Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்கதாக 1
தகடு 1
தகர்க்க 1
தகர்க்கும் 1
தகர்த்து 1
தகுவன் 1
தகைதற்கு 1
தங்கள் 7
தங்கள்-பால் 1
தங்களின் 1
தங்கு 1
தசை 3
தசையிட்டும் 1
தசையும் 1
தசையை 1
தட்டி 1
தட்டும் 1
தட 3
தடங்கள் 1
தடங்களொடு 1
தடத்திடை 1
தடம் 2
தடவி 3
தடவியே 1
தடவுவீர் 1
தடி-மின் 2
தடித்த 1
தடித்தனம் 2
தடிப்பதற்கு 1
தடியால் 1
தடியும் 1
தடுமாறி 1
தண் 5
தண்டநாயகர் 1
தண்டலை 1
தண்டிடை 1
தண்டின் 2
தண்டினால் 1
தண்டினின் 1
தண்டினுக்கும் 1
தண்டு 7
தண்ணீர் 1
தண்ணீர்-தனை 1
தண்ணுமை 1
தணந்த 1
தணலே 1
தணி 1
தத்து 1
ததும்ப 1
தந்த 2
தந்து 2
தந்தே 1
தப்பியது 1
தபன 1
தம் 12
தம்-மின் 1
தம்பிரான் 1
தம்முடை 1
தம்மை 1
தமக்கு 1
தமது 1
தமரம் 1
தமருகங்கள் 2
தமிழ் 1
தமிழும் 1
தயங்கு 1
தயங்கும் 1
தயிரும் 3
தயிலம் 1
தரங்கம் 1
தரணி 2
தரத்து 1
தரள 4
தரளம் 1
தரன் 1
தரிக்கும் 1
தரித்தது 1
தரித்தன்றி 1
தரித்தே 1
தரு 8
தருக 1
தருகின்ற 1
தருதும் 1
தரும் 2
தருமம் 1
தருமன் 1
தரை 6
தரைமகள் 1
தரையிலே 1
தலம் 2
தலை 18
தலை-அதனொடு 1
தலைகள் 1
தலைசுமந்து 1
தலைமகனை 1
தலையின் 2
தலையின 1
தலையும் 2
தலையெடுக்கவே 1
தலைவர் 1
தலைவனை 1
தலைவீ 1
தவ 1
தவப்பயனும் 1
தவம் 2
தவள 4
தவிடு 1
தவிர் 2
தவிர்க 1
தவிர்கிலா 1
தவிர்த்து 1
தவிர்ந்தமை 1
தவிர்ந்து 1
தவிராது 1
தழங்கு 1
தழல் 7
தழலே 1
தழுவி 1
தழுவிய 1
தழுவு 1
தழுவும் 1
தழுவேல் 1
தழை 2
தழைக்கவே 2
தள்ளிவர 1
தளத்தொடும் 1
தளம் 1
தளர்ந்து 1
தளவு 1
தளிர் 1
தளிர்ப்ப 1
தளைகள் 1
தளையும் 2
தளையை 1
தறி 1
தறிகள் 1
தறியில் 1
தறுகண் 2
தன் 19
தன்மை 2
தன்னில் 1
தன்னிலே 1
தன்னுடைய 2
தன 2
தனக்கு 2
தனக்கே 1
தனங்கள் 1
தனத்தினளே 1
தனது 6
தனம் 2
தனமும் 1
தனராகியும் 1
தனி 17
தனித்தனி 2
தனித்தனியே 1
தனிப்படும் 1
தனு 2

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

தக்கதாக (1)

சலியாத தனி ஆண்மை தறுகண் வீரர் தருக வரம் வரத்தினுக்கு தக்கதாக
பலியாக உறுப்பு அரிந்து தருதும் என்று பரவும் ஒலி கடல் ஒலி போல் பரக்குமாலோ – கலிங்:109/1,2

மேல்

தகடு (1)

செம் நெருப்பினை தகடு செய்து பார் செய்தது ஒக்கும் அ செம் தரை பரப்பு – கலிங்:82/1

மேல்

தகர்க்க (1)

சாகை சொன்ன பேய்களை தகர்க்க பற்கள் என்னுமே – கலிங்:308/2

மேல்

தகர்க்கும் (1)

தட்டி வானை தகர்க்கும் தலையின தாழ்ந்து மார்பிடை தட்டும் உதட்டின – கலிங்:141/2

மேல்

தகர்த்து (1)

பல்லை தகர்த்து பழ அரிசி ஆக பண்ணிக்கொள்ளீரே – கலிங்:524/2

மேல்

தகுவன் (1)

இவன் எமக்கு மகன் ஆகி இரவி குலம் பாரிக்க தகுவன் என்றே – கலிங்:237/2

மேல்

தகைதற்கு (1)

இமையவரை தகைதற்கு இருளும் மிடற்று இறைவற்கு இனிய தரத்து அமுத கனி அதரத்தினளே – கலிங்:130/2

மேல்

தங்கள் (7)

என்று மற்று அவர்கள் தங்கள் சரிதங்கள் பலவும் எழுதி மீள இதன் மேல் வழுதி சேரன் மடிய – கலிங்:196/1
பனுவலுக்கு முதலாய வேதம் நான்கில் பண்டு உரைத்த நெறி புதுக்கி பழையர் தங்கள்
மனுவினுக்கு மும்மடி நான்மடி ஆம் சோழன் மதி குடை கீழ் அறம் தளிர்ப்ப வளர்ந்த ஆறும் – கலிங்:205/1,2
சரி களம்-தொறும் தங்கள் சயமகள்-தன்னை மன் அபயன் கைப்பிடித்தலும் – கலிங்:255/1
தங்கள் பொன் குடை சாமரம் என்று இவை தாங்கள் தம் கரத்தால் பணி மாறவே – கலிங்:325/2
சேனை மடி களம் கண்டேம் திகைத்து நின்றேம் தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள்
ஆனை மணியினை தாளம் பிடித்து கும்பிட்டு அடிப்பாணர் என பிழைத்தார் அநேகர் ஆங்கே – கலிங்:469/1,2
சாய்ந்து விழும் கட களிற்றினுடனே சாய்ந்து தடம் குருதி மிசை படியும் கொடிகள் தங்கள்
காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் – கலிங்:480/1,2
முது குவடு இப்படி இருக்கும் என்ன நிற்கும் முனை களிற்றோர் செரு களத்து முந்து தங்கள்
முதுகு வடுப்படும் என்ற வடுவை அஞ்சி முன்னம் வடுப்பட்டாரை இன்னம் காண்-மின் – கலிங்:502/1,2

