Select Page
மூலம்அடிநேர் உரை
  
#0 கடவுள் வாழ்த்து#0 கடவுள் வாழ்த்து
கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர்கார்காலத்தில் மலரும் கொன்றை மரத்தின் பொன்னை ஒத்த புதிய மலர்களாலான
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்குறுமாலையன்; நீள்மாலையன்; சூடிய தலைமாலையன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்மார்பின்கண் உள்ளது குற்றமற்ற நுண்ணிய பூணூல்;
நுதலது இமையா நாட்டம் இகல் அட்டுநெற்றியில் உள்ளது இமைக்காத கண்; பகைவரைக் கொல்லும்,
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்          5கையில் இருப்பது, குந்தாலியுடன் கோடரி, மூன்று கூறுகளையுடைய
வேலும் உண்டு அ தோலாதோற்கேசூலாயுதமும் உண்டு அந்தத் தோல்வி இல்லாதவருக்கு;
ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையேஏறிச்செல்வது காளை; சேர்ந்து இருப்பது உமையவள்;
செ வான் அன்ன மேனி அ வான்சிவந்த வானத்தைப் போன்ற மேனி; அந்த வானத்தில்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்றுஒளிரும் பிறை போன்ற நேர்குறுக்கான வெண்மையான கூரிய பற்கள்;
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை     10நெருப்பு அகைந்து எரிவதைப் போன்ற மின்னிப் பிரகாசிக்கும் முறுக்கிய சடைமுடி;
முதிரா திங்களொடு சுடரும் சென்னிஇளம்பிறையுடன் ஒளிரும் நெற்றி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்மூப்படையாத அமரரும், முனிவரும், பிறரும் (ஆகிய)
யாவரும் அறியா தொன் முறை மரபின்அனைவரும் அறியாத தொன்மையான மரபினையுடைய;
வரி கிளர் வய_மான் உரிவை தைஇயகோடுகள் அழகுடன் விளங்கும் வலிய புலியின் தோலை உடுத்த;
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்           15யாழ் (இசையின் இனிமை)வாய்ந்த நீலமணி(போன்ற) மிடற்றை உடைய அந்தணன்
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே(ஆகிய சிவபெருமானின்)மாசற்ற அடிகளின் நிழலில் உலகமக்கள் உறைகின்றனர்.
  
  
#1 பாலை மாமூலனார்#1 பாலை மாமூலனார்
வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல்வண்டுகள் மொய்ப்பதால் சிதைவுண்ட தலைமாலையையும், ஒளிரும் கழலையும்,
உருவ குதிரை மழவர் ஓட்டியஅச்சம்தரும் குதிரைகளையும் உடைய மழவரை ஓட்டிய,
முருகன் நல் போர் நெடுவேள் ஆவிமுருகனைப் போன்ற நல்ல போர்த்திறம் கொண்ட நெடுவேள் ஆவியின்
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்அறுக்கப்பட்ட தந்தங்களையுடைய யானைகளைக் கொண்ட பொதினியில் உள்ள
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய          5சாணைபிடிக்கும் சிறுவன் அரக்குடன் இணைத்துச் செய்த
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்சாணைக்கல் போல் (உன்னைப்) ‘பிரியமாட்டேன்’ என்ற சொல்லைத் தாம்
மறந்தனர்-கொல்லோ தோழி சிறந்தமறந்துவிட்டாரோ! தோழி! (என்) சிறந்த
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டுமூங்கிலைப் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோக, தொலைநாட்டுப்
பொலம் கல வெறுக்கை தரு-மார் நிலம் பகபொன் அணிகலன்களாகிய செல்வத்தை ஈட்டிவருவதற்காக – நிலம் பிளக்குமாறு
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின்  10தீயைப் போல் வெம் கதிர்கள் பசுமையே அற்றுப்போகும்படி எரித்தலால்
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு(தம்)நிழல் குறைந்து உலர்ந்துபோன மரங்களைக் கொண்ட – பாறைகள் காய்ந்து
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின்நீர் அற்ற பசுமையான சுனைகள் ஈரப்பசையே இன்றிக் காய்ந்துபோனதால்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்நெல்விழுந்தால் பொரிந்துபோகும் அளவு வெம்மையுடைய – ஒருவரேனும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடியஅவ்வழியே செல்பவர் இல்லாததால், வழிப்பறிசெய்வோரும் சோர்ந்திருக்கும்
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை                15வறண்ட நிலத்தின் பொலிவற்ற பாதைகளை உடைய – ஆடும் கிளைகளிலுள்ள
நார் இல் முருங்கை நவிரல் வான் பூநாரற்ற முருங்கையான நவிரலின் வெண்மையான பூக்கள்
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்றுசுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்ப, சிதறலுண்டு,
உடை திரை பிதிர்வின் பொங்கி முன்உடைந்த அலைகளின் சிதறலைப் போன்று நுரைத்தெழ, முன்பகுதிக்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரேகடல் போன்று தோன்றும் காட்டினைக் கடந்து சென்றோர்.
  
#2 குறிஞ்சி கபிலர்#2 குறிஞ்சி கபிலர்
கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலைகொழுத்த இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின்
ஊழ்_உறு தீம் கனி உண்ணுநர் தடுத்தநன்கு பழுத்த இனிய கனிகள், (மிக்க இனிமையால்)உண்பவருக்குத் திகட்டும்,
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படுமலைச்சரிவின் பலாச் சுளைகளுடன் (கலந்ததால்), நாட்பட்டு,
பாறை நெடும் சுனை விளைந்த தேறல்பாறையின் குழிந்த பகுதியில் சுனை போல் உண்டாகிய தெளிந்த சாறை
அறியாது உண்ட கடுவன் அயலது                       5(தேறல் என)அறியாமல் குடித்த ஆண்குரங்கு, (பின்னர்) அருகிலிருக்கும்
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாதுமிளகுக் கொடிகள் படர்ந்த சந்தனமரத்தில் ஏறாமல்,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்நறிய பூக்களாலான படுக்கையில் களிப்புற்றுத் தூங்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலைஎண்ணி முயலாத இன்பத்தை எளிதாக, நின் மலையிலுள்ள
பல் வேறு விலங்கும் எய்தும் நாடபல்வேறு விலங்குகளும் எய்தும் நாடனே!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய                10(நீ)எண்ணி முயன்ற இன்பம் நினக்கு எங்ஙனம் அரிதாக இருக்கும்?
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள்மிக்க அழகினையுடைய மூங்கில் போன்ற பருத்த தோளைக் கொண்ட(இவளும்),
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்_மாட்டுகட்டுப்படுத்த எண்ணியும் அடங்காத நெஞ்சமுடன், உன்னிடம்
இவளும் இனையள் ஆயின் தந்தைஇவளும் இத்துணை காதல் கொண்டவளாயின், (இவளது)தந்தையின்
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றிகடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு
கங்குல் வருதலும் உரியை பைம் புதல்               15இரவில் வருவதுவும் (நினக்கு)உரியதே, பசுமையான புதர்கள் (சூழ்ந்த)
வேங்கையும் ஒள் இணர் விரிந்தனவேங்கை மரங்களும் நல்ல பூங்கொத்துகளை மலரப்பெற்றுள்ளன,
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றேமிகுந்த வெண்மை நிறமுள்ள திங்களும் ஒளிவட்டம் கொண்டுள்ளது.
  
#3 பாலை#3 பாலை
இரும் கழி முதலை மேஎந்தோல் அன்னகருமையான சேற்றுப்பகுதிகளில் இருக்கும் முதலையின் மேல் தோலைப் போன்ற
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினைகருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்டமிக்க பாதுகாப்பை உடைய அகன்ற இடத்தில் குஞ்சுபொரித்துக் காத்துக்கிடக்கும்
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇயவளைந்த அலகினை உடைய (தன்)பேடைக்கு இருப்பு உணவைக் கொண்டுவர,
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை            5மயங்கி ஆசையுடன் பறந்து சென்ற சிவந்த காதுகளை உடைய எருவைப் பருந்து,
வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன்விண்ணைத் தொடும் முகடுகளைக் கொண்ட பெருமை மிக்க மலைச் சரிவில்
துளங்கு நடை மரையா வலம்பட தொலைச்சிஅசைந்தாடும் நடையைக் கொண்ட மரையா மானை வலப்பக்கம் வீழ்த்தி,
ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு(அதன்) ஒள்ளிய சிவந்த குருதியை உறிஞ்சிக் குடித்து,
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடைமுடைவீசும் புலி விட்டுச்சென்ற மூட்டு கழன்ற மிகுந்த நாற்றமுள்ள தசையைக்
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்           10கொள்ளை மாந்தரைப் போல் விரைந்து திரும்பத் திரும்பக் கவரும்,
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்குறைந்த இலைகளை உடைய மரா மரங்களை உடைய அகன்ற நீண்ட நெறியை,
கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டிஅணிகலன்கள் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்துசெல்வதாகக் காட்டி
பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய்பின்னால் இருந்து விரட்டும் நெஞ்சமே! உன் வாயின்
வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமாமெய் போன்ற பொய்மொழிகள் (என்)துன்பத்தை எவ்வாறு களையும்?
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய்              15முள்முருங்கைப்பூவின் இதழ் போன்ற, காண்பதற்கு இனிய சிவந்த வாயின்
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தைஅழகிய இனிய சொற்களும், ஆய்ந்த அணிகலன்களும் கொண்ட பெண்ணின்(தலைவியின்),
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம்வளைந்த காதணிகளுடன் ஒத்து நிற்கும் பார்வை
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றேநீண்டுகிடக்கும் அந்தத் தொலைவிடத்திலும் குறுக்கே மறிக்கும் நேரத்தில் –
  
