Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 9
வை-மின் 1
வைக்கல்-பால 1
வைக்கலாமோ 1
வைக்கிலென் 1
வைக்கின் 1
வைக்கும் 5
வைக்கும்-தொறும் 1
வைக்குவெனால் 1
வைக 12
வைகல் 10
வைகல்-தோறும் 1
வைகல்-வாய் 1
வைகல்தான் 1
வைகலானும் 1
வைகலிர் 1
வைகலின் 3
வைகலும் 11
வைகலெம் 1
வைகவும் 1
வைகவே 1
வைகறை 1
வைகி 14
வைகிட 3
வைகிய 7
வைகியதா 1
வைகின்றார் 1
வைகின 1
வைகினர் 7
வைகினன் 3
வைகினார் 8
வைகினான் 8
வைகினிர் 1
வைகினேன் 3
வைகினை 1
வைகு 10
வைகுதல் 4
வைகுதற்கு 1
வைகுதி 2
வைகுதியோ 1
வைகுதிர் 2
வைகுதும் 1
வைகுந்தம் 2
வைகும் 64
வைகுமால் 4
வைகுமே 3
வைகுமோ 1
வைகுவாய் 2
வைகுவார் 3
வைகுவாள் 3
வைகுவான் 4
வைகுவென் 1
வைகுவேன் 3
வைகுவோர் 1
வைகுறு 1
வைகுறும் 8
வைத்த 69
வைத்தது 10
வைத்ததும் 2
வைத்தபோது 1
வைத்தலும் 2
வைத்தலை 1
வைத்தவள்-தன்னை 1
வைத்தவன் 3
வைத்தவனை 1
வைத்தவனோடும் 1
வைத்தவா 1
வைத்தன 2
வைத்தனம் 1
வைத்தனர் 1
வைத்தனரால் 1
வைத்தனள் 2
வைத்தனன் 3
வைத்தனை 1
வைத்தனைய 1
வைத்தனையோ 1
வைத்தாம் 1
வைத்தாய் 2
வைத்தார் 1
வைத்தாள் 7
வைத்தாற்கு 1
வைத்தான் 20
வைத்தானே 1
வைத்திட 1
வைத்திடுதலில் 1
வைத்து 36
வைத்தும் 2
வைத்தும்_இலென் 2
வைத்துளது 2
வைத்தே 2
வைத்தேம் 1
வைத்தேன் 1
வைத்தோயை 1
வைத்தோன் 2
வைத 4
வைதது 1
வைதருப்ப 1
வைதன 1
வைதனர் 3
வைதனள் 1
வைதார் 1
வைதால் 2
வைது 6
வைது-என 1
வைதேவி 1
வைப்பது 1
வைப்பர் 1
வைப்பாம் 1
வைப்பாய் 2
வைப்பாரும் 1
வைப்பில் 5
வைப்பின் 6
வைப்பினும் 1
வைப்பு 6
வைப்புடை 1
வைப்பும் 2
வைப்பேன் 2
வைப்பை 4
வைப்பையும் 1
வைப்போம் 1
வைப்போர் 1
வைய 6
வையக 2
வையகத்து 3
வையகம் 17
வையகம்-அதனில் 1
வையத்தார் 1
வையத்திடை 1
வையத்து 4
வையம் 42
வையமும் 11
வையமேல் 1
வையார் 1
வையான் 1
வையும் 1
வையுமேல் 1
வைர 2
வைவர் 1
வைவலோ 1
வைவன 3
வைவின் 1
வைவினில் 1
வைவு 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


வை (9)

வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – அயோ:3 58/2
வை கொள் வேல் என காலனும் மறுகுறும் கண்ணாய் – அயோ-மிகை:10 1/2
வை தலை பகழியால் மழை செய் வில்லினான் – ஆரண்:7 112/4
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – யுத்1:6 53/4
வை எயிற்றாலும் நேரா மணி இழந்து இரங்கலாலும் – யுத்1:13 2/1
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை – யுத்2:16 9/3
சோர்வுற துளங்கி நில்லாது ஓடினர் சுடரும் வை வேல் – யுத்2-மிகை:18 26/3
வை அம் சிலை ஆறு வழங்கினனால் – யுத்3:20 69/3
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – யுத்3:25 16/1

TOP


வை-மின் (1)

வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன – யுத்2:17 92/3

TOP


வைக்கல்-பால (1)

மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – யுத்2:17 55/4

TOP


வைக்கலாமோ (1)

காலுக்கு தொலையும் என்றால் கைக்கு ஒப்பு வைக்கலாமோ – கிட்:13 46/4

TOP


வைக்கிலென் (1)

தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து – யுத்2:15 253/4

TOP


வைக்கின் (1)

வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின்
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கிட்:13 55/3,4

TOP


வைக்கும் (5)

உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சி கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர் காட்சி கரை காணார் – பால:10 25/1,2
நாமம் நிறுத்தி பேர் இசை வைக்கும் நவை இல்லோன் – கிட்:17 7/4
கரு வைக்கும் நெடு நகரை கடலிடையே கரையாதே – சுந்:2 230/3
வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும்
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி – யுத்1:3 51/1,2
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர் பெற்ற – யுத்4-மிகை:41 65/3

TOP


வைக்கும்-தொறும் (1)

கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும் – சுந்:12 43/3

TOP


வைக்குவெனால் (1)

மாறே ஒரு மன் என வைக்குவெனால் – யுத்2:18 38/4

TOP


வைக (12)

மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக
பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார் – பால:10 29/1,2
பாவையர் வைக தீய்ந்த பல்லவ சயனம் கண்டார் – பால:16 19/4
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன – அயோ:5 12/2,3
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – அயோ:11 53/4
மலங்கி வையகம் வருந்தி வைக நீ – அயோ:14 111/1
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – அயோ:14 114/2
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர் – ஆரண்:13 124/1,2
கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு – ஆரண்:15 28/2
வணங்காது இ துணை வைக வல்லையோ – கிட்:8 7/4
மாமரம் நிரை தொகு பொதும்பருழை வைக
தே மரம் அடுக்கு இதனிடை செறி குரம்பை – கிட்:10 80/2,3
புல் அணை வைக யான் பொன் செய் பூம் தொடர் – கிட்:11 107/3
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து உன் துணைவியை பிரிவு செய்தான் – யுத்1:14 5/1,2

TOP


வைகல் (10)

கானிடை சிறிது வைகல் கழித்து ஒர் நாள் கௌசிக பேர் – பால-மிகை:11 29/1
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – அயோ:3 67/2
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல்
வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல் – அயோ:8 20/1,2
பளிக்கு அறை கண்டு அதில் வைகல் பயின்றார் – ஆரண்:14 37/4
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கிட்:9 21/2
இற்ற இன்னல் இயக்கம் எய்திட வைகல் பற்பல ஏக மேல் – கிட்:10 69/2
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும் – கிட்:10 82/3
வைகல் தேடி கடிது வழி கொள்வீர் – கிட்:13 15/4
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – யுத்3:26 81/4
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் – யுத்4:41 55/3