மேல்

தங்கள்-பால் (1)

ஊடுவீர் கொழுநர் தங்கள்-பால் முனிவு ஒழிந்து கூடுதலின் உங்களை – கலிங்:70/1

மேல்

தங்களின் (1)

தங்களின் மகிழ்ந்து இரு குலத்து அரசர்-தாமும் தனித்தனி உவப்பது ஒர் தவப்பயனும் ஒத்தே – கலிங்:238/2

மேல்

தங்கு (1)

தங்கு கண் வேல் செய்த புண்களை தட முலை வேது கொண்டு ஒற்றியும் – கலிங்:55/1

மேல்

தசை (3)

நல் வாய் செய்ய தசை தேடி நரி வாய் தசையை பறிக்குமால் – கலிங்:119/2
எழுந்து விழும் தசை என்று நிலத்தை இருந்து துழாவிடுமே – கலிங்:169/2
என்ற ஓசை தம் செவிக்கு இசைத்தலும் தசை பிணம் – கலிங்:307/1

மேல்

தசையிட்டும் (1)

உடல் கலக்கு அற அரிந்து தசையிட்டும் ஒருவன் ஒரு துலை புறவொடு ஒக்க நிறை புக்க புகழும் – கலிங்:190/2

மேல்

தசையும் (1)

நிணமும் தசையும் பருந்து இசிப்ப நெருப்பும் பருத்தியும் பொன்று – கலிங்:120/1

மேல்

தசையை (1)

நல் வாய் செய்ய தசை தேடி நரி வாய் தசையை பறிக்குமால் – கலிங்:119/2

மேல்

தட்டி (1)

தட்டி வானை தகர்க்கும் தலையின தாழ்ந்து மார்பிடை தட்டும் உதட்டின – கலிங்:141/2

மேல்

தட்டும் (1)

தட்டி வானை தகர்க்கும் தலையின தாழ்ந்து மார்பிடை தட்டும் உதட்டின – கலிங்:141/2

மேல்

தட (3)

தங்கு கண் வேல் செய்த புண்களை தட முலை வேது கொண்டு ஒற்றியும் – கலிங்:55/1
கலை வளர் உத்தமனை கரு முகில் ஒப்பவனை கரட தட கடவுள் கனக நிறத்தவனை – கலிங்:127/1
பொரு தட கை வாள் எங்கே மணி மார்பு எங்கே போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத – கலிங்:484/1

மேல்

தடங்கள் (1)

தன தடங்கள் மிசை நகம் நடந்த குறி தடவுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:26/2

மேல்

தடங்களொடு (1)

தன் தனி களிறு அணைந்தருளி வீரமகள் தன் தன தடங்களொடு தன் புயம் அணைந்த பரிசும் – கலிங்:196/2

மேல்

தடத்திடை (1)

கடல்களை சொரி மலை உள என இரு கட தடத்திடை பொழி மதம் உடையன – கலிங்:350/1

மேல்

தடம் (2)

தண்டினுக்கும் எளியனோ என வெகுண்டு தடம் புயங்கள் குலுங்க நக்கே – கலிங்:376/2
சாய்ந்து விழும் கட களிற்றினுடனே சாய்ந்து தடம் குருதி மிசை படியும் கொடிகள் தங்கள் – கலிங்:480/1

மேல்

தடவி (3)

வரைகளில் புடை தடவி அப்படி வனம் இலைப்புரை தடவியே – கலிங்:461/2
தம் கணவருடன் தாமும் போக என்றே சாதகரை கேட்பாரே தடவி பார்ப்பார் – கலிங்:481/1
ஊண் ஆதரிக்கும் கள்ள பேய் ஒளித்து கொண்ட கலம் தடவி
காணாது அரற்றும் குருட்டு பேய் கைக்கே கூழை வாரீரே – கலிங்:569/1,2

மேல்

தடவியே (1)

வரைகளில் புடை தடவி அப்படி வனம் இலைப்புரை தடவியே – கலிங்:461/2

மேல்

தடவுவீர் (1)

தன தடங்கள் மிசை நகம் நடந்த குறி தடவுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:26/2

மேல்

தடி-மின் (2)

மெலிந்த உடல்கள் தடி-மின் மெலிந்த உடல்கள் தடி-மின் – கலிங்:302/2
மெலிந்த உடல்கள் தடி-மின் மெலிந்த உடல்கள் தடி-மின் – கலிங்:302/2

மேல்

தடித்த (1)

தணந்த மெலிவு தான் தீர தடித்த உடல் வெம் பசி தீர – கலிங்:527/1

மேல்

தடித்தனம் (2)

தடித்தனம் என தலை தடித்தனம் என பல தனி பனை குனிப்ப எனவே – கலிங்:228/1
தடித்தனம் என தலை தடித்தனம் என பல தனி பனை குனிப்ப எனவே – கலிங்:228/1

மேல்

தடிப்பதற்கு (1)

வேகைக்கு விறகு ஆனேம் மெலியா நின்றேம் மெலிந்த உடல் தடிப்பதற்கு விரகும் காணேம் – கலிங்:215/1

மேல்

தடியால் (1)

தடியால் மடுத்து கூழ் எல்லாம் தானே பருகி தன் கணவன் – கலிங்:574/1

மேல்

தடியும் (1)

அடல் நாக எலும்பு எடுத்து நரம்பில் கட்டி அடி தடியும் பிடித்து அமரின் மடிந்த வீரர் – கலிங்:156/1

மேல்

தடுமாறி (1)

சாதிகள் ஒன்றோடொன்று தலை தடுமாறி யாரும் – கலிங்:259/1

மேல்

தண் (5)

தண் கொடை மானதன் மார்பு தோய் தாதகி மாலையின் மேல் விழும் – கலிங்:31/1
எங்கும் உள மென் கதலி எங்கும் உள தண் கமுகம் எங்கும் உள பொங்கும் இளநீர் – கலிங்:295/1
தண் ஆரின் மலர் திரள் தோள் அபயன் தான் ஏவிய சேனை தனக்கு அடைய – கலிங்:363/1
தண் தயிரும் மிடைவித்த புளிதமுமா தாழி-தொறும் தம்-மின் அம்மா – கலிங்:519/2
தாங்கு ஆர புயத்து அபயன் தண் அளியால் புயல் வளர்க்கும் – கலிங்:540/1

மேல்

தண்டநாயகர் (1)

தண்டநாயகர் காக்கும் நவிலையில் – கலிங்:386/1

மேல்

தண்டலை (1)