#4 முல்லை குறுங்குடி மருதனார்#4 முல்லை குறுங்குடி மருதனார்
முல்லை வை நுனை தோன்ற இல்லமொடுமுல்லைக்கொடியில் கூரிய நுனியையுடைய (அரும்புகள்) தோன்ற, தேற்றாமரத்துடன்,
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழபசிய காம்புகளைக் கொண்ட கொன்றைமுகைகள் தம் மெல்லிய கட்டுகள் அவிழ,
இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்இரும்பை முறுக்கினாற் போன்ற கரிய பெரிய கொம்பினையுடைய,
பரல் அவல் அடைய இரலை தெறிப்பபரற்கற்கள் உள்ள பள்ளங்களை அடுத்துள்ள, இரலை மான்கள் துள்ளிவிளையாட,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப              5பொலிவுபெற்ற நிலம் (வறட்சித்)துன்பத்தைப் பின்துரத்த,
கருவி வானம் கதழ் உறை சிதறிகூட்டமான மேகங்கள் சீறிவரும் மழைத்துளிகளைச் சிதறி
கார் செய்தன்றே கவின் பெறு கானம்கார்கால மலர்ச்சியைச் செய்தன கவின் பெற்ற கானத்தை;
குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவிவளைந்த தலையாட்டத்தால் பொலிவுற்ற, கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள்
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரியநரம்புகளைச் சேர்த்தது போன்ற, வளைந்த கடிவாளத்துடன் விரைந்து ஓடுகின்ற,
பூத்த பொங்கர் துணையொடு வதிந்த           10பூத்திருக்கும் சோலைகளில் துணையோடு தங்கி வாழும்
தாது_உண்_பறவை பேது உறல் அஞ்சிபூந்தாது உண்ணும் பறவை(வண்டுகள்) கலக்கமடைவதை(எண்ணி) அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன்மணிகளின் நாவுகளைச் சேர்த்துக்கட்டிய, சிறந்த வேலைப்பாடுள்ள, தேரையுடைவன்
உவ காண் தோன்றும் குறும் பொறை நாடன்உங்கு பார், வந்துவிடுவான் – குறிய மலைகளையுடைய நாட்டைச் சேர்ந்தவன்
கறங்கு இசை விழவின் உறந்தை குணாதுசுற்றுப்புறம் எங்கிலும் ஒலிக்கும் இசையுடன் விழா நடக்கும் உறந்தையின் கிழக்கே
நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்           15நெடிய பெரிய குன்றத்தில் நெருக்கமாய் வளர்ந்த காந்தள்
போது அவிழ் அலரின் நாறும்மொட்டு அவிழ்ந்த மலரைப் போன்று மணக்கும்
ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தேஆய்ந்த தோள்வளையையுடைய அரிவையாகிய நின் சிறந்த அழகினை நினைத்து.
  
#5 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ#5 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்(நாம்)கனிவுடன் இருக்கும் நிலையை ஏற்காமல், பூசல் கொண்ட முகத்தவளாய்,
விளி நிலை கொள்ளாள் தமியள் மென்மெல(அன்புடன்)விளிக்கும் நிலையை மனதில் கொள்ளாளாய், தனித்தவளாய், மெதுவாக
நலம் மிகு சேவடி நிலம் வடு கொளாஅஅழகு மிக்க சிவந்த அடிகளை நிலத்தில் அழுந்தத் தடம் பதித்து,
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்றமிக அருகில் வந்து, தன் கூரிய பற்கள் தோன்ற
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள்           5சிறிதே தன் உள்ளத்தில் எழுந்த பொய்மையான முறுவலை உடையவள்,
கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல்(நாம்)எண்ணியதை முழுதும் உணர்வதற்கு முன்னரேயே, ஒள்நுதல் தலைவி,
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்(நாம்) பொருள்தேடச் செல்லுதலை ஏற்றுக்கொள்ளா எண்ணத்துடன் –
முளிந்த ஓமை முதையல் அம் காட்டுஉலர்ந்துபோன ஓமை மரங்களுள்ள பழமையான (அழகிய) காட்டில்
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லிபளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப            10முகடுகளில் இருக்கும் பாறையில், (சிறுவரின்)பல கோலிக்குண்டுகள் போன்று 
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்உதிர்ந்து கிடக்கும் – ஞாயிற்றின் கதிர்கள் காயும் – உச்சிமலைச் சரிவுகளில்
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி(சாணையால்) தேய்க்கப்பட்டது போல் மழுங்கிய நுனைகளை வெளியே காட்டி,
பாத்தி அன்ன குடுமி கூர்ம் கல்பாத்திகட்டியதைப் போல் இருக்கும் குடுமியை உடைய கூர்மையான கற்கள்
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதரவிரல்களின் நுனியைச் சிதைக்கும் நிரைத்த நிலையிலுள்ள வழிகள் உடைய
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம்                15பரற்கற்களைக் கொண்ட மேட்டுநிலமாகிய பயனற்ற காட்டுநிலத்துவழியில்
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறுசெல்ல எண்ணுவீராயின், அது அறத்தின்பாற்பட்டது
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவிஅன்று என மொழிந்த பழமையான முதுமொழி
அன்ன ஆக என்னுநள் போலபழம்பேச்சாகவே ஆக என்று சொல்பவள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா(தன்)உட்கிடக்கையைக் காட்டி, முகக்குறிப்பால் உரைத்து
ஓவச்செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி             20ஓவியத்தின் நிலை போல ஒன்றையே நினைத்தவளாய் (என்னை)உரசிக்கொண்டு
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடுகண்ணின் கருவிழிகள் மறைத்த, துளிர்த்த நீருடனான பார்வையோடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை(தன்) மார்பில் ஒடுக்கிய தன் புதல்வனின் சிறிய தலையிலுள்ள
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை   
மோயினள் உயிர்த்த_காலை மா மலர்மோந்து பெருமூச்சுவிட்ட நேரத்தில், (அதன் வெப்பத்தால்)அந்த சிறந்த மலர்கள்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்           25பவளம் போல் ஒளி இழந்து தம் அழகு அழிந்த தோற்றத்தைக்
கண்டே கடிந்தனம் செலவே ஒண்_தொடிகண்டு தவிர்த்துவிட்டோம் நாம் செல்வதை, ஒளிரும் தொடியுடையாள்
உழையம் ஆகவும் இனைவோள்(நாம்)அருகிலிருக்கும்போதே இங்ஙனம் ஆகிவிட்டவள்
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினேபிழைத்திருக்கமாட்டாள் அல்லவா பிரிந்துசென்றோம் நாம் எனின்.
  
#6 மருதம் பரணர்#6 மருதம் பரணர்
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலைபரல்கள் இடப்பெற்ற சிலம்பினையும், ஆம்பல் மலரின் அழகிய மாலையையும்,
அரம் போழ் அம் வளை பொலிந்த முன்கைஅரத்தால் அறுக்கப்பட்ட அழகிய வளைகளால் அழகுபெற்ற முன்கையையும்,
இழை அணி பணை தோள் ஐயை தந்தைநகைகள் அணிந்த, மூங்கில் போன்ற தோள் உடைய, ஐயை-இன் தந்தையாகிய,
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்மழை போன்று வளம்தரும் மிக்க வண்மையுடைய தித்தனின்,
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்            5குவியல் நெல்லையுடைய உறந்தை நகரில்
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்ஓடக்கோலும் நிலைத்து நில்லாத காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கில்,
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடுகுழை முதலான சிறந்த அணிகளையுடைய நீ விரும்பியவளுடன்
வேழ வெண் புணை தழீஇ பூழியர்வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி, பூழியரின்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்குகுளத்தை நாடிச் செல்லும் யானையைப் போன்று முகமலர்ச்சியுற்று,
ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய                10உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மாலை குழைந்துபோகும்படி,
நெருநல் ஆடினை புனலே இன்று வந்துநேற்று புனலாடினாய், இன்று (இங்கே) வந்து
ஆக வன முலை அரும்பிய சுணங்கின்மார்பினில் அழகிய கொங்கைகளில் அழகுத்தேமலை உடையவளே,
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் எனமாசற்ற கற்புடையவளே, என் மகனுக்குத் தாயே என்று
மாய பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம்மாய்மாலமான பொய்மொழிகளைப் பணிவுடன் பலமுறை கூறி, எனது
முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல                15முதுமையை இகழ வேண்டாம். அது எனக்குப் பொருந்தும்தானே!
சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்துதீச்சுடர் போன்ற அழகிய தாமரை மலர்கள் உள்ள, நீர் நெடுநாள் நிற்கும் வயலில்
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கிஅழகிய உள்துளையுள்ள வள்ளையின் மெல்லிய கொடிகளை உழப்பி,
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும்முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,
பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம்          20பல வேல்களை உடைய மத்தி என்பானது கழார் என்ற ஊரைப் போன்று, என்
இளமை சென்று தவ தொல்லஃதேஇளமை கழிந்து மிகவும் பழையதானது,
இனிமை எவன் செய்வது பொய்ம்மொழி எமக்கேஇனிக்கவா போகிறது (உன்) பொய்மொழி எனக்கு.
  
