென்றாலும் அவரைப்பற்றிப் பலர் புறம்பேசும் |
அம்பல்
ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல் | அம்பலாகிய
ஒழுக்கத்தையும் கொண்டவராய், கடுஞ்சொற்களைப் பேசும் |
சேரி அம்
பெண்டிர் எள்ளினும் எள்ளுக | சேரிப்பெண்கள் நம்மை
இகழ்ந்து பேசினாலும் பேசட்டும், |
நுண் பூண்
எருமை குடநாட்டு அன்ன என் | நுட்பமான
தொழில்திறம் அமைந்த அணிகலன்களை அணிந்த எருமை என்பவனது குடநாட்டினைப்
போன்ற |
ஆய் நலம்
தொலையினும் தொலைக என்றும் | எனது அழகிய நலம்
ஒழிந்துபோனாலும் போகட்டும், என்றைக்கும் |
நோய் இலர் ஆக
நம் காதலர் வாய் வாள் | நோயில்லாமல்
இருப்பாராக நம் காதலர்; பாய்ச்சுதலில் தப்பாத வாளினைக் கொண்ட |
எவ்வி வீழ்ந்த
செருவில் பாணர் | எவ்வி என்பான் தோற்று
இறந்த போர்க்களத்தில், பாணர்கள் |
கைதொழு மரபின்
முன் பரித்து இடூஉ பழிச்சிய | கையால் தொழும்
முறைமையோடு, முன்னர் வாழ்த்திய, இப்போது ஒடித்துப்போட்ட |
வள் உயிர் வணர்
மருப்பு அன்ன ஒள் இணர் | வளவிய இசையினையுடைய
வளைந்த யாழின் கொம்புகளைப் போல, ஒளி பொருந்திய கொத்துக்களையுடைய |
சுடர் பூ
கொன்றை ஊழ்_உறு விளை நெற்று | விளக்குப் போன்ற
மலரையுடைய கொன்றையின்கண் முற்றி விளைந்த நெற்றுக்கள் |
அறை மிசை தாஅம்
அத்த நீள் இடை | பாறைமீது பரவலாக
உதிரும் சுரத்தின் நீண்ட நெறியிலுள்ள |
பிறை மருள்
வான் கோட்டு அண்ணல் யானை | இளம்பிறை போன்ற
வெண்மையான கொம்புகளையும் தலைமைப்பண்பையும் உடைய யானைப்படைகளையும் |
சினம் மிகு
முன்பின் வாம் மான் அஞ்சி | சினம் மிக்க
ஆற்றலுடன் தாவிப்பாயும் குதிரைப்படைகளையும் உடைய அதிகமான் நெடுமான் அஞ்சி |
இனம் கொண்டு
ஒளிக்கும் அஞ்சுவரு கவலை | ஆனிரைகளைக் கைப்பற்றி
மறைத்துவைக்கும் அச்சந்தோன்றும் பலவாகப் பிரியும் வழிகளிலே, |
நன்னர் ஆய்
கவின் தொலைய சேய் நாட்டு | நலம் பொருந்திய,
கண்டோர் ஆராய்ந்து போற்றத்தகுந்த நமது பேரழகு அழிந்து போகும்படி, தொலைவான
நாட்டில் |
நம் நீத்து
உறையும் பொருள்_பிணி | நம்மைப் பிரிந்து
வாழும் பொருளீட்டும் பணி |
கூடாமையின்
நீடியோரே | இன்னும்
கைகூடிவராததால் தம் இருப்பை நீட்டிக்கொண்டு செல்பவர் – (நோயில்லாமல் இருப்பாராக) |
| |
#116 மருதம்
பரணர் | #116 மருதம் பரணர் |
எரி அகைந்து
அன்ன தாமரை இடையிடை | தீ கொழுந்துவிட்டு
எரிவது போன்ற தாமரைப்பூக்களின் இடையிடையே |
அரிந்து கால்
குவித்த செந்நெல் வினைஞர் | செந்நெல்லை அறுத்து
அதன் தாளைக் குவித்துவைத்த கதிரறுப்போர் |
கள் கொண்டு
மறுகும் சாகாடு அளற்று உறின் | தங்களுக்குக் கள்ளினை
ஏற்றிக்கொண்டு அலைந்துதிரிந்துவரும் வண்டி சேற்றில் மாட்டிக்கொண்டால் |
ஆய் கரும்பு
அடுக்கும் பாய் புனல் ஊர | சிறந்த கரும்புத்
தட்டைகளை அடுக்கிவைத்து அண்டக்கொடுக்கும் நன்கு நீர் பாய்கின்ற ஊரின் தலைவனே, |
பெரிய நாண் இலை