காலால் தண்டலை உழக்கும் காவிரியின் கரை மருங்கு வேட்டையாடி – கலிங்:278/1

மேல்

தண்டிடை (1)

களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடை
குளித்த போழ்து கைப்பிடித்த கூர் மழுக்கள் ஒக்குமே – கலிங்:431/1,2

மேல்

தண்டின் (2)

சோழ குல_துங்கன் விட வந்துவிடு தண்டின் எதிர் சென்று அமர் தொடங்குக எனவே – கலிங்:393/2
பொருகை தவிர்ந்து கலிங்கர் ஓட போக புரந்தரன் விட்ட தண்டின்
இரு கையும் வென்றது ஒர் வென்றி பாடி இரு கையும் வீசி நின்று ஆடினவே – கலிங்:587/1,2

மேல்

தண்டினால் (1)

உழந்து தாம் உடை மண்டலம் தண்டினால்
இழந்த வேந்தர் எனையர் என்று எண்ணுகேன் – கலிங்:387/1,2

மேல்

தண்டினின் (1)

விட்ட தண்டினின் மீனவர் ஐவரும் – கலிங்:381/1

மேல்

தண்டினுக்கும் (1)

தண்டினுக்கும் எளியனோ என வெகுண்டு தடம் புயங்கள் குலுங்க நக்கே – கலிங்:376/2

மேல்

தண்டு (7)

தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே – கலிங்:240/2
தான் அரணம் உடைத்து என்று கருதாது வருவதும் அ தண்டு போலும் – கலிங்:377/2
போரின் மேல் தண்டு எடுக்க புறக்கிடும் – கலிங்:382/1
சாலை கொண்டதும் தண்டு கொண்டே அன்றோ – கலிங்:383/2
மாறுபட்டு எழு தண்டு எழ வத்தவர் – கலிங்:384/1
தளத்தொடும் பொரு தண்டு எழ பண்டு ஒர் நாள் – கலிங்:385/1
தண்டு கொண்டு அவன் சக்கரம் வந்ததே – கலிங்:388/2

மேல்

தண்ணீர் (1)

வெம்பும் குருதி பேர் ஆற்றில் வேண்டும் தண்ணீர் வேழத்தின் – கலிங்:556/1

மேல்

தண்ணீர்-தனை (1)

கொதித்த கரியின் கும்பத்து குளிர்ந்த தண்ணீர்-தனை மொண்டு – கலிங்:582/1

மேல்

தண்ணுமை (1)

வீணை யாழ் குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறு இவை நூறு விதம் பட – கலிங்:323/1

மேல்

தணந்த (1)

தணந்த மெலிவு தான் தீர தடித்த உடல் வெம் பசி தீர – கலிங்:527/1

மேல்

தணலே (1)

புதைந்த மணி புகை போர்த்த தழலே போலும் போலாவேல் பொடி மூடு தணலே போலும் – கலிங்:91/2

மேல்

தணி (1)

தணி தவள பிறையை சடை மிசை வைத்த விடை தலைவர் வனத்தினிடை தனி நுகர்தற்கு நினைத்து – கலிங்:125/1

மேல்

தத்து (1)

தத்து நீர் வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ் பரிசில் வாணர் பொன் – கலிங்:198/1

மேல்

ததும்ப (1)

மழை ததும்ப விரல் தரையிலே எழுதும் மட நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:72/2

மேல்

தந்த (2)

தந்த உலக்கை-தனை ஓச்சி சலுக்குமுலுக்கு என குற்றீரே – கலிங்:526/2
நமக்கு ஒரு வாய் தந்த நான்முகனார் நாணும்படி களித்து உண்ணீரே – கலிங்:580/2

மேல்

தந்து (2)

ஒருவர் முன் ஒர் நாள் தந்து பின் செலா உதியர் மன்னரே மதுரை மன்னர் என்று – கலிங்:199/1
சாகைக்கு இத்தனை ஆசை போதும் பாழின் சாக்காடும் அரிதாக தந்து வைத்தாய் – கலிங்:215/2

மேல்

தந்தே (1)

தன் முனிவும் அவன் முனிவும் தவிர்க என்று சாதன மந்திர விச்சை பலவும் தந்தே – கலிங்:176/2

மேல்

தப்பியது (1)

உலகுக்கு ஒருமுதல் அபயற்கு இடு திறை உரை தப்பியது எமது அரசே எம் – கலிங்:373/1

மேல்

தபன (1)

இருள் முழுதும் அகற்றும் விதுகுலத்தோன் தேவி இகல் விளங்கு தபன குலத்து இராசராசன் – கலிங்:234/1

மேல்

தம் (12)

என்ற ஓசை தம் செவிக்கு இசைத்தலும் தசை பிணம் – கலிங்:307/1
காளமும் களிறும் பெறும் பாணர் தம் கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே – கலிங்:324/2
தங்கள் பொன் குடை சாமரம் என்று இவை தாங்கள் தம் கரத்தால் பணி மாறவே – கலிங்:325/2
கடகர் தம் திறை கொடு அடைய வந்து அரசர் கழல் வணங்கினர்கள் இவருடன் – கலிங்:338/1
கவந்தம் ஆட முன்பு தம் களிப்பொடு ஆடு பேய் இனம் – கலிங்:432/1
குறியாக குருதி கொடி ஆடை ஆக கொண்டு உடுத்து போர்த்து தம் குஞ்சி முண்டித்து – கலிங்:468/1
தம் கணவருடன் தாமும் போக என்றே சாதகரை கேட்பாரே தடவி பார்ப்பார் – கலிங்:481/1
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம்
கயிற்றால் இழுப்புண்டு சாயாது நிற்கும் கழாய் ஒத்தல் காண்-மின்களோ – கலிங்:488/1,2
வரும் சேனை தம் சேனை மேல் வந்து உறாமே வில் வாள் வீரர் வாழ்நாள் உக – கலிங்:490/1
உற்ற வாய் அம்பு தம் பரிசையும் கருவியும் உருவி மார்பு அகலமும் உருவி வீழ் செருநர் வில் – கலிங்:495/1
கற்றவா ஒருவன் வில் கற்றவா என்று தம் கை மறித்தவரையும் காண்-மினோ காண்-மினோ – கலிங்:495/2
விண்ணின் மொய்த்து எழு விமானங்களில் சுரர்களாய் மீது போம் உயிர்களே அன்றியே இன்று தம்
கண் இமைப்பு ஒழியவே முகம் மலர்ந்து உடல்களும் கடவுளோர் போலுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:496/1,2