#7 பாலை கயமனார்#7 பாலை கயமனார்
முலை முகம்_செய்தன முள் எயிறு இலங்கின“முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன.
தலை முடி சான்ற தண் தழை உடையைதலையில் கூந்தலும் நன்கு வளர்ந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும் உடுத்தியுள்ளாய்.
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்சுற்றித்திரியும் விளையாட்டுத் தோழியருடன் எவ்விடத்தும் செல்லாதிருப்பாய்,
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடையமிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது.
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை               5(எனவே நீ)காவலுக்கு உட்பட்டிருக்கவேண்டும், வீட்டின் வெளி வாசல் வரைக்கும் போகக்கூடாது.
பேதை அல்லை மேதை அம் குறு_மகள்சிறுமி அல்லவே நீ, அறிவுள்ள சிறுமகளே!,
பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து எனஇளம்பெண் பருவத்தில் வெளியில் சென்றாயே” என்று நான் கூற,
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவிஒளிரும் விளக்குகளையுடைய நல்ல இல்லத்தின் அரிய கட்டுக்காவலையும் மீறி,
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலைதன் மனமாற்றத்தை வீட்டார் அறிந்துவிடுவர் என்று அஞ்சி, இனிதாக முழக்கமிடும்
ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி          10ஆண்மானைக் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்த, மோப்பது போல் மூச்சுவிடும் இளைய பெண்மானே!
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர்வலையைக் கண்ட பெண்மானைப் போலத் தப்பி ஓடி, இங்கு ஒரு,
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்தோல்வியையே அறியாத வெள்ளிய வேலை உடைய இளங்காளையொடு என் மகள்
இ சுரம் படர்தந்தோளே ஆயிடைஇந்த வழியே சென்றுவிட்டாள்; அதனால்
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து எனவழிப்பறிக் கள்வர்கள் பசுக்களைத் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனராக,
பிற்படு பூசலின் வழிவழி ஓடி                      15அவர்களின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி,
மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலைஅவளின் மேனியை எதிர்ப்பட்டிலேன், இவ்விடத்தில்
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடுஉன்னிடம் வினவுவதைக் கேட்பாயாக,
புலி பல் கோத்த புலம்பு மணி தாலிபொன் சரட்டில் புலிப்பல் கோத்த ஒற்றைத் தாலியையும்,
ஒலி குழை செயலை உடை மாண் அல்குல்செழித்த அசோகத் தளிரால் ஆன தழையுடை அணிந்த கீழிடுப்பையும் உடைய,
ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த               20ஆய்ந்தெடுத்த சுளைகளைக் கொண்ட பலாக்கனியைத் தின்று, முசுக்கலை உதிர்த்த
துய் தலை வெண் காழ் பெறூஉம்      தலையில் வெண்பஞ்சுவைக் கொண்ட வெள்ளிய கொட்டைகளைப் பெறும்
கல் கெழு சிறுகுடி கானவன் மகளேபாறைகளைக் கொண்ட சிறுகுடியைச் சேர்ந்த கானவன் மகளாகிய என் மகளே.
  
#8 குறிஞ்சி பெருங்குன்றூர்கிழார்#8 குறிஞ்சி பெருங்குன்றூர்கிழார்
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்தஈசல்புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தில் தங்கிய
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றைபுற்றாஞ்சோறை உணவாகக் கொண்ட பெரிய கையை உடைய ஆண்கரடியின்
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்தொங்கும் தோலின் நுனியில் உள்ள பெரிய நகம் கவ்விப் பிடிப்பதால்
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும்பாம்பு தன் வலிமையை இழக்கும் பாதிநாளாகிய இரவும்
அரிய அல்ல-மன் இகுளை பெரிய                       5நமக்கு அரியது அல்ல, தோழி! பெரிய
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றைஆண்பன்றியைக் கொன்ற பிளந்த வாயையுடைய ஆண்புலி,
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்பலா மரங்கள் நெருக்கமாய் இருக்கும் குன்றுகளில் புலால் நாற இழுத்துச்செல்லும்,
கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடுமூங்கில்கள் ஒலிக்கும் மலைச் சரிவில், சுரபுன்னையோடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய              10அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல்பெண்யானை, படியாக அமைக்க ஒடிக்கும் பெரிய மரத்தின் ஓசை
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டுவிண்ணளாவிய மலையின் குகைகளில் ஒலித்து அதிரும் அவருடைய நாட்டில்,
எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காதுஎண்ணிலடங்காக் குன்றுகளிலுள்ள விலங்குகள் நடந்த நெறிகளில் வழிதவறாமல்,
மின்னு விட சிறிய ஒதுங்கி மென்மெலமின்னலடிக்கும்போது சிறிதே ஒதுங்கிக்கொண்டு, மெள்ளமெள்ள நடந்து,
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால்          15மழைத்துளிகளைக் கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலைப்
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉபின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து,
நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம்நேர்வழிகள் குலைய, குறுக்கும் நெடுக்குமாகக்கிடக்கும் இந்தக் காட்டுப்புறத்தை நீவிர்
அறிதலும் அறிதிரோ என்னுநர் பெறினேஅறியவும் அறிவீரோ என்று கேட்பாரைப் பெறின்.
  
#9 பாலை கல்லாடனார்#9 பாலை கல்லாடனார்
கொல் வினை பொலிந்த கூர்ம் குறும் புழுகின்கொல்லும் தொழிலில் சிறந்த, கூரிய, குறிய, புழுகு எனப் பெயர்கொண்ட
வில்லோர் தூணி வீங்க பெய்தவில்வீரர் அம்புக்கூட்டில் நிறைய வைத்திருக்கும்
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைஅம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறுசெப்புத் தகட்டைப் போன்ற சிவந்த தளிர்களின் கீழேயெல்லாம்
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய்               5வெண்ணெய் போன்ற, இனிய, உள்துளை உள்ள மெல்லிய வாயை உடைய பூக்கள்,
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்புகாம்பை நீக்கிக் காணத்தக்க துளையினை உடையவாகி, புல்லிவட்டம் கழன்று,
ஆலி வானின் காலொடு பாறிஆலங்கட்டி போல காற்றால் சிதறுண்டு
துப்பின் அன்ன செம் கோட்டு இயவின்பவளம் போன்ற சிவந்த மேட்டுநில வழிகளில்
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்           10குருதி மீது உள்ள கொழுப்பைப் போல் பரந்துகிடக்கும்,
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்காட்டுப்பாதை அருகில் செல்லும் அழகிய குடிகளை உடைய சிற்றூரில்,
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கியவளைந்த நுண்ணிய கூந்தலை உடைய மகளிர் உயர்த்திய
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணிபூணால் சிறந்த உலக்கையால் குற்றும் உரலிலிருந்து எழும் தாளஒலி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்நெடிய பெரிய மலையில் உள்ள ஆந்தையின் குரலோடு மாறிமாறி ஒலிக்கும்
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து              15குன்றுகள் பின்னிட முன்னே செல்ல, மனஉறுதியுடன் முனைப்புக்கொண்டு,
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாதுஞாயிறு மறைந்தாலும், ஊர் வெகுதொலைவில் உள்ளது என்று சொல்லாமல்,
துனை பரி துரக்கும் துஞ்சா செலவின்வேகமாக ஓடும் குதிரைகளை மேலும் முடுக்கிவிட்டுச் சோர்வின்றிப் பயணம்செய்யும் 
எம்மினும் விரைந்து வல் எய்தி பல் மாண்எம்மைக் காட்டிலும் விரைந்து சீக்கிரமாகச் சென்று, பல கட்டுக்களால் சிறப்புற
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇஉயர்ந்த நல்ல இல்லத்தில் ஒரு பக்கமாக நிலைகொண்டு,
பாங்கர் பல்லி படு-தொறும் பரவிஅருகில் உள்ள பல்லி ஒலிக்கும்தோறும் அதனை வாழ்த்தி,
கன்று புகு மாலை நின்றோள் எய்தி          20பசுவின் கன்றுகள் நுழையும் மாலையில், நின்றுகொண்டிருப்பவளை அடைந்து,
கை கவியா சென்று கண் புதையா குறுகிகைகளை வளைத்தவாறு சென்று, கண்களைப் பொத்தியவாறு மிகநெருங்கி,
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டிபெண்யானையின் துதிக்கை போன்ற பின்னிய கூந்தலைத் தீண்டி,
தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோதொடி அணிந்த கையைத் தழுவி வருடிவிட்டவாறு அணைத்தது அன்றோ!
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல்நாணத்தோடு கலந்த கற்பினையும், ஒளிபொருந்திய நெற்றியினையும்
அம் தீம் கிளவி குறு_மகள்                        25அழகிய இனிய பேச்சையும் உடைய இளையோளின்
மென் தோள் பெற நசைஇ சென்ற என் நெஞ்சேமென்மையான தோள்களை அடைவதற்கு விரும்பிச் சென்ற என் நெஞ்சம்.
  