மன்ற பொரி என | நிச்சயமாய் நீ
பெரிதும் வெட்கமில்லாதவனாயிருக்கிறாய், பொரியினைப் போல் |
புன்கு அவிழ்
அகன் துறை பொலிய ஒண் நுதல் | புங்கம்பூ மலரும்
அகன்ற நீர்த்துறை பொலிவுபெற, ஒளிபொருந்திய நெற்றியினையும் |
நறு மலர்
காண்வரும் குறும் பல் கூந்தல் | நறிய மலர்கள் நிறையச்
சூடிய காண்பதற்கினிய குட்டையான, பலவான கூந்தலையும், |
மாழை நோக்கின்
காழ் இயல் வன முலை | மாவடு போன்ற
கண்களையும், முத்துச்சரம் அசையும் அழகிய முலைகளையும், |
எஃகு உடை எழில்
நலத்து ஒருத்தியொடு நெருநை | நுண்மையுடைய அழகு
நலத்தினையும் உடைய ஒரு பரத்தையுடன், நேற்று |
வைகு புனல்
அயர்ந்தனை என்ப அதுவே | குளிர்ச்சி தங்கிய
நீரில் விளையாடினாய் என்று அறிந்தோர் எம்மிடம் கூறினர், அதுவேதான் |
பொய் புறம்
பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து | நாங்கள் பொய்யென்று
மறுத்து மூடி மறைக்கவும் எங்களையும் மீறி |
அலர் ஆகின்றால்
தானே மலர் தார் | ஊரெங்கும்
பெரும்பேச்சாய்ப்போய்விட்டது; அதுதான், மலர்ந்த பூமாலையினையும் |
மை அணி யானை மற
போர் செழியன் | மை கொண்டு அழகு செய்த
யானையையும் உடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டியனுடைய |
பொய்யா விழவின்
கூடல் பறந்தலை | என்றும் நீங்காத
திருவிழாக்களையுடைய மதுரை நகரத்தின் பக்கத்திலுள்ள போர்க்களத்திலே |
உடன் இயைந்து
எழுந்த இரு பெரு வேந்தர் | தம்முள் ஒன்று
சேர்ந்து போரிடுதற்கு எழுந்துவந்த சேரனும் சோழனுமாகிய இரண்டு முடி மன்னர்களும் |
கடல் மருள்
பெரும் படை கலங்க தாக்கி | அவருடைய கடல்போன்ற
பெரிய படைகளும் கலக்க மெய்தும்படி அவரோடு போர்செய்து |
இரங்கு இசை
முரசம் ஒழிய பரந்து அவர் | முழங்கும் ஓசையையுடைய
தம் போர்முரசங்களைக் கைவிட்டு நாற்றிசையினும் பரவி அம்மன்னர் |
ஓடு புறம் கண்ட
ஞான்றை | தம் படைகளோடு
ஓடும்போது (பாண்டியன்) அவரைப் புறங்கண்ட பொழுது |
ஆடு கொள் வியன்
களத்து ஆர்ப்பினும் பெரிதே | வெற்றிகொண்ட அகன்ற
போர்க்களத்தில் எழுந்த ஆரவாரத்தினும் பெரிதாக – (பெரும்பேச்சாய்ப்போய்விட்டது) |
| |
#117 பாலை | #117 பாலை |
மௌவலொடு
மலர்ந்த மா குரல் நொச்சியும் | தான் வளர்த்த
முல்லைக்கொடியோடு தான் விளையாடும் கரிய பூங்கொத்தினையுடைய நொச்சியின் நிழலையும் |
அம் வரி
அல்குல் ஆயமும் உள்ளாள் | அழகிய வரிகளையுடைய
அல்குலையுடைய தன் தோழிமாரையும் நினையாதவளாய் |
ஏதிலன் பொய்
மொழி நம்பி ஏர் வினை | யாரோ ஒருவன் கூறிய
பொய்யான மொழிகளை நம்பி, அழகிய வேலைப்பாடு மிக்க |
வளம் கெழு திரு
நகர் புலம்ப போகி | வளம் பொருந்திய அழகிய
எம் இல்லம் தனித்துக் கிடப்ப அவன் பின்னர்ச் சென்று |
வெருவரு கவலை
ஆங்கண் அருள்வர | அச்சம் வரக்கூடிய
பலவாறு பிரியும் வழியையுடைய அப் பாலைநிலத்தில், இரங்கத்தக்கதாக, |
கரும் கால் ஓமை
