கீண்டு
(வி.எ) பிளந்து, கிழித்து, tearing, spliting
வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 297,298
சிறுமூங்கிலின்
பூவையுடைய அசைகின்ற கொம்பு தனிப்ப, வேரைப் பிளந்து
கீள்
(வி) உடைபடு, burst, breach
கொடும் கரை
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ – புறம் 118/2,3
வளைந்த கரையை உடைய
தெளிந்த நீரையுடைய சிறிய குளம் உடைவது போலும்
மேல்