#10 நெய்தல் அம்மூவனார்#10 நெய்தல் அம்மூவனார்
வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரியபெரிய கடல்பரப்பினின்றும் எழும் நீர்த்திவலைகளுக்கு எதிர்நின்ற,
மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்தவிண்மீன்களைக் கண்டாற் போன்ற, மெல்லிய அரும்புகள் மலர்ந்த
முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினைகூனல்பட்டு முதிர்ந்த புன்னைமரத்தின் பெரிதாய் நின்ற கரிய கிளைகளில்
புள் இறைகூரும் மெல்லம்புலம்பபறவைகள் அடைந்துகிடக்கும் நெய்தல் நிலத் தலைவனே!
நெய்தல் உண்கண் பைதல கலுழ                        5நெய்தல் மலரைப் போன்று மை உண்ட கண்கள் துன்பத்துடன் கலங்க,
பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும்(தலைவியைப்)பிரிதலை நினைத்தாயாயின் மிகவும்
அரிது உற்றனையால் பெரும உரிதினின்அரியசெயலைச் செய்யவேண்டியவன் ஆனாய், பெருமானே!, உரிமையுடன்
கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடுஎடுத்துக்கொண்டு உன் ஊருக்குப் போகவேண்டும், கீழ்க்காற்றால்
குரூஉ திரை புணரி உடைதரும் எக்கர்கலங்கி நிறம் மாறிய கடல் அலைகள் உடைக்கும் மணல்மேட்டின்
பழம் திமில் கொன்ற புது வலை பரதவர்               10பழைய கட்டுமரத்தை அழித்துவிட்டுப் புதிய வலையைக் கொண்ட பரதவர்
மோட்டு மணல் அடைகரை கோட்டு_மீன் கெண்டிமேடான மணலால் ஆன அடைகரையில் வந்த சுறாமீனைக் கைப்பற்றி,
மணம் கமழ் பாக்கத்து பகுக்கும்மணம் கமழும் பாக்கத்தில் உள்ளோருக்குப் பகிர்ந்தளிக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனேவளம் மிக்க தொண்டியைப் போன்ற அழகிய இவளது நலனை.
  
  
#11 பாலை ஔவையார்#11 பாலை ஔவையார்
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்வானத்தில் ஊர்ந்துசெல்லும், சுடர்கின்ற ஒளியையுடைய சூரிய மண்டிலம்
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டுநெருப்போ என்னுமாறு சிவந்துபோய், வெப்பம் தகிக்கின்ற காட்டில்
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்இலையே இல்லாமல் மலர்ந்த, மொட்டுக்கள் அற்ற இலவ மலர்கள் –
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்தஆரவாரத்துடன் மகளிர்கூட்டம் மகிழ்வுடன் ஒன்றுசேர்ந்து எடுத்த
அம் சுடர் நெடும் கொடி பொற்ப தோன்றி              5அழகிய விளக்குகளின் நீண்ட வரிசையைப் போலத் தோன்ற,
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்குளங்கள் புழுதிக்காடாய் ஆகியிருக்கும் வளம் அற்றுப்போன காட்டில்,
எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மெனநம்மோடு சென்றிருந்தால், மனதிற்கினிமையாகப்
வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்றுபுதுத்துணியை விரித்தாற்போன்ற செழித்து எழும் மணலைக் கொண்ட காட்டாற்றின்
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்பெரிய கிளைகள் தாழ்ந்திருக்கும், நிறைந்த பூங்கொத்துகளைக் கொண்ட மணல்மேட்டில்,
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்               10உடம்பினுள் புகுந்துவிடுவதைப் போன்று கைகள் சூழ்ந்த அணைப்பினை
அவரும் பெறுகுவர்-மன்னே நயவரஅவரும் பெற்றிடுவாரே பாசத்துடன்,
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்துநீர் ஒழுகும் ஒளியுள்ள மலரைப் போன்று, இடைவிடாமல்
அறு குளம் நிறைக்குந போல அல்கலும்(அம் மலர்கள்)நீரற்ற குளத்தை நிறைப்பது போல நாளும்
அழுதல் மேவல ஆகிஅழுதலை மேற்கொள்ளாதவை ஆகி,
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே                   15குற்றமற்ற (எமது)கண்களும் தூங்கப்பெறுமே.
  
#12 குறிஞ்சி கபிலர்#12 குறிஞ்சி கபிலர்
யாயே கண்ணினும் கடும் காதலளேஎம் தாய் (தன்)கண்ணைக்காட்டிலும் (இவளிடம்)மிக்க அன்புடையவள், எம் தந்தையும்
எந்தையும் நிலன் உற பொறாஅன் சீறடி சிவப்ப(இவள்)தரையில் கால்வைக்கப் பொறுக்கமாட்டார். “(உன்) சின்னப் பாதங்கள் சிவக்க
எவன் இல குறு_மகள் இயங்குதி என்னும்எங்கே, அடி, சின்னவளே! போகிறாய் என்பார்,
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்நானும் அவளும், பிரிவு இல்லாமல் அமைந்த உவர்ப்பில்லாத நட்பினால்
இரு தலை புள்ளின் ஓர் உயிர் அம்மே                5இருதலைப் பறவையைப் போல ஓருயிராய் இருக்கின்றோம்.
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும்தினைப்புனக் காவல் மகளிர் ஓயாது ஆரவாரிக்குந்தோறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினைகிளிகள் (தம் இனத்தை)பலமுறை அழைத்துக்கூவும் அணில் ஆடும் பெரிய கிளைகளில்
விழு கோள் பலவின் பழு பயம் கொள்-மார்சிறந்த குலைகளைக் கொண்ட பலாமரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்கு
குறவர் ஊன்றிய குரம்பை புதையகுறவர்கள் எழுப்பிய குடிசை மறையுமாறு  
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்           10வேங்கைப்பூக்கள் உருவாக்கிய தேன்சிந்தும் தோற்றத்தைப்
புலி செத்து வெரீஇய புகர் முக வேழம்புலியென்று எண்ணி வெருண்ட புகர்முக யானை
மழை படு சிலம்பில் கழைபட பெயரும்மேகங்கள் படர்ந்த மலைச்சரிவில் மூங்கில்கள் முறிபடப் பெயர்ந்துசெல்லும்
நல் வரை நாட நீ வரின்நல்ல மலை நாட்டைச் சேர்ந்தவனே! நீ (இரவில்) வந்தால்
மெல்லியல் ஓரும் தான் வாழலளேமெல்லியலாள் (உனக்கு நேரக்கூடிய ஊறுகளை எண்ணி) வாழமாட்டாள்.
  
#13 பாலை பெருந்தலை சாத்தனார்#13 பாலை பெருந்தலை சாத்தனார்
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்தன்னுடைய தென்கடலில் உண்டான முத்தினால் ஆகிய மாலையும்,
முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலைபகைவர் திறைகொடுக்கும் வலிமையையுடய தனது மலையிலுள்ள
தெறல் அரு மரபின் கடவுள் பேணியாராலும் அழிக்கமுடியாத மரபையுடைய கடவுளாகிய முருகனுக்குப் பூசையிட்டுக்
குறவர் தந்த சந்தின் ஆரமும்குறவர்கள் தந்த சந்தனத்தின் மாலையும் ஆகிய
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்               5இரண்டு பெரிய மாலைகளையும் அழகுற அணிந்திருக்கும்,
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்செல்வம் விரும்புகின்ற மார்பின் பாண்டியனின் படைத்தலைவனான –
குழியில் கொண்ட மராஅ யானைகுழியில் (விழவைத்துப்) பிடித்த பழக்கப்படாத யானைகளை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லதுவிலங்கு மொழியால் புரியவைக்கும் குறுகிய பொழுதில் அன்றி,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்(மற்ற நேரங்களில்)தனக்கெனக் கொள்ளும் நிலை இன்றி இரவலர்களுக்கு ஈயும்,
வள் வாய் அம்பின் கோடை பொருநன்           10கூர்மையான வாயைக்கொண்ட அம்பினை உடைய கோடைமலைத் தலைவன் –
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்பண்ணி என்பான் செய்த பயன் மிகுந்த களவேள்வியைப் போல (க்காட்டிலும்)
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்புசிறந்த பயன் நிகழுமாயினும் – தெற்கே ஏறிச்சென்று
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்துமிகுந்த மழையைப் பொழிந்த ஞாயிறு கொண்ட அதிகாலைநேரத்தில்
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்வனப்பில் இனிய துணையாகிய இவளைப் பிரிந்துபோய்த் தங்கினால்,
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட                15எக்குறையும் இல்லாமல் இருப்பதாக நீ ஈட்டும் பொருள்! நல்ல பக்குவமாக,
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கைகுற்றமற்ற தூய்மையான மடிக்கப்பட்ட துணி விரித்த படுக்கையில்
கவவு இன்புறாமை கழிக வள வயல்தழுவி இன்புறுதல் இன்றிக் கழிக – வளமுடைய வயல்களில்
அழல் நுதி அன்ன தோகை ஈன்றதீக்கொழுந்துகளைப் போன்ற தோடுகள் ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்வயற்காட்டு நெல்லின் கவைத்த அடியைக் கொண்ட நெற்கதிர்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர      20நிரம்பிய அகன்ற வயலில் வரப்புகளை அணைத்து அசைய,
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடைதனிமைத் துயரைக் கொண்டுவரும், மாலைபொழுதைக் கொண்ட வாடைக் காற்று
இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்தமின்னுகின்ற பூக்களைக் கொண்ட கரும்பின் ஓங்கி உயந்த கழையின் மீது இருந்த
வெண்_குருகு நரல வீசும்வெண்குருகு ஒலி எழுப்பும் அளவுக்கு வீசுகின்ற
நுண் பல் துவலைய தண் பனி நாளேநுண்ணிய பல துளிகளைக் கொண்ட குளிர்ந்த பனிக்காலத்து நாட்கள்.
  