ஏறி வெண் தலை | கரிய அடியினையுடைய ஓமை
மரத்தின் மேல் ஏறி இருந்து, வெண்மையான தலையையுடைய |
பருந்து பெடை
பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் | பருந்து தனது பெடையினை
அழைக்கும் பாழ்பட்டுக் கிடந்த நாடாகிய அவ்விடத்தில் |
பொலம் தொடி
தெளிர்ப்ப வீசி சேவடி | பொன் வளையல்கள்
ஒலிக்கும்படியாகக் கைகளை வீசி, தன் சிவந்த அடிகளில் அணிந்த |
சிலம்பு நக
இயலி சென்ற என் மகட்கே | சிலம்புகள் சிரிப்பன
போல கலகலக்க நடந்து சென்ற என்னுடைய மகளுக்கு – |
சாந்து உளர்
வணர் குரல் வாரி வகை வகுத்து | நறுமணத்தைலத்தை
விரலில் தோய்த்துக் கோதி வளைந்த கொத்தான கூந்தலை வாரி, கால்காலாக வகுத்து |
யான் போது
துணைப்ப தகரம் மண்ணாள் | நான் மலர்களை
அவற்றிடையே சேர்ப்பதற்கு, மயிர்ச் சந்தனத்தைப் பூசிக்கொள்ளவும் மறுக்கின்றவள் |
தன் ஓர் அன்ன
தகை வெம் காதலன் | தன்னையே ஒத்த அழகையும்
விருப்பத்தையும் உடைய காதலனாகிய தலைவன் |
வெறி கமழ் பல்
மலர் புனைய பின்னுவிட | நறுமணங்கமழும்
பாலைநிலத்துப் பல்வேறு மலர்களையும் சூட்டுவதற்காகத் தன் கூந்தலைப் பின்னிவிட |
சிறுபுறம்
புதைய நெறிபு தாழ்ந்தன-கொல் | அவளுடைய சிறிய பிடரி
மறையும்படி அப் பின்னல்கள் அலையலையாய் தாழ்ந்து தொங்கினவோ – |
நெடும் கால்
மாஅத்து ஊழ்_உறு வெண் பழம் | நீண்ட அடியையுடைய
மாமரத்தில் முற்றிக் கனிந்த வெள்ளிய பழத்தை |
கொடும் தாள்
யாமை பார்ப்பொடு கவரும் | வளைந்த கால்களையுடைய
ஆமையும் அதன் குஞ்சும் கவர்ந்து தின்னுகின்ற |
பொய்கை சூழ்ந்த
பொய்யா யாணர் | பொய்கைகள் சூழ்ந்துள்ள
என்றும் பொய்க்காத புதுவருவாயையுடைய |
வாணன் சிறுகுடி
வடாஅது | வாணனது சிறுகுடி
என்னும் ஊர்க்கு வடக்கே இருக்கும் |
தீம் நீர்
கான்யாற்று அவிர் அறல் போன்றே | இனிய நீருள்ள
காட்டாற்றின் நெளிநெளியாய் இருக்கும் கருமணல் போன்று – அலையலையாய் தொங்கினவோ! |
| |
#118 குறிஞ்சி
கபிலர் | #118 குறிஞ்சி கபிலர் |
கறங்கு வெள்
அருவி பிறங்கு மலை கவாஅன் | ஆரவாரிக்கின்ற வெள்ளிய
அருவியையுடைய விளக்கமான எமது உச்சிமலைச் சாரலிலே |
தேம் கமழ் இணர
வேங்கை சூடி | தேன் மணங்கமழுகின்ற
பூங்கொத்துக்களிலே மலர்ந்துள்ள வேங்கை மலரை அணிந்து கொண்டு |
தொண்டக_பறை
சீர் பெண்டிரொடு விரைஇ | தொண்டகப்பறையின்
தாளத்திற்கு ஏற்றாற்போல, மகளிரொடு கலந்து |
மறுகில்
தூங்கும் சிறுகுடி பாக்கத்து | தெருவில் குரவைக்
கூத்தாடுகின்ற சிறுகுடியாகிய எமது ஊரினில் |
இயல் முருகு
ஒப்பினை வய நாய் பிற்பட | வடிவங்கொண்டு வருகின்ற
முருகனைப் போன்ற அழகுடையவனாய், வலிய வேட்டைநாய்கள் பின்னே வர |
பகல் வரின்
கவ்வை அஞ்சுதும் இகல் கொள | பகல்நேரத்தில் வந்தால்
ஊரார் கூறும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகிறோம், பகைமை கொள்ளும்படி, |
இரும் பிடி
கன்றொடு விரைஇய கய வாய் | கரிய பெண்யானையோடும்