TOP


வைகல்-தோறும் (1)

மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – ஆரண்:16 9/2

TOP


வைகல்-வாய் (1)

வந்து எனை கரம் பற்றிய வைகல்-வாய்
இந்த இ பிறவிக்கு இரு மாதரை – சுந்:5 34/1,2

TOP


வைகல்தான் (1)

மன்னர் இன்றியே வையம் வைகல்தான்
தொன்மை அன்று என துணியும் நெஞ்சினார் – அயோ-மிகை:11 14/1,2

TOP


வைகலானும் (1)

வைகலானும் வைகினான் – ஆரண்:1 70/4

TOP


வைகலிர் (1)

வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர்
புனல் திரு நாட்டிடை புனிதர் ஊர் புக – ஆரண்:12 50/1,2

TOP


வைகலின் (3)

வைகும் வைகலின் மாதவன் மைந்தன்-பால் – ஆரண்:3 29/1
வடித்த நூல் முழுதும் தான் ஓர் வைகலின் வரம்பு தோன்ற – கிட்-மிகை:3 2/2
இன்னா வைகலின் எல்லோரும் – சுந்:5 52/2

TOP


வைகலும் (11)

கருதி அன்பொடு காமுற்று வைகலும்
மருத வேலியின் வைகின வண்டு-அரோ – பால:2 23/3,4
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே – பால:2 36/3,4
வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும்
சேண் மதி தேய்வது அ கொடிகள் தேய்க்கவே – பால:3 37/3,4
வாரம் என் இனி பகர்வது வைகலும் அனையான் – அயோ:1 38/1
வளம் கெழு திருநகர் வைகும் வைகலும்
பளிங்கு உடை நெடும் சுவர் அடுத்த பத்தியில் – அயோ:2 42/1,2
மனையின் நீங்கிய மக்களை வைகலும்
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார் – அயோ:7 13/1,2
வாள் தொழில் உழவ நீ உலகை வைகலும்
ஊட்டினை அருள் அமுது உரிமை மைந்தனை – அயோ-மிகை:1 14/1,2
வைகலும் தமியள் அ வனத்து வைகுவாள் – ஆரண்:6 3/2
வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர் – கிட்:1 18/2
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல் – கிட்:7 139/2
வருத்தம் ஏது எனின் அது புலவி வைகலும்
பொருத்தமே வாழ்வு என பொழுது போக்கினார் – யுத்4:38 18/1,2

TOP


வைகலெம் (1)

இருளுடை வைகலெம் இரவி தோன்றினாய் – ஆரண்:3 16/3

TOP


வைகவும் (1)

மெல் அணை வைகவும் வேண்டுமோ என்றான் – கிட்:11 107/4

TOP


வைகவே (1)

மானவர் தலைமகன் இடரின் வைகவே
ஆனது குரக்கு_இனத்து எமர்கட்கு ஆம் எனா – கிட்:11 115/2,3

TOP


வைகறை (1)

வனைந்தில வைகறை மலரும் மா மலர் – ஆரண்:10 124/2

TOP


வைகி (14)

குப்புறற்கு அருமையான குல வரை சாரல் வைகி
ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண் – பால:16 5/1,2
அரசின் வைகி அறனின் அமைந்துழி – பால-மிகை:11 9/1
மாண்ட மா தவத்தோருடன் வைகி பின் – அயோ:4 7/3
ஏன்று உன் பாவி கும்பி வயிற்றினிடை வைகி
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – அயோ:11 84/1,2
அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர்_கோமாஅன் – அயோ:13 44/1,2
கொம்மை வெம் முலை குவையின் வைகி வாழ் – அயோ:14 108/3
பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர் – ஆரண்:4 40/1
மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல் திருவின் வைகி – கிட்:9 7/4
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கிட்:11 71/2,3
மன்னவ நின் பணி மறுத்து வைகி என் – கிட்:11 129/3
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – சுந்:4 79/1,2
ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி
மேய வெம் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன் – சுந்:12 82/1,2
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி
இருந்துழி வந்த தங்கை மூக்கும் வெம் முலையும் எம்பி – யுத்1:14 32/2,3
ஆறு நால் ஆண்டு அவண் வைகி அ புறத்து – யுத்4-மிகை:41 228/1

TOP


வைகிட (3)

பள்ள கடலின் முனி பணியால் பையுள் நகரம் வைகிட மேல் – அயோ:6 38/2
வாள் தொடு தானையான் வானில் வைகிட
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா – அயோ:11 92/1,2
மோக வென்றி-மேல் முயல்வின் வைகிட
சோகம் எய்தினன் துணை துளங்கினான் – கிட்:3 53/3,4

TOP


வைகிய (7)

படுத்து வைகிய பல்லவ சயனங்கள் பாராய் – அயோ:10 23/4
வைகிய சோலையில் தானும் வைகினான் – அயோ:12 56/4
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில் தான் பொடியின் வைகினான் – அயோ:12 57/3,4
வார் சிலை தட கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான் – அயோ:13 39/2
மன் நெடும் கற்பக வனத்து வைகிய
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே – சுந்:2 122/3,4
வயிற்றிடை புக பல பகலும் வைகிய
பயிற்றியர் ஆயினும் தெரிக்கும் பண்பு இலார் – யுத்3:20 48/2,3
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து வைகிய நீ தாய் சொல் தாங்கி – யுத்4-மிகை:38 1/2

TOP


வைகியதா (1)

பண்டு அகத்தியன் வைகியதா பகர் – கிட்:13 17/1

TOP


வைகின்றார் (1)

வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – யுத்3:22 24/3

TOP


வைகின (1)

மருத வேலியின் வைகின வண்டு-அரோ – பால:2 23/4

TOP


வைகினர் (7)

வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும் – அயோ:5 9/3
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – அயோ:8 20/3
வைகினர் இனிது அன்னார் அ வழி மறையோனும் – அயோ:9 29/1
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம் – அயோ:14 7/4
கோது_இல் செல்வத்து வைகினர் கொவ்வை வாய் – அயோ:14 13/2
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – ஆரண்:3 26/2
அண்ணு வைகினர் அகன்றனர் அசைந்தனன்-அரோ – ஆரண்-மிகை:1 8/4

TOP


வைகினன் (3)

வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள – பால:23 102/3
அ-வயின் அழகனும் வைகினன் அறிஞன் – ஆரண்:2 35/1
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ – யுத்4:41 85/3

TOP


வைகினார் (8)

வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்
இரும் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர் – பால:5 4/2,3
ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – பால:5 37/4
மாக மாடத்து அனைவரும் வைகினார் – பால:11 1/4
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார் – ஆரண்:3 28/4
மணி கொழித்திடும் துறையின் வைகினார் – கிட்:15 14/4
மருளுறு சோலையின் மறைந்து வைகினார்
உருளுறு தேரவன் உதயம் எய்தினார் – யுத்1:4 23/3,4
வானவர் மலர் அயன் உலகின் வைகினார் – யுத்1:6 55/4
மை பொழில் உறு பஞ்சவடியின் வைகினார் – யுத்4-மிகை:41 230/4

TOP


வைகினான் (8)

மைந்தன் வெம் துயர் கடலின் வைகினான்
தந்தை தன்-வயின் தருமம் யாவையும் – அயோ:11 134/2,3
வைகிய சோலையில் தானும் வைகினான் – அயோ:12 56/4
புல் அணை மருங்கில் தான் பொடியின் வைகினான் – அயோ:12 57/4
வைகலானும் வைகினான் – ஆரண்:1 70/4
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் – ஆரண்:3 25/4
மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கிட்:1 37/4
மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கிட்:1 37/4
மங்கையும் அ வழி அன்று வைகினான் – கிட்:11 137/4

TOP


வைகினிர் (1)

இனத்திடை வைகினிர் என் செய்திர் என்றாள் – ஆரண்:12 50/4

TOP


வைகினேன் (3)

மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் – அயோ:1 14/3,4
வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன் – கிட்:11 130/4
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன்
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – சுந்:4 12/3,4

TOP


வைகினை (1)

வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை
அஞ்சினேன் என செய்தனை ஆதலால் – யுத்4:37 178/2,3

TOP


வைகு (10)

மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – பால:23 12/3
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம் – அயோ:13 72/2
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் – ஆரண்:7 14/4
புக்கான் அ இராகவன் வைகு புனம் – ஆரண்:11 42/4
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கிட்:10 64/3
மதங்கியரை ஒத்த மயில் வைகு மர மூலத்து – கிட்:10 78/3
மன்னன் வைகு இடத்து ஏகினன் மாசு இலான் – கிட்-மிகை:11 3/4
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள் – சுந்:2 79/2
பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும் – சுந்:12 47/1
தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால் – சுந்:13 14/3

TOP


வைகுதல் (4)

வையகம் துறந்து வந்து அடவி வைகுதல்
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள் – அயோ:14 38/1,2
வானர வேந்தனும் இனிதின் வைகுதல்
மானவர் தலைமகன் இடரின் வைகவே – கிட்:11 115/1,2
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – சுந்:2 134/3
ஈண்டு ஒரு திங்கள் இ இடரின் வைகுதல்
வேண்டுவது அன்று யான் விரைவின் வீரனை – சுந்:5 66/1,2

TOP


வைகுதற்கு (1)

பாதக அரக்கர்-தம் பதியின் வைகுதற்கு
ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர் – ஆரண்:12 49/3,4

TOP


வைகுதி (2)

வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – அயோ:8 29/4
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – ஆரண்:11 18/4

TOP


வைகுதியோ (1)

வாராய் புறம் இத்துணை வைகுதியோ – ஆரண்:14 68/4

TOP


வைகுதிர் (2)

மேவு காதலின் வைகுதிர் விண்ணினும் இனிதால் – அயோ:9 33/3
காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான் – ஆரண்:4 38/4

TOP


வைகுதும் (1)

வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா – யுத்4:32 1/3

TOP


வைகுந்தம் (2)

மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ – பால-மிகை:0 33/3,4
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம் – அயோ:10 49/2

TOP


வைகும் (64)

பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – பால:5 31/1,2
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள் – பால:6 1/4
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் – பால:13 42/4
விண் தொடர் வரையின் வைகும் மென் மயில் கணங்கள் போல – பால:18 9/2
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – பால:21 7/3
நண்ணினர் இன்பத்து வைகும் நாளிடை – பால:24 46/1
வரமுனி-தன்னை அண்ணல் வினவுற மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றி பெருந்தகை குசன் என்று ஓதும் – பால-மிகை:8 2/2,3
வைகும் அ வழி மா தவம் யாவும் ஓர் – பால-மிகை:11 1/1
நிரை தவன் விரைவின் ஏகி நெடும் கடற்கு இறைவன் வைகும்
உரவு இடம் அதனை நண்ணி உறு தவம் உஞற்றும்-காலை – பால-மிகை:11 36/3,4
நல் தவ ரிசிகன் வைகும் நனை வரும் பழுவம் நண்ணி – பால-மிகை:11 38/1
வளம் கெழு திருநகர் வைகும் வைகலும் – அயோ:2 42/1
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை – அயோ:4 10/2
தங்கி வைகும் தபோதனர் யாவரும் – அயோ:7 10/2
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – அயோ:8 28/2
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் – அயோ:9 17/2
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – அயோ:11 35/3
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் – அயோ:12 8/2
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றாளை – அயோ:13 64/2,3
வைகும் வைகலின் மாதவன் மைந்தன்-பால் – ஆரண்:3 29/1
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – ஆரண்:12 41/4
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே – ஆரண்:16 1/4
மேவு குன்றின்-மேல் வைகும் வேலைவாய் – கிட்:3 58/3
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கிட்:9 21/2
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும்
முரம்பினில் நிரம்பன முழைஞ்சிடை நுழைந்த – கிட்:10 82/3,4
பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க – கிட்:17 28/1
அன்றியும் அலருள் வைகும் அயனை நேர் முனிவன் வாய்மை – கிட்-மிகை:16 6/1
வெறுவிது விசயம் வைகும் விலங்கல்_தோள் அலங்கல் வீர – சுந்:1 14/2
சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும்
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள் விசையின் தம்மின் – சுந்:1 35/2,3
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும் – சுந்:1 36/1
எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய் இன்று-காறும் – சுந்:2 32/1
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும்
கயக்கம்_இல் துயிற்சி கும்பகருணனை கண்ணின் கண்டான் – சுந்:2 119/3,4
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும்
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவி போய் – சுந்:2 164/1,2
வந்தான் இளையானொடு வான் உயர் தேரின் வைகும்
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும் – சுந்:4 89/1,2
இன் துயில் விளைக்க ஓர் இமைப்பின் இறை வைகும்
குன்றிடை உனை கொடு குதிப்பென் இடை கொள்ளேன் – சுந்:5 3/3,4
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா – சுந்:6 44/4
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – சுந்:12 44/2,3
வட்ட முலை திரு வைகும்
புள் திரள் சோலை புறத்தும் – சுந்:13 55/2,3
செ வான் கதிரும் குளிர் திங்களும் தேவர் வைகும்
வெவ்வேறு விமானமும் மீனொடு மேகம் மற்றும் – சுந்-மிகை:1 14/1,2
வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர் வைகும்
பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின் – யுத்1:2 96/1,2
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும்
தாழ் கடல் இலங்கை செல்வம் நின்னதே தந்தேன் என்றான் – யுத்1:4 139/3,4
மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு – யுத்1:5 21/1
தென் திசை வாயிலின் வைகும் தீயவர் – யுத்1:5 22/1
கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர் – யுத்1:5 23/1
புண்டரீகத்து வைகும் புராதனா போற்றி போற்றி – யுத்1:7 7/4
பண்டை உறையுட்கு எதிர் படை கடலின் வைகும்
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான் – யுத்1:9 2/1,2
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – யுத்1:9 28/2
கொத்துறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கை குன்றம் – யுத்1:9 34/1
கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கோட்டில் கொண்ட – யுத்1:9 88/3
பால் நிற பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய் – யுத்1:10 17/4
ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – யுத்1:13 2/4
மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும்
நெறி புண்டரீகம் அன்ன முகத்தியர்-முன்னே நென்னல் – யுத்1:14 36/1,2
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம் – யுத்2:19 285/1
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும்
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – யுத்3:24 26/3,4
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும்
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன் – யுத்3:24 37/1,2
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – யுத்3:24 43/4
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும்
தட வரை அதனை நோக்கி தாமரை கைகள் கூப்பி – யுத்3:24 44/1,2
மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும்
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின்-மீது சென்றான் – யுத்3:24 47/3,4
பொரு அரும் இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர் வைகும்
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – யுத்3:24 57/3,4
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும்
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – யுத்3:26 92/1,2
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம் முன் தோன்று – யுத்4:41 25/1
கடி கமழ் குழலினாளே கார்காலம் யாங்கள் வைகும்
வடிவு உடை சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய் – யுத்4-மிகை:41 128/1,2
அ வயின் அயோத்தி வைகும் சனமொடும் அக்குரோணி – யுத்4-மிகை:41 275/1
புண்டரீகத்துள் வைகும் புராதன கன்னல் தோளான் – யுத்4-மிகை:42 13/3
இங்கு இது மலராள் வைகும் மாடம் என்று இசைத்த போதில் – யுத்4-மிகை:42 14/2