#14 முல்லை ஒக்கூர் மாசாத்தனார்#14 முல்லை ஒக்கூர் மாசாத்தனார்
அரக்கத்து அன்ன செம் நில பெரு வழிசெவ்வரக்கினைப் போன்ற சிவந்த நிலத்தில் செல்லும் பெருவழியில்
காயாம் செம்மல் தாஅய் பல உடன்காயாம்பூவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, பலவும் ஒன்றாகச் சேர்ந்து
ஈயல்_மூதாய் வரிப்ப பவளமொடுதம்பலப் பூச்சிகள் வரிசையாக ஊர்ந்துசெல்ல, பவளத்துடன்
மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇயநீலமணி நெருங்கி இருந்ததைப் போன்று இருக்கும் குன்றுகள் சூழ்ந்த
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ           5அழகிய காட்டின் அரிய வழிகளில் மடப்பமுடைய தம் பெண்மானைத் தழுவி
திரி மருப்பு இரலை புல் அருந்து உகளமுறுக்கிய கொம்புகளை உடைய இரலை மான்கள் புல்லை உண்டு தாவி மகிழ
முல்லை வியன் புலம் பரப்பி கோவலர்முல்லை ஆகிய அகன்ற புலத்தில் பரவலாக விட்டு, கோவலர்கள்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயரசிறிய குன்றுகளின் பக்கங்களில் உள்ள நறிய பூக்களைப் பறித்துச் சூடிக்கொள்ள,
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற         10பருத்த மாண்புடைய மடி இனிய பாலைப் பொழிய,
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்கன்றை நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகுகின்ற
மாலையும் உள்ளார் ஆயின் காலைமாலைக் காலத்திலும் நினைக்கமாட்டார் எனின், காலையில்
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்றஎன்ன ஆவோமோ பாணனே! என்று சொன்ன
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்தலைவியின் சொல்லுக்கு எதிர்ச்சொல் சொல்ல முடியாதவனாகி,
செவ்வழி நல் யாழ் இசையினென் பையென                15செவ்வழிப் பண்ணை நல்ல யாழில் இசைத்தவனாய் மெல்ல,
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்துகடவுளை வாழ்த்தி, துயரத்தை வெளிக்காட்டி,
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானேஅவர் வரும்வழியே சென்றேனாக, கண்டேன் யானே
விடு விசை குதிரை விலங்கு பரி முடுக(இழுத்து)விட்ட (அம்பு போன்ற)வேகத்தையுடைய குதிரையின் வேறுபட்ட ஓட்டம் அதிகரிக்க
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிகற்களில் மோதி ஒலிக்கும் பல ஆரங்களைக்கொண்ட சக்கரம்
கார் மழை முழக்கு இசை கடுக்கும்          20கார்காலத்து மழையின்  இடிமுழக்கின் ஒலியை ஒக்கும்
முனை நல் ஊரன் புனை நெடும் தேரேபோர்முனையே தன் ஊராகக் கொண்ட தலைவனின் புனையப்பட்ட நெடும் தேரினை.
  
#15 பாலை மாமூலனார்#15 பாலை மாமூலனார்
எம் வெம் காமம் இயைவது ஆயின்எம்முடைய மிகுந்த விருப்பம் சரியாக அமைந்தால்,
மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர்மெய்மையையே நிறைந்த பெரிய கொள்கையாய்ப் பூண்ட தலைமை சான்ற கோசர்களின் –
கொம்மை அம் பசும் காய் குடுமி விளைந்ததிரண்ட பசிய காய்களின் குடுமிப்பக்கம் பழுத்த
பாகல் ஆர்கை பறை கண் பீலிபாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
தோகை காவின் துளுநாட்டு அன்ன             5மயில்கள் வாழும் சோலைகளையுடைய – துளுநாட்டைப் போன்று,
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின்வெறுங்கையுடன் வரும் அயலவர்களை நன்கு உபசரிக்கும் பண்புடைய
செறிந்த சேரி செம்மல் மூதூர்நெருக்கமாக அமைந்த சேரிகளையுடைய தலைமையான முதிய ஊர்கள்
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்லஅறிமுகம் உள்ள மக்களைக் கொண்டது ஆகுக – 
தோழிமாரும் யானும் புலம்பதோழியர்களும் நானும் தனிமையில் வருந்த,
சூழி யானை சுடர் பூண் நன்னன்                     10முகபடாம் அணிந்த யானையினைக் கொண்ட – ஒளிர்கின்ற அணிகலன்களைப் பூண்ட – நன்னனின்
பாழி அன்ன கடி உடை வியல் நகர்பாழி நகரத்தைப் போன்று மிகுந்த கட்டுக்காவலை உடைய அகன்ற (நம்)இல்லத்தின்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகிசெறிந்த பாதுகாப்பையும் மீறி அவனோடு போன,
அத்த இருப்பை ஆர் கழல் புது பூஅரிய சுரத்தில் உள்ள இலுப்பை மரத்தின் ஆர்க்கு கழன்ற புதிய பூக்களைத்
துய்த்த வாய துகள் நிலம் பரக்கதின்ற வாயையுடைய, தூசி நிலத்தின்மேல் பரவும்படியாகக்
கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி               15கொன்றை மரத்தின் கிளைகளில் உள்ள குழல் போன்ற பழத்தைத் தடவிக்கொடுத்து-
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்வலிய கையை உடைய கரடியின் வலிமை உள்ள கூட்டம்- பரவலாகச் செல்லும்-
இன் துணை படர்ந்த கொள்கையொடு ஒராங்குதனது இனிய துணைவனை நினைந்த உள்ளத்தோடு ஒன்றுசேர்ந்து
குன்ற வேயின் திரண்ட என்மலை மூங்கிலைப் போன்ற திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறேமெல்லிய தோளையுடைய மகள் சென்ற – வழி.
  
#16 மருதம் சாகலாசனார்#16 மருதம் சாகலாசனார்
நாய் உடை முது நீர் கலித்த தாமரைநீர்நாய் உள்ள பழைய குளத்தில் செழித்து வளர்ந்த தாமரை
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்மலரின் அல்லிவட்டத்தில் உள்ள ஒளிவிடும் இதழைப் போன்ற
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய்மாசற்ற உள்ளங்கையையும், பவளமணி போன்ற அழகிய வாயையும்
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்நாவினால் திருத்தமாகப் பேசாத, சிரிப்பைத் தோற்றுவிக்கும் இனிய பேச்சையும்(உடைய)
யாவரும் விழையும் பொலம் தொடி புதல்வனை    5அனைவரும் விரும்பும் பொற்கொடி அணிந்த நம் புதல்வனைத்
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டேதேர்கள் ஓடும் தெருவில் தனியனாய்க் கண்டு
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்கூரிய பற்களைக் கொண்ட இளம்பெண் கிட்டச் சென்றவளாய், ஒருவருமே
காணுநர் இன்மையின் செத்தனள் பேணிபார்ப்பவர்கள் இல்லாததால், தோற்ற ஒப்புமையைக் கருதியவளாய்ப் பாசத்துடன் தூக்கி
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலைபொன் அணிகலன்களைச் சுமந்த, பூண்கள் தாங்கிய தன் இளம் கொங்கைகளில் –
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து             10“வா என் உயிரே” எனப் பெரிதும் உவந்து-
கொண்டனள் நின்றோள் கண்டு நிலை செல்லேன்அணைத்துக்கொண்டவளாய் நின்றவளைப் பார்த்து, நின்ற இடத்தில் நிலைகொள்ளாமல்,
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை“மாசற்ற இளையவளே, எதற்குக் கலங்குகிறாய்,
நீயும் தாயை இவற்கு என யான் தன்நீயும் தாயாவாய் இவனுக்கு” என்று சொல்லி நான் பாராட்டிக்
கரைய வந்து விரைவனென் கவைஇகூறி, விரைவாகச் சென்று அவளை அணைத்துக்கொள்ள,
களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா        15கையும் களவுமாய்ப் பிடிபட்டவரைப் போல் தலைகவிழ்ந்து, நிலத்தைக் கீறிக்கொண்டு
நாணி நின்றோள் நிலை கண்டு யானும்நாணி நின்றவளின் நிலைகண்டு, நானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்துஅன்புடன் உபசரித்தேன் அல்லவா! தலைமகனே! வானத்துத்
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின்தெய்வமகளாகிய அரும் கடவுள் போன்றோள் உன்னுடைய
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவேமகனுக்குத் தாய் ஆகுதல் பொருத்தமானதுதானே என்று.
  