மேல்

தம்-மின் (1)

தண் தயிரும் மிடைவித்த புளிதமுமா தாழி-தொறும் தம்-மின் அம்மா – கலிங்:519/2

மேல்

தம்பிரான் (1)

அறிஞர் தம்பிரான் அபயன் வாரணம் அரசர் மண்டலத்து அரண் அற பறித்து – கலிங்:100/1

மேல்

தம்முடை (1)

வெருவிய அடுநர் தம்முடை வடிவு இது என விரி தலை-அதனொடு மறிவன சிலசில – கலிங்:589/2

மேல்

தம்மை (1)

சாயும் மற்று அவர் காளம் ஊதிகள் தம்மை ஒத்தமை காண்-மினோ – கலிங்:498/2

மேல்

தமக்கு (1)

தமக்கு ஒரு வாயொடு வாய் மூன்றும் தாம் இனிதா படைத்துக்கொண்டு – கலிங்:580/1

மேல்

தமது (1)

அமர் புரி தமது அகலத்து இடை கவிழ் அடு கரி நுதலில் அடிப்பர் இ களிறு – கலிங்:442/1

மேல்

தமரம் (1)

தழல் படு கழை வனம் எப்படி அப்படி சடசட தமரம் எழ பகழி படை – கலிங்:420/1

மேல்

தமருகங்கள் (2)

முகடு இடந்து உரும் எறிந்து என முழங்க உடனே மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே – கலிங்:114/2
தமருகங்கள் தருகின்ற சதியின்-கண் வருவார் – கலிங்:115/1

மேல்

தமிழ் (1)

ஈழமும் தமிழ் கூடலும் சிதைத்து இகல் கடந்தது ஓர் இசை பரந்ததும் – கலிங்:200/2

மேல்

தமிழும் (1)

மழலை திரு மொழியில் சில வடுகும் சில தமிழும்
குழறி தரு கருநாடியர் குறுகி கடை திற-மின் – கலிங்:43/1,2

மேல்

தயங்கு (1)

தயங்கு ஒளி ஓடை வரைகள் தரும் கடம் தாரை மழையின் – கலிங்:361/1

மேல்

தயங்கும் (1)

நெருங்கு ஆகவ செம் களத்தே தயங்கும் நிண போர்வை மூடிக்கொள – கலிங்:486/1

மேல்

தயிரும் (3)

வெண் தயிரும் செம் தயிரும் விராய் கிடந்த கிழான் போல வீரர் மூளை – கலிங்:519/1
வெண் தயிரும் செம் தயிரும் விராய் கிடந்த கிழான் போல வீரர் மூளை – கலிங்:519/1
தண் தயிரும் மிடைவித்த புளிதமுமா தாழி-தொறும் தம்-மின் அம்மா – கலிங்:519/2

மேல்

தயிலம் (1)

பாயும் களிற்றின் மத தயிலம் பாய பாய வாரீரே – கலிங்:506/2

மேல்

தரங்கம் (1)

ஆறு அலை தரங்கம் உள அன்ன நடை தாமும் உள ஆலை கமழ் பாகும் உளவாய் – கலிங்:296/1

மேல்

தரணி (2)

தரணி தரித்தது என பரணி பரித்த புகழ் சயதரனை பரவி சதி கொள் நடத்தினளே – கலிங்:124/2
தரணி காவலளவும் செல மொழிந்து முனிவன் தான் எழுந்தருள மா முனி மொழிந்த படியே – கலிங்:185/2

மேல்

தரத்து (1)

இமையவரை தகைதற்கு இருளும் மிடற்று இறைவற்கு இனிய தரத்து அமுத கனி அதரத்தினளே – கலிங்:130/2

மேல்

தரள (4)

முறுவல் மாலையொடு தரள மாலை முக மலரின் மீதும் முலை முகிழினும் – கலிங்:49/1
கவள மத கரட கரி உரிவை கயிலை களிறு விருப்புறும் அ கனக முலை தரள
தவள வடத்திடையில் பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உத்தரிய தனி உரகத்தினளே – கலிங்:128/1,2
திருகுதலை கிளவி சிறு குதலை பவள சிறு முறுவல் தரள திரு வதனத்தினளே – கலிங்:131/2
பொழி மதத்தால் நிலம் மெழுகி பொடிந்து உதிர்ந்த பொடி தரள பிண்டி தீட்டி – கலிங்:517/1

மேல்

தரளம் (1)

பதம்கொள் புரவி படி தரளம் பொன் பாடகமா புனையீரே – கலிங்:510/2

மேல்

தரன் (1)

கவன நெடும் பரி வீர தரன் காவிரி நாடுடையான் இரு தோள் – கலிங்:528/1

மேல்

தரிக்கும் (1)

சாம் அளவும் பிறர்க்கு உதவாதவரை நச்சி சாருநர் போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி – கலிங்:478/1

மேல்

தரித்தது (1)

தரணி தரித்தது என பரணி பரித்த புகழ் சயதரனை பரவி சதி கொள் நடத்தினளே – கலிங்:124/2

மேல்

தரித்தன்றி (1)

ஒரு பொழுதும் தரித்தன்றி ஊடுபோக்கு அரிது அணங்கின் காடு என்று அன்றோ – கலிங்:85/2

மேல்

தரித்தே (1)

தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே – கலிங்:240/2

மேல்

தரு (8)

நிதி தரு பயிர் வளம் நிறைகவே நிறைதலின் உயிர் நிலைபெறுகவே – கலிங்:19/2
குழறி தரு கருநாடியர் குறுகி கடை திற-மின் – கலிங்:43/2
தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே – கலிங்:241/1
ஒரு தனி வெண்குடை உலகில் ஒளி கொள் நலம் தரு நிழலில் – கலிங்:268/2
தரு மடங்க முகந்து தனம் பொழி தன் புயம் பிரியா சயப்பாவையும் – கலிங்:320/1
நிலம் தரு தூளி பருகி நிறைந்தது வானின் வயிறு – கலிங்:360/1
புண் தரு குருதி பாய பொழிதரு கடமும் பாய – கலிங்:456/1
பிணம் தரு நாச்சியை பாடீரே பெரும் திருவாட்டியை பாடீரே – கலிங்:527/2

மேல்

தருக (1)

சலியாத தனி ஆண்மை தறுகண் வீரர் தருக வரம் வரத்தினுக்கு தக்கதாக – கலிங்:109/1

மேல்

தருகின்ற (1)

தமருகங்கள் தருகின்ற சதியின்-கண் வருவார் – கலிங்:115/1

மேல்

தருதும் (1)