கன்றோடும் கூடிய அகன்ற வாயினையுடைய |
பெரும் கை யானை
கோள் பிழைத்து இரீஇய | நீண்ட கையினைக் கொண்ட
யானையைக் கொள்ளுதல் பிழைத்து, அவை மறைந்திருக்கும்படி செய்த |
அடு புலி
வழங்கும் ஆர் இருள் நடுநாள் | கொல்லும் புலி
நடமாடும் மிகுந்த இருள் சூழ்ந்த நள்ளிரவில் |
தனியை வருதல்
அதனினும் அஞ்சுதும் | நீ தனியாக வருவதற்கு
அதனைக்காட்டிலும் அஞ்சுகிறோம்; |
என்
ஆகுவள்-கொல் தானே பல் நாள் | இவளுக்கு இனி என்ன
ஆகுமோ? பலநாள் |
புணர் குறி
செய்த புலர் குரல் ஏனல் | சந்திப்பிடமாகக் கொண்ட
முற்றிக்காய்ந்த கதிரையுடைய தினைப்புனத்தில் |
கிளி கடி
பாடலும் ஒழிந்தனள் | கிளிகளை ஓட்டுவதற்கு
அவள் பாடும் பாடலும் இனி இல்லாமற்போயிற்று – (கதிரும் கொய்யப்பட்டது) |
அளியள் தான்
நின் அளி அலது இலளே | மிகவும்
இரங்கத்தக்கவள் – உன்னுடைய அருளையன்றி வேறொரு துணையும் இல்லாத இவள். |
| |
#119 பாலை
குடவாயி கீரத்தனார் | #119 பாலை குடவாயில்
கீரத்தனார் |
நுதலும் தோளும்
திதலை அல்குலும் | நெற்றியும், தோளும்,
தேமலையுடைய அல்குலும் |
வண்ணமும்
வனப்பும் வரியும் வாட | நிறமும், அழகும்,
கண்களின் செவ்வரியும் வாடிப்போகும்படி |
வருந்துவள்
இவள் என திருந்துபு நோக்கி | இவள் வருந்துவாள்
என்று திருத்தமாகக் கண்டு வைத்தும் |
வரைவு நன்று
என்னாது அகலினும் அவர் வறிது | இவளை மணந்துகொள்ளுதலே
நன்மையாம் என்று நினையாமல் பிரிந்து சென்றாலும், அவர், (வீணாக) |
ஆறு செல்
மாக்கள் அறுத்த பிரண்டை | வழிச்செல்வோர்
அறுத்துப்போட்ட பிரண்டை |
ஏறு பெறு
பாம்பின் பைம் துணி கடுப்ப | இடியால் தாக்கப்பட்ட
பாம்பின் பசிய துண்டு போல |
நெறி அயல்
திரங்கும் அத்தம் வெறி கொள | வழியின் பக்கத்தே
(வீணாக) வதங்கிக் கிடக்கின்ற காட்டில், (மணமுண்டாகும்படி,) |
உமண் சாத்து
இறந்த ஒழி கல் அடுப்பில் | உப்புவணிகரின் கூட்டம்
சமைத்து உண்டு கைவிட்டுப்போன கல்லால் உண்டாக்கிய அடுப்பினில் |
நோன் சிலை
மழவர் ஊன் புழுக்கு அயரும் | வலிய வில்லையுடைய
மழவர் (மணமுண்டாகும்படி) ஊனைப் புழுக்கி உண்ணும் |
சுரன் வழக்கு
அற்றது என்னாது உரம் சிறந்து | காட்டுவழி நடமாட்டம்
அற்றதாகையால் பெண்களோடு செல்வதற்கு ஏற்றதல்ல என்னாமல், ஊக்கம் மிகுந்து |
நெய்தல்
உருவின் ஐது இலங்கு அகல் இலை | நெய்தல் பூப் போன்ற
உருவத்தையுடைய அழகாக ஒளிரும் அகன்ற இலையினையும் |
தொடை அமை பீலி
பொலிந்த கடிகை | அமைவாகத்
தொடுக்கப்பட்ட மயில்தோகையால் பொலிவுற்ற காம்பினையும் |
மடை அமை திண்
சுரை மா காழ் வேலொடு | மூட்டுவாய் அமைந்த
திண்ணிய சுரையினையும், கருமையான தண்டினையுமுடைய வேலுடன் |
தணி அமர்
அழுவம் தம்மொடு துணைப்ப | பகையைத் தணிவிக்கச்
செல்லும் போர்க்களத்திற்குத் தம்முடன் நாமும் துணையாகிச் செல்லத் |
துணிகுவர்-கொல்லோ
தாமே துணி கொள | துணிந்திடுவாரோ?