#17 பாலை கயமனார்#17 பாலை கயமனார்
வளம் கெழு திரு நகர் பந்து சிறிது எறியினும்வளப்பம் பொருந்திய அழகிய மாளிகையில் பந்தைச் சிறிதுநேரமே எறிந்து விளையாடினாலும்,
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்இளைய துணைகளான தோழியருடன் கழங்கு ஆட்டத்தைச் சேர்ந்து ஆடினாலும்,
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇவருந்துகின்றது அன்னையே என் உடம்பு என்று தளர்ந்துபோய்,
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணெனகொட்டுகின்ற வியர்வைத் துளிகள் கோத்துநிற்கும் நெற்றியை உடையவள், சில்லெனும்படியாக
முயங்கினள் வதியும்-மன்னே இனியே          5தழுவினவளாய் அமர்வாள் – (அதெல்லாம் போச்சே!) இப்போதோ,
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்தோள்வளை அணிந்த சிறந்த தோழியர் கூட்டத்தையும், என்னையும் நினைக்காதவளாய்,
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவிமிக்க புகழையுடைய (தன்) தந்தையின் கடுமையான கட்டுக்காவலையும் மீறி,
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என்(ஓர்)அன்னியனின் உள்ளத்தை முழுவதுவாய்ப் பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடிசிறிய அறிவுசான்ற மகளின் சிலம்பு ஒலிக்கும் சிறிய அடிகள்
வல்ல-கொல் செல்ல தாமே கல்லென             10வலிமை கொண்டனவோ? – நடந்துசெல்வதற்கு, பேரிரைச்சலுடன்
ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின்ஊரே ஒன்றுசேர்ந்து வருவதைப் போன்ற அச்சம் மிக்க பயணத்தை மேற்கொண்ட,
நீர் இல் அத்தத்து ஆரிடை மடுத்தநீரற்ற காட்டுவெளியின் கடுமையான பாதையில், ஒன்றுசேர்ந்த,
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளிகடிய தார்க்குச்சிகளையுடைய, உப்புவணிகர் தம் காளைகளை அதட்டும் தெளிந்த குரல்கள்
நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும்உயர்ந்த பெரிய மலையில் மோதி எதிரொலிக்கும்
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல்         15கடுமையான ஞாயிற்றின் கதிர்கள் முறுகிய மூங்கில் நிறைந்த வறண்ட மலைகளில்,
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்துபெரும் களிறு உரசிய மண்ணையுடைய நடுப்பகுதியைக் கொண்ட யா மரங்களை உடைய,
அரும் சுர கவலைய அதர் படு மருங்கின்அரிய பாலைநிலத்தில் கிளைத்துச் செல்லும் வழிகளையுடைய நீண்ட பாதையின் ஓரங்களில்,
நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர்நீண்ட நடுப்பகுதியை உடைய இலவமரங்களில் பூத்து முடிந்த பல மலர்கள் –
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில்
நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி              20நெய்யைக் கக்கும் தீச்சுடர்கள் (அணைவது)போன்று – காற்று மோதுவதால் மிகச்சிலவாகி,
வைகுறு_மீனின் தோன்றும்வைகறைப் பொழுதின் வானத்து மீனைப் போன்று தோன்றும் –
மை படு மா மலை விலங்கிய சுரனேமேகங்கள் தங்கும் பெரிய மலைகள் எதிர்நிற்கும் வழியில்
  
#18 குறிஞ்சி கபிலர்#18 குறிஞ்சி கபிலர்
நீர் நிறம் கரப்ப ஊழ்_உறுபு உதிர்ந்துநீரின் நிறம் மறைந்துபோகும்படி, முதிர்வுற்று உதிர்ந்த
பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்றுஅழகிய மலர்கள் நெருக்கமாக அமைந்த, விரைவான ஓட்டமுள்ள காட்டாற்றில்
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழிமுதலைகள் படுத்திருக்கும் பாறைகளில் உயர எழுந்து மோதித் திரும்பும் சுழிகளை உடையதும்
மராஅ யானை மதம் தப ஒற்றிதன் கூட்டத்தோடு சேராத யானையின் மதம் கெட மோதி
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்                 5வலியுற்று இழுக்கும் அச்சம் தருவதுமான  வெள்ளத்தை
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்துஅஞ்சாமையுள்ள ஒரு காட்டுப்பன்றியைப் போல நடுங்காமல் துணிவுடன்
நாம அரும் துறை பேர்தந்து யாமத்துஅச்சம்தரும் அரிய துறையைத் தாண்டி, நள்ளிரவில்
ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்பஇங்கு வருபவர்களும் உளரோ? உயர்ந்த மலையைச் சேர்ந்தவனே!
ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள்ஒருநாள் (நீ) துன்பம் அடைந்தாலும், அடுத்த நாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும்               10வாழ்பவள் அல்லள் என் தோழி, ஒருசிறிதும்
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்இடையூறு இல்லாத வழிகளில்கூட, பலமுறை போய்வருபவர்கள்
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால்நீண்ட நாட்கள் அவ்வாறின்றித் தவறிவிடுவர், அதனால்
உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பைதுன்புற்று வருத்தம் அடைகிறோம் – எம் தோட்டத்தை அடுத்துள்ள
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரைவளைந்த தேனிறால் கட்டப்பட்ட உச்சி உயர்ந்த நெடிய மலையில்
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில்    15பழங்கள் தொங்குகின்ற செறிவான மரங்கள் உள்ள காந்தள் பூத்துள்ள சோலையில்
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலைபகலில் நீ வந்தாலும் பொருந்தலாம் – அகன்ற மலையின்
வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய்வளைந்த மூங்கிலின் கணுக்களின் இடைப்பகுதியைப் போன்ற, எம் தாய்
ஓம்பினள் எடுத்த தட மென் தோளேபோற்றி வளர்த்த அகன்ற மெல்லிய தோள்களை.
  
#19 பாலை பொருந்தில் இளங்கீரனார்#19 பாலை பொருந்தில் இளங்கீரனார்
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனிஅன்று அங்கேயே இருந்திருக்கலாம் – அதுவும் இல்லை, வந்தபின் மிகுதியாக
வருந்தினை வாழி என் நெஞ்சே பருந்து இருந்துவருந்துகிறாய், வாழிய என் நெஞ்சே! பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலைவருந்தும் குரலில் பலமுறை அழைக்கும் யாமரங்களின் உயர்ந்த அகன்ற இடத்தில்
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்உருண்டையான உடுக்கின் ஓசையைப் போன்று, பொருள் தெரிந்து ஒலிக்கும்
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம்       5கடும் குரலையுடைய ஆந்தைகள் உள்ள உயரமான பெரிய மலையில்,
எம்மொடு இறத்தலும் செல்லாய் பின் நின்றுஎம்முடன் கடந்து செல்லவும் மாட்டாய், பின் தங்கி
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது(திரும்பிச்) செல்ல நினைத்தால், தடையின்றிப்
செல் இனி சிறக்க நின் உள்ளம் வல்லேபோகலாம் இனியே – சிறப்புறட்டும் உன் உள்ளம்! – விரைவாக,
மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின்மறப்பதைச் செய்யாதிருப்பாயாக எம்மை – நறவம்பூவின்
சே இதழ் அனைய ஆகி குவளை                  10சிவந்த இதழ் போன்றவை ஆகி – (முன்பு)குவளையின்
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமைகரிய இதழைப் போன்ற மிகுந்த நீரைக்கொண்ட, ஈரமான இமைகள் –
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறிஉள்ளம் கொதிப்பதால் நினைக்கும்போதெல்லாம் காய்ந்துபோக –
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்துன்பம் கொண்டு விரைந்து விழுகின்ற பளபளக்கும் நீர்த்துளிகள்
வெய்ய உகுதர வெரீஇ பையெனவெம்மையுடன் கீழே விழ, (அதனால்) அஞ்சி, மெதுவாக
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை                15(அணிந்திருக்கும்)சில வளையல்களும் கழன்று விழுந்த மெலிந்த கைகளின் மணிக்கட்டு
பூ வீ கொடியின் புல்லென போகிபூக்கள் உதிர்ந்த கொடியைப் போல பொலிவிழந்து போக,
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆகதகட்டை அழுத்திச் செய்த அழகிய அகல்விளக்கின் சுடரே துணையாக
இயங்காது வதிந்த நம் காதலிஎங்குமே செல்லாது நின்றிருக்கும் நம் காதலியின்
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னேவருந்திய மெலிந்த முதுகினைத் தழுவிய பின்னர்.
  