TOP


வைகுமால் (4)

ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்
யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – பால:5 76/3,4
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால்
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – அயோ:1 80/3,4
வானரங்கள் மரங்களின் வைகுமால் – கிட்:15 49/4
வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால்
விழு தனி பல் இதழ் விரை இலா முகிழ் – யுத்1:3 70/3,4

TOP


வைகுமே (3)

ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – பால:7 38/4
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – பால:11 8/4
இயல்பினின் இயைந்தவே இனிதின் வைகுமே
புயல் பொரு தட கை நீ புரக்கும் பல் உயிர் – கிட்:11 127/2,3

TOP


வைகுமோ (1)

வையம் மா நரகத்திடை வைகுமோ – அயோ:7 25/4

TOP


வைகுவாய் (2)

வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்
தரை மேலாய் உறு தன்மை ஈது என – கிட்:8 8/1,2
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய்
சூழும் அலகை துணங்கை பறை துவைப்ப – யுத்2:17 85/2,3

TOP


வைகுவார் (3)

முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின் – யுத்1:5 29/2
கங்குலும் பகலும் அ கடலுள் வைகுவார்
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால் – யுத்1:6 32/2,3
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார்
தூ நெடும் குருதி வேல் அவுணர் துஞ்சினார் – யுத்1:6 40/2,3

TOP


வைகுவாள் (3)

மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – ஆரண்:1 57/4
வைகலும் தமியள் அ வனத்து வைகுவாள்
நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள் – ஆரண்:6 3/2,3
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்
புண்ணினை கோல் உறுத்து அனைய பொம்மலால் – யுத்4:40 57/2,3

TOP


வைகுவான் (4)

மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான் – அயோ:5 37/4
உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – அயோ:10 48/4
முளரி-மேல் வைகுவான் முருகன் தந்த அ – கிட்:6 17/1
மந்த மாருதம் வந்து உற வைகுவான் – கிட்:11 19/4

TOP


வைகுவென் (1)

மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால் – அயோ:9 32/3

TOP


வைகுவேன் (3)

வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன்
கரை சேரா இடர் வேலை கண்டிலேன் – கிட்:8 4/1,2
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன்
எரியும் மின்மினி மணி விளக்கின் இன் துணை – கிட்:10 86/2,3
துறந்து சென்று உறுவலோ துயரின் வைகுவேன் – கிட்:10 88/4

TOP


வைகுவோர் (1)

வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்
இடை_இலர் எண்_இரு கோடி என்பரால் – யுத்1:5 20/1,2

TOP


வைகுறு (1)

வைகுறு கோசல மன்னர்_மன்னனே – பால:5 87/4

TOP


வைகுறும் (8)

மு பரம் பொருளினும் முதல்வன் வைகுறும் – பால:5 132/4
வள்ளல் சேக்கை கரியவன் வைகுறும்
வெள்ள பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள் – பால:11 4/1,2
மன் நெடும் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி நல் தவம் – பால-மிகை:7 4/2,3
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன் – அயோ:4 19/1,2
வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் – ஆரண்:15 16/4
ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும்
ஆண்தகை அறிந்திலன் அதற்கு காரணம் – சுந்:4 24/1,2
அன்னை வைகுறும் அ இடத்து ஆயினான் – சுந்-மிகை:3 15/4
கடலினை நோக்கும் அ கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும் தன் சிலையை நோக்குமால் – யுத்1:5 11/3,4

TOP


வைத்த (69)

பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – பால:2 10/4
மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – பால:3 2/3
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – பால:3 9/2
கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த
வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால் – பால:10 72/3,4
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிட – பால:14 30/1
வைத்த மேல் இருந்து அஞ்சிய மங்கைமார் – பால:14 38/2
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – பால:14 72/2
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – அயோ:3 74/3
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள் – அயோ:14 84/3
அ வரம்பு அழித்து உமை அகத்து உளே வைத்த
வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து – அயோ-மிகை:11 3/2,3
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – ஆரண்:10 134/2
மா திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும் – ஆரண்:12 34/3
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம் – ஆரண்:12 45/3
வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும் – ஆரண்:13 50/3
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – ஆரண்:13 72/3
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை – கிட்:7 144/1
தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப தான் தன் – கிட்:9 22/1
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த
ஆமை ஆம் என்ற போது அல்லன சொல்லினாலும் – கிட்:13 34/2,3
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி – கிட்:13 41/4
மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாச – கிட்:13 61/1
வருந்தேன் அது என் துணை வானவன் வைத்த காதல் – சுந்:1 49/1
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – சுந்:2 72/2
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த
காதல் அம் கள் உண்டார் போல் முறைமுறை களிக்கின்றாரை – சுந்:2 106/3,4
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – சுந்:2 112/3
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர் – சுந்:2 168/2
கற்றை பூம் குழலாளை சிறை வைத்த கண்டகனை – சுந்:2 221/2
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த
துன்று_அல் ஓதிதன் நிலை இனி சொல்லுவான் துணிந்தாம் – சுந்:3 2/3,4
வைத்த வேதிகை செய்தி மனக்கொள்வாள் – சுந்:3 24/4
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த
தூயவன் வயிர தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் – சுந்:3 131/2,3
கன்னி என்-வயின் வைத்த கருணையாள் – சுந்:5 22/3
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – சுந்:9 28/2
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி – சுந்:14 46/1
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி – சுந்:14 46/1
தீயினில் செவ்வே வைத்த சின்னங்கள் வேறு_வேறு – சுந்-மிகை:11 3/1
மாண் பிறந்து அமைந்த கற்பின் வாள்_நுதல் நின்-பால் வைத்த
சேண் பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீரா – சுந்-மிகை:14 41/1,2
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ – யுத்1:2 49/3
வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த
நீள் இரும் கனக முட்டை நெடும் சுவர் தேய்ப்ப நேமி – யுத்1:3 150/1,2
வன் பகை மனிதரின் வைத்த வன்பினை – யுத்1:4 5/2
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – யுத்1:4 7/2
நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன் நாளும் – யுத்1:4 112/1
ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – யுத்1:4 117/2,3
மா இரு ஞாலத்து வைத்த மா படை – யுத்1:5 31/2
கோள் இரண்டையும் கொடும் சிறை வைத்த அ குமரன் – யுத்1:5 49/1
தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார் – யுத்1:8 31/2
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த
பால் நிற பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய் – யுத்1:10 17/3,4
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த
பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய் – யுத்1:10 21/3,4
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்-மேல் வைத்த காதல் – யுத்1:14 18/1
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பி காத்து – யுத்1-மிகை:12 6/2
கை வைத்த நேமியோன் தன் கால் வைத்த கருத்தமே யாம் – யுத்1-மிகை:12 6/4
கை வைத்த நேமியோன் தன் கால் வைத்த கருத்தமே யாம் – யுத்1-மிகை:12 6/4
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – யுத்2:16 4/3
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – யுத்2:16 24/3
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – யுத்2:16 42/2
காதலால் என்-மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே – யுத்2:16 148/2
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – யுத்2:17 13/3,4
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய் – யுத்2:19 253/1
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும் – யுத்3:22 208/1
புண்-மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன் – யுத்3:22 208/2
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – யுத்3:22 208/3
எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ – யுத்3:22 208/4
மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – யுத்3:24 47/3
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – யுத்3:26 47/3
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை – யுத்3:28 64/1
ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின் – யுத்3:29 20/3
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – யுத்3:29 57/3
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை – யுத்4:34 20/3
வழுத்தின உயிர்களின் முதலின் வைத்த ஓர் – யுத்4:37 154/2
எதிர் பொர வந்த விண்ணோர் இறைவனை சிறையில் வைத்த
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு செல்ல – யுத்4-மிகை:41 52/2,3
மற்ற போனகம் ஒரு கை வாய் வைத்த பின் வாரா – யுத்4-மிகை:41 201/3

TOP


வைத்தது (10)

வைத்தது தரை மிசை மறித்தும் அ வழி – பால:5 85/1
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால் – அயோ:5 34/3
தாது உண் சடில தலை வைத்தது தண் தரங்கம் – ஆரண்:10 135/1
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – சுந்:1 79/4
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – சுந்:2 194/3
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய – சுந்:5 24/2
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – யுத்2:19 76/2
தளைத்து வைத்தது சதுமுகன் பெரும் படை தள்ளி – யுத்3:22 177/1
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – யுத்4:32 41/4
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி – யுத்4:42 18/4

TOP


வைத்ததும் (2)

மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் – பால:13 34/2
வந்து ஒர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் – சுந்-மிகை:5 7/4

TOP


வைத்தபோது (1)

வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால் – அயோ:11 57/3

TOP


வைத்தலும் (2)

திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால் – சுந்:14 42/2
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும்
கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே – யுத்2:15 96/3,4

TOP


வைத்தலை (1)

வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த – யுத்2:16 189/2

TOP


வைத்தவள்-தன்னை (1)

சிறையில் வைத்தவள்-தன்னை விட்டு உலகினில் தேவர் – யுத்2:15 253/1

TOP


வைத்தவன் (3)

வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாள கிளையும் இற தடிந்து – கிட்:7 99/1,2
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும் – சுந்:1 36/1
நிலவை செம் சடை வைத்தவன் வரம் தர நிமிர்ந்தார் – யுத்3:30 12/3

TOP


வைத்தவனை (1)

துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும் – ஆரண்:3 51/4

TOP


வைத்தவனோடும் (1)

கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர் – ஆரண்:11 19/1

TOP


வைத்தவா (1)

உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா – சுந்:3 61/4

TOP


வைத்தன (2)

அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின் – யுத்2:15 252/3
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து – யுத்2:16 214/2

TOP


வைத்தனம் (1)

வைத்தனம் இ வழி வள்ளல் நின்-வயின் – கிட்:6 4/1

TOP


வைத்தனர் (1)

வைத்தனர் வாங்குநர் யாவரோ எனா – பால:13 10/3

TOP


வைத்தனரால் (1)

முன்னம் போல் படைத்து திருமுன்பு வைத்தனரால்
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும் பசி தீரா – யுத்4-மிகை:41 204/2,3

TOP


வைத்தனள் (2)

நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – பால:19 12/4
வாங்கினள் முலை குவையில் வைத்தனள் சிரத்தால் – சுந்:4 66/1

TOP


வைத்தனன் (3)

மடங்கல் ஆதனத்தின் மேல் முனியை வைத்தனன் – பால:5 51/4
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா – அயோ:1 68/2
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கிட்:13 58/3

TOP


வைத்தனை (1)

வைத்தனை ஏகுவது எங்கு வானினோடு – ஆரண்:13 5/2

TOP


வைத்தனைய (1)

தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல் – அயோ:11 45/3

TOP


வைத்தனையோ (1)

மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – யுத்3:27 80/4

TOP


வைத்தாம் (1)

மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கிட்:11 89/4

TOP


வைத்தாய் (2)

வன் தொழிலினாய் மறை துறந்து சிறை வைத்தாய்
அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா – யுத்1:2 51/2,3
அந்தம்_இலா அன்பு என் மேல் வைத்தாய் அளியத்தாய் – யுத்1:3 166/3