துண்டமாகப் பிளவுபடும்படி |
மற புலி உழந்த
வசி படு சென்னி | மறத்தையுடைய புலியுடன்
போரிட்டு வருந்திய தழும்புள்ள நெற்றியில் |
உறு நோய்
வருத்தமொடு உணீஇய மண்டி | மிக்க நோயாகிய
துன்பத்தோடு நீர் உண்பதற்காக விரைந்து சென்று |
படி முழம்
ஊன்றிய நெடு நல் யானை | மண்ணில் முழங்காலை
மடித்து ஊன்றிய நெடிய நல்ல யானை |
கை தோய்த்து
உயிர்க்கும் வறும் சுனை | தன் கையால் தோய்த்தும்
நீர் கிடைக்காததால் பெருமூச்சுவிடும் வறண்டுபோன சுனையினையுடைய |
மை தோய் சிமைய
மலை முதல் ஆறே | மேகங்கள் படியும்
உச்சியினையுடைய மலையடிவாரத்தில் செல்லும் வழியில் – |
| |
#120 நெய்தல்
நக்கீரனார் | #120 நெய்தல்
நக்கீரனார் |
நெடுவேள்
மார்பின் ஆரம் போல | முருகக்கடவுளின்
மார்பினில் கிடக்கும் முத்தாரம் போல |
செ வாய் வானம்
தீண்டி மீன் அருந்தும் | சிவந்த வானத்தில்
பொருந்தி, மீனை உண்ணும் |
பைம் கால்
கொக்கு இனம் நிரை பறை உகப்ப | பசிய காலையுடைய
கொக்குக்கூட்டம் வரிசையாகப் பறந்து உயர |
எல்லை பைப்பய
கழிப்பி குட_வயின் | பகற்பொழுதினை மெல்ல
மெல்லக் கழித்து மேற்குத்திசையில் |
கல்
சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு | மலையை அடைந்தது, பல
கதிர்களையுடைய ஞாயிறு, |
மதர் எழில் மழை
கண் கலுழ இவளே | தனது மதர்த்த அழகிய
கண்களில் நீர் ஒழுக, (இவள்) |
பெரு நாண்
அணிந்த சிறு மென் சாயல் | மிக்க நாணத்தைக்கொண்ட
சிறிய மெல்லிய சாயலினையுடைய (இவள்) |
மாண் நலம்
சிதைய ஏங்கி ஆனாது | தனது மாண்புற்ற அழகு
கெட, ஏக்கமுற்று, நிற்காமல் |
அழல்
தொடங்கினளே பெரும அதனால் | அழுகையைத்
தொடங்கியிருக்கிறாள், பெருமானே! அதனாலும், |
கழி சுறா
எறிந்த புண் தாள் அத்திரி | உப்பங்கழியிலுள்ள
சுறாமீன் தாக்கிய புண்பட்ட காலையுடைய நினது ஊர்தியாகிய கோவேறுகழுதையும் |
நெடு நீர்
இரும் கழி பரி மெலிந்து அசைஇ | நீண்ட நீரினையுடைய
கருமையான கழியில் நடப்பதற்கு வலிமை குன்றியதால், (இங்கு இளைப்பாறி), |
வல் வில்
இளையரொடு எல்லி செல்லாது | வலிய வில்லினை ஏந்திய
உன் ஏவலரொடு இந்த இரவினில் செல்லாமல் |
சேர்ந்தனை
செலினே சிதைகுவது உண்டோ | (இங்கு இளைப்பாறி) நீ
தங்கிச்சென்றால் உனக்குக் கேடு ஒன்றும் இல்லையே! |
பெண்ணை ஓங்கிய
வெண் மணல் படப்பை | பனைமரங்கள் ஓங்கிய
வெண்மையான மணல் பரந்த தோட்டங்களில் |
அன்றில் அகவும்
ஆங்கண் | அன்றில் பறவை தன்
துணையை அழைக்கும் அவ்விடத்தில் |
சிறு குரல்
நெய்தல் எம் பெரும் கழி நாட்டே | சிறிய கொத்துக்களான
நெய்தல் பூக்களையுடைய எம் பெரிய கழிசூழ்ந்த ஊரில் – |
| |
| |
| |
| |
| |
#121 பாலை
மதுரை மருதன் இளநாகன் | #121 பாலை மதுரை
மருதன் இளநாகன் |
நாம் நகை