#20 நெய்தல் உலோச்சனார்#20 நெய்தல் உலோச்சனார்
பெரு_நீர் அழுவத்து எந்தை தந்தகடற்பரப்பில் (பிடித்து) எம் தந்தை கொண்டுவந்த
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பிஏராளமான மீனை உலர்மீனாக்க(காயப்போட), அதைத் தின்னவரும் பறவைகளை ஓட்டி,
எக்கர் புன்னை இன் நிழல் அசைஇமணல்மேட்டிலுள்ள புன்னைமரத்தின் இனிய நிழலில் தங்கி,
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டிசிவந்த நண்டின் ஆழமான வளைகளைக் கிண்டிக்கிளறி,
ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி             5ஞாழலின் உயர்ந்த கிளையில் கட்டப்பட்ட, வளைந்த கழியை
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கிதாழை விழுதால் ஆன கயிற்றால் செய்த ஊஞ்சலில் ஆடி,
கொண்டல் இடு மணல் குரவை முனையின்கீழ்க்காற்று கொணர்ந்த மணலில் குரவைக்கூத்து ஆடி, அது வெறுத்துப்போய்,
வெண் தலை புணரி ஆயமொடு ஆடிவெள்ளிய நுரையைத் தலையில் கொண்ட கடல் அலைகளில் தோழியரோடு ஆடி,
மணி பூ பைம் தழை தைஇ அணி தகமணி போன்ற மலர்களால் ஆன பசிய தழையுடையைத் தைத்து அழகுபெற (உடுத்தி)
பல் பூ கானல் அல்கினம் வருதல்                    10பலவிதப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தங்கி வருதலை,
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர்பழித்துச் சொல்லல் என்னும் மனநோயுற்ற இந்த ஊரின்
கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னைகொடுமை மட்டுமே அறிந்த பெண்களின் சொற்களைக் கேட்டு, அன்னை
கடி கொண்டனளே தோழி பெரும் துறைவீட்டுக்காவலை மேற்கொண்டாளே தோழி, பெரும் துறைகளில்
எல்லையும் இரவும் என்னாது கல்லெனபகலென்றும் இரவென்றும் இல்லாமல், ஒலி எழுப்பிக்கொண்டு
வலவன் ஆய்ந்த வண் பரி                    15பாகன் ஆய்ந்து தெரிந்த நன்கு வளர்ந்த குதிரைகள் (பூட்டிய)
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவேநிலா வெளிச்சம் போன்ற வெண்மணலில் சுற்றிச் சுற்றி வரும் ஒரு தேர் உள்ளது என்று –
  
  
#21 பாலை காவன்முல்லை பூதனார்#21 பாலை காவன்முல்லை பூதனார்
மனை இள நொச்சி மௌவல் வால் முகைஇளமையான, வீட்டு நொச்சிச் செடியில் (படர்ந்த) காட்டுமுல்லையின் வெள்ளிய மொட்டுகளை
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்இரண்டிரண்டாய் வரிசையாக வைத்ததைப் போன்ற, வண்டுகள் விரும்பும் வெள்ளைப் பற்கள்,
அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇஅழகிய வயிறு, அகன்ற அல்குல், அலங்கரிக்கப்பட்ட
தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள்தாழ்ந்த மெல்லிய கூந்தல், பருத்த மெல்லிய மூங்கில்(போன்ற)தோள்கள்(கொண்ட)
மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு             5தலைவியின் மாட்சிமையுடைய பெண்மைநலம் தனிமையில் வருந்த, தொலை நாட்டுக்குச்
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய்செல்லவேண்டாம் என்று யான் சொல்லவும் (அதற்கு) உடன்படாமல்
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நகபொருளீட்டும் செயலை விரும்பி இருந்தாய்; ஆதலால், (நம்) இல்லம் பொலிவுற
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லேபலவித வேறுபட்ட செல்வத்தை ஈட்டிக் கொணர்வோம் – விரைவாக
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர்எழுவாயாக இனி, வாழ்க என் நெஞ்சே! புரி போல் சுருண்ட பூங்கொத்துகள்
மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன்              10மெல்ல மலரும் அழகிய கிளைகள் வறிது ஆகுமாறு, வலியவன் ஒருவன்
கோடு அறை கொம்பின் வீ உக தீண்டிகிளையின் உச்சியை அடிக்கும் கோல் போன்று, மலர்கள் உதிரத் தாக்கி
மராஅம் அலைத்த மண வாய் தென்றல்மரா மரத்தை அலைக்கழித்த மணம் வாய்க்கப்பெற்ற தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்பாலைவழியில் செல்லும் மள்ளரின் சுருள்முடியில் (அம் மலர்களைத்)தூவிவிடும்-
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்வெப்பம் நின்று காயும் புல்லிய இடங்களில் உள்ள ஊர்களையுடைய –
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை                15பருந்து அடைகாக்கும் பரட்டைத்தலை ஓமை மரங்களையுடைய –
இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்டபெரிய பாறைகளின் இடுக்கில் ஈன்று படுத்திருக்கும்
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண்மெலிந்த, அண்மையில் ஈன்ற, அழகிய பெண்நாய் பசியுற்றது என, பசிய கண்ணை உடைய
செந்நாய் ஏற்றை கேழல் தாக்கஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க,
இரியல் பிணவல் தீண்டலின் பரீஇபதறியோடும் பெண்பன்றி உராய்தலால் சிதறி,
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின்            20செங்காய்கள் உதிரும் பசுங்குலைகளைக் கொண்ட ஈந்தின்
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்தவிதைகள் பரவிய மண் மேடுகளான கட்டாந்தரையை உடைத்த
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர்வலிய வாயையுடைய கோடலியையுடைய கூழ் குடிக்கும் கிணறுதோண்டுவோர்
ஊறாது இட்ட உவலை கூவல்(நீர்) ஊறாமையால் விட்டுவிட்டுச் சென்ற சருகுகள் நிறைந்த பள்ளங்களை,
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்தந்தங்களை விரும்பிய கடின மனம் படைத்த கானவர்
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து      25எளிதாக எண்ணி நடக்கும் வழிகளில் தோண்டிய குழிகள் என்று எண்ணி
இரும் களிற்று இன நிரை தூர்க்கும்பெரிய ஆண்யானையைக் கொண்ட யானைக்கூட்டம் தூர்க்கும் –
பெரும் கல் அத்தம் விலங்கிய காடேபெரிய பாறைகளைக் கொண்ட பாலைநிலம் முன்னர்நிற்கும் இக் காட்டினில் (செல்ல).
  
#22 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்#22 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்
அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும்தெய்வங்களை உடைய உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கும்
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்திரண்ட நீர் உள்ள அருவிகளை உடைய காடுகள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த தலைவனின்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்மணங் கமழும் அகன்ற மார்பைத் தழுவியதால் ஏற்பட்ட துன்பத்தை,
இது என அறியா மறுவரல் பொழுதில்இன்னது என்று அறியாமல் (தாய்) மனக்கலக்கம் அடைந்த போழ்து,
படியோர் தேய்த்த பல் புகழ் தட கை         5தனக்குப் படியாதாரை அழித்த, நிறைந்த புகழையும் நீண்ட கைகளையும் உடைய
நெடுவேள் பேண தணிகுவள் இவள் எனநெடுவேளைத் தொழ, நோய் தணியப்பெறுவள் இவள் என
முது வாய் பெண்டிர் அது வாய் கூறமுதுமை வாய்ந்த பெண்டிர் அதனை உண்மை எனக் கூற,
களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டிவெறிக்களத்தை நன்கு அலங்கரித்து, பூமாலை சூட்டி,
வள நகர் சிலம்ப பாடி பலி கொடுத்துவளம்பொருந்திய வீடே எதிரொலிக்கப் பாடி, பலி கொடுத்து,
உருவ செந்தினை குருதியொடு தூஉய்          10அழகிய செந்தினையைக் குருதி கலந்து தூவி,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள்முருகனை வரவழைத்த நாளின் அச்சம் பொருந்திய நள்ளிரவில்,
ஆரம் நாற அரு விடர் ததைந்த(மார்பில்) சந்தனம் கமழ, அரிய மலையிடுக்கில் செறிவாய்க் கிடந்த,
சாரல் பல் பூ வண்டு பட சூடிசாரலின் பல பூக்களையும், வண்டுகள் மொய்க்கச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்களிறாகிய இரையைத் தெரிந்துகொள்ளப் பார்வையினாலே ஒதுங்கி,
ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல             15மறைவாக இயங்கும் வழக்கத்தை உடைய வலிய புலியைப் போல,
நன் மனை நெடு நகர் காவலர் அறியாமைநல்ல மனைஉயர்ந்த இல்லங்களைக் கொண்ட ஊரின் காவலர்கள் அறியாவண்ணம்,
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்பதன் நசை உள்ளத்து, நம்முடைய விருப்பம் நிறைவேற,
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்துஇனிய உயிர் குழையுமாறு தழுவுதோறும், உடல் பூரித்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்தசிரித்தேன் அல்லவா நான்? எம்மை மெலிவித்த
நோய் தணி காதலர் வர ஈண்டு                        20நோயைத் தணிக்க காதலர் வர, இதற்கு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டேஏதும் தொடர்பில்லாத வேலனுக்காக (அந்நோய்)அழிந்தது அறிந்தே.
  