TOP


வைத்தார் (1)

மையல் காய் கரி முன் உற வைத்தார்
பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான் – யுத்1:3 92/3,4

TOP


வைத்தாள் (7)

வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – பால:19 18/4
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – ஆரண்:5 4/4
செற்றிலள் கை துணை சென்னியில் வைத்தாள்
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – ஆரண்:14 54/2,3
போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள்
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள் – சுந்:5 75/3,4
திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால் – சுந்:14 42/2
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – சுந்:14 45/4
வல் வாய் வெய்யோன் ஏவலும் எல்லாம் மனம் வைத்தாள்
நல்லாள் நல்ல கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள் – சுந்-மிகை:3 24/3,4

TOP


வைத்தாற்கு (1)

இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – ஆரண்:6 132/4

TOP


வைத்தான் (20)

மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் – பால:5 22/4
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – பால:13 14/4
கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான் – பால:21 32/4
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்து காப்பான் – பால-மிகை:0 10/4
பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை – ஆரண்:10 76/1
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் – ஆரண்:10 76/2
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை – ஆரண்:10 76/2,3
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான்
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – ஆரண்:10 85/2,3
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – ஆரண்:12 58/4
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கிட்:7 143/4
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறையகத்து வைத்தான்
ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கிட்:16 58/3,4
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும் – சுந்:2 44/3
கற்றோனும் முகம் எதிர் வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார் – சுந்:10 32/2
தன் தலை படியில் தாழ்ந்தான் அண்ணலும் சரணம் வைத்தான்
வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கி சொன்னான் – சுந்-மிகை:14 45/3,4
செம் பொன் நாட்டு உள சித்திரை சிறையிடை வைத்தான்
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் – யுத்1:5 35/3,4
தேசருக்கு இடுக்கண் செய்தான் தேவியை சிறையில் வைத்தான்
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்து தின்றான் – யுத்1:14 4/1,2
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான் – யுத்2:17 17/4
தாமரை சரணம் வைத்தான் கலுழனின் தாங்கி நின்ற – யுத்2:18 181/2
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி – யுத்2:19 12/2
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறை அதனில் வைத்தான்
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் கொன்று இளவலோடு – யுத்4-மிகை:41 234/2,3

TOP


வைத்தானே (1)

மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – பால:12 14/4

TOP


வைத்திட (1)

இஞ்சி உட்படும் இலங்கையின் சிறையில் வைத்திட ஓர் – சுந்-மிகை:3 2/3

TOP


வைத்திடுதலில் (1)

கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ – சுந்:6 4/4

TOP


வைத்து (36)

எல் உடை பசும்பொன் வைத்து இலங்கு பல் மணி குலம் – பால:3 23/2
வடா திசை முனியும் நண்ணி மலர் கரம் நாசி வைத்து ஆங்கு – பால-மிகை:11 47/1
மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து
எண்ணாநின்றார் யாரையும் எல்லா இகலாலும் – அயோ:3 44/1,2
சிங்க ஆசனமும் வைத்து செய்வன பிறவும் செய்தான் – அயோ:3 81/4
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – ஆரண்:10 76/4
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா – கிட்:16 41/3
பூதலம் முற்றும் ஈர் அடி வைத்து பொலி போழ்து யான் – கிட்:17 5/2
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – சுந்:3 146/4
மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர் – சுந்:4 67/1
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து எதிர் தடுப்பான் – சுந்:5 5/2
மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியன ஒத்தன எயிற்றின் இடை ஞால்வ – சுந்:6 13/3,4
வாயின் வைத்து ஊத வீரர் வழி இடம் பெறாது செல்ல – சுந்-மிகை:10 3/2
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – யுத்1:3 136/4
பற்றினம் சிறையிடை வைத்து பார் உடை – யுத்1:4 37/1
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ – யுத்1:4 46/1
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை – யுத்1:7 10/2,3
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – யுத்1:8 50/3
முறையில் வைத்து நின் தம்பியை இராக்கதர் முதல் பேர் – யுத்2:15 253/2
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் – யுத்2:15 253/3
கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட – யுத்2:18 213/1
துயரின் தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால் – யுத்2:19 16/4
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – யுத்2:19 222/3
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய் – யுத்3:24 115/4
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி – யுத்3:26 7/1
வைத்து நெடும் தகை மாருதி வந்தான் – யுத்3:26 26/4
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – யுத்3:26 84/2
கடு வைத்து ஆர் களன் கை படு கார் முகம் – யுத்3-மிகை:31 43/1
வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான் – யுத்4:36 4/4
தடித்து வைத்து அன்ன வெம் கணை தாக்கு அற – யுத்4:37 45/1
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – யுத்4:37 45/2
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ – யுத்4:41 30/2
சீயமாய் மலி அண்ணல் முன் திரு சிலை வைத்து
நேயமோடு இரு தாள் பணிந்து அங்கு அவன் நின்றான் – யுத்4-மிகை:41 101/3,4
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார் – யுத்4-மிகை:41 109/2
பூரண பொன் குடம் பொலிய வைத்து நீள் – யுத்4-மிகை:41 212/2
வர தகு தரள மென் பந்தர் வைத்து வான் – யுத்4-மிகை:41 213/3
பட்டம் வைத்து அமைந்த நெற்றி பகட்டினர் பைம்பொன் தேரர் – யுத்4-மிகை:42 4/2

TOP


வைத்தும் (2)

மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – சுந்:6 2/3
வெம் சிறையில் வைத்தும்_இலென் வென்றும்_இலென் என்றால் – சுந்:6 3/3

TOP


வைத்தும்_இலென் (2)

மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – சுந்:6 2/3
வெம் சிறையில் வைத்தும்_இலென் வென்றும்_இலென் என்றால் – சுந்:6 3/3

TOP


வைத்துளது (2)

முழுமுதல்வன் வைத்துளது மூ_உலகும் யானும் – ஆரண்:3 55/2
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – சுந்:3 149/3

TOP


வைத்தே (2)

அன்று அமரர் நாதனை அரும் சிறையில் வைத்தே
வென்றி தரு வேல் தச முக பதகன் ஆதி – ஆரண்-மிகை:3 7/2,3
மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர மேரு – கிட்:17 5/3

TOP


வைத்தேம் (1)

மேல் முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி – சுந்:14 5/2

TOP


வைத்தேன் (1)

ஆம் கனி ஆவதே என்று அருந்தி நான் விரும்பி வைத்தேன்
பாங்கின் நல் அமுது செய்-மின் என்று அவள் பரவி நல்கும் – ஆரண்-மிகை:16 1/2,3

TOP


வைத்தோயை (1)