உடையம் நெஞ்சே கடும் தெறல் | நாம் நகை உடையம்
நெஞ்சே கடும் தெறல் |
வேனில் நீடிய
வான் உயர் வழி நாள் | வேனில் நீடிய வான்
உயர் வழி நாள் |
வறுமை கூரிய
மண் நீர் சிறு குள | வறுமை கூரிய மண் நீர்
சிறு குள |
தொடு குழி
மருங்கில் துவ்வா கலங்கல் | தொடு குழி மருங்கில்
துவ்வா கலங்கல் |
கன்று உடை மட
பிடி கயம் தலை மண்ணி | கன்று உடை மட பிடி
கயம் தலை மண்ணி |
சேறு கொண்டு
ஆடிய வேறுபடு வய களிறு | சேறு கொண்டு ஆடிய
வேறுபடு வய களிறு |
செம் கோல் வால்
இணர் தயங்க தீண்டி | செம் கோல் வால் இணர்
தயங்க தீண்டி |
சொரி புறம்
உரிஞிய நெறி அயல் மரா அத்து | சொரி புறம் உரிஞிய
நெறி அயல் மரா அத்து |
அல்கு_உறு வரி
நிழல் அசைஇ நம்மொடு | அல்கு_உறு வரி நிழல்
அசைஇ நம்மொடு |
தான் வரும்
என்ப தட மென் தோளி | தான் வரும் என்ப தட
மென் தோளி |
உறுகண் மழவர்
உருள் கீண்டிட்ட | உறுகண் மழவர் உருள்
கீண்டிட்ட |
ஆறு செல்
மாக்கள் சோறு பொதி வெண் குடை | ஆறு செல் மாக்கள் சோறு
பொதி வெண் குடை |
கனை விசை கடு
வளி எடுத்தலின் துணை செத்து | கனை விசை கடு வளி
எடுத்தலின் துணை செத்து |
வெருள் ஏறு
பயிரும் ஆங்கண் | வெருள் ஏறு பயிரும்
ஆங்கண் |
கரு முக
முசுவின் கானத்தானே | கரு முக முசுவின்
கானத்தானே |
| |
#122 குறிஞ்சி
பரணர் | #122 குறிஞ்சி பரணர் |
இரும் பிழி
மகாஅர் இ அழுங்கல் மூதூர் | இரும் பிழி மகாஅர் இ
அழுங்கல் மூதூர் |
விழவு இன்று
ஆயினும் துஞ்சாது ஆகும் | விழவு இன்று ஆயினும்
துஞ்சாது ஆகும் |
மல்லல் ஆவணம்
மறுகு உடன் மடியின் | மல்லல் ஆவணம் மறுகு
உடன் மடியின் |
வல் உரை கடும்
சொல் அன்னை துஞ்சாள் | வல் உரை கடும் சொல்
அன்னை துஞ்சாள் |
பிணி கோள்
அரும் சிறை அன்னை துஞ்சின் | பிணி கோள் அரும் சிறை
அன்னை துஞ்சின் |
துஞ்சா கண்ணர்
காவலர் கடுகுவர் | துஞ்சா கண்ணர் காவலர்
கடுகுவர் |
இலங்கு வேல்
இளையர் துஞ்சின் வை எயிற்று | இலங்கு வேல் இளையர்
துஞ்சின் வை எயிற்று |
வலம் சுரி தோகை
ஞாளி மகிழும் | வலம் சுரி தோகை ஞாளி
மகிழும் |
அரவ வாய் ஞமலி
மகிழாது மடியின் | அரவ வாய் ஞமலி மகிழாது
மடியின் |
பகல் உரு உறழ
நிலவு கான்று விசும்பின் | பகல் உரு உறழ நிலவு
கான்று விசும்பின் |
அகல் வாய்
மண்டிலம் நின்று விரியும்மே | அகல் வாய் மண்டிலம்
நின்று விரியும்மே |
திங்கள் கல்
சேர்பு கனை இருள் மடியின் | திங்கள் கல் சேர்பு
கனை இருள் மடியின் |
இல் எலி வல்சி
வல் வாய் கூகை | இல் எலி வல்சி வல்
வாய் கூகை |
கழுது வழங்கு
யாமத்து அழி_தக குழறும் | கழுது வழங்கு யாமத்து
அழி_தக குழறும் |
வளை கண் சேவல்
வாளாது மடியின் | வளை கண் சேவல் வாளாது
மடியின் |
மனை செறி கோழி
மாண் குரல் இயம்பும் | மனை செறி கோழி மாண்