#23 பாலை ஒரோடோகத்து கந்தரத்தனார்#23 பாலை ஒரோடோகத்து கந்தரத்தனார்
மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல்சில்லென்ற மழையினை – நிலத்து இடமெல்லாம் குளிரும்படி பெய்து,
பாடு உலந்தன்றே பறை குரல் எழிலிமுழக்கம் அடங்கிப்போயிற்றே முரசுக் குரல் மேகம்;
புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனைபுதரின் மேலுள்ள செம்முல்லையின், காடையின் கால்முள்ளைப் போன்ற சிவந்த அரும்புகள்
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழநெருக்கமான கொத்துக்களை உடைய பிடாவுடன் ஒன்று சேரத் தளையவிழ
காடே கம்மென்றன்றே அவல                   5காடு முழுதுமே ‘கம்’மென மணக்கின்றதே! பள்ளங்களில் உள்ள,
கோடு உடைந்து அன்ன கோடல் பைம் பயிர்சங்கு உடைந்ததைப் போன்ற வெண்காந்தளின் பசிய பயிரோடு,
பதவின் பாவை முனைஇ மதவு நடைஅறுகின் கிழங்கையும் வெறுத்து, செருக்கான நடையினை உடைய
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇதலைமைப் பண்புள்ள ஆண் இரலைமான்கள் தான் விரும்பிய பெண்மானைத் தழுவி
தண் அறல் பருகி தாழ்ந்துபட்டனவேகுளிர்ந்த நீரைப் பருகிப் படுத்துக்கொண்டன;
அனைய-கொல் வாழி தோழி மனைய                10(காலமும்)அவ்வளவாகிவிட்டதே!; வாழி என் தோழி! வீட்டிலுள்ள
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்குட்டையான நொச்சியினைச் சூழ்ந்து மலரும்
மௌவல் மா சினை காட்டிகாட்டுமுல்லைக் கொடியினை உடைய கருத்த கிளைகளைக் காட்டி,
அவ்வளவு என்றார் ஆண்டு செய்பொருளேஅந்த முல்லை பூக்கும் காலம்தான் என்றார்-அங்கே செல்வம் சேர்த்துத் திரும்பி வரும் கால அளவு.
  
#24 முல்லை ஆவூர் மூலம் கிழார்#24 முல்லை ஆவூர் மூலம் கிழார்
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்தவேள்வி செய்யாத பார்ப்பான் அறுக்கும் அரத்தால் துண்டாக்கி எடுத்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்னவளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
தளை பிணி அவிழா சுரி முக பகன்றைகட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள்
சிதரல் அம் துவலை தூவலின் மலரும்சிதறுகின்ற அழகிய துளிகள் தூவுதலால் மலர்கின்ற
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்            5தைத்திங்களில் நின்று குளிரப் பெய்யும் கடைசி நாளில்
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறைஒளிவிடும் (ஞாயிற்றின்)கதிர்கள் ஒளிந்திருக்கும் வாடை வீசும் வைகறையில்
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகிஉச்சிவானமே உரிந்து விழுவது போல் அகன்ற வானில் இயங்கி
மங்குல் மா மழை தென் புலம் படரும்பஞ்சுமூட்டத்துடன் பெரு மழை தென்திசையில் சென்று ஏகும்
பனி இரும் கங்குலும் தமியள் நீந்திபனி கொட்டும் கரிய இருட்டாகிய வெள்ளத்தைத் தனி ஒருத்தியாய் நீந்தித்
தம் ஊரோளே நன்_நுதல் யாமே                        10தனது ஊரில் இருக்கிறாள் நல்ல நெற்றியை உடையவள்; நானோ
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்துகாவலை உடைய கதவை முட்டுவதால் பூண் பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டுகூரிய முனை மழுங்கிப்போன மொண்ணையான வெள்ளிய தந்தத்தை உடைய
சிறு கண் யானை நெடு நா ஒண் மணிசிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,
கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்புகழியில் பிணித்த கரிய தோல் கேடகத்தில் வந்து தைக்கும் அம்புகளின் ஓசையும்,
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து 15முழங்கும் ஓசையை உடைய முரசின் ஒலியுடன் சேர்ந்து ஒலிக்கும் யாமத்தில்
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள்உருவி மீண்டும் உறையில் இடாத வாளையுடைய வலிய தோளினையும்
இரவு துயில் மடிந்த தானைஇரவில் தூக்கத்தை முடித்துவிட்ட சேனையையும் உடைய
உரவு சின வேந்தன் பாசறையேமேமிக்க சினம் கொண்ட வேந்தனின் பாசறையில் உள்ளேன்.
  
#25 பாலை ஒல்லையூர் தந்த பூத பாண்டியன்#25 பாலை ஒல்லையூர் தந்த பூத பாண்டியன்
நெடும் கரை கான்யாற்று கடும் புனல் சாஅய்உயர்ந்த கரைகளைக் கொண்ட காட்டாற்றின் வேகம் மிக்க வெள்ளம் வற்றிவிட,
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைபளபளக்கும் அறல்களைக் கொண்ட பரந்த மணலுள்ள அகன்ற நீர்த்துறைகளில்
தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சிகுளிர்ந்த மடுக்களை ஒட்டிய சோலைகள்தோறும் காஞ்சி மரத்தின்
பைம் தாது அணிந்த போது மலி எக்கர்அழகிய தாதுக்களை அணிந்த பூக்கள் நிறைந்த மணல்மேடுகள்
வதுவை நாற்றம் புதுவது கஞல                       5திருமணமாலையின் புதுமணத்தோடு புத்துணர்ச்சியுடன் திகழ,
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில்மாமரத்தின் அரும்புகளைக் கோதிய நீலமணி நிறமுள்ள கரிய குயில்கள்
படு நா விளியால் நடு நின்று அல்கலும்ஒலிக்கும் தமது நாவினால் (மன்றத்தின்) நடுவில் நின்று நாள்முழுக்க
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவஉரத்துக்கூறுவது போல மாறிமாறிக் கூவ,
இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்கூட்டமான வண்டுகள் உகுத்துவிட்ட – இலவமலர்களின் மேல் –
சினை பூ கோங்கின் நுண் தாது பகர்நர்              10கிளைகளில் பூத்திருக்கும் கோங்கின் நுண்தாது – விற்போர்
பவள செப்பில் பொன் சொரிந்து அன்னபவளச் செப்பில் பொன்துகளைச் சொரிந்தது போன்ற,
இகழுநர் இகழா இள_நாள் அமையம்அலட்சியத்துடன் இருப்பவர்களும் அலட்சியப்படுத்தாத இளவேனில் நாளை
செய்தோர் மன்ற குறி என நீ நின்(திரும்பிவரும் நாள் ஆகக்) குறித்தல் செய்தார் என நீ உனது
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்பவருந்துகின்ற உன் மையிட்ட கண்களில் நீர் வடிந்து உதிர;
வாராமையின் புலந்த நெஞ்சமொடு             15(தலைவன்) “வராததினால் வெறுத்துப்போன நெஞ்சத்துடன்
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் எனவருந்த வேண்டாம், இளையோளே! வருந்துவதாக என் உயிர்” என
மெல்லிய இனிய கூறி வல்லேமென்மையான இனிய சொற்களைக் கூறி, விரைவிலேயே
வருவர் வாழி தோழி பொருநர்வந்துவிடுவார்; வாழ்க! தோழியே! போர்வீரர்கள்
செல் சமம் கடந்த வில் கெழு தட கைஎதிர்த்து வரும் போரினை வென்ற, வில் ஏந்திய பெரிய கைகளையுடைய,
பொதியின் செல்வன் பொலம் தேர் திதியன்             20பொதிகை மலைத் தலைவன் – பொன்னால் ஆன தேரை உடைய – திதியனின்
இன் இசை இயத்தின் கறங்கும்இனிய இசையுள்ள முரசைப் போன்று முழங்கும்,
கல் மிசை அருவிய காடு இறந்தோரேமலை மேலுள்ள அருவிகளைக் கொண்ட காடுகளைக் கடந்து சென்றவர்.