பலியாக உறுப்பு அரிந்து தருதும் என்று பரவும் ஒலி கடல் ஒலி போல் பரக்குமாலோ – கலிங்:109/2

மேல்

தரும் (2)

சிலை வளைவுற்று அவுண தொகை செகவிட்ட பரி திறலவனை தரும் அ திரு உதரத்தினளே – கலிங்:127/2
தயங்கு ஒளி ஓடை வரைகள் தரும் கடம் தாரை மழையின் – கலிங்:361/1

மேல்

தருமம் (1)

யாவரும் களி சிறக்கவே தருமம் எங்கும் என்றும் உளதாகவே – கலிங்:595/1

மேல்

தருமன் (1)

தாங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன் தன் கடற்படை தனக்கு உதவி செய்த அவனும் – கலிங்:194/2

மேல்

தரை (6)

தீய அ கொடிய கானக தரை திறந்த வாய்-தொறும் நுழைந்து தன் – கலிங்:79/1
செம் நெருப்பினை தகடு செய்து பார் செய்தது ஒக்கும் அ செம் தரை பரப்பு – கலிங்:82/1
வெடித்த கழை விசை தெறிப்ப தரை மேல் முத்தம் வீழ்ந்தன அ தரை புழுங்கி அழன்று மேன்மேல் – கலிங்:93/1
வெடித்த கழை விசை தெறிப்ப தரை மேல் முத்தம் வீழ்ந்தன அ தரை புழுங்கி அழன்று மேன்மேல் – கலிங்:93/1
ஒற்றை வயமான் நடவி இ தரை வளாகத்து உற்ற இருள் தீர்ப்பன் என மற்றது பயின்றே – கலிங்:246/2
பிறை பெரும் பணை வேழம் முன்னொடு பின் துணிந்து தரை படும் – கலிங்:497/1

மேல்

தரைமகள் (1)

தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு – கலிங்:483/1

மேல்

தரையிலே (1)

மழை ததும்ப விரல் தரையிலே எழுதும் மட நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:72/2

மேல்

தலம் (2)

தலம் முதல் உள மனு வளர்கவே சயதரன் உயர் புலி வளர்கவே – கலிங்:20/1
கொல் தலம் பெறு கூழ் இலம் எங்களை கொள்வதே பணி என்று குரைப்பன – கலிங்:137/2

மேல்

தலை (18)

அவர் நிணத்தொடு அ குருதி நீர் குழைத்து அவர் கரும் தலை சுவர் அடுக்கியே – கலிங்:99/2
கடன் அமைந்தது கரும் தலை அரிந்த பொழுதே கடவது ஒன்றும் இலை என்று விளையாடும் உடலே – கலிங்:113/1
படை வலம் கொடு பசும் தலை இடம் கொடு அணைவார் – கலிங்:116/1
வீங்கு தலை நெடும் கழையின் மிசை-தோறும் திசை-தோறும் விழித்து நின்று – கலிங்:117/1
தூங்கு தலை சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும் சுழல் கண் சூர் பேய் – கலிங்:117/2
அரிந்த தலை உடன் அமர்ந்தே ஆடு கழை அலை குருதி புனலின் மூழ்கி – கலிங்:118/1
அருத்தியின் பிழை நினைத்த கூளியை அறுத்து அவன் தலை அவன் பெற – கலிங்:160/1
தடித்தனம் என தலை தடித்தனம் என பல தனி பனை குனிப்ப எனவே – கலிங்:228/1
தளம் உதிர வெட்டி ஒரு செரு முதிர ஒட்டினர்கள் தலை மலை குவித்தருளியே – கலிங்:253/2
சாதிகள் ஒன்றோடொன்று தலை தடுமாறி யாரும் – கலிங்:259/1
களம் உறு துரக கணத்தின் முகத்து எதிர் கறுவிலர் சிலர் கலவி தலை நித்தில – கலிங்:416/1
தலை பொர எரிய நெருப்பினின் மற்றது தழல் படு கழை வனம் ஒக்கினும் ஒக்குமே – கலிங்:419/2
ஒரு துணி கருதும் இலக்கை அழித்தன உருவிய பிறை முக அ பகழி தலை
அரிது அரிது இதுவும் என பரி உய்ப்பவர் அடியொடு முடிகள் துணித்து விழுத்துமே – கலிங்:422/1,2
விருதர் இரு துணி பார் நிறைந்தன விடர்கள் தலை மலையாய் நெளிந்தன – கலிங்:446/1
யானை படை சூரர் நேர் ஆன போழ்து அற்று எழுந்து ஆடுகின்றார் தலை
மான சயப்பாவை விட்டு ஆடும் அம்மானை வட்டு ஒத்தல் காண்-மின்களோ – கலிங்:491/1,2
கடை பார்த்து தலை வணங்கும் கதிர் முடி நூறாயிரமே – கலிங்:536/2
தாள் இரண்டால் நில வேந்தர் தலை தாங்கும் சய_துங்கன் – கலிங்:543/1
பார் மண்டலிகர் தலை மண்டை பல மண்டைகளா கொள்ளீரே – கலிங்:558/2

மேல்

தலை-அதனொடு (1)

வெருவிய அடுநர் தம்முடை வடிவு இது என விரி தலை-அதனொடு மறிவன சிலசில – கலிங்:589/2

மேல்

தலைகள் (1)

மாறி இ கையில் அழைக்க மற்று அவை மத கரி தலைகள் ஆன பார் – கலிங்:162/2

மேல்

தலைசுமந்து (1)

சாதுரங்கம் தலைசுமந்து கமம் சூல் கொண்டு தனிப்படும் கார் என வரும் அ தன்மை காண்-மின் – கலிங்:501/2

மேல்

தலைமகனை (1)

வாய் மடித்து கிடந்த தலைமகனை நோக்கி மணி அதரத்து ஏதேனும் வடுவுண்டாயோ – கலிங்:482/1

மேல்

தலையின் (2)

இ கரி தலையின் வாயின்-நின்று உதிர நீர் குடித்து உரும் இடித்து என – கலிங்:163/1
இங்கே தலையின் வேல் பாய்ந்த இவை மூழைகளா கொள்ளீரே – கலிங்:563/2

மேல்

தலையின (1)

தட்டி வானை தகர்க்கும் தலையின தாழ்ந்து மார்பிடை தட்டும் உதட்டின – கலிங்:141/2

மேல்

தலையும் (2)

