கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சாக்கியன் 1
சாகை 1
சாகைகள் 1
சாணை 1
சாத்திய 1
சாத்து 1
சாதக 1
சாதகம் 2
சாதரங்க 1
சாதரங்கம் 1
சாதாரி 1
சாதி 1
சாதிகள் 1
சாந்தமும் 1
சாந்து 1
சாப 1
சாய் 1
சாயல் 1
சாயா 2
சார்ந்து 1
சார்பு 1
சாரணி 1
சாரணை 1
சாரல் 6
சாரிகை 1
சால் 3
சால்புசெய்து 1
சாலி 1
சாலியும் 1
சாற்ற 1
சாற்றும் 1
சான்ற 1
சாக்கியன் (1)
வேடம் துறவா விதி உடை சாக்கியன்
அருள் கரை காணா அன்பு எனும் பெரும் கடல் – கல்லாடம்:2 66/14,15
சாகை (1)
எண் திசை சாகை கொண்டு இருள் மனம் பொதுளி – கல்லாடம்:2 83/2
சாகைகள் (1)
ஆங்காங்கு ஆயிர கோடி சாகைகள்
மிடலொடு விரித்து சருக்கம் பாழி – கல்லாடம்:2 98/6,7
சாணை (1)
தலை உடல் அசைத்து சாணை வாய் துடைத்து – கல்லாடம்:2 6/2
சாத்திய (1)
எடுத்து அடை கல் மலர் தொடுத்தவை சாத்திய
பேர் ஒளி இணையா கூடல் மா மணி – கல்லாடம்:2 66/18,19
சாத்து (1)
சுரி வளை சாத்து நிறைமதி தவழும் – கல்லாடம்:2 64/32
சாதக (1)
சாதக புள்-கண் தாமரை கழுநீர் – கல்லாடம்:2 98/27
சாதகம் (2)
சாதகம் வெறுப்ப சரிந்து அகழ்ந்து ஆர்த்து – கல்லாடம்:2 68/19
சாதகம் முரல் குரல் வாய் மடை திறப்ப – கல்லாடம்:2 94/17
சாதரங்க (1)
பன்னு சாதரங்க ஒளி குணம் பத்தும் – கல்லாடம்:2 98/30
சாதரங்கம் (1)
சாதரங்கம் எனும் சாதிகள் நான்கும் – கல்லாடம்:2 98/15
சாதாரி (1)
தாரியில் காட்டி தரும் சாதாரி
உலகு உயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க – கல்லாடம்:2 43/31,32
சாதி (1)
சீறிதழ் சாதி பெருமணம் போல – கல்லாடம்:2 99/44
சாதிகள் (1)
சாதரங்கம் எனும் சாதிகள் நான்கும் – கல்லாடம்:2 98/15
சாந்தமும் (1)
நிலவு உமிழ் புண்ணிய பால் நிற சாந்தமும்
அணிவித்து அருள் கொடுத்து அரசன் ஆக்கி – கல்லாடம்:2 55/22,23
சாந்து (1)
முண்டக முலையின் சாந்து அழித்து அமை தோள் – கல்லாடம்:2 87/8
சாப (1)
விழி விடும் எரியும் சாப வாய் நெருப்பும் – கல்லாடம்:1 1/16
சாய் (1)
சாய் தாள் பிள்ளை தந்து கொடுத்தும் – கல்லாடம்:2 9/24
சாயல் (1)
மயில் எனும் சாயல் ஒரு மதி நுதலியை – கல்லாடம்:2 55/28
சாயா (2)
கொள்வோர்க்கு அன்றி அவ் வயல் சாயா
பூம் பணை திரிந்து பொதி அவிழ் முளரியில் – கல்லாடம்:2 17/27,28
கண் துளி துளிக்கும் சாயா பையுளை – கல்லாடம்:2 20/12
சார்ந்து (1)
அருகர் சார்ந்து நின்று அரன் பணி அடைப்ப – கல்லாடம்:2 55/14
சார்பு (1)
சலியா சார்பு நிலை அற நீங்கி – கல்லாடம்:2 42/31
சாரணி (1)
அதற்கு சாரணி அருள் கரம் ஒன்றில் – கல்லாடம்:2 99/28
சாரணை (1)
ஆதி சாரணை அடர் நிலை பார்வை – கல்லாடம்:2 49/9
சாரல் (6)
அருவி அம் சாரல் இருவி அம் புனத்தினும் – கல்லாடம்:2 4/10
அடிக்கடி வணங்கும் சாரல் நாட – கல்லாடம்:2 25/8
கறங்கு இசை அருவி அம் சாரல்
புறம்பு தோன்றி நின்-கண் ஆகுவனே – கல்லாடம்:2 39/21,22
வைத்துவைத்து எடுக்கும் சாரல் நாடன் – கல்லாடம்:2 42/9
அருவி அம் சாரல் ஒரு பரங்குன்றம் – கல்லாடம்:2 59/32
ஆர பொதும்பர் அடை குளிர் சாரல்
சுரும்புடன் விரிந்த துணை மலர் கொடியே – கல்லாடம்:2 81/29,30
சாரிகை (1)
கரும் தலை சாரிகை செவ் வாய் பசுங்கிளி – கல்லாடம்:2 7/15
சால் (3)
பாடல் சால் பச்சை கோடக காற்றை – கல்லாடம்:2 17/48
நெடும் சால் போகி கடும் கயல் துரக்கும் – கல்லாடம்:2 74/8
தழல் வேல் குமரன் சால் பரங்குன்றம் – கல்லாடம்:2 84/6
சால்புசெய்து (1)
தவல் அரும் சிறப்பொடு சால்புசெய்து அமைந்த – கல்லாடம்:2 100/9
சாலி (1)
பணைத்து எழு சாலி நெருக்குபு புகுந்து – கல்லாடம்:2 69/12
சாலியும் (1)
சுருள் விரி சாலியும் குலை அரம்பையுமே – கல்லாடம்:2 59/21
சாற்ற (1)
உளது என குரிசில் ஒரு மொழி சாற்ற
பேழ் வாய் கொய் உளை அரி சுமந்து எடுத்த – கல்லாடம்:2 75/3,4
சாற்றும் (1)
சூல் நிறைந்து உளையும் சுரி வளை சாற்றும்
இன கயல் உண்ணும் களி குருகு இனமும் – கல்லாடம்:2 47/11,12
சான்ற (1)
பாடல் சான்ற தெய்வ – கல்லாடம்:2 93/24