மாட்டாதார் சிறை வைத்தோயை
மீட்டாம் என்கிலம் மீள்வாமேல் – சுந்:5 45/1,2

TOP


வைத்தோன் (2)

வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம் – சுந்:5 41/2
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன் – யுத்4-மிகை:41 252/4

TOP


வைத (4)

வைத வைவின் மராமரம் ஏழ் துளை – பால:0 8/2
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின் – கிட்:15 35/2
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – யுத்1:6 60/4
வைத வைவினில் ஒழிந்தன வீடணன் மாண்டான் – யுத்4:32 29/3

TOP


வைதது (1)

வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பினால் – யுத்4:37 152/4

TOP


வைதருப்ப (1)

வைதருப்ப நாடு அதனில் வந்து புக்கு – கிட்:15 17/1

TOP


வைதன (1)

வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும் – யுத்1:3 82/4

TOP


வைதனர் (3)

வைதனர் தெழித்தனர் மழு கொண்டு ஓச்சினர் – பால:8 33/3
சீறி வைதனர் செருக்கினர் நெருக்கினர் செறுத்தார் – பால-மிகை:9 34/4
வைதனர் யாதுதானர் வலித்தனர் வானரேசர் – யுத்2:16 170/3

TOP


வைதனள் (1)

விழித்தனள் வைதனள் வெய்து_உயிர்த்தனள் – அயோ:2 60/2

TOP


வைதார் (1)

வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – ஆரண்:7 97/4

TOP


வைதால் (2)

வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும் – ஆரண்:11 13/3
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – யுத்2:15 158/2

TOP


வைது (6)

மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது – அயோ:14 49/2
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா – சுந்:4 17/2
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி – சுந்:9 65/2
வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார் – யுத்2:16 239/4
மதி காய் குடை மன்னனை வைது உரையா – யுத்2:18 7/2
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – யுத்3:31 150/3

TOP


வைது-என (1)

வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை – யுத்1:9 66/1

TOP


வைதேவி (1)

வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – ஆரண்:11 45/3

TOP


வைப்பது (1)

கண்டே மனம் வைப்பது கற்பில காண் – யுத்3-மிகை:28 4/2

TOP


வைப்பர் (1)

முனிவரும் கருணை வைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி – யுத்2:16 147/1

TOP


வைப்பாம் (1)

நின்றான் ஒருவன் அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம் – பால-மிகை:0 1/4

TOP


வைப்பாய் (2)

வந்து அவன் சரண் வீழ்க என உற்றதும் வைப்பாய் – சுந்-மிகை:5 5/4
வந்து ஒர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் – சுந்-மிகை:5 7/4

TOP


வைப்பாரும் (1)

பளிங்கு உடை உயர் திண்ணை பத்தியின் வைப்பாரும் – பால:23 25/4

TOP


வைப்பில் (5)

மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில்
பெரும் துயரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள் – சுந்:5 6/2,3
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பில்
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி – யுத்1:4 131/2,3
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்
கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான் – யுத்2:19 220/3,4
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில்
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – யுத்3:24 48/3,4
தேவர்-தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில்
மூ-வகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் – யுத்3:24 53/2,3

TOP


வைப்பின் (6)

மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ – அயோ:7 9/2
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – சுந்:12 108/2
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின்
அயரும் வாள் எயிற்று ஆயிர நனம் தலை அனந்தன் – யுத்1:3 13/1,2
மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப – யுத்1:4 129/1
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – யுத்2:19 56/1
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு – யுத்3:21 15/3

TOP


வைப்பினும் (1)

மூன்று வைப்பினும் அ புறத்து உலகினும் முனையின் – யுத்4:32 4/1

TOP


வைப்பு (6)

வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – பால:7 24/4
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் – பால:14 26/2
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – அயோ:0 1/1
வாலுகத்தால் இடை பரந்த வைப்பு எலாம் – யுத்1:5 8/3
கை வைப்பு அளவே இறல் காணுதியால் – யுத்2:18 78/4
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற – யுத்4:37 145/3

TOP


வைப்புடை (1)

வைப்புடை வளாகம்-தன்னில் மன் உயிர் வாழ்த்த வந்தான் – யுத்4-மிகை:42 32/4

TOP


வைப்பும் (2)

தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்
வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – பால:2 12/3,4
நினைவதற்கு அரிது நும்மை பிரிக என்றல் நீவிர் வைப்பும்
எனது அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும் என்றான் – யுத்4-மிகை:42 67/3,4

TOP


வைப்பேன் (2)

வீழ்வு_இலா சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால் – யுத்1:9 37/4
தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் – யுத்2:17 90/4

TOP


வைப்பை (4)

மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – யுத்1:4 149/4
வானவர் இதனை கூற வலங்கொடு தானை வைப்பை
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும் தாழாது – யுத்1-மிகை:4 12/1,2
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – யுத்3:24 58/4
வழி அடித்து உண்போர் கேட்டால் வழி சொல்லாதவர்கள் வைப்பை
பொழி இருள் களவு காண்போர் பொய் சொல்லி பண்டம் விற்போர் – யுத்4-மிகை:41 77/1,2

TOP


வைப்பையும் (1)

மருள் கொள படர்வன நாகர் வைப்பையும்
இருள் கெட சென்றன இரவி போல்வன – யுத்1:6 46/3,4

TOP


வைப்போம் (1)

போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே – கிட்:17 7/2

TOP


வைப்போர் (1)

பாதியில் விட்டு வைப்போர் படித்தவர் பிரியப்படுத்தார் – யுத்4-மிகை:41 78/3

TOP


வைய (6)

ஆன்றான் பகர்வான் பினும் ஐய இ வைய மையல் – அயோ:4 134/1
வைய மன்னரும் மற்றும் மாக்களும் – அயோ-மிகை:14 5/2
மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய
தேவரும் வானம் தன்னில் தேவரும் சிந்தை சிந்த – ஆரண்:10 169/3,4
வைய நாயகன் வடி கணை குடித்திட வற்றி – யுத்1:6 24/1
வைய நாதன் சரணம் வணங்கியே – யுத்1:8 71/4
வைய மங்கை பொலிந்தனள் மங்கல – யுத்3:31 134/3

TOP


வையக (2)

வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வான – பால:22 16/3
ஏனை நீதி இனையவும் வையக
போனகற்கு விளம்பி புலன் கொளீஇ – அயோ:2 30/1,2

TOP


வையகத்து (3)

துலக்கி வையகத்து இடுக்கணும் முனிவர்-தம் துயரும் – பால-மிகை:7 25/3
வையகத்து அரசரும் மதி வல்லாளரும் – அயோ-மிகை:1 3/3
வையகத்து இ பழி தீர மாய்வது – கிட்:6 27/3

TOP


வையகம் (17)

வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் – பால:4 12/3
மங்குநர் இல் என வரம்பு இல் வையகம்
இங்கு நின் அருளினால் இனிதின் ஓம்பினேன் – பால:5 2/3,4
பிறிது ஒரு குறை இலை என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – பால:5 3/3,4
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் – அயோ:3 27/4
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம்
நள் உறு கதிர் இலா பகலும் நாளொடும் – அயோ:12 7/1,2
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன் – அயோ:12 35/1
வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் – அயோ:14 38/1
மலங்கி வையகம் வருந்தி வைக நீ – அயோ:14 111/1
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம்
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ – அயோ:14 113/1,2
வையகம் காவலன் மதலை வந்தது ஓர் – ஆரண்:3 11/3
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் – சுந்:14 22/4
குடைந்து வையகம் புக்குற தேக்கிய குருதியால் குடர் சோர – யுத்2:16 314/2
வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான் – யுத்2:18 8/1
வான் என்பது என் வையகம் என்பது என் மால் – யுத்2:18 77/1
முற்றும் வையகம் போர் களம் ஆம் என முயன்ற – யுத்4:32 8/4
வையகம் சிவிகை தொங்கல் மா மணி மகுடம் பொன் பூண் – யுத்4-மிகை:42 51/2
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல – யுத்4-மிகை:42 71/2

TOP


வையகம்-அதனில் (1)

வையகம்-அதனில் மாக்கள் மயங்குவர் வய வெம் சேனை – சுந்-மிகை:14 48/1

TOP


வையத்தார் (1)

வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த – ஆரண்:1 58/3

TOP


வையத்திடை (1)

மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக – பால:10 29/1

TOP


வையத்து (4)

பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும் – பால:14 25/1
சுதை தரு மொழியன் வையத்து உயிர்க்குயிராய தோன்றல் – பால-மிகை:11 37/2
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – அயோ:13 46/3,4
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று – கிட்:14 37/2,3

TOP


வையம் (42)

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு – பால:0 7/1
ஒப்பு அற அமைத்த வையம் ஓவியம் புகழ ஏறி – பால:14 69/2
வையம் பற்றிய மங்கையர் எண்_இலர் – பால:21 32/1
வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார் – பால:22 34/2
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம்
அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவன-தாம் – பால:24 26/2,3
வையம் யாவையும் வறுமை நோய் நலிய வானோரும் – பால-மிகை:9 17/2
வையம் ஆளுடை மன்னவர்_மன்னவ மடிந்தோர் – பால-மிகை:9 42/1
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய – பால-மிகை:21 1/3
வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால் – அயோ:1 13/3
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – அயோ:2 25/1
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ – அயோ:3 63/1
வையம் முழுதும் துயரால் மறுகும் முனிவனுடன் நம் – அயோ:4 69/3
வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இ வையம்
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப – அயோ:4 133/1,2
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – அயோ:4 146/2
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே – அயோ:6 19/2
வையம் மா நரகத்திடை வைகுமோ – அயோ:7 25/4
மறு அது கற்பினில் வையம் யாவையும் – அயோ:14 70/2
வரதன் துஞ்சினான் வையம் ஆணையால் – அயோ:14 94/1
பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என் – அயோ:14 112/1
மன்னர் இன்றியே வையம் வைகல்தான் – அயோ-மிகை:11 14/1
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் – ஆரண்:15 1/2
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர் கண் – கிட்:3 70/3
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கிட்:4 19/1
வையம் மீதிடை கிடந்த போர் அடு திறல் வாலி – கிட்:7 66/2
வையம் சாய்வர திரிதரு வானர சேனை – கிட்:12 20/3
ஐய கேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக – சுந்:2 91/1
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன் – சுந்:3 149/1
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான் – சுந்:4 74/3
வையம் வந்து வணங்கிட வள்ளல் மகிழ்ந்தே – சுந்-மிகை:5 6/2
வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில் – யுத்1:12 28/3
அறைந்தன பகழி வையம் அதிர்ந்தது விண்ணும் அஃதே – யுத்2:18 196/3
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – யுத்2:19 208/4
விசையால் அனுங்க வட மேரு வையம் ஒளியால் விளங்க இமையா – யுத்2:19 244/3
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – யுத்2:19 271/4
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம்
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – யுத்3:21 23/3,4
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – யுத்3:31 43/4
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – யுத்3:31 187/4
மனிதர் ஆளில் என் இராக்கதர் ஆளில் என் வையம் – யுத்3-மிகை:31 7/4
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச – யுத்4:37 138/1
வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – யுத்4:40 91/4
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி – யுத்4:41 14/3
வனத்து இருக்க இ வையம் புகுதுக – யுத்4:41 58/2

TOP


வையமும் (11)

வானமும் வையமும் வவ்வுதல் செய்தான் – பால:8 8/4
வையமும் யாவும் வழங்க வலித்தான் – பால:8 9/4
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து – பால:23 46/3
வையமும் வானமும் மதியும் ஞாயிறும் – அயோ-மிகை:1 11/1
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும்
நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்-வயின் நிற்குமோ – கிட்:10 65/1,2
நீரும் வையமும் நெருப்பும் மேல் நிமிர் நெடும் காலும் – சுந்:2 18/1
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – சுந்:3 84/4
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் – யுத்2:16 74/3
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய – யுத்3:22 66/2
வருக தேர் என வந்தது வையமும் வானும் – யுத்4:35 18/1
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும் – யுத்4:35 32/2

TOP


வையமேல் (1)

வையமேல் இனி வரும் பகை உள எனின் வருவது ஒன்று என்றாலும் – யுத்1-மிகை:3 14/1

TOP


வையார் (1)

வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணை பகல் வையார்
தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ – சுந்:3 16/1,2

TOP


வையான் (1)

தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான் – பால:14 31/4

TOP


வையும் (1)

வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான் – யுத்4:37 130/3

TOP


வையுமேல் (1)

வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே – யுத்4:40 82/4

TOP


வைர (2)

வான் உற பிறங்கிய வைர தோளொடும் – கிட்:10 85/2
உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர் – யுத்2:19 46/3

TOP


வைவர் (1)

வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – யுத்3:31 97/4

TOP


வைவலோ (1)

வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – யுத்2:17 33/2

TOP


வைவன (3)

மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே – அயோ:3 52/4
வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல் – கிட்:9 11/2
வைவன முனிவர் சொல் அனைய வாளிகள் – யுத்2:18 114/1

TOP


வைவின் (1)

வைத வைவின் மராமரம் ஏழ் துளை – பால:0 8/2

TOP


வைவினில் (1)

வைத வைவினில் ஒழிந்தன வீடணன் மாண்டான் – யுத்4:32 29/3

TOP


வைவு (1)

வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – யுத்1:6 29/2

TOP