குரல் இயம்பும் |
எல்லாம் மடிந்த
காலை ஒரு நாள் | எல்லாம் மடிந்த காலை
ஒரு நாள் |
நில்லா
நெஞ்சத்து அவர் வாரலரே அதனால் | நில்லா நெஞ்சத்து அவர்
வாரலரே அதனால் |
அரி பெய்
புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து | அரி பெய் புட்டில்
ஆர்ப்ப பரி சிறந்து |
ஆதி போகிய பாய்
பரி நன் மா | ஆதி போகிய பாய் பரி
நன் மா |
நொச்சி வேலி
தித்தன் உறந்தை | நொச்சி வேலி தித்தன்
உறந்தை |
கல் முதிர்
புறங்காட்டு அன்ன | கல் முதிர்
புறங்காட்டு அன்ன |
பல் முட்டு
இன்றால் தோழி நம் களவே | பல் முட்டு இன்றால்
தோழி நம் களவே |
| |
#123 பாலை
காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார் | #123 பாலை
காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார் |
உண்ணாமையின்
உயங்கிய மருங்கின் | உண்ணாமையின் உயங்கிய
மருங்கின் |
ஆடா படிவத்து
ஆன்றோர் போல | ஆடா படிவத்து ஆன்றோர்
போல |
வரை செறி சிறு
நெறி நிரைபு உடன் செல்லும் | வரை செறி சிறு நெறி
நிரைபு உடன் செல்லும் |
கான யானை கவின்
அழி குன்றம் | கான யானை கவின் அழி
குன்றம் |
இறந்து பொருள்
தருதலும் ஆற்றாய் சிறந்த | இறந்து பொருள்
தருதலும் ஆற்றாய் சிறந்த |
சில்_ஐம்_கூந்தல்
நல் அகம் பொருந்தி | சில்_ஐம்_கூந்தல் நல்
அகம் பொருந்தி |
ஒழியின் வறுமை
அஞ்சுதி அழி_தகவு | ஒழியின் வறுமை அஞ்சுதி
அழி_தகவு |
உடை-மதி வாழிய
நெஞ்சே நிலவு என | உடை-மதி வாழிய நெஞ்சே
நிலவு என |
நெய் கனி நெடு
வேல் எஃகின் இமைக்கும் | நெய் கனி நெடு வேல்
எஃகின் இமைக்கும் |
மழை மருள் பல்
தோல் மா வண் சோழர் | மழை மருள் பல் தோல் மா
வண் சோழர் |
கழை மாய்
காவிரி கடல் மண்டு பெருந்துறை | கழை மாய் காவிரி கடல்
மண்டு பெருந்துறை |
இறவொடு வந்து
கோதையொடு பெயரும் | இறவொடு வந்து கோதையொடு
பெயரும் |
பெரும் கடல்
ஓதம் போல | பெரும் கடல் ஓதம் போல |
ஒன்றில்
கொள்ளாய் சென்று தரு பொருட்கே | ஒன்றில் கொள்ளாய்
சென்று தரு பொருட்கே |
| |
#124 முல்லை
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | #124 முல்லை மதுரை
அறுவை வாணிகன் இளவேட்டனார் |
நன் கலம்
களிற்றொடு நண்ணார் ஏந்தி | நன் கலம் களிற்றொடு
நண்ணார் ஏந்தி |
வந்து திறை
கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து | வந்து திறை கொடுத்து
வணங்கினர் வழிமொழிந்து |
சென்றீக என்ப
ஆயின் வேந்தனும் | சென்றீக என்ப ஆயின்
வேந்தனும் |
நிலம் வகுந்து
உறாஅ ஈண்டிய தானையொடு | நிலம் வகுந்து உறாஅ
ஈண்டிய தானையொடு |
இன்றே புகுதல்
வாய்வது நன்றே | இன்றே புகுதல் வாய்வது
நன்றே |
மாட மாண் நகர்
பாடு அமை சேக்கை | மாட மாண் நகர் பாடு
அமை சேக்கை |