எயிற்கு அழுத்தும் நிண கொடியும் இளம் குழவி பசும் தலையும் எங்கும் தூக்கி – கலிங்:106/2
கொற்ற வாள் மறவர் ஓச்ச குடரொடு தலையும் காலும் – கலிங்:518/1

மேல்

தலையெடுக்கவே (1)

மறையவர் முடியெடுத்தனர் மனு நெறி தலையெடுக்கவே – கலிங்:264/2

மேல்

தலைவர் (1)

தணி தவள பிறையை சடை மிசை வைத்த விடை தலைவர் வனத்தினிடை தனி நுகர்தற்கு நினைத்து – கலிங்:125/1

மேல்

தலைவனை (1)

சாதுரங்க தலைவனை போர் களத்தில் வந்த தழை வயிற்று பூதம்தான் அருந்தி மிக்க – கலிங்:501/1

மேல்

தலைவீ (1)

பகடு இடந்து கொள் பசும் குருதி இன்று தலைவீ பலிகொள் என்ற குரல் எண் திசை பிளந்து மிசைவான் – கலிங்:114/1

மேல்

தவ (1)

கொண்டு மேரு சிகரத்து ஒரு புறத்தில் எழுதி குவலயம் பெறு தவ பயன் உரைப்ப அரிதால் – கலிங்:180/2

மேல்

தவப்பயனும் (1)

தங்களின் மகிழ்ந்து இரு குலத்து அரசர்-தாமும் தனித்தனி உவப்பது ஒர் தவப்பயனும் ஒத்தே – கலிங்:238/2

மேல்

தவம் (2)

இந்த நில குல பாவை இவன்-பால் சேர என்ன தவம் செய்திருந்தாள் என்ன தோன்றி – கலிங்:206/2
தேவர் இன் அருள் தழைக்கவே முனிவர் செய் தவம் பயன் விளைக்கவே – கலிங்:595/2

மேல்

தவள (4)

தணி தவள பிறையை சடை மிசை வைத்த விடை தலைவர் வனத்தினிடை தனி நுகர்தற்கு நினைத்து – கலிங்:125/1
அணி தவள பொடி இட்டு அடைய இலச்சினை இட்டு அமுதம் இருத்திய செப்பு அனைய தனத்தினளே – கலிங்:125/2
தவள வடத்திடையில் பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உத்தரிய தனி உரகத்தினளே – கலிங்:128/2
விழுந்த தவள குடை மின்னும் வெள்ளி கலமா கொள்ளீரே – கலிங்:559/2

மேல்

தவிடு (1)

சல்லவட்டம் எனும் சுளகால் தவிடு பட புடையீரே – கலிங்:545/2

மேல்

தவிர் (2)

இ கணம் மாளும் இனி தவிர் விச்சை என கை விதிர்த்தலுமே – கலிங்:173/2
அணங்கரசின் ஆணை என அணங்கும் இப்போது அவை தவிர் எங்கு இவை கற்றாய் என்ன ஆங்கே – கலிங்:175/2

மேல்

தவிர்க (1)

தன் முனிவும் அவன் முனிவும் தவிர்க என்று சாதன மந்திர விச்சை பலவும் தந்தே – கலிங்:176/2

மேல்

தவிர்கிலா (1)

தனி விசும்பு அடையினும் படைஞர் கண் தவிர்கிலா
முனிவு எனும் கனலை நீர் மூள வைத்திடு-மினோ – கலிங்:522/1,2

மேல்

தவிர்த்து (1)

ஆடி வரு பேய்களின் அலந்தலை தவிர்த்து அடு பறந்தலை அறிந்து அதனின்-நின்று – கலிங்:311/1

மேல்

தவிர்ந்தமை (1)

அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே – கலிங்:528/2

மேல்

தவிர்ந்து (1)

பொருகை தவிர்ந்து கலிங்கர் ஓட போக புரந்தரன் விட்ட தண்டின் – கலிங்:587/1

மேல்

தவிராது (1)

பொழுது ஏகல் ஒழிந்து கடற்படை எப்பொழுதும் தவிராது வழிக்கொளவே – கலிங்:362/2

மேல்

தழங்கு (1)

ஒரு வலம்புரி தழங்கு ஒலி முழங்கி எழவே உடன் முழங்கு பணிலம் பல முழங்கி எழவே – கலிங்:283/1

மேல்

தழல் (7)

தவள வடத்திடையில் பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உத்தரிய தனி உரகத்தினளே – கலிங்:128/2
விரித்த வாள் உகிர் விழி தழல் புலியை மீது வைக்க இமயத்தினை – கலிங்:273/1
அலகு இல் கண் தழல் கனல் விரித்தலால் அரிய பொன் பணி கலன் எறித்தலால் – கலிங்:346/1
நெருப்பொடு நெருப்பு எதிர் சுடர் பொறி தெறித்து எழ நிழல் கொடி தழல் கதுவவே – கலிங்:411/2
நிழல் கொடி தழல் கதுவலின் கடிது ஒளித்த அவை நினைப்பவர் நினைப்பதன் முனே – கலிங்:412/1
தலை பொர எரிய நெருப்பினின் மற்றது தழல் படு கழை வனம் ஒக்கினும் ஒக்குமே – கலிங்:419/2
தழல் படு கழை வனம் எப்படி அப்படி சடசட தமரம் எழ பகழி படை – கலிங்:420/1

மேல்

தழலே (1)

புதைந்த மணி புகை போர்த்த தழலே போலும் போலாவேல் பொடி மூடு தணலே போலும் – கலிங்:91/2

மேல்

தழுவி (1)

பரிவு அகல தழுவி புணர் கலவிக்கு உருகி படர் சடை முக்கண் உடை பரமர் கொடுத்த களிற்று – கலிங்:126/1

மேல்

தழுவிய (1)

தழுவும் கொழுநர் பிழை நலிய தழுவேல் என்ன தழுவிய கை – கலிங்:44/1

மேல்

தழுவு (1)

தத்து நீர் வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ் பரிசில் வாணர் பொன் – கலிங்:198/1

மேல்

தழுவும் (1)

தழுவும் கொழுநர் பிழை நலிய தழுவேல் என்ன தழுவிய கை – கலிங்:44/1

மேல்

தழுவேல் (1)

தழுவும் கொழுநர் பிழை நலிய தழுவேல் என்ன தழுவிய கை – கலிங்:44/1

மேல்

தழை (2)

குடை நிரைத்தலின் தழை நெருக்கலின் கொடி விரித்தலின் குளிர் சதுக்கம் ஒத்து – கலிங்:345/1
சாதுரங்க தலைவனை போர் களத்தில் வந்த தழை வயிற்று பூதம்தான் அருந்தி மிக்க – கலிங்:501/1

மேல்

தழைக்கவே (2)

தாழ மேருவில் உயர்த்த செம்பியர் தனி புலிக்கொடி தழைக்கவே – கலிங்:18/2
தேவர் இன் அருள் தழைக்கவே முனிவர் செய் தவம் பயன் விளைக்கவே – கலிங்:595/2

மேல்

தள்ளிவர (1)

தன்னுடைய கால் தனது பிற்பட மனத்து வகை தள்ளிவர ஓடி வரவே – கலிங்:301/2

மேல்

தளத்தொடும் (1)

தளத்தொடும் பொரு தண்டு எழ பண்டு ஒர் நாள் – கலிங்:385/1

மேல்

தளம் (1)

தளம் உதிர வெட்டி ஒரு செரு முதிர ஒட்டினர்கள் தலை மலை குவித்தருளியே – கலிங்:253/2

மேல்

தளர்ந்து (1)

புடைபட இள முலை வளர்-தொறும் பொறை அறிவுடையரும் நிலை தளர்ந்து
இடை படுவது பட அருளுவீர் இடு கதவு உயர் கடை திற-மினோ – கலிங்:22/1,2

மேல்

தளவு (1)

தளவு அழிக்கும் நகை வேல் விழி பிலத்தின் வழியே தனி நடந்து உரகர்-தம் கண்மணி கொண்ட அவனும் – கலிங்:195/1

மேல்

தளிர் (1)

பரு மணி முத்து நிரைத்து உடு மணி தைத்த இணை பரிபுரம் வைத்த தளிர் பத உகளத்தினளே – கலிங்:122/2

மேல்

தளிர்ப்ப (1)

மனுவினுக்கு மும்மடி நான்மடி ஆம் சோழன் மதி குடை கீழ் அறம் தளிர்ப்ப வளர்ந்த ஆறும் – கலிங்:205/2

மேல்

தளைகள் (1)

பதங்களின் தளையும் அன்றி வேறு ஒரு பதங்களில் தளைகள் இல்லையே – கலிங்:274/2

மேல்

தளையும் (2)

கதங்களில் பொருது இறைஞ்சிடா அரசர் கால்களில் தளையும் நூல்களின் – கலிங்:274/1
பதங்களின் தளையும் அன்றி வேறு ஒரு பதங்களில் தளைகள் இல்லையே – கலிங்:274/2

மேல்

தளையை (1)

களவழி கவிதை பொய்கை உரைசெய்ய உதியன் கால்-வழி தளையை வெட்டி அரசு இட்ட அவனும் – கலிங்:195/2

மேல்

தறி (1)

படும் குருதி கடும் புனலை அடைக்க பாய்ந்த பல குதிரை தறி போன்ற பரிசு காண்-மின் – கலிங்:476/2

மேல்

தறிகள் (1)

தனித்தனியே திசையானை தறிகள் ஆக சயத்தம்பம் பல நாட்டி ஒரு கூடத்தே – கலிங்:10/1

மேல்

தறியில் (1)

காரண காரியங்களின் கட்டு அறுப்போர் யோக கருத்து என்னும் தனி தறியில் கட்ட கட்டுண்டு – கலிங்:9/1

மேல்

தறுகண் (2)

சலியாத தனி ஆண்மை தறுகண் வீரர் தருக வரம் வரத்தினுக்கு தக்கதாக – கலிங்:109/1
வெம் தறுகண் வெகுளியினால் வெய்து உயிர்த்து கை புடைத்து வியர்த்து நோக்கி – கலிங்:375/2

மேல்

தன் (19)

மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே – கலிங்:14/2
தீய அ கொடிய கானக தரை திறந்த வாய்-தொறும் நுழைந்து தன்
சாயை புக்க வழி யாது என பரிதி தன் கரம் கொடு திளைக்குமே – கலிங்:79/1,2
சாயை புக்க வழி யாது என பரிதி தன் கரம் கொடு திளைக்குமே – கலிங்:79/2
நீண்ட பலி பீடத்தில் அரிந்து வைத்த நெடும் குஞ்சி சிரத்தை தன் இனம் என்று எண்ணி – கலிங்:112/1
தன் முனிவும் அவன் முனிவும் தவிர்க என்று சாதன மந்திர விச்சை பலவும் தந்தே – கலிங்:176/2
தாங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன் தன் கடற்படை தனக்கு உதவி செய்த அவனும் – கலிங்:194/2
தன் தனி களிறு அணைந்தருளி வீரமகள் தன் தன தடங்களொடு தன் புயம் அணைந்த பரிசும் – கலிங்:196/2
தன் தனி களிறு அணைந்தருளி வீரமகள் தன் தன தடங்களொடு தன் புயம் அணைந்த பரிசும் – கலிங்:196/2
தன் தனி களிறு அணைந்தருளி வீரமகள் தன் தன தடங்களொடு தன் புயம் அணைந்த பரிசும் – கலிங்:196/2
தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே – கலிங்:240/2
மேல் கவித்த மதி குடையின் புடை வீசுகின்ற வெண் சாமரை தன் திரு – கலிங்:317/1
தரு மடங்க முகந்து தனம் பொழி தன் புயம் பிரியா சயப்பாவையும் – கலிங்:320/1
தாளமும் செலவும் பிழையா வகை தான் வகுத்தன தன் எதிர் பாடியே – கலிங்:324/1
தென்னர் ஆதி நராதிபர் ஆனவர் தேவிமார்கள் தன் சேடியர் ஆகவே – கலிங்:326/1
தொண்டைமான் முதல் மந்திர பாரகர் சூழ்ந்து தன் கழல் சூடி இருக்கவே – கலிங்:327/2
தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு – கலிங்:483/1
தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு – கலிங்:483/1
தார் வேய்ந்த புயத்து அபயன் தன் அமைச்சர் கடைத்தலையில் – கலிங்:539/1
தடியால் மடுத்து கூழ் எல்லாம் தானே பருகி தன் கணவன் – கலிங்:574/1

மேல்

தன்மை (2)

தேவருக்கு அரசனாய் விசும்பின் மேற்செல தென் திசைக்கு புகும் தன்மை செப்புவாம் – கலிங்:257/2
சாதுரங்கம் தலைசுமந்து கமம் சூல் கொண்டு தனிப்படும் கார் என வரும் அ தன்மை காண்-மின் – கலிங்:501/2

மேல்

தன்னில் (1)

சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன் தனி ஒர் மாவின் மேல் – கலிங்:201/1