துனி தீர்
கொள்கை நம் காதலி இனிது உற | துனி தீர் கொள்கை நம்
காதலி இனிது உற |
பாசறை வருத்தம்
வீட நீயும் | பாசறை வருத்தம் வீட
நீயும் |
மின்னு
நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படை | மின்னு நிமிர்ந்து
அன்ன பொன் இயல் புனை படை |
கொய் சுவல்
புரவி கை கவர் வயங்கு பரி | கொய் சுவல் புரவி கை
கவர் வயங்கு பரி |
வண் பெயற்கு
அவிழ்ந்த பைம் கொடி முல்லை | வண் பெயற்கு அவிழ்ந்த
பைம் கொடி முல்லை |
வீ கமழ் நெடு
வழி ஊது வண்டு இரிய | வீ கமழ் நெடு வழி ஊது
வண்டு இரிய |
காலை எய்த
கடவு-மதி மாலை | காலை எய்த கடவு-மதி
மாலை |
அந்தி கோவலர்
அம் பணை இமிழ் இசை | அந்தி கோவலர் அம் பணை
இமிழ் இசை |
அரமிய வியல்
அகத்து இயம்பும் | அரமிய வியல் அகத்து
இயம்பும் |
நிரை நிலை
ஞாயில் நெடு மதில் ஊரே | நிரை நிலை ஞாயில் நெடு
மதில் ஊரே |
| |
#125 பாலை
பரணர் | #125 பாலை பரணர் |
அரம் போழ் அம்
வளை தோள் நிலை நெகிழ | அரம் போழ் அம் வளை
தோள் நிலை நெகிழ |
நிரம்பா
வாழ்க்கை நேர்தல் வேண்டி | நிரம்பா வாழ்க்கை
நேர்தல் வேண்டி |
இரம் காழ் அன்ன
அரும்பு முதிர் ஈங்கை | இரம் காழ் அன்ன
அரும்பு முதிர் ஈங்கை |
ஆலி அன்ன வால்
வீ தாஅய் | ஆலி அன்ன வால் வீ
தாஅய் |
வை வால் ஓதி மை
அணல் ஏய்ப்ப | வை வால் ஓதி மை அணல்
ஏய்ப்ப |
தாது உறு குவளை
போது பிணி அவிழ | தாது உறு குவளை போது
பிணி அவிழ |
படாஅ பைம் கண்
பா அடி கய வாய் | படாஅ பைம் கண் பா அடி
கய வாய் |
கடாஅம் மாறிய
யானை போல | கடாஅம் மாறிய யானை போல |
பெய்து வறிது
ஆகிய பொங்கு செலல் கொண்மூ | பெய்து வறிது ஆகிய
பொங்கு செலல் கொண்மூ |
மை தோய்
விசும்பின் மாதிரத்து உழிதர | மை தோய் விசும்பின்
மாதிரத்து உழிதர |
பனி அடூஉ நின்ற
பானாள் கங்குல் | பனி அடூஉ நின்ற பானாள்
கங்குல் |
தனியோர் மதுகை
தூக்காய் தண்ணென | தனியோர் மதுகை
தூக்காய் தண்ணென |
முனிய அலைத்தி
முரண் இல் காலை | முனிய அலைத்தி முரண்
இல் காலை |
கைதொழு மரபின்
கடவுள் சான்ற | கைதொழு மரபின் கடவுள்
சான்ற |
செய்_வினை
மருங்கின் சென்றோர் வல் வரின் | செய்_வினை மருங்கின்
சென்றோர் வல் வரின் |
விரி உளை
பொலிந்த பரி உடை நன் மான் | விரி உளை பொலிந்த பரி
உடை நன் மான் |
வெருவரு
தானையொடு வேண்டு புலத்து இறுத்த | வெருவரு தானையொடு
வேண்டு புலத்து இறுத்த |
பெரு வள
கரிகால் முன்னிலை செல்லார் | பெரு வள கரிகால்
முன்னிலை செல்லார் |
சூடா வாகை
பறந்தலை ஆடு பெற | சூடா வாகை பறந்தலை ஆடு
பெற |
ஒன்பது
குடையும் நன் பகல் ஒழித்த | ஒன்பது குடையும் நன்
பகல் ஒழித்த |
பீடு இல்
மன்னர் போல | பீடு இல் மன்னர் போல |
ஓடுவை-மன்னால்
வாடை நீ எமக்கே | ஓடுவை-மன்னால் வாடை நீ
எமக்கே |