மேல்

தன்னிலே (1)

செம்பொன் மாளிகை தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபம் தன்னிலே – கலிங்:315/2

மேல்

தன்னுடைய (2)

சக்கரம் முதல் படை ஒர் ஐந்தும் முதல் நாளே தன்னுடைய ஆன அதனால் அவை நமக்கு – கலிங்:247/1
தன்னுடைய கால் தனது பிற்பட மனத்து வகை தள்ளிவர ஓடி வரவே – கலிங்:301/2

மேல்

தன (2)

தன தடங்கள் மிசை நகம் நடந்த குறி தடவுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:26/2
தன் தனி களிறு அணைந்தருளி வீரமகள் தன் தன தடங்களொடு தன் புயம் அணைந்த பரிசும் – கலிங்:196/2

மேல்

தனக்கு (2)

தாங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன் தன் கடற்படை தனக்கு உதவி செய்த அவனும் – கலிங்:194/2
தண் ஆரின் மலர் திரள் தோள் அபயன் தான் ஏவிய சேனை தனக்கு அடைய – கலிங்:363/1

மேல்

தனக்கே (1)

திக்குவிசயத்தின் வரும் என்று அவை பயிற்றி செம் கை மலர் நொந்தில சுமந்தில தனக்கே – கலிங்:247/2

மேல்

தனங்கள் (1)

சொன்ன தனங்கள் கொணர்ந்தனம் என்று அடி சூடு கரங்களொடே – கலிங்:333/2

மேல்

தனத்தினளே (1)

அணி தவள பொடி இட்டு அடைய இலச்சினை இட்டு அமுதம் இருத்திய செப்பு அனைய தனத்தினளே – கலிங்:125/2

மேல்

தனது (6)

ஒப்புற தனது தொல் மரபும் அ மரபின் மேல் உரைசெய் பல் புகழும் ஒன்றும் ஒழியாத பரிசே – கலிங்:208/2
தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே – கலிங்:241/2
வட திசை முகத்து அரசர் வரு கதம் உக தனது குரகதம் உகைத்தருளியே – கலிங்:251/2
கருணையொடும் தனது உபய கரம் உதவும் பொருள் மழையின் – கலிங்:271/1
தன்னுடைய கால் தனது பிற்பட மனத்து வகை தள்ளிவர ஓடி வரவே – கலிங்:301/2
உலகு புகழ் கருணாகரன் தனது ஒரு கை இரு பணை வேழம் உந்தவே – கலிங்:443/2

மேல்

தனம் (2)

உபய தனம் அசையில் ஒடியும் இடை நடையை ஒழியும் ஒழியும் என ஒண் சிலம்பு – கலிங்:58/1
தரு மடங்க முகந்து தனம் பொழி தன் புயம் பிரியா சயப்பாவையும் – கலிங்:320/1

மேல்

தனமும் (1)

கடல் கலிங்கம் எறிந்து சயத்தம்பம் நாட்டி கட கரியும் குவி தனமும் கவர்ந்து தெய்வ – கலிங்:471/1

மேல்

தனராகியும் (1)

பரிகளும் களிறும் தனராகியும் பாரிபோகம் கொடுத்தனர் பார்த்திபர் – கலிங்:255/2

மேல்

தனி (17)

அ நெடு மால் உதரம் போல் அருள் அபயன் தனி கவிகை – கலிங்:4/1
தனி ஆழி-தனை நடத்தும் சய_துங்கன் வாழ்க என்றே – கலிங்:8/2
காரண காரியங்களின் கட்டு அறுப்போர் யோக கருத்து என்னும் தனி தறியில் கட்ட கட்டுண்டு – கலிங்:9/1
தாழ மேருவில் உயர்த்த செம்பியர் தனி புலிக்கொடி தழைக்கவே – கலிங்:18/2
சலியாத தனி ஆண்மை தறுகண் வீரர் தருக வரம் வரத்தினுக்கு தக்கதாக – கலிங்:109/1
தணி தவள பிறையை சடை மிசை வைத்த விடை தலைவர் வனத்தினிடை தனி நுகர்தற்கு நினைத்து – கலிங்:125/1
தவள வடத்திடையில் பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உத்தரிய தனி உரகத்தினளே – கலிங்:128/2
தளவு அழிக்கும் நகை வேல் விழி பிலத்தின் வழியே தனி நடந்து உரகர்-தம் கண்மணி கொண்ட அவனும் – கலிங்:195/1
தன் தனி களிறு அணைந்தருளி வீரமகள் தன் தன தடங்களொடு தன் புயம் அணைந்த பரிசும் – கலிங்:196/2
சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன் தனி ஒர் மாவின் மேல் – கலிங்:201/1
தடித்தனம் என தலை தடித்தனம் என பல தனி பனை குனிப்ப எனவே – கலிங்:228/1
சின புலி வளர்ப்பது ஒர் சிறு புலியும் ஒத்தே திசைக்களிறு அணைப்பது ஒர் தனி களிறும் ஒத்தே – கலிங்:239/1
மா உகைத்து ஒரு தனி அபயன் இப்படி வட திசை மேற்செல மன்னர் மன்னவன் – கலிங்:257/1
ஒரு தனி வெண்குடை உலகில் ஒளி கொள் நலம் தரு நிழலில் – கலிங்:268/2
விழித்த விழி தனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்த வாய் – கலிங்:354/1
சயமகள் களப முலைக்கு அணியத்தகு தனி வடம் இவை என மத்தக முத்தினை – கலிங்:418/1
தனி விசும்பு அடையினும் படைஞர் கண் தவிர்கிலா – கலிங்:522/1

மேல்

தனித்தனி (2)

தங்களின் மகிழ்ந்து இரு குலத்து அரசர்-தாமும் தனித்தனி உவப்பது ஒர் தவப்பயனும் ஒத்தே – கலிங்:238/2
மான அரசர் தனித்தனி வாழ்வு கருதி உரைப்பரே – கலிங்:336/4

மேல்

தனித்தனியே (1)

தனித்தனியே திசையானை தறிகள் ஆக சயத்தம்பம் பல நாட்டி ஒரு கூடத்தே – கலிங்:10/1

மேல்

தனிப்படும் (1)

சாதுரங்கம் தலைசுமந்து கமம் சூல் கொண்டு தனிப்படும் கார் என வரும் அ தன்மை காண்-மின் – கலிங்:501/2

மேல்

தனு (2)

தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே – கலிங்:240/2
தனு கோட்ட நமன் கோட்டம் பட்டது சகர கோட்டம் – கலிங்:254/2

மேல்